யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
71 topics in this forum
-
சிந்திப்போம் செயல்படுவோம் களியாட்டத்தில் கலாட்டாவா அனைவருக்கும் வணக்கம். அண்மையில் யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வின் பொழுது நடந்த ஒர் அசம்பாவிதத்தை பற்றி பல வாத பிரதிவாதங்கள் இடம் பெறுவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த அசம்பாவிதத்தை ஊதி பெருப்பித்த பெறுமை நெட்டிசன் மாரை சேரும் .அதாவது சமுக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவு செய்யும் நபர்கள்..அநேகமான நபர்கள் தங்களுக்கு அதிக பார்வையாளர்கள்,மற்றும் லைக் வேணும் என்ற காரணத்தால் கவர்ச்சிகரமான தலையங்கங்களை எழுதி தங்களது கற்பனைக்கு எட்டியவற்றை கூறினார்கள் ..அவர்களில் அனேகமானவ்ர்கள் போட்ட படம், அதாவது சனம் தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு முன்னுக்கு செல்லும் காட்சி...இந்த ஒரு காட்சியை ஏதோ ஒரு மூலத்தில் கொப்பி பண்ண…
-
-
- 9 replies
- 1.2k views
-
-
யாழில் பதியப்பட்டிருந்த ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். 2014இல் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவத்தை அவரது கதை எனக்கு நினைவூட்டியது. அதைத்தான், “அப்பா அது நீதானா?” என இங்கே தந்திருக்கிறேன் இதற்குமேல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க முடியாது என்று அன்றியாவுக்கு புரிந்து விட்டது. ஆனாலும் படுக்கையில்தான் இருந்தாள். அன்றியாவுக்கு அதிகம் பிடித்த இரவுகள் என்றால் அது ஞாயிறு இரவுகள்தான். அந்த இரவுகளில்தான் அடுத்தநாளின் சுமைகள் இல்லாமல் அன்றியா அதிகமாகத் தூங்குவாள். திங்கட் கிழமைகளில், ஏறக்குறைய நண்பகலை பொழுது நெருங்கும் நேரத்தில்தான் படுக்கையைப் பிரிந்து அவள் எழுந்து வருவாள். இந்தத் திங்கட்கிழமை மட்டும் அவளுக்கு சுகமானதாக இருக்கவில்லை. திங்கட்கிழமை…
-
-
- 6 replies
- 1.9k views
-
-
நாங்கள் புலம் பெயர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊரில் வாழ்ந்த காலத்தை விட, வெளியில் வாழ்ந்த காலமே அதிகம் என்றாகிவிட்டது. தெரிந்தவர்கள் பலர் வாழ்க்கை முடிந்து போகவும் ஆரம்பித்துவிட்டார்கள். என்னதான் வெளிநாடுகளில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், மனங்கள் என்றும் ஊரையும், அந்த நினைவுகளையுமே அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் என்றும் புலம் பெயரவே இல்லை என்னும் அளவிற்கு ஊர் நினைவுகள் அப்படியே ஒட்டியிருக்கின்றன. சில வேளைகளில் பார்த்தால், உண்மையில் கடைசிப் புகை மட்டும் தான் புலம் பெயர்ந்தது, அந்தந்த நாடுகளில் கலந்து விடுகிறதோ என்று தோன்றுகின்றது. ******************** புலம் பெயர்ந்த புகை …
-
-
- 6 replies
- 680 views
-
-
உ மயிலம்மா. நினைத்தால் இனிக்கும் மோகனம் .....! மயிலிறகு ....... 01. அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வரு…
-
-
- 66 replies
- 5.3k views
- 2 followers
-
-
(குறுங்கதை) ஒரு கிலோ விளாம்பழம் --------------------------------------- பல வருடங்களின் பின், சரியாக எண்ணிச் சொன்னால், 27 வருடங்களின் பின் அவன் தன் சொந்த ஊரில் அன்று கால் வைத்தான். வான் ஓடி வந்தவருக்கு எந்த ஒழுங்கையில் திரும்ப வேண்டும் என்று சொல்கின்றேன் என்றவன் சந்தியில் திடீரென்று வானை நிற்பாட்டச் சொன்னான். 'ஏன் அண்ணை, இங்க கடையில எதுவும் வாங்க வேண்டுமே?' 'இல்லை, இல்லை, நான் ஒழுங்கையை விட்டிட்டன். சந்திக்கு முன்னமே ஒழுங்கை வந்திருக்க வேண்டும்.......' சந்தியிலிருந்து அவன் வீட்டுப் பக்கம் இருக்கும் ஒழுங்கைகளை ஒவ்வொன்றாக மனதில் எண்ணிப் பார்த்தான். மூன்றாவது ஒழுங்கை தன் ஒழுங்கை…
-
-
- 21 replies
- 2k views
- 1 follower
-
-
பிஞ்சுக் காதல்… பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்.. மெள்ள எட்டிப் பார்த்தது காதல் ஆசை மெல்லத் தூண்டி விட்டான் சினேகிதம்… மெதடித்த மாணவி.. மாதவி நடிகையின் போட்டோக் கொப்பி போற வாற இடமெல்லாம் துப்புத் துலக்கியாச்சு.. என்னவென்று தொடங்குவது அய்டியாவையும் தந்தான் அந்தப் பாவிமகன் முதலில் வெற்றுத் தாளை கசக்கி காலடியில் போடு.. எடுத்தால் வெற்றி உனக்கென்றான்…. காலால் மிதிபட்டு கதியால் வேலிக்குள் கிடந்தது காகிதக் கசக்கல்… மூளையை கசக்கி பிழிந்து எப்பிடியோ பிறந்த நாள் கண்டு பிடிச்சிட்டம்.. பரிசு கொடுக்கும் அய்டியா.. பொடிநடையாய் நடந்து திரும…
-
-
- 9 replies
- 983 views
-
-
(குறுங்கதை - அறிவியல் புனைவு) சிவப்புக்கல் -------------------- 'அம்மா.....' 'என்ன பிள்ளை.... போக வேணுமா?' அம்மா கண்களை முழிக்காமலேயே கேட்டார். அது அமாவாசையை அண்மித்த நாள், ஆதலால் கும்மென்ற இருட்டு சுற்றி வரவும். பெரிய காணியில் அவர்களின் வீடு காணியின் முன் பக்கமும், கழிவறை காணியின் அடிப்பக்கமும் இருந்தன. அமாவாசை நாளாக இல்லாமல் பூரண சந்திரன் தான் மேலே நடு வானத்தில் நின்றாலும், ஊர் உறங்கும் இரவில், தனித்து கழிவறைக்கு போகும் துணிவு அவனுக்கு அறவே கிடையாது. 'ம்ம்.......' என்று இழுத்தான் அவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை அவன். போன மாதம் அவனுக்கு பத்து வயதுகள் ஆகி…
-
-
- 2 replies
- 425 views
-
-
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - சுப. சோமசுந்தரம் அவ்வப்போது ஈடுபடும் இலக்கிய வாசிப்பில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தற்செயல் நிகழ்வாக இரு வேறு இலக்கியக் கூறுகள் கண்ணில் பட்டுத் தெறித்தன. ஒன்று, ஒரே பார்வையில் இரு பொருள் கொண்ட காதலவர் நோக்கு. இன்னொன்று, ஒரே பாடலில் ஈரணிகள் அமைந்து தரும் இன்பம். ஒவ்வொன்றும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாய்த் தெரிந்தன. ஒவ்வொன்றையும் தனித்தனியே எழுதலாமே என்ற நியாயமான எண்ணம் தோன்றியது உண்மை. ஒரே கட்டுரையில் இரு கூறுகளை வைப்பதும் தலைப்புக்குப் பொருந்தி வருமே என்று உடனே அநியாயமான எண்ணம் தலை தூக்கியதால், அநியாயத்துக்கு எழுதிய கட்டுரை இது எனக் கொள்ள…
-
-
- 6 replies
- 846 views
- 1 follower
-
-
தோற்கும் விளையாட்டு ------------------------------------ விளையாட்டு வீரர்கள் என்றாலே ஆஸ்திரேலியர்கள் தான் அதன் வரைவிலக்கணம். ஒரு சாதாரண ஆஸ்திரேலியரே எந்த விளையாட்டையும் நன்றாக விளையாடுவார், அப்படியே அதிகமாக கோபப்பட்டு போட்டி போடுவார். இவர்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக விளையாடுவது கூட வெளியில் நின்று பார்க்கும் ஒருவருக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்சனைக்கு இரண்டு பக்கங்கள் மல்லுக்கட்டி நிற்பது போலவே தெரியும். சில வருடங்களின் முன் சிட்னி நகர் பகுதியில் தனியாகவோ அல்லது பலவீனமாகவோ அகப்படும் இந்தியர்களை சில ஆஸ்திரேலியர்கள் தாக்கினார்கள். இது சில காலம் தொடர்ந்து அங்கு நடந்தது. இந்திய நண்பன் ஒருவனின் மனைவியின் தம்பிக்கு சிட்னியில் ஒரேயொரு குத்து ஓங…
-
-
- 7 replies
- 912 views
-
-
பெரியவர்கள் எம்மை எச்சரிப்பார்கள். இப்படி செய்யக்கூடாது அப்படி செய்யக்கூடாது என்று. அவை மிகச் சிறிய விடயங்களாக மிக மிக அசாதாரண விடயங்களாக எம் வாழ்வில் நடக்கமுடியாத நாம் சந்திக்காத விடயங்களாக இருக்கும். ஆனால் அவ்வாறு நடந்து விட்டால்......?? சில விடயங்களை நான் இங்கே எழுதுகிறேன் நீங்களும் நீங்கள் சந்தித்த அல்லது கேள்விப்பட்ட விடயங்களை எழுதுங்கள். எவராவது பயன் பெறட்டும். 1 - பிரெஞ்சில் இருந்து எனது நண்பர் ஒருவர் டென்மார்க்கில் உள்ள ஒரு ஆலயத்தில் தரிசனம் செய்ய தனது குடும்பத்துடன் (இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் கடைசி ஆண் குழந்தை) சென்றிருந்தார். அந்த கோயில் உள்ள இடம் வயலும் காடும் நிறைந்த இடம். அங்கே அந்த ஆண் குழந்தைக்கு (2 வயது) ஒரு பூச்சி கடித்து விட்டது. அது …
-
-
- 4 replies
- 482 views
-
-
அன்றுபோல் இன்று இல்லையே! *************************************** அதுவொரு கடல் சூழ்ந்த அழகிய கிராமம் அதிகாலைப் பொழுதும் அந்திமாலையும் அத்தியும்,இத்தியும் ஆலமரமும் அதிலிருந்து கத்திடும்,கொஞ்சிடும் பறவை இனமும் ஏரும் கலப்பையும் வண்டிலும் மாடும் உழைப்போர் வியர்வையில் வளரும் சாமையும்,வரகும்,குரக்கனும்,சோளனும் பனையும்,தென்னையும் பனாட்டும்,ஒடியலும். வேலிகள் தோறும் கொவ்வையும்,குறிஞ்சாவும் தரவை நிலமெங்கும் மூலிகைச் செடிகளும் கடலும் காற்றும் மீன்களும்,இறாலும் இயற்கை மாறாத மாரியும்,கோடையும் இனிமை தருகின்ற கருப்பணிக் கள்ளும் இனிக்க இனிக்க பேசிடும் தமிழும் கொடுத்து கொடுத்தே மகிழ்திடும் மனிதரும் …
-
-
- 8 replies
- 1.9k views
-
-
நேரான நீண்ட ஒரு நடைபாதை. நேர் என்றால் அடிமட்டம் வைத்து கோடு போட்ட ஒரு நேர். இரண்டு பக்கங்களிலும் அடுக்கி வைத்தது போல வீடுகள் அடுக்கடுகாக இருக்கின்றன. நான் தினமும் கடந்து நடக்கும் வீட்டு வாசல்கள். வாசல்கள் அதன் உள்ளிருக்கும் வீடுகளை மறைத்து வைத்திருப்பது போல, முகங்களும் அகங்களை பெரும்பாலும் மறைத்து வைத்து இருக்கின்றனவோ என்று தோன்றும். அகத்தின் அழகோ அல்லது சிக்கல்களோ முகத்தில் அவ்வளவாக வெளிப்படுவதில்லை. தேடித்தான் கண்டறிய வேண்டியிருக்கின்றது. ***** வாசலும் வீடும் ----------------------- வாசல்கள் அழகானவை ஒழுங்கானவை நேர்த்தியாக அடுக்கப்பட்டவை வாசல்களின் உள்ளிருக்கும் வீடுகள் உள்ளே தலைகீ…
-
-
- 6 replies
- 650 views
-
-
'கடவுளின் பிரதிநிதி' புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்று. அவருடைய எல்லாக் கதைகளுமே புகழ்பெற்றவை தான். தலைப்பை அங்கிருந்து எடுத்து, மிகுதியை நான் முயன்றிருக்கின்றேன். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது என்றும் ஓயாத ஒரு கேள்வியே. **************************** கடவுளின் பிரதிநிதிகள் ------------------------------------ சுரீர் என்று வெயில் கொட்டித் தீர்த்த மழையின் பின் பூமியின் ஈரம் துவட்ட என்று கொளுத்திக் கொண்டிருந்தது கவிழ்ந்த அரைக் கிண்ண வானத்தில் நீலம் அன்றி வேறெதுவும் இல்லை சூரியனுடன் சொட்டிச் சொட்டி ஈர…
-
- 2 replies
- 528 views
-
-
கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 2 hours ago கனத்தைப் பேய்க் கவிதை….. இந்துவில் படித்த காலம்.. இருப்பதுவோ நாரகேன்பிட்டி.. இது பொரளை மன்னிங்ரவுன்…. இது நம்ம அண்ணருடன் வாசம் சரித்திரம்..வேண்டா மே ஆடிவேல் விழாக்காலம்.. அடிபட்டு பிடிபட்டு.. அனுமதி பெற்று.. சம்மாங் கோட்டாரிடம் போயுமாச்சு.. இந்துக்கூட்டம் ஒருவம்புக்கூட்டம்.. வெள்ளவத்தை சந்து முந்து ரோட்டெல்லம் போய் கூடப் படிக்கிற பிகருகளின் …
-
-
- 16 replies
- 1.8k views
-
-
27.02.2024, அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்த கிளவ்டியாவுக்கு (65) ஆச்சரியமாக இருந்தது. சிறப்பு அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் நின்றனர். அதிர்ந்து போன அவளுக்கு இமைகளை மூடித் திறக்கக் கூட அவகாசம் கிடைக்கவில்லை. அவளது கைகளில் விலங்கை மாட்டிவிட்டார்கள். கிளவ்டியா பெர்னாடி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவள். கடந்த இருபது வருடங்களாக யேர்மனியில்தான் வாழ்கிறாள். கிழக்கு - மேற்கு யேர்மனியைப் பிரித்திருந்த சுவர் உடைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகாமையில், 1962 இல் எந்த இடத்தில் சுரங்கம் அமைத்து கிழக்கு யேர்மனியில் இருந்து மேற்கு யேர்மனிக்கு தப்பிக்க முயன்றார்களோ அதற்கு அருகாமையில் உள்ள செபஸ்ரியான் வீதியில் இருக்கும் குடியிருப்பில் ஐந்தாவது மாடிதான் அவளது இருப்பிடம். அவளுக்குத் து…
-
-
- 2 replies
- 603 views
-
-
நூலறிவு வாலறிவு ---சுப.சோமசுந்தரம் சான்றாண்மையின் தாக்கம் பாமரர் முதல் சான்றோர் வரை உணரப்படுவது. ஒரு புலவர் கூற்றை மற்றொரு புலவர் வழிமொழிவது சங்க காலந்தொட்டுக் காலங்காலமாய் நிகழ்வது; அஃது முன்னவரின் சான்றாண்மைக்கான அங்கீகாரமும் கூட. இதனை முன்னொரு சமயம் 'முன்னோர் மொழி பொன்னே போல்' எனும் தலைப்பில் சிறு கட்டுரையாய் வரைந்ததுண்டு. அதில் சுட்டப்பெற்ற பாடல்களோடு 'இயல் வழி நாடகம்' எனும் தலைப்பில் வேறொரு சூழலில் குறிக்கப்பட்ட சில பாடல்களையும் கொண்டு சற்றே பெரிய கட்டுரையாக வரையலாமே; மேற்கண்ட கருதுகோளின்பால் வாசிப்போரின் கவனத்தை ஈர்க்கலாமே எனும் எண்ணமதின் விளைவ…
-
-
- 1 reply
- 544 views
- 1 follower
-
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப்பயணமும் புதிதில்லை. ஆனாலும் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னான முதல் இலங்கைப்பயணம். ஒதுங்கி வாழ்வதே வாழ்க்கை என ஆகி விட்ட அந்த இரு வருடங்களில் இப்படி ஒரு பயணம் இனி ஒரு முறை அமையுமா என்பதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அந்த நிலை கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்ட பூனை போல் ஐரோப்பாவையே சுற்றி வந்த நிலையும் கடந்து….இதோ இலங்கைக்கான நெடு-நாள் பயணம் ஆரம்பமாக போகிறது. கடந்த முறை கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறும் போது சுவரில் மைத்திரிப்பால சிரிசேன சிரித்து கொண்டிருந்தார்…
-
-
- 364 replies
- 38.9k views
- 2 followers
-
-
மேய்ப்பன் ---------------- ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று நாங்கள் ஊரில் சொல்வதுண்டு. ஒருவர் உருப்படி இல்லாமல் இருக்கின்றார் அல்லது உருப்படவே மாட்டார் என்று தெரிந்தால், அவரின் வீட்டில் குறைந்தது ஒரு ஆமையாவது இருக்க வேண்டும் என்றும் நினைக்கலாமாக்கும். ஒரு தடவை இங்கு ஒரு அயலவரின் வளர்ப்பு ஆமை காணாமல் போய்விட்டது. நேரடியாக என் வீட்டுக் கதவைத் தட்டினார். 'என்னுடைய ஆமை வீட்டை விட்டு ஓடிவிட்டது, உங்கள் வீட்டிற்கு அது வந்ததா?' என்று கேட்டார். அவரின் கேள்வி விளங்க எனக்கு சில விநாடிகள் எடுத்தது. அவரின் ஆமை இரவோடிரவாகவே ஓடியிருக்க வேண்டும் என்றும் சொன்னார். ஒரு ஆமை ஒரு இரவில் எவ்வளவு தூரம் போயிருக்கும் என்று நான் கணக்குப் போடத் தொடங்கினே…
-
-
- 1 reply
- 509 views
- 1 follower
-
-
காந்தி கணக்கு ------------------------- 'ஓஷோவைத் தெரியுமா?' அந்தப் பெயரில் ஒரு ஆள் இந்தச் சுற்று வட்டாரத்தில், இந்தக் கூட்டத்தில், என்னுடைய இருபதுக்கும் மேலான வருட பழக்கத்தில் இருந்ததாக ஞாபகம் இல்லை. கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் இப்படி எந்த விளையாட்டிலும் இந்தப் பெயரில் எவரையும் நினைவில் இல்லை. 'ஓஷோ என்ன விளையாடுகிறவர்?' 'இல்லை, இல்லை, ஓஷோ விளையாடுகிறவர் இல்லை. ஓஷோ ஆசிரமம் வைத்திருந்தார். தாடி வைத்திருந்தார். தத்துவப் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார்.....' அந்த ஓஷோவா, அந்த தாடி வைத்த ஓஷோ இங்க…
-
- 6 replies
- 787 views
-
-
பொருநைக் கரையினிலே - 1 - சுப.சோமசுந்தரம் காவ்யா பதிப்பக நிறுவனர் பேரா.சு.சண்முகசுந்தரம் அவர்கள் தமது புதினங்களான பொருநை, கூவம் இவற்றில் முறையே தமது நெல்லை, சென்னை வாழ்க்கையினைச் சொல்லோவியமாய் வரைந்துள்ளார். இத்தலைப்புகளால் ஈர்க்கப்பட்ட அடியேன், "என் வாழ்க்கையைச் சித்தரிக்கப் பெரிதாக ஏதுமில்லையெனினும், பொருநைக் கரையிலேயே அநேகமாக வாழ்நாள் முழுதும் கழிக்கும், களிக்கும் பேறு பெற்ற நான் இங்கு கற்றதையும் பெற்றதையும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாய் அல்லது கட்டுரைத் தொடராய்ப் பதிவு செய்யலாமே என எண்ணியதன் வெளிப்பாடே இந்த என் எழுத்து. அ…
-
-
- 8 replies
- 1.5k views
- 2 followers
-
-
(குறுங்கதை) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள் -------------------------------------------------------------- அன்று அவன் காரை அதன் தரிப்பிடத்தில் நிற்பாட்டும் போது அங்கு பல கார்கள் ஏற்கனவே நின்றிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் எப்பொழுதும் காலை ஏழு அல்லது ஏழரை மணி அளவில் வேலைக்கு வந்து விடுவான். அங்கு பெரும்பாலானவர்கள் பத்து மணிக்கு பின்னரே வேலைக்கு வருவார்கள். ஒருவர் மட்டும், பெரும் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக, அதிகாலை ஐந்து மணிக்கு வந்து விடுகின்றார். இது அவரே சொல்லும் ஒரு தகவல். இதுவரை அதை எவராவது உறுதிப்படுத்தினார்களா என்று தெரியவில்லை. அமெரிக்கரரான அவர் மதியம் உணவை முடித்துக் கொண்டு, ஒரு மணி அளவில், இன்றைய வேலை முடிந்தத…
-
-
- 24 replies
- 2.1k views
-