நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
சிலிரிப்பு என்பது பொதுவாக அனைத்து மனிதர்களும் உணர்ந்திருக்கக்கூடிய ஒரு உடல் மாற்றமாகும். இதன்போது உடலின் தசைப் பகுதிகள் இறுக்கமடைவதுடன், உடலிலுள்ள உரோமங்கள் நிமிர்ந்த நிலையில் காணப்படும். ஆச்சரியம் மற்றும் பீதி ஏற்படும் சந்தர்ப்பங்களில் இதனை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். இந்த உணர்வுக்கான ஆச்சரியம் தரும் காரணம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது ஆழ்மனத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிரீனலின் எனப்படும் ஹோர்மோன் வெளிவிடப்படும்.இது சிறுநீரகங்களுக்கு மேலாக காணப்படும் இரு சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹோர்மோன் ஆகும். இந்த ஹோர்மோன் ஆனது தோல் தசைகளில் ஏற்படும் சுருக்கத்திற்கு காரணமாக இருக்கின்றமை மாத்திரமன்றி பிற உடல் செயற்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இதன்…
-
- 0 replies
- 399 views
-
-
கேட்டி சில்வர் பிபிசி நியூஸ் புதுப்பிக்கப்பட்டது 16 ஆகஸ்ட் 2020 புதுப்பிக்கப்பட்டது 16 ஆகஸ்ட் 2020 பட மூலாதாரம், Andreas Rentz உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியமாக 4557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்கு பிந்தைய ஒரு மணி நேரத்திலும் ஏற்பட்டு இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள். …
-
- 0 replies
- 398 views
-
-
கொலெஸ்ட்ராலைக் குறைக்கும் புதிய தடுப்பு மருந்து இதய நோய்களை தடுக்க உதவும் கொலஸ்ட்ரோலை குறைக்கும் தடுப்பு மருந்தை மனிதர்களில் சோதிக்க விஞ்ஞானிகள் ஆரம்பித்துள்ளனர். இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையில் கொழுப்பு படிவதை தடுப்பதற்காக இந்த மருந்து ஊசி மூலம் ஏற்றப்படும். பக்கவாதம், இதயவலி மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக தினமும் மாத்திரை உண்பதற்கு பதிலாக இது அமையும். BBC
-
- 1 reply
- 398 views
-
-
ஆமணக்கின் இலை, வேர், விதை ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. விதைகளைப் பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி மேலே மிதந்து வரும் எண்ணெயை சேமித்தும் ஆமணக்கு எண்ணெய் தயாரிப்பர். ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆமணக்கு வேர் மூட்டுவலிகள், சிறுநீர்ப்பை வலிகள், கீழ்முதுகுவலி, வயிற்றுக் கோளாறுகள், வீக்கங்கள் ஆகியவற்றைத் தணிக்க செய்யும் அற்புத மருந்தாகும். ஆமணக்கு இலையும் உள் மருந்தாகவும், வெளி மருந்தாகவும் பயன்படுகின்றது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்கும், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் வலி மற்றும் அடைப்பு ஆகியவற்றை குணப்படுத்தவும், நாட்பட்ட சீழ்பிடித்த ஆற…
-
- 0 replies
- 398 views
-
-
கேன்சர் பற்றி தெரியுமா உங்களுக்கு?? நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்: 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரியவராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். …
-
- 0 replies
- 398 views
-
-
குழந்தையின் விநோத நோயால் கைவிட்ட பெற்றோர்; உதவ முன்வரும் முகம் தெரியாதவர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇத்தாலியின் டூரின் நகரில் நான்கு மாதங்களாக செவிலி தாய்மாரால் இந்த குழந்தை பராமரிக்கப்பட்டது. விநோதமான தோல் பாதிப்புள்ள, நேரடி சூரிய வெளிச்சத்தில் காட்டாமல் வைக…
-
- 0 replies
- 398 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ்: கோவிட் 19 தொற்றிலிருந்து முழுமையாக குணமாக எவ்வளவு காலம் ஆகும்? ஜேம்ஸ் கலாகெர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் Getty Images 2019ஆம் ஆண்டு இறுதியில் கோவிட் 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உருவானது. ஆனால், இதனால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இதிலிருந்து குணமாக நீண்ட காலம் ஆகும் என்றே தெரிகிறது. சரி. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்? அது அந்தந்த நபரின் உடல்நிலையை பொறுத்தது. கொரோனா தொற்றால் நீங்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை பொறுத்தே அதிலிருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கூறமுடியும். சிலர் இந்த நோயிலிருந்து விரைவில் மீண்டுவிடுவார்கள். மற்ற சிலருக்கு இது நீண…
-
- 0 replies
- 398 views
-
-
தற்போது பலரும் செரிமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி, அதன் சீரான இயக்கத்தைத் தடுப்பதை முக்கிய காரணமாக சொல்லலாம். எனவே வயிற்றில் தங்கியுள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். செரிமான மண்டலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!!! குறிப்பாக ஸ்நாக்ஸ் நேரத்தில் பழங்களை சாப்பிட்டால், மிகவும் எளிமையாக வயிற்றை மட்டுமின்றி, உடலின் அனைத்து உறுப்புக்களையும் சுத்தப்படுத்தலாம். மேலும் உடல்நல நிபுணர்கள், தினமும் ஒரு ஃபுரூட் பௌல் சாப்பிட்டு வந்தால், உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர். செரிமான பிரச்சனைகளைத் தடுக்க ஆயுர்வேதம் ச…
-
- 0 replies
- 397 views
-
-
மன அழுத்தம்(stress) :நம்முடைய மூளையில் செரட்டோனின், டோப்பமின் என்ற ரசாயனப் பொருட்கள் சுரக்கின்றன.இவற்றின் அளவு சமநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை.கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால்தான் மனஅழுத்தம் ஏற்படும்.பாதிக்கும் இவை சமநிலையில் இல்லாததால்தான் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்கின்றன.சில சமயம் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே சிலருக்கு மனஅழுத்தம் தீர்ந்துவிடும்.அப்போது இந்த ரசாயனப் பொருட்கள் சமநிலைக்குத் தற்செயலாக வந்திருக்கும்.அதனால்தான் பயம், படபடப்பு தானாகவே குறைந்து, மனஅழுத்தம் இல்லாமல் போகின்றது.இது எல்லோருக்கும் சாத்தியமல்ல. மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஷிஷிஸிமி குரூப் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.இது செரட்டோனின், டோப்பமின் போன்ற ரசாயனப் பொருட்க…
-
- 1 reply
- 397 views
-
-
செயற்கையாக பரிசோதனைக் கூடத்தில் வளர்ந்த சிறுநீகரம் வெற்றிகரமாக செயற்படுகின்றது - ஏனைய அங்கங்களும் விரைவில் உருவாக்கப்படலாம்! [Monday, 2013-04-15 20:51:49] பரிசோதனைக் கூடத்திலேயே வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் விலங்குகளில் பொருத்தப்பட்ட சிறுநீரகம் சிறுநீர் கழிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மருத்துவத் தொழிநுட்பம் ஏனைய உடல் உறுப்புகளில் கையாளப்பட்டு நோயாளிகளிடத்திலும் ஏற்கனவே வெற்றியடைந்திருந்தாலும் மிகவும் நூதனமான உடலுறுப்பான சிறுநீரகத்தில் இப்போது தான் சாத்தியப்பட்டுள்ளது. இயற்கையான சிறுநீரகத்தை விட இந்த தொழிநுட்ப- சிறுநீரகத்தின் தொழிற்பாடு கொஞ்சம் மெதுவாகத் தான் இருக்கிறது. ஆனாலும், இப்போது எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், உடல் உறுப்பு- மீள்உருவாக்க மருத்துவத் துறையில் ஒரு ப…
-
- 1 reply
- 396 views
-
-
சிறு குழந்தைகள் ஆனாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, மழை வரும்போது அதில் நனைய வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதேபோல், எப்போதுமே இருக்கும் மற்றொரு விஷயம், மழையில் நனைவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்ற குழப்பம். மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும், சளி பிடிக்கும் என்று சொல்லி நம் அனைவரும் ஒருமுறையேனும் மழையில் நனைவதிலிருந்து தடுக்கப்பட்டிருப்போம். ஆனால், சமீப காலமாக மழையில் நனைவது நன்மை தரும், அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் என்று பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இவற்றில் எது சரி? இந்தக் கூற்றுக்களில் எவ்வளவு உண்மை இருக்கிறது? இக்கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள, தொற்றுநோயியல் நிபு…
-
- 0 replies
- 396 views
-
-
காற்றிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் – உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கான ஆதாரம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ள நிலையில் வைரஸ் பரவுவது குறித்த வழிகாட்டலை புதுப்பிக்குமாறு விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். ஜெனிவாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இந்த அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான மரியா வன் கெர்கோவ், காற்று வழியாகவும் கொரோனா பரவுவதற்கான சாத்தியத்தையும் தற்போது விவாதத்திற்கு ஏற்று இருப்பதாக தெரிவித்தார். கொரோனாத் தொற்று பரவல் குறித்து 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு கடிதத்தை உலக சுகாதார அமைப்புக்கு எழுதியுள்ளனர். இதில் கொரோனா காற்று வழியாகப் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்க…
-
- 0 replies
- 396 views
-
-
பட மூலாதாரம்,LUISA TOSCANO படக்குறிப்பு, பிரேசிலைச் சேர்ந்த 38 வயதான லுயிசா டோஸ்கானோ, தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பாருச்சோ பதவி, பிபிசி உலக செய்திகள் 4 பிப்ரவரி 2025, 03:47 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக லுயிசா டோஸ்கேனோவுக்கு தெரிந்தபோது அவர் திகைத்துப் போனார். "இது முற்றிலும் எதிர்பாராதது," என்கிறார் பிரேசிலை சேர்ந்த லுயிசா. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. "நான் சிறப்பாக, ஆரோக்கியமாக, முழு உடற்தகுதியோடு இருந்தேன், எந்த ஒரு நோய்க்கான அபாயம…
-
-
- 2 replies
- 395 views
- 1 follower
-
-
அனைவரும் செய்யவேண்டிய மூச்சு பயிற்சி
-
- 0 replies
- 395 views
-
-
முதுமையை தாமதப்படுத்தும் மூலிகை மருந்து கண்டுபிடிப்பு வயது முதிர்ச்சியால் ஏற்படும் முதுமை மற்றும் முதுமைசார்ந்த நரம்பு தளர்ச்சி நோய்கள் ஆகியவற்றுக்கான நிவாரணியாக புதிய மூலிகை மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க நரம்பு மண்டலம் சார்ந்த குறைபாடுகளும் நோய்களும் அதிகரிக்கத் தொடங்கி விடுவது இயற்கையின் நியதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், முதுமை மற்றும் முதுமை சார்ந்த நரம்புத் தளர்ச்சி நோய்கள் ஆகியவற்றுக்கான நிவாரணியாக புதிய மூலிகை மருந்து தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தின் அம்பாலா நகரில் உள்ள மஹரிஷி மார்கண்டேஷ்வர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜய் குப்தா, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராச…
-
- 0 replies
- 395 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தேநீர். இந்தத் தேநீருக்குத்தான் இன்ஸ்டாவில் எத்தனை ரீல்ஸ், எத்தனை பாடல்கள், எத்தனை ரசிகர்கள். உடல் நடுங்கும் குளிரில் தொடங்கி கொளுத்தும் வெயில் வரை தேநீருக்காக ஏங்கும் மக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு வழிகாட்டுதல் அறிக்கையில் அடங்கியுள்ளன. ஏனெனில், காலை எழுந்தவுடன் தேநீர், காலை உணவுக்குப் பிறகொரு தேநீர், மதிய உணவுக்குப் பிறகொரு தேநீர், மாலை ஒரு தேநீர், இரவொரு தேநீர், தூக்கம் வரவில்லையெனில் நள்ளிரவில் தேநீர். இப்படியாக த…
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
மனிதருக்கு பன்றி சிறுநீரகம்: அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை மிஷெல் ராபர்ட்ஸ் சுகாதார ஆசிரியர், பிபிசி இணைய செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NYU LANGONE படக்குறிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்க அறுவை சிகிச்சை வல்லுநர்கள், ஒரு மனிதருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சோதித்தனர். இது உடல் உறுப்பு தான பற்றாக்குறையை தீர்க்கும் என அவர்கள் நம்புகின்றனர். மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவக் கருவிகளின் உதவியோடு சுவாசித்துவந்த நபருக்கு இந்த பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி அதை உடல் ஏற்றுக்கொள்கிறதா அல்லது நிராகரிக்…
-
- 0 replies
- 394 views
- 1 follower
-
-
லண்டனில் விற்கப்படும் ஆபத்தான தோலை வெண்மையாக்கும் கிரீம்கள் லண்டனில் விற்கப்படும் ஆயிரக்கணக்கான தோலை வெண்மையாக்கும் கிரீம்களில் உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் ஆபத்தான வேதிப்பொருட்கள் இருப்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. இத்தகைய கிரீம்களில் இருக்கும் வேதிப்பொருட்களின் விவரங்கள் அவற்றின் மேலட்டைகளில் குறிப்பிடப்படவில்லை. இதனால் இந்த கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து குறித்து பரவலாக தெரிவதில்லை. இந்த கிரீம்களில் ஹைட்ரோகுய்னான் என்கிற ஆபத்தான வேதிப்பொருள் இருக்கிறது. ஐரோப்பாவில் இது தடை செய்யப்பட்ட வேதிப்பொருள். காரணம், அது தோல் பிரச்சனைகளையும் அதைவிட மோசமான உடல்நல ஆபத்துக்களையும் உண்டாக்கவல்லது. ஆனால் லண்டன்…
-
- 2 replies
- 394 views
-
-
முகப்பொலிவு முதல் கர்ப்பப்பை ஆரோக்கியம் வரை... நலம் தரும் நல்லெண்ணெய்... யாருக்கு, எவ்வளவு? ஆ.சாந்தி கணேஷ் Oil (Representational Image) ( Photo: Pixabay ) எந்தப் பொருளுடன் சேர்கிறதோ அந்தப் பொருளின் நன்மையையும் ருசியையும் அதிகப்படுத்துகிற இயல்பு நல்லெண்ணெய்க்கு உண்டு. எண்ணெய்களில் நல்ல எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய். கலப்படமில்லாத செக்கு நல்லெண்ணெய்யின் பலன்கள் குறித்துச் சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். ``உலகத்தில் இருக்கிற எண்ணெய்களில் மிகச்சிறந்த எண்ணெய் நல்லெண்ணெய்தான். ஆயுர்வேத மருத்துவத்தில் எண்ணெய் என்று குறிப்பிட்டிருந்தாலே அது நல்லெண்ணெய்தான். …
-
- 0 replies
- 393 views
-
-
அதிக எடை : நினைவாற்றல் குறையும் அபாயம் உடல் எடை அதிகமாக உள்ளவர்களின் நினைவாற்றல் மற்றும் திறமை குறைவாக இருக்குமென அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலுள்ள கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திலுள்ள ஆய்வாளர்கள் 18 தொடக்கம் 35 வயதிற்குட்பட்டவர்களின் நிறை அவர்களின் தினசரி ஞாபகசக்தி என்பவற்றை ஆய்வுக்குட்படுத்தினர். இதில் அதிக எடை கொண்டவர்களின் ஞாபகசக்தி குறைந்து காணப்பட்டது. அதிக எடை கொண்டவர்கள் அடிக்கடி உணவு சாப்பிட்டதால் அவர்கள் தமது சிந்திக்கும் திறனை இழந்துள்ளார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குண்டானவர்கள் கற்பது மற்றும் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.virakesari…
-
- 0 replies
- 393 views
-
-
பெண்ணுறுப்பின் கருமை நிறம் ஆபத்தா?- பெண்களை ஆபத்துக்குள்ளாக்கும் சமூக ஊடக பதிவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்ணுறுப்பின் வாசனை மற்றும் தோற்றத்தை மாற்றுவதற்கு அழகு சாதன தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை அதிக எண்ணிக்கையிலான ஆன்லைன் பதிவுகள் பரிந்துரைக்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஓஸ்ஜ் ஓஸ்டெமிர் பதவி, பிபிசி துருக்கி 23 ஆகஸ்ட் 2024 சமூக ஊடகங்களில் பெண்ணுறுப்பு பற்றி நடந்து வரும் விவாதங்கள், உலகம் முழுவதும் உள்ள பல பெண்களின் மனதில் தேவையற்ற அச்ச உணர்வை விதைத்துள்ளது. பெண்ணுறுப்பின் உள்புறம் ‘யோனிக் குழல்’ (vagina) எனப்படும். கருப்பையை வெளிப்புற உடலுடன் இணைக்கின்ற தசைக்குழாய் இது. பெண்ணுறுப்பின் …
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
சிறுநீரக கல் என்பது என்ன? அது வராமல் தடுப்பது எப்படி? 18 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இது உடலில் கொடூரமான வலியை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சிறுநீரகக் கல் என்றால் என்ன? அதைச்சுற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்ன என்பதை எளிமையாக விளக்குகிறது இந்தக் கட்டுரை. இதுகுறித்த எளிய கேள்விகளுக்கு துல்லியமான பதில்களை வழங்குகிறார் சிறுநீர…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
கணுக்காலில் வலி... நிவாரணம் என்ன? அடிக்கடி கணுக்காலில் வலி, குதிகாலில் வலி ஏற்படுகிறதா? `நீங்க அதிக எடையோட இருக்கீங்க. அதுனாலதான் வலி ஏற்படுது’ என்று நெருங்கியவர்கள் சொல்கிறார்களா? இது முழுக்க உண்மை இல்லை. உடல் எடை அதிகமாக இருப்பதால்தான் கணுக்கால் வலி ஏற்படும் என்று இல்லை. கால்வலி ஏற்பட நாம் நடக்கும் தரைகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரமேஷ் குமார். மேலும் என்னென்ன காரணங்களால் கணுக்காலில் வலி ஏற்படும், அதற்கான தீர்வுகள் குறித்து விளக்குகிறார். காலை நேரத்தில், நீண்ட நேரப் பயணத்தில், அதிக நேரம் அமர்ந்து இருந்து பின் எழுந்திருக்கும்போது... என வெவ்வேறு சமயங்களில் குதிகால் தசைநார் (Achilles Tendon) பகுதியில் வலியும…
-
- 0 replies
- 391 views
-
-
வயிற்றுப் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அதனால் தான் ஔவையார் கூட பசிப்பிணி என்றார். பசிக்கும் போது சாப்பிடவேண்டும். ஆனால் தட்டு நிறைய உணவு இருந்தும் அதை சாப்பிட சிலருக்கு பசி எடுக்காது. பசிக்கா விட்டால் கூட அதுவும் ஒரு நோய்தான். பசியின்மைக்கு பல பிரச்சினைகள் உண்டு. ஜீரணமண்டலத்தை சீராக்கி நன்றாக பசிக்க உணவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். ருசிக்காக சாப்பிடாதீங்க ருசி என்பது நாவின் சுவை நரம்புகளுக்கு மட்டும்தான் தெரியும். ருசிக்கிறது என்பதற்காக கண்டதையும் அள்ளிப்போட்டுக்கொள்ளாதீர்கள். கடைசியில் அதுவே ஜீரணகோளறுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையான…
-
- 0 replies
- 391 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காலை உணவாக தானியங்களை உண்ணும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் 53 சதவிகிதம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி பதவி, 4 மணி நேரங்களுக்கு முன்னர் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாக இருக்கும் தானியங்களை காலை உணவாக உண்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது. நமது அன்றாட உணவில் காலை உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி அடிக்கடி பேசுகிறோம். காலையில் சிறப்பான உணவை உட்கொண்டால், அன்றைய நாளில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சக்தி உடலுக்குக் கிடைக்கும். இருப்பினும், சரியான காலை உணவு எது? குழந்தைகளுக்கு காலை உணவாக என்ன கொடுப்பது என்பதை முடிவு செய்வது கடினமானதாக இருக்கிறது. காலை உணவாக தானியங்களை உண்ணும்…
-
- 0 replies
- 391 views
- 1 follower
-