நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3021 topics in this forum
-
அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறு…
-
- 0 replies
- 4.4k views
-
-
பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள் பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும். சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறர…
-
- 0 replies
- 2.2k views
-
-
குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம். குறட்டை அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடி இருக்கும். உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்லவேண்டி வரும். இந்த நிலையை போக்க, பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது தற்கால விஞ்ஞானத்தில் ஒரு புரட்சி என்று கருதப்படுகிறது. லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தீப்பெட்டி போன்று ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொ…
-
- 7 replies
- 1.4k views
-
-
உயர் ரத்த அழுத்தத்தை குணமாக்க, புதிய முறையிலான சிகிச்சை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது, அந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.இந்த புதிய சிகிச்சை முறையால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது. இந்த புதிய முறையிலான சிகிச்சைக்கு “ரீனல் சிம்பதடிக் நெர்வ் அப்ளேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையில், ஒயர் ஒன்று, சிறுநீரகத்திற்கு அருகில் இருக்கும் ரத்த குழாயினுள் செலுத்தப்பட்டு, மிதமான ஷாக் கொடுக்கப்படுகிறது. இதனால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்குமாறு, மூளையில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் தடுக்கப்படுகின்றன. பிரிட்டனை சேர்ந்த அந்தோணி ஹென்றி(68) என்பவர் தான், அந்நாட்டில், முதன் முதலில் இந்த சிகி…
-
- 0 replies
- 1.7k views
-
-
மனித வயிற்றுக்கு நிகரான ஓர் கருவியை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோர்விச்சின் உணவு ஆய்வு நிறுவகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் இந்த புதிய கருவி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கருவி மனித வயிற்றினால் மேற்கொள்ளப்படும் சகல தொழிற்பாடுகளையும் துல்லியமாக மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித சமிபாட்டுத் தொகுதியின் இயக்கம் தொடர்பில் ஆய்வுகளை நடத்தும் நோக்கில் இந்த புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை கண்டு பிடிப்பதற்கு சுமார் பத்து ஆண்டு காலம் தேவைப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மனித வயிறு உணவு சமிபாடு தவிர்ந்த ஏனைய பல தொழிற்பாடுகளை ஆற்றுவதாகவும், இதனால் குறித்த கருவியின் உருவாக்கம் மருத்துவ உலகில் புதிய ம…
-
- 0 replies
- 699 views
-
-
உடற்பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்தப் பழைய உண்மையை இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மீண்டும் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. இத்துடன் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது டி.வி., தியானம் போன்றவற்றிற்குப் பதிலாக இருபது நிமிடங்கள் உடற்பயிற்சியோ அல்லது துரித நடை ஓட்டமோ செல்வது நல்லது. இதற்காக நன்கு துடிப்பாகச் செயலாற்றும் 34 மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்தனர். முதல் குழு ஓர் அறையில் அமைதியாக அமர்ந்தது. இரண்டாவது குழு பரிசோதனைச் சாலைக்குள்ளேயே ‘ஜாக்கிங்’ செய்தது. மூன்றாவது குழு உடற்பயிற்சி செய்தது. இருபது நிமிடங்கள் கழிந்ததும் ஓவ்வொரு குழுவையும் பரிசோதித்தனர். உடற்பயிற்சி செய்தவர்கள் மற்ற இரு குழுவினர்களைவிட 25% அளவில் ஓய்வு நிலையில் இருந்தனர். த…
-
- 1 reply
- 1.2k views
-
-
தைராய்டு என்பது நமது கழுத்தின் முன்பக்கத்தில் குரல்வளைப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள ஒரு சுரப்பி. சாதாரணமாக முழுவளர்ச்சியடைந்த மனிதர் உடலில் உள்ள தைராய்டு சுரப்பி 15 முதல் 25 கிராம் எடையுள்ளதாக இருக்கும். நம் உடலில் உள்ள இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம் இவைபோல் தைராய்டுச் சுரப்பிக்கும் சில முக்கியமான பணிகள் உள்ளன. இச்சுரப்பி, T3, T4 எனும் இரண்டு மிக முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. நமது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாதவை இவ்விரண்டு ஹார்மோன்கள். இந்த ஹார்மோன்களின் பணி என்ன? இந்த ஹார்மோன்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும், திசுவிற்கும், செல்களுக்கும் தேவையானவை. ஒவ்வொரு நிமிடமும் உடலில் நடக்கும் எல்லாச்செயல்பாடுகளையும், அது ஆற்றலை…
-
- 0 replies
- 2.9k views
-
-
விட்டமின் மாத்திரைகளின் மறுபக்கம் ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார். இவ்வாறாக, இன்று படித்தவர்களிலிருந்த பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரைகள் ஒன்று. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக் கொ…
-
- 4 replies
- 2.4k views
-
-
நாளாந்தம் மல்ரி வைற்றமின் உள்எடுப்பது எங்கள் உடலுக்கு உண்மையில் ஆரோக்கியமானதா?? வணக்கம், நீங்கள் நாளந்தம் மல்ரி வைற்றமின் குளிகைகள் எடுக்கிறனீங்களோ? இது உடலுக்கு உண்மையில ஆரோக்கியமானதா / இல்லாததா? தினமும் உள்ளெடுக்கப்படும் மல்ரி வைற்றமின் குளிகைகள் எங்கட உடலில விரும்பத்தகாக இரசாயண மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஓர் கருத்து நிலவுகின்றது. மல்ரிவைற்றமின் குளிகைகளாக இருந்தாலும் சரி குடும்ப வைத்தியரிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது எங்கட பாட்டுக்கு நாங்களாக மல்ரி வைற்றமின் குளிகைகளை போடுவது ஆரோக்கியமானது அல்ல என்றும் ஓர் கருத்தை கட்டுரை ஒன்றில் பார்த்தேன். எங்கட உடம்பில் ஓர் இரசாயண சமநிலை நிலவுகின்றது. ஒழுங்கான, சீரான உடம்பின் இயக்கத்திற்கு இந்த சமநிலை மிகவும் ம…
-
- 13 replies
- 3.8k views
-
-
மனிதனின் இரத்தக் குழாய்களுக்குள் நீந்திச் செல்லும் நுண்ணிய ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பலகலைக்கழக நுண் பெளதிகம் மற்றும் நானோ பெளதிக ஆய்வுக்கூடத்தில் இந்த ரோபோக்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இரத்தக்குழாய் அடைப்புகளின் காரணமாக செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இந்த ரோபோக்கள் உதவிகரமாக இருக்குமாம். இரத்தக் குழாய்களுக்குள் ஊசிமூலம் இந்த ரோபோக்களை செலுத்தி செயல்பட வைக்க இயலும். ஒரு மில்லிமீட்டரில் கால்பங்கு பெரியதான இந்த ரோபோக்களை piezoelectricityஐப் பயன்படுத்தி இயங்கச் செய்ய முடியும் என்கிறார்கள் நுண் எந்திரவியல் மற்றும் நுண் பொறியியல் அறிஞர்கள். சிலவகையான படிகங்கள், பீங்கான்கள் இவற்றின் மீது அழுத்தம் கொடுக்கும்போது மி…
-
- 1 reply
- 817 views
-
-
பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம். ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை. வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும். ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி…
-
- 6 replies
- 10.7k views
-
-
உலகத்தி்ன் மொத்த நிலப்பரப்பில் 75 சதவிகிதம் தண்ணீராக இருப்பது போல், மனித உடம்பிலும் உள்ளது வியப்பினைத் தருகின்றது. ஒவ்வொருவரது உடலமைப்பிற்குத் தகுந்தவாறு சிறிதளவு வேறுபாடுகள் இருக்கும். இரத்தத்தில் 90 சதவிகிதமும், தசைகளில் 60 சதவிகிதமும், எலும்புகளில் 22 சதவிகிதமும் நீராக வுள்ளது. சிறுநீராக 1500 மில்லியும்,வேர்வை-வியர்வையாக-400மில்லியும்,சுவாசத்தின் மூலமாக 400 மில்லியும், மலத்தின் மூலம் 100 மில்லியும் வெளியேற்றப் படுகின்றது. உலகில், ஏரி,குளம்,கிணறு்,ஆறு,கடல் என நீர்ப் பகுதிகள் இருப்பது போன்று, உடலிலும்வயிறு,மார்பு,மூளை முதலிய இடங்களிலும் நீர்ப்பகுதிகள் உள்ளன. வயிற்றுவலிக்கு வயிற்றில் நீ்ரினளவு குறைவதே காரணமாகின்றது. சளி,இருமல் தொல்லைகளுக்கு மார்பில் நீர் குற…
-
- 4 replies
- 1.4k views
-
-
அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம். கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது. அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள். கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் …
-
- 6 replies
- 902 views
-
-
சிறுநீரகக் கற்களுக்கு எளிய வைத்தியம் சிறுநீரகக் கற்கள் தற்போது இளைஞர், இளைஞிகளுக்கும் கூட தோன்றுகிறது. இதற்கு பல காரணம் இருந்தாலும், இதனை சரிபடுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். கடுமையான வலி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்றவற்றை இது ஏற்படுத்தக் கூடும். இதற்கு, சில எளிய வைத்திய முறைகள் உள்ளன. ஆயுர்வேதத்தில் இவை கூறப்பட்டுள்ளன. அதாவது, வாரத்தில் 3 நாட்கள் இடைவெளியில் 2 முறை அதாவது செவ்வாய், வெள்ளி என வைத்துக் கொள்ளலாம். இந்த கிழமைகளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சிறிது கடுகெண்ணெய் ஆகியவற்றை கலந்து லேசாக(வெதுவெதுப்பாக) சூடாக்கி, அதனை வயிறு, முதுகு, …
-
- 11 replies
- 5.9k views
-
-
இனிய வணக்கங்கள், தினமும் நாங்கள் எல்லோரும் பெரும்பாலும் Headphones பாவிக்கின்றோம். iPod தொடக்கம் கணணி வரை பல்வேறு கருவிகளில இந்த Headphonesஐ நாங்கள் பயன்படுத்தவேண்டி இருக்கின்றது. முக்கியமாக மற்றவர்களை இரைச்சல் மூலம் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதற்கும், இசையை நாங்கள் மட்டும் கேட்டு மகிழ்வதற்கும் இதை பாவிக்கின்றோம். பல்வேறு வடிவங்களில், வகைகளில், விலைகளில் Headphones இருக்கின்றன. கலைஞர்கள் பாடல்களை கலைக்கூடங்களில் ஒலிப்பதிவு செய்யும்போது.. அது தமிழ் சினிமா பாடலாக இருக்கட்டும்.. அல்லது Hollywoodல் உருவாக்கப்படும் ஓர் இசைAlbumமாக இருக்கட்டும்.. குறிப்பிட்ட பாடலை - இசையை கேட்பதற்கு சில அடிப்படை தரம் உள்ள கேட்கும் கருவிகளை ரசிகர்கள் பயன்படுத்தவேண்டும் என்று அவற்றை உர…
-
- 0 replies
- 820 views
-
-
நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர். இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களில் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும். இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது இடது எனப்பிரிந்து முறையே வலது …
-
- 0 replies
- 1.4k views
-
-
தினமும் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வியாதிகளால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது. கடின உடற்பயிற்சியானது அனைத்து வகைப் புற்று நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தினாலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இரப்பை புற்று நோய்க்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. இதற்காக தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது. அதாவது, மெதுவாக ஓடுதல், நீச்சல் பயிற்சி, படகு ஓட்டுதல் போன்றவற்றையும் சேர்த்து உங்கள் உடற்பயிற்சி அமைய வேண்டும். விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தால் கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளிலும் அரை மணி நேரம் ஈடுபடலாம். எதுவாக இருந்தாலும் ஓரிரு நாட்கள் செய்துவிட்டு பின்னர் விட்டுவிடுவதில் பயனில்லை. தொடர…
-
- 0 replies
- 991 views
-
-
Something that we can do to help ourselves. Nice to know. Bayer is making crystal aspirin to dissolve under the tongue. They work much faster than the tablets. Why keep aspirin by your bedside? Why keep aspirin by your bedside? About Heart Attacks There are other symptoms of an heart attack besides the pain on the left arm. One must also be aware of an intense pain on the chin, as well as nausea and lots of sweating, however these symptoms may also occur less frequently. Note: There may be NO pain in the chest during a heart attack. The majority of people (about 60%) who had a heart attack during their sleep, did not w…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலவில்லை. அவர்களுக்கு இரத்தம் செலுத்துவது மிகக் கடினமாக இருந்தது. ஏனெனில் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. உயிர்களைக் காக்க முடியவில்லை. 1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. “A” வகை ரத்தம், 2. “B” வகை ரத்தம், 3. “AB” வகை ரத்தம் 4. “O” வகை ரத்தம். இவற்றில் “A” வகை ரத்தத்தை A1, B2 என்ற துணை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இரத்தப் பிரிவுகளில்... A வகையினர் 42%ம், ஆ வகையினர் 8%ம், AB வகைய…
-
- 1 reply
- 1.5k views
-
-
கேன்சர் நோயினால் (புற்று நோய்) பாதித்தவர்களுக்கு வலியை போக்குவதற்காக “மார்பின்” மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மாத்திரை புற்று நோயை மேலும் பரவ செய்யும் தன்மை உடையது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ரத்தநாளங்களை பலப்படுத்துவதற்கு பதிலாக மற்ற செல்களிலும் புற்று நோயை பரவ செய்வது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. பாஸ்டனில் உள்ள அமெரிக்க புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தில் முன்னணி ஆராய்ச்சியாளர் பேட்ரிக் சிங்கிள்டன் தெரிவித்தார். மார்பினுக்கு பதிலாக மெத்தில் நால்ட்ரோசன் அல்லது எம்.என்.டி.எக்ஸ். மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். http://www.newsonews.com
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம். இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும். 1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை (இஃOகுஉஈ ஏஉஅகீகூ) இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரிவடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன. 1956ம் வருடம் அமெ…
-
- 4 replies
- 1.2k views
-
-
உலகை உலுக்கும் ஏ (எச்1 என்1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதலை தடுக்க கிளாக்சோ ஸ்மித்க்ளைன் மருந்து உற்பத்தி நிறுவனம் 'பேன்டம்ரிக்ஸ்' (Pandemrix) என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள துணை மருந்து பொருள் குறித்து தற்போது உலகெங்கிலும் மருத்துவ நிபுணர்களிடையே சர்ச்சை கிளம்பியுள்ளது. பொதுவாகவே தடுப்பூசி மருந்துகளில் மனித உடலில் அதன் வினைத்திறனை அதிகரிக்கும் வண்ணமும், உடல் அதனை ஏற்றுக் கொண்டு வினையாற்றவும் துணை மருந்துப் பொருள் சேர்ப்பது வழக்கம்தான். ஆனால் தற்போது இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள 'ஸ்க்வாலீன்' (Squalene) என்ற துணைப்பொருளே இந்தச் சர்ச்சைக்குக் காரணம். ஜெர்மனி அரசுக் கட…
-
- 17 replies
- 2.7k views
-
-
பன்றிக்காய்ச்சலை தடுக்க இந்திய உணவை வெங்காயம், பூண்டு சாப்பிடலாம் - ரஷ்ய டாக்டர்கள் சனிக்கிழமை, நவம்பர் 7, 2009, 12:12 மாஸ்கோ: இந்தியாவின் மசாலாப் பொருட்களான பூண்டு, மஞ்சள், இஞ்சி, சீரகம், வெங்காயம் போன்றவை பன்றிக் காய்ச்சல், ஜலதோஷம் வராமல் தடுக்கக் கூடிய மருத்துவக் குணம் கொண்டவை என்று ரஷ்ய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மஞ்சள், இஞ்சி, சீரகம் உள்ளிட்டவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூலம் உடலில் நோய் தடுப்பு சக்தியை நன்கு பலப்படுத்தலாம் என்று மாஸ்கோ சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது மட்டுமல்லாது, வெங்காயம் மற்றும் பூண்டையும் வேகவைக்காமல் அப்படியே சாப்பிடுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ரஷ்…
-
- 3 replies
- 1.2k views
-
-
உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர் சுற்றவேண்டிய துர்பாக்கியம் ஆகிவிடும்;!!! „உண்டிசுருங்குதல் பெண்டிற்கழகு“ என்ற வசனத்தை தாயகத்தில் கேட்ட ஞாபகம்! எமக்கு அறுசுவையும் சமைத்து தந்த தாய் சொன்னவிடையங்களை நாம் கேட்டு என்றும் ஒழுகியிருந்தால். இன்று வைத்தியர்கள் என்றும் பருமன் குறைப்பு என்று பல நோய்களுக்கு பல வழிகளில் பணத்தை விரையம் செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எனினும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் கோவில்கள் மற்றும் தமிழ்பாடசாலைகள் இத்தகைய நற்பழக்கத்தை இதுவரை காலமும் முன்னெடுக்காது இருப்பது தமிழர்கள் செய்த துர்பாக்கியம். இன்றைய தாய்மார்களுக்குத் தெரியாத விடையங்களை மாணவ மாணவிகளுக்கு பகிர்ந்து கொடு;க்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் ஆசிரிய ஆசியர்கள…
-
- 8 replies
- 4.3k views
-
-
நான் அண்மையில் பார்த்த ஒரு அருமையான ஆவணப்படம். என்னை பாதித்த பலவிடயங்கள் இதில் உண்டு. supersize me http://video.google.com/videoplay?docid=-1432315846377280008&ei=yOflSrf5CKLwqAPui72vCQ&q=supersize+me&hl=en# முதலில் பாருங்கள்.தொடர்ந்து பேசுவோம்.
-
- 2 replies
- 1.4k views
-