நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3021 topics in this forum
-
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக்கொத்துமல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும். கொத்து மல்லிக்கீரையை பிழிந்து கிடைக்கும் சாற்றை அம்மை மற்றும் பித்த தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால் அவைகளின் நிறம் தோலோடு பொருந்துவது போல மாறிவரும். முகத்தில் ஏற்படும் பருக்கட்டிகளுக்கு கொத்தமல்லி சாற்றை எடுத்து அதில் கொம்பு மஞ்சளை அரைத்து, அரைத்ததை பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள் மறையும், முகம் குழந்தைகளின் முகம் போல பளபளப்பாய் இருக்கும். கொத்துமல்லி சாறுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசினால் தலைவலி குணமாகும். கொத்தமல்லி இலைகளினை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் கட்டிகளுக்கு வைத்து கட்டி வர அவை சீக்கிரம் கரைந்து போகும், அல்லது பருத்து …
-
- 14 replies
- 7.9k views
-
-
அதிகரிக்கும் சிறுநீரக நோய் [07 - March - 2007 நாளைய தினம் உலக சிறுநீரக தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பலவற்றில் சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படுகின்றதெனினும், மக்கள் மத்தியில் அது தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது. சர்வதேச சிறுநீரகவியல் சங்கத்தின் இணை அமைப்பாக விளங்கும் இலங்கை சிறுநீரகவியல் மற்றும் உறுப்புமாற்று சிகிச்சை சங்கம் சிறுநீரக நோய் தொடர்பாக இலங்கையர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் பாரிய பிரசார இயக்கமொன்றை ஆரம்பிக்கவிருக்கிறது. சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் செய்தியைப் பரப்புவதற்கான சுவரொட்டி இயக்கம் முன்னெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
காலையில் சாப்பிடாமல் இருக்கும் இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. சாம்சங் டயாபடிக் ரிசர்ச் இன்°ட்யூட் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இவர்கள் 1624 டீனேஜ் பள்ளி மாணவர்களின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்ததில் அதிக எடையுள்ள பலரும் காலை உணவு சாப்பிடாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு இம்மாணவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறினாலும் முக்கியமாக இரண்டு காரணங்களால் தான் குண்டாக அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். காரணம் 1: காலையில் சாப்பிடாத காரணத்தால் பகலிலும் இரவிலும் அதிக பசி எடுப்பதால் மதிய உணவும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது. காரணம் 2: முதல் நாள் இரவு சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் பகல் 12 மணி வரை கிட்டத்தட்ட 15 முதல் 18 மணி நேரம் வரை சாப்பிடாமல்…
-
- 9 replies
- 2k views
-
-
கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம். கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றாக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம். கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும். காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மர…
-
- 21 replies
- 3.5k views
-
-
வீட்டில் யாரேனும் அதிகம் தூங்கினால், பெரியவர்கள் அவர்களைக் கண்டித்து, "இப்படித் தூங்கினால் உடல் பருமன் ஆகிவிடும். ஒரு வேலையும் செய்யாமல் தூங்கினால் உணவி#ருந்து பெறப்பட்ட சக்தி செலவழியாமல் உடம்பு பெருத்துவிடும்'' என அறிவுரை கூறுவதைப் பார்த்திருக்கிறோம். மாறாக, ஒல்லியான, அழகான உடல்வாகு பெற நன்றாக உறங்க வேண்டும் என்று ஒரு புதிய ஆராய்ச்சி மூலம் தெரிகிறது. "உடல் எடையைக் குறைக்க ஓர் உன்னதமான திட்டம் இதோ: ஒரு தூக்கம் போடுங்கள்'' என்று செய்தியாக நாம் அறிவது சஞ்சய் படேல் என்ற விஞ்ஞானியின் ஆராய்ச்சியிலிருந்து. அவர் அமெரிக்காவில், ஒஹையோ மாநிலத்தில் உள்ள கிளீவ் லேண்ட் நகரின் Case Western Reserve University யில் பணிபுரிகிறார். 68,000-க்கு அதிகமான பெண்களை இந்த ஆராய்ச்சியில் உட்படுத்…
-
- 1 reply
- 3.7k views
-
-
புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ஐந்தரை நிமிட வீதம் குறைந்து வருகிறது டாக்டர் ஜமுனா ஷ்ரீனிவாசன் - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட திருக்குறளில் மக்களிடையே நிலவிய பல்வேறு தீய பழக்கங்களைத் தவிர்ப்பது பற்றிய குறட்பாக்கள் உள்ளன. ஆனால், புகைத்தல் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆதிகாலத்தில் புகைப்பழக்கம் அறவே இல்லாத நம் தமிழகத்தில் இப்பழக்கத்தை இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் தான் உருவாக்கினர். இன்று இளைஞர் முதல் பெரியவர்கள் வரை வயது, இன, மத பேதமின்றி பலராலும் புகைபிடிக்கும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு நல்ல உடல் நலமுள்ளவரின் இரத்தச் சிவப்பணுக்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயுவை 96 சதவிகிதம் உடலெங்கும் கொண்டு செல்லும் த…
-
- 10 replies
- 2.3k views
-
-
பயத்தால் ஏதும் பயன் இல்லை "மேன்மைப்படுவாய் மனமே கேள் பயத்தால் ஏதும் பயன் இல்லை" என்கிறார் பாரதி. ஆம், பயம் நம்மை அழிக்க நினைக்கும் வலிமையான ஆயுதம். பயம், பயந்த சுபாவம் என்பது பிறக்கும் போதே கூடப் பிறந்த பல சுபாவங்களில் ஒன்று. வாழ்க்கை வழிமுறைகள் மாற்றியோ அல்லது திருத்தியோ அமைக்கப்பட்டால் பயம் விலகி விடுவது உறுதி. இரத்த சோகை பயம், படபடப்பு, கையில் வியர்ப்பது, நடுக்கம் இவைகள் ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால் நிச்சயம் இருக்கும். இதற்கு ரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவை பரிசோதிக்க வேண்டும். 13க்கும் குறைவானால் இரும்புச்சத்து மிகுந்த முருங்கைக் கீரை, காரட், பேரிச்சம்பழம் போன்றவற்றை உடனே சாப்பிட்டு தேற்றிக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் …
-
- 6 replies
- 1.8k views
-
-
துரித உணவுகளில் உயிர்க்கொல்லி கொழுப்பு "இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லுங்க? ஏன்னா Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கணும்" என்று விடுமுறைக்கு வந்த எங்கள் குடும்ப நண்பரின் மகன் கடையில் இப்படி சொன்னான், போன மாதம் அவன் காய்ச்சலில் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வை° பொருள் வாங்குமுன் அதை கவனிக்க வேண்டும் என்பது.. Zero Added Hydrogenated என்பது செயற்கையாக செய்யப்படும். இது பசு, எருது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும் சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப் படுகிறது! இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து. இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins (HDL) சத்தை குறைத…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிரித்தால் மெலியலாம் http://www.youtube.com/watch?v=5P6UU6m3cqk வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் வாய்விட்டு சிரித்தால் தொப்பை குறையும் என்பதை சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். தினசரி வயிறு வலிக்க சிரித்தால் வருடத்திற்கு 40 கிராம் கொழுப்பு கரையுமாம். சிரிக்கும் போது வழக்கத்திற்கும் அதிகமாக 20 சதவீத சக்தி செலவாகிறது. வாய்விட்டு சிரிப்பது 1/2கிலோ மீட்டர் நடப்பதற்கு சமமான பலன்களை கொடுக்குமாம். தினமும் 15 நிமிடம் விழுந்து விழுந்து மன்ம்விட்டு சிரிப்பதை வழக்கமாக கொண்டால் வருடத்திற்கு அரைகிலோ வரை எடையைக் குறைக்கலாம் என்பதையும் இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். சிரிப்பதன் மூலம் இதயத்திற்கான…
-
- 36 replies
- 4.5k views
-
-
செக்ஸ் உணர்வு மனிதனுக்கு எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால், செக்ஸ் உணர்வு மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் இருந்து தோன்றியது. அதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால், அதன் செயல்பாடுதான் வேறுபட்டுக் கொண்டே போகிறது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? வேறொன்றும் இல்லை. நமது சமுதாய சூழ்நிலைதான். அப்படியென்றால், இதில் என்ன தவறுநடக்கிறது. கல்ச்சர் (கலாசாரம்) என்ற அடிப்படையில் தவறு செய்கிறோம்.உதாரணத்திற்கு தமிழ்நாடு என்று வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஒரே சூழ்நிலை, ஒரே தோற்றம் ஒரே மனநிலையை எதிர்பார்க்க முடியாது. கன்னியாகுமரியில் இருக்கும் ஒருவர் தமிழனாக இருந்தால், அவரது நடை, உடை பாவனை போன்றவற்றில் கேரளா மனம் வீசத்தான் செய்…
-
- 35 replies
- 6.3k views
-
-
திராட்சைப் பழம் எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளர் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நா…
-
- 28 replies
- 6.1k views
-
-
-
குடும்பத்தில் தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம். "ஒரு குடும்பத்தின் மொத்த ஆரோக்கியம் மிகவும் நல்லபடியாய் அமைய, அந்த வீட்டு தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்'' என்று லக்னோவில் உள்ள மனநில மருத்துவர் கூறியதாக ஒரு ஆங்கில மாத இதழில் வெளியாகி உள்ளது. இந்த மருத்துவரின் கூற்று எந்த அளவு உண்மை என்பது, ஒவ்வொரு வீட்டின் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும், மற்ற பெண்களுக்கும் மிக நன்றாகவே தெரியும். திருமணத்திற்குத் தயாராகும் பெண்கள், மனதளவில் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நினைத்தே "டென்ஷனாகி'' விடுகின்றனர். புகுந்த வீட்டில் கணவனின் மனநிலையை அறிந்து கொள்வது முதல் தொட…
-
- 5 replies
- 1.9k views
-
-
ஆண்டொன்றுக்கு 15 லட்சம் அமெரிக்கர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. உலகமுழுதும் ஆண்டொன்றுக்கு 140 லட்சம் பேர் அந்த மாரடைப்பு நோயினால் சாகின்றனர். உலகிலேயே இந்தியர்களுக்கே அதிகமாக மாரடைப்பு நோய் வருகிறது! இந்தியர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் அமெரிக்கர்களைவிட 3 அல்லது 4 மடங்கு அதிகம்! இந்தியர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் சீனர்களைவிட 6 அல்லது 7 மடங்கு அதிகம்! இந்தியாவில் 4 கோடி பேருக்கு மாரடைப்பு நோய் உள்ளது! ஆண்டு ஒன்றுக்கு மேலும் 10 லட்சம் பேருக்கு இந்நோய் ஏற்படுகிறது! 100 இந்தியர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டால்,அதிகம் 7 முதல் 10 பேருக்கு மற்ற பிரச்சனைகள் வருகின்றன, உதாரணம் இருதயம் பலவீனம் அடைதல் (heart failure…
-
- 0 replies
- 953 views
-
-
முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... ஆசைகள் ஓய்வதில்லை... சமீபகாலமாக பேப்பரைப் புரட்டினாலே, ‘அறுபது வயது முதியவர், இளம் பெண்ணிடம் சில்மிஷம்... எழுபது வயதுக்காரர், எட்டு வயதுச் சிறுமியை மானபங்கப்படுத்தினார்... ஐம்பது வயது ஆசிரியர், பதினாறு வயது மாணவியிடம் செக்ஸ் குறும்பு’ என்பது போன்ற அதிர்ச்சி செய்திகள்தான் அதிகம் கண்ணில் படுகின்றன. அதிலும் நொய்டா போன்ற சம்பவங்கள் ரத்தத்தையே உறைய வைத்துவிடுகிறது. வயதானவர்கள் ஏன் இத்தகைய இழிசெயல்களில் ஈடுபட்டு, அதுவரை தாங்கள் கட்டிக்காத்து வந்த மதிப்பையும் மரியாதையையும் கெடுத்துக் கொள்கிறார்கள்? பாலியல் தொடர்பாக அவர்களுக்குள் அப்படி என்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதை அறிய, பாலியல் நிபுணர் டாக்டர் நாராயண ரெட்டியைச் சந்தித்தோம்... …
-
- 1 reply
- 4.5k views
-
-
பீற்றூட் இதை ஆங்கிலத்தில் (Beta Vulgaris) என்று சொல்லுவார்கள். இதன் பிறப்பிடம் மத்திய ஐரோப்பாவும்,ஐக்கிய அமெரிக்காவும் ஆகும் இருந்தாலும் தற்பேது இந்தோசீனா,பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவிலும் பயிரிடப் படுகிறது. இதில் காபோஹைட்ரேட்கள் சர்க்கரை வடிவில் இருக்கும். சிறிதளவு புரதமும்,கொழுப்பும் உண்டு. ஈரப்பதம்-87.7 கிராம் புரதம்-1.7 கிராம் கொழுப்பு -0.1 கிராம் தாதுக்கள்-0.8 கிராம் காபோஹைட்ரேட்கள்-8.8 கிராம் கால்சியம்- 200 மி.கி மக்ளீசியம்- 9 மி.கி ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி பாஸ்பரஸ்- 55 மி.கிஅயம்- 0.4 மி.கி சோடியம்- 59.8 மி.கி பொட்டாசியம்- 43 மி.கி செம்பு- 0.20 மி.கி சல்பர்- 14 மி.கி தயமின்- 0.04 மி.கி ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி …
-
- 9 replies
- 2.4k views
-
-
தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் ‘சீரகம்’, வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில் நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டைக்காலத்திலிருந்தே இந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பன்மொழிப் பெயர்கள்: சீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர். பெயர் வந்த விதம்: நமது உடம்பின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவகை சீர்கேடுகளைச் சரிசெய்யும் குணம்கொண்ட வாசனைப் பொருள…
-
- 6 replies
- 2.1k views
-
-
நீங்கள் 35 வயதை தாண்டிய பெண்ணா? அப்படியானால் மார்பகங்களை அவ்வப்போது சுய பாரிசோதனை செய்து கொள்ளுங்கள். வழக்கத்துக்கு மாறhன கட்டிகள், அல்லது வேறு மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவாரிடம் செல்லுங்கள். ஏனெனில் அது உயிருக்கு உலை வைக்கும் மார்பக புற்றுநோயாக கூட இருக்கலாம். ரொம்ப பயப்படாதீங்க... மார்பக புற்றுநோயைப் பற்றி விலாவாரியாக தொரிஞ்சுகோங்க.. மார்பக புற்றுநோய் என்றால் என்ன? மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறேhம். மனித உடம்பு பலதரப்பட்ட செல்களால் ஆனது. உடம்பின் தேவைக்கு தகுந்தபடி இந்த செல்கள் அவ்வப்போது பிhரிந்து, கூடுதலான செல்களை உருவாக்கும். இது இயல்பான விஷயம். சில நேரம் குறிப்பிட்ட பகுதியில் செல்கள் வழக்கத்…
-
- 19 replies
- 4.6k views
-
-
-
வணக்கம் உறவுகளே வெட்றா மூலி இதைப்பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? செண்பகத்தின் கூடு இந்த மூலிகையால்த்தான் கட்டப்படுகிறதாம் :idea: :arrow: இதன் தன்மைகள் என்ன? இதில் உள்ள மருத்துவ குணம் என்ன :idea: :arrow:
-
- 18 replies
- 4.1k views
-
-
இந்து : ஹலோ டொக்டர்! டொக்டர் : ஹலோ இந்து! என்ன இந்த விடிய வெள்ளன என்னத் தேடி வந்திருக்கிறாய்..என்ன விசயம்? இந்து : அது வந்து டொக்டர்... டொக்டர் : கமோன் இந்து என்னட்ட என்ன தயக்கம்? உன் அம்மாட்ட சொல்லாத உன் போய்பிரண்ட் ஐ பற்றியே என்னட்ட சொல்லியிருக்கிறாய் இப்ப என்ன புதுசா தயக்கம்? இந்து : தயக்கம் என்றில்லை..கொஞ்சம் பயம் கொஞ்சம் குழப்பம்..அதான் உங்களிட்ட எப்பிடிக் கேக்கிறதெண்டு.. டொக்டர் : வெளிப்படையாப் பேசினாத்தான் குழப்பம் தீரும். என்ன விசயமம்மா? இந்து : செக்ஸ்ல ஒருக்காலும் ஈடுபடாத ஆக்களுக்கும் ஜெனிற்றல் வார்ட் வருமா டொக்டர்? டொக்டர் : இல்லை! ஜெனிற்றல் வார்ட் வாறதுக்கு தகாத உடலுறவு , கருத்தடை மாத்திரை உட்கொள்ளல் போன்ற பல காரணங்கள் இருக்கு. இ…
-
- 2 replies
- 1.7k views
-
-
கண்கள் என்ன அறிகுறி? : கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். என்ன அறிகுறி? : கண் இமைகளில் வலி என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து க…
-
- 3 replies
- 3.8k views
-
-
தமிழ்ல எப்பிடி சொல்றதென்று தெரியேல்ல :-) தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இந்தப்பெயர் நமக்குப் புதிதில்லை.தமிழ்ச்சினிமாக்க
-
- 25 replies
- 5.4k views
-
-
சீனிவியாதி எனக்கு கொஞ்சக்காளமாக சீனிவியாதி இருக்கு :cry: :cry: :cry: சாப்பாடோ கட்டுப்பாடான சாப்பாடு எனக்கு ஒரு சந்தேகம் சீனிவியாதி இருக்கின்றவர்கள் நேரத்துக்கு இறைவனடிபோய்சேருவினமா ? உங்களை நான் கேக்கிறன் சீனிவியாதி ஆபத்தா அதான் கலியாணம் கட்டவிருப்பம்இல்லை நான்நேரத்துக்கு போய்விடுவன் என்று பயம் இருந்தாலும் நான் இந்த காடு தேசங்கள் எல்லாம் சுற்றி வந்தால்நல்ல பழங்களைசாப்புகிறது அதிகம் எங்கள் அம்மா கட்டப்படித்தினாலும்நான்கேக
-
- 3 replies
- 1.9k views
-
-
AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் - Dr. புகழேந்தி (இந்தியா) (மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். ) இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப…
-
- 0 replies
- 1.3k views
-