நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
மனித மூளை குறுக்குவெட்டு முகம். மருத்துவ உலகம் இதுவரை எண்ணிக் கொண்டிருந்தது போல இரத்த அழுத்தம் (blood pressure - BP) இதயம் அல்லது சிறுநீரகம் அல்லது இரத்தக் குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளின் விளைவு என்பதற்கு மேலாக JAM-1 என்று குறியீட்டுப் பெயரளிக்கப்படுள்ள புரத மூலக்கூறு மூளையின் இரத்தக் குழாய்களில் இருந்து ஏற்படுத்தும் விளைவுகளால் ஒக்சிசன் அளவு மூளையில் குறைவடைவதாலும் இரத்த அழுத்தம் மாறுபடுவது ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிப்பதுடன் இது இரத்த அழுத்தம் தொடர்பான சிகிச்சையில் புதிய அணுகுமுறைகளுக்கு வித்திட உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..! Blood pressure 'is in the brain' The c…
-
- 0 replies
- 1k views
-
-
நோய்களை குணமாக்கும் தாமரைக்கிழங்கு. நீர்த்தாவரங்களின் ஒன்றான தாமரை கொடி இனத்தைச் சேர்ந்தது. நீருக்குள்ளேயே படர்ந்து வளரக்கூடியது. இதில் எத்தனையோ வகை உள்ளன. அவற்றில் வெண்தாமரை, செந்தாமரை குறிப்பிடத்தக்கவை. இந்த தாமரையின் அடிப்பகுதியில் கிழங்குகள் காணப்படுகின்றன.தாமரை மலரைப்போல தாமரைக்கிழங்குகளுக்கும் நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது. கண்நோய், கண் எரிச்சல், போன்று கண்கள் தொடர்புடைய நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. கண்பார்வையும் தெளிவடையும். அடங்கியுள்ள சத்துக்கள் தாமரைக்கிழங்கில் வைட்டமின் சியும் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடென்டலும் உள்ளது. இதில் உள்ள பி – 6 வைட்டமின் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தேவையற்ற டென்சன் அதன்மூலம் ஏற்பட…
-
- 11 replies
- 3.4k views
-
-
எலும்புகளை வலுவடையச் செய்யும் பீர்: ஆய்வில் தகவல்! வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால் எலும்புக்கு ஆரோக்கியமளிப்பதும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு: மதுபானத்தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் …
-
- 0 replies
- 841 views
-
-
உபவாச சிகிச்சை! உடல் தன் இயல்பு நிலையிலிருந்து மாறுவதே நோய் என்று நோய் இயல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். உடலை மறுபடியும் தன் இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதே இயற்கை மருத்துவ சிகிச்சையின் நோக்கம். மற்ற சிகிச்சை முறைகளில் உள்ளது போல நோய்க்குத் தகுந் தவாறு மருந்துகள் என்று இதில் இல்லை. எந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினாலும் இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதே இதன் நோக்கம். இந்த முறைகளில் உபவாச சிகிச்சை தலை சிறந்தது. இயற்கை மருத்துவத்தின் மற்ற எந்த சிகிச்சையையும் விட உபவாச மும், பிராணாயாமமும் உடலை சீக்கிரம் தன் சகஜ நிலைக்குத் திருப்பி விடுகிறது. உபவாசத்தை ‘பட்டினி கிடப்பது’ என்று பலர் குறிப்பிடுகிறார்கள். பட்டினிக்கும் உபவாசத்திற்கும் ஒரு வேற…
-
- 2 replies
- 3.6k views
-
-
-
நீங்கள் நாற்பது வயதை கடந்துவிட்டீர்களா?? அப்போது கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். வாலிப வயது மட்டும் தான் கல்லையும் கரைக்கும். வயதாக வயதாக, பஞ்சை கரைக்க கூட சிரமப்படும் நமது உடலியக்கம். அந்தந்த வயதிற்கு ஏற்ப உணவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது கட்டாயம். ஏனெனில், இளம் வயதில் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம். உதாரணமாக, வாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால் 50 வயதிற்கு மேல் அதே வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு தடையாகி செரிமானத்தை கெடுக்கும். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு. எனவே, நாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்…
-
- 0 replies
- 357 views
-
-
இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்றுபோவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி உயிரைப் பலிவாங்கிவிடும்.தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் …
-
- 18 replies
- 23.5k views
-
-
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சூப்பி அல்லது Dummy யை பாவிக்கும் குழந்தைகளில் காது தொடர்பான தொற்று நோய்கள் ஏற்படுவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கால் அதிகரிப்பதாக டச்சு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் செயற்கை Dummy களை காது தொடர்பான நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய குழந்தைகள் பாவிக்க அனுமதிப்பதை தவிர்க்க கேட்கப்படுகின்றனர். ஐந்து வருடங்களாக சுமார் 500 டச்சுக் குழந்தைகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் இருந்து, Dummy களைப் பயன்படுத்தும் குழந்தைகளில் மற்றவர்களை விட 90% அதிகரித்த நிலையில் காது தொடர்பான தொற்று நோய்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட சந்தர்ப்பங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. செய்தி ஆதாரம்: http://kuruvikal.blogspot.com/
-
- 9 replies
- 2.8k views
-
-
சாக்லெட் சாப்பிடுவது உடலுக்கு கெடுதலா? சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி டார்க் சாக்லெட்டைச் சாப்பிடுவது நல்லது எனத் தெரியவந்திருக்கிறது. சாக்லெட் உடலுக்கு கெடுதியானது. அதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பு, பற்சொத்தை, சக்கரை நோய் உட்பட பல உபாதைகள் வந்துச்சேரும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளோ, இதற்கு மாறான தகவல்களை வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன் மக்களே அதிகமான சாக்லெட்டை சாப்பிடுபவர்கள் என ஆய்வொன்று தெரிவிக்கிறது. பிரிட்டனில் இருக்கும் ஆறு பேரில் ஒருவர், சாக்லெட் சாப்பிடுவது வழமை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இதை ஒரு இலகுவான உணவாகவும் அனைவரும் பார்க்கின்றனர். டார்…
-
- 0 replies
- 434 views
-
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்குவதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்றுநோய் உண்டானதன் காரணமாக பலநூறு கோடி டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டால்க்கையை அடிப்படையாக வைத்து தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என்று அந்த நிறுவனம் இதுவரை தொடர்ந்து கூறி வந்தது. அந்த நிறுவனத்தின் டால்க் தயா…
-
- 0 replies
- 526 views
-
-
டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? படத்தின் காப்புரிமைSPL டெங்கு என்றால் என்ன? ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது. உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது. அறிகுறிகள் தலைவலி காய்ச்சல் தோலில் தடிப்புகள் …
-
- 0 replies
- 310 views
-
-
உடற்பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்தப் பழைய உண்மையை இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மீண்டும் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. இத்துடன் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது டி.வி., தியானம் போன்றவற்றிற்குப் பதிலாக இருபது நிமிடங்கள் உடற்பயிற்சியோ அல்லது துரித நடை ஓட்டமோ செல்வது நல்லது. இதற்காக நன்கு துடிப்பாகச் செயலாற்றும் 34 மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்தனர். முதல் குழு ஓர் அறையில் அமைதியாக அமர்ந்தது. இரண்டாவது குழு பரிசோதனைச் சாலைக்குள்ளேயே ‘ஜாக்கிங்’ செய்தது. மூன்றாவது குழு உடற்பயிற்சி செய்தது. இருபது நிமிடங்கள் கழிந்ததும் ஓவ்வொரு குழுவையும் பரிசோதித்தனர். உடற்பயிற்சி செய்தவர்கள் மற்ற இரு குழுவினர்களைவிட 25% அளவில் ஓய்வு நிலையில் இருந்தனர். த…
-
- 1 reply
- 1.2k views
-
-
கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு தினமும் எட்டு மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கண்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகி வருகிறது. கண் நிபுணர்கள், கீழ் கண்ட பிரச்னைகளுடன் கம்ப்யூட்டரில் பணி புரிபவர்கள் சிகிச்சை கோரி வருவதாகத் தெரிவித்துள்ளனர். கண் எரிச்சல், நமைச்சல், உலர்ந்து போதல், சிவப்பாதல், அழுத்தம் ஆகியவற்றுடன் கழுத்து வலி. இந்தப் பிரச்னைகளை "கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்று வகைப் படுத்துகிறார்கள். இந்த சின்ட்ரோம் மூன்று வகையாகப் பிரிக்கத் தக்கது.1. மெல்லியது 2. இடைநிலைப்பட்டது 3. கொடியது இதனால் உடனடியாக பார்வை பறிபோய்விடாது என்பதால், இந்த விஷயத்தில் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. சாப்ட்வேர் கம்பெனிகள் கம்ப்யூட…
-
- 0 replies
- 887 views
-
-
மைக்குரேவேவ் அவன்கள் குறுகிய காலத்தில் மிகப்பிரல்யம் ஆனதும் மட்டுமன்றி மனிதர்களை சோம்பேறியும் ஆக்கியது. இப்ப என்னடான்னா அந்த மைக்குரேவேவ் அவன்களின் பெருக்கம் தான் உடற்பருமன் ஆண்களிலும் பெண்களிலும் சிறுவர்கள் மத்தியிலும் அளவுக்கு அதிகமாக இருக்க காரணமாகியுள்ளது என்று பிரித்தானிய ஆய்வென்று கண்டறிந்துள்ளது..! உடற்பருமன் அதிகரித்தால் தெரியும் தானே தோன்றாத நோயெல்லாம் தோன்றிக் கொள்ளும்..! Microwaves may be to blame for kick-starting the obesity epidemic, a UK scientist suggests. http://news.bbc.co.uk/1/hi/health/6725775.stm
-
- 16 replies
- 2.7k views
-
-
புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். ஆனால் 1970 களில் இருந்து, புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர்வாழும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் ஆரம்பக் கால நோயறிதல். உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.
-
- 0 replies
- 628 views
- 1 follower
-
-
அஜினோமோட்டோ : ஒரு வரலாறு! குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளான மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோ மோட்டோ, தன் கரங்களை இன்னும் அதிகமாக நீட்டிக் கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது. சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள், இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு மீறி தின்பர். ‘இதையாவது பிரியப்பட்டு தின்கிறானே’ என்று ஆசை ஆசையாய் பலரும் இதை அவனுக்கு வாங்கிக் கொடுப்பர். சில மாதங்கள், வர…
-
- 3 replies
- 2.8k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஓம்கார் கர்ம்பேல்கர் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மார்ச் 2024 குடற்புழுக்கள் ஒரு பெரிய பிரச்னை. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மற்றும் பிற காரணங்களால் புழுக்கள் உடலில் நுழையலாம். மலத்தில் நீண்ட புழுக்கள் இருப்பது, வயிற்று வலி மற்றும் ஆசன வாயில் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை ஆய்வு செய்த பிறகு நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது. வயிற்றில் காணப்படும் இந்த புழுக்கள் இரைப்பை புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. வட்டப்புழுக்கள், தட்டைப்புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள் ஆகியவை இதில் அடங்கும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு குணாதி…
-
- 0 replies
- 600 views
- 1 follower
-
-
17 MAY, 2024 | 06:20 PM எம்மில் சிலர் கோவிட் தொற்று பாதிப்பிற்கு பிறகு கில்லன்- பாரே சிண்ட்ரோம் எனப்படும் அதி விரைவு நரம்பு தளர்ச்சிப் பாதிப்பிற்கு ஆளாகக்கூடும். அப்போது எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம்.. எம்முடைய நரம்பு மண்டலத்தை தாக்குகிறது. இது அரிய வகை பாதிப்பு என்றாலும், கை, கால் போன்றவற்றில் ஏற்பட்டு, பாரிய சுகவீனத்தை ஏற்படுத்தி, உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்க கூடும். எனவே இத்தகைய பாதிப்பின் அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் விவரிக்க இயலாத காரணங்களால் நரம்புகளை தாக்கி தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இ…
-
- 1 reply
- 434 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்ட்ரே பீர்நாத் பதவி, பிபிசி செய்தி பிரேசில் 21 ஜூலை 2024, 11:06 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் புற்றுநோய்க்கான முக்கிய அறிவியல் மாநாட்டில் சமீபத்திய ஆண்டுகளில் சந்தைப்படுத்தப்பட்ட, நன்கு அறியப்பட்ட மருந்துகளை முன்னிலைப்படுத்தியுள்ளனர். பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் இந்த மருந்துகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற அமெரிக்கன் சொசைட்டி அமெரிக்கப் புற்றுநோய் மருத்துவக் கழகம் (ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி - American Society of Clinical Oncology - ASCO), 2024-ஆம் ஆண்டு ஆண…
-
- 0 replies
- 446 views
- 1 follower
-
-
நீண்ட ஆயுளுக்கு 4 செயல்கள் ! நான்கு விஷயங்களை வாழ்நாளில் கடைபிடித்து வாழ்ந்தால் ஆயுளில் பதினான்கு ஆண்டுகளை அதிகப்படுத்த முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஈடுபடுத்தி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று இந்த முடிவை எட்டியிருக்கிறது. அதென்ன நான்கு விஷயங்கள் ? 1. புகை பிடித்தலை விலக்குதல் 2. மதுவை வெகுவாகக் குறைத்தல் ( அதிகபட்சம் வாரம் 7 கப் வைன்) 3. தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி 4. பழவகைகள், காய்கறிகள் இணைந்த உணவுப் பழக்கம். இந்த நான்கு செயல்களையும் கடைபிடித்தால் இதய நோய்களோ, புற்று நோய் போன்ற அச்சுறுத்தல்களோ இல்லாமல் முதுமையை அனுபவிக்க …
-
- 1 reply
- 1.4k views
-
-
சுவிட்ச் ஆன் செய்தால் குழந்தை... ஆஃப் செய்தால் இல்லை! - அடேங்கப்பா கருத்தடை முறை கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள், வாசக்டமி போன்ற கருத்தடை சாதனங்கள், சிகிச்சைகளுக்குப் பதிலாக, ஆண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கருத்தடை சாதனம்தான் இந்த ஸ்பெர்ம் கன்ட்ரோல் ஸ்விட்ச். பைமெக் SLV என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை வெற்றிகரமாக தயாரித்து, அதனை முதன்முதலாக தனது உடலிலேயே சோதனை செய்து வெற்றி பெற்றிருக்கிறார் ஜெர்மனை சேர்ந்த கிளமன்ஸ் பைமெக். கருத்தடை சாதனங்களின் பங்களிப்பில், இது மிகப்பெரிய புரட்சி என்கிறார் பைமெக். என்ன செய்கிறது இந்த ஸ்விட்ச் ? இதன் செயல்பாடுகளைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, மனிதனின் உடலியல் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள …
-
- 4 replies
- 687 views
-
-
எப்பொழுதும் இளமையாக இருப்பது எப்படி ?
-
- 0 replies
- 400 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி 23 செப்டெம்பர் 2025, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் சிலர் காலையில் குளிக்க விரும்புகிறார்கள், சிலர் மாலையில் அல்லது இரவில் குளிக்க விரும்புகிறார்கள். யார் சரியாக செய்கிறார்கள்? இந்த உலகில், ஒரு சிறிய கேள்வி கூட பெரிய விவாதத்தை உருவாக்குகிறது, நீங்கள் காலையில் எழுந்தவுடன் குளிப்பவரா? அல்லது இரவில் படுக்க செல்வதற்கு முன் குளிப்பவரா? அல்லது தினமும் குளிக்காத 34% அமெரிக்கர்களில் ஒருவரா? நீங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும், உங்கள் தேர்வு உங்கள் உடல்நலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் யோசிக்கலாம…
-
-
- 11 replies
- 636 views
- 2 followers
-
-
இனிய நண்பர்களே !! இந்தத் திரியில், நோய்தீர்க்கும் அரிய யோகாசனங்கள் பற்றி இலகு தமிழில் என் அனுபவங்களையும் சேர்த்து எழுதலாம் என நினைக்கிறேன். யோகாசனங்கள் பயிலுவதற்கு வயது ஒரு தடையல்ல. இளையோர் முதல் முதியோர் வரை வீட்டில் தாங்களாகவே பயில முடியும். உடலையும் உள்ளத்தையும் அழகாக வைத்திருக்க பெரிதும் உதவுவது யோகாசனம். இந்நாளில், இது ஒரு நாகரீக, பணம் செய்யும் ஒரு கலையாக மேற்குலகத்தில் கருதப்பட்டாலும் கூட, ஆன்மீக முன்னேற்றத்திற்காக யோகிகளும் சித்தர்களும் கீழைத்தேயத்தில் இக்கலையை பயன்படுத்தினர். இருந்தபோதிலும், நோயற்ற வாழ்வை கருத்தில் கொண்டு நாமிதை பயிலலாம்.
-
- 19 replies
- 5.8k views
-
-
இந்திய கழிவறை - மேற்கத்திய கழிவறை: யாருக்கு எந்த முறை உகந்தது? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும், கழிவறை செல்வது பற்றிச் சிந்தித்தவுடன் பலருக்கும் கால்களை மடக்கி உட்காரும் முறைதான் மனக் கண்ணில் வரும். ஆனால், மேற்கத்திய முறையான நாற்காலியில் அமர்வதைப் போன்ற வகையில் உட்கார்ந்து மலம் கழிக்கும் கழிவறைகளும் தற்போது இந்தியா மட்டுமின்றி ஆசிய கண்டம் முழுவதுமே கணிசமாக பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் கழிவறை பயன்பாட்டில் இந்திய பாணி அல்லது மேற்கத்திய பாணி ஆகிய இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு உகந்தது? என்கிற விவாதம் தொடர்ச்சியாக எழுகிறது. இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-