Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. கணுக்கால் பிரச்னைகள் மற்றும் சிகிச்சைமுறை பற்றி கோவை மனு மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் பிரபல ஆர்த்ரோஸ்கோபி, விளையாட்டுக்காயங்கள் மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பாரி செல்வராஜ் விழிப்புணர்வளிக்கிறார். விளையாட்டின்போதோ, வழுக்கி விழுவதாலோ அல்லது நாம் உபயோகிக்கும் காலணி பெரிதாக இருப்பதா லோ சில சமயங்களில் கணுக்கால் பிறழ நேரிடுகிறது. அவ்வாறு பிறழ நேரிடும்போது கணுக்காலில் வீக்கம் காணப்படும். நடக்கமுடியாமல் வலி ஏற்படும். நாம் காலில், சுளுக்கு விழுந்துவிட்டது என்று எண்ணி எண்ணெய் தேய்த்து நீவி விடுவோம். ஆனால் அது தவறான வழிமுறை. ஏனென்றால் கணுக்கால் பிறழும்போது காலில் உள்ள தசைநார்கள் அல்லது சதைபகுதி கிழிய நேரிடும். அதனால் காலில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும்.…

  2. கணைய அழற்சியைக் குணமாக்கும் மருந்துகள் நோய் அணுக்களால் பாதிக்கப்பட்ட பித்த நீர், கணைய நாளத்தினுள் புகுந்தால் கணைய அழற்சி ஏற்படுகிறது. அல்லது பித்தக் கற்கள் கணையத்தினுள் சென்றாலும் கணைய அழற்சி ஏற்படலாம். அடிக்கடி ஏற்படும் கணைய அழற்சி பித்தப்பை அழற்சியுடன் இணைந்தே தோன்றுகிறது. கணையப் பகுதியின் மீது அடிபட்டாலும் தாளம்மை நோயின் பின் விளைவாகவும், புளு சுரத்தின் பின் விளைவாகவும் கணைய அழற்சி ஏற்படலாம். கணைய அழற்சி மூன்று வகையாகும். அவை : 1. தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி 2. கடுமை குறைவான கணைய அழற்சி 3. நாட்பட்ட கணைய அழற்சி ஆகியவையாகும். தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி : பித்தப்பையில் உற்பத்தியாகி இருக்கும் பித்தக்கற்கள் நகர்ந்து சென்று கண…

    • 0 replies
    • 6.6k views
  3. கண் கடியுடன் கண்கள்; சிவந்து கண்களால் நீர் வடிதல் கவலை இல்லாமலும் கண்ணீர் வரும் கண்கடியுடன் கண்கள்; சிவந்து கண்களால் நீர் வடிதல் கண்ணைக் கசக்கிக் கொண்டுவந்த பையனைக் கூட்டிக் கொண்டு வந்த அம்மாவின் முகத்தில் சலிப்பு. பையனின் முகத்திலும் சோர்வு தட்டியிருந்தது. 'எவ்வளவு சொன்னாலும் கேக்கிறானே? எந்த நேரம் பார்த்தாலும் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கிறான். கண் வீங்கிப் போச்சு. போதாக்குறைக்கு மூக்கையும் குடையிறான். வெளியிலை கூட்டிக் கொண்டு போகவே வெக்கமாகக் கிடக்கு' உண்மைதான் அந்த அழகான பையனின் கண்மடல்கள் வீங்கிக் கிடந்தன. கண்களின் கீழே கருவளையம் தெரிந்தது. முகமும் கண்களும் செம்மை பூத்துக் கிடந்தன. மூக்கு வீங்கி அதன் துவாரங்கள் மேல்நோக்கிப் பார்த்தன. மூக்கை உள்ளங்கையா…

  4. நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன. இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய் _தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண்சம்பந்தமாக ப…

    • 21 replies
    • 10.5k views
  5. சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்த பப்ளிமாஸ் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. பித்த அதிகரிப்பை சரி செய்யும் தன்மை பழங்களுக்கும், கீரைகளுக்கும் உண்டு. இதில் பம்பளிமாஸ் பழம் பித்த அதிகரிப்பை வெகு விரைவில் குறைக்கும். கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது நல்லது. கோடைக்காலத்தின் அதி…

    • 0 replies
    • 1.7k views
  6. Started by யாயினி,

    கண் பார்வை. உலக சுகாதார நிறுவனம், அக்டோபர் 13-ம் தேதியை உலக பார்வை தினமாக அறிவித்துள்ளது. உலக பார்வை தினம் என்று அறிவிப்பதன் முக்கிய நோக்கம், பொதுமக்கள் மத்தியில் கண் நலம் பற்றிய விழிப்பு உணர்வை மேம்படுத்துவதேயாகும். இதனைக் கருத்திற்க்கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் கண் மருத்துவர்கள், மருத்துவ சமூகவியலாளர்கள் மற்றும் கண்ணியாலாளர்கள் கண் நலம் பற்றிய செய்திகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் 2010 வருட ஆய்வின்படி உலகம் முழுவதிலும் 285 மில்லியன் பேர் கண் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 246 மில்லியன் பேர் 'லோ விஷன்' என்று சொல்லக்கூடிய மிகக்குறைந்த பார்வை என்னும் குறை பாட்டினால் …

  7. அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின…

    • 2 replies
    • 455 views
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 13 செப்டெம்பர் 2024, 04:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அப்போது கல்லூரி மாணவியாக இருந்த சாருலாதவிற்கு கண்ணில் மை இட்டுக்கொள்ள மிகவும் பிடிக்கும். தினமும் அவர் கண் இமையின் விளிம்பான வாட்டர்லைனில் (waterline) மை இட்டுக்கொள்வார். சில காலத்திற்குப் பிறகு, அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதுடன் கண்ணின் உள்ளே உருண்டையாக கட்டி போல ஒன்று இருப்பது போலத் தோன்றியது. இதற்காக வீட்டிலே கை வைத்தியம் செய்து வந்தார். ஆனால் ஆறு மாத காலமாகியும் அது குணமாகாத காரணத்தால், கண் மருத்துவரிடம் சென்று, அறுவை சிகிச்…

  9. யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற பல வகை உடற்பயிற்சிகள் எவ்வளவு உடலுக்கு முக்கியமோ அதே அளவு பயிற்சி நம் கண்களுக்கும் அவசியமானது. கண்களை ஆரோக்கியமாக வைத்து‌க்கொ‌ள்வது கண்களு‌க்கு ஏற்படும் களைப்புகளை குறைக்கும். கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கும் வழிவகுக்கும். கண்களுக்கு நாம் தர வேண்டிய அத்தியாவசிய பயிற்சி முறைகள்: 1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை உள்ளங்கையால் மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ளும்படியாக முக்கோன வாக்கில் கைகள் அமைய வேண்டும்.கண்களை மூடும் போது இருளை உணர்ந்து, அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத…

  10. கண்களைத் தாக்கும் அலர்ஜி அலர்ஜி என்­பது சரு­மத்­தில்தான் வரும் என்­றில்லை. கண்­க­ளிலும் வரலாம். கண்­களில் ஏற்­ப­டு­கிற பல பிரச்­னை­களும் ஒவ்­வா­மையின் அறி­கு­றிகள் என்­பதே பல­ருக்கும் தெரி­வ­தில்லை. குழந்­தைகள் மற்றும் பெரி­ய­வர்­க­ளுக்கு கண்­களில் ஏற்­படும் பருவ கால ஒவ்­வா­மைகள் மிகவும் சக­ஜ­மா­னவை. ஏற்­க­னவே அலர்ஜி இருப்­ப­வர்கள், உதா­ர­ணத்­துக்கு ஆஸ்­துமா, சைனஸ் போன்ற சுவாச மண்­டலம் தொடர்­பான அலர்ஜி இருப்­ப­வர்கள், சரும அலர்ஜி உள்­ள­வர்கள், கொசு கடித்தால் உடம்­பெல்லாம் சிவப்பு நிறத் தடிப்பைப் பெறு­ப­வர்கள் போன்­ற­வர்­க­ளுக்கு கண்­க­ளிலும் அலர்ஜி வரு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகம். பொது­வாக கண்­களில் வரக்­கூ­டிய அலர்­ஜிக்கு A…

  11. கண்களைப் பேணும் காய்கறிகள் நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழ…

  12. கண்கள் எதுக்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா ? சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆம், நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள்…

    • 3 replies
    • 4.9k views
  13. பொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம், காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படி நாம் ஒதுக்கிவிட்ட பூக்களுக்கு உள்ள மருத்துவக் குணங்களைப் இப்போது பார்ப்போம். பயனடைவோம். முருங்கைப் பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும். உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும். அதிகமான பித்தத்தை போக்கும். வாழைப் பூ கை, கால் எரிச்சல், இருமல், வயிற்றுக் கடுப்பு, வெள்ளை ஒழுக்கு போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும். மாதுளம் பூ பித்த வாந்தியை நிறுத்தும் தன்மை கொண்டது. வயிற்றுக் கடுப்பு, இரத்த மூலம், உஷ்ணம் ஆகியவற்றைச் சீர் செய்யும். இது தவிர, மாதுளம் பழத்தோல் சீதபேதி, வாய்ப்புண், இரத்த பேதி போன்றவற்றிற்கு மருந்தாகு…

  14. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, எம்ஆர்ஐ பரிசோதனையை ஆய்வு செய்யும் ஒரு மருத்துவர் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 3 செப்டெம்பர் 2025, 05:39 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முழு உடலையும் கட்டுப்படுத்துவதால் மூளை, மனித உடலின் மிக முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. உடலின் ஒவ்வோர் உறுப்பில் இருந்தும் மூளைக்கு சமிக்ஞைகள் செல்கின்றன. பின்னர் மூளை தேவைக்கேற்ப செயல்பட அந்த உறுப்புக்குக் கட்டளையிடுகிறது. ஆனால், உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, அதை மருத்துவர்கள் மூளை பக்கவாதம் என்று அழைக்கின்றனர். மூளை பக்கவாதம் உடலின் ஒரு பகுதியுடன் அல்லது பல பக…

  15. கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். கண்கள் காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் வெவ்வேறு விம்பங்களின் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை காண உதவுகின்றன. இந்த வகையில் மனிதனின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அவற்றுக்கான தீர்வுகளையும் பற்றி விளக்குகிறார் கண் வைத்திய நிபுணர் வாசுகி குரு சாமி. சிறு­வ­ய­தி­லேயே கண் பார்வை குறை­வ­டைந்து போவ­தற்­கான காரணம் என்ன? தாய் வயிற்றில் சிசு இருக்­கையில் ஏதா­வது நோய் வந்தால் அது சிசுவின் கண்ணை பாதிக்க வாய்ப்­புள்­ளது. அதில் (TORCH) என சொல்லப்படும் நோய்கள் சின்­னம்மை, ருபெல்லா போன்றவை தாய் கரு­த­ரித்து ம…

    • 0 replies
    • 26.8k views
  16. அன்றாடம் வாழ்வில் காய்கறிகளை சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம். அவ்வாறு காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளும் நாம் அதன் பயன்களை அறிந்துகொள்வது நல்லது. வாழைக்காய் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது, மலச்சிக்கலை தீர்க்கும். மாங்காய் மாங்காயில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ உள்ளது. சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது சூட்டைக் கிளப்பும். மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். செரிமானத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும், பசியைத் தூண்டும். பாகற்காய் பாக…

    • 0 replies
    • 2.6k views
  17. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தடிமனான கழுத்து உடல்நலப் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்கலாம். கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 29 செப்டெம்பர் 2025, 04:10 GMT மக்கள் பெரும்பாலும் உடல் பருமனை அதிக எடை அல்லது தொப்பை கொழுப்புடன் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். இதுபோன்ற உடல் பருமனால் பெரும்பாலானோர் பீதியடைந்து எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி உணர்த்தும் உடல் உறுப்புகளில் கழுத்தும் முக்கியமானதாகும். ஆனால் மக்கள் பொதுவாக இதில் கவனம் செலுத்துவதில்லை. கழுத்துப் பகுதி முகத்திற்கு கீழ் இருப்பதாலும் எளிதில் பார்க்கக் கூடிய வகையில் இருப்பதாலும், கழுத்தில் கறை தென்பட்டாலோ, நிறம் மாறினாலோ பொரும்பாலானோர் அதை சரி செய்…

  18. கண்ணுக்குள் ஒரு கள்வன்! ''என்னனு தெரியலை... கொஞ்ச நாளா தலைவலி இருந்துட்டே இருக்கு. கண்ணும் வலிக்குது. குமட்டல் வருது. ராத்திரி நேரத்துல பார்க்கற வெளிச்சத்தைச் சுத்தி ஒரு வட்டம் தெரியுது''... ''தலைவலினு டாக்டர்கிட்ட சொல்லி கண்ணாடி போட்டேன். ஆனா, தலைவலி தீர்ந்தபாடில்ல. கண்ணாடியை மாத்திப் பார்த்தேன். அதுவும் சரிப்படல. பக்கவாட்டுல இருக்கற ஒண்ணும் தெரியல. சில நேரத்தில பாக்கறதெல்லாம் மங்கலாத் தெரியுது''... மேற்கண்ட புலம்பல்களை ஆங்காங்கே கேட்டு இருப்பீர்கள்தானே! ''இத்தகைய பிரச்னைகளுக்கு, 'க்ளாக்கோமா’ (Glaucoma)எனப்படும் 'கண்ணின் உள்நீர் அழுத்த நோய்'கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்'' என்று எச்சரிக்கிறார் சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ சமூகவியல…

  19. கண்ணும் உணவும் நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம். பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (ஆன்டி - ஓxஇடன்ட்ச்) Mஅcஉல -வை ஆரோக்கியமா…

    • 2 replies
    • 1.6k views
  20. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும். உடலுக்கு வலிமை அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனைய…

  21. தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை பாதுகாக்கும். 1. சிறுக்கீரையில் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. 2. பிரசிவித்த பெண்களுக்கு சிறுக்கீரை மிகச்சிறந்தது. சிறுக்கீரையை பொரியல் செய்து, அதிலேயே பிசைந்து சாப்பிட சொல்வார்கள். 3. சிறுக்கீரை மலச்சிக்கல் ஏற்படாமல் சிறந்த மலமிலக்கியாக செயல்படுகிறது. 4. சிறுக்கீரையில் புரதம், நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. 5. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. 6. கீரையை மிளகுடன் சேர்த்து சூப் போ…

  22. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற கத்தரிக்காயில் குறைந்த கலோரியும், அதிக சத்துக்களும் அடங்கியுள்ளது. கத்தரிக்காயில் ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி3, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது, 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. கத்தரிக்காயில் வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது. கத்தரிக்காயில் ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து இரத்த ஓட்டம் இதயத்தில் சீராகப் பாய உதவுகின்றன. மேலும் இந்த நியூட்ரியண்ட்டுகள் மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களைப் பாதுகாப்ப…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோஸ்லின் டிம்பர்லி பதவி,பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உறக்கத்தின்போது நிகழும் அலாதி அனுபவமான கனவை காண்பதில் மனிதனுக்கு ஓர் இனம்புரியாத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவானது அதன் தன்மையை பொறுத்து மனிதனை ஆச்சரியப்படவும், அதிர்ச்சியடையவும் வைக்கிறது. சில கனவுகள் சினிமா காட்சிகளை போல மனிதனுக்கு தெளிவாக நினைவில் நிற்கின்றன. சில கனவுகள் மறுநாள் காலை விவரிக்க முடியாத அளவுக்கு தெளிவில்லாமல் தோன்றி மறைவதாகவும் உள்ளன. நினைவில் நிற்கும் தெளிவான கனவுகளை ( Lucid Dreams) காண்பதில் மனிதர்களுக்கு சமீபகாலமாக ஆர்வம் அ…

  24. கனவுகள் ஓர் அறிமுகம் மருத்துவம் வகுப்பறையில் ஆசிரியர் தாலாட்டில் உறங்க ஆரம்பித்து கனவில் திளைக்கும் மாணவர்கள் முதல் வேலைப்பளு தாளாமல் இடைவேளை யின் போது குட்டித் தூக்கத்தில் சுகமான கனவுகளில் மூழ்கும் மூத்தவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் கனவுகள் சுவாரஸ்யமான ஒன்றாகும். “அனைவரும் கனவு காண்பது சகஜம் தானே! இதில் ஆராய்வதற்கு என்ன இருக்கிறது... என்று நினைப்ப வராக இருந்தால் உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டிய சமயம் இதுவே! உடல், மனம் மற்றும் உயிர் ஆகியவை சங்கேதமாக தொடர்பு கொள்ளும் சூழலையே கனவு என்கிறோம். இச் சூழலில் உடல், மனம், மற்றும் உயிர் தங்கள் கருத்துக்களை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாதபடி பரிமாறிக் கொள்கின்றன. இச்செயல்…

  25. கனவுலகின் மர்மக் கோட்டைகளில் புது வெளிச்சம் இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன். தொடர்கதை போல நடந்து கொண்டிருந்தது. அது மிகவும் வியப்பூட்டும் கனவாக இருந்தது. நான் கனவுதான் காண்கிறேன் என்பதை உணரக் கூடியதாக இருந்தது. அதைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என அக்கணத்தில் நினைத்தேன். இப்பொழுது இந்தக் கட்டுரையை சமகாலத்திற்காக எழுத ஆரம்பித்தபோது அது பற்றி எழுதவும் எண்ணினேன். ஆனால் எத்தனை முயன்றும் அது என்ன கனவு என்பது ஞாபகத்தில் வரவேயில்லை. கனவுகள் அற்புதமானவை. அதில்தான் எத்தனை வகைகள் விழித்திருக்கும் போது கனவுகனில் மிதப்போம். பகற்கனவு என்று அதனை எள்ளலும் செய்வோம். ஆழ் தூக்கத்தில் கனவுகள் காண்போம். அவற்றைக் கண்டது பற்றிய நினைவு கூட நித்திரைவிட்டு எழும்பியதும் இருக்காது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.