நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி : புதிய அரிசி கண்டுபிடிப்பு. நீரிழிவு நோயின் தலைநகரமான, இந்தியாவில் தற்போது, 6.24 கோடி நீரிழிவு நோயாளிகளும், 7.72 கோடி பேர், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையிலும் உள்ளனர். இத்தகைய நிலைக்கு காரணம், துரிதமான பொருளாதார மற்றும் உணவு முறை மாற்றமே காரணம். இன்றைய நகரமயமாக்கலின் தாக்கத்தால் ஏற்பட்ட உணவு முறை மாற்றத்தில் சுத்திகரிக்கப்பட்ட மாவுப் பொருட்கள், கொழுப்பு மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவு வகைகளால், இந்த சத்துணவு மாற்றம் பெருமளவு நிகழ்கிறது. இந்த உணவு முறை மாற்றம் நீடித்த அல்லது நாட்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. மனிதனுக்குத் தேவையான சத்துகளை வழங்குவதில், தானிய வகைகள் பெரும் பங்காற்றுக…
-
- 14 replies
- 1.9k views
-
-
‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் டெலிபோன் அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து நடிகர் முரளி நோயாளியாக மாறும் படக் காட்சி ஞாபகம் இருக்கிறதா? அதுபோலவே, செல்போன் அழைப்பு வராமலேயே ரிங் டோன் கேட்டது போல நீங்களும் உணருகிறீர்களா? அழைப்பு வந்துள்ளதா என அடிக்கடி செல்போனை எடுத்துப் பார்க்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு இருக்கலாம். ஏதோ ஒரு சூழ்நிலையையோ, பொருளையோ கண்டு பயப்படுவதற்குப் பெயர் ஃபோபியா. போபியாக்களில் பல வகை உண்டு. அதில் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் வலம் வரும் போபியாவாக மாறிவருகிறது ரிங்டோன் போபியா என்கிறார் திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும் மூளை நரம்பியல் துறைத் தலைவருமான அலீம். “நீங்கள் ஒரு விஷயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்…
-
- 0 replies
- 495 views
-
-
- பொன்.விமலா ''முன்ன எல்லாம் காய்ச்சல்னு டாக்டர்கிட்ட போனா... மாத்திரை எழுதித் தர்றதோட, 'பால் குடிக்கக் கூடாது, காரம் கூடவே கூடாது, எண்ணெய்ப் பொருட்கள் வேண்டாம், கஞ்சி சாப்பிடலாம், பிரெட் சாப்பிடலாம்’னு இப்படி சாப்பாட்டைப் பற்றியும் மறக்காம சொல்லி அனுப்புவார். ஆனா, சமீபத்துல நான் இரண்டு வேறுபட்ட நோய் காரணமா டாக்டர்கிட்ட போனப்போ, நோய்க்கான மருந்தை பரிந்துரைத்தவர்கிட்ட, 'என்னவெல்லாம் சாப்பிடலாம், எதெல்லாம் கூடாது டாக்டர்?’னு நான் கேட்க, 'அப்படிஎல்லாம் எந்தக் கட்டுப்பாடும் தேவையில்ல, எதை வேணும்னாலும் சாப்பிடுங்க!’னு சொல்லி அனுப்பினார். உடல் நலக்குறைவால சிகிச்சை எடுத்துட்டு இருக்கும்போது, இப்படி எதை வேணும்னாலும் சாப்பிடறது சரியா இருக்குமா..?'' - இப்படி ஒரு கேள்வியை நம் வாசக…
-
- 0 replies
- 1k views
-
-
இன்றைய உலகில் பலருக்கு தூக்கமின்மை என்பது ஒரு வியாதியாகவே இருந்துவருகிறது. இவ்வியாதிக்கு மருந்தை தேடுபவர்கள், பாட்டி கூறும் வைத்தியம் முதல் நவீன மருத்துவர்கள் கூறும் சிகிச்சை முறைகள் வரை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வருகின்றனர். உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆணையிட பல்வேறு திரவங்கள் மற்றும் சுரப்பிகள் செயல்பட்டுவருகிறது. இதில் நமக்கு தூங்க கட்டளையிடும் ஒரு வேதியியல் பொருள் மெலடோனின். இதன் குறைபாட்டாலேயே இன்று பலர் தூக்கமின்மை வியாதிகளால் தவித்துவருகின்றனர். மருத்துவத்துறையில் உள்ள தூக்க மாத்திரைகளில் இது கட்டாயம் இருக்கும். ஆனால் யாரோ தயாரித்த வேதியியல் பொருளை சாப்பிட்டு தூங்க முயற்சி செய்யும் நாம், இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதங்களை பயன்…
-
- 0 replies
- 574 views
-
-
மக்களால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உட்கொள்ளப்படும் பானம் 'டீ' எனப்படும் தேநீர். 'கேமில்லா சினன்சிஸ்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆண்டுதோறும் விளையும் பசுமையான பயிரான தேயிலையின் வடி சாறே தேநீர் ஆகும். தாவரம் ஒன்றாக இருந்தாலும் அதன் தயாரிப்பு முறையில் மாறுபடும்போது டீ பலவகையாக வகைப் படுத்தப் படுகிறது. ஒய்ட் டீ, மஞ்சள் டீ, கறுப்பு டீ, கிரீன் டீ என வகைப்படுத்தப் படுகிறது. பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று 'டானின்' வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது. இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும். கிரீன் டீ தயாரிப்பில் இ…
-
- 6 replies
- 3.6k views
-
-
இந்த நூற்றாண்டின் மிகப் பரந்த நோயாக விளங்குவது மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களே. முன்னைய காலங்களில் வயதானவர்களை மட்டுமே தாக்கிவந்த மூட்டுப் பிரச்சினைகள், இன்று நாற்பது வயதைக் கடக்காதவர்களையும் பெரிதும் தாக்கிவருகிறது. இதற்கு என்ன காரணம்? மூட்டு சம்பந்தமான நோய்களுக்கு ஒரே தீர்வு மூட்டுமாற்று சிகிச்சைதானா? எலும்பு அழற்சி மற்றும் எலும்புத் தேய்மானம் போன்றவற்றுக்குத் தீர்வுகளே இல்லையா என்ற பல சந்தேகங்கள் எம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. திருச்சி முகேஷ் ஓர்த்தோ மருத்துவமனையின் நிர்வாகியும் புகழ்பெற்ற மூட்டு மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர் டொக்டர் முகேஷ் மோகன், வீரகேசரி வாசகர்களுக்காக இங்கே சில தகவல்களையும், ஆலோசனைகளையும் பரிமாறிக்கொள்கிறார். http://virakes…
-
- 0 replies
- 1k views
-
-
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது எவர்ஸில்வர் என்றழைக்கப்படும் உலோகப் பாத்திரங்கள் இந்தியச் சமையலறைகளில் இன்று பெருமளவு இடம் பிடித்திருக்கின்றன. முப்பது நாற்பதாண்டுகளுக்கு முன்பு அங்கு இருந்தவை செப்பு, பித்தளை, இரும்பு, மண் பாத்திரங்கள். இவற்றில் பழைய சம்பிரதாயங்களை விடாமல் கைப்பிடிக்கும் குடும்பங்களில் குடிநீரை செப்புப் பாத்திரங்களில் (குடங்கள்) வைத்திருப்பார்கள். அவை சுத்தம் செய்யச் சிறிது உழைப்பு தேவைப்படுபவை. ஆற்றுப் படுகையில் நீர் சேந்தி வர வேண்டிய வேலையைச் சிறுமிகளும், சிறுவர்களும் மேற்கொள்ளுவர். ஆனால் கூட வரும் அம்மாக்களும், அத்தைமாரும், புளியைப் போட்டு அந்தக் குடங்களைத் தேய்த்துக் கழுவிப் பொன் போல மின்ன வைத்த பின்னரே அவற்றில் நீர் சேந்தப்படும். அவை ஏன் செப்புப் பாத்திரங்…
-
- 0 replies
- 2k views
-
-
மனித உடல் பொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரும்ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சிலருக்கு ஜுரம் கூட வந்துவிடும், இது ஏன் என்றால், வெயல் காலத்தில் நம் உடலில் இருக்கும் தோலின் மீது காணப்படும் கண்ணுக்குத் தெரியாத சிறிய ரோமங்களுடன் காணப்படும் துவாரங்களின் கீழே சிறிய கொழுப்புத் திவலைகள் உண்டு இவை கடும் வெயல் மற்றும் குளிர் மழை போன்ற சீதோஷ்ண மாற்றங்களிலிருந்து நமது உடலின் வெப்பத்தை சீராகுவதற்க்கும் வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகின்றது, வெயலின் சூட்டில் அந்த கொழுப்புத் திவலைகள் உருகுவதால் சிறிய துவாரங்கள் முழுவதுமாக திறந்து கொண்டு வியர்வை தூசு போன்றவை அதன் வழியே உடலின் உள்ளே சென்று விடுகின்றது, அதிலிருக்கும் கிரு…
-
- 0 replies
- 717 views
-
-
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு... இந்த உணவுகள் கை கொடுக்கும்! ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான குறைபாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40 வயதை கடந்த ஆண்களுக்கு தான் இது அதிகமாக வரக்கூடும். சமீபத்திய புள்ளி விவரங்கள் படி, 45 வயதை கடந்த ஆண்களில் 5 சதவீத பேர்களுக்கும், 60 வயதை கடந்த ஆண்களில் 20-25 சதவீத பேர்களுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளது. இந்த ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினைக் குணப்படுத்த சில மருத்துவ வழிமுறைகளும் இருக்க தான் செய்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதை பற்றி பேசுகையில், இயற்கை வழிமுறையே இதனை சரி செய்வதற்கான …
-
- 14 replies
- 17.2k views
-
-
மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும்! சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் குறித்து கூறும், சூழல் பாதுகாப்பு குழு மருத்துவர் புகழேந்தி: 'நான் இந்த எண்ணெயை தவிர, வேற எதையும் தொடறதே இல்லை'னு பெருமையாக கூறிக் கொள்வர். இது, முழுக்க தவறான நம்பிக்கை.ஒரே வகையான எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தும் போது, அதிலிருக்கும் கெடுதல் தன்மை, உடலில் சேர்ந்து கொண்டே இருக்கும். எண்ணெய்களில் உள்ள நற்குணங்கள் மட்டுமே உடம்பில் சேர வேண்டும் எனில், எல்லா வகை எண்ணெய்களையும் மாற்றி மாற்றி கொஞ்சமா பயன்படுத்த வேண்டும்.மார்க்கெட்டில் விற்கப்படும் சூரியகாந்தி ரீபைண்டு எண்ணெய், சிறுநீரகத்துக்கு நல்லது இல்லை. எந்த எண்ணெயாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், ஒரே எண்ணெயை தொடர்ந்து பயன்படு…
-
- 2 replies
- 1k views
-
-
வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்கலாம்!! [Friday 2014-08-29 11:00] வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ! புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !? புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்…
-
- 3 replies
- 1.1k views
-
-
தூக்கமின்மை டாக்டர் ஜி. ஜான்சன் குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல் தூங்குகிறோம். இதில் ஒரு சில நாட்கள் தூக்கம் இல்லாமல் போனால் கெடுதி இல்லை. ஆனால் தொடர்ந்து சரியான தூக்கம் இல்லையேல் அது மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும். மூவரில் ஒருவருக்கு இதுபோன்ற தூக்கப் பிரச்னை உள்ளது. இதில் பெண்கள் இரு மடங்கினர் அடங்குவர்.நாம் தூங்கும் முறை வயதைப் பொறுத்து அமைவதால் பெரும்பாலும் முதிர் வயதுடையோரிடையே தூக்கப் பிரச்னை அதிகம் காணலாம். தூக்கமின்மையை ( insomnia ) துயிலொழி நோய் என்றும் கூறுவார். நாம் தூக்கமின்மை என்றே அழைப்போம். தூக்கமின்மை மூன்று வ…
-
- 8 replies
- 1.6k views
-
-
அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே. எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல், உண்ணும் உணவிலும் எலுமிச்சையைப் பயன்படுத்து நல்ல பலனைத் தரும். எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது திட உணவுகளான அரிசி அல்லது கோதுமையால் செய்யப்படும் உணவுகளை சிறிது நாட்கள் அதிகம் சாப்பிடக் கூடாது. இதே போன்று கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகள் உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். க…
-
- 2 replies
- 2.1k views
-
-
மறுவாழ்வு தந்த மயோபதி மருத்துவம் பிரேமா நாராயணன் , படங்கள் : எல். ராஜேந்திரன் பூப்போல சிரித்து, தத்தித் தத்தி நடந்து வளரும் மழலையின் ஒவ்வொரு பிறந்தநாளும் பெற்றோருக்கு மகிழ்ச்சியின் திருநாள். ஆனால், மருந்தே இன்னும் கண்டுபிடிக்கப்படாத மஸ்குலர் டிஸ்ட்ரபி’ எனப்படும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மட்டும், என் பிள்ளைக்கு வயது ஏறாமல் இப்படியே இருந்திடக்கூடாதா?’ என்று கண்ணீர்விட்டுக் கலங்கும் நாளாக, அவர்களின் பிறந்த நாள் அமைந்துவிடுகிறது. அப்படிப் பாதிக்கப்பட்டிருக்கும் பெற்றோர்களுள் ஒருவர், பிரபல நடிகரும் முன்னாள் அமைச்சருமான நெப்போலியன் ஜெயசுதா தம் பதியினர். இவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்த அந்தத் துயர அத்தியாயத்தை, நம்மிடம் பகிர்ந…
-
- 0 replies
- 1k views
-
-
எபோலா எமன்! தப்புவது எப்படி? இப்போது உலகை அதிரவைக்கும் ஒரு சொல் ‘எபோலா’. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று விதவிதமான வியாதிகள், விஞ்ஞான முன்னேற்றத்துக்குச் சவால்விட்டு, அவ்வப்போது மனிதனை மரணபீதிக்குள் உறையவைக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு அபாயத்தின் பெயர் ‘எபோலா’. 1976ல் ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ் கிருமி, இப்போது மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அச்சத்தில் ஆழ்ந்துபோயிருக்கிறது ஆப்பிரிக்கா. இந்தியாவுக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. ‘எபோலா வைரஸ் தாக்குதலில் இருந்து நாம் வெகுதொலைவில் இருக்கிறோம்’ என்கிறார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். ஆனாலும், ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் ஏரா…
-
- 0 replies
- 471 views
-
-
இரத்த குழாய் அடைப்பு நீங்க...! வீட்டுவைத்திய முறை. [Monday 2014-08-25 22:00] பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்..!! தனது இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். அதே நேரம் ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் மறுமுனையில் நோயளிக்கு பரிந்துரைத்தார் அதனை செய்தவாறு நோயாளி இருந்தார். எனினும் மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறு…
-
- 6 replies
- 5.2k views
-
-
சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது என்ற விவாதம் இப்போது ஓடிகொண்டிருக்கிறது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறீர்களா... உங்களை மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நல்லெண்ணெய் பயன்படுத்துகிறீர்களா? உங்களின் ரத்தக்கொதிப்பு அதிகமாக வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்களும் பயம் ஏற்படுத்துகிறார்கள். இதைப் பற்றி இணையத்தில் தேடும்போது பல தகவல்கள் கிடைத்தன. அதையே இந்த பதிவில் அலசப்போகிறோம். சிலர் நான் இந்த எண்ணெயைத் தவிர வேற எதையும் தொடறதே இல்லை-னு பெருமையா சொல்லிப்பாங்க. இது முழுக்க தவறான நம்பிக்கை. ஒரே வகையான எண்ணெயைப் பயன்படுத்துறதைவிட, எல்லா வகை எண்ணெய்களையும் கலந்து பயன்படுத்துறது நல்லது. ஒரே வகையான எண்ணெயைத் தொடர்ந்து எடுத்துக்கும்போது அதிலிருக்கிற கெடுதல் தன்மை உடல…
-
- 0 replies
- 966 views
-
-
கற்றுக் கொண்டால் குற்றமில்லை - சோம்பல் அறுங்கள் ஆக்கம்: 'எழுத்துச் சித்தர்' பாலகுமாரன் சங்கருக்கு தூக்கம் என்பது மிக மிகப் பிடித்தமான விஷயம். குறிப்பிட்ட நேரத்தில் சோறு இல்லாமல் இருந்துவிடலாம். தூக்கமில்லாமல் இருந்துவிட முடியுமா? தூங்கினால் தானே சோம்பல் நீங்கும். சோம்பல் நீங்கினால் தானே சுறுசுறுப்பாக இருக்க முடியும். சுறுசுறுப்பாய் இருந்தால் தானே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். எனவே, வாழ்வை ஜெயிப்பதற்ககு தூக்கம் அவசியம் என்பது சங்கரின் வாதம். வாதம் சரிதான். ஆனால், எப்போது தூக்கம்... எவ்வளவு நேரம் தூக்கம் என்பது மிகப் பெரிய கேள்வி. எட்டரை மணிக்கு பள்ளிக்கூடம் என்றால், ஏழு ஐம்பத்தைந்து வரை தூங்குவது சங்கரின் வழக்கம். ஒன்பது மணிக்கு கல்லூரி என்றால், எட்டு நாற்பது வரை…
-
- 0 replies
- 17.8k views
-
-
வெண்டைவெயில் காலத்தில் நீர்ச்சத்துள்ள பழங்களையும், பானங்களையும் தேடி உட்கொள்ளும் நாம் நீர்ச்சத்துள்ள, மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சில காய்களை சாதாரணமாக எண்ணி தவிர்த்துவிடுகிறோம். இதனால் எளிய மருத்துவ குணமுள்ள காய்களினாலேயே பல மருத்துவ பலன்களை பெறமுடியால் போய்விடுகிறது. கோடையில் உடல் மற்றும் சுற்றுப் புற வெப்பம் அதிகரிப்பதால் இயல்பாகவே கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், தோல் மற்றும் உதடு வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் குறைந்து ஒருவித சோர்வும், உடல் முழுவதும் சூடாக இருப்பதுபோன்ற உணர்வும் ஏற்படுகிறது. மியூசிலேஜ் எனப்படும் ஈரப்பதம் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உட் கொள்வதால் நமது உடலின் …
-
- 0 replies
- 425 views
-
-
அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் செரிமானம் செய்யச் (digest) செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின…
-
- 2 replies
- 1.9k views
-
-
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன் இருந்தால், ஆசையாக முத்தம் கொடுக்க வரும் துணை கூட கொடுப்பதற்கு தயங்குவார்கள். சரி, இப்படி பற்கள் மஞ்சளாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பரம்பரை காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவைகளே காரணங்களாகும். இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக வெளிக்காட்ட, பல் மருத்துவமனைக்க…
-
- 7 replies
- 9.8k views
-
-
தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவது ஆண்களை மிகவும் கவலை அடைய செய்கிறது. குறிப்பாக இளைஞர்களை அது பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. வழுக்கையை போக்க பல விதமான எண்ணைய்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தும் அதற்கு முழுயைமான தீர்வு காண முடியவில்லை. அனால் தற்போது வழுக்கை தலையில் முடி வளரக்கூடிய வகையில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் சென்டர் ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர். தலையில் வழுக்கை விழுதல் ஒரு நோயாகும். மயிர் காம்புகள் அழிவதால் இந்த வழுக்கை உருவாகின்றன. எனவே இது குறித்து சுண்டெலிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மயிர்க்காம்புகளை அழிக்கும் 'டி'ச…
-
- 6 replies
- 681 views
-
-
குடல் பகுதி. | பிரதிநிதித்துவ நோக்கத்திற்காக... நாம் உடல் பருமன் குறித்து அதிகம் கவலைப்படுகிறோம். இதனால் சதைபோடும் உணவுகளை எடுக்கக் கூடாது என்று நாம் உறுதியாக இருந்தாலும் தவிர்க்க முடியாமல் அவற்றை சாப்பிடுகிறோம் இது ஏன் என்று பலருக்கு வியப்பாகவே இருக்கும். இதற்கான காரணம் என்னவென்று அமெரிக்க ஆய்வு ஒன்று ஆராய்ந்துள்ளது. குடல் பாக்டீரியாக்களைக் கொண்டு உடல் பருமன் நோயைக் குணப்படுத்தலாம் என்’று சில ஆய்வுகள் தெரிவிக்கையில், இந்த ஆய்வு அதற்கு மாறான ஒரு முடிவைக் கண்டடைந்துள்ளது. அதாவது நம் குடலில் வாழும் பாக்டீரியா மூளையின் செயல்பாட்டை தனக்குச் சாதகமாகத் தூண்டி விடுகிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது குறித்து …
-
- 2 replies
- 596 views
-
-
சுயஇன்பம் சரியா தவறா?... ஆதிகாலம் தொட்டே நமது கலாச்சாரத்தில் சுய இன்பம் என்பது மிகப்பெரிய தவறு, பாவம் என்றே போதிக்கப்பட்டு வந்திருக்கிறது.ஆண்களின் சுய இன்பத்தையே மிகப்பெரிய அசிங்கமாக... தவறான செய்கையாக, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக...போதித்து வந்த சமூகம் பெண்களின் சுய இன்பத்தைப்பற்றி சமூகத்துக்கு தெரியாமலேயே நசுக்கியிருக்கிறது. போதாத குறைக்கு இன்னும் தெருவோர லேகிய மருத்துவர்கள் வேறு பல்வேறு பத்திரிக்கைகளில் தங்களது லாட்ஜ் விஜயத்தை பரப்புவதோடு நில்லாமல், பல்வேறு தொலைக்காட்சிகளிலும் தோன்றி சிறு வயதில் அனுபவித்த சுய இன்பப்பழக்கத்தினால்தான் பல ஆண்கள் ஆண்மைக்குறைவு, விரைவு ஸ்கலிதம், உறுப்பு சிறுத்துப்போதல் போன்ற பல குறைகளுக்கு ஆளாவதாக கதை கட்டி ‘’வாங்கடா... …
-
- 12 replies
- 111.5k views
-
-
கருத்தடை ஆப்பரேஷன், ஆண்மைக் குறைவை உண்டாக்குமா? பெரும்பாலும் இந்தியாவைப்பொருத்தமட்டில் பெண்கள்தான் இந்த ஆப்பரேஷனை செய்து கொள்கிறார்களே தவிர இதைச்செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு... பெண்களுக்கு நடக்கும் கருத்தடை / குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷன்களை விடவும் ஆண்களுக்கு செய்யும் ஆப்பரேஷன் மிக எளிதானதும், ரிஸ்க் இல்லாததும், அதிக வேதனைகளற்றதுமாய் இருந்தும் அதைச்செய்ய ஆண்கள் தயங்குவதற்கு என்ன காரணம்?... முதல் காரணம் இப்படியொரு ஆப்பரேஷனை செய்து கொண்டால் எங்கே நாம் ஆண்மையை இழந்து பொட்டையாகி விடுவோமோ என்ற பயம்தான்... குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷனுக்கும் ஆண்மைக்கும் சம்மந்தமேயில்லை என்பது மருத்துவ உண்மையாக இருந்தாலும் இதைச்செய்து கொண்டால் அதன் பிறகு வ…
-
- 0 replies
- 6.8k views
-