நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
'தேங்காயைச் சாப்பாட்டுல சேர்த்துக்காதீங்க... உடம்பு பருத்துடும். ஹார்ட் அட்டாக் வந்துடும்.'' - இப்படி தேங்காய் பற்றி பயமுறுத்தலான விஷயங்களையே கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளாக இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ''இது அத்தனையுமே உலக அளவிலான பிற எண்ணெய் வியாபார நிறுவனங்கள் செய்த தந்திரம். உண்மையில் தேங்காய் உடலுக்கு நல்லது. அதிலிருக்கும் சத்துக்கள் இணையற்றவை. தைரியமாக தேங்காயைப் பயன்படுத்துங்கள்'' என்று நம்பிக்கையூட்டுகிறார், பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன். ''அட, என்னங்க நீங்க... பத்து ரூபாய், பன்னிரண்டு ரூபாய்னு நேத்து வரைக்கும் தேங்காய் வித்துக்கிட்டிருந்தப்ப எல்லாம் இதைச் சொல்லல... இப்ப, ஒரு தேங்காய் 20 ரூபாய்க்கு மேல விக்குது! இந்த நேரத்துல வந்து சொல்றீங்க…
-
- 4 replies
- 3.2k views
-
-
விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வளர்ந்துவிட்ட இந் காலகட்டத்தில் புற்று நோயை இனம் கண்டு சிகிச்சை அளித்து குணப்படுத்த வியக்க வைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டு பிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் கண்டு பிடிக்கப்பெற்று சிகிச்சை அளிக்கப் பெற்று வருகின்ற நிலையில் நோயின் தீவிரம் காரணமாகதினமும் அதிகமானோர் பலியாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந் நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே ம…
-
- 1 reply
- 4.1k views
-
-
நமது உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பரபரப்பான வாழ்க்கைமுறை மற்றும் நேரமில்லாமை போன்ற காரணங்களால், நல்ல உணவுகளை உண்ணாமல், ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளை பின்பற்றாமல் வாழ்கிறோம். கவலையை விட்டு வெளியே சென்று உண்பதாலும் மற்றும் நமது ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டுவிட்டு பிறகு பார்ப்பதும், பின்னால் சிகிச்சை செய்வதற்கு கடினமாக அமையும். நுரையீரல் புற்றுநோய் என்பது ஒரு சாதாரண உடல் நல குறைபாடு மட்டும் இல்லை. இதை முன்னதாகவே கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் இதை மிகவும் ஆபத்தான நிலைக்கு செல்லும் முன் கண்டறிந்து சிகிச்சை தரலாம். நுரையீரல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் மிகவும் எளிதாகவே இருக்கும், ஆனால் இந்த உடல் நிலைக்கு ஏ…
-
- 0 replies
- 771 views
-
-
எல்லாவற்றுக்கும் பெண்கள் இப்போது இயற்கையை நாடுகிறார்கள். அழகியல் விஷயத்தில் இயற்கையை அதிகமாகவே சார்ந்திருக்க தொடங்கிவிட்டார்கள். பக்கவிளைவுகள் இல்லாத அழகிற்கு, இயற்கை மூலிகைகளில் உற்பத்தி செய்யும் அழகு சாதனப் பொருட்களே சிறந்தது என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்கள். ரசாயனம் கலந்த பொருட்கள் கூந்தலுக்கு பயன்படுத்தும்போது, காலப் போக்கில் முடி பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்டுச் சொன்னால் வறண்டு போகுதல், இறுதிப் பகுதியில் அறுந்து போகுதல், பிளந்து விடுதல் போன்றவைகளோடு கூந்தலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அத்தகைய கூந்தல் பிரச்சினைகளுக்கு தீர்வாக பெண்கள் இப்போது 'ஆர்கானிக் கரோட்டின் ட்ரீட்மென்ட்டை' நம்புகிறார்கள். இயற்கை மூலிகைகளில் இருந்து ப…
-
- 0 replies
- 492 views
-
-
தாடியை, சீக்கிரம் வளர வைக்க சில எளிய வழிகள்!!! மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை தரும். பண்டைய காலத்தில் தாடி வீரத்தின் அடையாளமாக இருந்தது. ஒரு அரக்கத்தனமான பெரிய தாடியை உடையவர்கள் மிகுந்த பலசாலியாக கருதப்படுவார்கள். தாடி ஒரு ஆணுக்கு அழகூட்டும் ஆண்மையை வெளிப்படுத்தும். ஆண் மனதில் உள்ள ஆசைகளில் ஒன்று தாடி வளர்ப்பதாகும். இதை சிறிதளவு சாதித்தாலும் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள். பெரிது பெரிதாக மற்றும் நல்ல அடர்த்தியுடன் அனைவராலும் முகத்தில் முடி வளர்க்க முடிய…
-
- 2 replies
- 1.5k views
-
-
ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வேதிப் பொருள் மிளகாயில்.. காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – (விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வித…
-
- 0 replies
- 15.7k views
-
-
மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் வித்தியாசமான செல்கள் அதாவது கலங்கள் மிதப்பதை தாம் கண்டு பிடித்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். 111 பேரிடம் நடத்தப்பட்ட சோதனைகளை மையமாகக் கொண்ட இந்த ஆய்வு அறிக்கை உயிரியல் பௌதீகம் குறித்த சஞ்சிகை ஒன்றில் வெளியாகியிருந்தது. இது மாரடைப்பு நோயாளிகளுக்கும், நோயற்றவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை காட்டக்கூடியதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவரது இரத்தத்தில் இந்த பிரத்யேக செல்கள் இருக்கின்றனவா என்பதை அறியும் இந்த பரிசோதனையை வைத்து, ஒருவருக்கு மாரடைப்பு வரக்கூடுமா என்பதை முன்கூட்டியே அறியமுடியுமா என்றும் அவர்கள் தற்போது ஆராய்கிறார்கள். கலிபோர்னியாவின் ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இந்த ஆய்…
-
- 0 replies
- 427 views
-
-
வாழைப்பழம் வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும். தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது. எந்த சுபவிழாக்களாக இருந்தாலும், அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான். வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன. ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம் [வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது…
-
- 1 reply
- 11.8k views
-
-
நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை. ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன. இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:- காரணங்கள்: நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதா…
-
- 1 reply
- 589 views
-
-
தாய்ப்பால் ஊட்டுதல்: குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே உணவும் பானமும் ஆகும். சாதாரனமாக வேறு எந்த உணவோ அல்லது பானமோ இந்த காலகட்டத்தில் தேவையில்லை. தாய்ப்பால் மட்டுமே பிறந்த குழந்தைகளுக்கு தேவையான ஒரே உணவாகும். மிருகங்களின் பாலோ, குழந்தைகளுக்கான பால்பவுடர், டீ, இனிப்பு பானங்கலோ, தண்ணீர் அல்லது, தானிய உணவுகளோ, தாய்ப்பாலை விட சிறந்தது அல்ல. தாய்ப்பாலே குழந்தைக்கு எளிதாக செமிக்கக் (சமிபாடடையக்) கூடியது. அது தான் சிறந்த வளர்ச்சி, முன்னேற்றம், மற்றும், நோய்களிலிருந்து பாதுகாப்பும் அளிக்கிறது. சூடான, வறட்சியான காலங்களில் கூட தாய்ப்பால், சிறு குழந்தையின் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. தண்ணீர் அல்லது பிற பானங்களோ பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தேவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
1. யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். 2. காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததாகும். மாலையில் செய்வதாயின் சாப்பிட்டு, மூன்று மணித்தியாலங்களின் பின்னரே செய்தல் வேண்டும். காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கமிருப்பவர்களாயின் தேநீர் அருந்தி அரை மணித்தியாலங்களின் பின்னரே ஆசனங்களைச் செய்தல் வேண்டும். 3. ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும். 4. உடல் உபாதைகள் உடையவர்கள் சில ஆசனங்களைச் செய்தலாகாது. இருபது வயதுக்குட்பட்டவர்கள் சிரசாசனம் செய்யக் கூடாதென தற்போது யோகிகள் கூறுகிறார்…
-
- 9 replies
- 5.3k views
-
-
PREV 1 of 19 NEXT 1. யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது. 2. காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததாகும். மாலையில் செய்வதாயின் சாப்பிட்டு, மூன்று மணித்தியாலங்களின் பின்னரே செய்தல் வேண்டும். காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கமிருப்பவர்களாயின் தேநீர் அருந்தி அரை மணித்தியாலங்களின் பின்னரே ஆசனங்களைச் செய்தல் வேண்டும். 3. ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும். 4. உடல் உபாதைகள் உடையவர்கள் சில ஆசனங்களைச் செய்தலாகாது. இருபது வயதுக்குட்பட்டவர்…
-
- 3 replies
- 26.5k views
-
-
மலச்சிக்கல் மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம். மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார். செரிமானம் எப்படி ஏற்படுகிறது? முதற்கட்டமான செரிமானம், நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும்போத…
-
- 0 replies
- 830 views
-
-
முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது? முதுகில் வலி உருவாக என்ன காரணம்? வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி? தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன? “முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி …
-
- 0 replies
- 564 views
-
-
கொலஸ்டரோல் என்பது என்ன? இது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்த ஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொஜெஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது. ஆனால் இரத்தத்தில் வழமைக்கு மேலான இதன் அதிகரிப்பு நோய்களுக்கு காரணமாகிறது. கொலஸ்டரோல் தவிர்ந்த வேறு கொழுப்புக்களும் எமது உடலில் உள்ளன. கொலஸ்டரோல், ரைகிளிசரைட் (TG), பொஸ்போ லிப்பிட்ஸ் ஆகிய அனைத்துமே கொழுப்புக்கள் (Lipids) எனப்படுகின்றன. கொழுப்புக்கள் நீரில் கரைய முடியாதவை. எனவே அவற்றை உடலின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு எடுத்துச் செல்ல குருதியால் முடியாது. இதனால் இவை ஒரு வகைப்புரதத்துடன் இணைவதால் நீரில் கரையக் கூடியதாகின்றன. இவ…
-
- 9 replies
- 4.5k views
-
-
எலும்பு அடர்த்தித் தேய்வு அதாவது எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானாலும் எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியங்கள் அதிகரிப்பதே எலும்பு தேய்மானம் எனும் ஆஸ்டியோபொரோசிஸ் எனும் நோய். நோயற்றவர்களுடைய எலும்பின் உட்பகுதி தேன் நிறைந்த தேன் கூடு போலவும், நோய் உள்ளவர்களின் எலும்பின் உட்பகுதி தேன் இல்லாத தேன் கூடு போலவும் தோற்றமளிக்கும். உண்மையிலே இது ஒரு நோயல்ல சக்தி குறைபாடே. பலவீனமடையும் எலும்புகள் ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது. …
-
- 4 replies
- 11.9k views
-
-
பெண்களின் உடலமைப்பினை பிரபலங்களின் தனிப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் மட் ரொபேர்ட்ஸ் பின்வரும் 4 வகையாகப் பிரிக்கின்றார்: 1. பியர்ஸ் வடிவம் 2. அப்பிள் வடிவம் 3. மணற்கடிகை வடிவம் 4. குழாய் வடிவம் http://www.dailymail.co.uk/femail/article-2532407/The-four-body-shapes-hold-key-womans-weight-loss-according-celebrity-personal-trainer.html
-
- 4 replies
- 2.5k views
-
-
பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவனிப்பிற்குரிய உறுப்பாக இருப்பவை, மார்பகங்கள். இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என்றால், ”சிறிதாக இருக்கிறது என்றும், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்” நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், 'சரிந்து, தொங்கி காணப்படுகிறது' என்று கவலைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. ஒரு செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லுமோ அதைப் போன்றுதான் மார்ப…
-
- 3 replies
- 4.9k views
-
-
ஒரு மனிதன் தந்தையாவதற்கு ஏற்ற வயது என்ன? எனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது. நல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு. வயது அதிகரிப்பும் அப்பாவாதலும் மேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். வேலைப் பளு, இரண்டாவது தரம் மூன்றாவது தரம் என மணம்முடித்தல் போன்ற காரணங்களால் அங்கு தந்தையாவது தாமதமாகிறது பலருக்கு. இருந்போதும…
-
- 0 replies
- 701 views
-
-
கிராமங்களில் இன்றும் 'கருப்பட்டி' காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. அதிலும் இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்த வில்லை. இந்த கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். பனங்கருப்பட்டி யில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படி உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. # இப்போது பரவலாகக் காணப்படும் டெங்கு நோயைக் குணப்படுத்த கரும்பு கருப்பட்டியும் சின்னவெங்காயமும் சிறந்த மருந்தாகும். என இலங்கை கரும்பு ஆராய்ச்சி ந…
-
- 0 replies
- 616 views
-
-
நீரழிவு நோய் என்றால் என்ன? நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் வழங்குகின்றது. குளுக்கோஸில் இருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ள இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreas) என்னும் சுரப்பி உள்ளது. இங்குதான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் (சீனியின்) அளவு அதிகமாகிறது. இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான குளுக்கோஸ் அல்லது சீனி இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக…
-
- 1 reply
- 4.4k views
-
-
40 வயதுகளில் எம்மைத் தேடி வரும் ஆபத்தான நோய்கள் 40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம். 40 வயதின் பின் என்னென்ன நோய்கள் வரலாம்? உடல் எடை அதிகரித்தல் மன அழுத்தம் சர்க்கரை நோய் அதிக அளவில் கொழுப்பு சேருதல் உயர் ரத்த அழுத்தம் இதய நோய் எலும்பு மூட்டு நோய்கள் புற்று நோய் வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள்: மெட்டோபாலிக் சின்…
-
- 5 replies
- 3.6k views
-
-
ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம். இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்புமொய்க்காதாம். மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம். நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது! இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒ…
-
- 3 replies
- 474 views
-
-
நிறத்தில் வெள்ளையான உப்பும், சீனியும் குணத்தில் நஞ்சாகின்றது: சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது அது – உப்பு. எவ்வளவு ருசியாகச் சமைத்தாலும் உப்பில்லாவிட்டால் அதை வாயில் வைக்க முடியாது என்பது உண்மைதான். அதே நேரம், உப்பு அளவுக்கு அதிகமாகும்போதும் பல உபத்திரவங்களை அளித்துவிடும். உங்கள் உடம்பில் உப்பு அதிகரித்தால், அதிகமான தண்ணீரை உடம்பு சேர்த்து வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீரகக்கற்கள் ஏன் பக்கவாத பாதிப்பு கூட ஏற்படும். அதிகமான உப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து, சீரான ரத்த…
-
- 1 reply
- 1.7k views
-
-
அனுப்பி வைத்தவர்: டாக்டர் நளினி சிவப்பிரகாசம் நோய்க்கான பொதுக் காரணிகள் ஒருவருடைய வாழ்கையில் எதிர் பாராது நிகழும் சில சம்பவங்கள், இழக்கப் படாததை இழந்ததால் ஏற்படும் துக்கம், எதிர் பார்த்த சில விடயங்கள் நடைபெறாது போவதால் ஏற்படும் ஏமாற்றம் (பரீட்சையில் சித்தியெய்தமுடியாது போவது, காதலில் தோர்வியடைவது) அல்லது சமூகத்திற்கு முகம் கொடுக்க முடியாத சமூக விரோத செயல்களில் ஏடுபட்டதால் ஏற்பட்ட குற்ற உணர்வு, கடன்பட்டு பின் அதனை செலுத்த முடியாது போவதால் ஏற்படும் மானநஷ்டம், பெரிய எதிபார்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு முடங்கிப் போவதால் ஏற்படும் திடீர் மாற்றம் என்பனவற்றால் ஒருவர் மனதை துன்புறுத்தும் மன வேதனையும், தாழ்வு உணர்வு (Low Mood) நிலையும…
-
- 2 replies
- 9.1k views
-