நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளது. மனிதர்களது உடல் உள வளர்ச்சியில் கீரை பெரிதும் முக்கியத்துவம் வகிக்கின்றது. கீரையானது நாட்டுக்கு நாடு காலநிலைகளின் மாறுதல்களிற்கு ஏற்ப்ப பலவகையாக விழைவிக்கப்படுகின்றது. அவை ஒவ்வொன்றும் தனித்தனி தன்மைகளைக் கொண்டுள்ளன. வெந்தயக்கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள், பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது. முருங்கை கீரை: உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிலக்கின் போது ஏற்படும் வ…
-
- 0 replies
- 644 views
-
-
உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம். இயற்கை சார்ந்த உணவு முறைகள் தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம். நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை , 1. புரதங்கள் ( Proteins ) 2. மாவுச்சத்து ( Carbohyrates ) 3. கொழுப்பு ( Fats ) 4. தாதுக்கள் ( Minerals ) 5. உயிர் சத்துக்கள் ( Vitamins ) 6. தண்ணீர் ( Water ) ஆகியன ஆகும். இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. பு…
-
- 0 replies
- 459 views
-
-
கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்! என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?' என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அது ஆபத்தானதா, கண்டறிவது எப்படி என்று இதய நோய் சிகிச்சை நிபுணர் ஆர்.ரவிகுமாரிடம் கேட்டோம். 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை. நம் உடல் செல்கள் உற்பத்திய£வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவ…
-
- 2 replies
- 23.2k views
-
-
தேன்: தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும். தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும். கண் பார்வைக்கு தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். இருமலுக்கு சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் ஆஸ்துமா அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும் இரத்த கொதிப்பு ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமு…
-
- 7 replies
- 3.2k views
-
-
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்... நச்சு உணவுகள். உலகில் எத்தனையோ ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் அனைத்தும் நமக்கு நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் அந்த உணவுகள் சில நேரங்களில் தீமையை கூட விளைவிக்கும். அதிலும் உயிர் போகும் அளவிலான தீமையை விளைவிக்கும். எப்படியெனில் நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்கள் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தமிழ் போல்ட் ஸ்கை நச்சுத்தன்மை நிறைந்திருக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. இந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான…
-
- 0 replies
- 2.1k views
-
-
-
வேம்பு.! வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன. லக்னோவிலுள்ள …
-
- 1 reply
- 707 views
-
-
”நளினி அம்பாடி சிகிச்சைகள் பலனளிக்காமல் அக்டோபர் 28 2013, அன்று போஸ்டனில் இறந்தார்” என ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. சமூக உளவியல் துறையில் உலகெங்குமுள்ளவர்களை அதிர்ச்சியும் சோகமும் அடைய வைத்த செய்தி இது. இதற்கும் மேல் அதிர்ச்சியும் கோபமும் நமக்கு வரவேண்டும். அவர் இறந்ததற்குக் காரணம் சிகிச்சையில் குறைவோ, புற்றுநோயின் தீவிரமோ இல்லை. இந்தியர்களான நமது பாமரத்தனம். நமது அறிவின்மை, உலக அளவில் ப்ரசித்தி பெற்ற இந்திய வம்சாவளியரான உளவியல் நிபுணரைக் கொன்றிருக்கிறது. யார் இந்த நளினி அம்பாடி? ஏன் அவர் இறந்ததற்கு நாம் குற்ற உணர்வு கொள்ளவேண்டும்? நளினி அம்பாடி, கேரள மாநிலத்தவரானாலும் படித்தது கல்கத்தாவிலும், டெல்லியிலும். பின்னர் அமெரிக்கா சென்று மேற்…
-
- 4 replies
- 3.5k views
-
-
• காலிஃப்ளவர் பூ வகையைச் சேர்ந்தது. • இது சாதாரணமாக வெள்ளையாகவோ இளம் மஞ்சளாகவோ காணப்படும். இவற்றில் வயலட் கலர் காலிஃப்ளவரும் உண்டு. • காலிஃப்ளவர் பூவைவிட பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக கால்சியம் சத்து உள்ளது. • காலிஃப்ளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக்கொண்டால் வாயுத் தொந்தரவும் ஏற்படாமல் தடுக்கலாம். • இதில் வைட்டமின் பி1, 2, 3, 4, 5, 6 மற்றும் பி9 வைட்டமின்கள் காணப்படுகின்றன. • காலிஃப்ளவரை வாரம் இருமுறை உட்கொண்டால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். • இதில் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3- கான்ஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டது. • காலிஃப்ளவரை அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வ…
-
- 7 replies
- 698 views
-
-
கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்… * அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். * குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது. * பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது. * ‘பாலிபெப்டைடு-பி’ எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் ‘இன்சுலின்’ என்று கருது…
-
- 11 replies
- 3.1k views
-
-
காலை கவனிப்பதுண்டா? காலை கவனிப்பதுண்டா? எல்லா பாரத்தையும் தாங்குதே: உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது கால் தான். ஆனால், இதனை பராமரிப்பதில் எத்தனை பேர் அக்கறை காட்டுகின்றனர் என்பது கேள்விக்குறி தான். தினமும் காலை, மாலை வேளையில் குளிக்கும் போது, காலை சுத்தமாக கழுவிக்கொள்வதில் இருந்து, வெளியில் போய் விட்டு வீடு திரும்பினால், காலை சுத்தம் செய்வது வரை மிக முக்கியமானது. ஆனால், காலை சரியாக கூட கழுவத்தெரியாதவர்கள் இல்லாமல் இல்லை. கால் வழியாக பாக்டீரியா கிருமிகள், உடலில் புகுவதற்கு இடமுண்டு; அதுபோல, பூச்சி கடித்து, அதன் மூலம் நோய் வரும் ஆபத்தும் உண்டு. அதனால் , கால் மீது அதிக கவனம் தேவை. *** புறக்கணிப்பதா? : உடலில் மற்ற பாகங்களை போல கால் சுத்தமாக, ஆரோக்…
-
- 4 replies
- 2.6k views
-
-
நம் நாட்டுச் செடிக் கிழங்கு வெள்ளைக்காரன் விழுந்து விழுந்து சாப்பிடுகிறான் .தானே பயிரிடுகிறான் மரமண்டைகளா நீங்கள் .? கொஞ்சம் எமது கிராமிய இயற்க்கை மருத்துவத்தை காப்பாற்றுங்கள் எனது முக நூலின் நண்பர்கள் யாராவது ஒருவர் முயலுங்களேன் மலட்டுத்தன்மை போக்கும் தண்ணீர்முட்டான் கிழங்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் உயிர்வாழத்தேவையான உணவுகளை இயற்கை வழங்கியிருக்கிறது. நம் கண்ணெதிரே காணப்படும் செடி கொடிகள் கூட மூலிகைத் தன்மை உடையதாகவும், மருந்துப்பொருளாகும் பயன்படுகிறது.அந்த வகையில் தண்ணீர்முட்டான் கிழங்கு எனப்படும் மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மித வெப்ப மண்டல பகுதிகளைச் சார்ந்தது. இது இந்தியாவ…
-
- 1 reply
- 2.1k views
-
-
குடிப்பழக்கத்தால் ஏற்படும் மூளைக்கோளாறுகள்! அதிகமான மதுபானம் அருந்துவதால், மூளையின் அமைப்பிலேயே கோளாறுகள் ஏற்படுகின்றன என்றும், மேலும் நரம்பு - மனோவியல் மண்டலங்கள் பழுதடைவதாகவும் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது! ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஸ்கூல் ஆஃப் மெடிசின் மனோவியல் மற்றும் நடத்தை விஞ்ஞான பேராசிரியை சல்லிவான், நீண்ட நாளைய மதுபான பழக்கத்தால் மூளையில் அமைப்பு ரீதியான மாற்றங்களும், நரம்பு - மனோவியல் மண்டல கோளாறுகளும் ஏற்படுவதாகக் கூறுகிறார். பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் அவதிப்படுவதும், நிகழ்வுகளை வரிசைக்கிரமத்துடன் சொல்வதிலும், செய்வதிலும், ஞாபக மறதியும், ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்யும் திறனையும் மது அடிமைகள் இழக்கின்றனர் என்கிறார் சல்லிவான். நினைத்ததைச் செயல…
-
- 7 replies
- 737 views
-
-
சமூக மட்டத்தில் ஒழிக்கும் தேசிய திட்டம் பூச்சித் தொல்லை "அங்கை பொடியளுக்கு பூச்சி மருந்தே குடுக்கிறாங்கள் இல்லையாம். அதுதான் உங்களிட்டை கூட்டிக் கொண்டு வந்தனான்" பெர்பியூம் வாசனை அறை முழுவதையும் நிறைந்;தது. தாய் மகளையும் இரண்டு பேரப் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தாள். அவர்கள் அமெரிக்காவில் வாழ்பவர்கள். விடுமுறைக்கு தாய்நாடு வந்திருந்தார்கள். பொதுவாகக் பூச்சி என்று சொல்லப்படும் குடற் புழுக்கள் அங்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அதனால் பூச்சி மருந்து வழமையாக கொடுக்க வேண்டிய தேவை அங்கு ஏற்படுவதில்லை. "போன மாதம்தான் பூச்சி மருந்து குடுத்தனீங்கள். இப்ப இரவிலை பல்லை நெறுமுறான் திருப்பி ஒருக்கால் குடுப்பம் " என்றார் மகனோடு வந்த இளம் தந்தை. பல் நொறுமுவதற…
-
- 0 replies
- 1.4k views
-
-
ரத்தத்தை சுத்தமாக வைக்கும் உன்னத உணவு பொருட்கள் உடல் ஆரோக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு ரத்தமா னது மிகவும் இன்றியமையா தது. எனவே அத்தகைய ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் ரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த ரத்தமானது உடலில் இருந் தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப்படிதல், பொலிவிழந்த சருமம் மற்று…
-
- 0 replies
- 2.6k views
-
-
சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள் பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சா…
-
- 7 replies
- 1.2k views
-
-
விரல்களாலும் வியாதிகளை விரட்டமுடியும்! [saturday, 2013-10-26 16:12:13] நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன. கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன. …
-
- 4 replies
- 1.7k views
-
-
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுப் பழக்கங்கள் நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தண்ணீர் என நான்கு வகையென நாம் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டமாக இந்த நான்கு ஊட்டச்சத்துகளில் இருந்து என்ன அடிப்படையில் நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்ய வேண்டும் என இப்பொழுது பார்ப்போம். நம் உடம்பிற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ஊட்டங்கள் ஏழு ஆகும். ஆகவே இந்த ஏழு ஊட்டச் சத்துக்களை வழங்கும் உணவு வகைகளைத்தான் நாம் உட்கொள்ள வேண்டும் என்றாகின்றது. அந்த ஏழு ஊட்டச் சத்துக்கள் முறையே விட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்து, என்சைம்கள் எண்ணெய் மற்றும் தண்ணீராகும். விட்டமின்கள்: நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும்…
-
- 0 replies
- 3.5k views
-
-
http://www.youtube.com/watch?v=4rGSlSwjssM இவர் பல கிலோ நிறையுள்ள கற்களை... தலையில் வைத்து ஒரு நாளைக்கு எத்தனை தரம், சுமக்கின்றாரோ... தெரியவில்லை. ஆனால்... அத்தனை, பாரமும்... எமது, முள்ளந்தண்டை பாதிக்கும் என நினைக்கின்றேன். குறிப்பிட்ட சில வருடங்களில், இவரால்... முற்றாக வேலை செய்ய முடியாமல் போகலாம். பாரம் சுமக்கின்ற, தள்ளு வண்டிலைக் கூட... இவரது முதலாளியால்.. வாங்கிக் கொடுக்க முடியாதுள்ளதா? அதில் இன்னும் அதிகமான கற்களை ஏற்ற முடிவதுடன், அவரது உடல் நலமும் பாதிக்காமல் இருக்கும்.
-
- 1 reply
- 510 views
-
-
சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னையில் முக்கியமானது, சிறுநீரக கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன. இது, மிகச் சிறு துகள் அளவில் துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக் கூடும். பெரிய கற்கள் கூட, அறிகுறியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கற்களின் வெளிப்பரப்பு, முட்களைப் போல இருந்தால், அவை சிறுநீர் பாதையில் உராய்ந்து, சிறுநீரில் ரத்தம் வெளியாகலாம். இவை பரம்பரை காரணமாக, போதிய நீர் குடிக்காததால் உருவாகலாம். அசைவ உணவை தவிர்ப்பது, போதிய நீர் குடிப்பது, சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் அடைப்புக்கு தாமதமில்லாத சிகிச்சையால், கல் உருவாவதை தவிர்க்கலாம்…
-
- 0 replies
- 504 views
-
-
ICU - intensive care unit என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் விசேடித்த பாதுகாப்புக்கள் கொண்ட மற்றும் உயிர் பிடிப்பு மற்றும் உடல் கண்காணிப்பு சாதனங்கள் கொண்ட அறையினுள் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டால் அவர் தொடர்பில் வெளியில் உள்ளவர்கள் பலவகையான அச்சத்தை வெளியிடக் காண்கிறோம். உண்மையில் அது அவசியம் தானா..??! அப்படிப்படையில் அந்த அச்சம் அவசியமன்று. நோயாளி தீவிர சிகிச்சைக்கும் கண்காணிப்புக்குள்ளும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளுக்குள்ளும் வருகிறார் என்றால் நோயாளின் நிலைமை மிக மோசம் என்று மட்டும் அர்த்தமில்லை. அவருக்கு அத்தகைய ஒரு சூழல் அவசியம் என்றாலும் அது வழங்கப்படலாம். குறிப்பாக.. தீவிர விபத்தால் இரத்த இழப்பு.. சத்திரசிகிச்சை.. இதயப் பாதிப்பு.. மூளை செயலிழத்தல்.…
-
- 11 replies
- 2.7k views
-
-
நாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும். டியோடரன்டஸ் Deodorants என்பது இப்பொழுது, சீப்புப் பவுடர் போலாகிவிட்டது. வீட்டுப் பாவனைப் பொருள் போல எங்கும் கிடைக்கின்றன. யாருக்குத்தான் மற்றவர்கள் முன்னால் தங்களது உடல் நாற்றத்துடன் போய் நிற்க மனதிருக்கும். நாற்றமும் நறுமணமும் "அரசியின் கூந்தல் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா" ஆராய்ந்து பார்த்த கதைகள் நினைவிற்கு வருகிறதா? அந்தக் காலத்தில் அரசிகள் முடிக்கு மட்டுமே தேடிய வாசனைத் திரவியங்கள் இன்று தொழிலாளர்களின் அக்குளுக்கும் அவசியமாகிவிட்டன. சந்தை வாய்ப்புகளும் விற்பனையும் அமோகமாக இருக்கின்றன. அக்குள் மணத்திற்கும் பொதுவான உடல் மணத்திற்கு காரணம் வியர்வையாகும். ஆனால் இயற்கையாக வியர்வை மணப்பதில்லை. வியர…
-
- 9 replies
- 1.5k views
-
-
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?? துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரு ம வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழ…
-
- 3 replies
- 827 views
-
-
"டாக்டர், எனக்கு ரொம்ப சோகையாக இருக்கு. ரெண்டு பாட்டில் ரத்தம் ஏத்துங்க" என்று வேண்டுகோள்களும், "டாக்டர் எப்போதும் எனக்கு ரொம்ப அசதியாகவே இருந்திச்சு. அதனால ஒரு பாட்டில் ரத்தம் ஏத்திக்கிட்டேன். இப்ப நீர் பிரியல ஆனா மூச்சுவாங்குது" என்று சொல்லிக்கொண்டு வருகின்ற நோயாளிகளை நிறைய சந்திக்க முடிகின்றது. இது எதனால்? சோகை என்றால் என்ன? இரத்த சோகை என்றால் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் அறியாததன் விளைவுகள்தான் மேலே சொன்ன உரையாடல்கள்! மருத்துவம் செய்து கொள்வது எவ்வளவு தேவையானதோ அதைப் போலவே அதைப்பற்றி அறிந்துக் கொள்வதும் அவசியமானது. அந்த வகையில் நாம் முக்கிய வரலாற்றுப் பதிவுகள் சிலவற்றைப் பார்ப்போம். இந்திய மருத்துவத் தந்தை சுஸ்ருதா, சோகையினை அது ஒருவகையான பண்டுரோகம் அல்லது மஞ்ச…
-
- 0 replies
- 3.1k views
-
-
நெல்லிக்காய் சாறு குடிப்பதால் என்ன நன்மை? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால்…
-
- 0 replies
- 8.5k views
-