நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
காலை கவனிப்பதுண்டா? காலை கவனிப்பதுண்டா? எல்லா பாரத்தையும் தாங்குதே: உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது கால் தான். ஆனால், இதனை பராமரிப்பதில் எத்தனை பேர் அக்கறை காட்டுகின்றனர் என்பது கேள்விக்குறி தான். தினமும் காலை, மாலை வேளையில் குளிக்கும் போது, காலை சுத்தமாக கழுவிக்கொள்வதில் இருந்து, வெளியில் போய் விட்டு வீடு திரும்பினால், காலை சுத்தம் செய்வது வரை மிக முக்கியமானது. ஆனால், காலை சரியாக கூட கழுவத்தெரியாதவர்கள் இல்லாமல் இல்லை. கால் வழியாக பாக்டீரியா கிருமிகள், உடலில் புகுவதற்கு இடமுண்டு; அதுபோல, பூச்சி கடித்து, அதன் மூலம் நோய் வரும் ஆபத்தும் உண்டு. அதனால் , கால் மீது அதிக கவனம் தேவை. *** புறக்கணிப்பதா? : உடலில் மற்ற பாகங்களை போல கால் சுத்தமாக, ஆரோக்…
-
- 4 replies
- 2.6k views
-
-
நம் நாட்டுச் செடிக் கிழங்கு வெள்ளைக்காரன் விழுந்து விழுந்து சாப்பிடுகிறான் .தானே பயிரிடுகிறான் மரமண்டைகளா நீங்கள் .? கொஞ்சம் எமது கிராமிய இயற்க்கை மருத்துவத்தை காப்பாற்றுங்கள் எனது முக நூலின் நண்பர்கள் யாராவது ஒருவர் முயலுங்களேன் மலட்டுத்தன்மை போக்கும் தண்ணீர்முட்டான் கிழங்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் உயிர்வாழத்தேவையான உணவுகளை இயற்கை வழங்கியிருக்கிறது. நம் கண்ணெதிரே காணப்படும் செடி கொடிகள் கூட மூலிகைத் தன்மை உடையதாகவும், மருந்துப்பொருளாகும் பயன்படுகிறது.அந்த வகையில் தண்ணீர்முட்டான் கிழங்கு எனப்படும் மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மித வெப்ப மண்டல பகுதிகளைச் சார்ந்தது. இது இந்தியாவ…
-
- 1 reply
- 2.2k views
-
-
குடிப்பழக்கத்தால் ஏற்படும் மூளைக்கோளாறுகள்! அதிகமான மதுபானம் அருந்துவதால், மூளையின் அமைப்பிலேயே கோளாறுகள் ஏற்படுகின்றன என்றும், மேலும் நரம்பு - மனோவியல் மண்டலங்கள் பழுதடைவதாகவும் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது! ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஸ்கூல் ஆஃப் மெடிசின் மனோவியல் மற்றும் நடத்தை விஞ்ஞான பேராசிரியை சல்லிவான், நீண்ட நாளைய மதுபான பழக்கத்தால் மூளையில் அமைப்பு ரீதியான மாற்றங்களும், நரம்பு - மனோவியல் மண்டல கோளாறுகளும் ஏற்படுவதாகக் கூறுகிறார். பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் அவதிப்படுவதும், நிகழ்வுகளை வரிசைக்கிரமத்துடன் சொல்வதிலும், செய்வதிலும், ஞாபக மறதியும், ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்யும் திறனையும் மது அடிமைகள் இழக்கின்றனர் என்கிறார் சல்லிவான். நினைத்ததைச் செயல…
-
- 7 replies
- 744 views
-
-
சமூக மட்டத்தில் ஒழிக்கும் தேசிய திட்டம் பூச்சித் தொல்லை "அங்கை பொடியளுக்கு பூச்சி மருந்தே குடுக்கிறாங்கள் இல்லையாம். அதுதான் உங்களிட்டை கூட்டிக் கொண்டு வந்தனான்" பெர்பியூம் வாசனை அறை முழுவதையும் நிறைந்;தது. தாய் மகளையும் இரண்டு பேரப் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தாள். அவர்கள் அமெரிக்காவில் வாழ்பவர்கள். விடுமுறைக்கு தாய்நாடு வந்திருந்தார்கள். பொதுவாகக் பூச்சி என்று சொல்லப்படும் குடற் புழுக்கள் அங்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அதனால் பூச்சி மருந்து வழமையாக கொடுக்க வேண்டிய தேவை அங்கு ஏற்படுவதில்லை. "போன மாதம்தான் பூச்சி மருந்து குடுத்தனீங்கள். இப்ப இரவிலை பல்லை நெறுமுறான் திருப்பி ஒருக்கால் குடுப்பம் " என்றார் மகனோடு வந்த இளம் தந்தை. பல் நொறுமுவதற…
-
- 0 replies
- 1.4k views
-
-
ரத்தத்தை சுத்தமாக வைக்கும் உன்னத உணவு பொருட்கள் உடல் ஆரோக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு ரத்தமா னது மிகவும் இன்றியமையா தது. எனவே அத்தகைய ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும். இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் ரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த ரத்தமானது உடலில் இருந் தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப்படிதல், பொலிவிழந்த சருமம் மற்று…
-
- 0 replies
- 2.7k views
-
-
சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள் பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சா…
-
- 7 replies
- 1.2k views
-
-
விரல்களாலும் வியாதிகளை விரட்டமுடியும்! [saturday, 2013-10-26 16:12:13] நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன. கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன. …
-
- 4 replies
- 1.7k views
-
-
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுப் பழக்கங்கள் நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தண்ணீர் என நான்கு வகையென நாம் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டமாக இந்த நான்கு ஊட்டச்சத்துகளில் இருந்து என்ன அடிப்படையில் நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்ய வேண்டும் என இப்பொழுது பார்ப்போம். நம் உடம்பிற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ஊட்டங்கள் ஏழு ஆகும். ஆகவே இந்த ஏழு ஊட்டச் சத்துக்களை வழங்கும் உணவு வகைகளைத்தான் நாம் உட்கொள்ள வேண்டும் என்றாகின்றது. அந்த ஏழு ஊட்டச் சத்துக்கள் முறையே விட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்து, என்சைம்கள் எண்ணெய் மற்றும் தண்ணீராகும். விட்டமின்கள்: நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும்…
-
- 0 replies
- 3.5k views
-
-
http://www.youtube.com/watch?v=4rGSlSwjssM இவர் பல கிலோ நிறையுள்ள கற்களை... தலையில் வைத்து ஒரு நாளைக்கு எத்தனை தரம், சுமக்கின்றாரோ... தெரியவில்லை. ஆனால்... அத்தனை, பாரமும்... எமது, முள்ளந்தண்டை பாதிக்கும் என நினைக்கின்றேன். குறிப்பிட்ட சில வருடங்களில், இவரால்... முற்றாக வேலை செய்ய முடியாமல் போகலாம். பாரம் சுமக்கின்ற, தள்ளு வண்டிலைக் கூட... இவரது முதலாளியால்.. வாங்கிக் கொடுக்க முடியாதுள்ளதா? அதில் இன்னும் அதிகமான கற்களை ஏற்ற முடிவதுடன், அவரது உடல் நலமும் பாதிக்காமல் இருக்கும்.
-
- 1 reply
- 516 views
-
-
சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னையில் முக்கியமானது, சிறுநீரக கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன. இது, மிகச் சிறு துகள் அளவில் துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக் கூடும். பெரிய கற்கள் கூட, அறிகுறியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கற்களின் வெளிப்பரப்பு, முட்களைப் போல இருந்தால், அவை சிறுநீர் பாதையில் உராய்ந்து, சிறுநீரில் ரத்தம் வெளியாகலாம். இவை பரம்பரை காரணமாக, போதிய நீர் குடிக்காததால் உருவாகலாம். அசைவ உணவை தவிர்ப்பது, போதிய நீர் குடிப்பது, சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் அடைப்புக்கு தாமதமில்லாத சிகிச்சையால், கல் உருவாவதை தவிர்க்கலாம்…
-
- 0 replies
- 516 views
-
-
ICU - intensive care unit என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் விசேடித்த பாதுகாப்புக்கள் கொண்ட மற்றும் உயிர் பிடிப்பு மற்றும் உடல் கண்காணிப்பு சாதனங்கள் கொண்ட அறையினுள் ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டால் அவர் தொடர்பில் வெளியில் உள்ளவர்கள் பலவகையான அச்சத்தை வெளியிடக் காண்கிறோம். உண்மையில் அது அவசியம் தானா..??! அப்படிப்படையில் அந்த அச்சம் அவசியமன்று. நோயாளி தீவிர சிகிச்சைக்கும் கண்காணிப்புக்குள்ளும் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளுக்குள்ளும் வருகிறார் என்றால் நோயாளின் நிலைமை மிக மோசம் என்று மட்டும் அர்த்தமில்லை. அவருக்கு அத்தகைய ஒரு சூழல் அவசியம் என்றாலும் அது வழங்கப்படலாம். குறிப்பாக.. தீவிர விபத்தால் இரத்த இழப்பு.. சத்திரசிகிச்சை.. இதயப் பாதிப்பு.. மூளை செயலிழத்தல்.…
-
- 11 replies
- 2.7k views
-
-
நாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும். டியோடரன்டஸ் Deodorants என்பது இப்பொழுது, சீப்புப் பவுடர் போலாகிவிட்டது. வீட்டுப் பாவனைப் பொருள் போல எங்கும் கிடைக்கின்றன. யாருக்குத்தான் மற்றவர்கள் முன்னால் தங்களது உடல் நாற்றத்துடன் போய் நிற்க மனதிருக்கும். நாற்றமும் நறுமணமும் "அரசியின் கூந்தல் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா" ஆராய்ந்து பார்த்த கதைகள் நினைவிற்கு வருகிறதா? அந்தக் காலத்தில் அரசிகள் முடிக்கு மட்டுமே தேடிய வாசனைத் திரவியங்கள் இன்று தொழிலாளர்களின் அக்குளுக்கும் அவசியமாகிவிட்டன. சந்தை வாய்ப்புகளும் விற்பனையும் அமோகமாக இருக்கின்றன. அக்குள் மணத்திற்கும் பொதுவான உடல் மணத்திற்கு காரணம் வியர்வையாகும். ஆனால் இயற்கையாக வியர்வை மணப்பதில்லை. வியர…
-
- 9 replies
- 1.5k views
-
-
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?? துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரு ம வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழ…
-
- 3 replies
- 832 views
-
-
"டாக்டர், எனக்கு ரொம்ப சோகையாக இருக்கு. ரெண்டு பாட்டில் ரத்தம் ஏத்துங்க" என்று வேண்டுகோள்களும், "டாக்டர் எப்போதும் எனக்கு ரொம்ப அசதியாகவே இருந்திச்சு. அதனால ஒரு பாட்டில் ரத்தம் ஏத்திக்கிட்டேன். இப்ப நீர் பிரியல ஆனா மூச்சுவாங்குது" என்று சொல்லிக்கொண்டு வருகின்ற நோயாளிகளை நிறைய சந்திக்க முடிகின்றது. இது எதனால்? சோகை என்றால் என்ன? இரத்த சோகை என்றால் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் அறியாததன் விளைவுகள்தான் மேலே சொன்ன உரையாடல்கள்! மருத்துவம் செய்து கொள்வது எவ்வளவு தேவையானதோ அதைப் போலவே அதைப்பற்றி அறிந்துக் கொள்வதும் அவசியமானது. அந்த வகையில் நாம் முக்கிய வரலாற்றுப் பதிவுகள் சிலவற்றைப் பார்ப்போம். இந்திய மருத்துவத் தந்தை சுஸ்ருதா, சோகையினை அது ஒருவகையான பண்டுரோகம் அல்லது மஞ்ச…
-
- 0 replies
- 3.1k views
-
-
நெல்லிக்காய் சாறு குடிப்பதால் என்ன நன்மை? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால்…
-
- 0 replies
- 8.5k views
-
-
மாட்டுக்கறி உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன் இளம் வயதிலேயே மரணத்தை தரும் எனக் கூறப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தள்ளுவண்டிகளில் பீப் பக்கோடா விற்பனையும் சூடு பிடிக்கிறது. ரெட்மீட் எனப்படும் மாட்டுக்கறியை சாப்பிட்டால் இளம் வயதில் மரணமடைய நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் மாட்டுக்கறி சிவப்புக் கறியாக கூறப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே கறிக்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. இந்த சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது. மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் கு…
-
- 1 reply
- 728 views
-
-
இந்த காணொலி மூன்றரை மணி நேரம். தொடர்ந்து கேட்க முடியாது.ஆனபடியால் சிறிது சிறிதாக பெறுமையாக இருந்து கேட்கவும்.நிறையவே விடயங்களை எளிதான முறையில் சொல்கிறார். http://www.youtube.com/watch?v=2FDDVLkgx2o
-
- 0 replies
- 776 views
-
-
உணவே மருந்து என்பது தான் நம் முன்னோரிகளின் தாரக மந்திரம், அஞ்சரைப்பெட்டியில் உள்ள அனைத்தும் மூலிகைப்பொருட்கள் என்பது நம்மில் பலருக்கு மறந்தே போய் விட்டது. கேன்சரை குணப்படுத்தும் மிகச்சிறந்த மருந்துவப் பொருட்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையலறையில் தான் உள்ளது. 01. மஞ்சள்: புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள் முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 02. பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகத்தில் உள்ள அனீதோல் எனும் மூலப்பொருள் புற்றுநோய் செல்களின் புற்றுநோய் பிசின் மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைக்கிறது. வறுக்கப்பட்ட பெருஞ…
-
- 0 replies
- 610 views
-
-
குழந்தைகளுகளால் விரும்பி சுவைக்கப்படும் உணவு நூடுல்ஸ்.மிக விரைவாக தயாரித்துத் தந்துவிடமுடிகிறது.ஆனால் அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத்தெரியாது.விளம்பரங்களில் சொல்லப்படுவதை நம்பியே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். விளம்பரங்களில் உள்ள தகவல்களுக்கும் உண்மைக்கும் இருக்கும் இடைவெளியை நாம் அனுபவித்திருக்கிறோம். நுகர்வோர் கவசம் என்ற இதழை தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிடுகிறது.சென்றமாத இதழில் தலையங்கமாகவும் ஒருபக்க செய்தியொன்றும் நூடுல்ஸ் பற்றி இருக்கிறது.குஜராத்தில் நுகர்வோர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்று நூடுல்ஸ் குப்பை உணவு என்பதை தெரிவிக்கிறது.படித்த்தில் நினைவில் உள்ளவை இவை. அனுமதிக்கப்பட்ட அளவை விட …
-
- 2 replies
- 1.5k views
-
-
மலைகளிலும், மரங்களிலும் தேன் கூட்டை நாம் பார்த்திருப்போம். பூமியெங்கும் உள்ள மலர்க்கூட்டங்களைக் கண்டறிந்து தேனை சேகரிக்கிறது தேனீ. தேன் உடலுக்கு அருமருந்தாகும். தேன் எவ்வாறு உருவாகிறது? (How is honey produced?) நாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து நேரடியாக தேனை உறிஞ்சிக்கொண்டு வந்தது தேன்கூட்டில் அடைக்கிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல.. மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு , தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை. தேனிலுள்ள சத்துக்கள்: (The nutrients in honey) 200 கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அ…
-
- 0 replies
- 5.4k views
-
-
பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பி…
-
- 14 replies
- 10.9k views
-
-
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு ந…
-
- 1 reply
- 2k views
-
-
மூன்று வயதுமுதல் ஐந்துவயது வரையிலான மழலைக் குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித்தூக்கம் போடவைத்தால் அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மதிய சாப்பாட்டுக்குப்பிறகான இப்படியான தூக்கம் குழந்தைகளின் மூளைத்திறனை மேம்படுத்துவதாக இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்று வயது முதல் ஐந்துவயது வரையிலான குழந்தைகள் மதியம் ஒருமணிநேரம் தூங்கி எழுந்தால், அவர்கள் தங்களின் மழலைப்பருவ பாடங்களை நன்றாக நினைவில் வைத்திருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இயற்கை விஞ்ஞானத்துக்கான தேசியக் கழகத்தின் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் 40 சிறார்களிடம் மேச்சசூசெட்ஸ் ஹம்ஹர்ஸ்ட் பல்கலை…
-
- 0 replies
- 434 views
-
-
"காலம் கெட்டுப் போச்சு. ஐம்பது வயதிலேயே சீனி வருத்தத்தோடையும் பிரசரோடையும் இண்டைக்கோ நாளைக்கோ என்று அல்லாடுறன். எங்கடை பாட்டா தொண்ணூறு வயசிலையும் மண்வெட்டியை தோளில் போட்டுக் கொண்டு பொழுது விடிய முன்னரே தோட்டத்திற்குப் போடுவார்" என்றார் ஒரு பெண்மணி. அவர் சொல்வது உண்மையா? உண்மையில் இன்று நோயாலும் பணிகளாலும் மனிதர்கள் விரைவாக இறந்து போகின்றார்களா? இல்லை அது தவறான கருத்து என்றே கருதுகிறேன். மனிதனுடைய சராசரி வயது முன்பு எவ்வாறிருந்தது? இன்று என்னவாக இருக்கிறது? மனிதர்களது ஆயுற்காலம் மனிதர்களது சராசரி ஆயுற்காலம் முன்னைய காலங்களில் மிகக் குறைவாகவே இருந்தது. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனிதர்களுக்கு 50 வயதைத் தாண்டுவது பெரும் சவாலாக இருந்தது. 1960 இலும் 60 வயதை எட்ட முடியவ…
-
- 2 replies
- 858 views
-
-
பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு: நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான். 6 மாதத்தில் மு…
-
- 3 replies
- 11.1k views
-