Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. செயற்கையாக பரிசோதனைக் கூடத்தில் வளர்ந்த சிறுநீகரம் வெற்றிகரமாக செயற்படுகின்றது - ஏனைய அங்கங்களும் விரைவில் உருவாக்கப்படலாம்! [Monday, 2013-04-15 20:51:49] பரிசோதனைக் கூடத்திலேயே வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் விலங்குகளில் பொருத்தப்பட்ட சிறுநீரகம் சிறுநீர் கழிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மருத்துவத் தொழிநுட்பம் ஏனைய உடல் உறுப்புகளில் கையாளப்பட்டு நோயாளிகளிடத்திலும் ஏற்கனவே வெற்றியடைந்திருந்தாலும் மிகவும் நூதனமான உடலுறுப்பான சிறுநீரகத்தில் இப்போது தான் சாத்தியப்பட்டுள்ளது. இயற்கையான சிறுநீரகத்தை விட இந்த தொழிநுட்ப- சிறுநீரகத்தின் தொழிற்பாடு கொஞ்சம் மெதுவாகத் தான் இருக்கிறது. ஆனாலும், இப்போது எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், உடல் உறுப்பு- மீள்உருவாக்க மருத்துவத் துறையில் ஒரு ப…

  2. ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் அபாயங்கள்..! ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் அபாயங்கள்..! இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர். தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள். ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆ…

  3. முடி கொட்டுவதற்கான காரணங்கள் பொதுவாக நமது தலையில் இருந்து தினமும் 40 முதல் 50 முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும். இது இயற்கை. எந்த அளவிற்கு கொட்டுகிறதோ அதே அளவிற்கு புதிய முடி தலையில் உருவாகிவிடும். அதனால் 40 முதல் 50 முடி கொட்டுவதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம். ஆனால், விழும் முடிக்கு சமமாக புதிய முடி முளைக்காமல், கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும் போதுதான் கவலை ஏற்படுகிறது. பொதுவாக தலைமுடி உதிர பலக் காரணங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக தலைமுடி உள்ளது. உடலில் விட்டமின் பி, இ, இரும்பச் சத்து, கால்சியம் போன்றவைக் குறைவதையே தலைமுடி உதிரல் காட்டுகிறது. நீரிழிவு, பொடுகு போன்றவை அதிகமாக முடி உதிரக் காரணமாக அமையலாம். சில மருந…

  4. அக்குபஞ்சர் என்பது பண்டைய காலம் தொட்டு கடைபிடிக்கப்படும் மருத்துவ முறை என்பதுடன் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி சிகிச்சை அளிப்பதே அக்குபஞ்சர் சிகிச்சை முறை. சமீப காலமாக இயற்கை சார்ந்த மருத்துவங்களை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகளை நாடத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே இயற்கை முறை மருத்துவத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்கள் கூடுதல் தகுதியாக அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான படிப்பை மேற்கொள்கின்றனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் அக்குபஞ்சர் மருத்துவமனைகளும் மாவட்டங்கள் தோறும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடு…

  5. பக்கவாதம்.. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் வெடிப்பு அல்லது அடைப்பு ஏற்படுவதன் மூலம் ஏற்படுகிறது. பொதுவாக வயதானவர்களின் தோன்றும் இந்த நிலை இன்றைய கால வாழ்வியல் நடத்தை மாற்றங்களின் அடிப்படை உட்பட்ட பல காரணங்களால் இள வயதினரிடையேயும் நடுத்தர வயதினரிடையேயும் ஏற்பட்டு வருகிறது. முள்ளந்தண்டுப் பகுதியில் உள்ள மூளையின் நீட்டமான முண்ணானில் ஏற்படும் பாதக விளைவுகளாலும் இது ஏற்படக் கூடும். இந்த நிலைக்கு உயர் குருதி அழுத்தம்.. குருதியில் கொலஸ்ரோல் அளவு அதிகரித்துக் காணப்படுவது.. அதிக உடற்பருமன்.. மதுபானம்.. புகைத்தல்.. போன்ற அநாவசிய செயற்பாடுகள்.. குறைந்த உடற்பயிற்சி அதிதீவிர உடற்பயிற்சி போன்றவைகளோடு பிறப்புரிமை சார்ந்த சில நிலைகளும் காரணமாகின்றன. அத்…

  6. சர்க்கரை நோய் (Diabetes ) நீரிழிவு நோய் எமது உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியம். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல் (யவாநசழளஉடநசழளளை) இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. நீரிழிவில் மூன்று வகைகள் முதலாவதுவகை முதலாவதுவகை (Type I Diabetes) நீரிழிவானது குழந்தைகள் சிறுவர் …

  7. தொப்பையை குறைக்க வழி - 3 எப்ப டெலிவரின்னு கிண்டல் பண்றாங்களா? இதோ தொப்பையை குறைக்க வழி... * உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோர…

  8. உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் FAT BURNING TIPS -உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் அதிகமான உடல் பருமன் அல்லது பெருத்த உடல் மருத்துவ இயல், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப் பற்றிய மருத்துவப்பிரிவிற்கு ஆங்கிலத்தில்Bariatrics என்று பெயர். உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது. ஒரு சாதாரண உடலில் 30 முதல் 35 பில்லியன் கொழுப்பு செல்கள் இருக்கும். ஒரு பருமனான உடல் எடையை இழக்கும்போது இந்த செல்கள் அளவில் சிறுக்கத் தொடங்கும். ஆனால் செல்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இருக்காது. இதன் காரணமாகத்தான் ஒரு முறை உடல் பருமனாகிவிட்டால் எடையைக் குறைப்பது கடினமாகிப் போகிறது. அறுவை சிகிச்சை ம…

  9. http://tamilworldtoday.com/home http://tamilworldtoday.com/archives/4426 பற்பசை இல்லாத ஒரு வாழ்க்கையைக் குறித்து நம்மால் சிந்திக்க கூட முடிவதில்லை. சுகந்தமான சுவாசத்திற்கும், வலுவான பற்களுக்கும் நம்மில் பெரும்பாலோர் பற்பசைகளையே நம்பியுள்ளனர். ப்ரஸ் மற்றும் டூத் பேஸ்டுகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் இன்றைய காலக்கட்டத்தில் செலவிடப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த ஏராளமான பற்பசைகளும், ப்ரஸ்ஸுகளும் நமது சந்தையை ஆக்கிரமித்துள்ளன. நமது ஒவ்வொரு நாளும் பற்பசையில்இருந்துதான் துவங்குகிறது. “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி” என்ற பழமொழிக்கேற்ப முன்பெல்லாம் நமது முன்னோர்கள் ஆலங்குச்சியையும், வேப்பங்குச்சியையும் பல்துலக்க பயன்படுத்…

  10. 101 நாளில் எளிதாக குண்டாகலாம் குண்டாக tips உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்... 101 நாளில் எளிதாக குண்டாகலாம். 50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து... அதனுடன் ஒரு மேசைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து.... 101 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகிவிடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்தயத்துக்கு உண்டு. குண்டான உடம்புடன் கஷ்டப்படுபவர்கள், உடல் மெலிய... 50 கிராம் கொள்ளை வறுத்து... பொடியாக்கி தினமும் சாப்பிடவும். இது உடலில் உள்ள தண்ணீ¬ரை நீக்கி உடல் எடையை குறைத்துவிடும். உங்களுடைய உடல் சரியான நிலைக்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உடலுக்கு நல்…

    • 2 replies
    • 73.8k views
  11. தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே . பரோட்டாவின் கதை என்ன தெரியுமா பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. பரோ…

    • 9 replies
    • 13.8k views
  12. கழிப்பறைக்கு செல்ல சோம்பேறிகளான ஆண்கள் - ஆரோக்கியமாக வாழ மாற்றவேண்டிய பழக்கவழக்கங்கள்! [Thursday, 2013-04-11 18:38:56] உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய டயட் மட்டுமின்றி, ஒரு சில ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பழக்கவழக்கங்களும் மிகவும் அவசியம். அதிலும் இத்தகையவற்றை ஆண்களிடம் பார்க்கும் போது, பெரும்பாலான ஆண்களிடம் ஒருசில ஆரோக்கியமற்ற மற்றும் சுத்தமில்லாத பழக்கங்களும் உள்ளன. பொதுவாக உலகில் இருக்கும் அனைவருக்கும் ஒருசில நல்ல மற்றும் கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால் அத்தகைய பழக்கங்களில் கெட்டவை அதிகம் இருந்தால், பின் அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிலும் புகைப்பிடித்தல் ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருக்கும் கெட…

  13. மூளையை பாதிக்கும் பத்து பழக்கங்கள் 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...! காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது...! இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல்...! மூளை சுருங்கவும், 'அல்ஸைமர்ஸ்' வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்...! நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதை தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 5. மாசு ந…

  14. சீனி, சர்க்கரை, வெல்லம் (sugar) என இப்படி பல பெயர்களில் நாம் அழைக்கும் சுக்குரோஸ், இனிப்பு சுவைக்காக ஒவ்வொருவராலும் நாளாந்த உணவில், மென் பானங்களில் , பழச்சறுகளில் பயன் படுத்தப்படும் ஒரு பதார்த்தம். புகையிலை, போதை பொருள் போல, சீனியின் இனிப்பு சுவை சிறுவர்களை, பெரியவர்களை அடிமையாக்கும் பொருள். சீனி உடலுக்கு தேவையான, உடலுக்கு சக்தியை கொடுக்கும் குளுகோஸை தரும் மூலமாக இருந்தாலும், இதன் அளவுக்கு அதிகமான பவனை உடல் நலனுக்கு உகந்தது அல்ல. நாம் உண்ணும் பழங்கள், சில மரக்கறிகள் (பீற்றுட்) ஆகியவற்றில் இது இயற்கையாகவே இருக்கிறது. அதே போல மாச்சத்து உள்ள, தானியங்கள், (அரிசி, கோதுமை) கிழங்கு வகை போன்றவற்றை உண்ணும் பொது மனித உடலின் சமிபாட்டின் முலம் எமது உடலுக்கு தேவையான சக்தி…

    • 0 replies
    • 1.5k views
  15. இன்று தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த போது எதேச்சையாக fat, sick and nearly dead எனும் ஒரு விவரண படத்தை பார்க்க நேர்ந்தது. இதில், அதிகரித்த உடல் நிறை கொண்ட ஒருவர், உடல் நிறை அதிகரிப்பால் ஏற்படும் பக்க விளைவுகளை போக்க நாளாந்தம் பல்வேறுபட்ட மருந்துகளை குடித்து வந்தது பற்றியும், அதில் இருந்து விடுபடுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியையும் சொல்கிறது. உடல் நிறையை குறைப்பதற்காகவும், மருந்து பாவனையை குறைக்கவும், அவர் 60 நாட்களுக்கு மரக்கறி, பழச்சாறுகளை மட்டுமே உண்கிறார். அதன் முடிவில் 100 பவுன்ஸ் (45 கிலோ) உடல் நிறை குறைவை எட்டி இருக்கிறார். அத்துடன் பல மருந்துகள் எடுக்கும் தேவையும் இல்லது போய் இருக்கிறது. அவர் சொல்லும் முக்கியமான ஆலோசனை, இப்படி மிக கடுமையான உணவு கட்…

    • 7 replies
    • 1.9k views
  16. முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய... சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். மாதவிடாய் நேரத்தில…

  17. வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது புதிய ஜப்பானிய ஆய்வு ஒன்று. முடி விழாத ஆண்களை விட, வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. உச்சந்தலையில் இருந்து முடி உதிரும் பிரச்சினையை உடைய ஆண்களுக்கு இருதயக்குழாய் நோய் வரும் ஆபத்து மற்றவர்களை விட 32 சதவீதம் அதிகம் இருப்பதாக, 37,000 ஆண்களிடையே நடத்திய ஆய்வின் பின்னர் இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தலைமுடி முன்னிருந்து உதிர்ந்து கொண்டே 'பின்வாங்கிச் செல்லும்' பிரச்சினை உடைய ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் காணப்படவில்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த வழுக்கைத் தலைப் பிரச்சினைக்கும் , இருதய நோய் தோன்றுவதற்குமான தொடர்புகள் தெளிவாகத் தெரியவில்லை…

  18. யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற பல வகை உடற்பயிற்சிகள் எவ்வளவு உடலுக்கு முக்கியமோ அதே அளவு பயிற்சி நம் கண்களுக்கும் அவசியமானது. கண்களை ஆரோக்கியமாக வைத்து‌க்கொ‌ள்வது கண்களு‌க்கு ஏற்படும் களைப்புகளை குறைக்கும். கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கும் வழிவகுக்கும். கண்களுக்கு நாம் தர வேண்டிய அத்தியாவசிய பயிற்சி முறைகள்: 1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை உள்ளங்கையால் மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ளும்படியாக முக்கோன வாக்கில் கைகள் அமைய வேண்டும்.கண்களை மூடும் போது இருளை உணர்ந்து, அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத…

  19. நார் சத்து (fiber) என்றால் என்ன அதன் முக்கியத்துவம் பற்றிய முன்னைய பதிவுகள் : 1. http://www.yarl.com/forum3/index.php?showtopic=22811 2. http://www.yarl.com/forum3/index.php?showtopic=22301 மேலே சொன்ன பதிவுகளில் சொன்னது போல் நார்ச்சத்து மல போக்கை, சீரக்குவதுடன், குடல், குதப்புற்று நோய் (colorectal cancer) ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், உணவில் நார் சத்தின் அளவை அதிகரித்தால், முதல் முறை பாரிசவாதம் (first-time stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. கனேடிய சுகாதார திணைக்களம் (Health Canada) 28 - 38 கிராம் நார் சத்தை நாளாந்தம் உண்ண வேண்டும் என பரிந்துரைக்கிறது. ஆனால் சராசரியாக கனேடிய மக்கள் 14 …

  20. அவர் வந்து உட்கார்ந்ததுபோது கதிரை வேதனையில் கிரீச்சிட்டு அனுங்கியது! தனது வருத்தம் பற்றிக் கூறுவதற்கிடையில் அவரது கண்கள் நகர்ந்து கட்டிலின் கீழ் இருந்த எடைகாட்டியில் தங்கி நிலைத்தன. இவரது நடவடிக்கைகள் எனக்குப் புதினமானவை அல்ல. பல வருடங்களானப் பார்த்துப் பழக்கம். அப் பெண்ணுக்கு தனது எடை பற்றி அக்கறை எப்பொழுதும் உண்டு. எப்பொழுது வந்தாலும் தனது எடையைப் பார்க்காமல் விட மாட்டாள். எடையை எப்படிக் குறைப்பது என்று ஆலோசனையும் தவறாது கேட்பாள். ஐந்து அடி மூன்று அங்குல உயரமுள்ள அவரது தற்போதைய எடை 110 கிலோ ஆகும். அடுத்த முறை வரும்போது நிச்சயம் ஒரு கிலோ ஆவது கூடியிருக்கும் என்பது நிச்சயம். ஒவ்வொரு தடவையும் எடையைக் குறைப்பது பற்றிய ஆலோசனையைக் கேட்பதுடன் சரி. அடுத்த முறை வரும…

  21. நீரில் இறங்காமல் நீச்சலா? பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு என மூன்றும் கலந்துழலும் பெண் அவள். 5 அடி உயரத்தில் 80 கிலோ எடையும் சேர்ந்ததால் நிலைமை மேலும் மோசமாயிற்று. "நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என்றவுடன் அவளது முகத்தில் கோபம் கொப்பளித்தது. "விடிஞ்சு பொழுது சாயு மட்டும் வீட்டிலை வேலை, வேலை... இதுக்கு மேலை என்ன பயிற்சி செய்யுறது." இன்னுமொருவர் தனியார் துறையில் பொறுப்பு வாய்ந்த வேலையில் இருப்பவர். வேளையோடு வேலைக்குப் போனால் இரவான பின்தான் வீட்டிற்கு வர முடியும். உடற்பயிற்சி பற்றி யோசிக்கவே நேரம் இல்லையாம். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை இருவருமே அறிந்திருந்தார்கள். ஆயினும், நேரம் இல்லாததால் பயிற்சி செய்வதில்லை. ஆனால், நீரில் இறங்காமல் நீந்த…

  22. நடைப்பயிற்சி சில உதவிக் குறிப்புகள் இப்பொழுது எந்த மருத்துவரிடம் போனாலும் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி என ஓடாத குறையாக விரட்டுகிறார்கள். உண்மைதான் உடற் பயிற்சி மிகவும் நல்லது. ஆண் பெண் குழந்தைகள் என எவருக்கும் ஏற்றது. சுலபமாகச் செய்யக் கூடியது. செலவில்லாதது. இடம் தேடி அலைய வேண்டியது இல்லை. வீதியருகின் நடைபாதைகளே போதுமானது. அதீத உடையுள்ளவர்கள், கொலஸ்டரோல் பிரச்சனையுள்ளவர்கள், பிரசர் உள்ளவர்கள், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் அவசியமானது. வாரத்தில் 5 நாட்களுக்காவது செய்வது நல்லது. பொதுவாக 30 நிமிடப் பயிற்சி தேவை. ஆயினும் நடைப் பயிற்சியை ஆரம்பிக்க இருப்பவரின் தேவை என்ன, ஆரோக்கிய நிலை எப்படி போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை மா…

  23. ஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிகள் உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்துஉடல் இளைத்துப்போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில குறிப்புகள்: * தினமும் ஏதாவது ஒரு பழ யூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ யூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் இனிப்பு மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். இனிப்பு சேர்த்தால் பழத்தின் முழு சத்தும்குறைந்து விடும். * எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுவகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். * வேக வைத்த பயிறு வகைகள், தானியங்க…

  24. உங்களுக்கு நிறப் பார்வைக் குறைபாடு (color blindness) இருக்கக் கூடுமா? M.K முருகானந்தன் வண்ணங்கள் இல்லாத உலகில் வாழ்வது பற்றி கற்பனை பண்ணவே முடியவில்லை. நீல வானம், வெண் மேகங்கள், பசுமை போர்த்திய தாவரங்கள், மாலையில் சூரியன் தாழும்போது மஞ்சள் சிகப்பு எனப் பரவும் நிறக்கலவைகள். ஆகா! என்ன தவம் செய்தோம் இந்த வையகத்தில் மானிடராய் பிறப்பதற்கே! வானவில் காட்டும் வண்ண ஜாலத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழும் உள்ளத்தைக் களிகொண்டு ஆடச்செய்கிறது. ஆனால் சிவப்பு , நீலம், பச்சை ஆகிய மூன்று மட்டுமே அடிப்படை வண்ணங்கள் ஆகும். பாரதியின் உள்ளத்தையும் வண்ணஙகள் கிளந்தெறச் செய்தன. "என்னடி இந்த வண்ணத்தியல்புகள்! எத்தனை வடிவம்!எத்தனை கலவை…

  25. இரத்தப் பரிசோதனையில் புதிய தொழில்நுட்பம் - சுவிட்சலர்லாந்து விஞ்ஞானிகள் சாதனை! [Wednesday, 2013-03-27 18:43:49] நம்முடைய தோலுக்கு அடியில் பொருத்தப்படுகின்ற ஒரு சிறு கருவி மூலம் நம்முடைய இரத்தப் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் கைத்தொலைபேசியில் பார்க்க வகை செய்யும் கண்டுபிடிப்பு ஒன்றைத் தாம் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அரை அங்குலம் நீலமும் தீக்குச்சியின் தடிமனுமே கொண்ட இக்கருவியின் மாடல் ஒன்றை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கியுள்ளனர். நம் இரத்தத்திலிருந்து ஐந்து உட்கூறுகளின் அளவுகளை இந்தக் கருவி உடனுக்குடன் தெரிவிக்குமாம். இந்தக் கருவியிலிருந்து பரிசோதனை முடிவுகள் ரேடியோ அலைகள் மூலமாகவும், புளூடூத் கம்பியற்ற தகவல் பரிமாற்றம் மூலமாகவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.