நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
மதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்? மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவர்கள் அறிவுரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக அளவுக்கு மது குடித்தால், அடுத்த நாள் பணிக்கு செல்லும்…
-
- 0 replies
- 532 views
-
-
நீங்கள் இன்று எப்படி உணர்கிறீர்கள்? ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பது போல் உணர்கிறீர்களா? இல்லையெனில், நீங்கள் மன அழுத்தத்திற்கு அல்லது மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டால், எதிலும் சரியாக கவனத்தை செலுத்த முடியாமல் இருப்பதோடு, அதனாலேயே உடலினுள் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பமாகிவிடும். அப்படி உங்கள் உடலில் பிரச்சனைகள் ஆரம்பமாகியிருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளைக் கொண்டே நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால், தீவிர பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உங்களுக்கு அந்த அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். …
-
- 0 replies
- 472 views
-
-
ஜூலை 16 `குமுதம் சிநேகிதி' இதழில் நடிகை த்ரிஷா தன் அழகு ரகசியம் பற்றிக் கூறுகையில், `நான் சோப்பே யூஸ் பண்றதில்லை, ஒன்லிஃபேஸ்வாஷ்தான்' என்றிருக்கிறார். இதில் என்ன ஒரு சிறப்பம்சம் என்றால், இப்படிச் சொல்லும் த்ரிஷாவே ஒரு குளியல் சோப் விளம்பரத்தில் மாடலாக நடித்திருக்கிறார் என்பதுதான். `சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்' என்று சந்தையில் புதிது புதிதாக குளியல் சோப்புகள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும்போது, த்ரிஷா போன்ற பிரபலங்கள் குளியல் சோப்பை அவாய்ட் செய்வதன் காரணம் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியை தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் முரளீதர் ராஜகோபால் முன் வைத்தோம். ``த்ரிஷா சொல்றது கரெக்ட் என்பதைவிட, பொதுவாக குளியல் சோப்புகளுக்குப் பதில் ஃபேஸ்வாஷ் யூஸ் பண்…
-
- 2 replies
- 4.7k views
-
-
விபத்துகள் இன்றைய நவீன உலகில் மலிந்துவிட்டன. விபத்துகள் எங்கள் வீட்டை வரமாட்டாது என்று யாரும் அடித்து கூற முடியாது எனவே எல்லோரும் முதலுதவியை பற்றி அறிந்திருந்தால் உயிர்களை அவயங்களை காப்பாற்ற முடியும். அறிந்திருந்தால் அவசரத்துக்கு உதவும்; [size=1]தி[/size]டீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும். மாரடைப்பு: மாரடைப்பிற்கான அறிகுறிகள்: நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல். இரண்டு தோள்பட்டை…
-
- 1 reply
- 1k views
-
-
வெள்ளைச் சீனியில் நச்சுத் தன்மை! - எப்படித் தயார் செய்கிறார்கள்..? [saturday, 2013-03-23 09:38:35] இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம். 1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல…
-
- 2 replies
- 676 views
-
-
பூப்பெய்வதற்கு முன் அகற்றப்பட்ட சினைப்பை மூலம் மாதவிடாய் நின்றபின் குழந்தை லண்டனில் பெண் ஒருவர், குழந்தை பருவத்தில் நீக்கப்பட்ட சினைப்பையிலிருந்து எடுத்து உறையவைக்கப்பட்ட திசுவால் கருவுற்று குழந்தை பெற்றெடுத்துள்ளார். புதிய தொழில்நுட்பத்தில் பிறந்த குழந்தை 24 வயதாகும் மோசா அல் மட்ருஷி என்னும் அந்த பெண்மணி, பூப்படைதலுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட சினைப்பை மூலம் குழந்தை பெற்று கொண்ட முதல் பெண் ஆவார். லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையான போர்ட்லாந்து மருத்துவமனையில் அந்த பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்; "அது ஒரு அற்புதமான நிகழ்வு" என்று அவர் அதனை விவரித்துள்ளார். "ஆரோக்கியமான குழந்த…
-
- 2 replies
- 565 views
-
-
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு ந…
-
- 1 reply
- 2k views
-
-
மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும் 05 May 10 05:48 am (BST) மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும் என பிரித்தானிய மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறைவாக உறங்குவோரும், அதிகமாக உறங்குவோரும் உயிராபத்தை எதிர்நோக்கிவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆறு மணித்தியாலங்களுக்கு குறைவாக உறங்குவோர் நோய்களினால் பீடிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால் உயிரிழக்க நேரிடலாம் எனவும் பிரித்தானிய மற்றும் இத்தாலிய ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நபர் ஒருவர் சராசரியாக ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரையில் உறங்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்பது மணித்தியாலங்…
-
- 3 replies
- 978 views
-
-
ஆட்டாமா உணவுகள் உடல் நிறையை கட்டுப்படுத்த உதவுமா? – Dr.சி.சிவன்சுதன் ஆட்டாமா என்பது கோதுமை அரிசியை தீட்டாது தவிடு சேர்த்து திரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் இந்த ஆட்டாமாவை பலரும் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆட்டாமா உணவுவகைகளை உண்டால் உடல் மெலியும் என்று நம்பி தமது அன்றாட உணவில் அதிகளவு ஆட்டாமாவை சேர்த்து ரொட்டியாகவும் பிட்டு ஆகவும் உண்டு உடல் பருத்துப் போனவர்கள் பலர். கோதுமை அரிசியை தீட்டியபின் திரிப்பதன் மூலம் பெறப்படும் கோதுமை மாவுடன் ஒப்பிடும் பொழுது ஆட்டாமாவிலே தவிட்டுத்தன்மையும் நார்த்தன்மை யும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஆட்டாம…
-
- 0 replies
- 950 views
-
-
பூப்படையும் பதின் பருவத்தில் ஒவ்வொரு இளம்பெண்ணும் அனுபவிக்கும் முதல் துயரம் டிஸ்மெனோரியா. அடிவயிற்றிலும் தொப்புளைச் சுற்றிலும் ஏற்படும் தாங்கொணா வலி டிஸ்மெனோரியா எனப்படுகிறது. பல்வேறு வயதிலும் தொடரும் இதற்குப் பல்வேறு காரணங்களும் உண்டு. இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதையும் பார்ப்போம். முதல் காரணம் எண்டோமெட்ரியத்திலிருந்து இரத்தம் வெளியேறி ஆனால் அது பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறாமல் உள்ளே தங்கிவிடுவதும் பின் தேங்கித் தேங்கிக் கட்டிகளாக வெளியேறுவதுமே இந்த டிஸ்மெனோரியா என்ற வலி மிகுந்த மாதவிடாய். சில வளரிளம் பெண்களுக்குத் தொடர்ந்து ஆறு மாதங்களோ அதற்கும் மேலோ இந்த வலி தொடர்ந்து வந்து அதன் பின்புதான் பூப்பெய்துவார்கள். பூப்பெய்தியபின் ஒவ்வொரு மாதமும் எட்டு முதல் பத்து நாட…
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நின்றல், பெண்களின் மூளையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தவர் நியூயார்க்கின் புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை இணை பேராசிரியர் லிசா மாஸ்கோனி. வெய்ல் கார்னெல் மருத்துவ மையத்தின் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் தடுப்பு திட்டத்தின் இயக்குநருமான இவர், மனித மூளை குறித்த தமது 20 ஆண்டுகால நீண்ட ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளவை குறித்தும், 'The XX Brain' என்ற தனது புத்தகம் பற்றியும் பிபிசி முண்டோ சேவைக்கு (BBC Mundo) அளித்த பேட்டி பின்வருமாறு: பெண்களின் மூளை குறித்த 20 வருட ஆராய்ச்சியில் நீங்கள்…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டுள்ள சோளம் மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு உதவுகிறது. சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம்(Genus) ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டா கரோட்டீன், புற்றுநோயை தடுக்கும் பெருலிக் அமிலமும் அடங்கியுள்ளது. சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன் செயல்பட வைக்கும் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளன. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்…
-
- 0 replies
- 577 views
-
-
கண்ணும் உணவும் நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம். பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (ஆன்டி - ஓxஇடன்ட்ச்) Mஅcஉல -வை ஆரோக்கியமா…
-
- 2 replies
- 1.6k views
-
-
சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகிவிட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல. குழந்தைகள் முடிவெடுக்கட்டும் :- எதையாவது சமைத்துவிட்டு "இதை சாப்பிடப் போறியா இல்லையா?" என்று குழந்தைகளை மிரட்டுவதை மறந்துவிடுங்கள். நாளை அல்லது அடுத்த ஒரு வாரம் உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட விரும்புகிறார்கள் எனபதைக் கேட்டு சமைத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருக்காது. அவர்கள் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை என்றால் அவற்றை விடுமுறை நாட்களில் சமைப்பதாக கூறலாம். இந்த வம்பே வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2 அல்லது 3 உணவு வகைகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெ…
-
- 4 replies
- 1.1k views
-
-
இந்த அதிநவீன வாழ்வியல் முறையில் “நாளை” என்ற நாள் நடுத்தர மனிதனையும், “டார்கெட்” என்ற சொல் உயர்தர மனிதனையும். மன அழுத்தம் என்ற பரிசினை கொடுத்து அலைய வைக்கிறது. மன அழுத்தம் காரணமாக பலருக்கும் பல விதமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மன அழுத்தம் அதிகரிப்பதால் உடற்திறன் குறைவதே இதற்கான காரணம் என கூறப்படுகிறது. மன அழுத்தத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவுகள்!!! விசித்திர மாற்றங்கள் என்றவுடன் பயப்படும் அளவு பெரிதாய் ஏதும் இல்லை. எனினும், அந்நியன் ரேஞ்சில் “இப்படி எல்லாமா நடக்கும்…” என்பது போல உங்கள் உடல்நலத்தில் சில மாற்றங்கள் ஏற்பட தான் செய்கிறது. “அட, போங்கய்யா.. உங்களுக்கு வேற வேலை இல்ல…” என்று நீங்கள் புலம்பினாலும் சரி, திட்டினால…
-
- 0 replies
- 481 views
-
-
நீண்ட ஆயுளையும், உடல்நலத்தையும் பெற நீங்கள் செய்ய வேண்டியவை… வாழ்க்கைமுறை ஆரோக்கியமானதாக இருந்தால் புற்றுநோய், இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் இல்லாமல், ஆயுள் பெண்களுக்கு 10 ஆண்டுகளும், ஆண்களுக்கு ஏழு ஆண்டுகளும் அதிகரிக்கும் என்று உடல்நலம் குறித்த ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும், மது குடிப்பதை மிதமான அளவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும், உடல் எடை ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும், உணவு வகைகள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும், புகைபிடிக்கக் கூடாது என்று பல ஆலோசனைகள் இதில் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 111,000 பேரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வந்தனர…
-
- 0 replies
- 371 views
-
-
[size=1][/size] [size=1]ஆ[/size]ளரவமற்ற அரையிருட்டுச் சந்து. நீங்கள் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறீர் கள். திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது. உங்களுக்குள் பய எச்சரிக்கை மணியை அடித்து, ஓடத் தூண்டியது எது? அதுதான் `அட்ரினல்’ சுரப்பி! சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக் குள் பதுங்கிக் கிடக்கிறது, ஒரு ஜோடி அட்ரினல் சுரப்பி. இந்த முக்கோண வடிவ, ஆரஞ்சு நிறச் சுரப்பிகள் `அட்ரினல்’ (லத்தீன் மொழியில் `அட்’ என்றால் `அருகில்’, `ரீன்ஸ்’ என்றால் சிறுநீரகம்.) அல்ல…
-
- 1 reply
- 6.6k views
-
-
[size=3] [/size] [size=3][size=4]கோடையில் குளு குளுன்னு இருக்க தர்பூசணி சாப்பிடுங்க.. தாகத்தை தீர்க்கும் தர்பூசணி உடலுக்கு ரொம்ப நல்லது. ரொம்ப பசியா உள்ளவர்கள் தர்பூசணி நாலு துண்டு சாப்பிட்டாலும் வயிறு திம்முனு இருக்கும், பசியே எடுக்காது....[/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]தர்பூசணி துண்டுகள் - 4 சர்க்கரை (அ) தேன் - சிறிது மிளகு தூள் - ஒரு சிட்டிகை சுக்கு தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - அரை சிட்டிகை ஐஸ் கியுப்ஸ் - 6[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]நான்கு துண்டு தர்பூசணி எடுத்து கொள்ளவும்.[/size] [size=4]பழத்தை கழுவி, அதில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக அரியவும்.[/size] [size=4]மிக்சியில் ஐஸ் கியுப்ஸ், ச…
-
- 0 replies
- 443 views
-
-
தாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு! மாமிச உணவுகளைக் குறைத்து, தாவர உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் துலானே பல்கலைக்கழக ஆய்வாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ‘நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்புகளை உடலில் கலக்காமல் தடுப்பதில், நமது ஜீரணப் பாதையில் உள்ள பக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அசைவ உணவுகளை உண்பதற்குப் பதில், தாவர உணவுகளை உள்கொள்வதன் மூலம், அந்த பக்டீரியாக்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக, உடலில் கொழுப…
-
- 17 replies
- 1.8k views
-
-
கொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.! 26-03-2020 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! இன்றைய நிலையில் உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் நம் உடலில் எப்படி நுழைகிறது, பாதிப்பை உண்டு செய்கிறது என தெளிவாய் அறிவோம். கடந்த டிசம்பர் 2019ல் தனது நாட்டின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக சீனா வெளியுலகுக்கு முதன் முதலாக தெரிவித்தது. இந்த வைரஸ் Severe acute respiratory syndrome (SARS-2) என்ற வகையை சேர்ந்தது. இந்த வைரஸ் உருவாக்கும் நோய்க்குப் பெயர்தான் கோவிட் -19. …
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-
-
நண்பர்களே, 2021 செப்டம்பர் மாதம் என் வாழ்க்கை ஒரு கணநேரத்தில் தகர்ந்து போனது. ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அன்று ஒரு பயங்கரமான நோயைக் கண்டறிவதாக மாறியது. Acute Lymphoblastic Leukaemia (ALL) எனும் இரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவராகிய நான் உண்மையை அறிந்திருந்தேன்: Donor (தானமளிப்பவர்) ஒருவரிடமிருந்து Stem cell transplant சிகிச்சை இல்லாமல் முழு குணமடைவது கடினம். என் சகோதரரும் குடும்பத்தினரும் உடனடியாக சோதனை செய்து கொண்டனர், ஆனால் யாரும் முழு பொருத்தமாக இல்லை. அதிக அளவு chemotherapy மற்றும் radiotherapy சிகிச்சைகள் பழுதடைந்த என் bone marrow களை முற்றிலுமாக அழித்தே விடும். பிறகு Stem cell சிகிச்சை மூலமாக முழுமையாக குணமடைய முடியும். Stem cells (ஸ்டெம் செ…
-
-
- 5 replies
- 564 views
- 1 follower
-
-
நான் ஒரு ஆங்கில வைத்தியத் துறை சார்ந்தவன் அல்ல எனது தந்தையார் ஒரு ஆயுர் வேத சித்த வைத்தியரே நான் படித்த 4 கட்டுரைகளின் தொகுப்பே இது இதில் இடம் பெறும் விடயங்கள் மிகவும் சிந்திக்க வைக்கிறது. இது வைத்தியத் துறை சார்ந்த எவரதும் மனதைப் புண்படுத்தும் நோக்கமல்ல இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை..! இந்த கட்டுரையை தொகுக்க உதவிய சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்களுக்கு நன்றி. "இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!" என்ற கட்டுரையைப் படித்தேன். இந்த விரிவான விளங்களை அதற்கான விமர்சன கட்டுரை வடிவில் வடிக்கிறேன்... இது உண்மையில் நல்லதொரு உணர்ச்சியைத் தூண்டும் விழிப்பறிவுணர்வு கட்டுரைதான். விழிப்பறிவுணர்வு கட்டுரைகள் எல்லாம் சரியான விழிப்பறிவுணர்வை ஊட்…
-
- 7 replies
- 5.9k views
-
-
தடுப்பூசியைத் தவிர்த்து, கொரோனாவிடம் வீழத் தயாராகிறோமா? மே 11, 2021 –ஆதி வள்ளியப்பன் மனித குல வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இயற்கைச் சீற்றங்கள், போர்கள் உள்ளிட்ட எத்தனையோ ஆபத்துகளை எதிர்கொண்டிருந்தாலும், தொடர்ந்து வாழ்வதற்கான யத்தனங்களை மனித குலம் மேற்கொண்டபடியே இருந்துவந்திருக்கிறது. நோயால் மனித குலம் எத்தனை கோடிப் பேரை இழந்தது என்பதை வரலாற்றின் ஓரிரு பக்கங்களைப் புரட்டினாலேயே தெரிந்துகொள்ளலாம். வட அமெரிக்கா-தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் ஐரோப்பியக் காலனியாதிக்கமும் குடியேற்றமும் நிகழ்ந்தபோது, புதிய தொற்றுநோய்களால் பல கோடி உள்ளூர் இனக்குழுக்கள்/பழங்குடிகள் பலியாகினர். அதற்குப் பிறகு அந்த இனக்குழுக்கள்/பழங்குடிகளின் மக்கள்தொகை ப…
-
- 0 replies
- 357 views
-
-
உடல் இளைத்து இருப்பதுதான் அழகு என்றுதான் பெரும்பாலான பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் சொல்லப்படுகிறது. ஆனால் சத்துக்களை குறைத்து உடலை ஒல்லியாக்குவது தேவையற்றது. அது உடலை பலவீனமாகத்தான் ஆக்கும். உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்…
-
- 0 replies
- 24.4k views
-
-
உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளில் விறைப்பது போல அல்லது உணர்விழந்தது போன்ற உணர்வு ஏற்படுவது புதினமானது அல்ல. கையை எங்காவது இசகு பிசகாக வைத்து தூங்கிக் காலை விழித்து எழுந்தவுடன் அவ்விடம் விறைந்தது போலவும், கூச்சம் போல அல்லது அதிர்வு போலவும் தோன்றுவதை உதாரணம் கூறலாம். ஆனால் இது கைகளில் மட்டும்தான் ஏற்படும் என்றில்லை. கைகளில், கால்களில், விரல்களில் மேல்கைகளில் தொடைப்புறத்தில், தோள் பட்டையில் என உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். விறைப்பு எரிவு வலிகள் உண்டாக காரணங்கள்: ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்;ந்திருக்கும்போது, அதுவும் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும்போது மரப்பதற்கான சாத்தியம் அதிகம். ஆனால் இது தற்காலிகமானது. சிறிது நேரத்தில் குணமாகிவிடு…
-
- 6 replies
- 24.6k views
-