நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா? நம் உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகள் குறித்து தெரியுமா? இந்த அழுத்தப் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இம்மாதிரியான வைத்தியங்கள் சீனாவில் மிகவும் பிரபலமானது. அந்த வகையில் நம் உடலில் கழுத்தின் பின்புற மையத்தில் ஒரு அழுத்தப் புள்ளி உள்ளது. இதனை 'ஃபெங் ஃபூ' என்று அழைப்பர். சொன்னால் நம்பமாட்டீர்கள், அந்த ஃபெங் ஃபூ புள்ளியில் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்தால், உடலினுள் உள்ள ஒருசில பிரச்சனைகள் நீங்கும். அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உங்களால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? அப்படியெனில் ஃபெங்…
-
- 4 replies
- 586 views
- 1 follower
-
-
வீகன் ஆவதனால் உண்மையிலேயே ஆரோக்கியம் மேம்படுமா? பகிர்க Image captionமருத்துவர் கில்ஸ் இயோ கடந்த சில வருடங்களாக இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் வீகனிசம் எனப்படும் விலங்குகளிருந்து பெறப்படும் உணவுகள் மற்றும் மாமிசங்களை அறவே சாப்பிடாமல் இருக்கும் உணவுமுறையை கொண்டவர்களான வீகன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல்நலன், விலங்கு நலன் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை மீதான ஈடுபாட்டின் காரணமாக இறைச்சி, கோழி, மீன் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டைகள், பால் பொருட்களையும் தாங்கள் உண்பதில்லை என்று வீகன்கள் கூறுகின்றனர். சாதாரண உணவுமுறையை மேற்கொள்ளபவர்க…
-
- 0 replies
- 586 views
-
-
மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு தண்ணீர் பெரும் பங்கு வகிக்கிறது. மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு அவசியமாகிறது. இவ்வாறு மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக விளங்கும் தண்ணீர், உடலிலிருந்து அதிகமாக வெளியேறும்போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதிகமாக உடலில் இருந்து நீர் வெளியேறுவதற்கு Dehydration என்று பெயர். நாம் குடிக்கும் தண்ணீர், வியர்வை, சிறுநீர், மலம் போன்றவற்றின் மூலம் வெளியேறுகிறது. ஆனால், தண்ணீர் அதிகமாக வெளியேறும்போது உடல் வறட்சி அடைந்து மரணம் ஏற்பட…
-
- 0 replies
- 586 views
-
-
இங்கே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்த கழுகின் ஆயுள் மற்ற கழுகு இனங்களின் ஆயுளை விட அதிகமாக உள்ளது. இதன் ஆயுள் சுமார் எழுபது ஆண்டுகள். ஆனால் இவ்வளவு நீண்ட ஆயுளைப் பெற அது சில கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டியுள்ளது.நாற்பது வயதுக்கு மேலே இந்த கழுகு இனத்தின் இறகுகள் தமது மென்மைத் தன்மையை இழந்து விட வேகமாக பறப்பது என்பது கழுகிற்கு இயலாத செயலாகி விடுகிறது. கழுகின் அலகுகளும் விரல் நகங்களும் வலுவிழந்து விட தனக்கான இரையை வேட்டையாடுவது கடினமானதாகி விடுகிறது. இப்போது கழுகிற்கு உள்ள பிரச்சினையைத் தீர்க்க இரண்டு வழிகள் உண்டு. முதலாவது இரை கிடைக்காமல் வாழ முடியாமல் மடிந்து போவது. இரண்டாவது தனது வாழ்வைப் புதிப்பித்துக் கொள்ள 150 நாட்கள் கடும் முயற்சி செய்வது. இங்கே இரண்டாவத…
-
- 0 replies
- 586 views
-
-
வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது. குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்.. புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?) சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும். தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம். கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும். 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது. சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது. இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரி…
-
- 0 replies
- 585 views
-
-
தாவரவியல் பெயர்: Centella asiatica அடையாளம்: வல்லாரை தரையோடு படர்ந்து வளரும் செடி வகை. இலைகள் தவளையின் காலை ஒத்திருக்கும். நீர்நிலைகளுக்கு அருகில் இந்தச் செடியை அதிகம் பார்க்கலாம். இனப்பெருக்கம்: கிளைகளைக் கொண்டு இதை இனப்பெருக்கம் செய்யலாம். ஒரு வாரத்தில் புதிய கிளைகள் துளிர்த்துவிடும். வரலாற்றில்: ஆசிய நாடுகளின் நீர்நிலைப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. ஆயுர்வேதம், ஆப்பிரிக்க, சீனப் பாரம்பரிய மருத்துவங் களில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைமருத்துவம்: இலங்கை சமையலில் சோறு குழம்புடன் சேர்த்து வல்லாரை சாப்பிடப்படுகிறது. அரைக்கப்பட்டுப் பானமாகவும் அருந்தப்படுகிறது. தெற்காசியச் சமையலில் சாலட், பானங்கள் செய்வதற்குப் புகழ்பெற்றது. இதில் உ…
-
- 0 replies
- 585 views
-
-
வாழைப்பழங்களில் ஒரு வகையான செவ்வாழை எண்ணற்ற சத்துக்களும், சுவைப்பதற்கு சுவையாகவும் இருக்கும். வாழைப்பழங்களில் பல வகை உண்டு, சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கின்றன. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது, இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. செவ்வாழையின் மருத்துவ குணங்கள் நரம்பு தளர்ச்சி குணமடையும் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை பேறு தரும் குழந்தை இல…
-
- 0 replies
- 584 views
-
-
கொரோனா – இன்னொரு பிணி நுண்ணி லதா குப்பா மார்ச் 9, 2020 லதா குப்பா டிசம்பர் மாத துவக்கத்தில் சீனாவின் ஒரு நகரத்தில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று, அடுத்தடுத்த நாள்களில் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளினால் சர்வதேச கவனம் பெற்றது. கொஞ்சம் தாமதமாக விழித்துக் கொண்ட சீன அரசு தங்களுடைய தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்குள் நோய்த்தொற்று மாகாணமெங்கும் பரவி இருந்தது. ”COVID-19” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையைச் சீன அரசு மறைத்துவிட்டதாக எழும்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் இதன் தீவிரத்தை உணர்த்தும். மனிதர்களிடையே பரவும் இந்தத் தொற்று நோயின் தீவிரம் கருதிப் “பொது சுகாதார அவசரநிலை”யாக உலக சுகாதா…
-
- 0 replies
- 584 views
-
-
எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டுள்ள சோளம் மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு உதவுகிறது. சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம்(Genus) ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டா கரோட்டீன், புற்றுநோயை தடுக்கும் பெருலிக் அமிலமும் அடங்கியுள்ளது. சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன் செயல்பட வைக்கும் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளன. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்…
-
- 0 replies
- 584 views
-
-
ஆறுமணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரை பார்க்கிறீர்களா? கண்ணீர் சுரப்பி பத்திரம்..! வேலைமேல் கவனம் குவிந்து போய் இருக்கும் நேரத்தில் வேறெதுவும் நம் நினைவுக்கு வராது. கண்கள் கணினி திரையின்மீது பதிந்திருக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும். இமைக்காமல் உற்றுப் பார்த்து, சாப்பாட்டைக்கூட மறந்து, இருந்த இடத்தை விட்டு எழும்பாமல் போராடி கொண்டிருப்போம். வேலை முடியட்டும்; மேலாளர் பாராட்டட்டும்; சம்பள உயர்வு கிடைக்கட்டும். ஆனால், உடல்நலம்? நாள்தோறும் ஆறு மணி நேரத்துக்குமேல் கணினிதிரையை பார்த்தபடி, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை செய்யும் மென்பொருள் துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டது. 22 முதல் 40 வயது வரையிலான அவர்…
-
- 0 replies
- 584 views
-
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பக்கவாட்டில் உறங்குவது ஒருவருக்கு எளிதாக இருந்தால், அவருக்கு அருகில் உறங்க முயற்சிப்பவருக்கும் இது வசதியாக இருக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், கிளாடியா ஹம்மண்ட் பதவி, பிபிசி ஃபியூச்சர் 15 ஆகஸ்ட் 2023 சமீபத்திய வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்ட எந்த இடத்திலும் நீங்கள் வசிக்கின்றீர்கள் என்றால், உங்கள் இரவுகளை சுகமானதாக மாற்றும் நோக்கில், வெவ்வேறு உறக்க நிலைகளை நீங்கள் முயற்சித்திருக்கலாம். ஆனால், உண்மையில் மனிதர்களுக்கு எந்த தூக்க நிலைகள் சிறந்தவை என்பது குறித்து ஆய்வு முடிவுகள் என்ன கூறுகின்றன? சரக்கு கப்பல்களில் பயணிப…
-
- 0 replies
- 583 views
- 1 follower
-
-
நீரிழிவு, மற்றும் உடற்பருமன் நோய்களைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் இருப்பதாக பச்சை, மஞ்சள், மற்றும் சிகப்பு குடைமிளகாயை அடையாளம் கண்டுள்ளது புதிய ஆய்வு ஒன்று. வாழ்க்கை முறை காரணிகளால் தற்போது மருத்துவ நிபுணர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்வது ‘நீரிழிவுடற்பருமன்’(Diabesity). இந்த புதிய ஆய்வில் உணவுப் பழக்கமுறைகளினால் உடற்பருமன், நீரிழிவு நோய்களை திறம்பட நிர்வகிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது . சி.எஸ்.ஐ.ஆர்.-ல் உள்ள ஆய்வாளர்கள் பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு குடைமிளகாய்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அதில் அதி நீரிழிவு மற்றும் அதி உடற்பருமனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பதைக் கண்டுள்ளனர். பொதுவாக குடல்சுவரில் காணப்படும் ஆல்பா-குளூக்கோசிடேஸ் என்ற சுரப்பியே கார்போ…
-
- 0 replies
- 583 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் விருதுநகரில் எச்…
-
- 0 replies
- 582 views
-
-
-
- 0 replies
- 582 views
-
-
மனிதன் ஒரு பாலூட்டி குரங்கு வகையை சார்ந்தவன்...அதனால் மனிதனால் பிற விலங்கினங்களின் பால்களை(மாடு, ஆடு, எருமை) இன்னமும் முழுமையாக ஜீரணிக்க பழகவில்லை... இந்தியாவில் மட்டும் 10 இலட்ச மக்களால் பிற விலங்குகள் பாலை ஜீரணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்...மேலும் பலருக்கு வயது கூட கூட பால் ஒரு செரிக்க முடியாத உணவாகவே மாறி விடுகிறது... காரணம் பல பாலூட்டிகள் போல நம்மால் வயது கூடியவுடன் பாலிலுள்ள 'லேக்டோஸ்' (Lactose) எனப்படும் பால்சர்க்கரையை செருமிக்க முடியாது... மதங்கள் பெரும்பாலும் பாலை தெய்வத்தின் அருட்கொடையாக மக்களுக்கு போலியாக காட்ட முனைந்தாலும் அறிவியல் மனிதனும் பரிணாமத்திலிருந்து வந்த ஒரு விலங்கினம் என்ற உண்மையான வரலாற்றை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறது... ஆக வயது க…
-
- 0 replies
- 582 views
-
-
கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும். ‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும…
-
- 1 reply
- 582 views
-
-
இது தாங்க எங்களுக்கு சோலியே! (நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - பகுதி 3) வேளாவேளைக்கு சாப்பிடுவது என்று சொல்லுவார்கள். இது ஒரு வாழ்க்கை முறை என்றால் தோணும் போது தோணுகிற மாதிரி சாப்பிடுவது இன்னொரு வாழ்க்கை முறை. ஊரில் என்னுடைய அண்டை வீட்டில் ஒரு வயதான தம்பதி. நான் அவர்களுடைய தினசரி நடைமுறையை என் ஜன்னலில் இருந்தே கவனிப்பேன். காலை ஆறுமணி என ஒன்று உண்டெனில் சரியாக அப்போது அவர்கள் இருவரும் சுடச்சுட காபி குடிப்பார்கள். இரண்டு மணிநேரம் கழித்து எட்டு மணிக்கு காலை உணவு, பத்து மணி சத்துமாவுக் கஞ்சி அல்லது ஏதாவது ஒரு சிற்றுண்டி. பன்னிரெண்டரைக்குள் மதிய உணவு சோறு, கூட்டு, பொரியல் சகிதம், மூன்று மணிக்கு தேநீரும் நொறுக்குத்தீனியும், ஐந்தரை ம…
-
- 0 replies
- 581 views
- 1 follower
-
-
பால் கலக்காத தேநீர், அதாவது பிளாக் டீ, அருந்துபவர்களுக்கு டைப்- 2 வகை நீரிழிவு நோய் வர சாத்தியங்கள் குறைவு என்கிறது புதிய ஆய்வு ஒன்று. டெய்லி டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள ஆய்வுச் செய்திகளின் படி 50 நாடுகளில் மக்கள் அதிகம் பால் கலக்காத பிளாக் டீயை அருந்துகின்றனர். இந்த நாடுகளில் சர்க்கரை நோய் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பிற நாட்டைக் காட்டிலும் குறைவாக்வே உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தேநீர் அதிகம் எடுத்துக் கொள்வது உடல் பருமனுக்கு எதிராகவும் வேலை செய்வதாக ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டுபிடிப்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். கிரீன் டீயை பிளாக் டீயாக மாற்றும் புளிக்கவைக்கும் நடைமுறையினால் இயற…
-
- 0 replies
- 581 views
-
-
கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக்கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும். கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம். கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நா…
-
- 0 replies
- 579 views
-
-
அதிகமாக டி.வி., பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறந்து விடுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டிவி மட்டும் விதிவிலக்கல்ல. பொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டிவி, உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. டிவி மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் டிவி பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் …
-
- 4 replies
- 579 views
-
-
[size=4]உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால், உணவிலிருந்து சக்தியை எடுக்க முடியாமல் ஏற்படுவதே நீரிழிவு நோய்.[/size] [size=4]இதை குணப்படுத்தும் இன்சுலின் மருந்தை, சார்லஜ் ஹெர்பர்ட் பெஸ்ட் என்பவருடன் இணைந்து கண்டுபிடித்த கனடாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் பிரெட்ரிக் பேண்டிங்கை கவுரப்படுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான நவ., 14, உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அறிவித்தது. 2009 - 2013 வரை, டயபெட்ஸ் கல்வி மற்றும் தடுப்பது என்பது மையக்கருத்தாக உள்ளது.[/size] [size=4]2 வகை: [/size] [size=4]நீரிழிவு நோயில், இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது முதல் வக…
-
- 0 replies
- 579 views
-
-
-
- 0 replies
- 579 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டெல்லியில் போக்குவரத்து காவலர் ஒருவர் காற்று மாசுபாட்டில் இருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிந்துள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், ஒனூர் எரம் பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நம்மை கொல்லும் ஒரு ஆபத்து சத்தமில்லாமல் தெருக்களில் உலாவிக்கொண்டிருக்கிறது. அதை நம்மால் பிடிக்க முடியாது. அதிலிருந்து நாம் ஒளிந்துகொள்ள பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நாற்பது லட்சம் இறப்புகளை ஏற்படுத்தும் மற்றும் உலக மக்கள்தொகையில் 99 சதவிகிதத்தினரை பாதிக்கும் காற்று மாசுபாடு ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாசுபடுத்திகளா…
-
- 0 replies
- 578 views
- 1 follower
-
-
இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர்பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? முதல் பத்து நிமிடம்: நமது இரத்த மண்டலத்தில் பத்து தேக்கரண்டி அளவிலான சர்க்கரை ஒரே நேரத்தில் பாய்கிறது. (இது ஒருநாள் முழுவதும் ஒரு மனிதர் உட்கொள்ளக் கூடிய அதிகபட்ச சர்க்கரையின் அளவாகும்) இதன்விளைவாக, உங்களுக்கு வாந்தி வரக்கூடும். ஆனால், கோக்க கோலாவில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ இந்த குமட்டல் அறிகுறியை அடக்கி விடுகிறது. இருபதாவது நிமிடம்: உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக கூடுகிறது. இதன் விள…
-
- 0 replies
- 578 views
-