நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும்.வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது. சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில்தான் இருக்கிறது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது. மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.இதனால்தானோ என்னவோ எளிமையாக வாழ்ந்த காந்திஜி தேவையான அளவு உடலுக்கும், மனதிற்கும் சக்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஏழைகளின் ஆப்பிள்! மருத்துவ உலகில் நீண்ட நெடுங்காலமாக ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. நரை, திரை, மூப்பு, மரணம் இவற்றைத் தள்ளிப்போட்டு நீண்ட காம் ஆரோக்கியமாக வாழும் வழி என்ன? என்பதே அந்த ஆராய்ச்சியின் நோக்கம். தமிழ்நாட்டுச் சித்தர்கள் சுருக்கமாக இந்த ஆராய்ச்சியை காயகல்ப ஆராய்ச்சி என்றனர். காயம் என்றால் உடம்பு; கல்பம் என்றால் உடம்பைக் கல் போன்று இறுக வைத்து நீண்ட காலம் வாழவைத்தல். ஆக, காயகல்பம் என்றால் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் என்று அர்த்தம். இந்த காயகல்ப ஆராய்ச்சிக்குப் பிள்ளையார்சுழி போட்டவர்கள் நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் 2500 ஆண்டுகட்கு முன்பே குமரிகண்டத்தில் வாழ்ந்த அறிவர் என்ற சித்தர்கள் (சித் என்றால் அறிவு: சித்தர் என்றால் அறிவர்) 108 …
-
- 5 replies
- 1.5k views
-
-
காய்ச்சல், தலைவலி ரேஞ்சுக்கு மக்களுக்கு அறிமுகமான ஒரு உடல்நலப் பிரச்சினை சைனஸ். லேசாக ஜலதோஷம் பிடித்து மூக்கில் சளி ஒழுகிக் கொண்டிருந்தாலே டாக்டர்... எனக்கு சைனஸ் பிரச்சினை...!' என்று தீர்மானமான முடிவோடு வந்துவிடுகிறார்கள். அந்தளவுக்கு நம் மக்களின் சிந்தனையில் ஐக்கியமாகி விட்ட ஒரு வார்த்தை சைனஸ். பெரும்பாலான மக்கள் நினைப்பது போல எல்லா ஜலதோஷமும் சைனஸ் ஆகிவிடாது. சைனசுக்கு ஜலதோஷம் தான் வித்திடுகிறது. ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம் தான் சைனஸ் என்றாலும் கூட இரண்டுக்கும் இடையே தெளிவான ஒரு எல்லைக்கோடு இருக்கிறது. ஜலதோஷம் என்பது மூன்று நாளிலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வாரத்திலோ குணம் அடைந்து விடக்கூடிய விஷயம். இந்த குறிப்பிட்ட காலம் கடந்தும் அது குணமாகவி…
-
- 0 replies
- 3k views
-
-
ஆரோக்கியத்தைத் தரும் முருங்கை!! முருங்கைக் காய் உடலுக்கு சிறந்த, ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதன் கீரை மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட முருங்கையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். இது பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது. இது உடலின் பல விதமான நோய்களைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது. முருங்கையின் நன்மைகள் : 1. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரியலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி…
-
- 1 reply
- 657 views
-
-
மனித வாழ்வை திசைமாற்றும் ஆரோக்கியமின்மை வீட்டிற்கு அஸ்திவாரம் போல், மனிதனுக்கு ஆரோக்கியம் முக்கியமானது. அந்த ஆரோக்கியத்தை வழங்குவது அவன் சாப்பிடும் உணவு. மனிதனுக்கு தேவைப்படும் ஆரோக்கியமான உணவை, குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாக வழங்கிவரவேண்டும். பிறந்த குழந்தைக்கு மிகச் சிறந்த உணவான தாய்ப்பாலை ஒரு வருடம் வரை கொடுப்பது அவசியம். அதன் மூலம் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு கிடைக்கும். தாய்ப்பால் போதுமான அளவில் இல்லை என்றால், பசும்பால் கொடுக்கவேண்டும். அரைத்த பாதம்தூளை கால் தேக்கரண்டி எடுத்து பாலில் கரைத்து குழந்தைகளின் எடைக்கு பொருந்தும் அளவில் மருத்துவர் ஆலோசனைப்படி கொடுத்துவந்தால் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் உயரமாக வளர்வார்கள். ஐந்தாவது மாதத்…
-
- 0 replies
- 354 views
-
-
கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது.இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இதன் மருத்துவ குணங்களுக்கு அடி…
-
- 0 replies
- 1.1k views
-
-
CT ஸ்கான் என்று அழைக்கப்படும்.. computerised tomography ஸ்கான்.. இளம் பராயம் தொடக்கம் அடிக்கடி செய்யப்பட்டு வந்தால்.. மூளை மற்றும் இரத்தப் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பை அது அதிகரிக்கச் செய்வதாக... பிரித்தானிய நியூகார்சில் பல்கலைக்கழக ஆய்வொன்றில் இருந்து தெரிய வந்துள்ளது. உடலில் ஏற்படும் உள்ளக காயங்கள்.. மற்றும் உள்ளக நோய் தொற்றுக்களை அறிய CT ஸ்கான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வின் பரிந்துரையின் பிரகாரம்.. CT ஸ்கான் இயக்கத்தின் போது பாவிக்கப்படும் கதிரியக்கம் ஆபத்தான அளவை விட மிகக் குறைவாக தேவைக்கு ஏற்ப பாவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அடிக்கடி CT ஸ்கானை பாவிப்பதை தவிர்ப்பதும் நன்றென கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் இது தொடர…
-
- 1 reply
- 422 views
-
-
இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்றுபோவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி உயிரைப் பலிவாங்கிவிடும்.தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் …
-
- 18 replies
- 23.5k views
-
-
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம...்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும ். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன்சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள …
-
- 5 replies
- 1k views
-
-
''தண்ணிப்பால்தான் நல்ல பால்!'' சூரியன் இல்லாமல்கூட ஒரு நாள் நமக்கு விடிந்துவிடும். பால் இல்லாமல்? காபி, டீ, தயிர், மோர்... ஏதாவது ஒரு வடிவில் பாலை நாம் எல்லோருமே ஒவ்வொரு நாளும் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், பாலை எப்படிக் குடிக்க வேண்டும்; எப்போது சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? பாலில் என்ன இருக்கிறது? பால் தண்ணியாக இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். பால் தண்ணீரைப் போல இல்லாவிட்டால்தான் அதன் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டும். ஏனெனில், பாலில் 87 சதவிகிதம் தண்ணீர்தான் இருக்கிறது; 13 சதவிகிதம்தான் இதர வேதிப்பொருட்கள். இதில் நான்கு சதவிகிதம் கொழுப்பு; ஒன்பது சதவிகிதம் புரதம், லாக்டோஸ், தாது உப்புக்கள், வைட்டமின்கள். இந்த நிலையில் உள்ள பால்…
-
- 4 replies
- 814 views
-
-
தலைவலி, முதுகுவலி மாதிரி பரவலாக பலரையும் தாக்கக்கூடிய ஒரு பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது கிட்னி ஸ்டோன் எனப்படுகிற சிறுநீரகக்கல். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சிறுநீரகக் கல் பாதிப்பின் பின்னணி, அறிகுறிகள், சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தன். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே சிறுநீர் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆ…
-
- 0 replies
- 589 views
-
-
பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. பாசிப்பயறில் உள்ள சத்துக்கள் 7 இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கரு…
-
- 1 reply
- 605 views
-
-
பாட்டி வைத்தியம் - நரை முடி அகல முருங்கைக் கீரை சாதாரணமாக வீடுகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும்.முடி நீண்டுவளரும். நரை முடி அகலும்.தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிய…
-
- 1 reply
- 3.4k views
-
-
பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர். பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். தோட்டங்களிலும் சாகுபடி செய்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. அகத்தியர் பெருமான் குணபாடத்தில் எட்டு வகை வாழையைப் பற்றியும் அதன் குணங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். முன்னோர்கள் பொதுவாக வாழையை பெ…
-
- 4 replies
- 941 views
-
-
உலகில் மிக கொடிய நோயான புற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் சிறந்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும் வரையறுக்கப்பட்ட நடத்தைகள் மூலமும், இயற்கை மூலிகைகளின் உதவியுடனும் இந்நோயை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சோயா பீன்ஸில் இருந்து உருவாக்கப்படும் இயற்கை மருந்தானது பொதுவான புற்று நோய்களுக்கு(மார்புப் புற்றுநோய், குடல், சிறுநீர்ப்பை, ஈரல், நுரையீரல், லிம்போமா மற்றும் வாய் புற்றுநோய் போன்றனவற்றிற்கு) நிவாரணமளிக்கவல்லது என மிசூரி பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 747 views
-
-
இப்போது, கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் என்ற புதிய பிரச்னை வந்துள்ளது. அதாவது, கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு கண்கள் உலரும் பிரச்னை வரலாம். ஒரு நிமிடத்தில் 16 முதல் 18 முறை கண் சிமிட்ட வேண்டும். கணினியையே பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு கண் சிமிட்டுதல் அளவு அவர்களை அறியாமலேயே குறைந்துவிடுகிறது. உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் ரத்தம் வழியாகத்தான் ஆக்சிஜன் செல்கிறது. ஆனால், ...கருவிழிக்கு ரத்த விநியோகம் கிடையாது. கண்கள் இந்தக் கண்ணீரில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கின்றன. கணினியைப் பார்க்கும்போது, கண்ணீர் அளவு குறைந்து, உலர்ந்துபோகிறது. கருவிழிக்கு செல்லும் ஆக்சிஜன் குறைகிறது, இதனால் எரிச்சல், மணல் போட்டு அறுப்பது போன்ற வலி இருக்கும். கண்ணில் தண்ணீர் வழிந்துகொண்…
-
- 0 replies
- 436 views
-
-
நாம் சந்திக்கும் மனிதர்களில் பலர் பிறர் பேசும்போது அடிக்கடி மறுபடியும் சொல்லுமாறு கேட்பதை, தொலைபேசியில் பேசும்போது சிரமப்படுவதை, ரேடியோ அல்லது டி.வி. உரையாடலை கேட்பதில் கஷ்டப்படுவதை, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். உரையாடலை கேட்டுக் கொள்வதை அல்லது வார்த்தைகளை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டால் அது காது கேளாமையின் ஓர் அடையாளமே! காது கேளாமை குறித்தும் அதற்கு உள்ள தீர்வுகள் குறித்தும் சீமன்ஸ் காது மிஷின்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள ராஜ் ஹியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜகோபால் கூறிய சில தகவல்கள்... ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால் அதுவே காது கேளாமையாகும். காது பிரச்சினையை அறிதலே அதை சரி செய்ய நாம் எடுக…
-
- 1 reply
- 1.3k views
-
-
சீனா மற்றும் ஜப்பான் நாடுகளைத் தொடர்ந்து, தற்போது ரஷ்யாவிலும் மசாஜ் கலாச்சாரம் மிக அதிகமாக அதிகரித்து விட்டது. மசாஜ் செய்வதற்கு எந்தப் பொருளைப் பயன்படுத்துவது என்பதில் தான் இந்நாடுகளிடையே தற்போது போட்டி நிகழ்கிறது. பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, சிறிய உயிரினங்களையும், மசாஜ் செய்வதற்கு பயன்படுத்த துவங்கியிருக்கின்றனர். அதிலும், ரஷ்யாவில் ஒரு படி மேலே போய், சிறிய அளவிலான நத்தைகளை முகத்தில் விட்டு மசாஜ் செய்கின்றனர். ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில் இதற்கென்ற பிரத்யேகமான “நத்தை மசாஜ் கிளப்” உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர். இது குறித்து மசாஜ் கிளப் உரிமையாளர் கூறுகையில்…
-
- 14 replies
- 1.2k views
-
-
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறைய பேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப் போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்: 1. தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும். 2. எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். 3. வேக வைத…
-
- 15 replies
- 1k views
-
-
வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும். * இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். * வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். * பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வை…
-
- 28 replies
- 6.2k views
-
-
இயற்கையின் படைப்பில் மலர்கள் மகரந்த சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டவை. இந்த மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. பூக்கள், காயாகி, கனியாகி அதனை மக்கள் உண்பதற்கு இயற்கை கொடுக்கிறது. கனியாக மாறும் வரை காத்திருக்காமல் பூக்களை சாப்பிட்டாலே அதற்குறிய அத்தனை குணங்களும் கிடைக்கும். காதுகளைக் காக்கும் மகிழம் மகிழம் பூவின் நறுமணம் மணம் மயக்கும். இது மற்றப் பூக்களைவிட சற்றே வித்தியாசமானது. காதுகளில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து சற்று நேரம் குளிர வைத்து அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். தலைவலி நீங்கும் அகத்திக்கு சிறந்த மருத்துவ குணங்கள் இருப்பது போல அகத்திப் பூவிற்கும் உண்டு. அகத்த…
-
- 3 replies
- 2.1k views
-
-
ரொம்ப நாளா அங்கு அடிப்பட்டு இப்போ புதுசான பழம்தான் இந்த மங்குஸ்தான் (தீன்) பழம். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது. மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வல…
-
- 0 replies
- 422 views
-
-
இந்த வெந்நீர் குளியல் மாதவிலக்கு பிசச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும் எளிமையான முறையில் தீர்க்கிறது. டீன் ஏஜ் பெண்களாகட்டும்... நடுத்தர வயதுப் பெண்களாகட்டும்.. வயது வித்தியாசமில்லாமல் பல பெண்களையும் தொல்லைபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் மாதவிலக்கு பிரச்னை! அதிலும் சில பெண்களுக்கு அந்த மூன்று நாட்களின் போது இடுப்பும் வயிறும் அப்படியே விட்டுப் போவது போல் வலிக்கும். பல பெண்கள் துடித்துப் போவார்கள். இதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள். இந்த மாத்திரைகள் வலியைக் குறைத்து வேறுபல புதிய நோய்களை நமக்குத் தந்து கொண்டிருக்கும். இந்த இடுப்புக் குளியல், மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளைச் சரி செய்கிறது. அது மட்டுமல்ல, பெண…
-
- 0 replies
- 490 views
-
-
சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது? சோப் என்பது அழகை அதிகரிக்க உதவும் சாதனமாக இன்றைக்கு விளம்பரப்படுத்தப்படுகிறது. சந்தையில் தினந்தோறும் புதிது புதிதாய் சோப்புகள் குவிகின்றன. இதில் எந்த சோப் நல்ல சோப் என தேர்வு செய்வதில் குழம்பித்தான் போகின்றனர் அனைவரும். சிலர் ‘பேபி சோப் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ வாசனையான சோப்பே சிறந்தது என்கிறார்கள். உண்மையில் எதுதான் நல்ல சோப் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள். பண்டைய காலங்களில் சோப் என்பது பயன்படுத்தப்படவில்லை. இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே தேய்த்து குளித்து வந்தனர். பின்னர் சிகைக்காய் அறிமுகமானது. மெல்ல சோப் என்ற பொருள் அழுக்கும் நீக்கும் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டது…
-
- 48 replies
- 45.4k views
-
-
புகப் பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங் கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை பட்டியல் இட்டிருக்கிறேன்! முடி :நிற மாற்றம் மூளை :பாரிசவாதம் புகைத்தலுக்கு அடிமையான நிலை கண் :பார்வைக் குறைபாடுCataracts மூக்கு :மன நுகர்ச்சித் தன்மை குறைதல் தோல் :தோல் சுருக்கம்வயது முதிர்ந்த தோற்றம் பல் :நிற மாற்றம் பதிவுகள் பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (gingivitis) வாய் மற்றும் தொண்டை :உதடு மற்றும் தொண்டை புற்று நோய் உணவுப் பாதை புற்று நோய் சுவை நுகர்ச்சி குறைதல்கெட்ட வாசனை கை :ரத்த ஓட்டம் குறைதல் நிக்கேட்டின் படிவுகள் சுவாசப் பை :சுவாசப் பை புற்று நோய் நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD) சுவாசப் பைத் தொற்று(நியுமோனியா) கச ரோகம் (டப்)ஆஸ்துமா இதயம்…
-
- 2 replies
- 769 views
-