யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
vanakkam nanparkale ungalai santhippathil santhosam. Eppadi thamilil Ezhuthuvathu
-
- 35 replies
- 3.9k views
-
-
-
ஈழ்த்தமிழன், கனடாவில் வாழ்கின்றேன். ஒரு பாடல் கூகுளில் தேடும் போது நடாவின் "பாடல் கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும் பதிவினைக்கண்டு ஒரு பாடல் கேட்பதற்க்காக களத்தில் இணைந்துள்ளேன், பாடல் மட்டுமல்ல அவ்வப்போது மற்றைய தலைப்புகளிலும் பதிய முயற்சிக்கின்றேன். பிடித்தவை: சினிமா அரசியல் கிரிக்கட் வாசிப்பு (இலக்கியம் தவிர்ந்த அனைத்தும்) வரவேற்ப்பீர்கள் என நினக்கின்றேன்
-
- 35 replies
- 3.7k views
- 1 follower
-
-
நான் புதிதாக இணைந்துள்ள வாசகி. யாழ் இணையத்தள அன்பர்களுக்கு எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள். விஜிவெங்கி
-
- 35 replies
- 4.6k views
-
-
9 - 10 வருடங்களின் முன் யாழ் களத்தை அறிந்து கொண்டேன். இணைய வேண்டும்> கருத்துக்களை பகிர வேண்டும் என்ற எண்ணம் தற்போதுதான் உதித்தது.
-
- 35 replies
- 3.3k views
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். யேர்மனியின் சில பகுதிகளை வெள்ளம் பிரட்டிப்போட்டுவிட்டது. வருத்தத்திற்குரிய விடயம். கொரோனா தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டுவர இந்தத் துயரம். இயற்கையை வதைத்த மனிதனை இயற்கை பல்வேறு வழிகளில் வதைக்கிறது என்பதே எனது எண்ணம். அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 35 replies
- 3.2k views
- 1 follower
-
-
வணக்கம் "என்னைப்பற்றி சிறு அறிமுகம்" நான் ஈழத்தில் யாழ்ப்பாணம். இப்போ யாழ்களத்தில்! நான் யாழுக்கு புதியவன் அல்ல. தூர இருந்தே இங்கு நடப்பதை அவதானித்தவன். உங்களுடன் எனது கருத்துகளையும் பகிர்வோம் எனும் நப்பாசையில் வந்துள்ளேன். இந்த "முட்டாள்"லையும் உங்களில் ஒருவனாக ஏற்பீர்களா?
-
- 35 replies
- 4.2k views
-
-
வணக்கம் என் யாழ் சிவதொண்ட ரசிகப்பெருமக்களே! நாம் ஊருரோடு சேர்ந்து கோவிலுக்கு போகின்றோம். சனம் இடிபடுவதினையும் பார்க்கின்றோம். விபூதியினை அள்ளி உடலெங்கும் பூசி சிவ சிவாய நம் என்று வேறு செய்வதனையும் பார்க்கின்றோம். சுவாமியையும், அம்மனையும், முருகனையும், பிள்ளையாரையும் தரிசித்துவிட்டு ஐயர்மாரிடம் சலுகை வேறு காட்டி கியூவினில் நிற்காது, பணவலிமையால் பிரசாதம் வேறு வாங்கிக் கொண்டு விட்டு கச்சான், கடலை வாங்கி சாப்பிட அல்லது ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட ஓடிவிடுகிறோம் இல்லையா? ஆனால் அந்த கோவிலில் சுற்றி வரும் போது காணும் சிலையுருவங்களும், அதன் அடி பற்றியிருக்கும் அறுபத்து மூன்று நாயன்ன்மார்களினதும் உருவச்சிலைகளினை கண்ணில் ஏறெடுத்து பார்ப்பதேயில்லை என்ற உண்மையையும் உணரவேண்டும் இல்…
-
- 34 replies
- 4.5k views
-
-
அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் இன்றுமுதல் உங்|களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அன்புடன் ஊர்க்குருவி
-
- 34 replies
- 4.9k views
-
-
இது எனது அறிமுகம்,முதன் முறையாக தமிழில் எழுதுகின்றேன்.அனைவராலும் வாசிக்கக்கூடியதாக உள்ளதா என சொல்லவும்.நன்றி
-
- 34 replies
- 4k views
-
-
வணக்கம் யாழ் உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்கலாமோ??
-
- 34 replies
- 4.5k views
-
-
புதுமுக அறிமுகம் ! அனைவருடனும் உறவாடி கொள்வதில் மகிழ்ச்சி தமிழிழ் மாற்றப்பட்டுள்ளது-யாழ்பிரியா
-
- 34 replies
- 4.1k views
-
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு அன்பு கலந்த வணக்கம்.! உறவுகளை இணைக்கும் இக் களத்திலே பல நாட்களாக கருத்துகளைப் பகிர வேண்டும் என்ற ஆசை இருந்தது.ஆனாலும் நேரப் பற்றாகுறைதான் முட்டுக்கட்டை போட்டிருந்தது.(அதற்காக இப்பொழுது முழு நேர ஒய்வாளன் என்று தயவு செய்து கருத வேண்டாம்). களத்திளே சூடான விவாதங்கள் பகிரபடும்பொழுது எழுதுவதற்கு ஆவல் பொங்கும்.அந்த அடிப்படையிலே எம்மவர்களோடு இணைவதற்கு தயாராக வரும் இந்த வேளையில் எம் உறவுகளும் என்னை சக உறுப்பினராக ஏற்று கொள்ளுங்கள்.நன்றி.
-
- 34 replies
- 3.6k views
-
-
வணக்கம் என் பெயர் வெ.கோகிலநாதன். இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் என்பது என் அவா. அது நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் ஒரு உறுப்பினராக நுழைந்துள்ளேன். என்னை நீங்கள் தான் உட்சாகப்படுத்தி என் பணியை ஆரம்பிக்க உறுதுணையாக இருக்கவேண்டும். நன்றிகள்.
-
- 34 replies
- 3k views
-
-
என்னையும் உங்களில ஒருத்தனா சோத்துக்கொள்ளுங்கோவனப்பா.... என்னடாப்பா பழக்கவழக்கமுது, வேலீக்கால பாஞ்சு ஓடேக்கையும் உந்த முள்ளுக்கம்பிகளை கொஞ்சம் தூக்கிப்பிடிச்சு கண்டாரத்துக்குள்ளால கம்பி கீறாம ஓட உதவி செய்யுங்கோவேண்டாப்பா..... அதுதான் உந்த யாழ் எண்ட இணைய வேலிக்குள்ளுக்குள்ள இருக்குற பயனர்கள் எண்ட முள்ளுக்கம்பிதாண்டாப்பா.... காவோல போட்டு குளவிக்கூட்ட கொழுத்துறாங்கள், அதுல மாட்டின மனுசனா நானும் சிக்கித் தவிச்சு, பிரச்சனைகளையும் போட்டிகளையும், கடிகளையும் குளவிகள் கொட்டுற வேதனையிலயும் ஓட உந்த யாழில ஆதரவு தாங்கோடாப்பா..... என்னடாப்பா எண்டு பொடியங்களை மட்டும் இழுத்து தன்பக்கம் போடுறான் எண்டு கொடிய விசத் தேள்கள் பொம்பிளையள் எல்லாம் செர்ந்து கடிச்சுக் கொண்டுபோடுவீனம் எண்ட பயத்தி…
-
- 34 replies
- 3.7k views
- 1 follower
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே தமிழர் திருநாளில் உங்களுடன் அறிமுகமாகின்றேன். யாழ் களத்தின் அருமையான கருத்தாடல்களில் ஈர்க்கப்பட்டு எனது கருத்துக்களையும் உங்களுடன் பகிரும் ஆவலில் இணைந்துள்ளேன். என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்பீர்கள் எனும் நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன். நன்றி. செந்தமிழாழன்
-
- 34 replies
- 2.9k views
-
-
-
பெரியோர்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தைக் தெரிவித்துக்கொள்கின்றேன். என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். நான் யேற்மனியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு இருபது வயது ஈழத்துப் பெண்மணி. யாழ் மூலமாக உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இப்படிக்கு பெண்புலி (TigRess)
-
- 33 replies
- 3.5k views
-
-
களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?
-
- 33 replies
- 3.9k views
-
-
அன்புள்ளம் கொண்டோரே..! நலம்தானே..? என் பெயர் ராஜா... ஊர் திருச்சி.. என்னையும் உங்கள் உறவாக ஏற்பீர்கள் தானே..?..?[si]
-
- 33 replies
- 4.2k views
-
-
எனது அன்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம். அமெரிக்காவின் Massachusetts மாநிலத்திலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு, இப்போது மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணல் துணை அமைச்சராகப் பணியாற்றுகிறேன். யாழ் இணையதளத்தின் ஊடாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சுபா சுந்தரலிங்கம் www.tgte.org
-
- 33 replies
- 2k views
-
-
வணக்கம் அன்பு நெஞ்சங்களே... உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனக்கும் ஒரு இடம் தாங்கோவன் நானும் கொஞ்சம் குந்தி இருக்க... காலம் கெட்டுக் கிடக்குது யாழ் பங்கர் உள்ள இருந்தா பாதுகாப்பும் தானே,,,, வெளி நடப்பும் தெரியும்... நல்ல நண்பர் என்னும் வைத்தியர்கள் இருக்கின்ற போது காயம் பட்டாலும் கவலை இல்லை... அன்பு என்னும் மருந்து ஏத்துவியல் தானே? அப்ப நானும் ஒரு வைத்தியர் தான் ஹிஹிஹிஹி ... சரி பெட்டார்களே என்ன மாதிரி எண்டு சொல்லுங்கோவன் ...ஏதும் நல்லது கெட்டது எண்டா வீட்டுப் பக்கமும் வந்து போங்கோ...புதுசா குடி வந்தன் எண்டு மூஞ்சையை விழிச்சு விழிச்சுப் பாக்காதையுங்கோ... .... இப்படித்தான் இடம் பெயர்ந்து போன போன இடமெல்லாம் என்னை முழுசி முழுசிப் பார்த்து முகம் முழுக்…
-
- 33 replies
- 3.1k views
-
-
வெளியிலை இருந்துகொண்டு பார்த்து சிரிச்சுக்கொண்டிருக்க விடுறியளில்லை.. சாம்பூரும் போச்சு.. முகமாலையும் போச்சு.. அதுக்காக வெளிளிலையிருக்கிற எனக்கேன் கல்லெறியுறியள்? ஏதோ நான்தான் துடங்கிவைச்சமாதிரி எனக்கு போட்டு வாங்குறியள்.. ஆட்டிலறி அடிக்க அடிக்க அவன் அறிக்கை விட்டவடி முன்னாலை வரத்தான்போறான்.. என்னேயிறது.. தலையெழுத்து.. மாத்தேலுமோ?.. வந்ததை மறந்து என்னவெல்லாமோ எழுதிறன்.. நான்தான் ஒறிஜினல்.. டுப்பிளிக்ற்றுகளை நம்பாதீங்கோ.. இன்னுமொண்டு.. அந்தப்பிள்ளையள் கொலைசெய்யப்பட்டதுக்கு எனது கண்டனத்தை தெரிவிச்சனான்.. அந்தக் கண்டனத்துக்கான பாட்டுத்தான் ஏத்தி தொடுப்பும் தந்தனான்.. அதுக்கான சூத்திரதாரிக்கு கண்டனமாத்தான் "பஞ்சமும் நோயுமில்லா நாடே நல்ல நாடு" எண்ட பாட்டு.. ச…
-
- 33 replies
- 4.5k views
-
-
நன்றி... தமிழில் கருத்துப்பரிமாற்றம் செய்ய வாய்பளித்தமைக்கும்... புதிய தமிழ் நெஞ்ஞங்களோடு உறவாட சந்தர்ப்பங் கொடுத்தமைக்கும்... சாணக்கியனின் மனமார்ந்த நன்றிகள். சிங்கத்தின் குகைக்குள் கால்கள் கட்டுண்ட நிலையில் இருக்கும் நான் வெளியே சொல்ல முடியாததை எழுத்தில் வடிக்க விழைகிறேன். அன்புடன் இவன். :twisted:
-
- 33 replies
- 4.3k views
-