நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
-
- 7 replies
- 1.5k views
-
-
ஜே டி வான்ஸின் 'ஹில்பிலி எலஜி' ('Hillbilly Elegy' by J D Vance) - மலையக ஒப்பாரி: நூல் அறிமுகம் நம்மூரில் இவர்கள் இப்படித்தான் என்று சாதி, மத, மொழி மற்றும் இன்னபிற காரணிகளின் அடிப்படையில் அவர்களைப் பொதுமைப்படுத்துவது போல, அமெரிக்காவில் வெள்ளையர்கள் என்றால் மேலான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் கறுப்பர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள் கீழான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் ஒரு பொது எண்ணம் இருக்கும் அல்லவா! மேலானவர்கள் - கீழானவர்கள் என்றில்லை, அவர்களுடைய வாழ்க்கையே மேலானதாகவோ கீழானதாகவோ இருக்கும் என்று எண்ணுவது. அது இயல்புதானே! அது முற்றிலும் உண்மையல்ல என்கிற ஒரு நூல் இது. அது மட்டுமே அல்ல. இன்னும் நிறைய இருக்கிறது. 'ஹில்பிலி' என்பது அமெரிக்காவில் உள்ள…
-
- 5 replies
- 1.1k views
-
-
சம்யுக்தா மாயாவின் முதல் கவிதைத் தொகுப்பு டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு. இவரது கவிதைகள் எதையும் இதற்கு முன்பாக நான் வாசித்ததில்லை. தொகுப்பாக இவரது கவிதைகளை ஒருசேர வாசித்த போது பெருமகிழ்ச்சி அடைந்தேன். மிகச்சிறந்த கவிதைகளை எழுதியிருக்கிறார். இக் கவிதைகளின் தனித்துவம் எளிய வார்த்தைகளின் வழியே உருவாகும் மகத்தான அனுபவங்களாகும். புதிய கவித்துவ மொழியில் உணர்ச்சிபூர்வமாக கிளைவிடுகின்றன வரிகள். அதில் வெளிப்படும் படிமங்களும் உவமைகளும் சிறப்பாக உள்ளன. எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று அரூப முத்து. முதல் இரண்டு வரிகள் எளிதாகத் துவங்குகின்றன. மூன்றாவது வரியில் தொலைவிலிருந்து பசியாற்றும் திறன் அதற்கு உண்டெனும் உனது நம்பிக்கைகள் என்பதில் கவிதையின் மீது புதிய வெளிச்சம் ப…
-
- 0 replies
- 356 views
-
-
மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து Sebastian & Sons என்ற பெயரில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதியுள்ள புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு அளித்த அனுமதியை கலாக்ஷேத்ரா திரும்பப் பெற்றுள்ளது. புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து டி.எம். கிருஷ்ணா Sebastian & Sons என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் மிருதங்கம் செய்யும் கலைஞர்களுக்கும் மிருதங்கம் வாசிக்கும் கலைஞர்களுக்கும் இடையிலான சங்கடமான உறவு குறித்து விரிவாகப் பேசுகிறது. மிருதங்கம் பெரும்பாலும் மாட்டுத் தோலில் செய்யப்படும் நிலையில், மிருதங்கம் வாசிப்பவர்கள் பெரும்ப…
-
- 0 replies
- 362 views
-
-
இளங்கோ: வலைப்பதிவூடாக "டிசே தமிழனாக" அறியப்பட்டவர். கனடாவில் வசித்து வருகிறார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த ஓரு அகதி இளைஞன். யாழ் இணையக் கருத்துக்களம் ஊடாகவும் அவரது கவிதைகளை பலரும் வாசித்திருப்பர். அண்மையில் "நாடற்றவனின்் குறிப்புகள்" என்ற ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதைத் தொகுப்புக்குத்தான் தமிழகத்தில் ஏலாதி இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. விருதுகளையும் பட்டங்களையும் விலைகொடுத்து வாங்கி தங்கள் பெயருக்குப் பின்னால் போலியாகக் காவித் திரிகிற இன்றைய கேடுகெட்ட தமிழ்ச் சமூகச் சூழலில், தன்னுடைய படைப்பினூடாக, தன்னுடைய கவிதைகளினூடாக ஒரு இலக்கிய விருதைப் பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விடயமாகும். சக ஈழத்து இளைஞனாக, புல…
-
- 37 replies
- 6.5k views
-
-
முகமற்ற புத்தனின் உடல் எங்கும் நிறைந்திருக்கிற சூழலில்.. தவிர்க்கமுடியாத ஆயுதங்களுடன் புத்தனின் முகம்.. அது தமிழ் இனத்தின் முகம்..அதுவே தமிழ்ச்செல்வனின் முகம்.. - டிராட்ஸ்கி மருதுவின் கோடுகளும் வார்த்தைளும் நூலில்.. கோடுகளும் வார்த்தைகளும் நூலினை தற்போது இணையத்தில் பெற முடியம் http://vadaly.com/shop/?page_id=3&cate...p;product_id=14
-
- 1 reply
- 1.5k views
-
-
தடங்களில் அலைதல் sudumanalMay 8, 2023 நூல் அறிமுகம் “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன். என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார். “எங்கடை பிள்ளையள் எங்களுக்குப் பிறக்காம என்னடா வம்பிலா பிறந்தவங்கள்” என தொடங்கி சிங்கள இராணுவத்தின் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் வழியாக தனது …
-
- 0 replies
- 277 views
-
-
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–1 BookDay18/02/2025 தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–1 வெகுளியான அந்தப் பறவை கொல்லப்பட்டது ஏன்? – அ. குமரேசன் அரசியல், மதம், சமூகம் என எதை எடுத்துக்கொண்டாலும், அதில் ஆதிக்கம் செலுத்துகிறவர்கள் தங்களுடைய எதிரிகளை விடவும் அஞ்சுகிற ஒன்று இருக்கிறது. அதுதான் புத்தகம்! ஏன் அஞ்சுகிறார்கள் என்றால், புத்தகம் சிந்திக்க வைக்கிறது, கேள்விகள் கேட்கத் தூண்டுகிறது, சரியான கேள்விகளை எழுப்ப வழிகாட்டுகிறது, மக்களிடையே உண்மைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது, மாற்றங்களை நிகழ்த்துவதற்கு சமுதாயத்தைத் தயார்ப்படுத்துகிறது. அடக்குமுறையாளர்களுக்கு இதுவெல்லாம் ஆகாதவையாயிற்றே, ஆகவே அவர்கள் புத்தகங்களை வெறுக்கிறார்கள், முடக்கிவைக்க விரும்புகிறார்கள். அவ்வாறு முடக்கப்பட்ட புத்…
-
-
- 22 replies
- 1.2k views
-
-
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்-Elanko DSe ) .................. ஒருநாள் நண்பர் ஒருவரோடு பயணித்தபோது டிக்-டொக்கில் ஒரு பெண் நன்றாகப் பேசுகிறார் என ஒரு காணொளியைக் காட்டினார். அட, இவரை நன்கு தெரியுமே, எனது முகநூல் நண்பர் என்று சொன்னேன். அது தனுஜா. அவர் பல்லாயிரக்கணக்கனோர் பின் தொடர்கின்ற ஒரு பிரபல்யமாக டிக்-டொக்கில் இருக்கிறாரெனவெனவும் அந்த நண்பரினூடாகக் கேள்விப்பட்டேன். அப்படித்தான் பிறகு லெனின் சிவத்தின் 'ரூபா' திரைப்படம் வந்தபோது அது தனது வாழ்வின் பாதிப்பில் இருந்து உருவான கதையென்று தனுஜா தனது முகநூலில் எழுதியிருந்ததும் நினைவிலிருக்கிறது (?). இப்படியாகத் தொலைவிலிருந்து நான் அவதானித்துக் கொண்டிருந்த தனுஜாவினது சுயவரலாற்றுப் …
-
- 4 replies
- 1.5k views
-
-
தீபச்செல்வனின் "பயங்கரவாதி" நாவல், கதையல்ல காவியம். ஈழத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ள "பயங்கரவாதி" நாவல் இன்னும் புத்தக வடிவில் எனக்குக் கிடைக்கவில்லை, ஆனாலும் அமேசான் கிண்டல் தளத்தில் வாங்கிப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஈழ மண்ணிலிருந்து இப்படி ஒரு படைப்பை, உள்ளிருந்த படைப்பாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல, அது கத்தி முனையில் நடப்பதற்குச் சமமானது. இருந்தும், தான் கொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் 2005 - 2009 வரையான 4 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியான முறையில் கதையாகச் சொல்லியுள்ளார். தீபச்செல்வன் ஒரு சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாள…
-
- 0 replies
- 711 views
-
-
தமிழக அரசியலைப் புதுப்பிக்கும் தனி இயக்கம் சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பல வருடங்களாக போஸ்டர் கட்-அவுட் கோஷங்களுக்காக அடிமட்டத் தொண்டர்களாகவே காலம் கழித்தவர்கள். விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இவர்கள் அவரவர் கட்சிகளில் இருந்து வெளியேறி ஒன்று சேர்ந்து ஒரு தனி இயக்கத்தைத் தொடங்கி பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தமிழகத்தின் பன்முக வளர்ச்சிக்கு பாடுபடுகிறார்கள். அரசியல் கட்சியாகாமல் ஒரு தனி ராணுவ படையாக இவர்கள் செயல்படுகிறார்கள். கபிலன் வைரமுத்துவின் "உயிர்ச்சொல்" எனும் புதிய நாவலில் இந்த கற்பனை இடம் பெற்றிருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் இந்த புதிய வெளியீட்டை ஒரு சில இலக்கியவாதிகள் "அதீதமான…
-
- 0 replies
- 645 views
-
-
தமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து... தமிழகத்தின் கி.பி.250 முதல் கி.பி.600 வரையிலான நூற்றாண்டுகளை களப்பிரர்களின் காலம் என்றும், இருண்ட காலம் என்றும் பெருவாரியான 'செல்வாக்கு மிகுந்த' வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை துரைசாமிப்பிள்ளை என பலரும் அவர்களை கொடியவர்கள் என்றும் சூறையாடியவர்கள் என்றும் சாடி உள்ளனர். கே.கே. பிள்ளை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்ட தனது 'தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்' எனும் நூலில் "தமிழகத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள்" என கொட்டித் தீர்க்கிறார். போதுமான, நம்பகமான …
-
- 0 replies
- 489 views
-
-
தமிழர் திருநாளில் கிளிநொச்சியில் தீபச்செல்வனின் பயங்கரவாதி வெளியீடு ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. நடுகல் நாவல் வாயிலாக தமிழர்கள் மத்தியில் மாத்திரமின்றி சிங்களவர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஏற்படுத்திய தீபச்செல்வனின் இரண்டாவது நாவல் பயங்கரவாதி. தமிழ்நாட்டில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸ் இந் நூலை வெளியிட்டுள்ளது. இன்று கிளிநொச்சியில் 3மணிக்கு கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி ரகுராம் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொள்கிறார். அத்துடன் முன்னாள் …
-
- 2 replies
- 806 views
-
-
நிலம் சனங்களினுடையது. ஆனால் உலகம் எங்கும் பூர்வீகச் சனங்களிடமிருந்து நிலம் பறிக்கப்படுகிறது. இனம், வர்க்கம், சாதி என அனைத்து மேலாதிக்கங்களாலும் நிலம் சனங்களிடமிருந்து அபகரிக்கப்படுகிறது. உலகில் ஒடுக்குமுறையை மேற்கொள்பவர்கள் நிலத்தை பறிக்கின்றனர். நிலத்தை பறிப்பதன் ஊடாக அதிகாரத்தை விரிவுபடுத்தவும் அந்த சமூகத்தை அழிக்கவும் திட்டமிடுகின்றனர். நிலத்திற்காகப் போராடும் ஈழ மக்களின் போராட்டத்தில் உலகம் எங்கும் இனத்தின் மேலாண்மையால் சாதியின் மேலாண்மையால் வர்க்க மேலாண்மையில் ஒடுக்கப்படும் சனங்களைக் காணமுடியும். சனங்களுக்குரிய இந்தப் பூமி சனங்களிடம் இருப்பதுதான் இந்தப் பூமிக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது. இந்தப் பூமியை ஒடுக்குமுறையாளர்களும் அபகரிப்பாளர்களும் அபகரித்துத் தின்று கொண்…
-
- 0 replies
- 953 views
-
-
தமிழினப் படுகொலைகள்..1956.2008... என்கிற ஆவணப் புத்தகம்..சென்னை 33வது புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது..தமிழ்நாட்டு உறவுகள் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்...விரைவில் ஜரோப்பா மற்றும் கனடா அமெரிக்கா நாடுகளில் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது. அதற்கான விபரங்கள் வெளியிடப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்..நன்றி.. தொடர்புகளிற்கு Web : www.manitham.net/publishers Email : manitham@gmail.com Skype : tnc-tamilnadu Land Line : +91-44-28133969 Mobile : +91-9003027712 / +91-9443322543 Fax : +91-44-28133968 ஜரோப்பிய தொடர்புகளிற்கு சிறி. தொ.பே..0033611149470 mail..sathiri@gmail.com skype..go…
-
- 5 replies
- 1.9k views
-
-
தமிழினப்படுகொலைகள் 1956 - 2008 வெளியீடு: மனிதம் வெளியீட்டகத்தினர்.
-
- 1 reply
- 1.3k views
-
-
கிழக்கு மாகாணப் போராளிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சகோதர யுத்தம் எத்தனை வலிகளை அந்த மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தது என்பதை நேரடியாக அவர்களிடம் கேட்டறிந்தபோது ஏற்பட்ட மனத் துயரம் நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்குச் சோகமானது. பல வருடங்களாக எம்முடன் ஒன்றாயிருந்து போரிட்டவர்களின் வாழ்க்கை, பின்பு எமது கரங்களாலேயே முடிவு கட்டப்பட்டபோது, வஞ்சகப் பொறியினுள் அகப்பட்ட பொறுப்பாளர்களின் பலவீனம் காரணமாகவும், முதுகில் குத்திய துரோகத்தை என்றும் மன்னிக்க முடியாது எனச் சூளுரைத்து, சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தடம் மாறிய சாதாரண கீழ்நிலைப் போராளிகளுக்குச் சிறு மன்னிப்பேனும் வழங்குவது தமது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட செயல் என்பதால் அப்போராளிகள் ஈவிரக்கமின்றி இயக்கத்தால் கொன்றழிக்கப்பட்ட போது…
-
- 17 replies
- 1.9k views
-
-
இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights – Emily Brontë’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை இப்படி எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்பதோடு நமக்கு தவறுகளைப் புரிந்து கொள்ளும் பாலபாடமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன் அரசியல் முப்பது வருடகால தமிழ் விடுதலைப் போராட்டத்தை மகோன்னத போராட்டமாகவும் அதன் தலைவரை கடவுளுக்கு நிகராகவும் வைத்து எதுவித விமர்சனமற்ற போராட்டமாக எடுத்துச் சென்றோம். ஆனால் போராட்டம் 2009 இல் முற்றாக ஆவியான பின்பு இயக்கத்தில் வெவ்வேறுகாலங்களில் இருந்தவர்கள் நாவல்களாக எழுதினார்கள். நமது சமூகத்தில் இலக…
-
- 38 replies
- 9.4k views
- 1 follower
-
-
தமிழில் ஒரு சர்வதேச நாவல் சென்ற நூற்றாண்டில் தமிழில் பிரதானப் போக்காக இருந்த நவீன நாவல் வடிவம், நவீன எழுத்துகளோடு சேர்த்துப் பார்க்க முடியாத தனித்துவமான எழுத்து ப.சிங்காரத்துடையது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தொன்மை கொண்ட தமிழர் வரலாறு, மெய்யியல், பண்பாடு, வாழ்க்கைப் பார்வை, மொழி மரபின் குணங்கள் சேர்ந்த வெளிப்பாடு ப.சிங்காரம். உலகப் போரின் பின்னணியில் தென்கிழக்காசிய நாடுகளின் ஒரு காலகட்டத்து அரசியல், வெகுஜனப் பண்பாட்டை விரிவாகவும் நுட்பமாகவும் அவர் தனது இரண்டு நாவல்களிலும் படைத்துள்ளார். அதிலும், ‘புயலில் ஒரு தோணி’ நாவலானது லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ போன்ற பெரும் படைப்பை நோக்கி தமிழ் படைப்பாளி ஒருவர் கண்ட கனவு என்றே சொல்லலாம்! சரித்திரத்தின் கதிய…
-
- 0 replies
- 488 views
-
-
-
இன்று லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் தமிழீழமும், இந்தியாவின் பாதுகாப்பும் என்கின்ற நூலின் அறிமுகவிழா சிறப்பாக இடம்பெற்றது. இதில் ஆய்வாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பிரதானசுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் 29-11-14 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது. தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும் என்ற நூலின் வெளியீட்டுரையினை ஆய்வாளர் திரு.திபாகரன் அவர்கள் தலைமையேற்று ஆற்றினார். இந்நூலின் சிறப்புரைகளை அரசியல் ஆய்வாளர் திரு.காதர், மூத்த ஊடகவியலாளர் திரு.சிவா சின்னப்பொடி, ஒரு பேப்பரின் ஆசிரியர் திரு.கோபிரட்ணம், நாடுகடந்த தமிழீழ அரசின் முந்நாள் உதவிப்பிரதமர் திரு. தயாபரன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நூலின் சிறப்புப்பிர…
-
- 0 replies
- 697 views
-
-
தமிழ் நூல்களின் பட்டியல் http://www.viruba.com/ptotalbooks.aspx?id=28
-
- 3 replies
- 3.2k views
-
-
தமிழ் அற இலக்கியங்களில் அரசியல்.! மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய தொடர்ச்சியை உடைய தமிழிலக்கிய இலக்கண வரலாற்றில் இலக்கிய ஆய்வுகளின் தொடக்கப் புள்ளியை நம்மால் சரியாக வரையறுக்க முடியவில்லை என்றாலும் அதன் முதிர்நிலையைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் வழி அறிய முடிகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியலைத் தொல்காப்பியர் ஓர் இலக்கியவியல் கல்வியாகவே முன்வைக்கின்றார். கவிதைகளின் உள்ளடக்கம், வடிவம், உத்திகள், மெய்ப்பாடு முதலான இலக்கியக் கோட்பாடுகளைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் விரிவாகப் பேசுகிறது. பொருளதிகாரச் செய்யுளியலில் இடம்பெறும் நோக்கு என்ற உறுப்பு இன்றைய இலக்கியத் திறனாய்வின் அடிப்படையில் இயங்குவதே. ஆக இலக்கிய இலக்கணப் பழமை மட்டுமல்லாமல் இலக்கிய …
-
- 0 replies
- 1.7k views
-
-
.http://www.projectmadurai.org/pmworks.html சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய தமிழ் காப்பியங்களுடன் ஏனையவை. ஒரே இடத்தில். மொத்தம்: 559 பொன்னியின் செல்வன் தமிழ் (169) , ஆங்கிலம் (278) கூட உள்ளது. http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0169_01_01.pdf http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0278_01.pdf எதையோ தேடப் போக.... கிடைத்தது. http://www.projectmadurai.org/pmworks.html
-
- 1 reply
- 508 views
-
-
தமிழ் கவியின் 'இனி ஒருபோதும்' சமகாலத்தில் எழுதுகின்ற ஈழத்தவர்களில் இருவர், எதேனும் கருத்துக்கள் கூறினால் தூரத்துக்குப் போய்விடுவேன். புனைவுக்கு வெளியில் இவர்கள் இப்படி அபத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும் இந்த இருவரும் புனைவில் என்னைத் தொடர்ந்து தேடி வாசிக்கச் செய்பவர்கள். அதில் ஒருவர் தமிழ் கவி (நல்லவேளையாக நான் அவரோடு முகநூலில் நண்பராக இல்லை). அவருடைய நாவல்களில் 'இருள் இனி விலகும்' தவிர்த்து, 'இனி வானம் வெளிச்சிரும்', 'ஊழிக்காலம்' என்பவற்றை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன். 'இனி ஒருபோதும்' அவரது நான்காவது நாவல். 1990களின் நடுப்பகுதியில் தொடங்கி, 2009ல் பெரும்போர் நிகழ்ந்தகாலப்பகுதி வரை நீளும் கதை. 'ஊழிக்காலத்தை' ஏற்கனவே வாசித்தவர்க்கு அதில் வரும் பாத்திர…
-
- 3 replies
- 1.5k views
-