Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கவிதை இலக்கிய நூல்களுக்கான ஆய்வரங்கமும் ஈழத்து பெண் கவிஞர்கள் அறுவரின் கவிதை நூல்கள் பற்றிய திறனாய்வுக் கலந்துரையாடலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் நடைபெற்றது. ஈஸ்ற்காமில் இயங்கிவரும் தமிழ் மொழிச் சமுகங்களின் செயற்பாட்டகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் லண்டன் வாழ் பல முக்கிய இலக்கிய ஆர்வலர்களும் கலை இலக்கியங்களின் மீதான தீவிர செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் மொழிச் சமுகங்களின் செயற்பாட்டகத்தின் சார்பில் திரு.பௌசர் அவர்களின் அறிமுக உரையோடு ஆரம்பமான இந்த நிகழ்வில் எழுத்தாளரும் கவிஞரும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி சந்திரா ரவீந்திரன் மற்றும்எழுத்தாளரும் ஆய்வாளருமான திரு.கோகுலரூபன் ஆகியோர் பிரதான பேச்சாளர்களாகவும் திற…

    • 0 replies
    • 1.5k views
  2. வணக்கம் பிரான்ஸ் - ஜேர்மனி - சுவிஸ் ஆகிய நாடுகளில் சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவர் மதிப்புக்குரிய பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் ஆவணப்பதிவாக்கிய இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீதான இனப்படுகொலை தொடர்பான புத்தக அறிமுக நிகழ்வு தொடர்பான அறிவித்தல் நன்றி ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு

  3. இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள SRI LANKA : HIDING THE ELEPHANTஎனும் புத்தகத்தின் அறிமுக நிகழ்வு பிரான்சில் இடம்பெறுகின்றது. சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவரும் பேராசிரியரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர் குழுவின் பிரதிநிதிகளில் ஒருவரான இராமு.மணிவண்ணன் அவர்களால் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது. சாட்சியங்கள், ஆதாரங்கள், புள்ளிவிபரங்கள், ஒளிப்படங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகம் 900 பக்கங்களுக்கு மேல் கொண்டுள்ளது. பிரான்சில் இடம்பெறவுள்ள நிகழ்வரங்கில் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் நேரடியாக வருகை தரஇருப்ப…

  4. திரை ஊடகத்தில் மண் சார்ந்த கலைஞராகத் தொடர்ந்து தன்னை முன்னிறுத்திவருபவர் தங்கர் பச்சான். அவர் எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. முந்திரிக் காட்டு மனிதர்களின் வாழ்வை வேரோடும் வேரடி மண்ணோடும் நம் முன்னால் வைக்கும் இக்கதைகளில், அவர்களுடன் பின்னிப்பிணைந்த கால்நடைகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகளும் மனிதர்களைப் போலவே விளிம்புநிலை கதாபாத்திரங்களாக நம்முடன் பேசுகின்றன. முந்திரிக் காடுகளும் பலா மரங்களும் நிறைந்த செம்மண் காணிகளின் நடுவே, ஈரம் காயாமல் இருந்த விவசாய வாழ்வு எவ்வித ஒளிவுமறைவும் இன்றிக் கதைகளில் விரிகிறது. கொஞ்சமாக நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயக் குடும்பங்களின் அன்றாடப் பாடுகள், விவசாயக் கூலிகள், கரும்புத் தோட்ட…

  5. "நஞ்சுண்டகாடு" கருத்துப் பகிர்வும் குணா கவியழகனுடனான கலந்துரையாடலும். காலம்:21-03-2015 மாலை 4:30 மணி. இடம் :07 rue cail 75010 paris. (குளோபல் மொழி பெயர்ப்பு நிலையம்) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை, நன்றி .

    • 4 replies
    • 1.2k views
  6. ..21. மார்ச் 2015 ...லண்டனில் ஆயத எழுத்து நூல் அறிமுகமும் கலந்துரையாடலும். அனைவரும் வருக 1 min · Modifié · J’aime

  7. மகாபாரதம் எனும் இதிகாசம் மீது தீராக் காதல் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய இணைப்புகள் இவை. இவற்றை இன்று எழுத்தாளர் ரஞ்சகுமார் தன் முகநூலில் பகிர்ந்து இருந்தார் முழுமையான மகாபாரதம்: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Purpose-of-translation.html மகாபாரதம் கும்பகோணம் ம.வீ.இராமானுஜாசாரியார் பதிப்பு 18 பர்வங்களும் முழுவதும் தமிழில் இங்கு கிடைக்கிறது, பெரும் பொக்கிசம்: http://books.tamilcube.com/tamil/ மகாபாரதத்தினைப் படிப்பது எப்படி?: http://www.sramakrishnan.com/?p=3337

    • 3 replies
    • 5.3k views
  8. 2000-க்கு பிந்தைய தமிழ் நாவல்களின் உலகம் இமையம் “எல்லாமே நிரந்தரமாய் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். வாழ்க்கை என்பது தொடர்ந்து செல்லும்”-*1 ‘லீவ் உல்மன்’. மொழியின் வரலாறு என்பது மொழியில் உண்டான இலக்கியப் படைப்புகளின் வரலாறுதான். அந்த வகையில் நாவல் என்ற கலை வடிவம் தமிழ் மொழிக்கு அறிமுகமாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. முதல் நாவல் எழுதப்பட்ட காலத்திலிருந்து 2014ல் எழுதப்பட்ட நாவல்கள்வரை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான போக்கை கடை பிடித்து வந்திருக்கிறது. நாவலின் மையத்தைத் தேர்ந்தெடுப்பதில், கதை சொல்லும் முறையில், கதை சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், உத்தியில் என்று காலத்துக்குக் காலம் மாற்றம் பெற்று வந்திருக்கிறது. இந்த …

  9. எதிர்வினை - காயப்படுத்தும் கத்திகள் கருணாகரன் “நஞ்சுண்டகாடு“ நாவலைப்பற்றி எழுதும் இரவி அருணாசலம் அந்த நாவலுக்கு அப்பால், அதனுடைய விமர்சனத்துக்கு அப்பால், அந்த நாவலை எழுதிய குணா கவியழகனைப் பற்றிய தவறான புரிதல்களையும் எழுதியிருக்கிறார். முகநூலிலும் இணையத்திலும் பிற ஊடகங்களிலும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இழைத்து வருகின்ற வழமையான தவறு இது. போதாக்குறைக்கு அதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள், அவற்றை முன்வைக்கும்முறை போன்றன மிகவும் தரந்தாழ்ந்தவையாகவும் அமைந்து விடுகின்றன. இது ஏன் நிகழ்கிறது என்றால், படைப்பைப் பார்ப்பதையும் விட, படைப்பாளியையும் படைப்பாளியின் அரசியலையும் அவருடைய பின்புலங்களையுமே இவர்கள் அதிகமும் நோக்குகிறார்கள். படைப்பையும் விட படைப்பாளியின் பின்புல…

  10. யாழ். இலக்கியக் குவியத்தின் ஏற்பாட்டில் திருமதி மைதிலி தயாபரன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, யாழ்.திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியற் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. திருமதி மைதிலி தயாபரன் எழுதிய சொந்தங்களை வாழ்த்தி (நாவல்), வாழும்காலம் யாவிலும் (நாவல்) மற்றும் விஞ்சிடுமோ விஞ்ஞானம் (கவிதை) ஆகிய நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன. யாழ். இலக்கியக் குவியத்தின் தலைவர் வேலணையூர் தாஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. நூல்களுக்கான வாழ்த்துரையை கவிஞர் எஸ்.சத்தியபாலனும் அறிமுக உரையை சு.சிறீக்குமரனும் ஆய்வுரைகளை சி.ரமேஸ், க.குகபரன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நிகழ்வில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். h…

    • 0 replies
    • 670 views
  11. எழுத்தின் அதிகாரம்: ஓலைச்சுவடி, புத்தகம் முதல் டிவிட்டர் வரை அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர்களை விட வாசகர்கள் அதிக அறிவாளிகள் என்பது என் அனுமானம். எழுத்தாளர்களுக்கு தம் அறிவை இன்னும் புத்திசாலித்தனமாக, தர்க்கபூர்வமாக, கூர்மையாக வெளிப்படுத்த தெரிகிறது. அவர்களிடத்து இந்த மொழி தரும் ஒரு தன்னம்பிக்கை இயல்பாக இயங்குகிறது. ஆயிரமாண்டு அறிவையும் நுண்ணுணர்வையும் தன்னிடத்து கொண்டுள்ள மொழியில் புழங்கும் போது இயல்பாய் அவற்றை கடன் பெறும் எழுத்தாளன், ஒவ்வொரு சொல்லின் பின்னும் தான் எதிர்கொண்ட ஐரோப்பிய கல்வியின் செறிவை கண்டுள்ள எழுத்தாளன் தன் எதிரில் தேரும் கவச குண்டலமும் அற்று நிற்கும் வாசகனை விட மேலானவனாக தன்னை காட்டி விட இயலும். அது உண்மையில் எழுத்தின் வன்மை. எழுத்தாளனின் மேன்மை …

  12. கனடாவில் ஆயுத எழுத்து ... கனடாவில் ஆயுத எழுத்து நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் காலம் March 14th 2015..இடம் BURROWS HALL Community Center 1081 Progress avenue Scarborough Ontario M1B 5Z6 நேரம் - 1.30PM TO 5PM யாழ் கள உறவுகள் அனைவரையும் வரவேற்கிறேன் .நன்றி J’aime · ·

    • 26 replies
    • 4.1k views
  13. கிளிநொச்சி போர் தின்ற நகரம்: அறிமுகம்: யமுனா ராஜேந்திரன்

  14. அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ம் ஆண்டு. சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள். தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளேபோய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் த…

  15. குமரன் பொன்னுத்துரையின் 'நான் நடந்து வந்த பாதை': ஒரு நிகழ்வும் சில நினைவுகளும்.... நேற்று டொரான்டோவில் தமிழர் வகைதுறை வளநிலைய (தேடகம்) ஏற்பாட்டில் நடந்த தோழர் குமரன் பொன்னுத்துரையின் 'நான் நடந்து வந்த பாதை' நூல் வெளியீடும், கலந்துரையாடலும் நடைபெற்றன. நிகழ்வில் பலரைக் காண முடிந்தது. குமரன், சேணா உட்படப்பல தேடக நண்பர்கள், பரதன் நவரத்தினம், 'ஜான் மாஸ்டர்', எஸ்.கே.விக்னேஸ்வரன், சுவிஸ் முரளி மற்றும் முகநூல் நண்பர்கள் எனப் பலரைக்காண முடிந்தது. குமரன் பொன்னுத்துரை அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் ஆரம்ப காலகட்டத்திலிருந்து இயங்கி, ஒதுங்கியவர்களில் ஒருவர். கழகத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றில் இருந்ததுடன், கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களிலொருவராகவும் விளங்கியவர். தன…

  16. குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு என்னும் நாவல் இரு மாதங்களுக்கு முன்னர் வெளிவந்திருந்தாலும் இப்பொழுதுதான் எனக்கு வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாவலின் பெயர் எல்லோரையும் வாசிக்கத் தூண்டுவதாக அமைந்திருப்பது மிகச் சிறப்பு. வாசிக்கும் முன்னர் அதுபற்றிய விமர்சனங்கள் பலவற்றை வாசித்ததில், எனக்குள்ளேயே அதுபற்றிய மிகைப்படுத்தப்பட்ட கற்பனையும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது. திரு பாலகுமாரனின் முன்னுரை சிறிது நீண்டதாக இருந்தது எனக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. அது ஏற்படுத்தியிருந்த ஒரு தோற்றம் வாசித்தபோது எனக்குக் கிடைக்கவில்லை என்பது உண்மை. அது என் அதீத எதிர்பார்ப்பின் காரணமாகக் கூட இருக்கலாம். அவரின் எழுத்து, முதல் நூல் என்று கூறமுடியாதவாறு விபரிக்கும் விதம் அரும…

  17. கவித்துவமான வார்த்தைகளும் கலையம்சம் நிரம்பிய செயல்களும் சமூக விடுதலைக்கு எதிரானவை என்று தமிழர்களுக்கு எங்கோ அடிப்படையில் ஒரு சந்தேகம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறை விடுதலைப் பாடலுக்கான தன் எழுச்சியையும் இச் சந்தேகத்துடனேயே கடந்து போகிறான். அல்லது, தனக்குத்தானே இறுமாப்புடன் கவிஞன் என்று கூறிக் கொள்கிறான்.இரண்டிலும் நிரம்பிய சிக்கல்கள் தாம் விடுதலைக்கான வேகத்தை மட்டுப்படுத்துகின்றன என்று கொள்ளலாம் . கவிதையெங்கும் அர்த்தம் சலித்த வார்த்தைகளை நிறைத்து வைக்கும் காலகட்டம் இது போல. அதாவது முன்னமே பலர் எழுதியதை மீண்டும் மீண்டும் எழுதிப்பார்த்து தாகத்தை ஆற்றிக் கொள்ளுதல்,அதே வார்த்தைகளை அடுக்கு மாற்றி கவிதை என எழுதிப் பார்த்தல், பிரச்சார நெடியுடன் முழக்கங்களுடன் …

  18. தமிழ்ச் சிறுகதைகளுக்கென்று பெருமிதம் மிக்க மரபு இருக்கிறது. நம்பிக்கையூட்டும் சிறுகதைகள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. ஆனாலும், நம்பிக்கையூட்டும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாசிக்கப் புறந்தருவது ஒரு கதை சொல்லியின் சாமர்த்தியம்தான். அது ஷோபாசக்திக்கு இருக்கிறது. அதை மறுபடியும் மெய்ப்பிக்க வந்து நிற்கிறான் ‘கண்டிவீரன்’. பத்துக் கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பைக் கருப்புப் பிரதிகள் நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது. யாரும் யாரையும் நம்ப முடியாத பதற்றமிகு பின்னணியில், சிங்கள ராணுவமும் போராளி இயக்கங்களும் சந்தேகத்தின் பேரில் எளிய உடல்கள் மீது நிகழ்த்திய குரூரங்களைத் தனது எழுத்தின் வழியாக வாசிப்பவரிடம் கடத்துகிறார் ஷோபா. உள்ளடக்கம் சார்ந்து இந்தக் கதைகள் எதிரும் புதிருமான அரசியல் வ…

    • 0 replies
    • 2.3k views
  19. இலங்கையின் தமிழ் இலக்கியம் கருணாகரன் இலங்கை, சிறிலங்கா, சிலோன், தாமிரபரணி என்றெல்லாம் சொல்லப்படும் ஈழத்தின் தமிழிலக்கியம் 14ஆம் நூற்றாண்டுடன் தொடங்குகின்றது என்கிறார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை. ஆனால், ஈழத்தின் வரலாறு அதற்கும் அப்பால் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஈழ வரலாறு நீண்டதாக இருந்தாலும் அந்த அளவுக்கு இலக்கிய ரீதியாக அதனுடைய அடையாளத்தைக் காண முடியவில்லை. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கூட அது செழித்துப் பொலியவில்லை. என்றபோதும் இலங்கையின் வடபுலத்தை ஆட்சி செய்த ஆரிய சக்கரவர்த்திகளின் காலத்தில்தான் ஓரளவுக்கு மருத்துவம், சோதிடம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான செய்யுள்கள் பல இயற்றப்பட்டன. இதேவேளை இந்தக் காலகட்டத்தில்தான் ரகுவம்சம், கதிரமலைப…

  20. * இந்த மதிப்பீட்டில் ‘தி இந்து’ வெளியீடுகள், ‘தி இந்து’ குழுமத்தைச் சார்ந்தவர்களின் நூல்கள் சேர்க்கப்படவில்லை. பளிச் புத்தகம் புத்தகக் காட்சியின் பளிச் புத்தகம் ‘அடையாளம் பதிப்பக’த்தின் ‘தொடக்க நிலையினருக்கு...’ பின்நவீனத்துவம், ஜென், மொழியியல், புவிவெப்பமாதல் போன்ற தூக்கம் வரச் செய்யும் விஷயங்களை எளிமையாகவும் சுவாரசியமாகவும் தரும் புத்தக வரிசை இது. அதுவும் இதன் காமிக்ஸ் பாணி வடிவமைப்பு இருக்கிறதே... தமிழுக்குப் புதுசு மட்டும் அல்ல; எவரையும் வசீகரிக்கக் கூடியதும்கூட! மீண்டும் காந்தி காந்தியும் நேருவும் வசீகரித்தனர். ‘கிழக்குப் பதிப்பகம்’ கொண்டுவந்த ராமச்சந்திர குஹாவின் ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’, ‘அலைகள் வெளியீட்டகம்’ கொண்டுவந்…

  21. உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்கள் தொலைத்த இடங்கள் ஏராளம். சொந்த இடங்களை விட்டு ஏங்கிய நிலையில் வாழ்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார். கவிஞர் கு.வீராவின் ‘கண்ணடிக்கும்காலம்’, ‘இரண்டாவது உயிர்’ எனும் கவிதை நூல்களின் வெளியீட்டுவிழா யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இணுவில் சிவகாமியம்மன் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சண்முகலிங்கன் இதனைக் கூறினார். அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களுக்கு வீடு என்பதே இல்லை. துன்ப, துயரங்களை சந்திப்பவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். கு.வீராவினுடைய கவ…

    • 6 replies
    • 4.1k views
  22. Started by கிருபன்,

    கலாதி எஸ். றஞ்சகுமார் தீ (நாவல்) எஸ். பொன்னுத்துரை வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில். பக்கம்: 136 விலை: ரூ. 120 தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பம் தோன்றும்’ என்று ரைக்கப்பட்ட பொதுப்புத்தியில் உழல்வதே சராசரித் தமிழ்மனம். ஒரு தளத்தில் மட்டிட்டு நோக்குகையில் இது மகா வாக்கியம் ஒன்றே. தீண்டும் இன்பத்தை இவ்வாறு அழகுறப் பிரசித்தப்படுத்தியவனும் இலேசுப்பட்டவனல்லன். தீண்டும் இன்பத்தைப் பற்றியதொரு விசாரமாக ‘தீ’ வெளியாகியபோது, கலையும் இலக்கியமும் தீண்டாமை, தீட்டு என்பன பற்றியதாக இருத்தலே சாலச் சிறந்ததும், காலப் பொருத்தமும் என்ற ஆக்ஞைகளுடனும் ஆய்க்கினைகளுடனும் ஈழத்து இலக்கியப் பரப்பு ‘கலாதி’யாக இயங்கிக் கொண்டிருந்தது. (கலாதி என்னும…

  23. கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள். என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை. இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதைகளாக, ஒலிப்பேளைகளாக, ஒளிச்சித்திரங்களாக சிறகடித்து வலம் வருகின்றன. தமிழ…

  24. எழுத்துக்கு முழுக்கு: எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவிப்பு எழுத்தாளர் பெருமாள் முருகன் | கோப்புப் படம் தமிழ் இலக்கியப் பணியில் இருந்து முற்றிலும் விலகுவதாகவும், இனி ஆசிரியர் பணியை மட்டும் தொடரவுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவித்துள்ளார். திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் 'மாதொருபாகன்' நாவலின் பிரதிகளைச் சமீபத்தில் எரித்துப் போராட்டம் நடத்தின. எழுத்தாளர் பெருமாள் முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதேவேளையில், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் …

  25. ஜெருசலேம் : உலகத்தின் வரலாறு’ என்னும் இந்தப் புத்தகத்தின் நவீன ஜெருசலேம் நகரத்தின் வரலாற்றைச் சொல்லும் புத்தகம். இது கிறித்துவத்தையோ யூதத்தையோ இஸ்லாத்தையோ சித்திரிப்பது அல்ல. மாறாக நவீனக் காலகட்டத்தின் ஜெருசலேத்தின் வரலாற்றை மட்டும் சொல்கிறது. பிரிட்டிஷ் பத்திரிகையாளர் சைமன் சிபாக் மாண்டிஃபையர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். 2011-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் புத்தகம் இப்போது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டித் தமிழில் சந்தியா வெளியீடாக வரவுள்ளது. அதன் முன்னுரையில் இருந்து ஒரு பகுதி... தேவாலயம் கட்டுவதற்குத் தோண்டும் இடத்தில் குளங்குளமாக எலும்புகள். தளபதிகளும் பணியாட்களும் தம் ராஜ விசுவாசத்தை அரசருக்கு நிரூபிக்க விரல்களை வெட்டிப் பரிசளிக்க வேண்டும். அவருக்குக் கோபம் வந்தா…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.