நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
809 topics in this forum
-
வியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா என்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகுவான விடயமல்ல. அவ்வாறு சிங்கள பண்பாட்டில் பல பாரம்பரிய அம்சங்கள் இன்றும் அதேமுறையில் பின்பற்றபட்டு வருகின்றது. இலங்கை பன்மைத்துவ சமூகத்தைக் கொண்ட நாடு. இன்று இன நல்லிணக்கம் குறைவாக இருப்பதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக ஒரு இனத்தின் புராதன பண்பாட்டு, கலை, கலாசார அம்சங்கள் பற்றிய புரிந்துணர்வு இன்னொரு இனத்திற்கு இன்மையே ஆகும். இக்குறையை நிவர்த்தி செய்யும்பொருட்டும், இதுவரை தமிழில் அதிகம் பேசப்படாத சிங்கள புராதன கலாசாரத்தையும், பண்பாட்டு அம்ச…
-
- 0 replies
- 1k views
-
-
மனப்பிறழ்வின் நாட்குறிப்பேடு அஷேரா – தி.லலிதகோபன் அறிமுகம் சயந்தன் கதிர் என்று அழைக்கப்படும் சயந்தன் அவர்களின் மூன்றாவது நாவல் பிரதி அல்லது ஆதிரைக்கு பின்னரான பிரசவம் என்றோ இந்த அறிமுகத்தினை சுருக்கமாக நான் கடந்து விடலாம். ஆனால் அதற்கு அப்பாலும் சில செய்திகளை சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. முதன்முதலாக “ஆதிரை” என்ற பெயரினை முகநூலின் மூலமாக கேள்வியுற்றதன் பின்னர் நான் அந்த நூலினை வாசிப்புக்காக தேட முற்பட்டதன் காரணம் “ஆதிரை” என்ற பெயர் என்னுள் ஏற்படுத்தியிருந்த மயக்கமே. இதை பிரமிள் அவர்களின் மொழிதலில் குறிப்பிடுவதானால் “இடையறாத உன்பெயர் நிலவிலிருந்திறங்கி என்மீது சொரியும் ஓர் ரத்தப் பெருக்கு.” எனலாம். ஆனாலும் ஆதிரைக்கான எனது காத்திருப்பின் நாட்கள் சுமார் ஐ…
-
- 0 replies
- 934 views
-
-
இது முற்றிலும் பெண்களால் நிரப்பப்பட்ட நாவல். பெண்ணின் அகவுலகை ஆணின் பார்வையிலிருந்து பார்த்துப் பழகிய நமக்கு இதுவொரு புது அனுபவமாக இருக்கும். நாவலின் மையக்கருத்தை பின்னட்டையிலிருக்கும் குறிப்பிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது. இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை, வெளிவந்தவையும் ஓர் ஆணின் பார்வையிலிருந்தே அமைந்து வந்துள்ளது. முன்னுரையில் குறிப்பிட்டது போன்று "முதல் ஜாமத்தைக் காட்டிலும், விபரீதமானது - கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்". அது எல்லைகளற்றது, கட்டுப்படுத்த முடியாதது, தணல் போன்றது, ஆழ்ந்த நினைவுகளைக் கிளறிக் கொணர்வது. நாவலில் வரும் பகுதிகளைக் குறிப்பிடாமல், என்னுள் உணர்ந்தவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ராபியா என்ற…
-
- 8 replies
- 3.1k views
-
-
கனடாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் சிறீறஞ்சனியும் அவரது மகள் சிவகாமியும் எழுதிய நூல். நூலின் பெயர் "சிந்துவின் தைப்பொங்கல்" ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு மொழியிலும் வெளியாகிறது. https://www.amazon.ca/dp/B08S7KTBNH புத்தகம் பற்றிய ஒரு கருத்துரை. “சிந்துவின் தைப் பொங்கல் உண்மையிலேயே ஒரு கனடாக் கதையாகும். புலம்பெயர் வாழ்க்கை, குடும்பம், பாரம்பரியம் என்பவற்றின் யதார்த்தத்தை இது தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது. எம்மை நிலைநிறுத்தும் இருமுகத்தன்மை, வருடாந்த அறுவடை மற்றும் குடும்பத்தவரிடையே இருக்கும் அன்பு ஆகியவற்றை இந்தக் கதை கொண்டாடுகின்றது. தனிமயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் இத்தகைய பொதுமையான கருப்பொருள்களை நாம் புரிந…
-
- 0 replies
- 634 views
-
-
திருகோணமலையில் சோழர் - டாக்டர் ஜீவராஜின் புதிய நூல் இலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில் சோழர்களது ஆட்சி பற்றிய சில கட்டுரைகளை கொண்டு இம்மின்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சோழ இலங்கேஸ்வரன், சோழர்கால தமிழ் பௌத்தம் என்பன அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. வலைப்பதிவில் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளே இவை. இது திருகோணமலையில் சோழராட்சியின் முழுமையான விபரிப்பாக அமையாது என்றாலும் அது தொடர்பில் ஒரு சிறு அறிமுகத்தை தருகின்ற முயற்சியாகவே இது.. https://vanakkamlondon.com/l…
-
- 0 replies
- 835 views
-
-
எனக்குப் பிடித்த சில புத்தகங்கள் - 2020 இளங்கோ-டிசே (1) அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன் (நாவல்) பிரியா இதை 2008/2009 காலங்களில் எழுதத் தொடங்கியபோது, யார் இவர் இவ்வளவு சுவாரசியமாக எழுதுகின்றாரே என ஒவ்வொரு அத்தியாயங்களையும் 'காட்சி' வலைப்பதிவில் வாசித்திருக்கின்றேன். அங்கே இந்த நாவல் இடைநடுவில் நின்றுபோனாலும், யார் இந்த யமுனா என்று (அப்போது யமுனா ராகவன் என்று புனைபெயரில் எழுதியிருந்தார்; அது அவரின் அம்மாவினதும் அப்பாவினதும் பெயர்களை இணைத்து வந்த புனைபெயர்) தேடியிருக்கின்றேன். அப்படி அவர் யாரெனத்தேடி அக்காலத்தில் அவர் இங்கிலாந்தில் இருக்கின்றார் என்பதையும் நானாகவே தேடிக் கண்டுபிடித்தேன். அது ஒரு வாசகர் தனக்குப் பிடித்த எழுத்தாளரைத் தே…
-
- 0 replies
- 594 views
-
-
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்-Elanko DSe ) .................. ஒருநாள் நண்பர் ஒருவரோடு பயணித்தபோது டிக்-டொக்கில் ஒரு பெண் நன்றாகப் பேசுகிறார் என ஒரு காணொளியைக் காட்டினார். அட, இவரை நன்கு தெரியுமே, எனது முகநூல் நண்பர் என்று சொன்னேன். அது தனுஜா. அவர் பல்லாயிரக்கணக்கனோர் பின் தொடர்கின்ற ஒரு பிரபல்யமாக டிக்-டொக்கில் இருக்கிறாரெனவெனவும் அந்த நண்பரினூடாகக் கேள்விப்பட்டேன். அப்படித்தான் பிறகு லெனின் சிவத்தின் 'ரூபா' திரைப்படம் வந்தபோது அது தனது வாழ்வின் பாதிப்பில் இருந்து உருவான கதையென்று தனுஜா தனது முகநூலில் எழுதியிருந்ததும் நினைவிலிருக்கிறது (?). இப்படியாகத் தொலைவிலிருந்து நான் அவதானித்துக் கொண்டிருந்த தனுஜாவினது சுயவரலாற்றுப் …
-
- 4 replies
- 1.6k views
-
-
வட்டுக்கோட்டை தீர்மானம், திம்புக் கோட்பாடுகள்,சுதுமலைப் பிரகடனம், நந்திக்கடல் கோட்பாடுகள் 184 Views அண்மையில் உலகெங்கும் வெளியிடப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்ற ‘பிரபாகரன் சட்டகம்’ நூலிற்கு பெண்ணிய உளவியலாளரும், நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளருமான பரணி கிருஸ்ணரஜனி எழுதிய அறிமுக உரை இது. தமிழீழ செல் நெறி- யாப்பு – மறை : பரணி கிருஸ்ணரஜனி சட்டகத்துக்குள் நுழைய முன்…… இது பதிப்புரை அல்ல, ஏனெனில் நாம் பதிப்பாளர்கள் அல்ல. இது இந்நூலிற்கான அறிமுக உரையும் அல்ல. இந்நூலிற்கான தேவை உருவாகிய வரலாற்றுப் பின்புலத்தை சுருக்கமாக விளக்குவது மட்டுமே இப்பதிவின் நோக்கம். ஓர் இனம் …
-
- 1 reply
- 980 views
-
-
சூரன் சுயசரிதை வரலாற்றை வாசித்தல் - 05 1. "எனது பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் கோயிலுக்குள்ளே செல்லட்டும். ஆனால் நான் உங்கள் கோயில்களுக்கு வரமாட்டேன். ஏனெனில் உங்கள் கோயில்களுக்குள்ளே சுத்தம் மிகக்குறைவு" என்று ஒடுக்கப்பட்ட மக்களை கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கலாமா என்ற விவாதங்கள் 1940களில் நடந்தபோது சூரன் அவர்கள் கூறிய கருத்து ஒருகாலத்தில் பிரபல்யமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவ்வளவு தீர்க்கமாய்க் கூறிய சூரன் நம் இலங்கை வரலாற்றில் முக்கியமானவர். ஒருவகையில் பண்டிதர் அயோத்திதாசர் போல மறைக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்காரர் என அவரைச் சொல்லலாம். சூரனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் 1900களின் தொடக்ககாலங்களில் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றின் குறுக்குவெட்டு முகத்தைப் பார்க்க…
-
- 0 replies
- 859 views
-
-
தெரிந்தும் தெரியாத தமிழ் - நுாலாய்வு: கிருஸ்ணா நூல் வாங்க: kindle திரு. வி.இ.குகநாதன் அவர்களது தெரிந்தும் தெரியாத தமிழ் என்ற நுாலை kindle மூலம் அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்நுாலைப் படித்த பின்பு அதனைப் பற்றி குறிப்புரை ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும் என்ற நோக்கம் தோன்றவே இக் கட்டுரையை எழுத முனைந்துள்ளேன். ஒரு நுாலைப் படிக்கும் போதும் அதன் பக்கங்களைப் புரட்டும் போதும் முன் பின்னாகத் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த நுாலைக் கின்டிலில் (kindle) படிப்பதால் பக்கங்களைப் புரட்டினாலும் குழம்பி விடுமோ என்ற பயமும் இடையிடையே தோன்றவே செய்தது. ஆனாலும் ஒருவாறு முழுமையாகப் படித்து முடித்த பின்பே இக்கட்டுரையை எழுதுகின்றேன். …
-
- 0 replies
- 1k views
-
-
எமது சூழலியல் எனும் பெரும் பரப்பை காரணகாரியங்கள் ஊடாக உற்று நோக்கும் போது காலநிலைமாற்றம்,விவசாயப்பயிர்செய்கை,சுற்றுலாத்துறை,நீர்,வளி மாசாக்கம்,மண்ணியல் என்பன பாரிய அளவில் கோடிடப்பட்டு பார்க்கப்பட வேண்டியவை. அந்தவகையில் உலகப்போக்கோடு ஒத்து மாறுதல் அடைகின்ற காலநிலைமாற்றம் எம்சூழலிலும் செல்வாக்கு செலுத்துகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது.அதனை நடைமுறையிலும் எம் சமூகம் கண்ணூடு கண்டுகொண்டிருக்கின்றது.இத்தகைய காலநிலை மாற்றத்திற்கு நாமும் பங்குதாரர்கள் என்பதில் மாற்றம் இல்லை.துமி எனும் பெரும் தேடல் செய்திப்பரப்பில் ஆராய்ந்திருக்கிறோம் வாசித்து பாருங்கள். வெளிவந்திருக்கிறது துமி மின்னிதழ் 15.0 இணையதளத்தில் சென்று பார்வையிட https://www.thumi.org …
-
- 0 replies
- 520 views
- 1 follower
-
-
வவுனியாவில் தாலம் ஓலை- 03 நூல் வெளியீட்டு நிகழ்வு.! வவுனியா மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் “தாலம்” ஓலை- 3 வெளியீட்டு விழா நிகழ்வு வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (15) இடம்பெற்றது. கூட்டுறவு சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.கலிஸ்ரஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக கூட்டுறவு உதவி ஆணையாளர் இந்திராசுபசிங்க கலந்து கொண்டார். நூலின் முதற்பிரதியை வவுனியா மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் பிரேமதாஸ் வெளியிட்டு வைக்க மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன பெற்றுக்கொண்டார். நூலிற்கான …
-
- 0 replies
- 621 views
-
-
கார்டன் வைஸ்சின் Cage – தமிழாக்கமான கூண்டு நடேசன் (Gorden Weiss) கார்டன் வைஸின் தமிழாக்கமான கூண்டு நூல் தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது. பல இடங்களில் அதன் ஆங்கில மூலத்தை பார்த்திருந்தேன். அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு நகர்ந்தேன் . ஆனால், கூண்டு என்ற அதன் தமிழாக்கம் பற்றி ஏன் தமிழ்த் தேசியர்கள் பலர் பேசவில்லை என ஆச்சரியப்படுகிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் புத்தகங்களை வாசிக்காதவர்கள். அல்லது ஆனந்தவிகடன் , குமுதத்தின் வாசகர்களாக இருந்தாலும் அவர்களில் ஒரு வீதத்தினராவது இது பற்றிப் பேசியிருந்தால் புத்தகத்தைப் பற்றி எனக்கும் தெரிந்திருக்கும். முக்கியமாக தமிழர்கள் மத்தியில் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. பின் அட்டைக்கு பேராசிரியர்…
-
- 0 replies
- 829 views
-
-
தீபச்செல்வனின் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை நூலுக்கு இன்று சென்னையில் அறிமுகக்கூட்டம்.! ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற கவிதை நூலுக்கான அறிமுகக்கூட்டம் இன்று (5/12)மாலையில் சென்னையில் இடம்பெறுகின்றது. கவிஞர் வெயில் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், ஊடகவியலாளர் செந்தில் கரிகாலன், கவிஞர்பச்சோந்தி, சந்துரு மாயவன், கவிஞர் மனுஷி ஆயோர் கவிதை நூல் குறித்து உரையாற்றுகின்றனர். சென்னை வேளச்சேரியில் அமைந்திருக்கும் யாவரும் பதிப்பகத்தின் பி பார் புக்ஸ் புத்தகக் கடையில் நடைபெறும் இந்த கவிதை நூல் அறிமுகக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://vanakkamlondon.com/literature/2020/12/93314/
-
- 0 replies
- 672 views
-
-
"வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" நூல் திறனாய்வு! பேரா.நா.மணி 1998 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பர்துவான் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத கால பணியிடை பயிற்சி. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில், தமிழ் நாட்டைச் இருவர் மட்டுமே பிரபலமாக அறியப்பட்டு இருந்தனர். ஒருவர் ஜெயலலிதா மற்றொருவர் வீரப்பன். அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து வரை மட்டுமல்ல, பன்னாட்டு அளவிலும், வீரப்பன் நன்கு அறியப்பட்டே இருந்தார். வீரப்பனால், அச்சமும் பீதியும் நிறைந்த காலம் ஒன்று இருந்தது. அதனால் அவனைப் பற்றிய வீர தீரக் கதைகளும் சேர்ந்தே எழுந்து இருந்தது. எது உண்மை? எது பொய்? யாருக்கும் தெரியாது. வனத்துறை, காவல் …
-
- 1 reply
- 6.2k views
-
-
வரிக்குதிரையான புத்தகம் - ஜே.ஜே சில குறிப்புகள் நடேசன் http://puthu.thinnai.com/wp-content/uploads/2020/11/IMG_20201105_114558_HDR-1-768x1024.jpg ஜோசஃப் ஜேம்ஸ் என்பவரைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே குறிப்புகள் என்ற நாவலை வாசித்தபோது பேனாவாலும் ஹைலைட்டராலும் எனக்குப் பிடித்த பகுதிகளைக் கோடிட்டேன். புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களில் கோடாகி, புத்தகத்தின் பக்கங்கள் வரிக்குதிரையின் தோலாக மாறிவிட்டது. மீண்டும் வாசித்தேன். அப்பொழுது மேலும் கோடுகளிட்டேன் . இதுவரை நான் எனது பாடப்புத்தகங்களைக் கூட இப்படிக் கோடிடவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை வாசிக்கக் கையில் எடுத்துவிட்டு, வார்த்தைகள் புரியவில்லை என வைத்துவிட்டேன் . இம்முறை கூர்ந்து வாசித்தபோது,…
-
- 0 replies
- 562 views
-
-
தமிழ் அற இலக்கியங்களில் அரசியல்.! மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய தொடர்ச்சியை உடைய தமிழிலக்கிய இலக்கண வரலாற்றில் இலக்கிய ஆய்வுகளின் தொடக்கப் புள்ளியை நம்மால் சரியாக வரையறுக்க முடியவில்லை என்றாலும் அதன் முதிர்நிலையைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் வழி அறிய முடிகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியலைத் தொல்காப்பியர் ஓர் இலக்கியவியல் கல்வியாகவே முன்வைக்கின்றார். கவிதைகளின் உள்ளடக்கம், வடிவம், உத்திகள், மெய்ப்பாடு முதலான இலக்கியக் கோட்பாடுகளைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் விரிவாகப் பேசுகிறது. பொருளதிகாரச் செய்யுளியலில் இடம்பெறும் நோக்கு என்ற உறுப்பு இன்றைய இலக்கியத் திறனாய்வின் அடிப்படையில் இயங்குவதே. ஆக இலக்கிய இலக்கணப் பழமை மட்டுமல்லாமல் இலக்கிய …
-
- 0 replies
- 1.8k views
-
-
உலக அரசியலை புரட்டிப் போடுமா ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் நூல் 3 மில்லியன் பிரதிகள் விற்பனைக்கு -அ.நிக்ஸன்- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) புறொமிஸ் லான்ட் (A.Promised Land) (வாக்குறுதியளிக்கப்பட்ட பூமி) என்ற அமெரிக்க ஆட்சி பற்றிய நூல் ஒன்றை எழுத்தியுள்ளர். இந்நூல் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வோஷிங்கடன் டிசி நகரில் வெளியிடப்படவுள்ளது. 17ஆம் திகதி ஒபாமாவின் 58ஆவது பிறந்த நாளாகும். பிறந்த நாள் அன்று மூன்று மில்லியன் நூல்கள் விற்பனை செய்யப்படுமென நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படவுள்ள இந்த நூலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட அரசியல், பொ…
-
- 2 replies
- 736 views
-
-
இந்திய மொழிகளில் தமிழின் சாதனை; வெளிவந்தது மூன்றாவது முறையாக விரிவாக்கப்பட்ட ‘க்ரியா’ அகராதி: கரோனாவுடனான போராட்டத்தின் மத்தியில் வெளியிட்டார் ராமகிருஷ்ணன் வையாபுரிப்பிள்ளை ஆசிரியராகப் பங்கெடுத்து வெளிக்கொண்டுவந்த ‘தமிழ்ப் பேரகராதி’ (Tamil Lexicon) எக்காலத்துக்குமான ஒரு பெரும் சாதனை என்றால், தற்காலத் தமிழுக்கான ‘க்ரியா’ அகராதி நாம் வாழும் காலத்தில் ஒரு முக்கியமான சாதனை. அகராதிக்கான இலக்கணங்களை முழுமையாகக் கொண்டு, கச்சிதமான எழுத்துருக்களோடும் வடிவத்தோடும் அமைந்த ‘க்ரியாவின்’ தற்காலத் தமிழ் அகராதி இப்போது இன்னொரு மைல்கல்லை எட்டியிருக்கிறது; அது மேலும் விரிவாக்கப்பட்டு மூன்றாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இன்றைய தலைமுறையினரையும் நம்முடைய மொழி முழ…
-
- 0 replies
- 502 views
-
-
அந்த நிலவறை மனிதன் யார்? பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆர்தர் கானன் டாய்ல் படைத்த துப்பறியும் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ்தான், நவீன தடயவியல் என்ற புதிய அறிவுத்துறை உருவாவதற்கே வழிவகுத்தது. குற்றம் நடந்த தலம், குற்றம் நடந்த உடலைப் பரிசீலிப்பதன் வழியாக குற்றத்துக்கான சூழலையும் குற்றவாளியையும் நெருங்க முடியலாமென்ற சாத்தியத்தைச் சுட்டிக்காட்டியவர் ஷெர்லாக் ஹோம்ஸ். ஆர்தர் கானன் டாய்ல், ஷெர்லாக் ஹோம்ஸைப் படைத்ததற்கு ஒரு தசாப்தத்துக்கு முன்னர், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தனது மிகச் சிறந்த படைப்பான கரமசோவ் சகோதரர்களைப் படைத்துவிட்டார். ஷெர்லாக் ஹோம்ஸின் குற்ற ஸ்தலம் உடல் என்றால், தஸ்தயேவ்ஸ்கியின் ஆர்வம் உடலுக்குள் சற்றே ஆழத்தில் உள்…
-
- 1 reply
- 994 views
-
-
நான் ஸ்ரீலங்கன் இல்லை - தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்.! ஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ என்ற புதிய கவிதை நூலின் அட்டைப் படத்தை யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் வெளியாகி உலக அளவில் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. நடுகல் மூவாயிரம் பிரதிகளை தாண்டி, மூன்றாவது பதிப்பு காண்பதாக அண்மையில் தீபச்செல்வன் தெரிவித்திருந்தார். கவிதைகள் வாயிலாக பரவலாக பெரும் வரவேற்பை பெற்றுள்ள தீபச்செல்வனின் ஆறாவது கவிதை நூல் இது. இதற்கு முன்னதாக "எனது குழந்தை பயங்கரவாதி " என்ற கவிதை ந…
-
- 0 replies
- 1k views
-
-
-
மார்க்சியப் பார்வையில் அத்வைதம் விமர்சனம்.! இடதுசாரிகளிடையே தத்துவ விவாதங்கள் மிகமிகக் குறைவாக நடக்கின்ற இக்காலத்தில் தோழர் பி.இளங்கோ சுப்பிரமணியன் எழுதிய “மார்க்சியப் பார்வையில் அத்வைதம்” என்ற நூல் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கதே. தொடங்கினால் தான் நிறைகுறையை அறிந்து நீக்கிக் கொள்ள முடியும். தோழர் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி. இந்தியத் தத்துவங்களில் ஒன்றான அத்வைதத்தை இந்நூலில் விமர்சித்துள்ளார். அத்வைதம் ஒரு முன்னாள் தத்துவம். அது நவீன உலகின் தத்துவம் அல்ல (பக்கம் -47), என்பதே தோழரின் கருத்தாக இருக்கிறது. அப்படி இருக்க நவீன உலகில் காணப்படும் தத்துவத்தை விடுத்து இந்த அத்வைதத்தை ஏன் எடுத்து விமர்சித்துள்ளார் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. “பிரம்மம் ஒன்ற…
-
- 0 replies
- 927 views
-
-
குமிழி நாவல் மீதான உள்ளடக்க உரையாடல்: அசுரா நாதன் ஆயுதப் போராட்ட அனுபவங்களை சுமந்து வரும் இலக்கியப் பிரதிகளின் தொடர்ச்சியாக ‘குமிழி’ எனும் நாவல் வெளிவந்திருக்கிறது. 1985ம் ஆண்டில் வெளிவந்த கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ எனும் நாவலின் உரையாடல் பகுதியாகவும், தனித்துவமாகவும் ரவியின் ‘குமிழி’ நாவலின் சித்தரிப்பு அமைந்திருக்கிறது. கோவிந்தனும், ரவியும் இருப்பினும் ‘புளட்’ இயக்க தோழர்களான இரண்டு படைப்பாளிகளின் காலமும், தேர்வும் வெவ்வேறானவை. கோவிந்தன் இலட்சிய வேட்கையுடன் புரட்சிகரமான ஒரு ‘மாளிகையை’ கட்டியெழுப்பியவர். தாம் மேற்கொள்ளும் விடுதலைப் போராட்டமே சர்வதேசப் புரட்சிக்கும் சாதகமாக அமையப்போகிறது, அதற்காகக் கட்டப்பட்ட ‘மாளிகையே’ புளட் எனும் அமைப்பாக நினைத…
-
- 0 replies
- 832 views
-
-
நடிகர் பொன்வண்ணன் & பதிப்பர் ஒளிவண்ணன் பேரழைப்பு : தமிழர் வரலாற்று மா.சோ.விக்டர் புத்தகங்களை பெற வரலாற்று பெரும் ஆவணங்களாக ஐயா மாசோ விக்டர் அவர்களின் புத்தகங்களை பெற மிகப்பெரிய வாய்ப்பு இது. அவருடைய 124 புத்தகங்களை வெளிக்கொண்டு வரும் விதமாக முதல் தவணையாக 25 புத்தகங்களை கொண்டுவருவதோடு மட்டுமின்றி அந்த புத்தகங்களை முன்பதிவு திட்டத்தில் மிகக்குறைந்த விலையில் பெறுவதற்கு முன்பதிவு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. சுமார் 14000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் இந்த முன்பதிவு திட்டத்தின் மூலமாக 8000 ரூபாய்க்கு வழங்க இருக்கிறார்கள். இந்த திட்டம் சம்மந்தமான புத்தகங்கள் இந்த காணொளியில் இறுதியில் அந்த புத்தகங்களில் அட்டைப்படங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறத…
-
- 0 replies
- 757 views
-