மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
எந்த ஒரு கலையில் தேர்ச்சி பெறவும், எந்த ஒரு தொழிலில் வளர்ச்சி பெறவும். அன்னை கலைவாணியின் அருள் அவசியம். அந்த கலைவானியையே கண்ணால் கண்ட ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே நமது கர்ம வினைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும். குமர குருபரர். 17 ம் நுற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஞானி. முருகன், தேவி சரஸ்வதி இருவரையும் கண்ணால் கண்டவர். பல அதிசயங்களும், அற்ப்புதங்களும் செய்தவர். இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் அமைந்தது எனப்படுகிறது. கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுர…
-
- 0 replies
- 9.8k views
-
-
உறவுகளை ஒன்றிணைக்கும் நவராத்திரி! தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைப்போலவே நவராத்திரி விழாவையும் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அதாவது, அக்டோபர் மாதம் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து, விஜயதசமி வரை ஒன்பது நாட்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் பலதரப்பட்ட 'தீம்'களில் கொலுவைத்து கொண்டாட்டம் நடக்கிறது. வட மாநிலங்களில் துர்கா பூஜை என்கிற பெயரிலும், தென் மாநிலங்களில் நவராத்திரி என்கிற பெயரிலும் இந்த கொலுவானது வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, நங்கநல்லூரில் இருக்கும் நித்யானந்த் - மைதிலி தம்பதியரின் வீட்டில் மூன்று தலைமுறையாக நவராத்திரிக்கு தொடந்து கொலு வைத்து கொண்டாடி வருகிறார்கள். அவர்களிடம் பேசினோம். ''நவராத்திரியைப் பொறுத்தவர…
-
- 4 replies
- 1.5k views
-
-
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருக்கின்றன. விநாயகருக்காக எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பது பற்றி சில யோசனைகள்; ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் அதிகாலையில் எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். புதிய களிமண் பிள்ளையாரை அரிசிக்கு நடுவ…
-
- 0 replies
- 1.6k views
-
-
வரலாற்றை பறைசாற்றும் கலை கோயில் நகரம் “பெளூரு”[ வெள்ளிக்கிழமை, 11 செப்ரெம்பர் 2015, 06:18.33 AM GMT +05:30 ] இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில், ஹசனா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் தான் பெளூரு(Belur). இது சிறிய தாலுகா ஆனாலும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. பெங்களூரிலிருந்து 222 கி.மீ. தூரத்திலும், மைசூரிலிருந்து 149 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பெளூருவில் சென்னகேசவா கோவில் மிகவும் பிரபலமானது. சென்னகேசவா கோவில் (Chennakesava Temple) ஹோய்சாலா விஷ்ணுவர்தன் (Hoysala Empire ) என்ற பேரரசரால் 1116 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தகோவில் 37 மீட்டர் உயரம் உடையது. ஒரு விசாலமான மேடையின் மீது கட்டப்பட்டது போல அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த "ஓம்" போன்ற ஒலி சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் வெளிவரும் காந்த அலைவரிசையின் மூலம் உருவாகும் அதிர்வுகளை வைத்து ஓர் ஒலியை கண்டறிந்தனர்.சூரியனின் வளிமண்டல வெளிப்புறத்தில் இருந்து பெரிய காந்த சுழல்கள் எனப்படும் ஒளிவட்ட சுழல்கள் கண்டறியப்பட்டது. இது ஒலியின் அலைவரிசையை போல பயணிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இசை சரங்களில் இருந்து அதிர்வுகள் வெளிவருவதை போன்று அது இருந்தது.விண்வெளி வெற்றிடமாக இருப்பதால் சப்தத்தை பதிவு செய்ய முடியாது. இதனால் சூரிய…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
தனிமை சிலருக்கு முடிவில்லா வெற்று மனப்பயணங்களுக்கு இட்டுச்செல்லும் அற்பதருணம்.. ஆனால் உண்மையில் தனிமை ஓர் நிகரற்ற பொற்தருணம்! ஆம்! தனிமை நம் ஆழ்மனதின் திறவுக்கோல்! நம்மை நாமே உரசிப்பார்க்கும் உரைக்கல்! மனத்தை பேச வைக்கும் நரம்பில்லா நாக்கு! கருவறையின் நிம்மதியை உணரச்செய்யும் தாய்!! தெளிவென்னும் திசைக்காட்டும் கலங்கரை! பேசா ஆசிரியன்!! தனிமையை ரசியுங்கள்!! தனிமையால் நல்வழிப்படுங்கள்!!
-
- 1 reply
- 763 views
-
-
யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியின் தாய் வீடான இமயமலையில் சிவசக்தி வாசம் செய்யும் திருக்கயிலாயம் மற்றும் அநேக புண்ணிய தலங்கள் அமைந்துள்ளன அவற்றுள் நான்கு முக்கிய தலங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு ஒரே சமயம் தலயாத்திரை செல்வது சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படுகின்றது. இந்த தலங்கள் அனைத்தும் உத்தரகாண்ட பகுதியில் அமைந்துள்ளதால் இந்த யாத்திரைஉத்தரகாண்ட யாத்திரை என்றும் அழைக்கப்படுகின்றது. ஆதிகாலத்தில் இருந்தே இந்த தேவபூமியில் பனி மூடிய சிகரங்களின் அருகாமையில் அமைந்துள்ளன இந்த புண்ணிய தலங்களுக்கு அநேகம் பக்தர்கள் யாத்திரை செய்து ஆண்டவன் …
-
- 9 replies
- 12.2k views
-
-
தேரடியில் காலையிலே நான் அழுத வேளையிலே நீ திரும்பி பார்க்கவில்லை முருகா உன் காலடியில் நானிருந்து கண் சொரிந்த போதினிலே கண்டு மனம் இரங்கவில்லை முருகா கண் திறந்து பார்க்கவில்லை முருகா என்னை கண்டு மனம் இரங்கவில்லை முருகா நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு தொல்லையற்று போகும் என்பார் முருகா நான் வெள்ளை மணல் மீது உருண்டு வேலவனே என்று அழுதேன் துள்ளி வந்து சேரலையே முருகா வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே வேறிடத்தில் நீ ஒழித்தாய் முருகா நீ ஏறி வந்த தேர் இருக்கு இழுத்து வந்த வடம் இருக்கு எங்கையடா போய் ஒழித்தாய் முருகா செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில் உந்தன் அருள் வேண்டுமடா முருகா நீ வந்திருந்து பூச் சொரிந்தால் வாசலிலே கை அசைத்தால் வல்ல பக்தர்கள் வெல்லு…
-
- 12 replies
- 1k views
-
-
வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடந்த கொடியேற்ற நிகழ்வு இன்று திங்கட்கிழமை பகல் மிகவும் பக்திப்பூர்வமாக இடம்பெற்றது. அடியார்களின் அரோஹரா கோசத்தின் மத்தியில் ஆலயத்தின் பிரதமகுரு பிரம்மஸ்ரீ எஸ்.அகிலேஸ்வரக்குருக்கள் கொடியை ஏற்றி வைத்தார். காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. தனியார் மினி பஸ்கள் மற்றும் இலங்கை போக்ககுவரத்து சபையின் பஸ்கள் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அடியவர்களின் வசதி கருதி சேவையில் ஈடுபட்டன. http://www.malarum.com/article/tam/2015/08/17/11404/தெல்லிப்பழை-துர்க்கையம்மனுக்கு-கொடியேற்றம்-.html#sthash.9DNNsZ1Q.dpuf
-
- 4 replies
- 748 views
-
-
வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை மிகவும் பகபூர்வமாக இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நண்பகல் 11 மணியளவில் கந்தன் வள்ளி தெய்வயானையுடன் அலங்கார திருத்தேர் ஏறி வெளி வீதியுலா வரும் நிகழ்வு இடம்பெற்றது. இம்முறை ஆலய திருவிழா தேர்தல் காலத்தில் இடம் பெற்றமையால் அரசியல்வாதிகளான மாவிட்டபுரத்தை சொந்த இடமாகக் கொண்ட மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் வட மாகாண ஆளுநர் பளிகக்காரா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வட மாகாண துணைத்தூதுவர் ஆ.நடராஜாவும் கலந்துகொண்டார்கள். t: http://www.malarum.com/article/tam/2015/08/13/11375/மாவிட்டபுரம்-கலந்துசுவாமி…
-
- 5 replies
- 1.9k views
-
-
இமயமலையில் மறைந்து இருக்கும் மகா யோகிகளின் புனித பூமி[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 11:01.54 PM GMT +05:30 ] இமயமலையின் பனி குவியலுக்குள் பல கோடி ரகசியங்கள் புதைந்துள்ளன. அவைகள் எளிதில் கண்டுபிடிக்க கூடியவையல்ல. மனிதனின் விஞ்ஞான சக்தியையும் மீறியவையாக அவைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் கயான்கன்ஜ் . கயான்கன்ஜ் என்பது இந்திய மற்றும் திபெத்திய வரலாற்றின் படி மிகவும் பழமையான நகரமாகும். இந்நகரம் இமயமலையில் மறைந்துள்ளதாகவும் இந்நகரத்தில் சித்தர்களும் யோகிகளும் வாழ்ந்து வருவதாகவும் நம்பப்பட்டு வருகிறது. இந்த நகருக்கு சம்பலா, சங்கிரிலா, சித்தாஸ்ரம் என பலவிதமான பெயர்கள் உள்ளன. எனினும் இந்த நகரம் எங்குள்ளது என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நகரத்தை பற்றிய செய்திகள் பல பு…
-
- 3 replies
- 6.2k views
-
-
இந்து மதத்தில் பற்றுள்ள வெள்ளையர்கள்…. August 05, 20153:08 pm ” தீட்சை பெறாவிட்டாலும் பிறக்கும் குழந்தை இந்து ஆகவே பிறக்கும் ” அதனாலே கிறிஸ்துவன் ஞானஸ்தானம் செய்து கிறிஸ்தவ பிள்ளை ஆகின்றான். இஸ்லாம் சுன்னத் செய்து இஸ்லாமிய பிள்ளை ஆகின்றான் இந்துக்களுக்கு இவை அவசியம் இல்லை காரணம் பிறவிலேயே நாம் இந்து இந்து மதத்தின் பண்பாடு மறக்காமல் இந்து மதத்தை பாதுகாத்து வரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள்…! http://www.jvpnews.com/srilanka/119578.html (பொட்டு வைக்க இந்து பாரம் பரியத்தை மறக்க முற்படும் உலக வாழ் ஒரு சில இந்துக்குடும்பங்களின் முன்......)
-
- 0 replies
- 472 views
-
-
மதம் என்றூ சொன்னாலும் மதம் இல்லா மதம் அன்பே மதம் என்று சொன்னாலும், நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் 1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம். 2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம். 3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம். 4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம். 5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம். 6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை. 7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு. 8. இயற்கையாய் தோன்றியவற்றில் …
-
- 0 replies
- 924 views
-
-
தாலியும் குலக்குறிச் சின்னமும் ஞா. ஸ்டீபன் தமிழ்ப் பண்பாட்டில் தாலி பழங்காலந் தொட்டு வழக்கில் உள்ளதா என்பது குறித்து பல விவாதங்கள் தமிழில் நடந்துள்ளன. மா. இராசமாணிக்கனார், தமிழ்ப் பண்பாட்டில் தாலி பிற்காலத்தில் குறிப்பாக 12ஆம் நூற்றாண்டு வாக்கில் வழக்கிற்கு வந்தது என்றும், அதற்குமுன் அது வழக்கில் இல்லை என்றும் உறுதிபடக் கூறினார். இதற்கு மாறாக ம.பொ.சி. சங்ககாலத்திலிருந்து தாலி வழக்கிலிருந்தது என்றும், தாலி தமிழனின் தனித்த பண்பாட்டு அடையாளம் என்றும் வாதிட்டார். வெறும் இலக்கியச்சான்றுகளை மட்டும் சான்றாதாரங்களாகக் கொள் ளாமல் மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல், சமூகவியல் சார்ந்த மெய்ம்மைகளையும் குறுக்கு நோக்கீடு செய்து புதிய வெளிச்சம் பாய்ப்பது இன்றியமையாதது. தற்கால வழக்க…
-
- 0 replies
- 19.4k views
-
-
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று …
-
- 2 replies
- 970 views
-
-
உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது. குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது. யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும், உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை. இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது. மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்…
-
- 0 replies
- 2.7k views
-
-
உண்மையை உணர்வதற்கு மனமற்ற பரிசுத்த நிலை கோரப்படுகிறது. மனத்தின் செயல்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் உண்மையை உணர்வது இயலாது என்பது நம் ஞானச் சான்றோர்களின் கூற்றாகும். நடைப் பயிற்சியைப் போல யோகச் செயல்முறைகளும் உடம்பை ஓம்புவதற்கே. ஆனால் உண்மையை உணர்வதற்கு ‘மனமிறத்தல்’ அவசியமாகிறது. “சிந்தை இறப்போ நின்தியானம்” என்பார் தாயுமானவர். “திரையற்ற நீர்போல சிந்தை தெளிவார்க்குப் புரையற்றிருப்பான் எங்கள் புரிசடையோனே” என்பார் திருமூலர். “மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால் இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே” என்பார் அருணகிரியார். இவ்வாறு இவர்கள் கூறுவதற்குக் காரணம் மனமானது நினைவுகள், அனுபவம், அறிவு இவற்றின் மொத்த உருவான நான், எனது என்னும் செருக்குகளுக்கு இடமாக இருப்பதே. மனம் ஆடி ஓய்…
-
- 1 reply
- 980 views
-
-
குரு பெயர்ச்சி பலன்கள் வணக்கம்! 14.07.2015 செவ்வாய்க்கிழமை காலை 08.16 மணி அளவில் குரு பகவான்,கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினம், மிதுன இராசி, சிம்ம லக்கினம். குரு பகவான், மக நட்சத்திரத்தில் பிரவேசம் செய்கிறார். லக்கினத்தில் சுக்கிரனுடன் அமர்ந்த குரு, 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களை பார்வை செய்வதால் நாட்டில் மக்கள் வளமோடும், நலமோடும் இருப்பார்கள். பொருளாதாரம் பெருகும். நம் நாட்டின் உயர்ந்த வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சரியமாக பார்க்கும். பல துறைகள் முன்னேற்றம் அடையும். கலை உலகில் உள்ளவர்களுக்கு சற்று சிரமமான நேரம் இது. காரணம் சுக்கிரன், குரு இணைந்து இருப்பது நன்மை இல்லை. சிம்ம சுக்கிரன் பெரும் மழை, வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு அறி…
-
- 4 replies
- 1.6k views
-
-
நான் ஏன் இந்துவாகினேன்? -மஹாதேவா தாஸ் (ஒரு ஜெர்மனியரின் உண்மைக்கதை ) [Thursday 2015-06-11 22:00] என்னுடைய இயற்பெயர் மேஸ் வோன். நான் ஜெர்மனியைச் சேர்ந்தவன். சிவபெருமானின் பேரருளால் என்னுள் நிறைந்திருந்த தமஸ்குணங்கள் நீக்கப்பட்டு, என்னுள் சத்வகுணங்கள் நிறைந்தன. அதைப் பற்றி உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய வாழ்க்கை சிறப்பாக உள்ளது. ஆனால், என்னுடைய கடந்த கால வாழ்க்கை மிகவும் வருத்தமான நிலையில் அமைந்திருந்தது. அர்த்தமே இல்லாது அறியாமையோடு என் காலங்களைக் கழித்திருந்தேன். கேளிக்கையும் கூத்தும் தான் வாழ்க்கை என்று நான் நினைத்து வாழ்ந்தேன். சுதந்திரம் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு, என்னை நானே ஏமா…
-
- 7 replies
- 1.3k views
-
-
மெளனிப்பு ஏன்..? பாசமான தந்தை, தனது மகனை அழைத்துக்கொண்டு ஒரு காட்டிற்குச் சென்றார். அங்கே மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும், ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு தூரத்தில் ஆந்தை கத்துவதும், நரி ஊளையிடுவத…
-
- 2 replies
- 2.6k views
-
-
பெரியாரும் பிராமணர்களும் ஆர். அபிலாஷ் தி.கவின் தாலியறுப்பு நிகழ்வை ஒட்டி இந்துத்துவர்கள் பெரியார் சிலைக்கு மூத்திர அபிசேகம் செய்து பரபரப்பை கிளப்பினர். அன்றைய நாள் முழுக்க முகநூலில் நண்பர்கள் தொடர்ச்சியாக பெரியாரை புகழ்ந்தும் அவரது மேற்கோள்களை நினைவுகூர்ந்தும் டைம்லைனை ஒரு பக்கம் நிரப்ப இன்னொரு பக்கம் பெரியார் எதிர்ப்பாளர்களும் சின்ன அளவில் தம் கோபத்தை காட்டினர். இரண்டாவது தரப்பை சேர்ந்த என் பிராமண நண்பர் ஒருவர் மிக மோசமான வசை மொழியில் பெரியாரை தாக்கி என் முகநூல் பக்கத்தில் பின்னூட்டம் இட்டார். அவர் படித்து ஒரு உயர்பதவியில் உள்ள முதிர்ந்த மனிதர். ஏன் இவ்வளவு ஆத்திரப்பட்டு பண்பாடின்றி பேசுகிறார் என எனக்கு வியப்பேற்பட்டது. தான் வாழ்வின் பெரும்பகுதி திகவினரின் இந்…
-
- 1 reply
- 1.7k views
-
-
காதல் Vs திருமணம் ஒரு ஞானியை அணுகிய சீடன், 'காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன'வெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜா தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது..!" என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.... சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜா…
-
- 4 replies
- 1.3k views
-
-
வேதங்கள் செம்பரிதி இதுவரை நாம் இந்திய சமயங்களும் இந்தியாவுக்குரிய சமய மரபுகளும் ‘மனிதன்’ என்பானை மையப்படுத்தும் சிந்தனை முறைமைகளாய் இருப்பதைப் பார்த்தோம்; நடைமுறையில் இந்த சமயங்கள் பல்வேறு சமூக, கலாசார அமைப்புகளுடன் அமைதியான வகையில் இணங்கியிருந்ததையும், இவை தத்தம் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டதையும் பார்த்தோம். இந்த கட்டுரையின் முந்தைய பகுதி ஒன்றில், பிற சமயங்களைப் போல் இந்து சமயத்தில் ஒற்றைப் பெருநூல் என்று எதுவும் அனைத்தைக் காட்டிலும் உயர்ந்த மறைநூலாய் கருதப்படுவதில்லை என்பதை அதன் தனித்துவம் என்று எழுதியிருந்தேன். ஆனால், மனிதனையோ சமூகத்தையோ சமயத்தையோ பேசும் அனைத்து மரபார்ந்த பார்வைகளும் வேதத்தைத் தம் ஆதாரமாய் சுட்டுவதையும் நாம் பார்க்கிறோம். அப்படியானால் ‘வேதங…
-
- 4 replies
- 14.4k views
-
-
நான் சிறு வயதில் எழுதிய கவிதையொன்றை பகுத்தறிவுப் பகுதியில் உங்களோடு பகிர்கிறேன் பரமனைத் தேடி மேலைத் திசையினன் அம்புலி சென்று விரைந்து திரும்பி விட்டான்-நாம் பாலைக் கறந்ததைக் கல்லினில் வார்த்துப் பரமனைத் தேடுகிறோம் வேலைக் குறித்தெறி தோழ இம் மூட விழல்களைச் சாய்பதற்கே-உன் வாலைப் பருவம் எதற்கு விழித்தெழு வாய்மையுரைத் திடுவோம் எல்லையிலாப் பிரபஞ்ச இலக்கணம் இன்றவன் கண்டுவிட்டான்-நாம் கல்லதன் மீதினிற் காசையெறிந்து கடவுளைத் தேடுகிறோம் தொல்லையிலாது சுகமுற வாழத் துறை பல கண்டு விட்டான்-நாம் செல்லக் கதிர்காம யாத்திரை ஏறிச் செடில்தனில் தொங்குகிறோம். தத்வமஸி எனச் சாற்றிய மாமறை தன்னை மறந்து விட்டோம்-பல வித்தைகள் செய்திடுவோர்தனை நம்பிடு வீணர…
-
- 0 replies
- 572 views
-
-
காட்சிக்கேது எல்லை என்னிலும் மேலொரு சக்தி இருப்ப துறுதி யென்றாகிடில் - அஃதை பின்னமிலாதுடன் பற்றி - அது பேயதென்றாலும் பிரமமென்றாலும் பொன்னடி போற்றிடுவேன் யான் - எந்தப் போழ்திலும் அஃதின் நினைவகலாதே சின்னத்தனங்கள் விடுத்தே - என்றும் சிந்தையினை அஃதின் மீதினில் வைத்தே வாழுவன் யான் என நெஞ்சில் - ஒரு வன்மம் எனக்கு இருந்தது கண்டீர் நாழும் பொழுதும் இதுவே - நான் நாடிய தேடிய உண்மை அதுவே பாழும் மனதினில் என்றும் பணம், புகழ், நாரியர் ஆசையை வென்றும் ஆழும் பிரமத்தியல்பை - நன்கு ஆழவுணர்ந்து அதில் மனம் போக்கின் முத்தியெனப் பல பேர்கள் முழக்கமிட்டே பல சொல்லுவார்கள் கற்றிடலாமதை இன்றே - உடன் கண்டிடலாமக் கடவுளை நன்றே என்று இருந்திடுங்காலை இவன் ஒருவன் வந்து …
-
- 0 replies
- 572 views
-