மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடித்திருவிழா, இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர், ஆயர் யோசேப் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை ஆண்டகை தலைமையில், சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் இணைந்து, இன்று காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருவிழா திருப்பலியினை தொடர்ந்து, மடு அன்னையில் திருச்சொரூப பவனியும் மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம்பெற்றது. இதில் நாடெங்கிலும் இருந்து வருகை தந்திருந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மடு அன்னையின் ஆசியை …
-
- 0 replies
- 377 views
-
-
தியானம் :: எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி.? தியானம் செய்ய உட்கார்ந்தாலே, எண்ணங்கள் தாறுமாறாக ஓடுகிறதா உங்களுக்கு ? இந்த எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி? சத்குரு இதில் தரும் விளக்கத்தைக் கேட்டு தெரிந்துகொள்வோம்... 1) முதலில் எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே ஒரு எண்ணம்தான். எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது என்று தொடங்கிவிட்டால் அதற்கு முடிவே கிடையாது. அது ஒரு முடிவில்லாத போராட்டம். அதற்கு ஒரு வழியே யோகா. எண்ணங்களை தொடர்ந்து இருக்க அனுமதியுங்கள். அவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அது தானாகவே அதன் வழி தொடரட்டும். எண்ணங்கள் இருக்கின்றன அதை பின் தொடர வேண்டாம் என்ற விழிப்பு நிலை உணர்வு மட்டும் உங்களுக்கு இருக்க வேண்டும். மெல்ல, மெல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிழக்கிலங்கை திருப்படை கோயில்கள் By- கெளரி புண்ணியமூர்த்தி , மைலம்பாவெளி, தன்னாமுனை மட்டக்களப்பு. இலங்கையின் கிழக்குக் கரை யோரத்தில் முருக வழிபாடு மிகத் தொன்மைக் காலம் முதலாக நிலைபெற்று வந்துள்ளது. அப்பகுதியிற் காணப்பட்ட பிராமிச் சாசனங்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன. மட்டக்களப்பு மான்மியமானது கிழக்கிலங்கை முருகனாலயங்கள் பற்றியும் அவற்றிற்கான மன்னர்களது திருப்பணிகள் மற்றும் மானியங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. அவ்வாலயங்களில் காணப்படும் சாசனங்கள் சற்றுப் பிந்திய காலத்திற்குரியனவாக காணப் படுகின்ற போதிலும், அக்கோயில்களிலே பின்பற்றப்படுகின்ற வழிபாட்டு முறைகள் பாரம்பரியம…
-
- 0 replies
- 1.6k views
-
-
கார்த்திகை தீபத்திருநாள் நடத்துவது ஏன்? டிசம்பர் 04,2014 கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரதகனம் நடத்தினார். திரிபுரதகனத்தின் போது, சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி, ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தீய சக்திகளுக்கு அக்னி பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின் அந்த பிரகாசத்தினை வழிபடும் விதத்தில் தான் கார்த்திகை தீப உற்சவம் கொண்டாடப்படுகின்றது என்கிறது. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதி…
-
- 0 replies
- 822 views
-
-
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்: லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர் திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவில் நாள்தோறும் காலையில் உமையாளுடன் சந்திரசேகரரும், மாலையில் பஞ்ச மூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் வீதிஉலா வந்தனர். 5-ம் நாள் இரவு வெள்ளி ரிஷப வாகனத்திலும…
-
- 0 replies
- 399 views
-
-
* நீ விரும்பியதையெல்லாம் கடவுள் தரமாட்டார். உன் தகுதிப்படியே தான் அவர் அருள்புரிகிறார். கடவுளின் அருளுக்கு உன்னைப் பாத்திரமாக்கிக் கொள். * முதலில் உன்னுள் உள்ள பொய்யானவை, இருளானவை ஆகியவற்றையெல்லாம் கண்டுபிடித்து, அவற்றை பிடிவாதமாக விலக்கி வெளியேற்று. அப்போதுதான் நீ ஒளி பெற்ற தெய்வ சக்தியை உணர முடியும். * "நீங்கள் தான் எனக்கு வேண்டும் என்று கடவுளிடம் உறுதிப்பாட்டுடன் சொல்வீர்களானால், உங்களை எப்போதுமே நேர்மையாக இருக்கச் செய்யும்படியான சூழ்நிலைகளை கடவுளே அமைத்துத்தருவார். * தெய்வ சக்தியை, உன்னுள் பிரதிஷ்டை செய்ய விரும்பினால், நீ உடல் எனும் கோயிலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். * உங்கள் கரங்களை எதிரிகளிடம் நீட்டாதீர்கள். அவர்கள் முன் அப்பழுக்கில்லாமல் நடந்து கொள்ள…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 369 views
-
-
உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனுமாகி நிலவுநதி அரவுபுனை நிருமலனுமாகி அலகிலா சோதியாய் அம்பலத்தாடும் அரனாரின் நெற்றிவிழிப்பொறியின் உலகம்உய்ய வந்து உதித்தவர் முருகப்பெருமான் வெண்ணாவல் மரத்திலே வேல்வடிவாக முருகப்பெருமான் வீற்றிருந்த திருத்தலம் திருக்கோவில் ஆகும் அந்தரத்து தேவர்களும் அனுபவித்த விண்ணவரும் மண்ணவரும் வியந்துபோற்ற வடக்குமுகமாகவிருந்த வேற்பெருமான் தானாகவே கிழக்குமுகமாகத் திரும்பிய புண்ணியபதி திருக்கோவில். ஆடிஅமாவாசை அன்று ஆறுமுகமோடு ஆழ்கடலில் தீர்த்தமாடி பிதிர்கடன் நிறைவேற்றும் கோவில்.அன்று நாகர்முனை வெண்ணாவலம்பதி கந்தபாணத்துறை என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட திருக்கோவில் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. வரலாறு மட்டக்களப்பை பிரசன்னசித்து எ…
-
- 0 replies
- 667 views
-
-
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம். உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன். பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். த…
-
- 0 replies
- 784 views
-
-
சுற்றிலும் ஆட்கள் இருக்கின்றனர் என்பதாலேயே நாம் தனிமையாக இல்லை என்பதல்ல பொருள். ஒருவருக்கொருவர் எந்த அளவுக்குப் பிணைப்போடு இருக்கின்றோமென்பதில் அடங்கி இருக்கின்றது பிணைப்பின் தரம். சென்ற மாதத்தில் ஒரு பேச்சொலியைப்(ஆடியோ) பதிவு செய்து வெளியிட்டிருந்தேன். அதில் இப்படியாக முடித்திருப்பேன், “ஒவ்வொருவருக்கும் தத்தம் வாழ்வுக்கான பயனீடு(purpose) இருக்கும். இயன்றமட்டிலும் தனிமையைக் களைவதை என் வாழ்வின் பயனீடாக் கொள்வேன்”. மே 2ஆம் நாள், அமெரிக்க மருத்துவத்துறைத் தலைவரின் கட்டுரையொன்று வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் குறிப்பிடுகின்றார், கோவிட் பெருந்தொற்று வருவதற்கு முன்பிருந்தேவும் அமெரிக்காவைத் தனிமையெனும் கொள்ளையோய்(epidemic) பீடித்திருக்கின்றது. https://www.npr.org/2023/0…
-
- 0 replies
- 381 views
- 1 follower
-
-
சிவலிங்க மகிமைகள் சிவலிங்கம்-உருவத்தாலும், வழிபாட்டு முறைகளாலும், அமையப் பெறும் மூலப் பொருட்களாலும் பல்வேறு வகையாக பிரீத்து சிவாகமங்களாலும், சாஸ்திரங்களாலும் வழிபடப்படுகின்றது. அப்படி சிவலிங்க சொரூபத்தை அவ்வியக்த லிங்கம், வியக்தா வியக்த லிங்கம், வியக்த லிங்கம் என மூவகையாக பிரீத்துப் போற்றுவர். பீடமும், லிங்கமுமாயிருப்பது அவ்வியக்தலிங்கம். லிங்கத்திலே முகமும், தோள்களும் வெளிப்பட இருப்பது வியக்தா வியக்தலிங்கம். எல்லா அவயங்களும் வெளிப்பட்டிருப்பது வியக்தலிங் கம் ஆகும். மேலும் வழிபடப் பெறும் அடிப்படையில் சிவலிங்கத்தை அசல லிங்கம், சலன லிங்கம், சலா சலலிங்கம், அசலசல லிங்கம், என வகைப்படுத்திக் கூறுகின்றனர். கோபுரம், விமானம் முதலியன அசல லிங்கம். இரத்தின லிங்கம் ம…
-
- 0 replies
- 691 views
-
-
வால்ட்டெர் பெஞ்சமின்: வரலாற்றில் ஒரு தேவதூதன் எஸ். வி. ராஜதுரை பெர்லின் நகரத்தைச் சார்ந்த ஒரு யூத பூர்ஷ்வாக் குடும்பத்தில் 1892 இல் பிறந்த வால்ட்டெர் பெஞ்சமின் (நல்டெர் பெஞமின்) மிகக் கூர்மையான இலக்கிய விமர்சகர்; பண்பாடு குறித்த சமூகவியலாளர். மட்டுமின்றி மூலச் சிறப்புமிக்க மார்க்ஸியச் சிந்தனையாளர்களில் ஒருவர். உலகப்புகழ் பெற்ற மார்க்ஸிய நாடக மேதை பெர்டோல்ட் ப்ரெஹ்ட், பிராங்க்பர்ட் சிந்தனையாளர் தியோடோர் அடோர்னோ, யூத அனுபூதிவாதத்தின் (ஜெநிஷ் ம்ய்ச்டிcஇச்ம்) வரலாற்றை எழுதிப் புகழ்பெற்ற கெர்ஷோம் ஸ்சோலம் போன்றோரின் நண்பர். ஜெர்மனியில் வெய்மர் குடியரசின் ஆட்சிக்காலத்தில்தான் பெஞ்சமினின் வாழ்க்கையின் பெரும் பகுதி கழிந்தது. 1919முதல்1933 வரை நீடித்த …
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 599 views
-
-
"வேதம் & புராணம்" இந்து சமயத்துப் புராணகதைகள் பெரும்பாலனவைகளை படிக்கும் போது கடவுள்மார்கள் மக்களுக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனிதரே செய்ய அஞ்சும் விலக்கப் பட்ட செயல்களாக இருக்கும். இக்கதைகளை பக்தர்கள் கேள்வியே கேட்காது கேட்டு ரசிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். இவைகள் வெறுமனே எழுதப் பட்ட கதைகள் தான் என்றாலும் ஏன் தான் கடவுள்மாரைக் நல்ல கடவுள்தனம் உள்ளவராகச் சித்தரித்து மக்களுக்கு ஒரு இறை பக்தி வரும் படியான சிந்தனைகளை ஏற்படுத்தும் கதைகளை எழுதாமல் விட்டார்கள் என்று கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. இந்து மதத்தில், வேதம் என்ற சொல் 'வித்' என்…
-
- 0 replies
- 250 views
-
-
பெண்களை இழிவுபடுத்துவது தான் 'புனித' நூலா??? சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று 'உச்ச நீதிமன்றம்' தீர்ப்பு சொன்ன பிறகு பல பெண்கள் சபரிமலைக்கு சென்றுக் கொண்டருக்கின்றனர். ஆனால், பார்ப்பனிய பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ் - பாஜகவினர் பத்தர்கள் போர்வையில் போராட்டம் என்ற பெயரில் திட்டமிட்டு கலவரத்தை நடத்திவருகிறார்கள். கடந்த காலங்களில் பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு சென்றதற்கான ஆதாரங்கள் இருந்தும் 'ஹிந்து மரபை' மீறக்கூடாது என அதற்கு பல 'விஞ்ஞான' விளக்கங்களை அளித்து வருகிறார்கள் 'படித்த பார்ப்பன அறிவாளிகள்' அவர்கள் ஏன் பெண்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்? அந்த உண்மையை நாம் தான் சொல்ல வேண்டும்... 'ஹிந்துக்களின் புனித நூல் என போற்றப்படும்' …
-
- 0 replies
- 3k views
-
-
‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!’ - ஏன்? ஒரு வரலாற்றுப் பார்வைடாக்டர்.எஸ்.சாந்தினிபீ - படங்கள்: ந.வசந்தகுமார் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற முதுமொழியின் உட்கருத்து என்னவாக இருக்கும்? அக்காலக் கோயில்கள் எப்படி செயல்பட்டன? இதுபற்றிச் சொல்கிறார் டாக்டர்.எஸ்.சாந்தினிபீ... உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியை; தமிழ்ப் பெண்மணி; பல வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்கள் எழுதியுள்ளவர். மின் விளக்குகள் இல்லாத காலத்தில் எல்லாக் கோயில்களிலும் எண்ணெய் மற்றும் நெய் தீபங்களே இரவின் இருளை நீக்கி, வெளிச்சம் தந்தன. அந்தி விளக்கு, சந்தி விளக்கு, நந்தா விளக்கு எனப் பல வகைகள் இருந்த…
-
- 0 replies
- 2.1k views
-
-
*"ஆயுதபூசை பற்றி அறிஞர் அண்ணா"* எலக்ட்ரிக்,ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்-புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து ஆப்ரேஷன் ஆயு தங்கள், தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை-உச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின் இன்னும், எண்ணற்ற, புதிய, பயன் தரும், மனிதனின் கற்பன…
-
- 0 replies
- 1.5k views
-
-
நேர்காணல் பெரியாரிடம் ஜனநாயகத் தன்மை இல்லை: தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன் இரண்டாம் பகுதியின் தொடர்ச்சி... சிறையில் இருந்து வெளியே வந்ததும் சி.பி.எம்மில் சேருகிறீர்கள். அங்கு உங்கள் செயல்பாடு என்னவாக இருந்தது. அங்கிருந்து வெளியேற என்ன காரணம்? நான் கட்சியில் சேர்ந்த நேரம் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருந்தது. சி.பி.எம். தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்தார்கள். மற்றக் கட்சிகளைப் போல, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு, ஈ.எம்.எஸ், பி.ராமமூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஏ.பாலசுப்பிரமணியம் போன்ற இடைநிலைத் தலைவர்களை அரசு கைது செய்தது. கேரளாவில் நெருக்கடி நிலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி முழு அடைப்பு போ…
-
- 0 replies
- 776 views
-
-
பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள் பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பக்திபாடல்கள் இல்லை மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 05, 2020 08:57 AM புதுடெல்லி மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தற்போது 5-ஆம் கட்டமாக நடைமுறையில் உள்ள ஊர்டங்கில் பொது இடங்களை திறப்பதில் 3 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 8 ஆம் தேத…
-
- 0 replies
- 593 views
-
-
புத்தரின் வாழ்வும் வாக்கும் http://www.youtube.com/watch?v=Qs3UlBv7snE http://www.youtube.com/watch?v=Ptf-_auadL4
-
- 0 replies
- 607 views
-
-
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனுக்கு நேற்று நடைபெற்ற ஆடிப்பூர உட்சவத்திட்கு பல்லாயிரம் அடியவர்கள் வந்து வணங்கிச் சென்றனர். http://www.sankathi24.com/news/32227/64//d,fullart.aspx
-
- 0 replies
- 599 views
-
-
ஒருமுறை சிவபெருமானும், பார்வதியும் வியட்டிப் பிரணவம், சமட்டிப் பிரணவம் என்ற பிரணவங்களை, சங்கல்பிக்க, அவை சுழன்று பலகோடி அண்டங்களையும் வலம் வந்தன. இவற்றின் சுழற்சியையும், வேகத்தையும் தேவர்களாலும், மகரிஷிகளாலும் கட்டுப்படுத்த இயல வில்லை. அனைவரும் ஸ்ரீவிநாயகப் பெருமானிடம், சுவாமி தங்களது அம்மையப்பரால் சங்கல்பிக்கப்பட்ட இவ்விரு பிரணவங்களின் சுழற்சியைக் கண்டு திகைத்து நிற்கிறோம். இதன் சிருஷ்டியின் காரணமும் எமக்குப் புரியவில்லை. தாங்கள்தான் கருணை புரிய வேண்டும் என்று வேண்டினர். விநாயகப் பெருமான் கோடிக் கணக்கான அண்டங்களையும் பரி பாலனம் செய்பவர். எனவேதான் அவர் பெருவயிறுடையவரானார். அவர் தமது திருக்கரத்தால் பெரு வயிற்றைத் தடவவே அவர் நாபியிலிருந்து வெளிப்பட்ட அகமர்தசண மகரிஷி, அதி…
-
- 0 replies
- 594 views
-
-
ஒவ்வொருவரிடமும் நீங்கள் நல்லிணக்கமாக இருந்தால், அது உங்களுக்கு பல வழிகளில் திரும்ப வரும். அது திரும்ப வருகிறதா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கிடைத்த ஆயிரம் விஷயங்களை மறந்துவிட்டு, கிடைக்காத ஏதோ ஒரு விஷயத்துக்காக வேதனை கொள்வது போன்ற முட்டாள்தனமான எண்ணங்கள் ஒருபோதும் உங்களை மேம்படுத்தாது. கடவுள் மட்டும் தனக்குப் படைக்கப்பட்டதை எல்லாம் சாப்பிடத் தொடங்கிவிட்டால், அடுத்த வேளைக்கு அவரைப் பட்டினி போட்டு விடுவோம். உங்களுக்குள் என்ன நடக்க வேண்டுமென்று உங்களைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்கக் கூடாது. உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கலாம். அது சாத்தியமானதே ஓர் அரசியல்வாதியிடம் கேளுங்கள், பிச்சைக்காரனிடம் கேளுங்கள், கொள்ளையடிப்பவனிடம் கேளுங்கள், யாராக இருந்தாலும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 454 views
-
-