Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தட்டிவான் பயணமும், இன்னும் சில நினைவுகளும்! Wednesday, 03 December 2014 11:52 ‘அம்பாசடர்’ காரொன்று கடந்து சென்றதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. கடும் நீல நிறத்தில், அந்தக்காலத்து 'சிறீ' நம்பர் கார். இதுநாட்கள்வரை கொழும்பில் ஒரு அம்பாசடரைப் பார்த்ததில்லை. பழைய கார்களில் எப்போதாவது அபூர்வமாக பழைய வோக்ஸ்வேகன் கார்களைப் பார்க்கலாம். பழைய கார்களின் அணிவகுப்பு போன்ற விசேட தினங்களில் ஆகப்பழைய கால ஃபுட் போர்ட் வைத்த கார்கள் எல்லாம் புதுப்பொலிவுடன் கலந்துகொள்வதைக் காணலாம். மற்றபடி இங்கே அன்றாடப் பாவனையிலுள்ள பிரபலமான பழைய கார்களில் அதிகளவானவை 'ஒஸ்டின் மினி கூப்பர்', 'மார்க்' போன்ற மினி கார்கள்தான். யாழ்ப்பாணத்துக் கார்களைக் காணக் கிடைப்பதில்லை. ஒருமுறை சிறி அல…

  2. DEC 3, 2014 எல்லாமே எமோஷனல்தானா? சமீபத்தில் ஒரு சோஷியாலஜி பேராசிரியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெற்றவர். என்றாலும் இப்பொழுதும் தேசிய சட்டப்பள்ளியில் (National Law school)பணிபுரிகிறார். எப்பொழுதுமே நல்ல ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தால் நம் அறிவின் ஜன்னல்களைத் திறந்துவிட்டுவிடுவார்கள். இவரும் அப்படித்தான். ‘ரிட்டையர்ட் ஆகிட்டீங்க இல்ல...எதுக்கு மறுபடியும் வேலைக்கு போறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியமானது. சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் முதல் சில இடங்களைப் பிடிப்பவர்களுக்குத்தான் இந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும். ‘வர்ற பசங்க அறிவாளிகளா இருக்காங்க....அவங்ககிட்ட இருந்து நாமும் ஏதாச்சும் கத்துக்கலாம்’ என்றார். …

  3. கருத்தடை தொழில்நுட்பமும், சந்தைகளும் க. சுதாகர் கரு உருவாவதும்,உருவாகாது இருப்பதும் பெண்ணின் பொறுப்பாகவே சமூகம் கருதி வருகிறது. திட்டமிடாத கருத்தரிப்பு என்பது, கருத்தரிக்காது இருப்பதைப் போன்றே ஒரு பெரும் அழுத்தத்தை பெண்களுக்கு ஏற்படுத்தக் கூடியது. ஆண்களுக்கான கருத்தடை செயல்முறைகளும் கருவிகளும் மிககுறைவான அளவிலேயே வரவேற்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், வாஸக்டமி கருத்தடை முறையில், விந்துக்கள் கருத்தரிக்க வைக்க இயலும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்த ஐயங்கள். வெளியே அணிந்துகொள்ளும் சாதனங்களை வாங்குவதிலும், பயன்படுத்துவதிலும், அதனை அழிப்பதிலும் இருக்கும் சமூக ரீதியான தயக்கங்கள், அழுத்தங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆண்கள், மிகக் க…

  4. Thursday, November 27, 2014 புற்று நோய் (நேற்று மாலை காந்தி ஆய்வு மையம், புதன் புத்தக அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியது) 30 ஜூலை 2014 அன்று காலை 76 வயதான என் தந்தை இறந்துபோனார். அன்று மதியமே அவரை எரியூட்டினோம். அடுத்த நாள் காலை அவரது எலும்புகளைத் தேடி எடுத்துச் சேகரித்தது ஞாபகம் இருக்கிறது. அவர் உடலை எரித்த அந்த நெருப்புதான் அவர் உடலில் பரவியிருந்த கேன்சர் செல்களை முற்றிலுமாக அழித்திருக்கும். அவருக்கு நான்காண்டுகளுக்குமுன் வயிற்றில் (டுவோடினம்) கேன்சர். அவருக்குக் கேன்சர் என்று நாங்கள் கடைசிவரை சொல்லவே இல்லை. வயிற்றில் கட்டி என்று மட்டுமே சொல்லியிருந்தோம். அதை அறுவை சிகிச்சையில் நீக்கி உலோக கிளிப் போட்டு வயிற்றைச் சுருக்கி, குடலுக்கு மாற்று ஏற…

    • 3 replies
    • 1.5k views
  5. இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே.. Kids Health மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. ‘ஆஸ்துமா என்றால் என்ன?’, ‘நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?’, ‘வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?’ என, இப்படி மருத்துவம் சம்பந்தமான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும். மேலும், வீடியோ மூலமாகவும் தகவல்களை தெள…

  6. ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா? ஆம்.... என்று, சொல்வேன் நான். இரண்டு, பிள்ளைகளை பெற்ற நான்...!? மூன்றாவது, பிள்ளையையும்... பெற்றால், என் பொருளாதார நிலைமை, வீட்டில் இட வசதி இல்லாதது என்பதால்.... எனது மனைவி வயிற்றில் உருவாகிய... (ஆறு கிழமை ஆன) மூன்றாவது கருவை அழிக்க, வைத்தியர் உதவியை நாடினேன். அவர்களும்.... கருவில், உருவாகும் குழந்தையை அழிப்பது தவறு. உங்களுக்கு, சில வழிகட்டுகின்றோம் என்று, இரண்டு மாதம், ஒவ்வொரு அலுவலகமும் ஏறி, இறங்கி வைத்து அன்பான... ஆலோசனையால் காலம் கடந்து...... மூன்று மாதம், ஆகி விட்டது. இப்போ..... கருவை, கலைக்கத் தயார், என்று..... அவர்கள் பச்சைக் கொடி காட்டிய போது....எங்களுக்கு, கொஞ்ச தயக்கம், அந்த இடத்திற்கு சென்ற, மனைவியின்... …

    • 41 replies
    • 4.2k views
  7. Troy நகரைக் கிரேக்கப் படைகள் சூழ்ந்திருக்கின்றன. கொடியின் எதிரே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் களம். அன்றைய நாள் மோதல் வித்தியாசமானது, முக்கியமானது. அந்நாட்டின் மிகச்சிறந்த வீரனும் நாட்டின் பிரதான படைத்தளபதியுமான இளவரசன் ஹெக்டர் தன் மனைவியிடமும், குழந்தையிடமும் விடைபெற்றுக் கொள்கிறான். அவன் அக்கலிஸ் உடன் ஒற்றைக்கு ஒற்றையாக மோதப் போகிறான். அக்கலிஸ் வெல்லப்பட முடியாதவன் என எதிரிகளாலும் மதிக்கப்படும் பெரும்வீரன். ஒரு விடிகாலையில் அக்கலிஸ்சின் தலைக்கவசத்தை அணிந்துகொண்டு போரிடுகிறான் அனுபவமில்லாத இளவயதினனான அவன் உறவினன். அவனை அக்கலிஸ் எனத் தவறுதலாக நினைத்துக் கொன்றுவிடுகிறான் ஹெக்டர். அதற்குப் பழிவாங்கவே ஹெக்டரை ஒற்றைக்கு ஒற்றை அழைக்கிறான் அக்கலிஸ். யுத்தம் ஆரம்பி…

  8. இங்கு பல யாழ்கள உறுப்பினர்க்கள், வாழ்க்கையில் கஷ்டப்பட்டு, நொந்து நூலாகி, தங்களுடைய ஆதங்கங்களை கொட்டித் தள்ளுகிறார்கள். பழமும் திண்டு கொட்டையும் போட்டவன் என்ற முறையிலும், வாழ்க்கையில் பலதையும் கண்டு களைத்தவன் என்ற முறையிலும், ஒரு புத்தி ஜீவி (இது எப்படி இருக்கு?) என்ற முறையிலும், உலகின் பல கண்டங்களில் வசித்து நல்லவர் பெரியவரோடு பழகி படித்தவன் என்ற முறையிலும், சில அறிவுரைகளை இங்கு வழங்காலம் என்று இருக்கிறேன். ஆனால், எனது அறிவுரையை கேட்டு நீங்கள் யாரவது நாசமாய் போனால், என்னை குறை சொல்லக் கூடாது. சொல்லிறவன் சொன்னால் கேட்கிற உனக்கு மதி என்னாச்சு", என்ற பழமொழியை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கோ...

  9. எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத் பாலியல் தொழி­லா­ளர்­க­ளாக செயற்­ப­டு­ப­வர்­களில் அதி­க­மா­ன­வர்கள் முழு மன­துடன் இந்த தொழி­லி­லுக்கு வந்­த­வர்கள் இல்­லை­யென்­பது உண்மை. ஏதோ ஒரு விதத்தில் இந்த தொழி­லுக்கு தள்­ளப்­ப­டு­கின்ற பெண்கள் அவற்­றி­லி­ருந்து விடு­பட முடி­யாமல் தொடர்ந்தும் இந்தத் தொழிலில் தம்மை ஈடு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். அநா­த­ர­வாக சுற்­றித்­தி­ரியும் அல்­லது பொது இடத்தில் தேவை­யின்றி தரித்து நிற்கும் பெண்­களை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் அவர்­க­ளுக்கு புனர்­வாழ்வு அளிக்கும் வகையில் மேல் மாகாண சமூ­க­சேவை திணைக்­க­ளத்தின் கீழ் இயங்­கி­வ­ரு­கின்ற கங்­கொ­ட­வில மெத்­செ­வன என்ற அரச நிறு­வனம் செயற்­பட்டு வரு­கி­றது. அநா­த­ர­வ…

  10. (சிலாபம் திண்ணனூரான்) 'எல்லாத் தொழிலிலும் பொறாமையும் போட்டிகளும் உள்ளன. எனது தொழிலில் இவ்வாறான நிலை இல்லை. ஒரே வீதியில் பத்துக்கும் மேற்பட்டோர் வியாபாரத்திற்காக பயணிப்போம். எங்களுக்குள் ஒருவித பிரச்சினையும் இல்லை. பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளவும் மாட்டோம். இதுவே, எங்கள் வியாபாரத்தின் தர்மமாகும்' என்கிறார் பழைய பொருட்களை சேகரித்து விற்கும் எஸ். சந்திரசேகர். 'எனக்கு 54 வயதான வயதாகிறது. கொழும்பு முகத்துவாரத்தில் வசிக்கிறேன். முதலில் கொழும்பு புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத்தெருவில் சுமை தொழிலாளியாக வேலை செய்தேன். மிகவும் கஷ்டமான தொழில் இது. சுமைகளுடன் மாடிப்படிகளின் ஏறி இறங்குவது மிகவும் சுலபமான காரியமல்ல. பார்ப்பவர்களுக்கு மிகவும் சுலபமாகத்தான் தெரியும். அத்தொழிலை…

  11. Started by புலவர்,

    மாதவலி -சங்கீதா பாக்கியராஜா டாம்பொன் (Tampon) ஒன்றை.. தேவைப்பட்டாலும் என்ற எண்ணத்துடன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு வெளியே செல்லக் கிளம்பினேன்.. வீட்டை விட்டு இறங்கி தெருவோரம் காலடித்தடங்களை பின்விட்டு நடக்கும் போதுதான்.. காலத்தின் சுழற்சியில் எத்தனை விடயங்களை விட்டு வந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன்.. பெரியவளாகிய போது.. துணி சலவை செய்பவரின் மனைவி கொண்டு வந்து கொடுத்த ஒரு கட்டு வெளுத்த பழந் துணியை எடுத்த அம்மா, அதை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி, இடுப்பில் பாவடை நாடாவொன்றைக் கட்டி, அதில் கோமணம் போல் அந்தத் துணிக்கட்டை சொருகி, விழுந்துவிடாமலிருக்க இரண்டு பின்கள் குத்திவிட்டார்.. ஏதோ தண்டனை போல, நடக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல், வயிற்று வலியின் வேதனையுட…

  12. வாழ்க்கையில் அனைத்தையும் சமநிலையில் சமாளிப்பது எப்படி? நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர் நோக்கியிருக்கிறோம். அதேபோல் பல பாஸிட்டிவ்வான விஷயங்களையும் சந்தித்து இருக்கிறோம். இருந்தாலும், வெற்றிகளையும் நன்மைகளையும் கண்டு அளவுக்கு அதிகமாக சந்தோஷமாக இருக்காமலும், தோல்விகளையும் துன்பங்களையும் கண்டு மிகவும் துவண்டு போகாமல் இருக்கவும் நாம் கற்றிருக்கிறோமா, பழகியிருக்கிறோமா? இதுதான் நம் வாழ்க்கையில் முக்கியமான விஷயம். இன்பத்தையும் துன்பத்தையும் தோள்களில் போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஒரே சமநிலையில் கொண்டு செல்கிறோமா என்பதை நமக்கு நாமே அவ்வப்போது அலசி ஆராய்ந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சில வழிமுறைகளை இப்போது நாம் பார்க்கலாம். முன் நோக்கிய…

  13. புலம்பெயர் தமிழர்கள் சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வினை எவ்வாறு நடத்துகின்றனர்? https://www.facebook.com/video/video.php?v=828573870539240

  14. நான் எனது மகளுக்கு போட்டுக் காட்டும் தமிழ் பாடல்கள் இவை, அவா அதனை மிகவும் விரும்பிப் பார்ப்பா. அத்துடன் அவரின் தமிழ் மொழித் தேர்ச்சிக்கும் இப் பாடல்கள் உதவுகின்றன. இவற்றை நான் உங்களுடன் பகிர்கிறேன். உங்களுக்குத் தெரிந்த பாடல்களையும் இவ்விணைப்பில் இணைத்து விடுங்கள். நன்றி

    • 6 replies
    • 1.2k views
  15. ஒரு சமூகப் பரிசோதனை. யாருக்கு கொடுக்கும் மனம் உள்ளது? இந்த வீடியோவைப் பாருங்கள்.

  16. " "இதெல்லாம் நடக்குமெண்டு நினைக்கிறீரோ தம்பி?" அவ்வப்போது சிரித்துக்கொண்டே கேட்பார் மனேஜர். ஏன் நடக்காதா எல்லாம் சரியாத்தானே இருக்கு?" "இட்ஸ் ஒக்கே நான் சும்மா கேட்டன் நீர் என்ன நினைக்கிறீர் பாப்பம் எண்டு..." "என்னவாம் தம்பி.. தண்ணி கொண்டு வரப் போறாராமோ? சிறி இடையில் வந்து "இப்பிடித்தான் முந்தியும்..." கதைசொல்ல ஆரம்பிப்பார். 'அடப்பாவீங்களா நடக்காதுன்னு நினைச்சுக்கொண்டா வேலை செய்யுறீங்க?' எனத் தோன்றும். "என்ன இப்பிடி கதைக்கிறீங்க? இயக்கமே ஓக்கே சொல்லிட்டாங்களே?" "என்னமோ பாப்பம்... எங்களுக்கு நல்லா பே பண்ணீனம் சந்தோஷமா வேலை செய்துட்டு போக வேண்டியதுதான் இட்ஸ் ஒக்கே" - மனேஜர் 'இட்ஸ் ஒக்கே' என்பதே மனேஜரின் தாரக மந்திரம். 'ஒரு பொல்லாப்புமில்லை' என்கிற 'விச…

  17. நீங்களும் உலக நாயகன்தான்! மனிதனின் ஆயுள் எத்தனை வருடங்கள்? என்று என் கருத்தரங்குகளில் அடிக்கடி கேட்பேன். 60கள் என்பதுதான் அதிகமாகச் சொல்லப்படும் விடை. சிலர் இப்போது மருத்துவம் வளர்ந்ததால் 70கள் என்பார்கள். சரியான பதில் 120 என்றால் பலர் நம்பமாட்டார்கள். ஜப்பானில் ஒரு தீவில் 100 வயதைத் தாண்டியவர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று தகவல் கூறி மருத்துவ, மானிடவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் சொல்லி விளக்கிய பின் சரி என்பார்கள். ஏன் 60 ? அது சரி, ஏன் எல்லோரும் 60கள் தான் ஆயுள் என்கிறார்கள்? பணி ஓய்வு காலம் 58 அல்லது 60 வயதில். அதற்கு மேல் எதற்கு வாழ்வது என்கிற எண்ணம்தான். சம்பாதிக்காத மனிதன் வாழ்வதில் என்ன அர்த்தம் என்று நம் சமூகம் மறைமுகமாகச் சேதி சொல்கிறதோ? இன்றைய ந…

  18. கற்பு என்றால் என்ன? – இந்திரா பார்த்தசாரதி அற்ப விஷயங்களையும் அரசியலாக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வாயில் அகப்பட்டு, சமீபத்தில், மிகவும் அவதியுற்றச் சொல், ‘ கற்பு ‘. ‘கற்பு ‘ என்றால் என்ன ? ‘கல் ‘ என்ற வேர்ச்சொல்லினின்றும் பிறந்தவை ‘கற்பு ‘, ‘கல்வி ‘ போன்ற சொற்கள். ‘கல் ‘ என்றால், ‘தோண்டுதல் ‘. ஆங்கிலச் சொல், ‘ cultivate ‘, ‘culture ‘ போன்ற சொற்களும் இந்தத் ‘ தோண்டுதலை ‘ ( ‘உழுதல் ‘- லத்தீன்-cultivatus) அடிப்படையாகக் கொண்டு பிறந்த சொற்கள்தாம். கற்பிக்கப்படுவது எதுவோ அது ‘கற்பு ‘. கல்வியினால் உண்டாகும் ஞானமும் ‘கற்பு ‘தான். ‘பெரிய திருமொழியில் ‘ (திருமங்கைமன்னன்), ‘கற்பு ‘ என்ற சொல் ‘பெரிய ஞானம் ‘ என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. ‘ஆழி ஏந்திய கையனை, அந்தண…

  19. நிலாப் பாட்டி (குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், புதிர்கள்,தகவல்கள்) ஒரு குட்டிப் புலியின் குரல் சுட்டிக் குழந்தைகளே! நான்தான் குட்டிப் புலி கோபு! இப்போதான் முதன்முதலா உங்களைப் பாக்குறேன். அதனால, நானே அறிமுகப்படுத்திக்கிறேன். நான் ஒரு வேங்கைப் புலிக் குட்டி (Bengal Tiger). வேங்கைப் புலின்னா, ஏதோ வித்தியாசமான புலின்னு நினைச்சுக்காதீங்க. இந்தியாவோட தேசிய விலங்குன்னு படிச்சிருப்பீங்கள்ல. அந்தப் புலியோட குட்டிதான் நான். மூங்கில் புதர்கள் நிறைஞ்ச ஒரு காட்டுலதான் நான் பொறந்தேன். இப்போதான் இந்த உலகத்தை எட்டிப் பாக்குறேன். ஏன்னா, நான் ரொம்ப ரொம்ப குட்டி. எனக்கு பார்வை தெரிஞ்சு கொஞ்ச நாள்தான் ஆச்சு. பொறந்து ரெண்டு, மூணு வாரத்துக்குப் பின்னாடிதான் புலிக் குட்டிகள…

    • 10 replies
    • 5.8k views
  20. அண்மையில்.. முன்னாள் சோவியத் குடியரசு... சேர்ந்த ஒரு நாட்டில் இருந்து வந்தவரோடு கதைக்கக் கிடைத்தது. அவர் திருமணங்கள் பற்றிய பேச்சு வந்த போது கேட்டார்.. ஆண்கள் நீங்கள் பெண்களை விலைகொடுத்து வாங்கியா திருமணம் செய்வீர்கள் என்று..! நான் சொன்னேன்.. இந்திய சமூகக் கட்டமைப்புச் சார்ந்த எங்கள் கட்டமைப்பில் அப்படியல்ல. அதற்கு எதிர்மாறு. பெண்கள் ஆண்களை விலைகொடுத்து வாங்குவார்கள் என்று. அவர் பிரமித்துப் போய்.. மேலும் தொடர்ந்தார்.. கசகிஸ்தானில்.. ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால்.. நிலம்.. வீடு.. கால்நடைகள்.. காசு என்று எல்லாம்.. பெண்ணைப் பெற்ற தந்தைக்கு பெண்ணை எடுப்பதற்காக வழங்க வேண்டுமாம். மேலும்.. அந்த ஆண் நிரந்தர உழைப்பாளி என்பதையும் நிரூபிக்க வேண்டுமா…

    • 16 replies
    • 1.9k views
  21. சிலாபம் திண்ணனூரான் இவரின் வயது பத்தொன்பது தெமட்டகொடை, ஞானவிமல வீதியில் வசிக்கும் ஜே.எம். ரிகாஸ் ஒரு மாற்றுத் திறனாளி. இவரின் பேச்சு மழலைபேச்சாக இருக்கும் பளிச்சென பிரகாசிக்கும் கொண்ட முகம். எந்தநேரமும் கள்ளம்கபடமற்ற சிரிப்பு அவரின் முகத்தை கௌவிக்கொண்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் ஏனைய குழந்தைகளைப் போல ஓடி ஆடி விளையாடியவர் இவர். ஆனால், தனது ஐந்து வயதில் அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற தருணத்தில் இவரின் உடலினுள் செலுத்தப்பட்ட ஊசிமருந்த ஒவ்வாமையினால் இவரின் உடலின் சில தாக்கங்களுக்குள்ளானது. அதன் பாதிப்பு இவரின் உடல் வளர்ச்சியை தடை செய்தது இன்று இவரின் முழு உயரம் மூன்று அடிகளும் இரண்டு அங்குலமேயாகும். நடக்க இயலாது. முள்ளந்தண்டு முற்று முழுதாக பழுதாகிவிட்ட நி…

  22. Started by SUNDHAL,

    எது பெண்மை ..? எதிரே ஆண்மகனின் பார்வை தவறாக போகும் போதுது தலை குனிந்து செல்வதா . .. தாயிற்கும் தந்தைக்கும் பணிவிடை செய்து ,இறுதி மூச்சினில் மலத்தையும் துடைத்து ..தலைமாட்டில் கதறி அழுதாலும் கூட ,ஒரு கணநேரத்தில் எம்மை ஒதுக்கி வைத்து அவர்களை ஈமச் சடங்கை முடித்து எரிப்பானே அந்த ஆணுக்கு பணிந்து போகுதல் பெண்மையா .... திருமணம் முடித்துவிட்டால் நான் இன்னொரு வீட்டுப் பெண் ,என் மாமியாருக்கோ நேற்று வந்தவள் ...சகோதரனுக்கோ தனிக் குடும்பம் இப்படி மூன்றாம் பார்வையில் எம்மை ஒதுக்கும் உறவுகளை அனுசரிப்பது பெண்மையா ...!? கணவன் அடிக்கவும் கை ஓங்குவான் .. குடிப்பான் ..நண்பர்களின் நட்பிற்காய் தனியே தனிமை அரக்கனிடம் விட்டுச் செல்வான் .ஆயிரம் தவறாய் இருந்தாலும் பத்தினி தனத்தை காப்பாற்றுவ…

  23. என்னது மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா? குழந்தைகளிடம் அவ்வப்போது அறிவியல் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவது நல்லது. பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பிரபலமான செய்திகளைப் பேசினால் போதும். மங்கள்யான் செவ்வாயைச் சுற்றுகிறது என்கிற ரீதியில் பேசலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் வெறும் கதைகளோடு நிறுத்திக் கொள்கிறோம். குழந்தைகளிடம் கதை சொல்லலாம்தான். ஆனால் வெறும் கதைகள் மட்டுமே இந்தத் தலைமுறைக்கு போதுமானது இல்லை. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில சிறார் கதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றில் எந்த லாஜிக்கும் இல்லை. ஒருவன் வலையை விரித்து வைத்திருக்கிறான். அதில் மின்னல் வந்து சிக்கிக் கொள்கிறது. அவன் அந்த மின்னலை விடுவித்துவிடுகிறான். பிறகொரு நா…

  24. சொத்தை உருவாக்குவதில், பெண்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார், நிதி ஆலோசகர் சித்ரா நாகப்பன்: இன்றைய சூழ்நிலையில், சேமிப்புப் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஏனெனில், இருந்த இடத்தில், தேவையான பொருட்களை வாங்கும் வசதிகள் வந்து விட்டன. அதோடு, வாங்க நினைத்த பொருட்களை, உடனே வாங்க வேண்டும் என்ற மனநிலையில் பலரும் இருக்கின்றனர். செலவு அதிகமாக இருந்தாலும், சேமிப்பு என்பது, பெண்களிடம் கட்டாயம் இருக்கும். அந்தச் சேமிப்பை, எப்படி முதலீடாக மாற்றி, சொத்தை பெருக்குவது என்று தெரியாமலேயே, பல பெண்கள் இருக்கின்றனர்.பெண்களுக்கு அதிகம் தெரிந்த முதலீடு, சீட்டு தான். அதேபோல், சிறந்த முதலீடாக நினைப்பது, தங்கத்தைத் தான். இந்த இரண்டுமே தவறு. சீட்டு திட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.