சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பொதுவாக மனிதர்கள் பலவிதமான பழக்கங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். குடி பழக்கத்திற்கு அடிமை, போதை மருந்துகளுக்கு அடிமை மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமை போன்றவையே பொதுவாக வெளியில் பேசப்படுகின்றன. ஆனால் வெளியில் பேசப்படாத இன்னும் ஏராளமான அடிமைப் பழக்கங்கள் மக்களிடம் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய அடிமைப் பழக்கங்கள் சாதாரணமாகத் தான் இருக்கும். உதாரணமாக, ஹெட்செட் மூலம் பாட்டு கேட்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பல. இத்தகையவை இல்லாவிட்டால் சிலருக்கு பைத்தியமே பிடித்துவிடுவது போலும், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறும் ஆகிவிடும். மேலும் விரும்பியோ அல்லது விரும்பாமலோ சில அடிமைப் பழக்கங்கள் மக்களிடம் இருக்கின்றன. இப்போது அவ்வாறு வெளியில் பேசப்…
-
- 5 replies
- 1.2k views
-
-
நவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் இன்றைய பெற்றோர்கள் எழுதியது இக்பால் செல்வன் மூட நம்பிக்கை எனக் கூறியவுடனயே நம்மில் பலரும் நினைப்பது எதோ பழங்காலப் பழக்க வழக்கங்களில் சில மட்டுந்தான் எனப் பலர் நினைப்பதுண்டு. இன்னம் பலரோ கடவுள் நம்பிக்கை, மதப் பழக்க வழக்கங்களைத் தவிர வேறு பழக்க வழக்கங்கள் எல்லாம் மூட நம்பிக்கை எனக் கருதுவோரும் உள்ளனர். மூட நம்பிக்கைகள் என்பது பாமர மக்களிடம் மட்டுமில்லை, இன்றைய காலக் கட்டத்தில் மேற்கல்வி பயின்ற பலருக்கும் கூட இருக்கின்றன. பல சமயம் புதிதாக முளைத்துள்ள பல மூட நம்பிக்கைகளும் அறிவியல் முலாம் பூசப்பட்டு மக்களிடம் பரப்பப்பட்டு வருகின்றன. சில சமயங்களில் பழம் நம்பிக்கைகளைக் கூட அறிவியல் விளக்கங்கள் என்ற பேரில் இளம் சமூகத்தினரின் மத்தியில…
-
- 1 reply
- 846 views
-
-
மட்டக்களப்பு - செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் மனிதாபிமானமிக்க அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. போர்ச் சூழல் ஓய்ந்த பின்னர் ஆயுத கலாசாரம், பஞ்சமா பாதக செயல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என எண்ணியிருந்த தமிழ் மக்கள் மத்தியில் இக்கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கலடி நகரம் சித்திரை புத்தாண்டு காலத்தில் களைகட்டுவது வழக்கம். அந்த பிரதேசத்தில் நாலாபுரத்திலுமிருந்தும் மக்கள் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்யவரும் வர்த்தக மையமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. அன்று சித்திரை மாதம் 7 ஆந் திகதி நள்ளிரவு செங்கலடி - பதுளை வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் வர்த்தகர்களையும் அந்த பிரதேசத்தையும் சோகத்துக்குள்ளாக்கியதோடு பெரும்…
-
- 6 replies
- 2.7k views
-
-
காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் திருமணத்திற்கு முன்னதாக சில விசயங்களை பேசி தெளிவுபடுத்திக் கொண்டால் பின்னாளில் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டால் கூட சில சமயங்களில் அதிக அளவிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் புரிதல் இல்லாத காதல்தான். எனவே தம்பதியாகும் முன் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக பேசி புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். குழந்தைப்பேறு திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே சொந்தங்கள், சுற்றத்தார்கள் கேட்கக் கூடிய கேள்வி எப்போ குழந்தை என்பதுதான். குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்பான விஷயம். தம்பதிகள் இருவரும் அதில் சரிசமமாகப் பொறுப்பேற்க வேண்டும். பொருளாதார நிலையையும் கருத்…
-
- 0 replies
- 861 views
-
-
மரணம் வளர்ச்சிக்கான ஒரு படிக்கல் மே 18, 2009ம் ஆண்டு எல்லாம் நடந்து முடிந்து விட்டதாக செய்திகள் அறிவித்தன. இந்த ஆண்டு, இந்த நாள் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாளாகும். ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்கா அரசு முன்னெடுத்த இனவழிப்பு போர் முடிவூற்றதாக கூறிய நாள். உலகில் நடந்த போர்களில் இதைவிட அதிகமான மனிதர்கள் இறந்திருக்காலாம். ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் ஈழத்து மனிதர்கள் தொடர்ச்சியாக பல வருடங்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட நாட்களின் இறுதி நாள். பல மரணங்கள் நடைபெற்ற நாள். ஈழத் தமிழின அழிப்பு நடந்த நாள். பல இழப்புகளை சந்தித்த நாள். ஈழத் தமிழ் தேசம் முழுமையாக மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட நாள். ஈழத் தமிழர்களுக்கு …
-
- 23 replies
- 2.9k views
-
-
தொடாமல் சுடுவது... வெறுப்பாகும்! விமானத்தில் பெண் ஒருவள் பயணம் செய்கையில், ஒரு ஆபிரிக்க கறுப்பரின் அருகில் அமர நேர்ந்தது.இனத் துவேசியான அந்தப் பெண், விமானப் பணிப் பெண்ணை அழைத்து, ஒரு நீக்ரோவின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும் தனக்குப் பிறிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித் தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த சக பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி, போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப் போவதையிட்டும் கடிந்து கொண்டனர். அந்த அப்பாவி ஆபிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அ…
-
- 5 replies
- 810 views
-
-
-
- 0 replies
- 827 views
-
-
வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள். அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன்.
-
- 40 replies
- 4.5k views
- 1 follower
-
-
இந்தியப் பெண்களின் பிறப்புறுப்பும் வியாபாரப் பொருளாகிவிட்டது எழுதியது இக்பால் செல்வன் இந்தியப் பெண்களே இனி கவலை வேண்டாம். பெரும்பான்மையான நீங்கள் கரும் மாநிறமாக இருக்கின்றீர்கள் என்ற ஆதங்கங்களை தூக்கி எறியுங்கள். வெள்ளை நிறமாக ஒரு முகப் பூச்சு - அடுத்து உங்களின் பிறப்புறுப்புக்களையும் வெள்ளையாக்கிக் கொள்ள இன்னொரு பூச்சு - அதுவும் போதாதா ! உங்களின் பிறப்புறுப்புக்களை இறுக்கமாக்கிக் கொள்ளவும் ஒரு பூச்சு என வகைவகையாக வந்துவிட்டது. இனி உங்கள் ராஜகுமாரான் உங்களைத் தேடி வந்து உங்கள் காலடியில் கிடக்கப் போகின்றார். ஒரு பெண் ஆணுக்காகவே படைக்கப்பட்டாள் என்ற கருத்தியல் சமூகத்தில் ஆழ ஊன்றியுள்ளது. அவளின் அதிகப் பட்சக் கடமை ஆணோடு கன்னித் தன்மையோடு புணர்வதும், அவனி…
-
- 25 replies
- 6.6k views
-
-
என் மூத்த சகோதரியின் மகனுக்கு, பெண் தேடும் வேட்டையில் இருந்தேன். நானும், அவளும், ஜாதகம் பொருந்திய சில பெண்கள் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. அப்போது, பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண்ணைப் பற்றி சொல்லும் போது, "என் மகளுக்கு எந்த வீட்டு வேலையும் செய்யத் தெரியாது. ஆபீசுக்கு போவா, வருவா, எல்லா வீட்டு வேலையும் நான் செஞ்சு வச்சுடுவேன்...' என்றனர். அதை விட கொடுமை என்னவென்றால், "என் பொண்ணுக்கு சுத்தமா சமைக்கத் தெரியாது. அவளுக்கு கிச்சன் எது என்பது கூட தெரியாது...' என்று மார்தட்டி பெருமிதம் கொள்ளும் வகையில், மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசுகின்றனர். என்ன தான் இன்றைய பெண்கள், வேலைக்கு செல்வதாக இருந்தாலும், நளபாக சமையல் செய்யத் தெரியாவிட்டாலும், அன்றாட சமையல் கூட செய்யத் தெரியவில்லை என்றால்,…
-
- 2 replies
- 935 views
-
-
1) அன்னைக்குத்தான் வேலையெல்லாம் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுட்டு அக்கடான்னு உட்காருவாங்க. நம்மாளு திடீர்னு அஞ்சாறு ஃப்ரெண்ட்ஸோட வீட்டுக்குப் போய் ‘யாரு வந்திருக்காங்க பாரு டார்லிங்’ன்னு டின்னருக்கோ, லஞ்சுக்கோ அடியப் போடும்போது.... 2) ஒரு மாசமா சிரமப்பட்டு அவங்க மனசுல நெனைச்சமாதிரி வீட்ல அங்கங்க அந்தந்தப் பொருட்களை செட் பண்ணி, இண்டீரியரை நல்லவிதமா ரசனையா பண்ணி வெச்சிருப்பாங்க. டக்னு ஏதோ அவசரத்துக்கு ஒரு நாள் அம்மா வீட்டுக்கோ, வேற எங்கயாவதோ போய்ட்டு வருவாங்க. வந்து பார்த்தா வீடு பழையபடி கந்தலா கலைஞ்சிருக்கும் பாருங்க.. அப்ப ஒரு குத்து.. 3) அன்னைக்குன்னு புருஷன் மேல ரொம்ப பாசம் பொங்கும்.. பாவம்யா அவன்னு தோணும். சரின்னு டின்னருக்கு அவருக்குப் பிடிச்ச டிஃபன் ஏதாவது செஞ்சு …
-
- 10 replies
- 1.3k views
-
-
கையிலாயம் போறன் வணக்கம் பிள்ளையள் , நான்தான் சுறுக்கர் வந்திருக்கிறன் . நான் விசையம் இல்லாமல் இங்காலிப் பக்கம் தலை வைச்சு படுக்றேலை தான் . ஆனால் இந்த விசையம் என்னை செரியா பயப்பிடுத்தி போட்டுது . போன வியாழகிழமை இரவு நான் ஒரு கனாக் கண்டன் . அதலை என்னை ஒராள் ஒரு புல்லு வெளியுக்காலை கூட்டியந்து ஒரு கதவை திறந்து விட்டார் . எனக்கு ஆள் கலங்கலாய்தான் தெரிஞ்சுது . நானும் உவர் என்ன படம் காட்டிறார் எண்டு அந்தக் கதவுக்காலை எட்டிப் பாத்தன் . என்ரை கடவுளே அங்கை கைலாய மலை , சுத்திவர ஒரே பச்சையா மேல்முகட்டில பனி உருகாமல் சும்மா தகதக எண்டு மினுங்கீச்சுது . எனக்கு கையும் ஓடேலை காலும் ஓடேலை . பேந்தும் ஒருக்கால் எட்டி பாத்தான் . இப்ப சிவபெருமானும் தெரிஞ்சார் . எனக்கு …
-
- 16 replies
- 2.1k views
-
-
இருமல் மருந்துகளில் கலக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கலான கோடின் மற்றும் டெக்ஸ்ட்ரோமெதொர்ப்ன் ஆகியவற்றுடன் சோடாவினைக் கலந்தால் ஒரு விதமான போதை ஏற்படுவதால் இருமல் மருந்துகளை வாங்கி போதைப்பொருளாக பயன்படுத்தும் மோகம் இளைஞர்களிடையே அதிகமாகி வருகிறது. இந்த மருந்துகளில் சோடாவுடன் சேர்த்து Jolly Rancher candy ஐக் கலந்தால் அதில் ஏற்படும் போதையே தனி என்கிறது இளைய சமுதாயம். அதிக விலை கொடுத்து போதை ஏற்படுத்தும் பானங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக விலை மலிவாக கிடைக்கும் இருமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர் இளையோர். 12 முதல் 20 வயதுள்ளோரிடையே அதிகப்படியாக தற்போது பரவி வரும் இந்தப் பழக்கம் உடலுக்கு மிகவும் தீங்கானது என்பதால் இருமல் மருந்துகளை விற்பனை செய்வதில…
-
- 0 replies
- 727 views
-
-
இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம். வேர் களை ( VER KALAI) மாதினி -விக்னேஸ்வரன் (இலங்கை) இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள சாதியமைப்பபுர் பற்றி விரிவாக இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளயவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவுறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்தப் ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தினால் பலகலைக்கழக பீடங்களுக்கு நடாத்தப்பட்ட ஆவணப்படப்போட்டியில் முதலாம் இடத்தையும் சிறந்த வசன அமைப்புக்காக பரிசும் பெற்றுள்ளது .இம் முயற்சி வரவேற்கத்தக்கதே மாணவர்களுக்கு எமது பாராட்டுக்கள்
-
- 11 replies
- 1.1k views
-
-
ஹாய் யாழ் கள உறவுகளே..... நாளைக்கு ஏப்ரல் பூல் யார் யார எப்பிடிலாம் ஏமாத்தலாம் என்று ரூம் போட்டு யோசிச்சிட்டு இருப்பிங்க........ இதெல்லாம் நாங்க ஊரில இருந்த பொழுது தான் சிறப்பா ஏமாத்தி இருப்பம்.... இல்லை ஏமாந்து இருப்பம்.... So நான் கேக்க வாறது என்னனா...... உங்க அனுபவங்களா எங்களோடும் பகிர்ந்துக்கலாமே....... யார் யார எப்பிடிலாம் fool பண்ணினிங்க? யார் கிட்ட நீங்க ஏமாந்திங்க? அதனோட அனுபவங்கள்..... இந்த வருஷம் யாருக்கு எப்பிடி அல்வா கொடுக்க இருக்கிங்க..... மனசுல வாரத்தை எல்லாம் எடுத்து விடுங்க..... கேக்க நாங்க ரெடி.... சொல்ல நீங்க ரெடியா....
-
- 12 replies
- 1.7k views
-
-
இல்லறவாழ்வில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு மறைமுகமாக பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, கூட்டுக் குடும்ப வாழ்கை முறையில் இருந்து விலகிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வாழ்வியலில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, பெற்றோருடன் தாத்தா பாட்டியையும் வைத்து பாதுகாக்கும் வழக்கம் மறைந்துவிட்டதை நம் இன்றைய காலத்தில் பார்க்கிறோம், ஓரிரு குழந்தைகள் பெற்று அதையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், அல்லது நகர சூழலில் வாழப் பிடிக்காமல் தாம் வாழும் சூழலிலேயே வாழப் (பிடிவாதம்) பிடித்து தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், பெற்றோர் சுமை என்றே புறக்கணிப்பில் வாழும் பெற்றோர் ஒருபுறம், ஆண் வாரிசுகளைப் பெற்றோருக்கும் இந்நிலை தான…
-
- 0 replies
- 1.2k views
-
-
நீயா நானாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றி கலந்துரையாடல் ஓவியா, குட்டீரேவதி, சல்மா,கவின்மலர், சாலினி மற்றும் பலரின் கருத்துக்கள் .
-
- 0 replies
- 557 views
-
-
அமிலத் தாக்குதல்கள்: மறுக்கப்படும் காதல்களின் மறுபக்கம் எஸ். கோபாலகிருஷ்ணன் அண்மையில் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மற்றும் சென்னையைச் சேர்ந்த வித்யா ஆகிய இளம் பெண்கள் அமிலம் வீசப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். காதலை மறுத்ததால்தான் இருவருக்குமே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. மறுக்கப்படும் காதலுக்கு இத்தனை கோரமுகமா என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களாக இவை அமைந்திருக்கின்றன. காதலுக்கு கண் இல்லை என்பதைக் காதல் சாதி மத வித்தியாசங்கள் பார்ப்பதில்லை என்றும் புரிந்துகொள்ளலாம். இதனால்தான் சாதி மத வேறுபாடுகள் நீங்க, காதல் திருமணங்கள் பெருக வேண்டும் என்று முற்போக்காளர்கள் குரலெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். காதலர் தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். கா…
-
- 1 reply
- 595 views
-
-
அனைவரிற்கும் அன்பு வணக்கம், கடந்தமாதம் எனது அப்பா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், பின்னர் அவரது மரணம் ஏற்பட்டபோதும், அவர் உடல்நலம் தேறி சுகமாக வீடு திரும்புவதற்கு பிரார்த்தனை செய்தும், பின்னர் அவர் இரண்டு கிழமைகளில் இறந்தபோது அனுதாபங்களையும், ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வகைகளில் உதவிபுரிந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. பிறப்பும், இறப்பும் நாம் மாற்றமுடியாத இயற்கையின் நியதி. அதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், வேறு வழியில்லை. ஆயினும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாம் அசுரவேகத்தில் முன்னேறியுள்ள இந்தக்காலத்தில் ஒருவரின் வயதை காரணம் காட்டி அவரை சரியாக கவனிக்காமல் வைத்தியசாலையில் உதாசீனம் செய்வது என்பது (Age discrimin…
-
- 22 replies
- 2.6k views
-
-
குற்றம், சமூகம், சட்டம், தண்டனை, மரணதண்டனை - அ. மார்க்ஸ் - காந்தியிடமிருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். மரண தண்டனை பற்றிக் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்: “வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கூட தண்டனை என்ற பெயரில் சிறையில் அடைப்பதை நான் விரும்பவில்லை. கொள்ளைக்காரர்களும் ஏன் கொலையாளிகளும் கூட தண்டிக்கப்படுவதை என் அகிம்சை அணுகல்முறை ஏற்கவில்லை. மரணதண்டனை என்பதை எந்த வகையிலும் என் மனச்சாட்சி ஏற்கவில்லை.” சுருங்கச் சொல்வதானால் மரண தண்டனை என்ன, எந்தத் தண்டனையுமே கூடாது என்பதுதான் தண்டனை குறித்த காந்தியின் கருத்தாக இருந்தது எனலாம். யாரையும் தண்டிப்பதற்கான தகுதி நமக்கு, அதாவது நமது சமூகத்திற்கு இல்லை என அவர் கருதுவதாகத் தெர…
-
- 0 replies
- 669 views
-
-
உலக மகளிர் தின சிந்தனை – மார்ச் 8 2013 ஓவியா – சென்னை ,இந்தியா இன்றைய தினம் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் பெண்ணியக் குரலின் முதல் ஒலி கேட்கத் துவங்கிய நூற்றாண்டு பதினெட்டாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். பெண்களுக்கான வேலை நேரம் நிர்ணயம் வாக்குரிமை கர்ப்பத் தடை உரிமை என்று பெண்கள் இயக்கத்தின் பயணம் நீண்டு வருகிறது. தமிழ்ச் சமூகத்தில் பெண்ணடிமையும், சாதியடிமைத்தனமும் இணைந்து கிடக்கும் சூழலில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களே பெண்ணுரிமைக்கான குரலை தோற்றுவித்தன. தோள்சீலை போராட்டம் சுகாதாரத்துக்கும் மருத்துவ உரிமைகளுக்குமான போராட்டம் கல்வி கற்கவும் செல்லவும் நடத்தப் பட்ட போராட்டங்கள் தேவதாசி ஒழிப்பு போராட்டம் சுயமரியாதை திருமணத்திற்கான போராட்டம் ச…
-
- 0 replies
- 963 views
-
-
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வது இயல்பு. இதற்கு யாரும் மறுப்பு கூற முடியாது. ஏனெனில் பெண்களிடமிருந்து ஆண்கள் நிறைய கற்றுக் கொள்கின்றனர். உதாரணமாக, அம்மாவையே எடுத்துக் கொள்ளலாமே! அம்மா என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். எந்த ஒரு ஆணும் தன் அம்மாவைப் போன்று யாரும் வர முடியாது. அம்மாவிடமிருந்து தான் இதைக் கற்றுக் கொண்டேன் என்று பல ஆண்கள் கூறுவார்கள். இவ்வாறு அம்மா என்று சொல்லும் ஒரு நபர் யார் என்று பார்த்தால், அது பெண் தான். மேலும் அம்மாவிடமிருந்து மட்டும் கற்றுக் கொள்வதில்லை, அம்மாவைப் போன்று வேறு பல உறவுமுறைகளில் உள்ள பெண்களிடமிருந்தும் பலவற்றை ஆண்கள் கற்றுக் கொள்கின்றனர். எனவே தான் ஆண்கள் எந்த ஒரு இடத்திலும் பெண்களுக்கு மதிப்பளிக்க…
-
- 9 replies
- 3.1k views
-
-
பெண்: மகள்… சகோதரி… காதலி… துணைவி… மனைவி…. தாய்… மாமி… அம்மம்மா அம்மா அவரது மகளுடன் வாழ்ந்து வருகின்றார். அவரைச் சந்திப்பதற்காக போனபோது குசினியில் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் இருப்பது எனக்கு ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில் அவர் கூறியவாறு சிறுவயது முதல் இதைத்தான் செய்து வந்திருக்கின்றார். எனக்குத் தெரிந்தவரையிலும் அம்மா தனது பெரும்பான்மையான நேரங்களை குசினியில் தான் கழித்திருக்கின்றார். ஆகவே அவர் குசினியில் இல்லாதிருந்தாலே ஆச்சரியமாக இருந்திருக்கும். நான் இங்கு போகின்றபோதும் “என்ன சாப்பிடுகின்றாய்” என எப்போதும் கேட்பதற்கு மறந்ததில்லை அவர். இவ்வாறு கேட்டுவிட்டு இருக்கின்ற சாப்பாடுகளின் வகைகளை காட்டிக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருப்பா. என் மீது இவ்வாறு அக்கறை…
-
- 8 replies
- 913 views
-
-
இலங்கையில் திருமணம் முடித்த பெண்களில் 61 சதவீதமானவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழவில்லை என கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது. திருமணம் முடித்த 39 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை வாழ்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பிரிவு பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெண்களின் திருமண வயது 20 தொடக்கம் 30 ஆகும். 36 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியுடன் இந்த வயதெல்லையில் திருமணம் முடித்துக் கொள்வதாகவும் அவர்களில் 33 சதவீதமான பெண்களுக்கு இரு குழந்தைகள் வீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டினால் திருமணம் முடித்த 45 சதவீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளதாகவும் கணவனின் குட…
-
- 0 replies
- 640 views
-
-
அலுவலகத்தில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்லும் பெண் வீட்டில் தன் மாமியாரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே ஏன்? அலுவலகத்தில் எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவள் மாமியாரிடமும், நாத்தனார்களிடமும் பகைமை பாராட்டுவது ஏன்? யாருக்காகவும் நான் மாறமாட்டேன் என்று சொல்லுபவள் திருமணம் ஆனவுடன் கணவனை மாற்ற நினைப்பது ஏன்? குழந்தைகளுக்காகவே தன் வாழ்வை தியாகம் செய்வதாகச் சொல்லுபவளுக்கு அந்தக் குழந்தைகளுடன் செலவழிக்க நேரமில்லாமல் போவதேன்? ஆண்களுடன் சம உரிமை வேண்டுபவள் பெண்களுக்கென்று தனிப் பேருந்து, தனிச் சலுகைகளை ஏன் எதிர்பார்க்கவேண்டும்? இறைவன் கொடுத்திருக்கும் இயற்கை அழகை மறந்துவிட்டு, செயற்கை முறையில் அழகுபடுத்திக் கொள்ள நினைப்பதேன்? அடுத்தவர் குறைகளை …
-
- 3 replies
- 884 views
-