சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உண்டு பொதுவாக முத்தம் கொடுப்பது என்பது ஏதோ பேசக் கூடாத வார்த்தை என்று இருந்த காலம் போய் விட்டது. தற்போது தாம்பத்யத்தைப் பற்றிக் கூட வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன. முத்தம் என்பது பொதுவாக அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. முத்தம் என்பதை பொதுவாக அதிகமாகப் பெறுவது குழந்தைகள்தான். குழந்தைகளுக்கு பெற்றவர்கள் முதல், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் முத்தத்தை வழங்குவார்கள். இவை அன்பின் அடையாளம். அடுத்தபடியான காதலர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மற்றும் தம்பதிகள் பகிர்ந்து கொள்ளும் முத்தம்…
-
- 20 replies
- 11.2k views
-
-
பெண்கள் மீதான வன்முறைகள் சில அதிர்ச்சித் தரவுகள் பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன. அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதையெதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையி…
-
- 5 replies
- 1.5k views
-
-
கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா!? சமீப நாட்களாக கருத்துக்களத்தில் ஆண் பெண் நட்பு காதல் கலாசாரம் பண்பாடு என்று வாதாட்டமான கருத்துக்கள் நடைபெறுவதால் இக்கட்டுரையை பிரசுரிப்பது உகந்தது என்ற நோக்கோடு நம்ம பழைய உறுப்பனரான சந்திரவதனா அக்காவின் கட்டுரையை இங்கு பதிக்கின்றேன். :P தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும்தான் அலசப்படுகின்றன. ஏன் எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே இல்லையா? கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது அங்கு எத்தனையோ விடயங்கள் அடங்குகின்றன. ஆனால் எமது ப…
-
- 33 replies
- 16.4k views
-
-
http://www.youtube.com/watch?v=RFmILxFaciU இதில் யாரை குற்றம் சொல்ல? நாட்டையா? குடும்பத்தையா? சூழ்நிலையையா? ஐரோப்பிய நாட்டில் வாழும் நான் இப்படியான சிறுவர் நிகழ்ச்சியை இன்னும் காணவில்லை. நல்லதொரு நாடு அதற்கொரு கொள்கை
-
- 11 replies
- 2.6k views
-
-
. சைவத் திருமணச் சடங்கு. 'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள். இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆரா…
-
- 7 replies
- 2.3k views
-
-
இந்த சமூகச் சாளரம் (சாளரம் என்றால் window, ஆனால் அதை ஒவ்வொரு அறையிலும் வைத்த பின், தம் மனசுள் சாளரங்களை மூடி காற்றைப் புக விட விரும்பா என் சமூகத்திடம் எனக்கென்ன வேலை என்று கேட்குது அறிவு) என் கேள்வி சின்னது..... மிகச் சின்னது நனவிலி என்றால் என்ன (sub-conscious / un-conscious) என்றால் என்ன? 1. 12 வயசு இருக்கும், என் கண் முன்னே 36 ஊதிய பிணங்கள் (குருநகர் மீனவர்கள்: கொல்லப்பட்டது மண்டை தீவில் நேவியால்)..அதை 10 செக்கன் கூட பார்திருக்க மாட்டன். ஆனால் அவ்வளவு உடல்களின் அத்தனை அடையாளங்களையும் எப்படி என் மனம் cover பண்ணியது? அழும் அவர்களின் உறவுகளின் அழுகை கூட இதை எழுதும் போது மனசுக்குள் வருகின்றது.. இது எப்படி? Garbage என்று மனசு ஒதுக்கிய ஒரு விடயம், 26 வருடம் ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
உங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும்? "அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும்" "பெண்கள் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்படுகிறது" என்ன பயந்துட்டீங்களா? இதெல்லாம் நம்ம நாட்டிலன்னு நினைச்சிங்களா? அதான் இல்லை, தென்கொரியாவில். இந்த நாட்டோட மக்கள் தொகை ஐந்து கோடி. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து வருகிறதாம். முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். அதற்காகவே இந்த ஏற்பாடு. ஆனால் நம்ம நாட்டுல, ஜெட் வேகத்துல மக்கள் தொகை பெருகி வருகிறது. "நாம் இருவர், நமக்கு ஒருவர்" என்று சொல்லி வந்த நம் அரசு, இப்போது "நாமிருவர், நமக்கேன் இன்னொருவர்?" என்று சொல்லவும் கூடும்! குழந்தை உண்டாகிவிட்டால், உடனே அது என்ன குழந்தை என்று தெரிந்து கொள…
-
- 12 replies
- 6.9k views
-
-
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னம் வாகனத்தில போய்க்கொண்டு இருக்கேக்க கனடா பல்கலாச்சார வானொலியில நகைமாடம் சம்மந்தமான ஏதோ விளம்பர ஒலிபரப்பு போய்க்கொண்டு இருந்திச்சிது. ஆணும், பெண்ணுமாக இரண்டு அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தார்கள். அதில பெண் அறிவிப்பாளர் கிட்டத்தட்ட இப்பிடி சொன்னார்: அழகுக்கு அழகு சேர்க்க உங்கட அம்மாவுக்கு நகை வாங்கிக்குடுங்கோ, உங்கட காதலிக்கு நகை வாங்கிக்குடுங்கோ, உங்கட மனைவிக்கு நகை வாங்கிக்குடுங்கோ, உங்கட சகோதரிக்கு நகை வாங்கிக்குடுங்கோ, உங்கட மனைவியிண்ட சகோதரிக்கு மாத்திரம் நகை வாங்கிக்குடுக்காமல் இருந்தால் சரி. ?
-
- 58 replies
- 4.1k views
-
-
காதலுக்காக எத்தனையோ விடயங்கலை பலர் தியாகம் செய்வார்கள், ஆனால் எமது வாழ்வியல் முறையை மாற்றி நாம் யார் என்ற அடையாலத்தை இழந்து நாம் காதலித்து திருமணம் செய்ய வேண்டுமா? அதனால் வரும் பிரச்ச்கனைகளை எம்மால் எதிர் கொள்ள முடியும்மா? நான் குறிப்பிடப்போவது எமது வீட்டு அயலில் வசித்த ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம், எனது நண்பியும் கூட, 2002- 2005 காலப்பகுதியில் அவர் யாழ்பாணத்தில் இருந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார், அங்கு தமிழ் நாட்டின் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த, கொஞம் அங்கு உயர்வ்குப்பினர் என் கருதப்ப்டும் பின்னனியைக் கொண்ட ஒருவரும் பணி புரிந்து வந்தார், இருவருக்கும் காதல் மலர்ந்து டிருமணம் செய்யும் தருவாயும் வந்தது ஆனால் காதலனின் குடும்பதிற்கு தமது மகன் தமது இனத்தில…
-
- 11 replies
- 1.6k views
-
-
குழந்தைகளை அடிக்கலாமா? படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் “ரிங் மாஸ்டரை”ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? *** சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது? * குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறு” என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். “சேட்டை” என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்ட…
-
- 51 replies
- 6.8k views
-
-
எந்த நாடு உணவுக்காக அதிகம் செலவளிக்கிறது? நீங்கள் வசிக்கும் நாடுகளில் எப்படி உணவுக்கு செலவளிக்கிறார்கள் என்பதை தரவுகள் மூலம் தெரியப்படுத்தலாம்.மன்னிக்கவும் ஆங்கிலத்தில் இணைத்தமைக்கு. அனேகமாக புலம் பெயர்ந்து வாழும் நாம் அந்தந்த நாட்டு மொழிகளை அறிந்து வைத்து இருப்பீர்கள் தானே. Which Country Spends the Most on Food? By: Brie Cadman (View Profile) Two dollars for an avocado, eight bucks for butter, four greenbacks for orange juice—food prices in the United States don’t always seem cheap. But compared to the rest of the world, we don’t know how good we have it. Amidst the amber waves of grain and fruited plains, we spend less of our income o…
-
- 0 replies
- 734 views
-
-
எமது பிள்ளைகளின் 18ஆவது பிறந்த நாள். நான் தெரியாமல்தான் கேட்கின்றேன். அந்த பதினெட்டாவது வயதில் என்ன தான் விசேசம். பெண் பிள்ளைகளுக்கும் அந்த வயதில் மாற்றம் வருவதில்லை. ஆண் பிள்ளைகளுக்கும் நானறிந்தவரை இந்த வயதுதான் முக்கியமானது என்றில்லை. சட்டப்படியும் பிரான்சில் 21 வயது தான் கல்யாண வயது. அப்படியாயின் இந்த இளசுகள் அந்த பதினாறை கொண்டாடவேண்டும் என்று அடம்பிடிப்பதன் மர்மம் என்ன... எனது மக்களுக்கு நான் சொல்லிப்போட்டன். பதினெட்டல்ல 25 வயது வந்தாலும் அப்பனோட இருக்கும் வரைக்கும் எந்த வயது பிறந்தநாளும் ஒரே மாதிரித்தான். தாங்கள் சொல்லுங்கள் இனி.....
-
- 22 replies
- 2.3k views
-
-
குழந்தை பெறுதல் செய்முறை விளக்கம் - யேர்மன் மொழி மூலம்: http://www.planetdan.net/pics/babies/index.htm - தமிழ் மொழி பெயர்ப்பு: http://www.4th-tamil.com/blog/?p=284 இது ஒரு குழந்தை. இது எப்படி வந்தது? ஒரு அப்பா. ஒரு அம்மா. இவர்கள் சேர்ந்து, பிறந்தது இந்தக் குழந்தை. இங்கு - அப்பாவிலும் ஆடை இல்லை. அம்மாவிலும் ஆடை இல்லை. அம்மாவில் - மேலே தெரிவது மார்பு. கீழே தெரிவது ஒரு வெடிப்பு. அதை பெண்குறி என்போம். அப்பாவில் - கீழே தெரிவது தண்டு. அதை ஆண்குறி என்போம். அதனோடு சேர்ந்து - கால்களுக்கு இடையே தொங்குவது விதைகள…
-
- 20 replies
- 60.5k views
-
-
இந்தியாவில் ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் சில நாட்களின் பின்னர் அவரை நன்கு அலங்கரித்து பின்னர் அவற்றை நீக்கி தாலியறுப்பார்கள். இது இப்போதும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.பெரும்பாலும் அவர்கள் அதன் பின்னர் வெள்ளைச் சேலையே அணிவது உண்டு, இது அச்சடங்கின் இறுதியில் வழங்கப்படும். ஆனால் எமது நாட்டு வழக்கபடி இறுதிச் சடங்கின் போது தாலிக்கொடியை கழட்டி வைப்பதே வழக்கம். அனால் எனது சந்தேகம் என்னவென்றால் விதவையானவர் மரணச்சடங்கின் தொடக்கதில் என்ன அணிந்து இருப்பர், கூரைச் சேலை, பொட்டு போன்றவற்றை அணிந்திருப்பாரா? தாலிக்கொடி மட்டும் தான் கழட்டி வைக்கப்படுமா அல்லது பூ பொட்டு போன்றவையும் நீக்கப்படுமா முன்னர் எல்லம் ஏன் இப்பொது கூட பலர் வெள்ளைச் சீலை அணிகின்றனர், இத…
-
- 0 replies
- 928 views
-
-
அனைவருக்கும் வணக்கம். இங்குள்ள பெரும்பாலன பெற்றோர்கள் இங்கு பிறந்த தமது பிள்ளைகளுக்கு தாயகத்திலிருந்து மணமக்களை எடுப்பதில ஆர்வம் காட்டுகின்றனர்.அதற்க்கு பெற்றோர்கள் தங்கள் நிலையிலிருந்து பல காரணங்களை கூறுகின்றனர்.ஆனால் இது எந்தளவுக்கு பிள்ளைகளின் நடை முறை வாழ்கைக்கு ஒத்து வரும்.இங்குள்ள பிள்ளைகள் பல விடையங்களில் அறிவியல் ரீதியில் விபரமானவர்கள். இங்கு பிறந்த ஆண் பிள்ளைக்கு அங்கிருந்து பெண் எடுப்பதிலம் பார்க இங்கு பிறந்த பெண் பிள்ளைக்கு அங்கிருந்து மணமகன் எடுப்பது கூடுதலான சிக்கல்களை உருவாக்க கூடியது.பொதுவாழ்கைக்கோ அல்லது தாமபதிய வாழ்கைக்கோ பல பிரச்சனைகளை கொடுக்கலாம்.இது பற்றிய உங்கள் கருத்க்களை கூறுங்கள்.பலருக்கு பிரயோசனமாகவும் பலரின் வாழ்க்…
-
- 21 replies
- 1.5k views
-
-
இது உங்கள் வாழ்விலும் பல தடவையோ அல்லது சில தடவையோ வந்து போயிருக்கலாம். இருந்தாலும் யாரும் இதைப் பற்றி பொதுவாகப் பேசுவதில்லை. ஆனால் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்ற அடிப்படையில் குருவிகளின் வலைப்பதிவில் இப்பதிவை இடுகிறேன். இப்போ நீங்கள் வெளியில் போகும் போதோ பேரூந்தில் போகும் போதோ வேலையிடத்திலோ பள்ளியிலோ மனித ஆணின் இணைப்பாலாரான பெண்களை சாதாரணமாகக் காண்பீர்கள் தானே. அவர்களைக் கண்டால் கண்கள் பார்க்கத்தான் செய்யும்.(என்ன ஒரு ஜொள்ளுப் பார்வை.. கண்ணால் பார்க்காமல் காண முடியாது தானே. அதைத்தான் சொல்ல வந்தன்.) இப்போ பிரச்சனை பெண்களைப் பார்ப்பதில் அல்ல. பெண்கள் குறிப்பாக (மேலை நாடு, கீழை நாடு என்றில்லாமல்) இந்த விடயத்தில் அவர்கள் யாருக்கும் குறைவைப்பதில்லை. என்னடா விசயத…
-
- 44 replies
- 5.9k views
-
-
ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு.... 1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்.. 2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல…
-
- 11 replies
- 1.9k views
-
-
போலீஸுக்குப் போன புகார் ஆபாசத்தின் எல்லை எது? ''எழுத்தாளர் லீனா மணிமேகலை ஆபாசக் கருத்து களை புத்தகங்களிலும் இணையதளத்திலும் எழுதி வருகிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!'' என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந் திரனிடம் கடந்த வாரம் 'இந்து மக்கள் கட்சி' அமைப்புச் செயலாளர் கண்ணன் புகார் கொடுக்க... அதை சட்டப் பிரிவின் பார்வைக்கு அனுப்பி இருக்கிறார் ராஜேந்திரன். இலக்கிய வட்டாரத்தில் இந்த விவகாரம் விவாதக் கனலை சூடாக்கி இருக்கிறது. புகார் கொடுத்த கண்ணன் என்ன சொல்கிறார்? ''ஆபாசப் புத்தகங்கள் விற்பது சட்டப்படி தவறு. இலக்கியவாதி என்கிற போர்வையில் உடலுறவு நிகழ்வுகளையும், அந்தரங்க உறுப்புகளையும்பற்றி லீனா மணிமேகலை எழுது வதும் ஆபாசம்தான். 'உலகின் அழகிய முதல் பெண்' …
-
- 0 replies
- 3.2k views
-
-
கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்வதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால் கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பெண்களைத் தாக்கும் என்று பரவலான எண்ணம் உள்ளது. ஆனால் பிரிட்டனிலுள்ள ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிசிஷியன்ஸ் நடத்திய ஆய்வில் கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவதால் அதிக நாட்கள் பெண்களால் உயிர்வாழ முடியும் என்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் பிலிப் ஹானஃபோர்ட் இதுகுறித்து கூறியதாவது: 40 ஆண்டுகளுக்கும் மேலாக 46 ஆயிரம் பிரிட்டன் பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினோம். கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் பெண்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்பது இ…
-
- 0 replies
- 708 views
-
-
அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம். சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது. கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச்’ வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெ…
-
- 22 replies
- 2.6k views
-
-
'' நீ நீயாக இருக்கக் கற்றுக்கொள்' : கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கம்பவாரிதி உரை _ வீரகேசரி இணையம் 3/12/2010 2:06:13 PM 4 Share _ கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற அறிவொளி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது. சிறந்த பேச்சாற்றல்மிக்க கம்பவாரிதி நடைமுறையில் நாம் கைக்கொள்ளும் பிழையான பழக்கவழக்கங்களை சுவாரஸ்யமாகக் கூறியதுடன் எமது சிந்தனை வட்டத்துக்குள் அந்த வார்த்தைகளை சுழலவும் விட்டமை சிறப்பம்சம். "நீ, நீயாக இருக்கக் கற்றுக்கொள்... எதற்காகவும் உனது சுயத்தை மாற்றிக் கொள்ளாதே" என்பதுதான் அவரது உரையின் பிரதான கருப்பொருளாக இருந்தது. கம்பவாரிதி உரைத்தவை சுருக்கமா…
-
- 2 replies
- 1.7k views
-
-
இனிய சொல், இனிய செயல் வார்த்தைகள் மனிதன் கண்டறிந்த, மனிதனுக்கு வாய்த்த அரிய வரம். பல நேரங்களில் அதுவே சாபமாய் முடிவது பரிதாபமானது. செய்கைகள், ஒற்றை சப்தங்கள் மூலம் மட்டுமே, மனிதன் தன் எண்ணத்தை சொன்னவன், மொழியை கண்டறிந்து வார்த்தைகளை பிரயோகித்த நிமிடம், மனிதன் அடுத்த தளத்திற்கு தன்னை உயர்த்திய நிமிடமே. சந்தோசம், துக்கம் என மனிதன் வார்த்தை மூலம் வெளிப்படுத்துகிறான். மனித பேச்சுக்களே அற்று போனால், மனிதனும் மரம் போல் எந்த நகர்வும் இல்லாமல் இருந்திருப்பான். பல நேரங்களில் நமது காதுகள், நாம் பேசுவதை லயித்து கேட்கிறது. அதன் இனிமையில், இன்னொரு மனிதனின் நேரம் வீணாவதை அறிய முயல்வதில்லை. நிறைய பேசுவதால், என்ன பேசுகிறோம், சரியான வார்த்தை கோர்வைகளா என்பதை கவனிக…
-
- 0 replies
- 3.5k views
-
-
அதென்ன ஆணாதிக்கம் என்பது.??! ஆண் ஆண் தான். பெண் பெண் தான். சமூகத்தில சம உரிமை என்பது ஆணைப் பெண்ணாக மாற்றுவதில் அல்ல. அல்லது பெண்ணை ஆணாக மாற்றுவதில் அல்ல. பெண்ணை ஆணை சக மனிதனாக எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ளுதலும் நடத்துதலும் ஆகும். விலங்கு இராட்சியம் எங்கனும் ஆண் பலமானதாகவே அதிகம் விளங்குகிறது. அது ஆதிக்கம் அல்ல. தலைமைத்துவ சமூகம் நோக்கிய ஒரு காரணி. சமூக வாழ்வில் தலைமைத்துவம் மூத்தது வழிகாட்டுதல் என்பன போன்ற விடயங்கள் அடங்கி இருக்கின்றன. சிங்கக் கூட்டத்திற்கு ஆண் சிங்கம் தலைமை. யானைக் கூட்டத்திற்கு ஆண் யானை தலைமை. தலைமைப் பண்பு என்பது ஆதிக்கம் அல்ல. ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் பெண் தலைமைத்துவம் கூட சமூக விலங்குகள் மத்தியில் அவதானிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில…
-
- 37 replies
- 3.8k views
-
-
திருமணத்துக்கு பின்னர் ஜோடிகளுக்குள் இணக்குகளும் பிணக்குகளும் ஏற்படுவது சகஜம் தான். என்றாலும், அது முற்றிவிடாமல் இருக்க வேண்டும். அப்படி இருவருக்குள்ளும் ஏற்படும் மோதலை காதலாக்குவது எப்படி ? * இருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படையாக அடிக்கடி வெளிக்காட்டவேண்டும். * இருவருக்குள் யார் பெரியவர் என்கின்ற நினைப்போ அதற்குரிய வார்த்தையோ பரிமாறிக்கொள்ளவே கூடாது. * இருவரும் எவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை... காதலை பகிர்ந்துகொண்டால் நல்லது. * வேலையிலோ அல்லது வெளியிலோ எவ்வளவு பரபரப்பாக தான் இருந்தாலும் இருவரும் தனிமையில் சந்தித்துக்கொள்ளும், பேசிக்கொள்ளும் நேரத்தை ஒதுக்குங்கள். * இருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும் சாதாரண விட்டுக்கொடாமை…
-
- 9 replies
- 1.4k views
-
-
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன் முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. பிறகு,…
-
- 3 replies
- 1.6k views
-