சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும் போது, அவர்களைப் பார்த்துக் கொள்வது சுலபமல்ல ; என்றாலும், பசி தூக்கம் பார்த்து கவனித்து விட்டால், விளையாடிக் ö காண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர வளரத்தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்பதில்லை என்று பெற்றோரும், பெற்றோர் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று பிள்ளைகளும் புலம்புகிறார்கள். கரு முதல் இறுதி வரை கூடவே இருக்கும் ஒரே உறவு, இந்தப்பெற்றோர் – பிள்ளை உறவுதானே? அதை பலப்படுத்தும் முயற்சி மிகவும் அவசியம் அல்லவா! * தலைமுறை இடைவெளி என்பது என்ன? புரிந்துகொள்ளுதலில் இடைவெளி என்பது பெற்றோர் பிள்ளைகள் இடையே மட்டும்தான் வருகிறதா? இடைவெளியைக் குறைத்து இந்த உறவுக்குப் பாலம் அமைப்பது எப்படி? தலைமுறை இடைவெளி என்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாம் இழந்துவரும் பண்பாடுகளில் மிக முக்கியமானது கூட்டுக்குடும்பமாகும். பலதரப்பட்ட உறவுகளோடு அவ்வப்போது ஏற்படும் பிணக்குகளை பிரச்சினைகளாக்காது அனைவரின் நலன் கருதி விட்டுக்கொடுத்துப் போகும் தன்மையை கூட்டுக்குடும்பங்களில் அன்று கண்டோம். பெரிய குடும்பமாக இருந்தாலும் குடும்ப வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் எவ்வித பங்கமும் வந்திடாது பார்த்துக்கொண்டனர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும். ஆனால் இன்றோ, திருமணத்திற்கு முன்னர் தனிக்குடித்தனம் பற்றி பேசி முடிவெடுத்து விடுகின்றனர் இன்றைய நவ நாகரிக இளம் தலைமுறையினர். தெரியாத ஒன்றினைப் பற்றி புரியாமல் பேசுவதில் ஆச்சரியமில்லைதான். இருப்பினும் அவர்களின் குடும்பத்தினர் கூட்டுக்குடும்பத்தின் ஏற்றமிகு சிறப்புக்களை சொல்லித்தராது போவதும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ள சுமார் 3 கோடி பெண்கள்-மேலும் பல முக்கிய செய்திகள் October 12, 2020 Share 41 Views உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘Stacked Odds’ என்ற புதிய அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமான பெண்கள் நவீன அடிமைத்தன சூழலுக்குள் சிக்கியுள்ளனர் என்றும் இந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. ரோஹிங்கியா அகதிகளுக்கு மொழிக் கல்வி மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிக…
-
- 0 replies
- 461 views
-
-
பள்ளி மாணவர்கள் மனித உடலைமைப்பு பற்றித் தெரிந்து கொள்வதே அவசியம். அது ஏற்கனவே அறிவியல் பாடம் மூலம் புகட்டப்படுகிறது. இந்நிலையில் தனயாக பாலியல் கல்வி என்று ஒன்று தனியாகத் தேவையில்லை பள்ளிகளில் பாலியல் கல்வி தேவையில்லை என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அங்கமான சிக்ஷா சன்ஸ்க்ரிதி உத்தன் நியாஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாலியல் அத்துமீறல் என்றால் என்ன?, பெண்களை மதிப்பது எப்படி? பெண்கள் தற்காப்பு, குடும்பக் கட்டுப்பாடு, பால்வினை நோய்களைத் தடுப்பது எப்படி ? போன்றவற்றின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அங…
-
- 0 replies
- 498 views
-
-
[size=4]ஒரு மகளின் பார்வையில் அவளது அப்பா... அவளது கண்களுக்கும் மனதிற்கும் எப்படி எல்லாம் காட்சியளிக்கின்றார் உணர்வுடன் பாருங்கள்...[/size] [size=3] அப்போது தான் நான் பிறந்திருந்தேன் என்னை என் அப்பாவிடம் ஒப்படைக்கின்றனர். என் அப்பாவின்; கைகளின் ஸ்பரிசம் பட்டவுடன் இறைவனை தொட்ட உணர்வு எனக்குள்ளே... என்னை வாஞ்சையுடன் அணைத்த என் அப்பாவின் கண்;களில் இருந்து என் கைகளிலே விழுந்த ஆனந்தக்கண்ணீர் இப்போதும் என் கைகளை நனைக்கின்றது... சுமார் ஒரு மாதம். என் உடல் சூழல் தட்ப வெப்பங்களை மறுதலித்தபோதெல்லாம் அதற்கான ஒத்த தன்மைகளை வருடிதந்துகொண்டிருந்தார் என் அப்பா... ஏழு மாதங்கள், நான் மெல்ல மெல்ல தவண்டு செல்ல ஆரம்பிக்கின்றேன். என் கால்கள் கொஞ்சம் வலிக்கின்றன. ஆனால் ஒவ்வொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்னமும் தீர்வின்றித் தொட ரும் ஆபத்து மிகுந்த பிரச்சினையாக இருக்கிறது பகிடி வதை. றுகுனு பல்கலைக்கழக சமூக அறிவியல் துறைத் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் உபாலி பன்னிலகே இது குறித்துக் கூறும் போது, பல்கலைக்கழகக் கட்டமைப்பையே சுற்றிக் கொண்டிருக்கும் பாம்பாக இந்த பகிடிவதையினை அனேக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுவதாகக் கூறுகிறார். இலங்கையில் இதுவரை மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் இந்த பகிடிவதையினால் உயிரிழந்த போதிலும் இன்னமும் இதற்கு நிரந்தரத் தீர்வுகள் கிடைக்கவில்லை. எனவே அச்சுறுத்தலான பகிடிவதையை நிறுத்துவதற்கான வழிவகைகள் இல்லையா? பகிடிவதை என்பது இன்று இந்நாட்டில் வேரூன்றியுள்ள வார்த்தையாகியிருக்கின்றது. இந்த பகிடிவதை தொடர்பில் செய்யப்படும் ம…
-
- 0 replies
- 773 views
-
-
சாதியம் எனது பார்வையில் ஈழம் பிரிட்டனின் ஆட்சியில் இருந்த காலப்பகுதி..…. தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவர் கொழும்பில் இருந்து வரும் போது காலணி அணிந்திருந்ததற்காக ஒரு சாதிக்கலவரம்….. தாழ்ந்த சாதி என்ற வார்த்தைப்பிரயோகத்தை விட தாழ்த்தப்பட்ட சாதி என்பது மிகப்பொருத்தமாக இருக்கும். மூன்று தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் உயிருடன் குடிசையொன்றில் போட்டு கொளுத்தப்பட்டார்கள்…… இது அண்மையில் ஒரு வயோதிபர் கூறிய தகவல். இதெல்லாம் அந்தநேரத்தில சர்வ சாதாரணமாய் நடந்தது தம்பி என்றார். அது மட்டுமல்ல உயர் சாதியினரின் கிணற்றில் தண்ணீர் அள்ளியதற்காக கொலைசெய்யப்படுவதும் உயர் சாதிப்பெண்ணை காதலித்ததற்காக கொலை செய்யப்படுவதும் சர்வ சாதாரணமாக நடந்திருக்கின்றன. அதற்கு பிற்பட்ட காலத்தில் ஓரளவு சா…
-
- 0 replies
- 1.1k views
-
-
இளமைக்காலத்தில் கனவுகளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சில சமயங்களில் இக்காலப்பகுதியில் எழும் அற்ப ஆசைகளுக்கும். உணர்வுகளுக்கும் அடிபணிந்து எடுக்கும் முடிவுகள் பலரின் கனவுகளைச் சிதைத்து, எப்படியெல்லாமோ வாழவைத்து விடுகின்றன. ஒரு வேளை அந்த நேரத்தில் அவர்கள் நன்கு ஆராய்ந்து, சிந்தித்து சரியானதொரு முடிவினை எடுத்திருந்தால் வாழ்வின் கனவுகளையும், உறவுகளையும் தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது. அந்த வகையில் சிறைச்சாலைச் கதவுகளுக்கு முன்னால் தான் கருவில் சுமந்து பெற்றெடுத்த மகனைக் காண வேண்டும், அவனைக் கட்டித்தழுவி சுக, துக்கங்களை அறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் கால் கடுக்கக் காத்திருந்தாள் சுது நோனா. நாம் அவருடன் கதைக்க முற்பட்ட போது விரக்தி கலந்…
-
- 0 replies
- 563 views
-
-
'மனைவி தனியுரிமை கோருவது கணவர் மீதான கொடுமை அல்ல': தில்லி உயர் நீதிமன்றம்! 'திருமணமான ஒரு பெண், தன்னுடைய புகுந்த வீட்டில் தனியுரிமையை (பிரைவசி) கோருவதை, கணவரைக் கொடுமைப்படுத்துவதாகக் கருத முடியாது. எனவே இதன் அடிப்படையில் கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது' என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2003-இல் திருமணம் செய்து கொண்ட ஒருவர், தன் மனைவி கூட்டுக் குடும்பத்தில் வாழ விருப்பம் இல்லாததால் தனிக் குடித்தனம் நடத்த வற்புறுத்துவதாகவும் அதற்காக தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி தில்லி கீழமை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி 2010-ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, 'தனிமை என்பது அவரவரது அடிப்படை உரிமை என்பதால் தனிக் குடித…
-
- 0 replies
- 609 views
-
-
நமக்குள் ஒரு தலைவர்! பிரச்சினைகளையும் சிக்கல்களையும் உள்ளடக்கியதே வாழ்க்கை. சூழல் கடினமாக இருந்தாலும், பிரச்சினைகள் சவால்மிக்கவையாக இருந்தாலும், அவற்றைச் சமாளிக்கும் தெளிவும் மனோதிடமும் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். இவற்றை நமக்கு அளிப்பதே உண்மையான தலைமைப் பண்பு. அப்படியானால் தலைமைப் பண்பு என்பது பிறரை வழிநடத்துவதும் ஆள்வதும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்? தன்னை ஆள முடியாதவன் ஒரு தலைவனாக முடியாது என்பதுதான் இதற்குப் பதில். தலைமைப் பண்பைப் பயில்வதற்குப் பள்ளிக்கூடங்கள்தாம் மிகச் சிறந்த இடம். வெளியுலகுடனான முதல் தொடர்பை நமக்கு அளிப்பவை அவைதான். அங்கு கல்வியைக் கற்பதோடு நம்மைச் சுருக்கிக்கொள்ளக் கூடாது. பின்னால், நாம் சந்திக்கப்போ…
-
- 0 replies
- 487 views
-
-
பழக தெரியவேண்டும், பார்த்து நடக்கவேண்டும்! ஸ்ரீ விஜி ஆண் நட்பு என்றாலே அலர்ஜியாகிறது இப்போதெல்லம். இப்போது என்றல்ல எப்போதுமே இந்த உணர்வு என்னிடம் நீறுபூத்த நெருப்பாய் அணையாமல் இருப்பதை நான் தொடர்ந்து உணர்ந்துவந்துள்ளேன். எவ்வளவு அன்பாக கள்ளங்கபடமில்லாமல் பழகினாலும், அந்த உறவில் எப்படியாவது காமம் நுழைந்துவிடுகிறது. அந்தப்பெண் விரும்பியோ விரும்பாமலோ சம்பந்தப்பட்ட அந்த ஆண் நண்பன், எதோ ஓர் உள்உணர்வை மறைத்து வைத்துக்கொண்டுதான் உறவாடியபடி இருப்பான், போலியாக. பெண் என்பவள் பாலியல் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்வதற்கு தயங்குவாள். அப்படி அவள் தயங்குவதற்குக் காரணம் – அவளை ஆரம்பத்திலிருந்து அடக்கி ஒடுக்கி வைத்துள்ள அவளின் சுற்றம்தான். இன்னமும…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்திய ஊடகங்களில் உயர்சாதியினரின் ஆதிக்கம் - ஆராய்ச்சி முடிவு Pathivu Toolbar ©2005thamizmanam.com இந்திய ஊடகங்கள், இடவொதுக்கீட்டினை எதிர்த்து நடைபெறும் வெறியாட்டங்களை ஓங்கி ஒலித்தும், இடவொதுக்கீடு சார்பான நிகழ்வுகளைப் புறக்கணித்தும் வருவதை நாம் அறிவோம். இதன் காரணம் ஊடகங்களின் அதிகாரம் ‘உயர்’சாதியினரின் கைகளில் இருக்கின்றது என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இந்த எளிய உண்மையை அறிந்திருந்தாலும் வம்படிக்காகவே புள்ளிவிபரம் கேட்கும் சில புள்ளிகளை நாம் எதிர்கொண்டே வருகிறோம். அவர்களுக்காக இந்தப் பதிவு. வழக்கம்போல இதிலும் அவர்கள் குறை கண்டுபிடிக்கக் கூடும். டில்லியிலிருந்து இயங்கும் 40 ‘தேசிய’(national) ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடந்த இரண்டு தசாப்தங்களாக இங்கு புலம்பெயர்ந்த திருமணமான தம்பதிகள் மத்தியில் குழந்தை பேறு தள்ளிப்போதல் அல்லது குழந்தைப் பேற்றிக்கான வாய்புகள் குறைவடைந்து போதல் பாரிய உளவியல் சமூக பிரச்சனகளாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலும் இந்தப் பிரச்சனைகள் உள்ள தம்பதிகளுக்கு மகப்பேற்று நிபுணர்களால் பெரிதும் சிபார்சு செய்யப்படுவது பரிசோதனைக் குழாய் [(IN VITRO FERTILIZATION ( IVF) ]குழந்தை முறையே ஆகும். முதலில் இந்த தம்பதிகளை பல்வேறு கட்ட பரிசோதனைகழுக்கு உட்படுத்தி இறுதியிலேயே இந்த முறை மகப்பேற்று மருத்துவ நிபுணர்களால் சிபார்சு செய்யப் படுகின்றது.இந்த முறையில் பல நிறைகளும் குறைகளும் காணப்படுகின்றன.நிறைகளாக தம்பதிகள் இரட்டைக் குழந்தைகளாகவோ(TWINS BABY) அல்லது மூன்று குழந்தைகளாகவோ[ (TRIPIL…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாடசாலையிலேயே “கட்டிப்பிடி“: பால் சமத்துவத்திற்காக வித்தியாசமாக சிந்திக்கும் அதிபர்! July 4, 2018 பெண்களை பாலியல் பொருட்களாக பார்க்காமல், அவர்களையும் சக மனிதர்களாக பார்க்கவும், ஆண் -பெண் சமத்துவத்தை புரிய வைக்கவும், வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பாடசாலை அதிபர் ஒருவர். இடதுசாரிய சிந்தனையுள்ள கருணாகரன் என்ற அதிபரே இந்த வித்தியாசமான- முன்னுதாரண முயற்சியில் இறங்கியுள்ளார். நாவலப்பிட்டிய கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் இந்த முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. அந்த பகுதியில் அவரது முற்போக்கான நடவடிக்கைகளால் அவரை பெரிதும் மக்கள் மதிப்பதும் குறிப்பிடத்தக்கது. யட்டியாந்தோட்ட கருணாகரன் என்ற பெயரில் இலக்கியம், சமூகம், அரசியல் என பல துறைகளில் தீவிரம…
-
- 0 replies
- 1k views
-
-
சும்மா இருப்பவள் ~ லறீனா ஏ. ஹக் ~ சமூக அமைப்பில் உள்ள பல்வேறு நிறுவனக் கட்டமைப்புக்களில் குடும்பமும் ஒன்று. என்றாலும், சாதாரணச் சமூக உளவியலில் அது ஒரு ‘நிறுவனம்’ என்பதான விம்பம் ஆழம் பெறவில்லை என்பதே உண்மை. சமூக, கலாசார, சமயம் சார்ந்த கருத்தியல்கள் கட்டமைத்துள்ள புனிதப் பிம்பம் மேலெழுந்து ஆழப்பதிந்துள்ளதன் விளைவே இதுவாகும். மனித உயிரி ஒரு சமூகப் பிராணி என்ற அளவில், சிறுகுழுவாக, பெருங்குழுமமாக ஒருங்கு சேர்ந்து வாழ்வது இயல்பான ஒன்றாகும். அந்த வகையில், குடும்பமும் ஆணும் -பெண்ணும் இணைந்து வாழும் ஒரு சமூகச் சிற்றலகாக இருக்கின்றது. நம்முடைய சமூக அமைப்பில் கணவன் – மனைவி- குழந்தைகள் இணைந்ததாக, சிலபோது இவர்களோடு மூத்த தலைமுறையினரையும் உள்வாங்கியதாகக் குடும்பம் கட்ட…
-
- 0 replies
- 886 views
-
-
நாங்கள் புனிதமானதாகவும் உயிராகவும் நேசிக்கும் எமது அடையாளங்கள் நாகரீகம் எனும் போர்வையில் கேவலப்படுத்தப்படுகின்றது. ஈழத்தமிழர்கள் மிகவும் புனிதமானதாகவும் போற்றியும் வணங்கு கார்த்திகைப்பூவினை சிலர் ஆடையிலும் பாதணியிலும் வரைந்துள்ளமை மிகவும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது. தயவு செய்து இனி வரும் காலங்களில் இயற்கையான கார்த்திகை பூவை சூடாமல் சேலைகளிலோ,மேற் சட்டையிலோ எவரும் அணியவேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கேட்டுகொண்டுள்ளனர். வரலாறுகளை மறந்து தயவு செய்து எமது மாவீரர்களுடன் விளையாடாதீர்கள் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://lankasee.com/2020/06/18/தமிழ்-இனத்தின்-புனிதத்தை/
-
- 0 replies
- 582 views
-
-
இல்லறவாழ்வில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு மறைமுகமாக பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, கூட்டுக் குடும்ப வாழ்கை முறையில் இருந்து விலகிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வாழ்வியலில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, பெற்றோருடன் தாத்தா பாட்டியையும் வைத்து பாதுகாக்கும் வழக்கம் மறைந்துவிட்டதை நம் இன்றைய காலத்தில் பார்க்கிறோம், ஓரிரு குழந்தைகள் பெற்று அதையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், அல்லது நகர சூழலில் வாழப் பிடிக்காமல் தாம் வாழும் சூழலிலேயே வாழப் (பிடிவாதம்) பிடித்து தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், பெற்றோர் சுமை என்றே புறக்கணிப்பில் வாழும் பெற்றோர் ஒருபுறம், ஆண் வாரிசுகளைப் பெற்றோருக்கும் இந்நிலை தான…
-
- 0 replies
- 1.2k views
-
-
பெண்களின் வலி பேசும் 28 வயது பெண்ணின் பீரியட்ஸ் ஓவியம்! என்னதான் நாகரிகம் வளர்ந்து விட்ட இந்தக் காலக்கட்டத்திலும், பெண்களின் மாதவிடாய்....அல்லது ஆங்கிலத்தில் பீரியட்ஸ் என்று சொல்லப்படும் வழக்கமான இயற்கை உபாதை பற்றி இன்னமும் வெளிப்படையாகப் பேச எல்லோருமே தயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்களும், பெண்களும் அறிவுப்பூர்வமான பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாலும், மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதைத் தவிர்க்கவே நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம். பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்களுக்கு அனைத்து விவரங்களும் தெரிந்தாலும், பேசக் கூடாத ஒரு தலைப்பாகவே இன்னமும் அது இருக்கிறது. வளர்இளம் பெண்கள் தொடங்கி சுமார் 50 வயது வரையிலான பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதமும் நிகழும் ரசாய…
-
- 0 replies
- 989 views
-
-
கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள் பெண்கள் தங்கள் சக்திக்கு மீறிய சில செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆண்கள் துணை இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்றும் சில ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், பெண்கள் கார் ஓட்டுவதைகூட வினோதமாக பார்ப்பார்கள். கார் ஓட்டிச்செல்லும் பெண்கள் சிக்னலில் நின்றால் அவர்களை பார்த்து கிண்டலடிப்பது, அவர்களை தன் பக்கம் திசை திருப்பும் விதமாக தேவையின்றி ‘ஹார்ன்’ ஓசையை எழுப்புவது போன்ற வேலைகளிலும் ஈடுபடுவார்கள். இன்னொரு வகை ஆத்திரக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள், ‘இவங்களெல்லாம் கார் ஓட்ட வந்திட்டாங்க! நாடு உருப்பட்ட மாதிரிதான்’ என்று வயிற்றெரிச்சலை வெளிப்படுத்து…
-
- 0 replies
- 914 views
-
-
கூச்சத்தை நீக்க சில வழிகள் பொதுவாக நம்மில் பலருக்கு முக்கியமான சந்திப்புகளின் போது புதிய நபர்களை அணுகுவதில் பிரச்னை எழுகிறது. இதனால் நல்ல வாய்ப்புகளை நாம் இழக்க நேரிடுகிறது. எடுத்துக்காட்டாக நேர்முகத்தேர்வின் போதும், வியாபார சந்திப்புகளின் போதும் கூச்சத்தால் நாம் பல வாய்ப்புகளை இழக்கிறோம். இதனால் நமது வளர்ச்சி தடைபடுகிறது. புதிய நபர்களை சந்திக்கும் போது ஏற்படும் கூச்சத்தால் அசௌகரியமாக உணர்கிறோம். கூச்சத்தை போக்குவதற்கான சில வழிகளை நாம் இங்கு காண்போம். உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள்: ஒரு செயலை தங்களால் செய்து முடிக்க முடியும், என உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள். இதன் மூலம் தங்களது அறிவு வளர்ச்சி பெற்று குணாதியங்கள் மாற வாய்ப்பிருக்கிற…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=Nvdm7AGvOKU&feature=player_embedded
-
- 0 replies
- 833 views
-
-
கரும்பாலை ஏரியா குழந்தைகளை கரை சேர்க்கும் ‘ஸீட்’ அமைப்பு கார்த்திக் பாரதி ‘எங்களுக்கான அதிகபட்ச ஆசை எதுவும் கிடையாது. இயலாதவர்களுக்கு எங்களின் உதவி தேவைப்படும் வரை இந்த நிறுவனம் இருக்கும். அதன் பிறகு கலைத்து விடுவோம்’ என்கிறார் ‘ஸீட்’ (SEED) நிறுவனத்தின் கார்த்திக் பாரதி. நிறுவனம் சிறியதாக இருந்தாலும் இவர்களின் சேவை பெரியது. மதுரை கரும்பாலை ஏரியா என்பது, கட்டிடத் தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், வீட்டு வேலையாட்கள் என உடல் உழைப் பாளிகளை உள்ளடக்கிய பகுதி. இங்கு வசிப்பவர்களின் குழந்தை களை பள்ளிக்கு படிக்க அனுப்பு வதே பெரிய காரியம் என்ற நிலையை மாற்றி, இப்போது இங்கே பிஹெச்.டி. மாணவர்கள் வரை உருவாகி இருக்கிறார்கள். இதற்கு மூலகாரணம் கார்த்திக் பாரதி. இவரு…
-
- 0 replies
- 686 views
-
-
மூளைக்கு யோகாசனம் “தோப்புக் கரணம்” (வீடியோ இணைப்பு) மூளைக்கு என்ன பயிற்சி எனக் கேட்டால், பலரும் தலையை அமுக்கி விடுவது, மனனம் செய்வது அதாவது ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்லுதல் என்று தான் சொல்வது வழமை. ஆனால், முன்னாளில் நமது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் நமக்கு வழங்கிய தண்டனை “தோப்புக்கரணம்” தான் மூளைக்கு சிறந்த யோகாசனம். தோப்புக்கரணம் போடுவதால் மூளை புத்துணர்ச்சி அடைகிறதாம், Autism எனப்படும் மன இறுக்கம் கொண்ட குழந்தைகள் கூட இந்தத் தோப்புக்கரணத்தால் நலன் பெறுகிறார்களாம். யாராவது ஒரு குழந்தை அடங்காமல அடம்பிடித்தால் அல்லது கோபத்தால் கிடைப்பதை எல்லாம் எறிந்து உடைத்தால், "Go to your room and think what you did..." என்பதில்லையே... செய்த பிழைக்…
-
- 0 replies
- 868 views
-
-
தமிழர் கல்வியின் தற்போதைய நிலை குறித்து அக்கறையுடன் கவனம் செலுத்தப்படுகிறதா? கல்வியானது சமுதாயத்தின் கண் என்று காலங்காலமாகத் தமிழர்களால் கருதப்பட்டு வருகின்றது. இவ்வளவு முக்கியத்துவமான கல்வியின் தற்போதைய நிலையையிட்டு கவனம் செலுத்தப்படுகின்றதா? தமிழ்க் கல்வியின் தற்போதைய நிலை என்ன என்று ஆராயப்படுகின்றதா என்று நோக்கின் அவ்வாறான பொறுப்பான செயல் எதுவும் தமிழ்க் கல்விப் புலத்தில் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் தமிழ் மொழி மூல கல்வி பாரதூரமான பின்னடைவை அடைந்துள்ளது. சமுதாயத்தின் சகல துறைகளிலும் தனது இருப்பை உறுதிசெய்து கொள்வதற்கும் அந்தஸ்தைப் பேணுவதற்கும் கல்வி மிகவும் அவசியமானது. இலங்கை சுதந்திரம் பெற்று இருபது ஆண்டுகள் வரை தமிழ்க் கல்வி …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆதிதிராவிடர் (விடுதி) சிறைச்சாலை! யாழன் ஆதி தலித் மக்களின் விடுதலை என்பது அவர்களின் சமூக, அரசியல் சூழலில் மட்டுமல்ல; அது அவர்களின் பொருளாதார வளர்ச்சியிலும் அடங்கியிருக்கிறது. தலித்துகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கல்வி மட்டும்தான். ஆனால், சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, இங்கு நிலவும் கல்வி முறையிலான ஏற்றத் தாழ்வுகளில் அவர்களுக்கு கிடைத்திருப்பது தரமற்ற கல்விதான். சத்தான உணவினைப் போல, உயர்தர கல்வியும் அவர்களுக்கு எட்டுவதில்லை. இந்தப் பின்னணியோடுதான், தலித் மாணவர்கள் தங்கிப் பயில்கின்ற ‘ஆதிதிராவிடர் நல மாணவ/மாணவியர் விடுதிகள்' எதிர்கொள்ளப்பட வேண்டும். இந்த விடுதிகள்தான் எதிர்கால தலித்துகளின் வாழ்நிலையைத் தீர்மானிக்கின்ற இடங்களாக இருக…
-
- 0 replies
- 788 views
-