உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
ஊர் ஞாபகம்:வயிற்றைக் கிழித்து தற்கொலைக்கு முயன்ற இந்தியர் ஏப்ரல் 27, 2007 துபாய்: ஊர் திரும்ப வேலை பார்த்த நிறுவனத்தினர் மறுத்ததால், மனம் உடைந்த இந்தியர் ஷார்ஜாவில் வயிற்றை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இந்தியாவைச் சேர்ந்த குமார்(20-எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிவிக்கப்படவில்லை)என்பவர் ஷார்ஜாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். திடீரென ஊரை விட்டுப் பிரிந்ததால் அவருக்கு ஊர் ஞாபகம் வந்து வாட்டியது. இதனால் வேலையை விட்டு விட்டு மீண்டும் தாயகம் திரும்ப முடிவு செய்த குமார், தன்னை வேலைக்குச் சேர்த்து விட்ட ஸ்பான்சரை அணுகி கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த ஸ்பான்சர் வேலைக்கான பெர்மிட், குடியிருப்பதற்கான பெர…
-
- 0 replies
- 767 views
-
-
குமரி மீனவர்களை சுட்டது கடல் புலிகள்: புலிகள் பிடியில் 12 மீனவர்கள்-டிஜிபி தகவல் ஏப்ரல் 28, 2007 சென்னை: கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி ஐந்து மீனவர்களை சுட்டுக் கொன்றது விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போயுள்ள 12 குமரி மாவட்ட மீனவர்களும், விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் தமிழக டிஜிபி முகர்ஜி பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். ராமேஸ்வரம் மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். …
-
- 7 replies
- 2k views
-
-
தினத்தந்தியில் ஒரு செய்தி வந்துள்ளது. அதன் உண்மைத்தன்மை தெரியாத படியால் இணைக்கவில்லை
-
- 3 replies
- 1.7k views
-
-
குடிகார கணவரை அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் கொன்ற மனைவி! குடித்து விட்டு வந்து அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை, தனது அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் சரமாரியாக அடித்துக் கொலை செய்த பெண்ணையும், அவரது அக்காவையும் போலீஸார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூர் கணேசபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன். இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தார். தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துவாராம். இதனால் மனைவி ஆதிலட்சுமி அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சீனிவாசன், கிண்டியில் வசித்து வந்தார். அதன் பின்னர் மயிலாப்பூருக்கு மாறினார். அங்கு போன பின்னர் தனது …
-
- 24 replies
- 7.4k views
-
-
சென்னை துறைமுகத்திற்கு பலத்த பாதுகாப்பு சென்னை - ஏப்ரல் 27, 2007 : லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால், சென்னை துறைமுகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியத் துறைமுகம் ஒன்றை லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் தாக்கி அழிக்கத் திட்டமிட்டுள்ளாகவும், இதற்காக கராச்சியில் பயிற்சி பெற்ற தற்கொலைப்படை ஒன்று ஊடுறுவியுள்ளதாகவும் மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. இதையடுத்து சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்…
-
- 0 replies
- 727 views
-
-
இலங்கைக்கு ஆயுதம் கடத்தல்: பாதுகாப்பு சட்டத்தில் கைதான 3 பேர் விடுதலை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக கடந்த ஜனவரி மாதம் தினகரன், விஜயகுமார், மொய்தீன்யாகு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் சிவகங்கை கலெக்டர் உத்தர வின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை 3 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பு கூறியது. கியூ பிராஞ்ச் போலீசாரின் சிபாரிசை அப்படியே ஏற்று கலெக்டர் செயல்பட்டு இருக்கிறார். தேசிய பாது காப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை 7 நாட்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
வெளிநாட்டு மாணவருக்கு புதிய விசா நடைமுறைகள் -அறிமுகப்படுத்துகிறது பிரிட்டன் வெளிநாட்டு மாணவர்கள் பிரிட்டனில் தமது பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் ஒரு வருட காலத்திற்கு அங்கு தங்கியிருந்து தொழில் புரிவதற்கு ஏற்ற வகையில் பிரிட்டன் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் தமது பட்டப்படிப்பை அல்லது பட்டப்பின் படிப்பை நிறைவு செய்த வெளிநாட்டு மாணவர்கள் ஒரு வருட காலத்திற்கு அங்கு தங்கியிருந்து தொழில் புரிவதற்கு வழி வகுக்கும் நடைமுறை மே முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது. குறிப்பிட்ட மாணவர்கள் இதற்கு மேலும் பிரிட்டனில் தங்கியிருக்க விரும்பும் பட்சத்தில், உரிய குடிவரவு நடைமுறையைப் பின்…
-
- 0 replies
- 830 views
-
-
தற்கொலைக் குண்டுகள் மண்டபம் கடலில் மீட்பு! அகதிகள் அதிர்ச்சி; பொலிஸார் குழப்பம் தற்கொலைக் குண்டுதாரிகள் பயன்படுத்தும் வெடிகுண்டுகளை மண்டபம் கடற்பகுதியில் வைத்துப் பொலிஸார் மீட்டுள்ளனர். 5 வெடிகுண்டுகள் அடங்கிய பெட்டியொன்றை புதன்கிழமை அதிகாலை மீட்டிருக்கும் மண்டபம் பொலிஸார் இந்தச் சம்பவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். குறித்த வெடிகுண்டுகள் அடங்கிய பெட்டி றெஜிபோமில் பொதி செய்யப்பட்டிருந்ததாக அதனை மீட்ட வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் விடிகாலை "சீல்' வைக்கப்பட்ட நிலையில் பெட்டியொன்றைக் கண்ணுற்ற ஈழத்தமிழ் அகதியொருவர் அதனைப் பிரித்து…
-
- 2 replies
- 914 views
-
-
குஜராத்தில் முஸ்லீம்களை என்கவுண்டர் என்ற பெயரில் விரட்டி விரட்டிக் கொலை!!! அகமதாபாத்: குஜராத்தில் முஸ்லீம்களை என்கவுண்டர் என்ற பெயரில் விரட்டி விரட்டிக் கொலை செய்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்பவர் தனது மனைவி கெளசர் பீபியுடன் அகமதாபாத்திலிருந்து சங்க்லி என்ற ஊருக்குப் பேருந்தில் போய்க் கொண்டிருந்தார். அகமதாபாத் அருகே நரோல் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது போலீஸார் பேருந்தை நிறுத்தி இருவரையும் இழுத்துச் சென்றனர். 3 நாட்கள் கழித்து ஷேக்கை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்றும், அவர் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்ப முயன்றபோது போலீஸார் அவரை சு…
-
- 3 replies
- 1.1k views
-
-
கருக்கலைப்புக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கியது மெக்ஸிக்கோ உலகில் இரண்டாவதாக அதிகளவு ரோமன் கத்தோலிக்கர்களை கொண்ட நாடான மெக்சிக்கோவின் சட்டவாக்க சபை கருக்கலைப்பை சட்டரீதியாக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. 46 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இச் சட்டம் கருவுற்ற 12 வாரங்களில் கருவைக் கலைப்பதற்கு அனுமதி வழங்குகிறது. முன்னர் மெக்ஸிக்கோவின் சட்டவாக்க சபை வல்லுறவுக்குள்ளாக்கப்படல் தாயின் உயிருக்கு ஆபத்தெனக் கருதப்படல் மற்றும் கருவளர்ச்சியில் குறைபாட்டுக்கான அறிகுறிதென்படல் போன்ற காரணங்களுக்கு மட்டுமே கருவினை கலைப்பதற்கு அனுமதியளித்திருந்தது. மெக்ஸிக்கோவின் சனத்தொகையில் 90% மானோர் கத்தோலிக்கராவர். மெக்ஸிக்கோ பேராயர் இச் சட்டமூலத்தை எதிர்க்க வேண்…
-
- 0 replies
- 856 views
-
-
மதுரை: 'சித்திரை திருவிழாவில் கார் குண்டு வெடிக்கும்'- கருணாநிதிக்கும் குண்டு மிரட்டல் ஏப்ரல் 24, 2007 மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா அன்று கார் குண்டு வெடிக்கும் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகி ராஜாவுக்கு அல்-உம்மா அமைப்பின் பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதே போல முதல்வர் கருணாநிதி மதுரை வரும் போது அவர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் எனவும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மதுரையில் உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்ச்சையாக தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் …
-
- 0 replies
- 728 views
-
-
British Challenger 2 tank ஈராக்கின் பாஸ்ராவில் பிரித்தானியாவின் பிரதான சண்டைத் தாங்கி வீதியோரக் குண்டு வெடிப்பில் தகர்ந்து போனது. இது பிரித்தானிய இராணுவ தொழில்நுட்பத்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6583607.stm ------------------------ Boris Yeltsin,76 இதற்கிடையே ரஷ்சியாவை அமெரிக்க முதலாளித்துவத்துக்கு விற்ற ரஷ்சிய முன்னாள் அதிபர் ஜெல்சின் மரணமாகிவிட்டார். http://news.bbc.co.uk/1/hi/world/europe/6584481.stm
-
- 4 replies
- 1.7k views
-
-
சென்னை: சென்னை துறைமுகத்தை வெடிகுண்டுகள் நிரப்பிய படகு மூலம் தகர்க்கப் போவதாக வந்த தகவலால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் திருநெல்வேலியிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. அதில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட படகு மூலம் துறைமுகம் தகர்க்கப்படும் என எழுதப்பட்டிருந்தது. இதனால் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக துறைமுகத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. துறைமுகத்திற்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இரு அடுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுதவிர கடலிலும் கடலோரக் காவல் படையினரின் ரோந…
-
- 1 reply
- 889 views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவு மக்கள் வாக்களிப்பு அமெரிக்க சார்பு வேட்பாளர் வெற்றி பெறும் சாத்தியம் [23 - April - 2007] பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தின் பின்னர் இடம் பெற்றுள்ளது. பத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும் கொன்சர்வேட்டிவான நிக்கொலஸ் சர்கோசிக்கும் சோசலிஷ கட்சியைச் சேர்ந்த செகொலெனே ரோயலுக்கும் இடையில் கடும் போட்டி காணப்படுகின்றது. கடுமையான சீர்திருத்தவாதி, அமெரிக்க சார்பாளர் எனக் கருதப்படும் சர்கோசி பல பிரான்ஸ் மக்களுக்கு அச்சமூட்டுபவராக காணப்படுகின்றார். சோசலிஷ வாதியான செகொலெனே ரோயல் இதற்கு நேர்மாறானவராகவும், பெண்ணிலை வாதியாகவும், தாய்மை உணர்வை ஏற்படுத்துபவரா…
-
- 9 replies
- 2.2k views
-
-
விடுதலைப்புலிகள் பெயரில் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் சென்னை, ஏப். 23- சென்னை ஈக்காடுத் தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு கடந்த சனிக்கிழமை ஒரு போஸ்ட்கார்டு வந்தது. நெல்லையில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அந்த போஸ்ட்கார்டில், தமிழில் மிரட்டல் விடுத்து எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில் கூறப்பட்டி ருந்ததாவது:- அரசை குறை கூறி ஜெயா டி.வி.யில் தொடர்ந்து செய்தி வெளியிடப்படுகிறது. இதை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில் விபரீத விளைவுகள் ஏற்படும். ஜெயலலிதா மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தப்படும். இது உறுதி. இவ்வாறு அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் விடுதலைப்புலிகள், வெங்கடேசன், பாளை. என்.ஜி.ஓ. பி. க…
-
- 13 replies
- 2.1k views
-
-
பாப் உல்மர் கொலை : கொலையாளி ரகசிய கேமிராவில் பதிவு!! பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்பட்ட ரகசிய கேமிராவில் கொலையாளியின் உருவம் பதிவாகியுள்ளதாக ஜமைக்கா போலீசார் கூறியுள்ளனர். பாப் உல்மர் கடந்த மாதம் ஜமைக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஜமைக்கா போலீசார் விசாரணை நடத்திய போது முதலில் சூதாட்டக்காரர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பின்னர் உல்மரை ஒன்றுக்கும் மேற்பட்டோர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என ஜமைக்கா போலீசார் கூறினார். இந் நிலையில் கடந்த வாரம் லண்டலில் வெளியாகும் த சன்டே டைம்ஸ் நாளிதழில் உல்மருக்கு முதலில் விஷம் கொடுத்து பின…
-
- 0 replies
- 840 views
-
-
ஈராக் யுத்தம் தோல்வியடைந்து விட்டதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் தெரிவிப்பு வியட்நாம், ஈராக் யுத்தங்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ்டபிள்யூ. புஷ் விவாதத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை, ஜனநாயகக் கட்சியின் மூத்த செனட்டர் ஈராக் யுத்தம் தோல்வியில் முடிவடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஒகியோவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஈராக் யுத்தத்தை வியட்நாமுடன் ஒப்பிடுமாறு கேட்கப்பட்டதற்கு புஷ் 1975 இல் சைகோனின் வீழ்ச்சிக்கு பின்னர் வியட்நாமிற்கும் கம்போடியாவின் கெமருக்கும் இடையில் மோதல் மூண்டதைப்போல ஈராக்கிலிருந்து அமெரிக்கா அவசரமாக விலகுவது பாரிய குழப்பத்திற்கு காரணமாக அமையலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். வியட்நாமிலிருந்து நாங்கள் வெளியேறிய பின்…
-
- 0 replies
- 770 views
-
-
ரயிலில் திருமணம் செய்ய ரஷ்யாவில் வசதி ரஷ்யாவில் தங்கள் திருமணத்தில் புதுமையை விரும்பும் ஜோடிகள், திருமணத்திற்கு என விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள ரயிலை தேர்ந்தெடுக்கலாம்.ரஷ்யாவில் புனித பீட்டர்ஸ் பெர்க்கில் உள்ளது மாஸ்கோவ்ஸ்கி ரயில் நிலையம். அங்கு அலங்காரத்துடன் ஒரு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. தேவாலயத்தில் திருமணம் செய்வதை போல, அந்த ரயிலில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தலாம். அங்கு 100 பேர் வரை தங்கி, திருமணத்தை கண்டு களிக்கலாம். அது தவிர, மணப்பெண் மணமகன், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வசதியாக தங்குவதற்கும் விருந்து பரிமாறுவதற்கும் அறைகள் உள்ளன. மேலும், திருமண தம்பதி அந்த ரயிலிலேயே தங்கள் தேனிலவை கொண்டாடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தினக்க…
-
- 1 reply
- 754 views
-
-
குடிவரவு நடைமுறையை கடுமையாக்குகிறது பிரிட்டன் வேற்று நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு குடியேறுவது அடுத்த வருடம் முதல் கடினமாகவிருக்கும் எனத் தெரிவிக்கப் படுகின்றது. அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ளதைப் போன்று, புள்ளிகளின் அடிப்படையில், பிரித்தானிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கக் கூடியவர்களுக்கே விசாக்களை வழங்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பிரித்தானியாவில் குடியேற விரும்புவர்களின் தகுதி அடிப்படையில் விசாக்கள் வழங்கப்படும் என்றும், விண்ணப்பிப்பவர்களில் தொழில்சார் வல்லுநர்களுக்கும் தொழில் துறையினருக்குமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்சார் வல்லுநர்கள் தவிர்ந்த ஏனையவர்கள், மாணவர்கள் …
-
- 1 reply
- 826 views
-
-
இராமர் அணை' சர்ச்சையில் இந்தியாவின் நான்கு சங்கராச்சாரியார்களும் தலையீடு `இராமர் அணை' உடைக்கப்படும் யோசனைக்கு எதிராக இந்தியாவின் 4 சங்கராச்சாரியர்களினது தலைமையின் கீழ் எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி புதுடில்லியில் பாரிய மக்கள் எழுச்சிப் பேரணியொன்று இடம்பெறவுள்ளது. இந்திய அரசின் சேது சமுத்திரத் திட்டத்தினால் பாக்குநீரிணைப் பகுதியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ராமர் பாலம் பாதிக்கப்படுமென்ற சர்ச்சையின் தொடர்ச்சியாகவே இந்த கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த மக்கள் எழுச்சிக் கூட்டத்தின் பின்னர் மே மாதம் 18 ஆம் திகதி பெங்களூரிலிருந்து இராமேஸ்வரம் வரையான பேரணியொன்று நடைபெறவிருப்பதாகவும் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த விவகாரத்தி…
-
- 0 replies
- 796 views
-
-
ஹூஸ்டன்: நாசா விண்வெளி மையத்தில் பொறியாளர் சுட்டுக் கொலை- கொலையாளியும் தற்கொலை ஏப்ரல் 21, 2007 ஹூஸ்டன்: அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த காண்ட்ராக்ட் ஊழியர் ஒரு பொறியாளரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள பகுதியாக கருதப்படுவது நாசா அமைப்பு. ஹூஸ்டனில் உள்ள இந்த அமைப்பின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் நேற்று மாலை ஒரு நாசா காண்ட்ராக்ட் ஊழியர் துப்பாக்கியுடன் நுழைந்தார். இதனால் ஜான்சன் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மையத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. மையத்தின் நடவடிக்கைகள் அனைத…
-
- 2 replies
- 1.3k views
-
-
சனி 21-04-2007 03:00 மணி தமிழீழம் [தாயகன்] பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டதற்கான காரணம் விளக்கப்படும் - ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு, அந்த அமைப்புகள் பயங்கவாரதப் பட்டியலில் இணைப்பட்டதற்கான காரணத்தை விளக்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. லக்ஸம்பேர்;கில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் 50ற்கும் மேற்பட்ட அமைப்புகளும், குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. முகவரி இல்லாத அமைப்புகளுக்கு கடிதம் அனுப்ப முடியாது என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் அவை பற…
-
- 2 replies
- 1.1k views
-
-
தாக்க வரும் எதிரியின் கரத்தை இராணுவம் துண்டித்து வீசும் என்கிறார் ஈரான் ஜனாதிபதி தாக்க வரும் எதிரிகளின் கைகளை தங்கள் நாட்டு இராணுவத்தினர் துண்டித்து எறிவார்கள் என ஈரான் நாட்டு ஜனாதிபதி முஹமது அகமதிநிஜாத் எச்சரித்துள்ளார். ஈரான் நாட்டு இராணுவ தினம், புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதில் ஜனாதிபதி முஹமது அஹமதிநிஜாத் பங்கேற்று ஆற்றிய உரை வருமாறு; நமது இராணுவத்தின் வசம் உள்ள திட்டங்களும், ஆயுதங்களும் நாட்டின் பாதுகாப்பை மையமாகக் கொண்டவை. யாருக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டதல்ல. ஆனால், இவை அனைத்தும் எதிரிகளின் கைகளை துண்டிக்க தயாராக உள்ளன. நீங்கள் (இராணுவத்தினர்) அனைவரும் ஒவ்வொரு தினமும் மிகுந்த விழிப்புணர்வோடும், எச்சரிக்கையாகவும் இருப்பது …
-
- 0 replies
- 2.1k views
-
-
பாக்தாத் வன்முறைகளில் 200 பேர் பலி ஈராக் பிரதமர் கடும் கண்டனம் ஈராக்கின் பாக்தாத் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வன்முறைகளில் சுமார் 200 பேர் பலியானமைக்கு ஈராக் பிரதமர் நூறி மாலிகி கண்டனம் தெரிவித்துள்ளார். பாக்தாத்தில் அமெரிக்க- ஈராக்கிய படைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்திய பின்னர் இடம்பெற்ற அதிகளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சம்பவம் இதுவாகும். சட்றியா மாவட்டத்திலுள்ள சந்தை ஒன்றில் இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதலில் 140 பேர் பலியானதைத் தொடர்ந்து அம்மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவத் தளபதியை கைது செய்வதற்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இவ்வருட இறுதிக்குள் ஈராக்கிய படைகள் ஈராக்கினது பாதுகாப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுமென …
-
- 0 replies
- 630 views
-
-
அமெரிக்காவின் பொறுப்புணர்வில் உலகத்துக்கு நம்பிக்கை இல்லை உலக விவகாரங்களில் அமெரிக்கா பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமென நம்ப முடியாது என்ற கவலை சர்வதேச ரீதியில் காணப்படுவது சர்வதேச கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா தனது வெளிவிவகார கொள்கையை முன்னெடுக்கும் விதம் குறித்து சர்வதேச ரீதியில் அதிருப்தி காணப்படுகின்ற அதேவேளை, வாஷிங்டன் தன்னை சர்வதேச பொலிஸாக கருதுவதை கைவிட வேண்டும் என்று மிகச் சிலரே எதிர்பார்க்கின்றனர். சர்வதேச விவகாரங்களுக்கான சிக்காகோ கவுன்சில் 18 நாடுகளில் குறிப்பிட்ட கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது. வாஷிங்டன் தனது வெளிவிவகார கொள்கையை முன்னெடுத்து வரும் விதம் தொடர்பாக எதிர்மறையான உணர்வு அதிகரிப்பதை இது புலப்படுத…
-
- 0 replies
- 705 views
-