உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26626 topics in this forum
-
விமானத்தில் மது அருந்திய பெண் குழந்தையுடன் சிறையிலடைப்பு விமானப் பயணத்தின் போது மது அருந்தியதற்காக பெண் வைத்தியர் எல்லி ஹோல்மேன் துபாயில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் எல்லி ஹோல்மேன். பல் வைத்தியரான இவர், லண்டனிலிருந்து துபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் கடந்த ஜூலை 13ஆம் திகதி தன் 4 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அப்போது, அவருக்கு உணவுடன் மது வழங்கப்பட்டுள்ளது. எல்லி அதை அருந்தியிருக்கிறார். இதையடுத்து, துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், எல்லி ஹோல் மேனின் விசா காலாவதியாகிவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், உடனடியாக லண்டனுக்குத் திரும்பிச் செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர். …
-
- 8 replies
- 1.5k views
-
-
விமானத்தில் மாமியார்மருமகள் சண்டை!!!!!!! ஜனவரி 09, 2006 கொச்சி: ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த விமானத்தில் மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டு இருந்து அந்தக் குடும்பமே இறக்கிவிடப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் முலவரிக்கால் என்பவர் தனது மனைவி கோல்டி, மற்றும் குழந்தை, பெற்றோர்களுடன் அமெரிக்கா செல்ல விமான நிலையம் வந்தார். துபாய் வழியாகச் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் ஏற வந்தார். விமான நிலையம் வந்தபோதே அந்தக் குடும்பம் சண்டையிட்டபடி வந்தது. ஜார்ஜின் மனைவி தனது மாமனார், மாமியாரை திட்டிக் கொண்டும் அவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார். அவர்களை சமாதானப்படுத்தி அழைத…
-
- 4 replies
- 2k views
-
-
விமானத்தில் மேலதிக பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தது எப்படி? விமான நிறுவனத்திற்கு எதிராக விசாரணை பாகிஸ்தானிலிருந்து சவுதிஅரேபியாவிற்கு 7 பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து, சவுதிஅரேபியாவிற்கு பயணித்த, பாகிஸ்தான் சர்வதேச விமானசேவை (பிஐஏ) நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில், எவ்வாறு 7 பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என விசாரணைகளை நடத்தி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கராச்சி நகரிலிருந்து மதீனா வரையான பயணத்தில், குறித்த விமானத்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஏழு பயணிகள் விமானத்தில் நின்று கொண்டு பயணம்…
-
- 0 replies
- 401 views
-
-
விமானத்தில் விரிசல் : 50 விமானங்கள் நிறுத்தி வைப்பு - என்ன நடந்தது? 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்வாண்டாஸ் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் விரிசல் விட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அது பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டு…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
விமானத்தில் வெடிகுண்டு புரளி- இலங்கையரிற்கு 12 வருட சிறை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து மலேசிய சென்றுகொண்டிருந்த விமானத்தில் குண்டைவெடிக்க வைக்கப்போவதாக போலி நாடகமாடியதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையை சேர்ந்த இளைஞரிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2017 ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனோட் மார்க்ஸ் என்ற 26 வயது இளைஞனிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. மெல்பேர்னிலிருந்து மலேசிய நோக்கி சென்றுகொண்டிருந்த மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட இளைஞன் தன்னிடம் வெடிகுண்டிருப்பதாகவும் சத்தமிட்டதை தொ…
-
- 2 replies
- 558 views
-
-
விமானத்தில் வெளிநாட்டுப் பணம் கடத்தல்: ஜெட் ஏர்வேஸ் பணிப்பெண் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானப் பணிப்பெண் ஒருவரும், அவருக்கு துணையாக இருந்த இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிற வி…
-
- 0 replies
- 453 views
-
-
விமானத்துக்குள் சாத்வீக வழியில் போராடி ஆப்கானிஸ்தான் அகதியின் நாடுகடத்தலை முறியடித்த சுவீடன் மாணவி சுவீடனில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு விமானத்தில் நாடு கடத்தப்படவிருந்த ஒரு அகதியை விமானத்தில் சாத்வீக வழியில் போராடி நாடுகடத்தல் முயற்சியை வெற்றிகரமாக தடுத்த சுவீடன் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரான இந்த மாணவி சுவீடனில் கோதேபெர்க் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். கடந்த செய்வாயன்று ஒரு இளம் ஆப்கனிஸ்தான் நபர் ஒருவர் அவரது புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் விமானம் மூலம் நாடு கடத்தப்படுவதை அறிந்த இந்த மனைவி குறித்த விமானத்தில் தானும் பயணம் செய்யும் பொருட்டு டிக்கட் வாங்கியுள்ளார். இந்த மா…
-
- 0 replies
- 457 views
-
-
-
- 0 replies
- 228 views
-
-
விமானத்தை அழித்தவர்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துத் தண்டிப்போம்: ரஷ்ய அதிபர் ஆவேசம்! மாஸ்கோ: ரஷ்ய விமானத்தைத் தாக்கி அழித்த தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துத் தண்டிப்போம் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த 31 ம் தேதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பகுதி, ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகும். அந்த விமானத…
-
- 0 replies
- 599 views
-
-
லண்டன்: நூற்றுக்கணக்கான பயணிகள் செல்லும் விமானங்களை இயக்கும் விமானிகளில் மூன்றில் ஒருவர் பணியின்போது தூங்கிவிடுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. [size=3][size=4]ஐரோப்பிய காக்பிட் அசோசியேஷன் விமானிகள் குறித்து தேசிய யூனியன்கள் நடத்திய கணக்கெடுப்பின் முடிவை வெளியிட்டுள்ளது. அதில், விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கையில் ஏராளமான விமானிகள் அரை தூக்கத்திலோ அல்லது முழுதாகவே தூங்கிவிடுகின்றனர் என்ற அதிர்ச்சிகரமாக தகவல் வெளியாகியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இங்கிலாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனில் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்ட விமானிகளில் 43 சதவீதம் முதல் 54 சதவீதம் பேர் வரை கூறுகையில், விமானத்தை இயக்கும்போது தானாக தூக்கம் வந்து தூங்கிவிடுவதாகவும், அவர்கள் விழித்துப் பா…
-
- 4 replies
- 867 views
-
-
விமானத்தை சுட்டு வீழ்தியதால் ஈரான் பெரும் தவறை செய்துவிட்டது : ட்ரம்ப் ஆழில்லா அமெரிக்க உழவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்தியது கண்டனதுக்குரியது என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலை உருவாகியுள்ளது. இச்சம்பத்தையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தங்கள் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான் மிகப்பெரும் தவறு செய்துவிட்டது என சமூகவலைத்தளமான தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/58718
-
- 6 replies
- 1.7k views
-
-
மலேசிய எம்.எச். 17 விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பக் ஏவுகணை முறைமை கிழக்கு உக்ரேனிய நகரொன்றிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவ டிரக் வண்டியொன்றில் கடத்தப்படுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் அந்த வழியாக வாகனத்தில் சென்ற ஒருவரால் எடுக்கப்பட்டு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய எல்லையிலுள்ள பிரதான வீதியில் சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வந்த டிரக் வண்டியை இரு கிலோமீற்றர் பின் தொடர்ந்து குறிப்பிட்ட வாகன சாரதி படமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதையொத்த இரண்டாவது டிரக் வண்டி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. http://virakesari.lk/articles/2014/07/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9…
-
- 0 replies
- 523 views
-
-
விமானத்தை தரையிறக்குவதில் எதிர்பாராத சவாலை எதிர்கொண்ட விமானிகள்! பயணிகள் விமானத்தை தரையிறக்குவதில் ஏற்பட்ட எதிர்பாராத சவாலை எதிர்கொண்ட மியன்மார் விமானிகள் அவ்விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். மியன்மார் தேசிய விமான சேவையின் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் அவ்விமானத்தின் முன் சக்கரங்கள் சீராக தொழிற்பாடாமையின் காரணமாக அவ்விமானத்தை தரை இறக்குவதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், அவ்விமானத்தின் முன் சக்கரங்கள் இல்லாமலும், பயணிகளுக்கு எந்த விதமான இடையூறுகளும் ஏற்படாமலும், குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான சேவை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்து விமான சேவை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எத…
-
- 0 replies
- 665 views
-
-
விமானத்தை தாக்கியதில் 176 பேர் பலி: ஈரான் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் முடிவு ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்ற போது அவரை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது.இதற்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை வீசி ஈராக்கில் உள்ள அமெரிக்க படைதளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் ஈரானில் இருந்து உக்ரைனுக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானத்தை எதிரி நாட்டு விமானம் என்று தவறுதலாக நினைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை வீசி தாக்கியது.இதில் 176 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஈரான் மற்றும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள். சுவீடன், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயணிகளும் உயிரிழந்தனர்.முதலில் விமானம் தொழில…
-
- 0 replies
- 873 views
-
-
நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்குக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அப்போது விமானி அறையில் எலி ஒன்று ஓடியதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானம் நிறுத்தப்பட்டது. எலியை பிடிப்பதற்கு பாதுகாவலர்கள் முயற்சித்தனர். அது அங்கும், இங்கும் ஓடி அவர்களை அலைக்கழித்தது. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு எலி அவர்களிடம் பிடிபட்டது. இதனால் விமானம் 5 மணி நேரம் தாமதமாக நியூயார்க் புறப்பட்டு சென்றது. அதுவரை பயணிகள் அங்கேயே அமர்ந்து இருந்தனர். விமானத்தில் எலி இருந்தால் அதில் எந்திர பகுதிக்குள் சென்று ஒயர்களை கடித்து சேதப்படுத்தும் வாய்ப்பு உண்டு. அப்போது விமானம் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படலாம். இதை தடுக்கவே எலியை பிடித்த பிறகே விமானம் புறப்பட அனுமதிக…
-
- 0 replies
- 649 views
-
-
விமானப் பயணத்தில் முகக்கவசம் கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க விமானப் பயணிகள் முகக்கவசங்களை அணிவதை அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் பரிந்துரைத்துள்ளது. கோப்புப்படம்: எஸ்டி 11 May 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 May 2020 10:29 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), சில்க்ஏர், ஸ்கூட் சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் பயணத்தின்போது இனி கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும். பயணிகள் தங்களது சொந்த முகக் கவசங்களைக் கொண்டு வர வேண்டும். விமானத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் பயணிகள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். விமானத்திற்குள் கழிவறைக்காக வரிசையில் நிற்கும்போதும் இந்த இ…
-
- 0 replies
- 508 views
-
-
தென் சீனக் கடல் பகுதியில் புதிதாகப் பெரும் தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெஃப்ரி போல் வாஷிங்டனில் கூறியது: தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெரும் அளவில் மண்ணை நிரப்பி, புதிதாகப் பெரிய தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. அங்கு விமான தளம் அமைக்கும் விதத்தில் தீவு உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தக் கடற்பகுதியில் பல்வேறு இடங்களில் மணலை நிரப்பி, நிலப் பரப்பை சீனா விஸ்தரித்து வருகிறது. எனினும், இந்தக் குறிப்பிட்ட தீவில் நடைபெறும் பணி மூலம், விமான தளம் அமைக்கும் அளவுக்கான புதிய நிலப் பரப்பை அந்நாடு உருவாக்குகிறது.இதைத் தவிர, பெரிய எண்ணெய் சரக்குக் கப்பல்களும் ப…
-
- 1 reply
- 471 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய்தீப் வசந்த் பதவி, பிபிசி குஜராத்தி 16 நிமிடங்களுக்கு முன்னர் 'அலோஹா' ஹவாய் மொழியைச் சேர்ந்த இந்த வார்த்தை ஒருவரை வாழ்த்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, இந்த வார்த்தைக்கு ஒருவரை 'வாருங்கள்' என்று அழைக்கும் அர்த்தமும் உண்டு. இப்படி மகிழ்ச்சிகரமான வார்த்தையைக் கொண்ட 'அலோஹா ஏர்லைன்ஸ்' விமானத்தில் 1988ம் வருடம் ஏப்ரல் மாதம் பயணம் செய்த 95 பயணிகளை நோக்கி மரணம்தான் ‘அலோஹா’ எனக் கூறியது. 1988-ஆம் வருடம் ஏப்ரல் 28-ஆம் தேதி ஹவாய் தீவுகளில் உள்ள இரண்டு தீவுகளுக்கு இடையே ஒரு குறுகிய பயணத்தை அந்த விமானம் மேற்கொண்டது. 24,000 அடியில் விமானம் நிலையாக பறந்துகொண்டிருந்தது. தி…
-
- 2 replies
- 571 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,THOR PEDERSEN படக்குறிப்பு, வீட்டிலிருந்து தார் புறப்பட்டுச் சென்ற பின் பத்தாண்டுகள் கழித்து தமது வீட்டுக்கு மீண்டும் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார் 13 ஜூன் 2023, 05:55 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நீங்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யவேண்டும் என்று எப்போதாவது கனவு கண்டிருக்கிறீர்களா? உலகம் முழுவதும் வெறும் 300க்கும் குறைவானவர்களே அது போன்ற கனவை நனவாக்கியுள்ளனர். அவர்களில் மூன்று பேர் மட்டுமே அனைத்து நாடுகளுக்கும் இருமுறை சென்றுள்ளனர்; இதே முயற்சியில் இடுபட்ட இரண்டு பேர் பின்னர் வீடு திரும்பவே இல்லை. ஆனால் டென்மார்க்கைச் சேர்ந்…
-
- 9 replies
- 642 views
- 1 follower
-
-
யு.எஸ்.சில் கென்ரக்கி என்ற இடத்தில் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதால் விமானத்தில் பயணம் செய்த நால்வர் கொல்லப்பட்டனர். “துணிச்சலான ஒரு சிறிய பெண்” – விமானத்தில் இருந்து தப்பிய 7-வயது சிறுமி காயங்களுடனும் அதிர்ச்சியடைந்த நிலையில் வெறுங்காலுடன் நடந்து சென்று வீடொன்றின் கதவை தட்டி உதவி கேட்டுள்ளாள். வெள்ளிக்கிழமை மாலை விமானம் கீழே வீழுந்து அரை மணித்தியாலங்களின் பின்னர் இது நடந்துள்ளது. மோசமாக இரத்தம் ஓடிய நிலையில், கால்களில் இருந்து இரத்தம் வழிய ,மூக்கால் இரத்தம் வழிந்து முகமெல்லாம் இரத்த கறையுடன் ஒரு காலில் மட்டும் காலுறை காணப்பட வெறும்காலுடன் காணப்பட்டாள் என அவள் உதவி கேட்டு தட்டிய வீட்டின் சொந்தகாரரான 71-வயது லறி வில்கின்ஸ் என்பவர் செய்தியாளரிடம் தெரிவித்தார். தனது …
-
- 3 replies
- 873 views
-
-
விமானம் கட்டடத்துடன் மோதி விபத்து Share சுவீடனிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விமானமொன்று கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தின் போது விமானத்தில் 179 பயணிகளும் 6 விமானப் பணிப்பெண்களும் இருந்துள்ளனர். விமானம் டெர்மினில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்காக புறப்பட்டதைத் தொடர்ந்து விமானி சற்று வேகமான விமானத்தை இயக்க ஆரம்பித்தார். இதன்போது விமானம் ஓடுபதையை விட்டு சற்று விலகி ஓட ஆரம்பிக்க அருகில் இருந்த கட்டடத்தில் விமானத்தின் இடது பக்க இறக்கை மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் குலுங்கியதுடன் அதிர்ஷ்டவசமாக விமானி அந்த விமானத்தை உடனடியாக கட்டுப் பாட…
-
- 0 replies
- 528 views
-
-
. வெனிசூலா விமான நிலையத்திலிருந்து விமானம் திருட்டு. கராகஸ்: வெனிசூலாவின் கராகஸ் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை யாரோ சிலர் திருடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கராகஸில் உள்ள மைகுயெட்டியா சர்வதேச விமான நிலையத்தில்தான் இந்த திருட்டு நடந்துள்ளது. அந்த விமானம் எங்கு போனது என்பது தெரியவில்லை. விமானம் எப்படிக் கிளம்பிச் சென்றது என்பதும் புரியவில்லை. விமானம் கிளம்பிச் சென்றது தொடர்பான எந்த தகவலும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிடம் இல்லை. போதைப் பொருள் கடத்துபவர்கள்தான் இந்தக்காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இந்த விமானம் ஒரு விவசாய வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்…
-
- 10 replies
- 1.4k views
-
-
சென்னை அருகே விமானப்படை விமானம் மாயமானதற்கு நாசவேலை காரணமாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு என்று மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். புதுடெல்லி: சென்னையில் இருந்து கடந்த 22–ந் தேதி அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்.-32 விமானம் காணாமல் போனது. அந்த விமானத்தை தேடும் பணி இரவு பகலாக தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடலில் ஒருசில பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக மிதந்த பொருட்களும் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அவை காணாமல் போன விமானத்துடன் தொடர்பு இல்லாதவை என்று தெரியவந்தது. மாயமான விமானம் பற்றி இத…
-
- 0 replies
- 450 views
-
-
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் எதிரொலி- ஈரானில் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்- டிரம்ப் ஆதரவு உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளதை தொடர்ந்து ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர். தெஹ்ரானில் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள அமீர் கபீர் பல்கலைகழகத்திற்கு வெளியே பெருமளவானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனியை பதவி விலகுமாறும், விமானம் வீழ்த்தப்பட்டமைக்கு காரணமானவர்களை தண்டிக்குமாறும் கோரி ஆர்ப்பாட்டக்கார…
-
- 0 replies
- 460 views
-
-
விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு எதிராக போராட்டம் – தெஹ்ரானில் பிரித்தானிய தூதுவர் கைது! உக்ரைன் பயணிகள் விமானம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் வீழ்ந்து நொறுங்கியதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக ஈரானுக்கான பிரித்தானிய தூதர் தெஹ்ரானில் கைது செய்யப்பட்டுள்ளார். 176 பேர் கொல்லப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமானத்தை தற்செயலாக சுட்டதாக அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்ததை அடுத்து ஈரானுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் போராட்டங்கள் தொடர்பாக தூதுவர் றொபேர்ட் மெக்கெய்ர் நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மணிநேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதேவேளை குறித்த கைது குறி…
-
- 0 replies
- 303 views
-