உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
சீனாவின் ராஜதந்திர முயற்சி :: ட்ரூடோ அம்பலப்படுத்தியுள்ளார்.! பணயக் கைதிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு வேண்டியதை அடைய நினைக்கும் சீனாவின் ராஜதந்திர முயற்சியைக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அம்பலப்படுத்தியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறியதாகக் கூறி சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மெங் வான்சூ மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. கனடா அரசு மெங் வான்சூவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை விசாரணைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கனடா நாட்டவர்களான மைக்கேல் கோவ்ரி, மைக்கேல் ஸ்பேவர் ஆகிய இருவர் உளவு பார்த்ததாகக் கூறிச் சீன அரசு கைது செய்தது. இவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டு…
-
- 0 replies
- 575 views
-
-
இடி மின்னல் தாக்கி 323 மான்கள் பலி நோர்வே நாட்டில் உள்ள மலைப்பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் 323 மான்கள் உயிரிழந்தது நோர்வே நாட்டின் தெற்கு திசையில் உள்ள ஹர்டாங்கர் மலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கி அங்குள்ள காட்டு மான்கள் உயிரிழந்தன. இச்செய்தி நேற்று காலை நோர்வே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. காட்டு மான்கள் ஒன்றின் மேல் ஒன்றாக, கொம்புகள் சிக்கிக்கொண்ட நிலையில் இறந்து கிடந்துள்ளன. பலத்த மழை பெய்ததில் புயலும் வீசியுள்ளது. அதோடு மின்னல் தாக்கியதில் மான்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இயற்கை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/artic…
-
- 0 replies
- 620 views
-
-
அமெரிக்கா மற்றும் கனடாவில் தயாரான 570,000 ஆயிரம் கார்களை திரும்ப பெறுகிறது பி.எம்.டபுள்யூ.கார் நிறுவனம். 3-சீரியஸ் செடான்ஸ், மற்றும் வேகன்ஸ் மாடல் கார் எஞ்சினில் உள்ள பேட்டரி கேபிள் இணைப்பு பிரச்சினையால் அந்நிறுவனம் அதனை மாற்றி தர 570,000 கார்களை திரும்ப பெறுகிறது. 3 சீரியஸ் செடான்ஸ் கார்களில் உள்ள ஃபியூஸ் பாக்ஸின் கேபிள் இணைப்புகள் சரியாக அமையாத காரணத்தினால், காரின் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாகவும், இதனால் இன்ஜின் மற்றும் சில உதிரி பாகங்கள் பழுதடைய காரணமாக இருப்பதாலும், இவ்வகை மாடல் கார்களை திரும்ப பெற்றுக்கொள்ள பி.எம்.டபுள்யூ கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்ற ஆண்டு அமெரிக்காவில் மிகவும் பிரபலம் அடைந்த இந்த கார் 2012 ஆம் ஆண்டு மட்டும் சுமார் …
-
- 0 replies
- 453 views
-
-
கனடாவில் உள்ள Scarborough பள்ளி ஒன்றில் பணிபுரிந்த 53 வயது ஆசிரியர் ஒருவர் மீது சுமார் 30 மாணவ, மாணவிகள் பாலியல் தொந்தரவு உள்பட பல புகார்களை அடுக்கியதால், ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டர். Scarborough நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வரும் Christian Kpodjie என்ற 53 வயது ஆசிரியர் ஒருவர் மீது சுமார் 30 மாணவர்கள் ஒன்று சேர்ந்து இன்று Toronto District School Board அதிகாரிகளிடம் அளித்த புகாரில், ஆசிரியர் தங்களை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாக வந்த புகாரால், பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனே காவல்துறையினரை தொடர்பு கொண்ட Toronto District School Board மாணவகளின் புகார் குறித்து விளக்கமளித்தனர். உடனே விசாரணையில் இறங்கிய போலீஸார்,அதிரடியாக ஆசிரியரை கைது …
-
- 1 reply
- 982 views
-
-
அமெரிக்கா, பொஸ்டனில் தொடர் குண்டு வெடிப்பு - இருவர் பலி, பலர் படுபாயம் ஏப் 16, 2013 அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட மரத்தான் ஓட்டப்போட்டியில் தொடர் வெடிகுண்டுகள் திடீரென அடுத்தடுத்து வெடித்ததால் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் பலரின் கை, கால்கள் சிதறி வீதியெங்கும் கிடந்த பயங்கரமான சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. மரத்தான் போட்டியில் பங்கேற்றவர்கள் இறுதிக் கோட்டை நெருங்கிய வேளையில் பீரங்கி முழங்கியது போன்ற சப்தத்துடன் குண்டு வெடித்தது. தொடர்ந்து 1/2 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால், மரத்தானில் பங்கேற்றவர்கள் மூலைக்கு ஒருவராக சிதறி ஓடத் தொடங்கினார்கள். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. சம…
-
- 8 replies
- 793 views
-
-
பெர்லின் தாக்குதல் எதிரொலி: உலகெங்கும் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெர்லின் நகர தாக்குதலை தொடர்ந்து உலக அளவில் பல நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நியூ யார்க்கில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், லண்டன் நகர பாதுகாப்பு ஏற்பாடுகளும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில், கனடாவில் உள்ள டொராண்டோ மற்றும் மான்டிரியால் போன்ற நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் சந்தைகளில் பாதுகாப்பு ஏற்பாடாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிகாகோ கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பாதுகாப்பு சோதனை முன்னதாக, கடந்த திங்கள்கிழமை…
-
- 0 replies
- 294 views
-
-
வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ஐக்கியராஜ்ஜியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு தெரிவித்திருக்கிறது. பேராசிரியை கரின் ஸ்கல்ரூய்டர் தலைமையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, மனிதர்களின் தலைமுடியின் நரையை மருந்து மூலம் தடுக்க முடியும் என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. மனிதர்களின் முடி தனது இயற்கை வண்ணத்தை இழப்பதற்கான காரணம் என்ன என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரொஜென் பெராக்ஸைடு வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண்ணத்தை இழந்து வெண்மையாக மாறுகின்றன. இந்த நடைமுறையை மருத்துவ ஆய்வாளர்கள் ஆக்ஸிட…
-
- 7 replies
- 3.7k views
-
-
வளர்ப்பு மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆடவருக்கு மலேசிய நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் 24 பிரம்படிகளும் அளிக்கப்படவேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 12 வயதான தனது வளர்ப்பு மகளை கடந்த 2 ஆண்டுகளில் 105 முறை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குணசுந்தரி நேற்று தமது தீர்ப்பை அளித்தார். முன்னதாக குற்றம்சாட்டப்பட்ட ஆடவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். நேற்றைய வழக்கு விசாணை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்தது. இந்த இறுதிநாள் விசாரணையில் குற்றவாளி மீதான குற்றச்சாட்டுகளைத் தனித்தனியே வாசிக்குமாறு நீதிபதி தெரிவித்தார். இத்தகைய குற்றம…
-
- 0 replies
- 876 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சைப்ரஸ் பேச்சுவார்த்தைகள் - சமாதானம் சாத்தியமா? துருக்கிய படை அங்கு தொடர வேண்டும் என்கிறார் துருக்கிய அதிபர். * அமெரிக்கா வரும் கியூபர்களுக்கு தானாகவே விசா இன்றி வதிவிட அனுமதி வழங்கும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்துகிறது; கியூப அரசாங்கம் அதனை வரவேற்றுள்ளது. * உலகில் அதிக மது அருந்தும் நாடுகளில் ஒன்று தென்னாப்பிரிக்கா; அதனை மாற்றுவதற்கான ஒரு திட்டம் குறித்த பிபிசியின் சிறப்புத்தகவல்
-
- 0 replies
- 420 views
-
-
அமெரிக்காவின் பிரபல நடிகையும் பாடகியுமான லின்ட்ஸே லொஹான் இஸ்லாத்தை தழுவியுள்ளதை உறுதி செய்ய முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளன.தனது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தினதும் கடந்த கால பதிவுகளை அழித்துள்ள அவர், இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் 'அலைக்கும் ஸலாம்' எனப் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.லின்ட்ஸே லொஹானின் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என உலகின் பல பாகங்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புனித குர்ஆனை படித்து வந்த இவர் இதன் மூலமாக தன்னில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களுக்…
-
- 7 replies
- 1k views
-
-
கிழக்கு ஆப்கானில் மூன்று பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என்று உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ் தொலைக்காட்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வலையமைப்பை விட்டு வெளியேறிய பின்னர் அவர்கள் இரண்டு தனித்தனி தாக்குதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நிலைய இயக்குநர் சல்மாய் லதிபி தெரிவித்தார். “அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர்கள் அலுவலகத்திலிருந்து கால்நடையாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர் ”என்று லதிபி கூறினார். துப்பாக்…
-
- 0 replies
- 325 views
-
-
6th June 2013 அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸ் நியமிக்கப்படுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தற்போதைய, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டானிலான் (Tom Donilon) அடுத்த மாதம் ஓய்வு பெற்றவுடன் சூசன் ரைஸ் அந்த பொறுப்பை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சூசன் ரைஸ், தற்போது அமெரிக்காவுக்கான ஐநா தூதராக செயல்படுகிறார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்கும் போது சூசன் ரைசை அமைச்சராக்க முயன்ற ஒபாமா, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் எதிர்ப்பால் பின்வாங்கினார். இதையடுத்து, தற்போது அமெரிக்க அரசு நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புக்கு அதிபர் ஒபாமாவால் அவர் தேர்வு செய்யப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
அவுஸ்ரேலியாவின் எதிர்க்கட்சி நிதி திரட்டுவதற்காக நடத்திய ஓர் விருந்தில் தன்னுடைய உடல் அங்கங்களை கேலி செய்யும் விதமாக உணவு விவர அட்டை உருவாக்கப்பட்டிருந்ததை அவுஸ்ரேலியாவின் பெண் பிரதமர் ஜூலியா கில்லார்ட் கண்டித்துள்ளார். தாராளவாத தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கவுள்ள முன்னாள் அமைச்சர் மால் புரோ கொடுத்த ஒரு விருந்தில் சாப்பிட வந்தவர்களுக்காக இந்த உணவு விவர அட்டை உருவாக்கப்பட்டிருந்தது. 'ஜூலியா கில்லார்ட் கெண்டக்கி காடை வறுவல் - சிறுத்த மார்புகள், பெருத்த தொடைகள்' என அந்த அட்டையில் ஒரு உணவுக்கு விவரணை எழுதப்பட்டிருந்தது. மலிவான ரசனையுடனும், அவமதிக்கும் விதமாகவும், பெண் பாலாரை ஏளனம் செய்யும் விதமாகவும் செய்யப்பட்ட ஒரு காரியம் இது என பிர…
-
- 0 replies
- 295 views
-
-
நைஜரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 58 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளனர். Tillabéri பிராந்தியத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் கிளர்ச்சியாளர்களினால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாலி அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று(புதன்கிழமை) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், துப்பாக்கிதாரிகளினால் பொதுமக்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் எரியூட்டப்பட்டதுடன் மேலும் இரண்டு வாகனங்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன எவ்வாறாயினும் இந்த தாக்குதலுக்கு இதுவ…
-
- 0 replies
- 330 views
-
-
சினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் குறைவாக காணப்படுகின்றது – சீன அதிகாரிகள் சீனாவின் சினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் 50.4 சதவிகிதம் குறைவாக காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றின் செயல்திறன் குறைவாக காணப்படுவதாக தெரிவித்துள்ள நோய் கட்டுப்பாட்டு அதிகாரி, இந்த விடயம் குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார். சீன தடுப்பூசிகள் மிக உயர்ந்த பாதுகாப்பு விகிதங்களைக் கொண்டிருக்கவில்லை என செங்டூவில் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசாங்கம் பல்வேறு நாடுகளுக்கு விநியோகித்துள்ளன. இதேவேளை 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் பயன்படுத்த எந்த…
-
- 3 replies
- 499 views
-
-
சியால்கோட்: இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான், பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டி விட்டதாக பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இன்று காலை பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான் காரணம் என்று டான் பத்திரிக்கை கூறுகிறது. சியால்கோட் பிரிவில், பாகிஸ்தான் ரேஞ்சர்ப் பிரிவின் செக்போஸ்ட் மீது எல்லைப் பாதுகாப்பு்ப படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்தே பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் டான் கூறுகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி 5 பேரைக் கொன்ற பின்னர் 3வது முறையாக பாகிஸ்தான் …
-
- 0 replies
- 310 views
-
-
பாலஸ்தீனப் போராளி இயக்கமான ஹமாஸ் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அரசியல் கொள்கை அறிக்கை, இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் சர்ச்சைக்குரிய தனது முந்தைய அணுகுமுறைகளை அது மாற்றிக்கொண்டிருப்பதை வெளிக்காட்டுகிறது. தனது கொள்கைகள், நடவடிக்கைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் மற்ற இயக்கங்கள் மற்றும் சர்வதேசச் சமுதாயத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவந்த நிலையில், ஒரு புதிய மாற்றத்துக்கு ஹமாஸ் தயாராகியிருக்கிறது. தங்கள் போர் யூத மக்களுக்கு எதிரானதல்ல; பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருக்கும் யூத தேசியவாதிகளான ஜியோனிஸ்ட்டுகளுக்கு எதிரானதுதான் என்று தற்போது கூறுகிறது ஹமாஸ். தாங்கள் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடிய புரட்சிகர இயக்கம் அல்ல; பாலஸ்தீனத்தின் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கம்…
-
- 0 replies
- 536 views
-
-
இஸ்ரேல், உலகின் உண்மையான 'சிலிக்கான்வேலி'! ஹிட்லரால் விரட்டி விரட்டி அழிக்கப்பட்ட யூத இனம், மத்திய தரைக்கடல் பகுதியில் தங்களுக்காக உருவாக்கிக் கொண்ட நாடுதான் இஸ்ரேல். இஸ்ரேல் மீது எதிர்மறையான கருத்துகள் இருந்தாலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டையும் உதாரணமாகக் காட்ட முடியாது. 'உடம்பு முழுக்க மூளை' என்கிற வார்த்தை அப்படியே யூதர்களுக்கு பொருந்தும். கார்கில் போரின் போது, 'டைகர் ஹில்' பகுதியை பாகிஸ்தானிடம் இருந்து மீட்க இஸ்ரேல் உதவி புரிந்தது. பிரதமர் மோடி, அந்த நாட்டுக்குச் சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் பற்றிய சுவரஸ்யத் தகவல்களைப் பார்ப்போம்... கடந்த 1948ம் ஆண்டு, மே மாதம் 1…
-
- 0 replies
- 860 views
-
-
ராஜபக்சவுடன் மன்மோகன்சிங்கும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என விக்கிரவாண்டி ஏ.ஆர்.எஸ்.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்பு விழாவில் மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய அவர் - வரும் பாராளுமன்ற தேர்தல் எங்களது இலக்கல்ல. ஆனால் இந்த தேர்தலில் நாங்கள் வகுக்கும் வியூகம் நாடாளுமன்றத்தையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது முழு பலத்தை பயன்படுத்தி அதற்கான இலக்கை அடைவோம். அண்ணாவின் பெயரையும், பெரியாரின் பெயரையும் உச்சரிக்க தகுதி உள்ள ஒரே கட்சி நமது இயக்கம் மட்டும்தான். அ.தி.மு.க.–தி.மு.க. கட்சிகளுடன் என்றும் உறவு கிடையாது. சுயமரியாதையை விட்டுகொடுக்காமல் தேர்தலை சந்திப்போம்.மாற்று கட்சி பிரமுகர்கள் நமது கட்சிக்கு …
-
- 0 replies
- 426 views
-
-
இரு தட்டு பஸ் விபத்து : 9 பயணிகளை வைத்தியசாலையில் (காணொளி இணைப்பு) லண்டன் தென்மேற்குப் பகுதியில் இரு தட்டு பஸ் ஒன்று விற்பனை நிலையம் ஒன்றுடன் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விபத்தில் பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து பிரயாணம் செய்த இருவர் விற்பனை நிலைய பெயர் பலகைக்குள் சிக்கியுள்ளனர். சிக்குண்ட இருவரையும் மீட்கும் பணிகள் அந் நாட்டு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, குறித்த விபத்தினால் காயமடைந்த சாரதி உட்பட 9 பஸ் பயணிகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/22991
-
- 0 replies
- 311 views
-
-
அலங்காநல்லூர் : உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று விமரிசையாக நடந்தது. மாடு முட்டி 63 பேர் காயமடைந்தனர். 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பொங்கலை ஒட்டி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடப்பது வழக்கம். நேற்று இந்த நிகழ்ச்சி கோட்டை முனியாண்டி சுவாமி கோயில் திடலில் நடந்தது. காலை 10.30 மணிக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக, கிராம கோயில் காளை ரசிகர்களின் விசில்பறக்க களமிறங்கியது. 5 நிமிடங்களுக்கு மேல் நின்று விளையாடிய இந்த காளையை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. கூர்சீவப்பட்ட கொம்புடன் சீறிப்பாய்ந்து வீர…
-
- 0 replies
- 545 views
-
-
#BoycottHyundai #Boycottkia ஹுண்டாய் எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் ஏன் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகின்றன? 7 பிப்ரவரி 2022 பட மூலாதாரம்,YURIKO NAKAO/GETTY IMAGES ஹுண்டாய் பாகிஸ்தான் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பதிவேற்றப்பட்ட இடுகையில், காஷ்மீரின் 'விடுதலை'க்கு அழைப்பு விடுக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றதால், மிகப்பெரிய உலகளாவிய கார் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாய் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. @hyundaiPakistanOfficial என்ற அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பாகிஸ்தானின் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை ஆதரித்து, "சுதந்திரத்திற்கான போராட்டம்" என்று அழைக்கும் இடுகை பகிரப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் இட…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் : அமெரிக்க ஜனாதிபதி போலாந்து பயணம் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலாந்துக்கு பயணமாகவுள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா இன்று 26-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரேனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரேன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன. இதற்கிடையில், ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் உக்ரேனில…
-
- 0 replies
- 207 views
-
-
தமிழின உணர்வாளர் திரு சீமான் அவர்களின் புதிய அரசியல் கட்சி தமிழகத்தில் உதயம் தமிழின உணர்வாளர் திரு சீமான் அவர்கள் புதிய அரசியல் கட்சி ஒன்றை தமிழகத்தில் ஆரம்பிக்க உள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: தீவிர தமிழின உணர்வாளரான திரு சீமான் அவர்கள் எதிர்வரும் மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை தமிழகத்தில் ஆரம்பிக்கவுள்ளார். எதிர்வரும் மே 18 ஆம் நாள் இந்த அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறீலங்காவில் விடுதலைப்புலிகள் தோற்றகடிக்கப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள நாளின் ஓராண்டு நிறைவில் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து ஈழத்தமிழ் மக்களுக்காக பல போராட்டங்களை மேற்கொண்டு வந்த தி…
-
- 0 replies
- 493 views
-
-
புதுடெல்லி: நடிகையும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி. விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிரபல நடிகையும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகியுமான விஜயகாந்தி, ஆந்திராவின் மெதக் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவுடன், விஜயசாந்திக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி இணைந்தார். http://news.vikatan.com/article.php?module=news&aid=25119
-
- 0 replies
- 351 views
-