உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
இத்தாலியில் ChatGPTக்கு தடை Published By: T. SARANYA 01 APR, 2023 | 02:41 PM புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான சட் ஜிபிடியைத் தடை செய்யும் முதல் மேற்கத்திய நாடாக இத்தாலி மாறியுள்ளது. சட் ஜிபிடி (Chat GPT) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘ஓபன் ஏஐ’ (OpenAI) என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. மற்றும் மைக்ரோசாப்ட் ஆதரிக்கும் மொடல் ஆகும். இதனை மற்றொரு தேடு பொறி என்றும் சொல்லலாம். இந்நிலையில், சட் ஜிபிடியில் தனியுரிமை பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக இத்தாலிய தரவு-பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபன்ஏஐயின் சட் ஜிபிடியை உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து விசா…
-
- 0 replies
- 506 views
- 1 follower
-
-
ரஷியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் – வெளியுறவுத்துறை மந்திரி டுவிட்டால் பரபரப்பு ரஷியாவில் வசிக்கும் அல்லது பயணிக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அமெரிக்க குடியுரிமைப் பத்திரிக்கையாளரை கைது செய்த ரஷியாவின் அறிவிப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீங்கள் ரஷியாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அமெரிக்க குடிமகனாக இருந்தால்.. தயவுசெய்து உடனடியாக வெளியேறவும்” என்று அதில் ஆண்டனி பிளிங்கன…
-
- 14 replies
- 1.1k views
-
-
10,000 மனித மூளைகளை பக்கெட்டில் சேமித்து வைத்த பல்கலைக்கழகம் - வியக்க வைக்கும் காரணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பக்கெட்டில் சேமித்து வைத்துள்ள மனித மூளைகளில் ஒன்று 1 ஏப்ரல் 2023, 06:37 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் டென்மார்க்கில் உள்ள தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அடுக்குகளில் ஆயிரக்கணக்கான வெள்ளை நிற பக்கெட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பக்கெட்களில் மொத்தமாக 9,479 மனித மூளைகள் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. உலகிலுள்ள மிகப் பெரிய மனித மூளைகள் சேமிப்பகமாக இந்தப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. மனித மூள…
-
- 0 replies
- 654 views
- 1 follower
-
-
400 நாள் போர் நிறைவு; ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: உக்ரைன் சூளுரை உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது கடந்த பிப்ரவரி 24-ந்தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்தது. எனினும், ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் தோன்றி பேசும்போது, இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறும். நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது நிலத்தில் ரஷியாவின் ஒரு தடம் கூட இருக்காமல் செய்வோம். எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம். முழு அளவிலான ஆக்கிரமிப்புக்…
-
- 0 replies
- 549 views
-
-
கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவிப்பு Published By: SETHU 24 MAR, 2023 | 02:36 PM கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தக்கூடிய நீரடி ஆயுதமொன்றை தான் பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், நேரடியாக இந்த சோதனையை மேற்பார்வை செய்தார் என வட கொரிய ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. தென் ஹம்ஜியோங் மாகாணத்தின் கரையோரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ரகசிய ஆயுதக் கலம் கடலில் விடப்பட்டதாகவும், 80 முதல் 150 மீற்றர் ஆழத்தில் 59 மணித்தியாலங்கள் இந்த ஆயுத கலம் பயணம் செய்து பின்னர் கிழக்கு கரையோரத்தில் வெடிக்க வைக்கப்பட்டதாகவும் கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.…
-
- 30 replies
- 1.9k views
- 1 follower
-
-
பிலிப்பைன்ஸில் கப்பல் தீப்பற்றியதால் 31 பேர் பலி Published By: Sethu 31 Mar, 2023 | 10:15 AM பிலிப்பைன்ஸில் கப்பல் ஒன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'லேடி மேரி ஜோய் 3' எனும் இப்பயணிகள் கப்பல், மிண்டானோவா தீவிலுள்ளஸம்போங்கா நகரிலிருந்து சுலு மாகாணத்திலுள்ள ஜோலோ தீவை நோக்கி நேற்றுமுன்தினம் சென்கொண்டிருந்தது. அப்போது கப்பலில் தீ பரவியதால் பயணிகள் பலர் கடலில் குதித்தனர் என அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கரையோர காவல்படையினர் மற்றும் மீனவர்களால் 195 பயணிகளும் 35 ஊழியர்களுமாக 230 பேர் …
-
- 0 replies
- 445 views
-
-
வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,மார்க் ஷீ பதவி,பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா, உலகின் முதன்மையான பொருளாதார சக்தியாக மாறியது என்பதும் அதன் இராணுவமும் அதே போல சக்திவாய்ந்ததாகக் கருதப்பட தொடங்கியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆயினும்கூட, ஏறக்குறைய எட்டு ஆண்டுகாலப் போரில் பெருமளவிலான பணத்தையும் இராணுவ வளங்களையும் கொட்டிய போதிலும், அமெரிக்கா வடக்கு வியட்நாமியப் படைகள் மற்றும் அவர்களின் கொரில்லா கூட்டாளிகளான …
-
- 4 replies
- 790 views
- 1 follower
-
-
பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதி! பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாசத்தொகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. 86 வயதான பரிசுத்த பாப்பரசருக்கு கடந்த சில தினங்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டிருந்ததாக அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பரிசுத்த பாப்பரசருக்கு கொவிட் தொற்று இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிசுத்த பாப்பரசரை சில நாட்களுக்கு வைத்தியசாலையில் வைத்திருந்து முறையான சிகிச்சைகளும் பயிற்சிகளும் வழங்க வேண்டி…
-
- 1 reply
- 488 views
- 1 follower
-
-
யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய சிறுமியின் தந்தைக்கு சிறைத்தண்டனை Published By: Rajeeban 29 Mar, 2023 | 12:02 PM யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய சிறுமியின் தந்தை ரஸ்யாவிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார். மகள் யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தைக்கு ரஸ்ய நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. எனினும் நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்தவேளை தந்தை நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை. வீட்டுக்காவலில் இருந்து அவர் தப்பிச்சென்றுவிட்டார் என நீதிமன்றத்தின் செயல…
-
- 1 reply
- 753 views
-
-
சமூகங்களை துருவமயப்படுத்தும் ஊடகங்கள் - அவுஸ்திரேலியாவில் பராக் ஒபாமா சீற்றம் Published By: RAJEEBAN 29 MAR, 2023 | 01:15 PM ரூபேர்ட் மேர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யம் மேற்கத்தைய சமூகங்களை அதிகளவு துருவமயப்படுத்தியுள்ளது என சிட்னியில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் கோபம் மற்றும் வெறுப்பை தூண்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை இரவு சுமார் 9000 மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் அவுஸ்திரேலியா குறித்த தனது சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் சீனா க…
-
- 3 replies
- 733 views
- 1 follower
-
-
'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம் ஆண்ட்ரூ கர்ரி பிபிசி ட்ராவல் 13 செப்டெம்பர் 2021 புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த இடம் சடங்குகளைச் செய்யும் ஒரு மையமாகவோ, அல்லது இறந்தவர்களை வழிபடும் வளாகமாகவோ இருந்திருக்க வேண்டும் மனித நாகரிகத்தின் முந்தைய வரலாறுகளை மாற்றி எழுதும் வகையில் அமைந்திருக்கிறது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் உருவானதாகக் கருதப்படும் பழமையான கட்டுமானம். 25 ஆண்டுகளுக்கு முன்பு …
-
- 1 reply
- 588 views
- 1 follower
-
-
ரஷிய – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் – டிரம்ப் ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. அதே வேளையில் நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் ஓர் ஆண்டாக ரஷிய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது. ரஷிய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற தீவிரம்காட்டி வரும் நிலையில் அங்கு இருநாட்டு ராணுவத்துக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதனிடையே ரஷியாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராகி வருவதாகவும், அதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப்போரால், சர்…
-
- 1 reply
- 508 views
-
-
ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமனம்? ஸ்கொட்லாந்தின் ஆறாவது முதலமைச்சராக ஹம்சா யூசப் நியமிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் ஹம்சா யூசப், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவராக எளிய பெரும்பான்மை வாக்குகளுடன் உயர் பதவியைப் பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்தநிலையில், ஹம்சா யூசப்பை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் பின்னர் வாக்களிக்கும். 50,490 வாக்குகளில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஹம்சா யூசப், கட்சித் தலைமையை வென்றார். 37 வயதான ஹம்சா யூசப், ஒரு பெரிய பிரித்தானிய கட்சிக்கு த…
-
- 0 replies
- 612 views
-
-
https://www.cnn.com/2023/03/25/weather/us-severe-storms-saturday/index.html வெள்ளிக்கிழமை இரவு மிசிசிப்பியில் வீசிய சக்திவாய்ந்த புயல்கள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு சூறாவளியால் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் மற்றும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர், வீடுகளின் கூரைகளை கிழித்தெறிந்தது, கிட்டத்தட்ட சில சுற்றுப்புறங்களை சமன் செய்தது மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று அதிகாரிகள் சனிக்கிழமை காலை தெரிவித்தனர். "எங்களிடம் ஏராளமான உள்ளூர் மற்றும் மாநில தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் இன்று காலை தொடர்ந்து வேலை செய்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல சொத்துக்கள் தரையில் உள்ளன,” என்று மிசிசிப்பி எமர்ஜென்சி மேனே…
-
- 27 replies
- 1.7k views
- 2 followers
-
-
ஆயுத தர அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை விஸ்தரிக்க வட கொரிய அதிபர் அழைப்பு Published By: SETHU 28 MAR, 2023 | 03:05 PM ஆயுத தரத்திலான அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை விஸ்தரிக்குமாறு வட கொரிய அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜோன் உன் அழைப்பு விடுத்துள்ளார். புதிய, சிறிய அணுவாயுதங்கள் எனக் கருதப்படும் பொருட்களை இராணுவ அதிகாரிகள் சகிதம் கிம் ஜோன் உன் பார்வையிடும் படங்களையும் அந்நாட்டு அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சுவரிலுள்ள படங்கள் மூலம் மேற்படி ஆயுதம் "Hwasan-31" என அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காக, தனது ஏவுகணைகளில் பொருத்தக்கூடிய சிறிய அணுவாயுதங…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
லெப்பர்ட் 2 தாங்கிகளை உக்ரேனுக்கு அனுப்பியது ஜேர்மனி Published By: SETHU 28 MAR, 2023 | 09:47 AM லெப்பர்ட் 2 ரக இராணுவத் தாங்கிகளை உக்ரேனுக்கு ஜேர்மனி அனுப்பியுள்ளது என ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தள்ளது. ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட லெப்பர்ட்2 (Leopard 2 tanks) ரக நவீன இராணுவத் தாங்கிகளை தனக்கு வழங்குமாறு உக்ரேன் கோரி வந்தது. ஆனால், இதற்கு ஆரம்பத்தில் ஜேர்மனி மறுத்தது. பின்னர் வேறு நாடுகள் இந்த தாங்கிகளை உக்ரேனுக்கு வழங்க ஜேர்மனி அனுமதியளித்தது. இறுதியில் தானும் உக்ரேனுக்கு இத்தாங்கிகளை வழங்க ஜேர்மனி கடந்த ஜனவரியில் சம்மதித்தது. இந்நிலையில், உக்ரேனுக்கான லெப்பர்2 தாங்கிகளின் முதல் தொ…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
தங்கத்தை தேடி அலைந்தவருக்கு கிடைத்தது பெரிய ‘பொக்கிஷம்’ - எவ்வளவு மதிப்பு தெரியுமா? பட மூலாதாரம்,DARREN KAMP 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு மலிவு விலை மெட்டல் டிடெக்டருடன் தங்கத்தை தேடி அலைந்தவருக்கு அடித்தது ஜாக்பாட். 4.6 கிலோ எடையுள்ள தங்கப் பாறையை அவர் கண்டுபிடித்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய். 1800-களில் ஆஸ்திரேலியாவின் தங்க வேட்டையின் மையமாக இருந்த விக்டோரியாவின் தங்க வயல்களில் தேடிக் கொண்டிருந்தபோது அவருக்கு இந்தத் தங்கப்பாறை கிடைத்தது. அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை. “எனது 43 ஆண்டுகால தங்க வேட்டை வாழ்க்கையில் இது தான் மிகப்பெரியது” என்று கூறினார் அவரிடமிருந்…
-
- 2 replies
- 471 views
- 1 follower
-
-
அமெரிக்க துப்பாக்கிச் சூடு : குழந்தைகள் உட்பட 6 பேர் பலி; மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம் அமெரிக்காவில் நாஷ்வில் பகுதியில் நேற்று திங்கள்கிழமை ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 குழந்தைகள் மற்றும் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் படுகொலையில் ஈடுபட்ட நபர் குறித்த பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில்லில் உள்ள ஆரம்ப பாடசாலையில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் தவிர பாடசாலை ஊழியர்கள் 3 பேரும் உயிரிழந்ததை நாஷ்வில் நகர பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளத…
-
- 1 reply
- 557 views
- 1 follower
-
-
உலகின் மிக விலையுயர்ந்த தங்க நாணயம் கிரீஸிடம் மீள வழங்கப்பட்டது உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தங்க நாணயமாக கருதப்படும் “ஈத் மார்” நாணயம் அமெரிக்க அதிகாரிகளால் கிரீஸிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2021 இல் நடந்த ஏலத்தில், இந்த நாணயம் 4.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டது. இந்த நாணயம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு செனட்டர் புருட்டஸால் சீசரின் படுகொலையின் நினைவாக அச்சிடப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த நாணயம் போலி ஆவணங்கள் மூலம் ஏலத்தில் பட்டியலிடப்பட்டதும், கிரீஸ் நாட்டில் இருந்து திருடப்பட்டு நாணயம் கொண்டுவரப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. “ஈத் மார்” நாணயத்தை மீண்டும் கிரீஸிடம் ஒப்படைக்கும் நிகழ்வி…
-
- 0 replies
- 596 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு HSBC வங்கி வாங்கியுள்ளது. வெறும் 1 பவுண்டுக்கு கைப்பற்றியது திவாலாகி பெரும் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய துணை நிறுவனத்தை (Silicon Valley Bank UK Limited) வெறும் 1 பவுண்டுக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.399) வாங்குவதாகக் கூறியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி, பிரித்தானியாவில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனமாக இயங்கி வருகிறது. இரண்டே நாட்களில் திவாலானது அமெரிக்காவின் 16-வது மிகப்பெரிய வங்கியாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி, கடந்த வாரம் வெறும் இரண்டே நாட்களில் திவாலானது. இது, சர்வதேச அளவில் அதிர்வலைகளை…
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
'கம்யூனிசம் யாருக்கு சொந்தம்' - சீனாவும் ரஷ்யாவும் பங்காளி சண்டை போட்ட சுவாரஸ்ய வரலாறு பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் மாவோ சேதுங் முதன்முறையாக சோவியத் யூனியனுக்கு சென்றபோது, ஜோசப் ஸ்டாலின் அவரைச் சந்திப்பதற்கு முன் மாஸ்கோவின் புறநகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் பல வாரங்கள் காத்திருக்கச் செய்தார். ஆனால் இந்த வாரம் ஷி ஜின்பிங் ரஷ்யா சென்றபோது, நிலைமை முற்றிலும் மாறுபட்டிருந்தது. 1950இல் மாவோவும் ஸ்டாலினும் சீனாவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான நட்பு, கூட்டணி மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 73 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷி ஜின்பிங், விளாதிம…
-
- 0 replies
- 715 views
- 1 follower
-
-
ஜெர்மனி மீது போர் தொடுப்போம்; ரஷ்யாவின் புதிய எச்சரிக்கை! ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் பூட்டினை கைது செய்தால், ஜெர்மனி மீது போர் தொடுப்போம் என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் அடிப்படையில், ரஷ்ய ஜனாதிபதி பூட்டினை கைது செய்ய முயற்சிப்பது, ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். போரின் போது, உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பூட்டினை கைது செய்ய, ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையிலேயே, ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு ஆயுத பலம் கொண்ட ர…
-
- 18 replies
- 1.4k views
-
-
பூர்வீக குடிகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றியது தென் அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 26 MAR, 2023 | 10:15 AM தென் அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் பூர்வீக குடிகளின் குரல்களுக்கு இடமளிக்கும் சட்டமூலத்தை இன்று நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் பூர்வீக குடிகளின் குரல்களுக்கு இடமளிக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றிய முதலாவது அவுஸ்திரேலிய மாநிலம் என்ற பெருமையை தென் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. விசேட அமர்வின்போது தொழில் கட்சி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றியது. வாக்கெடுப்புக்காக அழைப்பு விடுக்கப்பட்ட வேளை ஒரே குரலில் தமது ஆதரவை தெரிவித்த உறுப்பினர்க…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
நாளை மறுதினம் கைது செய்யப்படுவேன் என்கிறார் டொனால்ட் ட்ரம்ப் Published By: Sethu 19 Mar, 2023 | 10:08 AM எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) தான் கைது செய்யப்படக்கூடும் என தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துமாறும் தனது ஆதரவாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆபாசப்பட நடிகை ஒருவருடன் ட்ரம்ப் பாலியல் உறவு கொண்டதாக கூறப்படுவது தொடர்பில், அந்நடிகையை மௌனம் காக்கச் செய்வதற்காக, 2016 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ட்ரம்ப் பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு விசாரணை தொடர்பிலேய…
-
- 23 replies
- 1.3k views
- 1 follower
-
-
பிரான்ஸில் ஆர்ப்பட்டங்களால் 441 பொலிஸார் காயம், 457 பேர் கைது Published By: SETHU 24 MAR, 2023 | 04:32 PM பிரான்ஸில் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது நேற்று நடந்த வன்முறைகளை அடுத்து, 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் 441 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனவும் உள்துறை அமைச்சர் ஜெரால்;ட் டர்மனின் தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் சில வன்முறையானவையாக மாறின' என அமைச்சர் டர்மனின் கூறியுள்ளார். பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு பாதுகாப்பு அளித்தமைக்காக பொலிஸாரை அவர் பாராட்டினார். …
-
- 18 replies
- 1k views
- 1 follower
-