Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிறுவனின் உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி பட மூலாதாரம்,COURTESY SN SALEEM, SA SEDDIK, M. EL-HALWAGY 28 ஜனவரி 2023 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்து நாகரிகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ஒருவரின் உடல் தங்க இதயத்துடன் பதப்படுத்தப்பட்டிருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14 அல்லது 15 வயதில் இறந்ததாகக் கருதப்படும் இந்த சிறுவனின் உடல் 1916ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டு, கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் டஜன் கணக்கான மம்மிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உடல் வல்லுநர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்படா…

  2. ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் சீர்திருத்தத்திற்கான அவசியத்தை ஜி-4 எடுத்துக்காட்டுகிறது By VISHNU 02 FEB, 2023 | 10:58 AM (ஏ.என்.ஐ) ஜி4 அல்லது இந்தியா, பிரேசில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளின் குழு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் கட்டமைப்பை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளது. 77வது ஐநா பொதுச் சபை அமர்வின் தொடக்க கூட்டத்தில், ஐநாவுக்கான ஜெர்மனியின் நிரந்தரப் பிரதிநிதி, ஜி4 சார்பாக, பாதுகாப்பு சபையில் சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்தார். கடந்த ச…

  3. பொது இடத்தில் நடனம் ஆடிய ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை! ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு, ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக இது பார்க்கப்பட்டது. இந்தநிலையில் விசாரணையில் அவர்கள் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். ஈரான் நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் ஆணுடன் சேர்ந்து பொது இடங்களில் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விதிகளை மீறிய ஜோடி பொது இடத்தில் நடனம் ஆடி…

  4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி..? அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹாலே போட்டியிட முடிவு …

  5. ரஷ்யா எதிர்வரும் 24ஆம் திகதி மிகப்பெரிய தாக்குதலை தொடங்கும்: உக்ரைன் எச்சரிக்கை! ரஷ்யா எதிர்வரும் 24ஆம் திகதி மிகப்பெரிய பெரிய தாக்குதலை தொடங்கும் என உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் எச்சரித்துள்ளார். இந்த தாக்குதலுக்காக ரஷ்யா ஆயிரக்கணக்கான துருப்புக்களைக் குவித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு ஆரம்பப் படையெடுப்பின் ஆண்டு நிறைவைக் குறிக்க ஏதாவது முயற்சி செய்யலாம் என்றும் கூறினார். இந்த தாக்குதல் பெப்ரவரி 23ஆம் திகதி இராணுவத்தை கொண்டாடும் ரஷ்யாவின் தந்தையின் பாதுகாவலர் தினத்தையும் குறிக்கும். இதற்கிடையில், கிராமடோர்ஸ்க் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரத்தில் ரஷ்ய ஏவுகணை ஒன்று குடியிருப்பு க…

  6. உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட உதவும் வகையில் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கண்டித்துள்ளது. மொஸ்கோவை அழிக்க வடிவமைக்கப்பட்ட “ப்ரொக்ஸி போரை” அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளதாக வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனுக்கு இராணுவ தளவாட வசதிகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா போர் நிலைமையை அதிகரிப்பது குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளார். ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலையும் சவாலையும் முன்வைத்து, சூழ்நிலையை மேலும் மோசமாக்க அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். கிம் யோ ஜொங்கின் இந்த கருத்துக்கள…

  7. இந்தியாவின் படைவலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கிய உக்ரேன் போர் இந்தியா இதுவரை காலமும் இரசியாவின் படைக்கலன்களில் பெரிதும் தங்கியிருந்தது. இரசியாவிடமிருந்து வாங்கிய தொழில்நுட்பம் இந்திய உள்நாட்டுப் படைக்கல உற்பத்தியில் பாவிக்கப்படுகின்றது. இந்தியாவி போர்த்தளபாட கொள்வனவில் 70% முதல் 85% வரை இரசியாவில் இருந்து பெறப்படுகின்றது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் படைக்கலன்களும் இரசியாவில் இருந்து வாங்கிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. உக்ரேனில் இரசியா படும் பாட்டைப் பார்க்கும் போது இந்தியப் படையின் வலிமை கேள்விக்கிடமாக உள்ளது. பாதுகாப்புச் செலவு ஆண்டு தோறும் உக்ரேன் பாதுகாப்பிற்காக $5.4பில்லியனையும் பாக்கிஸ்த்தான் $10.3பில்லியனையும் செலவிடுகின…

  8. சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும் இந்தியா: அமெரிக்கா அறிக்கை By NANTHINI 01 FEB, 2023 | 11:54 AM இந்தியா தொடர்ந்து தனது அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி, அதன் புதிய முக்கோணத்தை செயற்படுத்தி வருகிறது. மேலும், அந்நாட்டின் அணு ஆயுத உத்தி, பாரம்பரியமாக பாகிஸ்தானை மையமாக கொண்டது. எனினும், இப்போது சீனாவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தோன்றுகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் 2022ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள அணுசக்தி திறன் கொண்ட விமானங்கள், நிலம் சார்ந்த விநியோக அமைப்புகள் மற்றும் நீர்மூழ்கி ஏவுகணைகளை நிரப்புவதற்கு அல்லது மாற்றுவதற்கு கு…

  9. ரஷ்யாவிற்கு எதிராக யுக்ரேனுக்கு மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் என்னென்ன? படங்களுடன் விரிவான பட்டியல் கட்டுரை தகவல் எழுதியவர்,டேவிட் பிரவுன், ஜேக் ஹார்டன் & டுரல் அஹ்மத்ஸேட் பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டிற்கு டாங்கிகள் அனுப்ப உள்ளதை ஜெர்மனியும் அமெரிக்காவும் உறுதிசெய்துள்ளன. வரவிருக்கும் மாதங்களில் 31 ஆப்ராம்ஸ் வகை டாங்கிகளை யுக்ரேனுக்கு வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், 14 லெப்பர்ட்-2 வகை டாங்கிகளை தாங்கள் வழங்குவதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. தங்களது சொந்த…

  10. உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹு தெரிவிப்பு By SETHU 01 FEB, 2023 | 12:16 PM உக்ரேனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவது குறித்து தான் சிந்திப்பதாகவும் உக்ரேன் விவகாரத்தில் ஒரு மத்தியஸ்தராக செயற்பட விரும்புவதாகவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளார். ரஷ்யாவுடன் இஸ்ரேல் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. இஸ்ரேலின் அயல்நாடான சிரியாவின் வான் பரப்பை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும் ரஷ்யா கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், சிஎன்என் தொலைக்காட்சிக்கு நெத்தன்யாஹு நேற்று அளித்த செவ்வியொன்றில், ஏவுகணைத் தாக்குதல…

  11. 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DFES மேற்கு ஆஸ்திரேலியாவில் கதிரியக்கப் பொருள் அடங்கிய சிறிய குடுவை காணாமல் போனதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. காணாமல் போன குடுவையில், சிறிய அளவில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் சீசியம் -137 தனிமம் உள்ளது. இதை தொட்டால் கடுமையான நோயை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பார்த்தால், விலகி இருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணுக் கழிவு: 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வரும் தலைமுறையை எச்சரிப்பது எப்படி?9 ஆகஸ்ட் 2020 அணுக்கரு இணைவு: உலகின் எரிசக்தி நெருக்கடிக்கு அ…

  12. நீரில் மூழ்கிய உலகில் இருந்து வெளியான பாடலும் வாக்குமூலங்களும் பட மூலாதாரம்,GIDEON MENDEL 31 ஜனவரி 2023 வெள்ளம் வந்து ஒரு மாதத்திற்குப் பிறகும், பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருப்பதைக் கண்ட புகைப்பட கலைஞர் கிதியோன் மெண்டல் அவற்றை படமெடுத்து காட்சிப்படுத்தியுள்ளார். நைஜீரியாவின் பயேல்சா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நீரில் மூழ்கிய வீடுகளுக்கு மத்தியில் நிற்கும் மக்களின் புகைப்படங்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிரொலிக்கிறது. பூஞ்சைத் தொற்றால் மனிதர்களை ஜாம்பிகளாக மாற்ற முடியுமா?30 ஜனவரி 2023 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண…

  13. பாக்முட் அருகே உள்ள கிராமத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு ! உக்ரேனிய நகரமான பாக்முட் அருகே உள்ள கிராமத்தை வான்வழி படையினரின் உதவியோடு கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரத்தை சுற்றி வளைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சுமார் 75 ஆயிரம் சனத்தொகையை கொண்ட பக்முட் நகரை கைப்பற்றுவது ரஷ்யாவின் முதல் பெரிய போர்க்கள சாதனையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் பக்முட் மீது ரஷ்யா நடத்திய பீரங்கி தாக்குதலில் சிறுவன் உட்பட இரண்டு பொது மக்கள் கொல்லப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்த மாத தொடக்கத்தில், சுமார் 400 …

  14. வான்வழி ஆதரவுக்காக உக்ரைனுக்கு எஃப்-16 போர் விமானங்கள் வழங்கப்படாது: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்! உக்ரைனிய அதிகாரிகள் வான்வழி ஆதரவுக்காக மீண்டும் அழைப்பு விடுத்த போதிலும், உக்ரைனுக்கு எஃப்-16 போர் விமானங்களை அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிராகரித்துள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா விமானங்களை வழங்குமா என்று பைடனிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜேர்மனியின் தலைவரும் போர் விமானங்களை அனுப்புவதை நிராகரித்த ஒரு நாளுக்குப் பிறகு பைடனின் கருத்து வந்துள்ளது. ரஷ்யாவுடன் நடந்து வரும் போரில் தனது வான்பரப்பைக் கட்டுப்படுத்த ஜெட் விமானங்கள் தேவை என்று உக்ரைன் கூறியுள்ளது. ‘எஃப்-16 போர் பெல்கன்ஸ்’ உல…

  15. டென்மார்க்கில் புனித குர்ஆன் எரிப்பு! துருக்கி கண்டனம் By SETHU 30 JAN, 2023 | 09:26 AM டென்மார்க்கில் வலதுசாரி கடும்போக்குவாதி ஒருவரால் நேற்றுமுன்தினம் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது. டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகிலும், துருக்கி தூதரகத்துக்கு வெளியிலும் ரஸ்முஸ் பலுதான் என்பவரால் புனித குர்ஆன் நூல்கள் எரிக்கப்பட்டன. டென்மார்க் சுவீடன் நாடுகளின் பிரஜாவுரிமைகளைக் கொண்டுள்ள ரஸ்முஸ் பலுதான், அண்மையில் சுவீடனிலும் புனித குர்ஆனை எரித்திருந்தார் இச்சம்பவத்துக்கு ஏற்கெனவே சுவீடன் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். துருக்கி, பாகிஸ்த…

  16. ஜெருசலேமிலுள்ள யூத கோவிலில் (சினகோக்) நடந்த தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் வரையில் இறப்பு.

  17. பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - குறைந்தது 32 பேர் பலி பட மூலாதாரம்,GETTY IMAGES 30 ஜனவரி 2023, 10:56 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 32 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மசூதியில் தொழுகையாளர்கள் நிரம்பியிருந்தபோது நடந்த இந்த குண்டுவெடிப்பில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பில் மசூதியின் ஒரு பகுதி தகர்ந்துள்ளது. இடிபாடுகளுக்கு இடையே மக்கள் சிக்கியிருப்பதாகவும், சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குண்டுவெடிப்பிற்கான…

  18. கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள மருத்துவமனை மீது உக்ரைன் இராணுவம் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. குறித்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு 24 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் காயமடைந்தனர் என்றும் அறிவித்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த தாக்குதல் குறித்த ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு உக்ரைனில் இருந்து எந்த பதிலும் இதுவரை வெளியாகவில்லை. இதேநேரம் இந்தத் தாக்குதல், அமெரிக்கா வழங்கிய ஹிமார்ஸ் ரொக்கெட் ஏவுதளத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. …

  19. Google : எந்தெந்த விஷயங்களைத் தேடுவது சட்டப்படி குற்றமாகும்? நம் டிஜிட்டல் வாழ்க்கையில் எல்லா சந்தேகங்களுக்கும் கூகுளில் தான் பதில் தேடுகிறோம். ஒரு நாளுக்கு சராசரியாக 8.5 பில்லியன் தேடல்கள் கூகுளில் நடக்கிறது. உலகம் முழுவதுமிருக்கும் மக்களுக்கு தகவல்களை வழங்கி வருகிறது கூகுள். தேடப்படும் தகவல்கள் அனைத்தும் நல்ல விஷயங்களுக்காக தான் தேடப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. ஒவ்வொரு நாளும் பல சட்டத்துக்கு புறம்பான தகவல்களும் கூகுளில் தேடப்படுகின்றன. சில விஷயங்களை கூகுளில் தேடுவது குற்றமாக கருதப்படுகிறது. அவை என்ன எனப் பார்க்கலாம். வெடி குண்டு அல்லது துப்பாக்கி தயாரிப்பது எப்படி? சுயாதீனமாக ஆயுதங்கள் தயாரிப்பது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. கூகுளில் சில தளங்கள…

  20. நியூசிலாந்தில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் பெய்யும் மொத்த மழை அளவில் 75 சதவீதம் அளவுக்கு மழை 15 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்துள்ளது.

  21. ஆஷ்விட்ஸ் ஆண்டு விழா: உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கான அழைப்புக்கு போலந்து மறுப்பு! நவீனகால போலந்தில் முன்னாள் ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் நாஜி மரண முகாமின் விடுதலையைக் குறிக்கும் விழாவிற்கு முதன்முறையாக ரஷ்ய பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் உள்ள முகாம் சோவியத் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டதால், ரஷ்யா வழக்கமாக நிகழ்வில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் அருங்காட்சியகம் ரஷ்ய அதிகாரிகளை அழைக்க மறுத்தது மற்றும் அதன் இயக்குனர் உக்ரைன் போரை ஹோலோகாஸ்டின் பயங்கரத்துடன் ஒப்பிட்டார். இதற்கு பதிலடியாக, இந்த அருங்காட்சியகம் வரலாற்றை மீண்டும் எழுத முயற்சிப்பதா…

  22. சுற்றி வளைத்து தாக்கிய போலீஸ், 'அம்மா' என கதறிய நிக்கோல்ஸ் - வீடியோ மூலம் வெளிப்பட்ட தகவல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர் பதவி,பிபிசி செய்தியாளர் 28 ஜனவரி 2023 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மெம்ஃபிஸ் காவல்துறை அதிகாரிகளான டெமிட்ரியஸ் ஹேலி, டெஸ்மண்ட் மில்ஸ் ஜூனியர், எமிட் மார்ட்டின் III, ஜஸ்டின் ஸ்மித், டடாரியஸ் பீன் ஆகியோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடிய விளக்கங்கள் உள்ளன. அமெரிக்காவில் போலீஸ் தாக்குதலில் டயர் நிக்…

  23. சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது. அத்தகைய கோரிக்கையை முன்வைக்கப்பட்டு போலந்தும் அனுமதியை வழங்கினால் அவற்றை வழங்குவோம் என ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படுவதையும், உக்ரைனின் பிரதேசம் விடுவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஜேர்மனியால் தயாரிக்கப்பட்ட டாங்கிகளை உக்ரேனுக்கு வழங்க ஐரோப்பிய நாடுகளுக்கு பெர்லின் அங்கீகாரம் அளிக்கத் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை, மேற்கத்திய நாடுகளால் வடிவமைக்கப்பட்ட முக…

  24. அமெரிக்காவின் தாக்குதலில் ஐஎஸ்ஐஎல் தலைவர் உயிரிழப்பு! வடக்கு சோமாலியாவில் ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) மூத்த தலைவர், அமெரிக்க இராணுவ தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவில் ஐஎஸ்ஐஎல் தலைவரும், ஐஎஸ்ஐஎஸ்-ன் உலகளாவிய வலையமைப்பிற்கான முக்கிய உதவியாளருமான பிலால் அல்-சுடானி கொல்லப்பட்டுள்ளார். இந்த இராணுவ நடவடிக்கை இந்த வார தொடக்கத்தில் ஜனாதிபதி ஜோ பைடனால் அங்கீகரிக்கப்பட்டு ஜனவரி 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. ஆபிரிக்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் வளர்ந்து வரும் இருப்பை வளர்ப்பதற்கும், ஆப்கானிஸ்தான் உட்பட உலகளாவிய குழுவின் செயற்பாடுகளுக்கு நிதியளிப்பதற்கும் அல்-சுடானி பொறுப்பு என்று …

  25. ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கியது ஜப்பான்! உக்ரைன் மீதான ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிரான அதன் பொருளாதாரத் தடைகளை ஜப்பான் கடுமையாக்கியுள்ளது. ஏற்றுமதி தடை பட்டியலில் ரஷ்யாவின் இராணுவத் திறனை கட்டுப்படுத்தும் பல பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ரஷ்ய அதிகாரிகள், நிறுவனங்களின் சொத்துக்களை ஜப்பான் முடக்கியது. பெப்ரவரி 3ஆம் திகதி 3 முதல் ரஷ்யாவில் உள்ள 49 நிறுவனங்களுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஜப்பான் தடை செய்யும். நீர் பீரங்கி, எரிவாயு ஆய்வு கருவிகள் மற்றும் குறைக்கடத்தி கருவிகள் முதல் தடுப்பூசிகள், எக்ஸ்ரே ஆய்வு கருவிகள், வெடிபொருட்கள் மற்றும் ரோபோக்கள் வரையிலான தயாரிப்புகள் இதில் அடங்கும் என்று ஜப்பான…

    • 5 replies
    • 298 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.