உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
800 கொவிட் 19 தொற்றாளர்களுடன் சிட்னிக்கு வந்த பாரிய உல்லாசக் கப்பல் By DIGITAL DESK 3 13 NOV, 2022 | 08:32 AM சுமார் 800 கொவிட் 19 தொற்றாளர்களைக் கொண்ட உல்லாசப் பயணிகள் கப்பலொன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தை நேற்று சென்றடைந்தது. மெஜஸ்டிக் பிரின்சஸ் எனும் இக்கப்பலில் மொத்தமாக சுமார் 4,600 பயணிகளும் ஊழியர்களும் இருந்தனர். நியூஸிலாந்திலிருந்து இக்கப்பல் பயணத்தை ஆரம்பித்திருந்தது. 12 நாள் பயணத்தின் இடையில், கப்பலிலிருந்த பெரும் எண்ணிக்கையானோருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இக்கப்பலை இயக்கும் கார்னிவேல் அவுஸ்திரேலியா நிறுவனத்தன் தலைவர் மார்கரிட் பிட்ஸ்ஜெரால்ட் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்கும் அமெரிக்கா! தீவிரமடையும் போர் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது. ஆனாலும் உக்ரைன் இராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 40…
-
- 0 replies
- 150 views
-
-
உக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ஈரானுக்கு வழங்கும் ரஷ்யா! உக்ரைனிய பகுதிகளிலிருந்து கைப்பற்றிய பிரித்தானிய ஆயுதங்களை ரஷ்யா, ஈரானுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிமாற்றத்தை பிரித்தானியா விரும்பவில்லை என்றாலும், இது ஒரு அறியப்பட்ட ஆபத்து மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால் இது ஒரு பெரிய கவலையாக இருக்காது என பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பிரித்தானியா மற்றும் பிற நேட்டோ கூட்டாளிகள் உக்ரைனியர்களால் கைப்பற்றப்பட்ட ரஷ்ய ஆயுதங்களிலிருந்து ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இராணுவ திறன்களைப் பற்றி அறிய ஒரு அற்புதமான வாய்ப்பை அனுபவித்து வருகின்றனர் …
-
- 5 replies
- 857 views
-
-
இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு: போராட்டப் பேரணியில் பங்கேற்றபோது நடந்தது 3 நவம்பர் 2022, 12:26 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAHAT DAR/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி தனது அரசியல் கட்சியான தெஹ்ரீக்- இ- இன்சாஃப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கையசைக்கும் இம்ரான்கான். இந்த பேரணியில்தான் இம்ரான் சுடப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியின்போது சுடப்பட்டார். அவருக்கு வயது 70. வியாழக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில் மே…
-
- 10 replies
- 432 views
- 1 follower
-
-
பாலியல் வழக்கு: ஒஸ்கர் விருது வென்ற இயக்குநருக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு By NANTHINI 12 NOV, 2022 | 02:01 PM ஒஸ்கர் விருதை வென்ற பிரபல ஹொலிவுட் இயக்குநர் போல் ஹகிஸ் (69) கனடாவில் பிறந்தவர். இவர் திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது பல பாலியல் புகார்கள் எழுந்தன. போல் ஹகிஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பெண்கள் தனித்தனியாக அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2013ஆம் ஆண்டு போல் ஹகிஸ் அவரது வீட்டில் வைத்து தன்னை வன்கொ…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
யுக்ரைன் யுத்தத்தில் 240,000 பேர் பலி: அமெரிக்கா கணிப்பு By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 03:53 PM யுக்ரைன் யுத்தத்தில் இதுவரை சுமார் 2 லட்சம் படையினரும் 40,000 பொதுமக்களும் பலியாகியிருக்கலாம் என அமெரிகக்h கணிப்பிட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் ரஷ்ய படையினரும், ஒரு லட்சம் யுக்ரைனிய படையினரும் யுக்ரைனில் பலியாகியிருக்கலாம் என அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தளபதிகளின் தலைவரான ஜெனரல் மார்க் மிலி கூறியுள்ளார். அத்துடன், மோதல்களில் சிக்கி சுமார் 40,000 பொதுமக்களும் பலியாகியிருக்கலாம் எனவும் அவர் கூறிழயுள்ளார். அதேவேளை, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளுக்கு மீள செல்வதற்காக யுக்ரைன் விடுத்துள்ள சமிக்ஞைகள், ப…
-
- 12 replies
- 575 views
- 1 follower
-
-
டொங்காவில் 7.1 ரிக்டர் பாரிய பூகம்பம் By DIGITAL DESK 3 11 NOV, 2022 | 06:03 PM பசுபிக் சமுத்திர நாடான டொங்காவுக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.1 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டது. டொங்காவின் நேயாஃபூ நகரிக்கு தென்கிழக்கே 200 மீற்றர் தூரத்தில் இப்பூகம்பம் ஏற்படடதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துளளது. இப்பூகம்ப மையத்திலிருந்து 300 கிலோமீற்றருக்கு உட்பட்ட பகுதிகிளல் சுனாமி அலைகள் தாக்கலாம் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மத்தியநிலையம் எச்சரித்துள்ளது. https://www.virakesari.lk/article/139768
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
அரச பொறுப்புகளை துறந்தார் நோர்வே இளவரசி By T. SARANYA 11 NOV, 2022 | 03:40 PM நோர்வே இளவரசி தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸ், பிரபல ஆபிரிக்க அமெரிக்க ஹொலிவுட் ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில், தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸ் அறிவித்துள்ளார். புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள் குறித்து ஆய்வு செய்யவும், மாற்று மருத்துவத்தில் ஈடுபட உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இளவரசி மார்த்தா லூயிஸ்-ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் ஜோடி மாற்று மருத்துவம் …
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய சுகாதார நிறுவனத்திலிருந்து 97 லட்சம்பேரின் தரவுகள் திருட்டு! By DIGITAL DESK 3 11 NOV, 2022 | 12:12 PM அவுஸ்திரேலியாவின் பிரதான சுகாதார காப்புறுதி நிறுவனமொன்றின் கணினி வலையமைப்புக்குள் ஊடுருவி, 97 லட்சம் பேரின் தரவுகளை ஊடுருவல் காரர்கள் திருடியுள்ளனர் என அவுஸ்திரேலிய பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய பிரதமர் அன்தனி அல்பானீஸ் தொடர்பான தரவுகளும் இவற்றில் அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய சுகாதார காப்புறுதி நிறுவனமான மெடிபேங்க் (Medibank) நிறுவனத்திடம் ரஷ்ய ஊடுருவல்காரர்கள் (ஹேக்கர்கள்) 15 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் கப்பம் கோரியிருந்தனர். இந்த கப்…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் 2 மகன்களும் அவுஸ்திரேலியாவில் சடலங்களாக மீட்பு 07 NOV, 2022 | 07:59 AM அவுஸ்திரேலியாவின் கன்பராவில் அமைந்துள்ள குளம் ஒன்றிலிருந்து தமிழ் குடும்பத்தை சேர்ந்த தாயும் இரு மகன்மாரும் சலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை (5) காலையில் தாயினதும் ஒரு மகனினதும் சடலங்கள் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மற்றைய மகனான பிரணவ் விவேகானந்தன் என்பவர் காணாமல் போன நிலையில் அவுஸ்திரேலிய பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பின்னர் காணாமல் போயிருந்த மற்றைய மகனினது சடலமும் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இறப…
-
- 2 replies
- 812 views
- 1 follower
-
-
உக்ரைனைவிட்டு வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் தங்கள் கல்வியைத் தொடரலாம் என அறிவிப்பு. உக்ரைனைவிட்டு வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் தங்கள் கல்வியைத் தொடரலாம் என ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சென்னையிலுள்ள ரஷ்ய துணைத் தூதர் ஓலெக் அவ்தீவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிலும் உக்ரைனைப் போலவே மருத்துவ பாடத் திட்டம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனியர்களில் பெரும்பாலானோர் ரஷ்ய மொழி தான் பேசுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1309950
-
- 0 replies
- 185 views
-
-
இந்தோனேஷிய விமானம் வீழ்ந்தமைக்கு விமானியின் தவறும் காரணம்: விசாரணையாளர்கள் By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 05:10 PM இந்தோனேஷியாவில் கடந்த வருடம் 62 பேர் பலியான விமான அனர்த்தத்துக்கு விமானியின் தவறும் காரணம் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். விஜயா எயார் நிறுவனத்துக்குச் சொந்தமான பிளைட் எஸ்ஜே-182 விமானம், கடந்த வருடம் ஜனவரி 9 ஆம் திகதி, ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சிறிதுநேரத்தில் ஜாவா கடலில் வீழ்ந்தது. இதனால் மேற்படி போயிங் 737-300 ரக விமானத்திலிருந்த 62 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணை விபரங்களை இந்தோனேஷிய வான் போக்குவரத்து பாதுகாப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இன்று வெளியிட்டனர். இந்தோனேஷ…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
வருடாந்தர வால்டாய் டிஸ்கஷன் கிளப்பில் சர்வதேச வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "பிரதமர் மோடி இந்திய நாட்டின் தேசபக்தர். அவரது 'மேக் இன் இந்தியா' யோசனை பொருளாதாரரீதியாக முக்கியமானது. அவர் தலைமையில் நிறைய முன்னேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்காலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குச் சொந்தமானது. புதின் மற்றவர்கள் இந்திய நாட்டின் மீதான எந்தவொரு தடையையோ அல்லது கட்டுப்படுத்துதலையோ விதிக்க முயன்றாலும், தனது தேசத்தின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை மேற்கொள்ளும் திறன்கொண்டவர்களில் மோடியும் ஒருவர். பிரிட்டிஷ் காலனியாக இருந்து, நவீன நாடாக …
-
- 18 replies
- 960 views
-
-
8 இலங்கையர்களுடனான கப்பலை கைப்பற்றியது நைஜீரியா! மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் ஏறக்குறைய 04 மாதங்களாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கப்பல் ஓகஸ்ட் 12ஆம் திகதி ஈக்குவடோரியல் கினியா கடல் பாதுகாப்புப் படையினரால் சர்வதேச கடல் பகுதியில் கைது செய்யப்பட்டது. பின்னர், அங்குள்ள துறைமுகம் ஒன்றில் கிட்டத்தட்ட 04 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு, பணம் செலுத்திய பின்னரே கப்பலை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் தமது கப்பல் நைஜீரிய பாதுகாப்புப் பிரிவினரால் மீண்டும் கைது செய்யப்படவுள்ளதால், இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டை கப்பலில…
-
- 0 replies
- 230 views
-
-
பிரித்தானிய அரசர் மீது முட்டை வீச்சு: மாணவர் ஒருவர் கைது! யோர்க்கில் நடந்த நடைபயணத்தின் போது பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா மீது முட்டை வீசப்பட்டதைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட 23 வயதான யோர்க் பல்கலைக்கழக மாணவர், பொது ஒழுங்கு மீறல் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று நோர்த் யார்க்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர், முட்டைகளை வீசும்போது ‘இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது’ என்று கூச்சலிட்டார், அதே நேரத்தில் கூட்டம் ‘கடவுள் ராஜாவைக் காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டது. காணொளி…
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
அமெரிக்க தடைகளுக்கு எதிராக கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானம் ஐ.நா. சபையில் ஏற்பு! அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளுக்கு எதிராக, கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை ஆய்வு செய்யும் கூட்டத்தில் சிங்கப்பூர், டொமினிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 185 நாடுகளின் பிரதிநிதிகள், கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவு தெரிவித்தன. அதே சமயம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. பிரேசில் மற்றும் உக்ரைன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது. பிடல் காஸ்ட்ரோ தலைமையில…
-
- 0 replies
- 147 views
-
-
கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்களை திருப்பி பெறுவதே முக்கிய நிபந்தனை என்கின்றது உக்ரைன் ! கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை என உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். உக்ரைனுகு நவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள், விமானங்கள், டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை என்பன வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பெப்ரவரி மாதம் பிற்பகுதியில் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளிடம் இருந்து மேலதிக ஆயுதங்களுக்கு கிய்வ் பலமுறை அழைப்பு விடுத்துள்ளது. மேலும் உக்ரைன் ஜனாதிபதியின் முக்கிய நிபந்தனை உக்ரேனிய பிராந்திய ஒருமைப்பாட்…
-
- 13 replies
- 996 views
-
-
குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு இலோன் மஸ்க் சிபாரிசு By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 10:33 AM அமெரிக்காவில் இன்று நடைபெறும் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினருக்கு வாக்களிக்குமாறு தான் சிபாரிசு செய்வதாக டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரருமான இலோன் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையின் அனைத்து 435 உறுப்பினர்களும், 100 செனட் உறுப்பினர்களில் 35 பேரும் 39 மாநிலங்கள், பிராந்தியங்களின் ஆளுநர்களும் இத்தேர்தல்களில் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் இத்தேர்தல்கள் நடைபெறுவதால், இடைக்காலத் தேர்தல்கள் என இத்த…
-
- 2 replies
- 236 views
- 1 follower
-
-
கனேடிய தேர்தல்களில் சீனா தலையீடு : ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 12:58 PM கனேடிய தேர்தல்களில் தலையீடு செய்வதற்கு சீனா முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருரோனா குற்றம் சுமத்தியுள்ளார். கனேடிய நிறுவனங்களை இலக்கு வைத்து, ஜனநாயகத்துடன் ஆக்ரோஷாமான விளையாட்டு நடத்துவதாக பிரதமர் ட்ரூடோ விமர்சித்துள்ளார். கனடாவில் அண்மைக்கால தேர்தல்களில் சீனாவின் ஆதரவு பெற்ற வலையமைப்பு ஒன்றை கனேடிய புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாக செய்தி வெளியானதையடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இவ்வாறு கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு கனடாவின் சமஷ்டி தேர்தல்களில் குறைந்தபட்சம் 11 பேர் சீனாவின் ஆதரவைப் பெற்றிரு…
-
- 11 replies
- 991 views
- 1 follower
-
-
மெட்டாவிலிருந்து 11,000 ஊழியர்கள் பணி நீக்கம்: ஸக்கர்பேர்க் அறிவிப்பு By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 05:40 PM பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் 11,000 பேரை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஸக்கர்பேக் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். இது மெட்டாவின் ஊழியர்களில் சுமார் 13 சதவீதமாகும். பேஸ்புக்கு, இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்களின் உரிமையாளராக மெட்டா நிறுவனம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் இலோன் மஸ்க், அந்நிறுவனத்தின் 7,000 ஊழியர்களில் சுமார் 3,000 பேரை பணிநீக்கம் செய்வதற்கு முயற்சித்து வருவதாக ஏற்கெனவே …
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
2000 வருடங்கள் பழைமையான வெண்கலச் சிலைகள் கண்டுபிடிப்பு By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 04:29 PM 2,000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வெண்கலச் சிலைகள், வெந்நீர் ஊற்று ஒன்றின் சேற்றுக்குள்ளிருந்து தாம் கண்டுபிடித்துள்ளதாக இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டஸ்கனி பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புதைந்திருந்த நிலையில், 24 வெண்கலச் சிலைகள் சேதமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்துள்ளனர். மேற்படி பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 5000 தங்க, வெள்ளி, வெண்கல நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை காணிக்கையாக செலுத்தப்பட்டவை என நம்பப்படுகிறது. …
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் - அவுஸ்திரேலிய நபருக்கு 129 வருட சிறைத்தண்டனை By RAJEEBAN 09 NOV, 2022 | 12:13 PM சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு அவுஸ்திரேலியா 129 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. பிலிப்பைன்சில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஒருவருக்கே அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. துஸ்பிரயோகங்களில் ஈடுபடும் அனைவருக்கும் ஆள்கடத்தல் காரர்களிற்கும் இந்த தண்டனை உறுதியான செய்திகளை தெரிவிக்கும் என அரசதரப்பு வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். யுவதிகளை கடத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிற்காக ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்துவரு…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
சீன இராணுவத்தால் கவர்ந்தீர்க்கப்படும் பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள்! பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்திற்கு பயிற்சிகளை வழங்குவதற்காக பெருமளவிலான பணத்துடன் சீனாவிற்கு இழுக்கப்படுகின்றனர். 30 முன்னாள் பிரித்தானிய இராணுவ விமானிகள் வரை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க சென்றதாக கருதப்படுகிறது. சீன இராணுவத்தில் பணிபுரியும் முன்னாள் இராணுவ விமானிகளுக்கு பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விமானிகளை கவர்ந்தீர்க்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், சமீபத்தில் அது அதிகரித்து வருவதாகவும் மேற்கு அதிகாரிகள் கூறுகின்றனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாள…
-
- 2 replies
- 392 views
- 1 follower
-
-
ரஷ்யாவிற்கு இரகசியமாக ஆயுதங்களை அனுப்புவதாக கூறும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்தது வடகொரியா! உக்ரைனில் நடந்த போருக்காக ரஷ்யாவிற்கு இரகசியமாக ஆயுதங்களை அனுப்புவதாக அமெரிக்கா கூறியதை வட கொரியா நிராகரித்துள்ளது. ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கவில்லை என்றும் அவ்வாறு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது. வட கொரியா ரஷ்யாவிற்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பீரங்கி குண்டுகளை வழங்குவதாக அமெரிக்காவிடம் தகவல் இருப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கடந்த வாரம் கூறியதை அடுத்து, அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ.இன் இந்த அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) வந்துள்ளது. …
-
- 3 replies
- 611 views
-
-
இந்தியாவை மீண்டும் பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புடின் By DIGITAL DESK 5 08 NOV, 2022 | 11:00 AM இந்தியர்களை 'திறமையானவர்கள்' என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புகழ்ந்துள்ளார். மேலும் புடினின் உரையின் ரொய்ட்டர்ஸ் மொழிபெயர்ப்பின்படி, இந்தியா வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த முடிவுகளை அடையும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார். நவம்பர் 4 ரஷ்ய ஐக்கிய தினத்தில் உரையாற்றும் போது, இந்தியாவுக்கு அதிக திறன் உள்ளது என்று ரஷ்ய ஜனாதிபதி பாராட்டியுள்ளார். இந்தியா அதன் வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த முடிவுகளை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் மக்களுக்கு இது சாத்தியமாக அமையும…
-
- 2 replies
- 225 views
- 1 follower
-