உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
உக்ரைனுக்கு... நிதி உதவியை அதிகரிக்குமாறு ,அமெரிக்க கருவூல செயலாளர்... நட்பு நாடுகளிடம் கோரிக்கை உக்ரைனின் நட்பு நாடுகள் அவர்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ் பொருளாதார மன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் இந்த கோரிக்கையை விடுத்தார். அமெரிக்க செனட் சபை 40 பில்லியன் டொலர் இராணுவ மற்றும் மனிதாபிமான உதவியை வழங்க தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் மீதான இறக்குமதி வரிகளை கட்டம் கட்டமாக தடை செய்யலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். https://athavan…
-
- 0 replies
- 119 views
-
-
மீதமுள்ள படையினரைக் காப்பாற்ற... உக்ரைன், நடவடிக்கை ! மரியுபோலின் அஸொவ்ஸ்டல் பகுதியிலிருந்து, எஞ்சியுள்ள படையினரை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மலியர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த திங்கட்கிழமை காயமடைந்த படையினர் உட்பட 264 இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்றைய தினம் 7 பேருந்துகள் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒலெனிவ்கா என்ற …
-
- 0 replies
- 231 views
-
-
நேட்டோ அமைப்பில், இணைய உள்ளதாக.... ஃபின்லாந்து- சுவீடன் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக வரும் ஒரு வரலாற்று மாற்றத்தில் நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பதாக சுவீடன் மற்றும் ஃபின்லாந்து உறுதிப்படுத்தியுள்ளன. ஸ்வீடனில், ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியினர் மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டணியில் சேர்வதை ஆதரிப்பதாகக் கூறியதால், இது நாடு விண்ணப்பிக்க வழி வகுத்தது. ஃபின்லாந்தும் நேட்டோவில் சேர்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்தது. சுவீடன் இரண்டாம் உலகப் போரில் நடுநிலை வகித்தது மற்றும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இராணுவக் கூட்டணிகளில் சேருவதைத் தவிர்த்தது. பின்லாந்து ரஷ்யாவுடன்…
-
- 12 replies
- 912 views
-
-
பிரான்ஸின்... புதிய பிரதமராக, எலிசபெத் போர்ன் நியமனம்! பிரான்ஸின் புதிய பிரதமராக முன்னாள் தொழிற்துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், 61 வயதான போர்ன், பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மக்ரோன், தனது அரசாங்கத்தில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்ததன் பின்னணியில், முன்னதாக பிரதமராக இருந்த ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து எலிசபெத் போர்னை புதிய பிரதமராக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அறிவித்தார். இந்த நியமனத்தை அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்…
-
- 0 replies
- 320 views
-
-
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், தன்னார்வ பொலிஸ் அதிகாரிகளுக்கு... டேசர்களைப், பயன்படுத்த அதிகாரம்! இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள தன்னார்வ பொலிஸ் அதிகாரிகளுக்கு டேசர்களைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அறிவிப்பை உட்துறைச் செயலாளர் ப்ரீத்தி படேல், ஒரு உரையில் பொலிஸ்துறையிடம் அறிவிப்பார் என அறியமுடிகின்றது. சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குறிப்பிட்ட பயிற்சியை முடித்தால் அவர்கள் மின்சார ஸ்டன் துப்பாக்கிகளைப் பயன்படுத்த முடியும். தாக்குபவர்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் பாதகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக உட்துறை அலுவலகம் கூறியது. ஆனால், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதை அவர்களின் பயன்பாட்டில் ஆபத்தான விரிவா…
-
- 0 replies
- 147 views
-
-
ட்ரம்ப் காலத்தில்... கியூபா மீது, விதிக்கப்பட்ட தடைகளை நீக்கியது... பைடன் நிர்வாகம்! கியூபா மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்பத்துக்கான பணம் அனுப்புதல் மற்றும் கியூபாவிற்கு பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதுதவிர, மேலும், கியூபா நாட்டவர்களுக்கான அமெரிக்க விசாக்கள் பரிசீலனையும் துரிதப்படுத்தப்படும். இந்த நடவடிக்கை, கியூபா குடிமக்கள் அரசாங்க அடக்குமுறையில் இருந்து விடுபட்ட வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொட…
-
- 0 replies
- 149 views
-
-
தாலிபன்களின் கட்டுப்பாடுகளால் தவிக்கும் ஆப்கன் பெண்கள்: “இங்கு பெண்ணாக வாழ்வதே குற்றமா?" லாரா ஓவென் பிபிசி 100 பெண்கள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "தெருவில் இருந்தவர்கள் என்னிடம் வந்து, என் முகத்தை மறைக்குமாறு கூறியது வேதனையாக இருந்தது. நான் சென்ற தையல்காரரும் கூட நான் பேசுவதற்கு முன்பு என் முகத்தை மறைக்குமாறு கூறினார்," என்கிறார் சோர்ச்யா. காபூலில் ஒரு சிறு தொழில் செய்து வருகிறார் சோரயா. இந்த வாரம் மேற்கு காபூலில் உள்ள கடைகளுக்கு அவர் வழக்கமாகச் செல்வதைப் போல் சென்றபோது, சில விஷயங்கள் மாறியிருந்தன. தாலிபன் பிரதிநிதிகள் பெண்களுக்கான துணிக்க…
-
- 1 reply
- 306 views
- 1 follower
-
-
இந்த ஆண்டு இறுதிக்குள்... உக்ரைன்- ரஷ்ய போர் முடிவடையும்: உக்ரைன் இராணுவ மேஜர் ஜெனரல்! இந்த ஆண்டு இறுதிக்குள் உக்ரைன் மற்றும் ரஷ்ய போர் முடிவடையும் என உக்ரைன் இராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார். ஸ்கை செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை வீழ்த்த சதி நடக்கின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவடையும். இந்த போரில் ரஷ்யா தோல்வி அடைந்தால், ஜனாதிபதி பதவியில் இருந்து புடின் அகற்றப்படுவார். இதன் மூலம் ரஷ்யா வீழ்ச்சி அடையும். புடின் மிகவும் மோசமான உளவியல் மற்றும் உடல் நிலை பாதிப்பில் இருக்கின்றார்” என கூறினார். இதனிடையே, ரஷ்யாவி…
-
- 0 replies
- 209 views
-
-
வட கொரியாவில்... கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, இராணுவத்துக்கு... கிம் அழைப்பு! வடகொரியாவில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். மக்களுக்கு மருந்துகளை விநியோகிக்க உதவுமாறு இராணுவத்திற்கு கிம் ஜோங் உன், உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவில் கொவிட் தொற்று பரவியுள்ளதாக செய்தி வெளியானதில் இருந்து, இதுவரை 50பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி போடப்படாத மக்கள் மூலம் நோய் பரவுவதை மெதுவாக்கும் முயற்சியில் கிம் நாடு தழுவிய முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்கு உத்தரவிட்ட போதிலும், வடகொரியா ‘காய்ச்சல்’ என்று குறிப்பிடுவதன் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நோய்வாய்ப…
-
- 0 replies
- 142 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தின்... புதிய ஜனாதிபதியாக, ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு! ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிஃபா பின் சயீத் மறைவைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டார். 1971ஆம் ஆண்டில் சுதந்திர நாடாக ஐக்கிய அரபு அமீரகம் ஆன பிறகு, அந்த நாட்டுக்கு நியமிக்கப்படும் மூன்றாவது ஜனாபதி ஷேக் முகமது பின் சயீது ஆவார். இவர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். இராணுவத்தில் பல முக்கிய பதவிகளை இவர்வகித்துள்ளார். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் ஜனாதிபதியாக ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannew…
-
- 0 replies
- 133 views
-
-
வட கொரியாவில் கோவிட்: 10 லட்சம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, மருந்து தெளிக்கும் ஊழியர்கள். தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வட கொரிய நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று அலை அலையாகப் பரவி வரும் நிலையில், இந்த நெருக்கடியைக் கையாளும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறை அலுவலர்களை கடுமையாக விமர்சித்த வட கொரியத் தலைவர் கிம் ஜோங் - உன் மருந்துகளை விநியோகிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை "காய்ச்சல்" எ…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
"அல் ஜசீரா" ஊடகவியலாளரின்... இறுதிச் சடங்கில், மோதல்! ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொல்லப்பட்ட அல் ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லாவின், இறுதிச் சடங்கில் இஸ்ரேலிய பொலிஸார் துக்கத்தில் கலந்து கொண்டவர்களை தாக்கியுள்ளனர். பொலிஸார், சிலர் தடியடிகளைப் பயன்படுத்தி, பாலஸ்தீனியர்களின் கூட்டத்திற்குள் நுழைந்ததால், ஷிரீன் அபு அக்லாவை வைத்திருந்த சவப்பெட்டி கிட்டத்தட்ட விழுந்தது. ஆனால், இஸ்ரேலிய பொலிஸார் மீது கற்களை வீசி தாக்கிய பின்னரே, தாம் அவர்களை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொலிஸாருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மருத்துவமனை வளாகத்தில் சவப்பெட்டியைச் சுற்றி திரண்டிருந்த மக்கள், அபு அக்லாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அதிகார…
-
- 5 replies
- 781 views
-
-
அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி - என்ன நடந்தது? 15 மே 2022, 03:59 GMT புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் - கருப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பஃப்பலோ பகுதியை அடைய மணிக்கணக்கில் வாகனம் ஓட்டியதாக நம்பப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை. இது இனவெறி நோக்குடன் தூண்டப்பட்ட வெறுப்புணர்வு…
-
- 2 replies
- 379 views
- 1 follower
-
-
லக்பா ஷெர்பா - வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் சுவாமிநாதன் நடராஜன் & பேட்ரிக் ஜேக்சன், லண்டன் பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LHAKPA SHERPA படக்குறிப்பு, 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் லக்பா ஷெர்பா தனது வாழ்நாள் முழுவதும் சவால்களை எதிர்கொண்டு வரும் லக்பா ஷெர்பா, தனது 48 வயதில், 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். அவர் 10-வது முறையாகச் செய்துள்ள சாதனை, அவரது சகோதரரால் அறிவிக்கப்பட்டது. நேபாள அதிகாரிகள் அதை உறுதி செய்தனர். இதைச் செய்துள்ள முதல் பெண் என்ற ப…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
ரஷ்ய படையெடுப்பால்.... உக்ரைனில் இதுவரை, "3,500க்கும் மேற்பட்டோர்" உயிரிழப்பு! உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியது முதல் இதுவரை அந்நாட்டில் 3,573 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,816 பொதுமக்கள் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. கனரக பீரங்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மூலமே பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், ரஷ்யா நிகழ்த்தி உள்ள போர்க்குற்ற விசாரணையை உக்ரைன் நீதிமன்றம் தொடங்கி உள்ள நிலையில், 10,000க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை அடையாளம் கண்டுள்ளதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. ஆனால், பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் உட்பட போர்க்குற்றங்களில் ஈடுபடவில்ல…
-
- 5 replies
- 349 views
-
-
ஐம்பது புலம்பெயர்ந்தோர்... ருவாண்டாவுக்கு, திரும்ப அனுப்பப்படுவார்கள்: பிரதமர் பொரிஸ் ஜோன்சன்! அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மீள்குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ருவாண்டாவிற்கு முதலில் ஐம்பது புலம்பெயர்ந்தோர் அனுப்பப்படவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். டெய்லி மெயிலுக்கு அளித்த செவ்வியில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இந்த எண்ணிக்கையை வெளிப்படுத்தினார். ஒரு புதிய ஒப்பந்தத்தின்படி, பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் இப்போது ருவாண்டாவிற்கு மீள்குடியேற்றத்திற்காக விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள். ஆனால், இந்த கொள்கையை 160க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், கேன்டர்பரி பேராயர், எதிர்க்கட்சிகள் மற்றும் மூத்…
-
- 1 reply
- 309 views
-
-
ஃபின்லாந்திற்கு... மின்சார விநியோகத்தை, நிறுத்துவதாக... ரஷ்யா அறிவிப்பு! ரஷ்ய எரிசக்தி விநியோக நிறுவனமான RAO Nordic பணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி, ஃபின்லாந்திற்கு மின்சார விநியோகத்தை இன்று (சனிக்கிழமை) முதல் நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ளது. முந்தைய விநியோகங்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபின்லாந்து கிரிட் கட்டுப்பாட்டு நிறுவனம், ரஷ்யா நாட்டின் மின்சாரத்தில் ஒரு சிறிய சதவீதத்தை மட்டுமே வழங்கியதாகவும், அதை மாற்று ஆதாரங்களில் இருந்து மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை நேட்டோவில் சேரத் திட்டமிட்டுள்ளதாக ஃபின்லாந்து கூறியதை அடுத்து, ‘பழிவாங்கும் நடவடிக்கைகளை’ எடுப்பதாக ரஷ்யா…
-
- 0 replies
- 367 views
-
-
புடினின் முன்னாள் மனைவி- இரகசிய காதலி உட்பட... 12பேருக்கு பிரித்தானியா, பொருளாதாரத் தடை! செல்வாக்கு மிக்க அரச பதவிகளுக்கு ஈடாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முறைகேடான செல்வத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்படும் 12பேருக்கு பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவர்களில் அவரது முன்னாள் மனைவி லியுட்மிலா ஓச்செரெட்னயா மற்றும் அவரது இரகசிய காதலியாக நம்பப்படும் 38 வயதான முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை அலினா கபேவா ஆகியோர் அடங்குவர். இதுதவிர, புடினின் நெருங்கிய குடும்ப உறுப்பினரான இகோர் புதின் என்பவர் மீதும் தடை விதிக்கப்படுகிறது. ரஷ்ய தொழிலதிபரான இகோர், பெசெங்கா சர்வதேச கடல் துறைமுக இயக்குனராக இருந்து வருகிறார். 38 வயதான அலினா க…
-
- 0 replies
- 245 views
-
-
மேற்குக் கரையில்... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல் ஜசீரா செய்தியாளர் கொல்லப்பட்டார் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையில் அல் ஜசீராவுக்கு செய்தி அளித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 51 வயதான ஷெரின் அபு அக்லா, இஸ்ரேலிய துருப்புக்களால் வேண்டுமென்றே சுடப்பட்டதாகவும் அவரது தயாரிப்பாளரும் சுடப்பட்டு காயமடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுட்டள்ளது, துப்பாக்கிச் சூட்டின் போது பாலஸ்தீனிய ஆயுததாரிகளால் அவர்கள் சுடப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறினார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள…
-
- 2 replies
- 323 views
- 1 follower
-
-
கம்போடியா வரை நீண்டிருந்த தமிழர் ஆட்சியில்.. கோலோஞ்சி இருந்த கோவில்களில் இருந்து அமெரிக்கா.. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளால் திருடப்பட்ட விலைமதிக்க முடியாத அருங்காட்சியக சொத்துக்களை மீள கையளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்.. அண்மையில் அமெரிக்கா.. தான் திருடி வைத்திருந்த துரியோதனன்.. மற்றும் பீமன் சிலைகளை மீளக் கையளித்துள்ளது. அதேபோல் பிரிட்டன் திருடியவற்றையும் மீளத் தரக் கேட்கப்பட்டுள்ளது. அதுபோக.. தமிழர்களிடம் இருந்து திருடிய கம்போடியாவை தமிழர்களிடம் எப்ப தருவார்கள்.. அதுசரி.. தமிழர்களே அதைப்பற்றி கதைப்பதில்லை. ஏலவே ஈழத்தில் பெளத்த ஆக்கிரமிப்பைக் கூட கண்டும் காணாமலும் இருக்கும் தமிழர்களிடம் போய்.. இதை எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது தான். இத…
-
- 2 replies
- 574 views
-
-
ரஷ்யாவின்... எரிவாயு விநியோகத்தை, தடுத்து நிறுத்தியது... உக்ரைன்! தங்கள் நாட்டு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருளில் 3இல் ஒரு பங்கு, உக்ரைன் வழியாக குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 11 வாரங்கள் ஆன நிலையிலும், அந்த நாட்டு வழியாக இதுவரை ரஷ்ய எரிபொருள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய எரிவாயு கொண்டு செல்லப்படும் வழித்தடத்தில் நேற்று (புதன்கிழமை) முதல் தடை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இத…
-
- 2 replies
- 367 views
-
-
தாமதமின்றி... நேட்டோவில் சேர, பின்லாந்து விண்ணப்பிக்க வேண்டும்: ஜனாதிபதி- பிரதமர் அழைப்பு! உக்ரைன் போரால் தூண்டப்பட்ட நோர்டிக் நாட்டின் பாதுகாப்புக் கொள்கையில் தீவிரமான மாற்றத்தை உறுதிசெய்து, தாமதமின்றி நேட்டோவில் சேர பின்லாந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அதன் ஜனாதிபதியும் பிரதமரும் கூறியுள்ளனர். பின்லாந்தின் ஜனாதிபதியும் பிரதமரும் நாடு தாமதமின்றி நேட்டோ உறுப்பினராக விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளனர். சௌலி நினிஸ்டோ மற்றும் சன்னா மரின் ஒரு கூட்டறிக்கையில் அடுத்த சில நாட்களில் முடிவை எதிர்பார்க்கிறோம் என்று கூறினர். மேலும், ‘இந்த முடிவை எடுக்க இன்னும் தேவையான தேசிய நடவடிக்கைகள் அடுத்த சில நாட்களுக்குள் விரைவாக எடுக்கப்படும் என்று நாங்கள் நம்ப…
-
- 0 replies
- 173 views
-
-
சுவீடன்- பின்லாந்து நாடுகளுடன்... பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களில், இணைந்தது பிரித்தானியா! சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களை பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளது. இது எந்தவொரு நாடும் தாக்குதலுக்கு உள்ளானால் அவர்களுக்கு உதவிக்கு வரும் வகையில் இந்த ஒப்பந்தம் வழிவகைசெய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நேட்டோவில் இணைவது குறித்த விவாதங்களுக்கு மத்தியில், ஒப்பந்தங்களில் கையெழுத்திட இரு நாடுகளுக்கும் சென்றார். பிரதமர் ஜோன்சன் மற்றும் சுவீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் ஆகியோர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு இன்னும் முக்கியமானது என்று கூறினார். இரண்டாவது ஒப்பந…
-
- 0 replies
- 226 views
-
-
வடகொரியாவில்... முதன் முறையாக, கொவிட் தொற்று: முழு பொது முடக்கம் அமுல்! வடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் (பிஏ.2 வகை வைரஸ்) தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பியோங்யாங்கில் பிஏ.2 எனப்படும், அதிக அளவில் பரவக்கூடிய ஓமிக்ரோன் வைரஸின் துணை மாறுபாடு கண்டறியப்பட்டதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, வடகொரிய தலைவர் கடுமையான தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளார். அத்துடன் தொற்று நோயை விரைவாக அகற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார். ஓமிக்ரோன் மாறுபாட்டின் கண்டுபிடிப்பு வட கொரியாவிற்கு ஒரு தீவிரமான ஆபத்தை அளிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அதன் 25 மில்லியன் மக…
-
- 0 replies
- 140 views
-
-
கார்கிவ் பகுதியில்... கொடிய பொறிகளை, விட்டுச் சென்ற ரஷ்ய படைகள் – ஆளுநர் எச்சரிக்கை ரஷ்ய துருப்புக்கள் கார்கிவ் பகுதியில் கொடிய பொறிகளை விட்டுச் சென்றுள்ளனதாக கார்கிவ் மாநில ஆளுநர் கூறுகிறார். விடுவிக்கப்பட்ட குடியேற்றங்களுக்கு விரைந்து செல்வதை விட தங்குமிடங்களிலேயே தொடர்ந்தும் இருக்குமாறும் மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எதிரிகள் நயவஞ்சகமானவர்கள் என்றும் அவர்களால் முடிந்தவரை பல உக்ரேனியர்களை காயப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்கிறனர் என்றும் கூறியுள்ளார். கார்கிவ் அருகே உள்ள சில நகரங்களை தங்கள் துருப்புக்கள் மீட்டெடுத்துள்ளன என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். கார்கிவ் பகுதில் பல இடங்கள் தீப்ப…
-
- 0 replies
- 210 views
-