Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரேசில், பொலிஸ் சோதனையில்... குறைந்தது, 11 பேர் சுட்டுக்கொலை. ரியோ டி ஜெனிரோவின் வடக்குப் பகுதியில் உள்ள ஏழ்மையான ஃபாவேலா சமூகத்தில் பிரேசில் காவல்துறை நடத்திய சோதனையில் குறைந்தது 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் அமைப்பின் தலைவர்களை பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட விலா க்ரூஸீரோ ஃபாவேலாவில் செவ்வாய்கிழமை அதிகாலை சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகத்தில் 10 கும்பல் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள அதேவேளை ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று நடந்த சோதனையானது ரியோ டி ஜெனிரோ ஃபாவேலாவில் நடந்த சமீபத்திய ஆபத்தான …

  2. இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை, ஆரம்பித்து வைத்தார் ஜோ பைடன்! இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கி வைத்துள்ளார். பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ள ஜோ பைடன், நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்தார். அமெரிக்கா தலைமையிலான இந்த கட்டமைப்பில் ஜப்பான், அவுஸ்ரேலியா உட்பட 13 நாடுகளை அவர் இணைத்துள்ளார். அமெரிக்கா, அவுஸ்ரேலியா, புரூனே, இந்தியா, இந்தோனீசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம், தாய்வான் ஆகிய 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவை ஆரம்பக்கட்ட உறுப்பு நாடுகள்தான் இந்த கட்டமைப்புக்குள் மேலும் சில நாடுகள் சேர வாய்ப்…

  3. அமெரிக்கா: தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பரிதாப பலி தினத்தந்தி உவால்டே, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை கொடூரமாக, புரியாத வகையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என்றும், அவன் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் என்றும் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளத…

  4. உக்ரைன் போரினால் உயிரிழக்கும் டொல்பின்கள் உக்ரைன் போரினால் டொல்பின்கள் உயிரிழப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி மூன்று மாதங்களைத் தொட்டுள்ள வேளையில் உக்ரைன் நாட்டின் வளங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான இறப்புகள், அழிக்கப்பட்ட வீடுகள், மாசுபட்ட மண் போன்ற பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் விலங்குகள், குறிப்பாக டொல்ஃபின்களின் உயிருக்கு இந்தப் போர் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம். கருங்கடலின் கரையோரங்களில் அதிக எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள், டொல்பின்கள் மற்றும் போர்போயிஸ்கள் தென்படுவதோடு கடந்த 3 மாதங்களில் கருங்கடலையொட்டிய துருக்கி கடற்கரைகளில் கிட்டத்தட்ட 100 டொல்பின்கள் இறந்த நிலையில் க…

  5. பூமியின் அதிசயம்: உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு 23 அக்டோபர் 2021 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LUKAS BISCHOFF/ALAMY படக்குறிப்பு, வண்ண மயமான கலவையின் காரணமாக ஹோமுஸ் தீவு பெரும்பாலும் "ரெயின்போ தீவு" என்று அழைக்கப்படுகிறது. பழுப்பு நீரோடைகள், கருஞ்சிவப்பு நிற கடற்கரைகள் மற்றும் மயக்கும் உப்புக் குகைகள் என இரானின் ஹோமுஸ் தீவு புவியியலாளர்களின் டிஸ்னிலேண்ட் என்று கூறலாம். "இந்த மண்ணின் சுவையை நீங்கள் உணர வேண்டும்" என தெற்கு இரானின் ஹோமுஸ் தீவில் எனது சுற்றுலா வழிகாட்டியான ஃபர்சாத் கே கூறினார். கருஞ்சிவப்பு நிழல் தரும் மலை, கனிமம்…

  6. கனடாவில்... சக்திவாய்ந்த புயலால், இறந்தவர்களின் எண்ணிக்கை... 8ஆக உயர்வு! இந்த வார இறுதியில் கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு மாகாணங்களில் சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்ட புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 8ஆக உயர்ந்துள்ளது. மேலும், அரை மில்லியன் மக்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுப்பதற்காக அவசரகால குழுவினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த புயல்கள் மற்றும் சூறாவளியினால், ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கின் சில பகுதிகளில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. மணிக்கு 132 கிமீ (82 மைல்) வேகத்தில் வீசிய காற்று, மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் என அனைத்தையும் அடியோடு சாய்த்தது.…

  7. ஜோ பைடன் உள்ளிட்ட... 963 அமெரிக்கர்கள், ரஷ்யாவுக்குள் நுழைய தடை! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சின் இணையதள பக்கத்தில் தடை விதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைன் போரை தொடர்ந்து அமெரிக்கா எடுத்த விரோதமான நடவடிக்கைகள் அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியுள்ளதாகவும் ஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1283319

  8. செயலிழந்தது உறுப்புகள்தான். உத்வேகம் அல்ல - ஊன்றுகோலுடன் எவரெஸ்ட் ஏறிய தன்னம்பிக்கை மனிதன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JAMIE MCANSH படக்குறிப்பு, ஜேமி மெக்ஆன்ஷ் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜேமி மெக் ஆன்ஷ் என்பவர் எவரெஸ்ட் மலை அடிவாரம் ஏறியுள்ளார். ஆனால், இதில் என்ன சிறப்பு? இதுவரை எத்தனையோ பேர் எவரெஸ்ட் சென்றுள்ளனரே என்றால், இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகள் எல்லாம் முடங்கிய பிறகு தன் தன்னம்பிக்கையால் மீண்டும் நடந்து, ஊன்றுகோலுடன் மலையேறியுள்ளார் இவர். பிரிட்டனைச் சேர்ந்த ஜேமிக்கு காம்ப்ளக்ஸ் ரீஜினல் பெய்ன் சிண்ட்ரோம் ( complex regional pain syndrome) எனப்படும் நோய் உள்ளது.…

  9. அவுஸ்ரேலிய பிரதமராக... அந்தனி அல்பனிஸ், தெரிவு. நேற்று இடம்பெற்ற அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று தொழில் கட்சி சார்பில் போட்டியிட்ட அந்தனி அல்பனிஸ் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் தொழில் கட்சியில் இருந்து அவுஸ்ரேலியாவின் பிரதமராக ஒருவர் தெரிவாகியுள்ளார். இந்த தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்கொட் மொரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தனி ஆல்பனிஸ் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவியிருந்தது. அவுஸ்ரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மொத்த 151 உறுப்பினர் இடங்களில் 76 இனை கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அந்தனி அல்பானிஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 இடங்களை கைப்பற்…

  10. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதலாவது ஆசிய சுற்றுப்பயணம் ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ஆசிய நாடுகளுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார். இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் எனப்படும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் வருகிற 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. [Lee Jin-man/Pool via Reuters] குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜப்பான் செல்லவுள்ளார். முன்னதாக நேற்று தென் கொரியா செல்லும் அவர், தென் கொரிய ஜனாதிபதி மற்றும் அதன் பிறகு ஜப்பான் பிரதமரை சந்தித்து பல்வேறு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிற…

  11. ஃபின்லாந்திற்கான.. இயற்கை எரிவாயு விநியோகத்தை, இன்று முதல்... நிறுத்துகிறது ரஷ்யா! ஃபின்லாந்திற்கான இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா இன்று (சனிக்கிழமை) நிறுத்தும் என்று ஃபின்லாந்தின் அரசாங்கத்துக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காஸும் அறிக்கையில், ‘எங்கள் விநியோக ஒப்பந்தத்தின் கீழ் இயற்கை எரிவாயு விநியோகம் நிறுத்தப்படும் என்பது மிகவும் வருந்தத்தக்கது. இருப்பினும், இந்த சூழ்நிலைக்கு நாங்கள் கவனமாக தயாராகி வருகிறோம், மேலும் எரிவாயு பரிமாற்ற நெட்வொர்க்கில் எந்த இடையூறும் ஏற்படாது, வரும் மாதங்களில் எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிவாயுவை வழங்க முடியும்’ என தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த கிரெம்ளின் செ…

  12. நேட்டோவில் இணையும் சுவீடன் – ஃபின்லாந்துக்கு, அமெரிக்கா முழுமையான ஆதரவு! நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் சுவீடன் மற்றும் ஃபின்லாந்துக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் இந்த வாரம் மேற்கத்திய பாதுகாப்பு கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தன. இது ஐரோப்பிய புவிசார் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. கூட்டணியில் சேர, இரு நாடுகளுக்கும் 30 நேட்டோ உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. ஆனால் நார்டிக் நாடுகளின் இந்த நடவடிக்கைக்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில் ஸ்வீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர…

  13. ஜேர்மனியில்... சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு, கட்டாய கொவிட்-19 தடுப்பூசி: நீதிமன்றம் ஒப்புதல்! ஜேர்மனியின் உயர் நீதிமன்றம், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கான ஆணையை அங்கீகரித்துள்ளது. மார்ச் நடுப்பகுதியில் நடைமுறைக்கு வந்த இந்த நடவடிக்கைக்கு எதிரான புகார்களை நிராகரித்ததாக மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) இதனை அறிவித்தது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், சுகாதாரப் பணியாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை, அவர்களது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. நோய் பரவல் அபாயம் நிறை…

  14. முள்ளிவாய்க்கால் யுத்தம் உட்பட ஈழ விடுதலைப் போரின் போது.. கூலிக்காக.. நேரடியாகப் பங்கேற்று எம் மக்களின் தலையில் குண்டு வீசிக் கொன்ற உக்ரேனியர்களின் நகரான மரியோபுல்.. முள்ளிவாய்க்கால் மாதத்தில்.. ரஷ்சியா வசம் வீழ்ந்தது. இதன் போது உக்ரைன் அரச நவ-நாசிய கொள்கையுடன் செயற்பட்டு வந்த கொடிய Azov உக்ரேனிய அரச பயங்கரவாதக் குழு முழுமையாக ரஷ்சியாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. நேட்டோ உட்பட்ட மேற்கு நாடுகள் அள்ளிக்கொடுத்த ஆயுதங்களையும் கையளித்துவிட்டு சரணடைந்துள்ளனர். கடைசி ஆள் இருக்கும் வரை போரிட்டு ரஷ்சியாவை தோற்கடிப்போம் என்று வீர வசனம் பேசி வந்த Azov உக்ரைன் அரச பயங்கரவாதிகள்.. தற்போது தமது உயிரை பாதுகாக்க சரணடையக் கேட்கப்பட்டதாக.. உக்ரைன் வீர வசனம்.. புளுகர் சனாதிபதி சமாளி…

    • 35 replies
    • 2.6k views
  15. ஈராக் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முற்றிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று - வார்த்தை தடுமாறி நகைக்க வைத்த புஷ் நாடொன்றின் தலைவரோ அன்றி முன்னாள் தலைவரோ என்ன கூறுகிறார் என்பதை முழு உலகமே உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் என்பது எவரும் அறியாதது அல்ல. அதிலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவம் மிக்கதாக இருக்கும். இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அந்நாட்டு நேரப்படி நேற்று புதன்கிழமை உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து அமெரிக்க டலஸ் பிராந்தியத்திலுள்ள தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் இதன்போது …

    • 4 replies
    • 426 views
  16. தஜிக்கிஸ்தான் எல்லையில் தலிபான்களிற்கும் தஜிக்கிஸ்தான் படையினருக்கும் இடையில் மோதல் ஆப்கானிஸ்தான் தஜிக்கிஸ்தான் எல்லையில் தலிபான்களிற்கும் தஜிக்கிஸ்தான் படையினருக்கும் இடையில் மோதல் இடைபெற்றுள்ளது. குண்டுஸ் பிராந்திய தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் வசிப்பவரின் கூற்றுப்படி ஷெர்கான் பந்தர் அருகே மோதல் ஏற்பட்டது மேலும் நான்கு மணி நேரம் நீடித்தது தலிபான்கள் முதல் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து வாய்மொழி மோதலுக்குப் பிறகு எல்லைக் காவலர் மோதல்கள் தொடங்கியதாக அவர் தொடர்ந்து கூறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் தாஜிக் அதி…

  17. ஐரோப்பாவில்.... தீவிரமாகும், குரங்கு அம்மை நோய்! பிரித்தானியா, போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன்படி, பிரித்தானியாவில் எட்டு மற்றும் போர்த்துகலில் 20 உட்பட மூன்று நாடுகளில் 36 சந்தேகத்திற்கிடமான தொற்றுகள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவிலும் ஒரு தொற்று பதிவாகியுள்ளது. லண்டன் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் குரங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் ஒன்று மட்டுமே நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய தொடர்புடையது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு முகவரகம் படி, அரிய நோய் இப்போது உள்ளூர் சமூகத்தில் பரவக்கூடும் என்பதை தற்போதைய சான்றுகள் சுட்டிக்காட்டுகின்ற…

  18. "புகுஷிமா அணு உலை" கழிவு நீரை... பசிபிக் பெருங்கடலில் திறந்து விட, ஜப்பான் முடிவு! கடந்த 2011ஆம் ஆண்டு சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை மூலம் கழிவு நீரை வெளியேற்றுவது அரசாங்கத்தின் திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவி…

  19. உக்ரைன் மீதான... ரஷ்யாவின் படையெடுப்பு, உலக உணவு நெருக்கடியை... விரைவில் ஏற்படுத்தக்கூடும்: ஐ.நா. எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நியூயோர்க்கில் நேற்று (புதன்கிழமை) பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், “விலைவாசி உயர்வு காரணமாக ஏழை நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மையை போர் மோசமாக்கியுள்ளது. உக்ரைனின் ஏற்றுமதிகள் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்றால், சில நாடுகள் நீண்டகாலப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும்” என கூறினார். போரால் உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து விநியோகம் நிறுத்தப்பட்டது. இது ஒரு காலத்தில் அதிக அளவு…

  20. ரஷ்யாவுடனான போரினால்... உக்ரைனில், 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு! உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்குப் பிறகு, அந்த நாட்டில் 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போரில் 4,062பேர் காயமடைந்தாகவும் உயிரிழந்துள்ளளோர் காயமடைந்தோரின் உண்மையான எண்ணிக்கை இதைவிட இன்னும் அதிகமாக இருக்கலாம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, உக்ரைனின் 31 இடங்களில் தாங்கள் நடத்திய தாக்குதலில் 270 ‘தேசியவாத’ படையினர் உயிரிழந்ததாகவும் அமெரிக்க பீரங்கிகள் உள்ளிட்ட 54 இராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. இதுவரை உக்ரைனின் 172 விமானங்கள், 125 ஹெலிகாப்டர்கள்,…

  21. யுக்ரேன் போரால் உலகம் உணவு சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் - எச்சரித்த ஐ.நா மட் மர்ஃபி பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் வரும் மாதங்களில் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் என ஐ.நா. எச்சரித்துள்ளது. இந்த போர் காரணமாக, ஏழை நாடுகளில் விலைவாசி உயர்வால் உணவு பாதுகாப்பின்மை மோசமடைந்திருப்பதாக, ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். யுக்ரேனிலிருந்து ஏற்றுமதிகள் போருக்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுக்கப்படாவிட்டால், பல ஆண்டுகளாக நீடிக்கும் பஞ்சத்தை சில நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் …

  22. 24 மணி நேரத்தில்... 694 உக்ரைன் போராளிகள், சரணடைவு – ரஷ்யா 694 உக்ரைன் போராளிகள் சரணடைந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலின் அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்கில் பதுங்கியிருந்தவர்களே இவ்வாறு சரணடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை முதல், தொழிற்சாலையில் தங்கியிருந்த மொத்தம் 959 போராளிகள் சரணடைந்துள்ளனர். அவர்களில் 80 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2022/1282631

    • 1 reply
    • 320 views
  23. ரஷ்யாவின், போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை... சேகரிக்கும் திட்டத்தை, அமெரிக்கா தொடங்கியுள்ளது உக்ரைனில் ரஷ்யா நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பிற அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்களை திரட்டி ஆய்வு செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அந்தவகையில் புதிய திட்டத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முன்னெடுக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. படையெடுப்பின் போது ரஷ்யப் படைகள் மேற்கொண்ட விடயங்கள் தொடர்பான ஆதாரங்களை ஆவணப்படுத்துதல், சரிபார்த்தல் மற்றும் கண்காணிப்புக்கள் இடம்பெறும் என அறிவித்துள்ளது. போர்க் குற்றங்களுக்கு ரஷ்யாவை பொறுப்பேற்க வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செயற்கைக்கோள் ம…

    • 1 reply
    • 213 views
  24. போருக்கு ஆதரவான... சின்னம் அணிந்ததற்காக, ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு தடை! பதக்கம் வழங்கும் மேடையில் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ஆதரவான சின்னத்தை அணிந்ததற்காக ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் கட்டாரில் நடந்த போட்டியில், வெண்கல பதக்கத்தை பெற்றுக்கொள்ளும் போது ரஷ்ய வீரர் தனது உடையில் “Z” என்ற சின்னத்தை பொறித்திருந்தார். பதக்கம் பெறும் மேடையில் தங்கப் பதக்கம் வென்ற உக்ரேனிய வீரர் அவர் அருகில் நின்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் உள்ள ரஷ்ய போர் வண்டிகள் மற்றும் வாகனங்களில் Z என வர்ணம் பூசப்பட்டு, போருக்கு ரஷ்யர்களால் அனுப்பப்படுகின்றது. இந்நிலையில் ஜிம்னாஸ்டிக்ஸ் நெறிமுறைகளை 20 வயதா…

    • 1 reply
    • 216 views
  25. உக்ரைனுக்கு... நிதி உதவியை அதிகரிக்குமாறு ,அமெரிக்க கருவூல செயலாளர்... நட்பு நாடுகளிடம் கோரிக்கை உக்ரைனின் நட்பு நாடுகள் அவர்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ் பொருளாதார மன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் இந்த கோரிக்கையை விடுத்தார். அமெரிக்க செனட் சபை 40 பில்லியன் டொலர் இராணுவ மற்றும் மனிதாபிமான உதவியை வழங்க தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் மீதான இறக்குமதி வரிகளை கட்டம் கட்டமாக தடை செய்யலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். https://athavan…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.