உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
இந்த ஆண்டில்... 14வது சோதனை : பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது வடகொரியா வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது என தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. பியோங்யாங்கின் சுனான் பகுதியில் இருந்து மதியம் 12:03 மணிக்கு (03:03 GMT) ஏவப்பட்டதை சியோலின் கூட்டுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை 780 கிமீ உயரத்திலும், மாக் 11 வேகத்திலும் 470 கிலோமீட்டர் தூரம் சென்றதாகவும் சியோலின் கூட்டுத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சோதனை இந்த ஆண்டு வட கொரியா நடத்திய 14 வது ஆயுத சோதனை என அறிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா 2017 ஆம் ஆண்டிலிருந்து கடந்த மாதம் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் …
-
- 0 replies
- 122 views
-
-
மரியுபோலில் இருந்து... 20 பொதுமக்கள், வெளியேறினர்! உக்ரைன் மரியுபோலில் உள்ள உருக்கு தொழிற்சாலை பிரதேசத்தை சேர்ந்த 20 பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். உக்ரைனின் தெற்கு நகரம் தொடர்ந்தும் அந்த நாட்டு படையினரின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த வாரம், ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் உத்தரவிற்கு அமைய உக்ரைனின் பாரிய தொழில்துறைகளை கொண்ட பிரதேசம் ரஷ்ய படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. இந்த நிலையில் 20 பொதுமக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அந்த வளாகத்தில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அகப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279405
-
- 7 replies
- 755 views
-
-
உக்ரைன் நாடாளுமன்றத்தில்... உரையாற்றும், பிரதமர் பொரிஸ்! உக்ரைன் நாடாளுமன்றத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றவுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததற்கு பிறகு உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் உலகத் தலைவர் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆவார். பதிவுசெய்யப்பட்ட உரையில், கொடுங்கோன்மைக்கு எதிரான உக்ரைனின் எதிர்ப்பைப் பாராட்டி, ரஷ்யாவிற்கு எதிரான நாட்டின் தற்போதைய பாதுகாப்பிற்கு ஆதரவாக 300 மில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை பிரதமர் அறிவிப்பார். மேலும், பிரதமர் உக்ரைனின் சிறந்த மணிநேரத்தை பாராட்டுவார் என்றும், தங்கள் நண்பர்களிடையே இருப்பதில் பிரித்தானியா பெருமிதம் கொள்கிறது என்றும் வலியுறுத்துவா…
-
- 1 reply
- 252 views
-
-
அமெரிக்காவின்... பெலோசியை, கியூவில் சந்தித்ததாக... உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு கியூவில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். சுதந்திரத்துக்கான உக்ரேனியர்களின் போராட்டத்திற்கு நன்றி தெரிவித்த பெலோசி, போராட்டம் முடிவும் வரை தமது ஆதரவு இருக்கும் என்றும் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1279375
-
- 7 replies
- 397 views
-
-
ரஷ்யாவின் ரோந்து கப்பல்கள் இரண்டை... தாக்கி அழித்துள்ளதாக, உக்ரைன் தெரிவிப்பு! கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல்கள் இரண்டை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் இராணுவ ஜெனரல் வலேரி ஸலுஸ்னி தெரிவித்துள்ளார். ஸ்மினி (பாம்பு) தீவு அருகே ரஷ்யாவின் ராப்டார் பிரிவு படகு இரண்டை, ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதாக அவர் தெரிவித்தார். எனினும், இதுகுறித்து ரஷ்யா எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, கிழக்கு டோன்யெட்ஸ்க் பகுதியில் வான் வழித் தாக்குதலில் உக்ரைனின் மிக்-29 ரக போர் விமானத்தை அழித்துள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்ய வான்படை இரண்டு ஏவுகணைகளையும் 10 ஆளில்லா விமானங்களை தாக்கி அழித்துள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பு அதிகாரி இகோர் …
-
- 0 replies
- 185 views
-
-
இரண்டு, உக்ரைன் குண்டுவீச்சு விமானங்களை... சுட்டு வீழ்த்தியதாக, ரஷ்யா அறிவிப்பு இரண்டு உக்ரேனிய Su-24m குண்டுவீச்சு விமானங்களை ஒரே இரவில் கார்கிவ் பகுதியில் சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களையும் ஒடேசாவிற்கு அருகிலுள்ள இராணுவ விமானநிலையத்தில் ஓடுபாதையை அழித்ததாகவும் கூறியுள்ளது. ஒடேசாவின் பிரதான விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஓடுபாதையை ரஷ்யா அழித்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியது இந்நிலையில் உயர் துல்லியமான ஓனிக்ஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. https://athavannews.com/20…
-
- 0 replies
- 232 views
-
-
நீண்ட காலத்திற்கு... கெர்சன் நகரில், வலுவான செல்வாக்கை செலுத்த... ரஷ்யா திட்டம் – பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு மொஸ்கோ சார்பு நிர்வாகத்தை நிறுவுவதன் மூலம் கெர்சன் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா தனது கட்டுப்பாட்டை சட்டப்பூர்வமாக்க முயன்றதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் கட்டுப்பாட்டிற்கு திரும்புவது “சாத்தியமற்றது” என அறிவித்துள்ள புதிய அரசாங்கம் ரஷ்ய ரூபிள் நாணய மாற்றத்தையும் அறிவித்துள்ளது. கெர்சனில் நீண்ட காலத்திற்கு வலுவான அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை செலுத்துவதற்கான ரஷ்ய நோக்கத்தை குறிப்பதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. கெர்சன் மற்றும் அதன் போக்குவரத்து இணைப்புகள் மீதா…
-
- 0 replies
- 179 views
-
-
ஐரோப்பா முழுவதும்... எதிர்வரும் வாரங்களில், பிரமாண்ட இராணுவப் பயிற்சியில் ஈடுபட... நேட்டோ திட்டம்! நேட்டோ நாடுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்ட இராணுவப் பயிற்சியில் ஈடுபட அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதில் நேட்டோவில் உறுப்பினராக இல்லாத ஃபின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்கின்றன. ஃபின்லாந்தில் இந்தப் பயிற்சி விரைவில் தொடங்கவுள்ளது. அதில் அமெரிக்கா, பிரித்தானியா, எஸ்தோனியா, லாட்வியா ஆகிய நாடுகள் ஃபின்லாந்து இராணுவத்துடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடும். அடுத்தகட்டமாக, 4,500 வீரர்கள் பங்கேற்கும் ‘அதிவிரைவு பதிலடி’ என்ற பயிற்சி வடக்கு மெசடோனியாவில் நடைபெறும். இதில் அமெரிக்கா, பிரித்தானியா, அல்பேனியா, பிரான்…
-
- 1 reply
- 524 views
-
-
போர் தொடங்கியதற்கு பிறகு... "66.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்" வருமானம், ஈட்டிய ரஷ்யா! உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விற்பனை மூலம் ரஷ்யா மொத்தம் 66.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் ஒட்டுமொத்தமாக எரிவாயு, கச்சா எண்ணெய், நிலக்கரி மூலம் ரஷ்யாவுக்கு கிடைத்த மொத்த வருவாயில் 71 சதவீதம் 44 பில்லியன் யூரோ ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்தே வந்துள்ளது. இதில், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி போர் தொடங்கியது முதல் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் வாங்கிய ஐரோப்பிய நாடாக ஜேர்மனி விளங்குகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து 9.1 பில்லிய…
-
- 4 replies
- 509 views
-
-
தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் மீது... ரஷ்யா, ஏவுகணை தாக்குதல் ! தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா நேற்று சனிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில பெண்களும் குழந்தைகளும் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்த மரியுபோலில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை கிரிமியாவிலிருந்து ஏவப்பட்ட ரஷ்ய ஏவுகணை மேற்கில் உள்ள ஒடேசா நகரின் பிரதான விமான நிலையத்தில் ஓடுபாதையை அழித்ததாக பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார். குறித்த மோதல் காரணமாக நகரங்கள் தரைமட்டமாகி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, 5 மில்லியனுக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஒன்பது வார தாக்குதலில் தலைந…
-
- 0 replies
- 238 views
-
-
சீன அரசாங்கம் அறிவித்துள்ள, முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை – தாய்வான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் அறிவித்துள்ள முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை என தாய்வான் அறிவித்துள்ளது. மேலும் குறித்த கட்டுப்பாடுகளை தாய்வான் பின்பற்றாது என்றும் பிரதமர் சு செங்-சாங் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல்களுடன் கொரோனா தொற்றினை முன்னர் தாய்வான் கட்டுப்படுத்தியிருந்தது. இருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உள்நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாட்டால் சுமார் 75,000 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் சில கட்டுப்பாடுகளை தாய்வான் தளர்த்திவரும் நிலையில் அண்டை நாடான சீனா, இதற்க…
-
- 0 replies
- 225 views
-
-
உக்ரைன் போரில்... முதல் பிரித்தானிய பிரஜை, உயிரிழப்பு: ஒருவரைக் காணவில்லை! உக்ரைனில் நடந்துவரும் போரில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இரண்டாவது நபரைக் காணவில்லை என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. உக்ரைனிய படையினருக்கு ஆதரவாக களத்தில் போராடிய ஸ்கொட் சிப்லி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளார். அத்துடன் உக்ரைனிய மோதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் பிரித்தானிய நாட்டவர் இவராவார். எனினும், இருவரின் அடையாளத்தையும் வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை. சிப்லியின் மரணம் மற்றும் இரண்டாவது நபர் எப்படி அல்லது எப்போது காணாமல் போனார் என்ற விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இராஜதந்திர வட்டாரங்க…
-
- 1 reply
- 310 views
-
-
போரில்... உக்ரைனுக்கு உதவ, பைடன்... "33 பில்லியன் டொலர்கள்" முன்மொழிவு! போரில் உக்ரைனுக்கு உதவ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காங்கிரஸிடம் இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியாக 33 பில்லியன் டொலர்கள் கோரியுள்ளார். அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது மிக முக்கியமானது என பைடன் கூறினார். இது உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள உதவும் என்று அவர் தெரிவித்தார். இந்த முன்மொழிவில் 20 பில்லியன் டொலர்கள் இராணுவ உதவி, 8.5 பில்லியன் டொலர்கள் பொருளாதார உதவி மற்றும் 3 பில்லியன் டொலர்கள் மனிதாபிமான உதவி ஆகியவை அடங்கும். இது மலிவானது அல்ல என கூறிய பைடன், ஆக்கிரமிப்புக்கு தாம் அனுமதித்தால் அது அதிக செலவாகும் என சுட்டிக்காட்டினார். …
-
- 0 replies
- 155 views
-
-
இரண்டு பிரித்தானிய... தன்னார்வலர்கள், ரஷ்ய இராணுவத்தால் சிறைபிடிப்பு! உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள், ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டதாக உதவி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் பால் யூரே மற்றும் டிலான் ஹீலி ஆகிய இருவரும் தடுத்து வைக்கப்பட்டதாக இலாப நோக்கற்ற பிரசிடியம் வலையமைப்பு கூறியது. வெளியுறவு அலுவலகம், அவசரமாக கூடுதல் தகவல்களைத் தேடும் என்று கூறப்படுகிறது. யூரேயின் தாயார், அவருக்கு டைப்- 1 நீரிழிவு நோய் இருப்பதால், அவருக்கு இன்சுலின் தேவைப்படுவதால், அவரது நலனில் மிகவும் கவலையாக இருப்பதாகக் கூறினார். இதனிடையே, ரஷ்ய ராணுவத்திடம் சர…
-
- 0 replies
- 170 views
-
-
ஐரோப்பாவில்... பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட, 151 சிறுவர்களுக்கு ‘சல்மோனெல்லா’ வைரஸ்! ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்கள் ‘சல்மோனெல்லா’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. இந்த சாக்லேட்டுகள் 113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சால்மோனெல்லா பெல்ஜிய சாக்லேட் மூலம் பரவுகிறது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இந்த சாக்லேட்டை சாப்பிட்ட 150 குழந்தைகளுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக 11 நாடுகளில்…
-
- 0 replies
- 192 views
-
-
காபூல், மசூதியில்... குண்டுத்தாக்குதல்: 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! மேற்கு காபூலில் உள்ள மசூதியில் பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தலைநகரின் மேற்கில் உள்ள கலீஃபா சாஹிப் மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொழுகைக்குப் பிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக உட்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் பெஸ்முல்லா ஹபீப் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் ரமழானின் போது பொதுமக்கள் இலக்குகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களில் இது சமீபத்தியது. சன்னி மசூதியில் வழிபாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஜிக்ர் என்று அழைக்கப்படும் ஒரு சபைக்…
-
- 0 replies
- 98 views
-
-
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது ரஷ்யா அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மட் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது. வடக்கு ரஷ்யாவில் உள்ள பிளெசெட்ஸ்க் காஸ்மோட்ரோம் (Plesetsk Cosmodrome) விண்வெளி மையத்திலிருந்து ஏவுகணையை செலுத்தி ரஷ்ய இராணுவம் சோதித்து பார்த்தது. சர்மட் ஏவுகணை சாத்தானின் 2வது பாகம் என மேற்கு நாடுகளின் ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி புதின், சர்மட் ஏவுகணையை யாராலும் வெல்ல முடியாது என்றும் உலகின் எந்த பகுதியையும் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது என்றார். தொலைகாட்சியில் பேசிய ஜனாதிபதி புதின், தனித்துவமான ஏவுகணை ரஷ்ய இராணுவத்தை…
-
- 104 replies
- 6.2k views
-
-
போலந்துக்கும், பல்கேரியாவுக்கும்... எரிவாயு விநியோகத்,தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு! ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான போலந்துக்கும் பல்கேரியாவுக்கும் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. எரிவாயுவுக்கான பணத்தை ரஷ்ய நாணயமான ரூபிளில் வழங்க அந்த நாடுகள் மறுப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அரசு எண்ணெய் நிறுவனமான கேஸ்ர்போம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் எரிவாயுவுக்கான தொகையை ரூபிளில் செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், அவ்வாறு தொகை செலுத்தாத போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் புதன்கிழமை முதல் நிறுத்த…
-
- 2 replies
- 319 views
-
-
உக்ரைனுக்கு... இராணுவ கூட்டணி, ஆதரவளிக்க... தயாராகவுள்ளது: நேட்டோ! உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவிற்கு எதிராக, இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்சில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நீண்ட காலத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இந்தப் போர் பல மாதங்கள், ஆண்டுகள் நீடிக்கும். நீடிக்கும் சாத்தியம் உள்ளது. ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இராணுவக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறதா என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது, மேலும் ஃபின்லாந்து மற்றும் சுவீடன் அமைப்பில் சேர வரவ…
-
- 12 replies
- 669 views
-
-
ஐ.நா. பொதுச்செயலாளர் வருகையின்போது உக்ரேனில் ஏவுகணை தாக்குதல் ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரேன் தலைநகர் கீவ் நகருக்கு வந்தபோது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 2 நாட்களுக்கு முன் ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, மொஸ்கோவில், சந்தித்து பேசிய ஆன்டனியோ குட்டரெஸ் தற்போது உக்ரேன் வந்துள்ளார். SERGEI SUPINSKY/AFP VIA GETTY IMAGES தலைநகர் கீவில், ஜனாதிபதி செலன்ஸ்கி உடன் இணைந்து அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போரை நிறுத்த தவறி விட்டதற்காக வருத்தம் தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அங்கிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்கள் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் ஏவுகணைகளை…
-
- 1 reply
- 227 views
-
-
எரிசக்தி செலவுகள் அதிகரிப்பு: பிரித்தானியாவில், கார் உற்பத்தி குறைந்தது! உலகளாவிய விநியோகச் சங்கிலி பிரச்சினைகளுடன் உற்பத்தியாளர்கள் போராடுவதால், பிரித்தானியாவின் கார் உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட 2022ஆம் ஆண்ட முதல் மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 100,000 குறைவான கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் கருத்தின் படி, உற்பத்தி கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கமானது, கணினி சிப்களின் உலகளாவிய பற்றாக்குறை மற்றும் உற்பத்தியாளர்களுக்கான எரிசக்தி செலவுகள் அதிகரிப்புடன் சரிவை இணைத்துள்ளது. ஆண்டின் முதல் மூன்று …
-
- 2 replies
- 306 views
-
-
நாகேந்திரன் தர்மலிங்கம்: போதைப்பொருள் வழக்கில் அறிவுசார் மாற்றுத்திறனாளி நாகேந்திரன் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHARMILA போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார். அவரைக் காப்பாற்ற கடைசி வரை போராடிய அவரது குடும்பத்தார் மிகுந்த சோகத்தில் மூழ்கி உள்ளனர். முன்னதாக, நேற்று தன் மகனைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக நாகேந்திரனின் தாயார் பாஞ்சாலை சுப்ரமணியம் தாக்கல் செய்த மனுவை சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிம…
-
- 15 replies
- 1.1k views
- 1 follower
-
-
உக்ரைன் போரில், தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும்... மின்னல் வேக பதிலடியை, எதிர்கொள்ளும்: ரஷ்யா எச்சரிக்கை! உக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் மின்னல் வேகமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ‘யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து ஆயுதங்களும் எங்களிடம் உள்ளன. தேவைப்பட்டால் நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவோம்’ என புடின் மேலும் கூறினார். இது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. உக்ரைனின் நட்பு நாடுகள் ஆயுத விநியோகத்தை முடுக்கிவிட்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யாவை தோற்கடிப்பதை உறுதி செய்வதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஆனால், கிழக்கில் ரஷ்யா தனது முயற…
-
- 0 replies
- 240 views
-
-
ஐரோப்பிய – சீன தலைவர்கள் பேச்சு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கல் மற்றும் ஐரோப்பிய ஆணையக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஆகியோருடன் சீனப் பிரதமர் லீ கெஹியாங் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கையும் சந்தித்தனர். ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதித்துள்ளன. இது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் உலகின் பொருளாதாரம், அத்துடன் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தன. ‘ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் உக்ரைனில் ரஷ்யாவின் போரை விரைவில் நிறுத்துவதில் இணைந்து செ…
-
- 0 replies
- 241 views
-
-
புட்டினை... சந்தித்து பேசுகின்றார், ஐ.நாவின் பொதுச்செயலாளர் ரஷ்யா சென்றுள்ள ஐநா.சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் இன்று புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். முன்னதாக அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவுடன் மொஸ்கோவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். 60 நாட்களைக் கடந்தும் நடைபெற்று வரும் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தி சமாதானம் காண்பதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குட்டாரஸ், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகள் மூலமாக அமைதித் தீர்வு காண்பதற்கு ஐநா.சபை மிகுந்த முயற்சிகள் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களை குறை…
-
- 0 replies
- 193 views
-