உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்திலும் வேல்ஸிலும் 105 மைல் வேகத்தில் காற்று வீசியதால் பல விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் முக்கியமான பாலங்கள் மூடப்பட்டன. லண்டன் கட்விக் விமான நிலையத்திற்கு வர வேண்டிய 20 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதுடன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான 60 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 5,000 இல்லங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் 23 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று மிகப் பெரிய பாலங்கள் மூடப்பட்டுள்ளன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130508/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 296 views
-
-
பிரிட்டனில் உள்ள Hertfordshire என்ற பகுதியில் ஒரு இளம்பெண் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து அவருடைய வீட்டில் அதிரடி சோதனை செய்த போலீஸார் அவரையும் அவருடைய காதலரையும் கைது செய்தனர். Tulisa Contostavlos என்ற 24 வயது இளம்பெண், Hertfordshire பகுதியில் இருக்கும் தனது வீட்டில் இருந்து ஒரு ஹேண்ட்பேக் நிறைய கோகைன் என்ற போதைப்பொருளை கொண்டு செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அதிரடியாக செயல்பட்ட போலீசார் விரைந்து சென்று Tulisa Contostavlos என்ற இளம்பெண்ணையும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவருடைய காதலர் 34 வயது Mike என்பவரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து £800 கோகைனும் கைப்பற்றப்பட்டது. http://www.thedipaar.com/new/news/news.php…
-
- 0 replies
- 338 views
-
-
இங்கிலாந்து முழுவதும் சுமார் 18 மில்லியன் போலி காண்டம்கள் சட்டத்திற்கு புறம்பாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தேவையில்லாத கர்ப்பங்களும், பால்வினை நோய் பரவுவதற்கான அபாயம் இருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இங்கிலந்து அரசின் சுகாதாரத்துறை அதிகாரி நேற்று விடுத்த ஒரு எச்சரிக்கை அறிக்கையில், நாடு முழுவதும் சுமார் 18 மில்லியன் தரம் குறைவாக உருவாக்கப்பட்ட போலி காண்டம்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், இதை உபயோகிப்பவர்களுக்கு எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், மேலும் தேவையில்லாத கர்ப்பங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற போலி காண்டம்களை கடைகளில் விற்பனை செய்வதை தடை செய்து, காண்டம் விற்பனையை ஒ…
-
- 8 replies
- 770 views
-
-
இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி! இந்த வாரம் முதல் இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தனது புதுப்பிப்பை வெளியிட்ட பிரதமர், தொலைக்காட்சி வாயிலாக அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில், ‘யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம், ஓமிக்ரோனின் அலை வருகிறது. மாத இறுதிக்குள் பூஸ்டர்களை விரும்பும் அனைத்து பெரியவர்களுக்கும் வழங்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர்களில் கவனம் செலுத்த சில மருத்துவ சந்திப்புகளும் ஒத்திவைக்கப்படும். புதிய மாறுபாட்டான ஒமிக்ரோன் உடனான போரில் நாங்கள் இப்போது அவசரநிலையை எதிர்கொள…
-
- 0 replies
- 230 views
-
-
இங்கிலாந்து நாட்டில் உள்ள Bridgend, South Wales என்ற இடத்திலுள்ள ஒரு குடும்பத்தில், சில மணி நேரங்களில் அடுத்தடுத்து மூன்று நபர்கள் வெவ்வேறு சம்பவங்களில் மரணம் அடைந்த ஒரு சோக சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பாகி உள்ளது. Hillary Dennis என்ற பெண்ணின் மகள் Caryl உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பலனளிக்காமல் இறந்துவிட்டதாக முதலில் தகவல் வந்தது. இந்த செய்தி கிடைத்த அதிர்ச்சியில் அவர் உறைந்து இருந்த போது அவருடைய மகனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் Hillary Dennis அவர்களில் சகோதரி ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக தெரிய வந்தது. அதையடுத்து சிலமணி நேரங்களில் தொலைபேசியில் சகோதரியின் மரண செய்தியை கூறிய மகன் Nigel அவர்களும் விப…
-
- 1 reply
- 316 views
-
-
இங்கிலாந்தில் தற்போது நாகரீகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளிடம் “ மேக்கப்” மோகம் பெருமளவில் வளர்ந்து வருகிறது. முக அலங்காரம், கைவிரல் நகங்களில் ஒப்பனை செய்தல், கண் புருவங்களை சீரமைத்தல், உதட்டுக்காயம் பூசுதல், உடலில் ஒளிரும் தன்மையுடைய ஆடைகளை அணிதல், தற்காலிகமாக பச்சைகுத்தி கொள்ளுதல் போன்றவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த “மேக்கப்“ மோகம் 3 வயது குழந்தைகளில் இருந்து இளம் பெண்கள் வரை பரவியுள்ளது.அவர்களுக்கு பெற்றோர் அதிக அளவு செல்லம் கொடுப்பதும் தேவைக்கு அதிகமாக பணம் கொடுப்பதுமே காரணம் என்று கூறப்படுகிறது. இளம் பெண்கள் நாகரீகத்தில் அளவு கடந்த ஆர்வம் காட்டுவதால் அழகு சாதன பொருட்கள் அங்கு வியாபாரம் அதிகரித்துள்ளது. இளம்பெண்களின் மேக்கப் மோக…
-
- 0 replies
- 670 views
-
-
இங்கிலாந்தில் 530 வருடங்களுக்கு முன் இறந்த மூன்றாம் ரிச்சர்ட் என்ற மன்னரின் உடல் நேற்று தான் முறையாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பிரான்சில் இருந்து இங்கிலாந்து வந்து குடியேறிய பிளான்டஜெனட் என்ற ஒரு பிரிவினர் அங்கு லீசெஸ்டர் என்ற பகுதியை 1154 முதல் 1485 வரை ஆண்டு வந்திருக்கிறார்கள். அந்த வம்சத்தின் கடைசி மன்னராக இருந்த மூன்றாம் ரிச்சர்ட், 1485 ல் நடந்த ஒரு போரில் இறந்துவி்ட்டார். அவரது உடலை அப்போது உள்ளவர்கள், ஒரு சவப்பெட்டி கூட் வைத்திருக்காமல்,ஒரு மரியாதையும் செய்யாமல் அப்படியே எங்கோ புதைத்திருக்கிறார்கள். 2012-ல் ஒரு புதைபொருள் ஆராட்சியாளர், தற்செயலாக இவரது எலும்புகளை, கார்பார்க்கிங் ஒன்றின் அடியில் கண்டுபிடித்து எடுத்து லீசெஸ்டன் பல்கலைக்கழகத்தில் கொ…
-
- 4 replies
- 472 views
-
-
இங்கிலாந்தில் 67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை மருமகளிடம் ஒப்படைத்தார் இளவரசர் பிலிப் இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99), எடின்பரோ கோமகன் என்று அழைக்கப்பட்டு வந்தார். அந்த அடிப்படையில் அவர் 67 ஆண்டு காலமாக இங்கிலாந்து ராணுவத்தின் மிகப்பெரிய காலாட்படையான ரைபிள் படையின் தலைமை கர்னல் என்ற ராணுவ பொறுப்பை வகித்தார். கடந்த 2017-ம் ஆண்டு வயோதிகத்தின் காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விண்ட்சர் கோட்டையில் நடந்த ராணுவ விழாவில் அவர் ராணுவ பொறுப்பில் இருந்தும் முறைப்படி விலகினார். அந்த பொறுப்பை அவர் தனது மருமகளும், இளவரசர் சார்லஸ்சின் மனைவியுமான கமிலாவி…
-
- 0 replies
- 566 views
-
-
இங்கிலாந்தில் அனைத்து கொவிட் சட்டங்களும் அடுத்த மாதம் நிறைவுக்கு வருகின்றது: பிரதமர் பொரிஸ்! பிரித்தானியாவில் அமுலில் உள்ள அனைத்து தற்காலிக கொவிட் சட்டங்களும், அடுத்த மாதம் நிறைவுக்கு வருமென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இதற்கமைய, பொது இடங்களில் கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கொண்டு செல்லுதல், கல்வி நிலையங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் ஆகியவை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் முடிவுக்கு வரும். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா தடுப்பு என்பதை அரசின் கட்டாயத்தின் பேரிலான நடவடிக்கை என்பதிலிருந்து தனிநபரின் பொறுப்பாக மாற்றும் எனது உத்தியின் ஒரு பகுதியாக தற்காலிக சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்படும். இதன்மூலம் நமது சுதந்திரத்தை இழக்காமல் …
-
- 1 reply
- 212 views
-
-
இங்கிலாந்தில் ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை பிப் 7, 2013 அலுவலகங்களில் பணி புரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இது உலகம் முழுவதும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தில் புதுவிதமாக ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதற்காக பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்ப நலச்சட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. பிறந்த குழந்தையை வளர்ப்பதில், தந்தைக்கும் பங்கு உண்டு என்பதால் தாயுடன் அவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க இச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/26651/64//d,fullart.aspx
-
- 20 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்தில் ஆதரவை இழக்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்! இங்கிலாந்து பிரதமர் (Keir Starmer ) கீர் ஸ்டார்மரின் தலைமை மற்றும் வரவிருக்கும் வரவு செலவு திட்டம் குறித்து இங்கிலாந்தில் அரசியல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது வாக்காளர்களின் விருப்பங்களை மீறியும் ஸ்டார்மர் அடுத்த 2029 ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தொழில் கட்சியினரை வழிநடத்தப் போவதாக வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஸ்டார்மரை ஆதரித்த வாக்காளர்களில் சுமார் 23% பேர் அவர் தற்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் வரவுசெலவு திட்டம் மற்றும் மே மாதத் தேர்தல்கள் அவரது புகழுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும், பல விமர்சனங்கள் எழுந்து…
-
- 0 replies
- 122 views
-
-
ஐரோப்பிய செய்தியாளர் - இங்கிலாந்தில் இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள், பூமி அதிர்ச்சியை ஒத்ததாக அமைந்துள்ளதாக ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைகெல் வெ(க)ரேஜ் குறிப்பிட்டுள்ளார். ஜரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான அரசியற் கொள்கையோடு, வெளி நாட்டவர்களின் குடியேற்றத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிற்கும் ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி, இது வரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 100 ற்கும் சற்று அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது வரையில் ஐக்கிய ராஜ்ய அரசியலில் சுதந்திரக்கட்சி, பழமைக்கட்சி, தொழில்கட்சி என மூன்று பெரும் கட்சிகள் அதிகாரத்திற்குப் போட்டியிட்ட காலம் மாறி, நான்காவது புதிய கட்சியும் இணைவதாக அரசியல் வட்டாரம் கருத்துத் தெரிவித்துள்ளது. அத்தோட…
-
- 21 replies
- 1.5k views
-
-
இங்கிலாந்தில் இந்திய மருத்துவா்களுக்கான முக்கிய வழக்கு விசாரணை நாளை துவக்கம். [Monday, 2014-04-07 17:21:04] இங்கிலாந்தில் பொது மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் தொழிலைத் தொடங்கும் முன்னர் மருத்துவத் திறன் மதிப்பீடு என்ற தேர்வினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அந்நாட்டின் ராயல் மருத்துவக் கல்லூரியின் பொது பயிற்சியாளர்கள் சங்கமும், பொது மருத்துவக் கவுன்சிலும் இந்தத் தேர்வினை நடத்துகின்றன.இந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் இந்தியப் பின்னணி கொண்ட மருத்துவர்கள் இங்கிலாந்து நாட்டவர்களை விட நான்கு மடங்கு அதிகமாகவும், சர்வதேச அளவில் தேர்வுக்கு வரும் மாணவர்கள் 16 மடங்கு அதிகமாகவும் தோல்வியை சந்திக்கின்றனர். எனவே இவர்களிடம் நிறவெறிப் பாகுபாடு காணப்படுவதாக இந்…
-
- 0 replies
- 455 views
-
-
[size=4]இங்கிலாந்தில் இந்திய வம்சாவழி அமைச்சர் ஒருவர்பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். [/size] [size=4]இங்கிலாந்தில்பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிநடைபெற்று வருகிறது.கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்டஇந்திய வம்சாவழியை சேர்ந்த நான்கு பேர் எம்.பிக்களாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் சைலேஷ்வாரா என்பவர்அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.[/size] [size=4]இந்நிலையில் இந்தியர்களிடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சைலேஷவாரா [size=5]இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராக வர வாய்ப்பு உள்ளதாக[/size] குறிப்பிட்டார். இதனையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன்சைலேஷ்வாராவின் பதவியை பறித்து உத்தரவிட்டார். [/size]…
-
- 1 reply
- 637 views
-
-
இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு இன வெறி கும்பல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது. நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், இந்தியர்களின் வீடுகளை குண்டு வைத்து தகர்ப்போம் என்று மிரட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது இன வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், இங்கிலாந்திலும் இந்தியர்கள் மீது இன வெறி கும்பல் பாயத் தொடங்கி உள்ளது. இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, வடக்கு அயர்லாந்து. அங்குள்ள பெல்பாஸ்ட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் சிறு தொழில் செய்பவர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் உள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் அவர்க…
-
- 9 replies
- 2.2k views
-
-
இங்கிலாந்தில் இரத்தாகிறது பயண கட்டுப்பாடுகள் இங்கிலாந்து நாட்டில் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், நாட்டில் நுழைவதற்கு முன் பயணிகள் கட்டாய இருப்பிட படிவத்தை நிரப்பித்தரவேண்டிய தேவை உட்பட அனைத்து பயண கட்டுப்பாடுகளும் இரத்துச் செய்யப்படுகின்றன. இங்கிலாந்துக்கு பயணிப்பவர்கள் இனிமேல் பயண விவரங்களை சமர்ப்பிக்கவோ, தடுப்பூசி போடப்பட்டிருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ளவோ தேவையில்லை. இங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறை மாதம் என்பதால், அதற்கு ஏற்றவகையில் கூடுதல் தேவைகள் இல்லாமல் குடும்பங்கள் பயணத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் 86 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத…
-
- 0 replies
- 353 views
-
-
இங்கிலாந்தில் இருந்து சீனாவுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடக்கம இங்கிலாந்தில் இருந்து சீனாவுக்கு சரக்கு ரெயில் போக்குவரத்து தொடக்கம். அதில் 32 கண்டெய்னர் ரெயில் பெட்டிகள் பொருத்தப்பட்டன. அதே நேரத்தில் கப்பலை விட ரெயில் மூலம் மிக வேகமாக சீனாவை சென்றடைய முடியும். லண்டன்: ‘சில்க்ரோடு’ திட்டத்தின் கீழ் வர்த்தகத்தை மேம்படுத்த இங்கிலாந்து - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி இரு நாடுகளுக்கு இடையே ரெயில் மூலம் சரக்குகளை எடுத்து சென்று விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இங்கிலாந்த…
-
- 0 replies
- 346 views
-
-
இங்கிலாந்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான டேவிட் மிலிபான்ட் லேபர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகல்! [Thursday, 2013-03-28 07:56:08] இங்கிலாந்தின் லேபர் கட்சியியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபேன்ட் (47), தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர், நியூயார்க் செல்ல உள்ளார். பின்னர், அங்கு உள்ள சர்வதேச மீட்புக் குழு (ஐஆர்சி) என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். சர்வதேச மீட்புக் குழுவில் இணைந்து பணியாற்றுவதை, உலகம் முழுவதும் ஆதரவற்ற மக்களுக்கு பணியாற்ற கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறேன் என்று டேவிட் மிலிபேன்ட் தெரிவித்தார். சர்வதேச மீட்புக் குழு, அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் 1…
-
- 0 replies
- 663 views
-
-
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் ஒரே நாளில் 500 பேர் வரையில்பலியாகி உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: கடந்த மார்ச் 31 வரையில் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 2,352 பேர் பலியாகி உள்ளனர். தற்போது வரையில் 29,474 பேர் தங்களை பரிசோதித்துள்ளனர். இது கடந்த முந்தைய நாளைவிட 4, 324 பேர் அதிகமாகும்.நாட்டில் முதன் முறையாக ஒரேநாளில் பலியானோர் எண்ணிக்கை 563ஆக ஆனது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் அரச குடும்பத்தையும் தாக்கிய. தாக்குதலுக்கு உள்ளான இளவரசர் சாரலஸ் இது குறித்துவீடியோவில் கூறி இருப்பதாவது: இந்த வைரஸ் தாக்க…
-
- 0 replies
- 276 views
-
-
Nov 2, 2025 - 08:18 AM இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தை அடுத்து, அந்த ரயிலின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நகரத்தின் பல வீதி…
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
இங்கிலாந்தில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்குள், 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் காய்மடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து, கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுகிறது. எனவே, பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடிக் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று காலை, ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் பனி மூட்டத்தால் வழித்தடம் தெரியாமல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.திடீரென பனி மூடியதால் சாலையில் நகர முற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. வாகன ஓட்டிகள் என்ன நடக்கிறது என்பதை யூகிப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
லண்டன்: இங்கிலாந்தில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்குள், 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் காய்மடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து, கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுகிறது. எனவே, பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடிக் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கின்றன. அணிவகுத்த வாகனங்கள்.... இந்நிலையில் நேற்று காலை, ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் பனி மூட்டத்தால் வழித்தடம் தெரியாமல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. மோதிக் கொண்ட வாகனங்கள்... திடீரென பனி மூடியதால் சாலையில் நகர முற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன…
-
- 0 replies
- 479 views
-
-
இங்கிலாந்தின் கப்பல்படையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் ஊழியர்கள் நடத்திய துப்பாக்கி சண்டையில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சைபெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்த சவுத்தாம்ப்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நீர்மூழ்கி கப்பல் அணுமின் சக்தி அடிப்படையில் இயங்க கூடியது. 7ஆயிரத்து 500 டன் எடை கொண்டு ஒரு பில்லியன் பவுண்டு செலவில் கட்டப்பட்ட இந்த கப்பலில் 98பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தகப்பல் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின்பார்வைக்காக நிறுத்திவைக்கப்படுகிறது. சம்பவத்தன்று சவுத்தாம்ப்டன் நகருக்கு வந்த இந்த கப்பலில் மேற்கண்ட சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவத்தால் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை என்றும், இத…
-
- 0 replies
- 713 views
-
-
இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவரின் உடல் கால்பந்து மைதானம் அருகேயுள்ள கால்வாயில் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த சவுபிக் பால் என்ற அந்த மாணவர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருள் வடிவமைப்பு துறையில் பயின்று வந்தார். கால்பந்து மைதானத்தில் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்வதை பகுதி நேர வேலையாகவும் சவுபிக் பால் செய்து வந்தார். இந்தநிலையில் அவர் புத்தாண்டு தினத்தன்று திடீரென்று காணாமல் போனார். காணமல் போன சவுபிக் பாலை கண்டுபிடிப்பதற்காக, ப்ரீமியர் லீக் போட்டிகளின்போது, டிஜிட்டல் போர்டுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ருல்ட் டிராஃபோர்டு நகரில் உள்ள மான்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்து அணியின் மைதானம் அருகே கால்வாயில் அவரது …
-
- 1 reply
- 454 views
-
-
இங்கிலாந்தில் காவல்துறை உத்தியோகத்தர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இங்கிலாந்தின் டொன்காஸ்டர் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளானதில் காவல்துறை உத்தியோகத்தர் ஓருவர் காயமடைந்துள்ளார். கிலெவெலாண்ட் வீதியில் இடம்பெற்ற விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக சென்ற காவல்துறை உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத மூன்று நபர்கள் தாக்குதல் மேற்கொண்டனர் எனவும் தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் ஓரு பெண் உட்பட மூவiர் கைது செய்துள்ள காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து…
-
- 0 replies
- 232 views
-