Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 793 பேர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவை விட ஐரோப்பிய நாடான இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி 793 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒரே நாளில் பதிவான ஆக கூடிய மரண எண்ணிக்கை இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் கியுஸ்பி காண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் இதையடுத்து, நாட்டில் செயல்படும் முக்கியத்துவம் இல்லாத நிறுவனங்களை மூடும்படி உத்தரவிட்டுள்ளார். மே…

  2. இத்தாலியில் உள்ள கடாபிக்குச் சொந்தமான 7,500 கோடி ரூபா மதிப்பான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. லிபியா அதிபராக இருந்த மும்மர் கடாபிக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களை புதிதாக அமைந்துள்ள அரசு கைப்பற்றியுள்ளது. ஆடம்பர மாளிகைகள், தங்க, வைர நகைகள் மற்றும் கோடிக்கணக்கான பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கடாபியும், அவரது குடும்பத்தினரும் பல நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். அங்குள்ள பாங்குகளில் பணம் மற்றும் தங்க, வைர நகைகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவையும் கண்டுபிடித்து முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இத்தாலியில் கடாபியின் சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள அவரது ரூ. 7,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ம…

  3. இத்தாலியில் கொரோனா வைரஸால் பல பிராந்தியங்களை தனிமைப்படுத்திய அரசு! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகையானது இத்தாலியில் 79 ஆக உயர்வடைந்துள்ளது. இதனால் அந்நாட்டு பிரதமர் கியிசெப் கோன்டே நேற்று (சனிக்கிழமை) அவசரகால திட்டத்தை அறிவித்துள்ளார். இத்தாலியில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தாலியின் லோம்பார்டி மற்றும் வெனெட்டோவின் வடக்கு பிராந்தியங்களில் உள்ள பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த இரண்டு பிராந்தியங்களிலும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதேவேளை கொரோனா பரவியுள்ள குறித்த பகுதிகளுக்கு சிறப்பு அனுமதியின்றி …

  4. இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு அதிகரித்ததையடுத்து இராணுவம் களமிறக்கியது கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இத்தாலியில் அதிகரித்துள்ளது.இத்தாலியில் கொரோனா வைரஸின் கோரத் தண்டவத்தினால் ஒரே நாளில் 627 உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளன. இதனையடுத்து பல நகரங்களை முடக்குவதற்கு உடனடியாக இராணுவம் களமிறக்க ப்பட்டுள்ளது.இராணுவத்தை பயன்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன,114 படையினர் லொம்பாடியில் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் இது தாமதமான நடவடிக்கை ஆனால் அவசியமானது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினால் வடபகுதியில் பெரும் குழப்ப நிலை காணப்படுகின்றது, மருத்துவமனைகள் நோயாளி…

    • 3 replies
    • 715 views
  5. இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தெற்கு மற்றும் மத்திய இத்தாலியை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவுகோலில் இது 6.6 என்று பதிவாகியுள்ளது. ஞாயிறு காலை 7.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி தெருவுக்கு வந்தனர். நோர்சியாவில் கன்னியாஸ்த்ரீகள் சர்ச்சிலிருந்து வெளியே வந்தனர். மணிக்கூண்டு ஒன்று ஆடியபடி கீழே விழுந்து விடும் அபாயத்தை ஏற்படுத்தியதாக நேரில் பார்த்தவர்கள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். ரோம் நகருக்கு 132 கிமீ வடகிழக்கேயும் பெருகியாவுக்கு 67 கிமீ கிழக்கிலும் இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்குக் கீழ் 10கிமீ ஆழத்…

  6. இத்தாலியில் ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழப்பு! இத்தாலியின் மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிலன் புறநகரில் உள்ள ஒரு ஆளில்லாத இரண்டு மாடி அலுவலக கட்டடத்தின் பக்கத்தில் இந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. மிலனின் உள்ள விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் சர்தீனியா தீவை நோக்கி பயணித்தைத் தொடங்கியது. ஆனால் கிளம்பிய சற்று நேரத்திலேயே மிலன் நகரின் புறநகர் பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. எனினும், இந்த விமானம் விழுந்து நொறுங்கி பொழுது தரையில் இருந்த யாருக்கும் காயம்…

  7. இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒப்படைப்பு! இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் ஒன்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் குறித்த ஓவியத்தினை மீண்டும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘Flower Vase’ என்பது ஓவியத்தின் பெயர். ஜோன் வான் ஹ்யூசெம் எனும் ஓவியரின் மிகச் சிறந்த ஓவியமாக அது கருதப்படுகிறது. மலர்களை மிக நுணுக்கமாக வரைவதில் வல்லவர் அவர். 1944ஆம் ஆண்டு நாஸி படைவீரர் ஒருவர் தனது மனைவிக்குப் பரிசளிக்கும் நோக்கில் குறித்த ஓவியத்தைத் திருடிச் சென்றதாய்க் கூறப்பட்டது. இந்தநிலையில் ஜேர்மனி குறித்த ஓவியத்தை இத்தாலியிடம் திருப்பிக்கொடுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருக…

  8. இத்தாலியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிப்பு December 25, 2018 இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. சிசிலித் தீவில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்தே எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. இதனையடுத்து அங்கு புகைமண்டலம் சூழ்ந்துள்ளதனால் சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட தகவல் ஏதுவும் வெளியாகவில்லை. எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக …

  9. இத்தாலியில் பழமையான தேர் கண்டுபிடிப்பு 28 Views இத்தாலியின் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌ இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். இங்கு கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த எரிமலை வெடிப்பு, பாம்பேய் நகரத்தை ஓர் அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடியுள்ளது. இதனால் இந்த நகரம் இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது. இந்த நிலையில் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌ 4 சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லா…

  10. இத்தாலியில் பாடசாலைப் பேருந்தைக் கடத்தி தீ வைப்பு 12 மாணவர்கள் பாதிப்பு… March 21, 2019 இத்தாலியில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பாடசாலைப் பேருந்தை சாரதியே கடத்திச் சென்று தீ வைத்ததில் 12 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தாலியின் மிலன் நகரில் 51 மாணவர்களுடன் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மாணவர்களை நோக்கி கத்தியுள்ள சாரதி எல்லாவற்றுக்கும் இன்று முடிவு கட்ட விரும்புகிறேன் எனவும் மத்திய தரைக்கடல் பகுதியில் நடக்கும் மரணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூ பேருந்தினுள் சிறிது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அவர்கள் விரைந்து செ…

  11. இத்தாலியில் பிறந்திருந்தாலும் எனது கடைசி மூச்சு இந்திய மண்ணில் தான் இருக்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உருக்கமாக பேசியுள்ளார். கேரளாவில் பிரச்சாரம் றேம்கொண்ட சோனியாகாந்தி திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது இத்தாலியில் சோனியாவுக்கு உறவினர்கள் இருப்பதாக தமிழக பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கேலி செய்ததை கடுமையாக விமர்சித்தார். இத்தாலியில் பிறந்ததற்காக நான் வெட்கப்படவில்லை என்று கூறிய அவர், நான் அங்கு பிறந்ததால் உறவினர்கள் இருக்க தான் செய்வார்கள் என்றார். 1968-ம் ஆண்டு இந்திராகாந்தியின் மருமகளாக இந்தியா வந்ததாக சோனியாகாந்தி கூறினார். இது போன்ற விவரங்களை வெளிப்படையாக பேசியதில்லை என்றாலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்கள் இத்தாலியில் தான் பிறந்ததத…

  12. 3 மணி நேரம் முன் இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர் படகு விபத்துக்குள்ளானதில் 41 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துனிசியாவிலிருந்து இத்தாலியை நோக்கி பயணித்த படகில் பயனித்த புலம்பெயர் பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் குறித்த விபத்தில் என உயிருடன் மீட்கப்பட்ட 4 பேர் வழங்கிய தகவலுக்கமையவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 1800 பேர் உயிரிழப்பு மேலும் உயிருடன் தப்பியவர்களில் 3 ஆண்கள் மற்றும் 1 பெண் உள்ளடங்குகிறார்கள். மேலும், மூழ்கிய படகில் மூன்று குழந்தைகள் உட்பட 45 பேர் சென்றதாக மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். லம்பேடுசா பகுதியானது இத்தாலியின் தெற்கே…

  13. இத்தாலியில் பூகம்பம் 2 தேவாலயங்கள் சேதம் அடைந்தன (தினத்தந்தி) Font size: மிலன், டிச.25- இத்தாலியில் பார்மா நகரில் பூகம்பம் ஏற்பட்டது. அதன் வீரியம் ரிக்டார் அளவில் 5.1 ஆக இருந்தது. இதனால் மிலன் நகர் முதல் பிளாரன்ஸ் நகரம் வரை உள்ள பகுதிகளில் இது உணரப்பட்டது. சில நகரங்களில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டது. 2 தேவாலயங்கள் தேசம் அடைந்தன. சில வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெலிபோன்கள் பாதிக்கப்பட்டன. பூகம்பம் காரணமாக அந்த நாட்டு மக்களிடம் பீதி நிலவியது. மாலையில் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து 2-வது பூகம்பம் இரவு நேரத்தில் ஏற்பட்டது. அதன் வீரியம் 4.7 ஆக இருந்தது.

  14. (CNN)A 6.2-magnitude earthquake hit southeast of Norcia, Italy, according to the United States Geological Survey. The earthquake struck about 10 kilometers (6.2 miles) from the town of Norcia at 3:36 a.m. local time. The tremor also was felt in Rome. Deadly earthquakes have struck Italy in recent years. In May 2012, a pair of earthquakes in northern Italy killed dozens of people. In April 2009, an earthquake with a magnitude of 6.3 hit central Italy, killing 295. http://www.cnn.com/2016/08/23/europe/italy-earthquake/index.html

  15. இத்தாலியில் மற்றுதொரு விபரீதம் : 850 அடி நீளமான பாலம் இடிந்து வீழ்ந்தது இத்தாலியின்மிகப்பெரிய 850 அடி நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது. இத்தாலியின் மாஸா கராரா மாகாணத்தில் அல்பியானோ மாக்ராவில் உள்ள மாக்ரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் ஒன்றே இன்று காலை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. எனினும், கொவிட் -19 காரணமாக முடக்கப்பட்டுள்ள இத்தாலியில், பாலம் இடிந்து விழும் போது இரு வாகனங்கள் மட்டுமே பயணித்துள்ளன. இந்நிலையில் குறித்த விபத்தில் இரண்டு சாரதிகள் மட்டும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயங்களுக்கு உள்ளாகியவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/79583

  16. இத்தாலியில் மவுண்ட் எட்னா எரிமலைக் குமுறல் இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது.இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மவுண்ட் எட்னா, உலகில் உயிர்ப்புடன் செயல்படும் எரிமலைகளில் ஒன்று. இந்த எரிமலையில் இருந்து திடீரென்று கரும்புகையும், சாம்பலும் வெளியேறத் தொடங்கியுள்ளது. எரிமலையின் உச்சியில் 2,900 மீட்டர் உயரத்தில் புதிதாகத் தோன்றியுள்ள உட்குழிவான பகுதியில் இருந்து சாம்பல் வெளியேறுகிறது.கரும்புகை வெளியேறினாலும் அருகில் உள்ள கடனியா (Cஅடனிஅ) விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், எரிமலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. மூல…

    • 0 replies
    • 367 views
  17. இத்தாலியில் முக்கிய பாதையை துண்டித்திருக்கும் பலமான நில அதிர்வு இத்தாலியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவால் அவதியுறும் அமத்ரைஸ் நகருக்கு செல்லும் முக்கிய பாதை ஒன்று பலமான நில அதிர்வால் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தான் இடிபாடுகளில் யாராவது புதையுண்டு இருக்கிறார்களா என்று மீட்புப் பணியாளர்கள் தேடி வருகிறர்கள். அவசர மீட்புதவி அணிகள் பயன்படுத்தி வந்த இந்த நகரத்திற்குள் செல்லும் முக்கிய வழியில் அமைந்திருந்த சாலைப் பாலம் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 260-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சனிக்கிழமையை ஒரு நாள் துக்கநாளாக அனுசரிக்க இத்தாலி அரசு அறிவித்தி…

  18. இத்தாலியில் மூன்று மாதங்களுக்கு பின்னர் திரையரங்குகள் திறப்பு by : Jeyachandran Vithushan இத்தாலி தலைநகர் ரோமில், 3 மாதங்களுக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செல்வதற்கும் பொதுமக்கள் தயங்குகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தின் தடுப்பு நடவடிக்கையாக திரையரங்கு வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதுடன், சமூக இடைவெளி கடைபிடிப்பதற்காக, இரண்டு பேருக்கு இடையே 2 இருக்கைகள் இன்றி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும், இத்தாலியில், 34,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், ஒரு சிலர் மட்டுமே திரையரங்குகளுக்கு வருகின்றனர். இதையடுத்து,…

    • 0 replies
    • 425 views
  19. இத்தாலியில் மேம்பாலம் இடிந்த பயங்கரம்! வேகநெடுஞ்சாலை வாகனங்கள் பாதாளத்தில்!! . இத்தாலியின் ஜெனோவா நகரில் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் இதுவரை 22 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. முற்பகல் 11.30 மணியளவில் 100 மீற்றர் உயரத்தில் இருந்த இந்த மேம்பாலம் இடிந்து கீழே இருந்த தொடருந்து பாதையில் விழுந்துள்ளது. அப்போது மேம்பாலத்தால் அதிவேகமாக சென்று கொண்டிருந்த வாகனங்களும் கீழே விழுந்தன.இது ஒரு துன்பியல் விபத்து என இத்தாலி போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார். https://ibctamil.com/europe/80/104733?ref=home-imp-flag

  20. வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் மாட்டுண்டுள்ள இத்தாலிய அரசு பாரிய பொரளாதார மீதம் பிடித்தல்களை கொண்டுவர இருப்பது தெரிந்ததே. இந்த மீதம் பிடிப்புக்கள் ஏழைகளை பரம ஏழைகளாக்கி முதலாளிகளை மேலும் முதலாளிகளாக்கும் மோசமான கொள்கை சார்ந்தது என்ற எதிர்ப்பு ஆர்பாட்டம் இத்தாலி ரோம் நகரில் வெடித்து மோசமான புள்ளிக்கு திரும்பியது. நேற்று நடைபெற்ற ஆர்பாட்டங்களில் சுமார் 70 பேர் காயமடைந்து பல்வேறு வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆர்பாட்டக்காரரில் ஒரு பகுதியினர் இத்தாலி பாதுகாப்பு அமைச்சுக்கு பக்கத்தில் உள்ள கட்டிடத்தை தீயிட்டு கொழுத்தினார்கள். இதன் தீக்கங்குகள் சன்னல் வழியாக வளர்ந்து கூரையைத் தொட்டது. இதுபோல பல்வேறு அமைச்சகங்களுக்கும் முன்னால் மக்கள் ஆர்பாட்டங்களை நடாத்தினார…

  21. இத்தாலியில் ஹெலிகொப்டரும் பயிற்சி விமானமும் மோதி விபத்து – 7 பேர் பலி – இருவரைக் காணவில்லை January 28, 2019 இத்தாலியில் ஹெலிகொப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே உள்ள அஸ்டா பள்ளத்தாக்க்கில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மலையில் ஏறுவதற்காக 4 பேருடன் சென்ற ஹெலிகொப்டரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக பயிற்சி விமானமுமே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளன. விமான பயிற்சியாளர் மட்டும் உயிர் தப்பியுள்ள நிலையில் அவரைக் கைது செய்தி காவல்துறையினனர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர…

  22. இத்தாலியில்... கேபிள் கார் விபத்து – 14 பேர் உயிரிழப்பு வடக்கு இத்தாலியின் மாகியோர் ஏரிக்கு அருகே ஒரு மலையில் கேபிள் கார் விழுந்ததில் சிறுவர்கள் உட்பட பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரிசார்ட் நகரமான ஸ்ட்ரெசாவிலிருந்து பீட்மாண்ட் பிராந்தியத்தில் அருகிலுள்ள மொட்டரோன் மலை வரை பயணிகளை ஏற்றிச் செல்லும் சேவையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இறந்தவர்களில் ஐவர் இஸ்ரேலிய பிரஜைகளும் அடங்குவதாக இஸ்ரேலின்வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐந்து மற்றும் ஒன்பது வயதுடையா சிறுவர்கள் விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1217823

  23. ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகள் படகில் மத்திய தரைக்கடலை தாண்டி சென்று ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகிறார்கள்.இவ்வாறு நைஜீரியா மற்றும் சிசிலி நாடுகளை சேர்ந்தவர்கள் ஒரு படகில் மத்திய தரைக்கடலில் இத்தாலியை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.லிபியா அருகே சென்ற போது சர்வதேச மருத்துவ கண்காணிப்பு குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த படகை மடக்கி சோதனையிட்டனர். அந்த படகின் கீழ் தளத்தில் 21 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.இந்த படகில் 50 குழந்தைகள் உள்பட 209 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரையும் மருத்துவ குழுவினர் மீட்டனர். 22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. படகில் இருந்த டீசலில் …

  24. இத்தாலியை புரட்டிப்போடும் கொரோனா: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல் ஒன்று கசிந்தது! இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகையில் இருந்து 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஏறக்குறைய 64 ஆயிரம் பேர் குறித்த நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் தெரிவிக்கிறது. அத்துடன் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு வரை 6 ஆயிரத்து 77 ஆகக் காணப்படுகிறது. இந்நிலையில், வைரஸ் தொற்று தொடர்பாக தம்மை பரிசீலித்துக்கொள்வதற்காக மட்டுப்…

  25. விழுப்புரம்: "தன்மானத்திலே பிறந்து; வளர்ந்து வாழ்ந்து வருகிறேன். என்றைக்கும் தன்மானத்தை இழக்க மாட்டேன். இத்தோடு நிறுத்திக்கொளுங்கள். தம்பிமார்களை தட்டிவிட்டால், பிரச்னை எங்கேயோ போய்விடும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில், நேற்று இரவு நடந்த முப்பெரும் விழாவில் அவர் பேசியதாவது: கருணாநிதி தன்மானம் இல்லாதவர் என பேசியதாக பத்திரிகைகளில் பார்த்தேன். தன்மானம் என்றால் அளந்து, பிரித்து தருவார்களா... கடையில் கிடைக்குமா... தெரியாமல் பேசக்கூடாது. பெரியார், அண்ணாதுரையிடம் நட்போடு பழகி, வளர்ச்சியடைய எனது தன்மானமே காரணமாக அமைந்தது. இது குறித்து ஒரே வரியில் பதில் கூற வேண்டுமென்றால், மானமுள்ள சுயமரியாதை கொண்டவன் நான். எனது மகன் ஸ்டாலின் கூட …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.