உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
கொரோனா நிவாரண நிதியாக அமெரிக்கர்களுக்கு தலா 1400 டாலர் வழங்கும் பணி துவக்கம் - ஜோ பைடன் அறிவிப்பு வாஷிங்டன், உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் கடந்த ஜனவரி 20-ம்…
-
- 0 replies
- 283 views
-
-
ஐந்தாவது நாளாகவும் பற்றி எரியும் லெபனான் லெபனானின் பராமரிப்பாளர் பிரதம அமைச்சர் ஹசன் டயப், ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தனது கடமைகளை செய்வதை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியதால், எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக லெபனான் முழுவதும் வீதிகளை முடக்கி, டயர்கள் மற்றும் தளபாடங்களுக்கு தீ வைத்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். சனிக்கிழமையன்று புதுப்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் லெபனான் நாணயத்தின் சரிவு குறித்த கோபத்தின் மத்தியில் எழுச்சி பெற்றது. லெபனானின் நாணய சரிவின் விளைவாக விலைகள் கூர்மையாக அதிகரித்துள்ளன, அதே போல் எரிபொருள் ஏற்றுமதிகளின் வருகையும் தாமதமாகி, நாடு முழுவதும் அதிக மின்வெட்டுக்கு வழிவகுக்கி…
-
- 0 replies
- 505 views
-
-
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல் பிரேஸிலில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் தடுப்பூசி மருந்தான சினோபார்ம் போதிய கொரோனா எதிர்ப்பு சக்திகளை உருவாக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்த கேள்விக்கு சினோபார்ம் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளுக்கு சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. https://athavannews.com/உருமாற்றம்-அடைந்த-கொரோனா/
-
- 0 replies
- 497 views
-
-
திருத்தந்தை பிரான்சிஸ் இன்று ஈராக்குக்கு திருப்பயணம் 19 Views உலக கத்தோலிக்க மக்களின் ஆன்மீகத் தலைவர் 84 வயதுடைய திருத்தந்தை பிரான்சிஸ், போரினால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட ஈராக் நாட்டுக்கு இன்று ‘அமைதிக்கான திருப்பயணி’ யாக தனது திருப்பயணத்தை மேற்கொள்கிறார். கோவிட்-19 நோய்த்தொற்று உலகை ஆக்கிரமித்ததன் பின்னர் திருத்தந்தை ஆரம்பிக்கும் முதலாவது திருப்பயணம் இதுவாகும். திருத்தந்தையின் ஈராக் திருப்பயணத்தைக் கௌரவிக்கும் முகமாக ஈராக்கின் இஸ்லாம் ஆயதக்குழுக்களில் ஒன்றான ‘குருதிப்படையின் பாதுகாவலா’ என அறியப்படும் (Gurardians of Blood Brigade) ஓர் போராட்டக்குழு தற்காலிக ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றது. …
-
- 0 replies
- 367 views
-
-
மியன்மாருக்கான அமெரிக்காவின் மற்றொரு பலத்த அடி அமெரிக்க வணிகத் துறை வியாழக்கிழமை மியன்மாரின் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் இரண்டு வணிக நிறுவனங்களை அதன் வர்த்தக தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அதேநேரம் அமெரிக்க வர்த்தகத் துறை மியான்மருக்கு எதிரான அதிக ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் அறிவித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏற்றுமதி நிர்வாக விதிமுறைகளுக்கு உட்பட்ட பொருட்களை பர்மிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பர்மிய உள்துறை அமைச்சகம், ஆட்சி மாற்றத்திற்கு பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் சொந்தமான மற்றும் இயக்கப்படும் இரண்டு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துகிறது. தற்போதைய இராணுவ அரசாங்கத்தின் நியாயத்தன்மையை…
-
- 0 replies
- 608 views
-
-
ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்! புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ‘புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சான்றளிக்காதவர்களுக்கு கட்டாயத் தடுப்பூசி போடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சவுதியில் உள்ளவர்கள் மட்டுமே ஹஜ் சென்று வரும் நிலையில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பது குறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ‘தடுப்பூசி என்பது எதிர்வரும் ஹஜ் புனித பயண அனுமதி பெறுவதற்கான முக்கிய ந…
-
- 0 replies
- 271 views
-
-
நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, நடுவானில் பற்றி எரிந்த போயிங் 777 ரக விமான எஞ்சின் அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கின் 777 ரக விமானத்தின் எஞ்சின் எரிந்து நடுவானில் அதன் பாகங்கள் வெடித்துச்சிதறிய சம்பவம் காரணமாக, அத்தகைய இயந்திர கோளாறு சாத்தியம் மிகுந்த 777 ரகத்தைச் சேர்ந்த 128 விமானங்களை தரையிறக்க போயிங் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை டென்வரில் இருந்து ஹோனோலூலு நகர் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 777 ரக விமானம் 231 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் எஞ்சின் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனால், அ…
-
- 10 replies
- 949 views
-
-
மேகனுக்கு... இங்கிலாந்து நாளிதழ் நஸ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டது தொடர்பாக மேகனுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஸ்டஈடு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹரி – மேகன் மேர்க்கல் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர். வின்ட்சர் கோட்டை தேவாலயத்தில் இவர்களது திருமணம், கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடிகை மேகன், இளவரசி மேகன் ஆக மாறினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஹரி – மேகன் தம்பதி இங்கிலாந்து அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் குடியேறினர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மேகன் மீண…
-
- 12 replies
- 790 views
-
-
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல் ஜெட்டா வுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் ம் ஈது ஏமனின் ஹவுத்தி படைகள் ஏவுகணையை வீசியதாக ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார், ஆனால் சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை.இத்தாக்குதலில் அரம்கோவில் உள்ள ஒரு நிலையம் வெடித்து சிதறியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹவுத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரியா டுவிட்டர் பதிவில், ஏவுகணையைப் பயன்படுத்தி விடியற்காலையில் இந்த தாக்குதல் நடந்தது என்றும், அதன் இலக்கை விரிவாக விவரிக்காமல் தாக்கி…
-
- 0 replies
- 422 views
-
-
சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று ஆஃப்கன் பெண் ஊடகவியலாளர்கள்... அதிர்ச்சியில் உலக நாடுகள்! சு.கவிதா Guns (Representational Image) ( Image by Clker-Free-Vector-Images from Pixabay ) ஊடகங்களில் பணியாற்றுபவர்களுக்கு பாதுகாப்பே இல்லாத ஒரு நாடாக ஆஃப்கானிஸ்தான் இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் ஊடகத் துறையில் பணியாற்றும் 15 பேர் ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டிருக்கின்றனர். செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபடும் அளவுக்கு ஒரு பக்கம் உலகம் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டு இருந்தாலும், வேலைக்குச் செல்வதில் ஆரம்பித்து வாகனம் ஓட்டுவதற்கான அனுமதியைப் பெறுவதுவரை ஒவ்வோர் அடிப்படை உரிமைக்கும் பெண்களில் பலர் போராடவே…
-
- 0 replies
- 503 views
-
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் உள்ளிட்ட 329 பேரின் பெயர்கள் பரிந்துரை! அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் இயற்பியல், அமைதி, வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசிற்கு 234 தனிநபர்களுடன், 95 அமைப்புகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைப் பட்டியலில் 376 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்தநிலையில் 3வது முறையாக அதிகளவில் இம்முறையே இவ்வளவ…
-
- 0 replies
- 298 views
-
-
ஈராக்-அமெரிக்க கூட்டுப்படைகளின் முக்கிய விமானத் தளம் மீது ரொக்கெட் தாக்குதல்! மேற்கு ஈராக் மாகாணமான அன்பரில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத் தளத்தின் மீது, ரொக்கெட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்கதலின்போது, குறித்த விமானத் தளத்தின் மீது 10 ரொக்கெட்டுகள் வீழ்ந்துள்ளதாக ஈராக்கின் அமெரிக்கத் தலைமையிலான கூட்டுப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கேர்னல் வெய்ன் மரோட்டோ இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஈராக்-சிரியா எல்லையில் ஈரான் ஆதரவுப் போராளிகளின் இலக்குகளை அமெரிக்கப் படைக்ள தாக்கிய நிலையில், இதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாப்பரசர் பிரான்சிஸ் இன்னும் இரண்டு நாட்களில் ஈர…
-
- 0 replies
- 235 views
-
-
கிழக்கு ஆப்கானில் மூன்று பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என்று உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ் தொலைக்காட்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வலையமைப்பை விட்டு வெளியேறிய பின்னர் அவர்கள் இரண்டு தனித்தனி தாக்குதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நிலைய இயக்குநர் சல்மாய் லதிபி தெரிவித்தார். “அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர்கள் அலுவலகத்திலிருந்து கால்நடையாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர் ”என்று லதிபி கூறினார். துப்பாக்…
-
- 0 replies
- 331 views
-
-
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஜோ பைடனின் கோரிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். http://athavannews.com/அலெக்ஸி-நவல்னியை-கொலை-செ/
-
- 0 replies
- 478 views
-
-
இத்தாலியில் பழமையான தேர் கண்டுபிடிப்பு 28 Views இத்தாலியின் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். இங்கு கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த எரிமலை வெடிப்பு, பாம்பேய் நகரத்தை ஓர் அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடியுள்ளது. இதனால் இந்த நகரம் இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது. இந்த நிலையில் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 4 சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லா…
-
- 7 replies
- 1.2k views
-
-
எனக்கு என்ட் கார்டே கிடையாது...2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்.! வாஷிங்டன் : அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்கு பிறகு தலைநகர் வாஷிங்டனில் முதன்முறையாக பொது மேடையில் பேசிய டொனால்டு டிரம்ப், மாற்றங்களை ஏற்படுத்துவதாக கூறி கொண்டு அதிபரின் கடமைகளை ஜோ பிடன் மீறி வருவதாக குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 2024 அதிபர்…
-
- 2 replies
- 609 views
-
-
குமுறத் தொடங்கியுள்ள இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை இந்தோனேஷியாவின் மவுண்ட் சினாபுங் என்ற எரிமலை குமுறத் தொடங்கியுள்ளதுடன் செவ்வாயன்று 5 கிமீ (3.1 மைல்) உயரத்தில் சூடான சாம்பலை வான் நோக்கி வெளியேற்றியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட அதன் முதல் பெரிய வெடிப்பின் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் மவுண்ட் சினாபுங்கின் குமுறல் செயல்பாடு அதிகரித்துள்ளது. அதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் எரிமலை வெடிப்புக்கான எச்சரிக்கை மிக உயர்ந்த மட்டத்தில் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் ஒரு அதிகாரி முன்பு எரிமலையின் பள்ளத்திலிருந்து குறைந்தது 3 கி.மீ தூரத்திற்கு அப்பால் மக்களை வெளியேறுமாறு …
-
- 0 replies
- 409 views
-
-
நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கடத்தல் - பயங்கரவாதிகள் அட்டூழியம் நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர். பதிவு: பிப்ரவரி 26, 2021 15:54 PM அபுஜா, நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ.எஸ், பண்டிட்ஸ், போகோ ஹராம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பயங்கரவாதிகள் அவ்வப்போத…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வருட சிறைத் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு! ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் ஒரு வருடத்தை சிறையில் கழிக்கத் தேவையில்லை என்றும், வீட்டில் இருந்தவாறே ஒரு மின்னணு வளையலை அணிந்து தண்டனையை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த சார்க்கோசி, தேர்தல் பிரசார நிதிப் பயன்பாடு…
-
- 0 replies
- 288 views
-
-
மியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இதுவரையில்18 பேர் உயிரிழப்பு மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 18 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியது. மேலும் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இராணுவம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடு…
-
- 0 replies
- 249 views
-
-
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார்: அமெரிக்கா தகவல் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, அமெரிக்காவின் வொஷங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசாங்கத்தையும் அந்நாட்டு மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்தார். இந்நிலையில் துருக்கி பெண் ஒருவரை ஜமால் கஷோக்கி திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு ஆவணங்களை பெறுவதற்காக சென்றார். அப்போது அவர் கொடூரமான முற…
-
- 0 replies
- 450 views
-
-
கொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு! கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ், அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. B.1.526 என அழைக்கப்படும் புதிய மாறுபாடு, நவம்பர் மாதம் நியூயோர்க் நகரில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தொடர்ந்து உருவாகி வருவதால், தடுப்பூசிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பென் மாநில பல்கலைக்கழகத்தின் பரிணாம நுண்ணுயிரியலாளர் டாக்டர் ஆண்ட்ரூ ரீட் கூறினார். கலிஃபோர்னியாவில் விரைவாக பரவும் புதிய வைரஸை விட நியூயோர்க்கில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் மாறுபாட்டைப் பற்றி ஆய்வுகளில் ஈடுபட்ட டாக்டர் நுசென்ஸ்வீக் இதுகுற…
-
- 2 replies
- 740 views
-
-
அர்மீனியாவில் அரசாங்கத்தை கவிழ்க்க இராணுவம் முயற்சி: பிரதமர் பாஷின்யன் பரபரப்பு குற்றச்சாட்டு! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/armenian-president-Nikol-pashinyan-reuters-720x450.jpg அர்மீனியாவில் தனது தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க இராணுவம் முயற்சிப்பதாக அந்த நாட்டு பிரதமர் நிகோல் பாஷின்யன் குற்றம் சாட்டியுள்ளார். நகோர்னா-கராபக் பிராந்தியத்தில் அசர்பைஜானுடன் கடந்த ஆண்டு நடந்த மோதலில் அர்மீனியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நிகோல் பாஷின்யனும் அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்று இராணுவம் வலியுறுத்திய நிலையில் அவர் இவ்வாறு…
-
- 0 replies
- 442 views
-
-
மொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னி மொஸ்கோவிற்கு வெளியே ஒரு அடையாளம் தெரியாத தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இது சிறை முகாமாக இருக்கலாம் என்று அவரது வழக்கறிஞரும் உரிமை அமைப்பின் உறுப்பினரும் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய விமர்சகரான நவல்னி, இந்த மாத தொடக்கத்தில் பரோல் மீறல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் காரணங்களுக்காக அவர் பழிவாங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐரோப்பிய மனித உரிமைகள் ரஷ்ய நீதிமன்றின் இத் தீர்ப்பானது சட்டவிரோதமானது என்று கூறி விமர்சித்துள்ளதுடன், காவலில் இருக்கும் நவல்னிய…
-
- 0 replies
- 429 views
-
-
ஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்! ஜேர்மனின் பன்டெஸ்ரக் (Bundestag) நாடாளுமன்றக் கட்டடத்தின் தரைத் திட்டங்களை ரஷ்ய உளவுத் துறையினருக்கு அனுப்பிய ஒருவரை அந்நாட்டு சட்ட வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். அவர், பன்டெஸ்ரக்கின் கட்டத்தின் மின்சார உபகரணங்களைப் பராமரிப்பதற்காக அனுமதியளிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றியதுடன் தனது பணியின்போது குறித்த கட்டடத்தின் திட்டங்களுடன் கூடிய கோப்புகளைப் பெற்றிருந்தார் என அரச வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் ரஷ்யாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கக்கூடும் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. சட்ட வல்லுனர்களின் …
-
- 0 replies
- 543 views
-