Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வடகொரியாவில் கால் பதித்த கொரோனா: முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டதாக தகவல் பையோங்யாங், சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என உலகம் முழுவதும் பரவியது. உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவுக்கு 1 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் க…

  2. வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை: டிரம்ப் நிர்வாகம் அதிரடி வாஷிங்டன், அமெரிக்க நாடானது வேலைவாய்ப்பு மட்டுமின்றி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளை பயில சிறந்த இடமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா வெளிநாட்டு மாணவர்களுக்காக எப்1, எம்1 போன்ற கல்வி விசாக்கள் வழங்கி வருகிறது. சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் இந்த விசாக்களை பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக தென் கொரியா, சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிக அளவிலான மாணவர்கள் ஆண்டு தோறும் அமெரிக்கா செல்கின்றனர். தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதால் அங்…

  3. சிலிக்கனினால் உருவாக்கப்பட்ட புதிய முகக்கவசம் : விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு அமெரிக்க பல்கலைக்கழக ஒன்றின் விஞ்ஞான தொழில்நுட்ப்பிரிவு புதிய வகையிலான முகக்கவசம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது என்95 (N95) முகக்கவசத்துக்கு நிகரானது எனவும் சிலிக்கனினால் உருவாக்கப்பட்ட இந்த முகக்கவசம் மீளவும் பாவிகக்கக் கூடியதாக இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிலிக்கன் இறப்பரிலான முகக்கவசம் தொற்றுநீக்கக்கூடியதுமாகும். இதனை அணிவதற்கு மிகவும் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான விலை 15 டொலர்களாக இருக்குமென குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முகக்கவசத்தை வைத்தியசாலைக்கு அறிமுகம் செய்யும் வகையில் அமெரிக்காவில் உணவு மற்றும்…

  4. அமெரிக்காவுக்கு சீனா பதிலடி: செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட உத்தரவு! by : Anojkiyan தென்மேற்கு நகரமான செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதால் 72 மணித்தியாலத்திற்குள் ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகம் மூடப்பட வேண்டுமென அமெரிக்கா உத்தரவிட்ட ஒருநாளுக்கு பிறகு இந்த உத்தரவை சீனா பிறப்பித்துள்ளது. வர்த்தகப் போர், கொரோனா தொற்று, ஹொங்கொங் தொடர்பான சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவற்றியது உள்ளிட்ட பிரச்சனைகளில், அமெரிக்கா சீனா இடையேயான தொடர்ந்து பதற்றம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனிடையே சீனாவின் இந்…

    • 0 replies
    • 639 views
  5. ஜப்பான் கடற்கரையில் ஒதுங்கும் மனித எலும்புக்கூடுகளுடன் கூடிய வடகொரிய பேய் படகுகள் டோக்கியோ நூற்றுக்கணக்கான வடகொரிய படகுகள் மனித எலும்புக்கூடுகளுடன் தங்கள் ச்நிலையில் சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஜப்பான். கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 600 ஆதரவற்ற படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, கடந்த ஆண்டில் மட்டும் 150 படகுகள் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன. கடந்த 2019 டிசம்பரில் ஜப்பானின் சாடோ தீவுக்கு அருகே மரத்தினாலான படகு ஒன்று கரை ஒதுங்கியது.அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரின் தலைகளும் எலும்புக்கூடாக உருமாறி வரும் ஐவரின் சடலங்களும் ஜப்பான் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்ப…

  6. ரஷியா புதிய விண்வெளி ஆயுதத்தை ஏவி சோதனை...? அமெரிக்கா- இங்கிலாந்து கண்டனம் இந்த மாத தொடக்கத்தில் விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை ரஷியா சோதனை செய்ததாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவங்கள் குற்றம் சாட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ரஷியா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதுபோன்ற ஆயுதத்தை ரஷியாசோதனை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது இதுவே முதல் முறை. ஜூலை 15 ம் தேதி ரஷியா "விண்வெளி அடிப்படையிலான செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத சோதனையை நடத்தியது" என்பதற்கு அமெரிக்க விண்வெளி அமைப்பு "ஆதாரங்களைக் கொண்டுள்ளது" என்று வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம…

  7. சுப்ரமணியம் தவப்புதல்வன் (36) இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர் இலங்கை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சொந்த இடமாகக் கொண்டவர். அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதி தஞ்சம் கோரிய இவர், 4 வருடங்கள் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்து வந்துள்ளார். இவரது அகதி தஞ்சக் கோரிக்கை குடிவரவுத் திணைக்களத்தினாலும் மீளாய்வு மையத்தினாலும் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார். இவரது மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தவேளையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் சிட்னி Blacktown பகுதியில் புகைய…

  8. இங்கிலாந்தில் 67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை மருமகளிடம் ஒப்படைத்தார் இளவரசர் பிலிப் இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99), எடின்பரோ கோமகன் என்று அழைக்கப்பட்டு வந்தார். அந்த அடிப்படையில் அவர் 67 ஆண்டு காலமாக இங்கிலாந்து ராணுவத்தின் மிகப்பெரிய காலாட்படையான ரைபிள் படையின் தலைமை கர்னல் என்ற ராணுவ பொறுப்பை வகித்தார். கடந்த 2017-ம் ஆண்டு வயோதிகத்தின் காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விண்ட்சர் கோட்டையில் நடந்த ராணுவ விழாவில் அவர் ராணுவ பொறுப்பில் இருந்தும் முறைப்படி விலகினார். அந்த பொறுப்பை அவர் தனது மருமகளும், இளவரசர் சார்லஸ்சின் மனைவியுமான கமிலாவி…

  9. பொலிவிய நாட்டின் வீதிகளில் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுப்பு! தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெரிய நகரங்களின் வீதிகள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 400க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக, தேசிய பொலிஸ்துறை இயக்குனர் இவான் ரோஜாஸ் தெரிவித்துள்ளார். கோச்சபம்பா பெருநகரப் பகுதியில் மொத்தம் 191 சடலங்களும், நிர்வாகத் தலைநகர் லா பாஸில் 141 சடலங்களும், மிகப்பெரிய நகரமான சாண்டா குரூஸில் 68 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 85 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் இறந்ததாக நம்பப்படுகிறது. மீதமுள்ளவர்கள் பிற காரணங்களால் இறந்தத…

  10. சல்மான் ரவி பிபிசி இந்தி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றம் நிலவும் இந்தச் சூழ்நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய அமெரிக்க கடற்படைகள் கூட்டுப் பயிற்சிகள் மேற்கொண்டது சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுப்பதற்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படையின் 'கிழக்கு பிரிவு' ஏற்கனவே அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த பயிற்சி உண்மையில் 'பாஸேஜ் பயிற்சியின்' ஒரு பகுதியாகும், இதைக் கடற்படை அவ்வப்போது மற்ற நாடுகளின் கடற்படைகளுடன் செ…

    • 1 reply
    • 561 views
  11. கொரோனா கோர தாண்டவம் தெருக்கள் முழுவதும் இறந்தவர்களின் உடல்கள் சாண்டாகுரூஸ் கொரோனா தாண்டவமாடி வரும் பொலிவியாவில், கடந்த 5 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட உடல்கள் வீடுகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இதுவரை 62 ஆயிரத்து 357 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.2,273 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். அங்கு குறைவான அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில், கடந்த 5 நாட்களில் தெருக்கள், வீடுகளில் இருந்து மட்டும் 400க்கும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. …

  12. பிரேசில் அதிபரை விடாத கொரோனா: 3-வது முறை நடத்தப்பட்ட பரிசோதனையிலும் தொற்று உறுதி பிரேசிலா, கொரோனா ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என கூறியவர் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ. இவருக்கு கடந்த 10 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு கடந்த 15 ஆம் தேதி போல்சோனரோ 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சனேரோ கூறியிருந்தார். …

  13. ஜி 7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை அமெரிக்கா அழைக்கிறது- மைக் பாம்பியோ லடாக் எல்லை பகுதியில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதில் அமெரிக்கா மிகுந்த வருத்தம் அடைகிறதுஜி 7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை அமெரிக்கா அழைக்கிறது என்று பாம்பியோ கூறுகிறார் பதிவு: ஜூலை 23, 2020 07:50 AM புதுடெல்லி, அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் இந்தியா ஐடியா மாநாடு காணொலி முறையில் நடந்தது. அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்த இரண்டு நாள் மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். மாநாட்டில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் ப…

  14. சீன தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா அதிரடி உத்தரவு! by : Litharsan அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலம், ஹூஸ்ரனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவு மூர்க்கத்தனமான மற்றும் நியாயமற்றது என சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது. அத்துடன், தவறான பாதையில் செல்லவேண்டும் என வலியுறுத்தினா…

  15. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நெருக்கடி மேம்பாடு அடைவதற்கு முன்பு மோசமடையும்- டிரம்ப் எச்சரிக்கை வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசும் போது கூறியதாவது:- நாட்டின் சில பகுதிகள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. தெற்கின் பல பகுதிகளில் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் 141,000 க்கும் அதிகமானோர் பலி கொண்டுள்ள மிகவும் கொடுரூர தொற்றுநோயான வைரஸ் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியுங்கள். நான் எல்லோரிடமும் கேட்கிறேன் நீங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாதபோது, முகக்கவசம் அணியுங்கள். நீங்கள் முகக்கவசத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை ஒரு விளைவை ஏ…

  16. ஹொங்கொங் விவகாரம்: பிரித்தானியா கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும்- சீனா எச்சரிக்கை ஹொங்கொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ள நிலையில், இதற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹொங்கொங் விவகாரத்தில் தவறான பாதையில் தொடர்ந்து சென்றால் பிரித்தானியா கடுமையான விளைவுகளைத் எதிர்கொள்ளும் என்று சீனா எச்சரித்துள்ளது. லண்டனில் உள்ள சீனத் தூதர் லியு சியாமிங், சீனாவின் விவகாரங்களில் பிரித்தானியா அப்பட்டமாக குறுக்கிடுகின்றது என கூறினார். ‘பிரித்தானியாவின் உள் விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடவில்லை, பிரித்தானியா சீனாவுக்கும் அவ்வாறே செய்ய வேண்டும்’ என லியு சியாமிங் கூறினார். ஹொங்கொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பத…

  17. கொரோனானாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க 750 பில்லியன் யூரோ நிதி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் by : Dhackshala கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 750 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதி தொகுப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமை அலுவலகத்தில், வரவு செலவுத் திட்டம் மற்றும் பொருளாதார மீட்பு நிதி தொகுப்பு உள்ளிட்டவை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்கள் நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். கடந்த ஐந்து நாட்களாக நடந்த ஆலோசனைக்கு பின்னர், இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் சார்லஸ்…

    • 0 replies
    • 440 views
  18. டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்- சபாநாயகர் நான்சி பாக்ஸ் நியூஸ் பேட்டியின் போது அமெரிக்க தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வேன் என்று உறுதியாகக் கூற மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து அமெரிக்க தலைவர்கள் டொனால்டு டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி கூறியதாவது:- தேர்தலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தோற்றால் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவது குறித்து சிறிதும் அக்கறை காட்டவில்லை.அவர் வெளியேற மறுத்தால் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார். "உண்மை என்னவென்றால், அவர் இன்னும் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் வெளிறுவார்.…

  19. துருப்புக்களை திரும்பப் பெற வேண்டாம்: அமெரிக்காவுக்கு ஜேர்மன் மாநில முதல்வர்கள் வேண்டுகோள்! ஜேர்மனியில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டங்களைத் தடுக்குமாறு, ஜேர்மனியின் நான்கு மாநில முதல்வர்கள் காங்கிரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐரோப்பாவின் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) அதன் கூட்டமைப்புகளுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், 9,500 அமெரிக்க துருப்புக்களை ஜேர்மனியில் உள்ள தளங்களில் இருந்து திரும்பப் பெறும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் உறுதிப்படுத்தினார். இந்த நடவடிக்கை ஜேர்மனியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை சுமார் 34,500 …

  20. அந்தமான் அருகே இந்திய-அமெரிக்க போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சி லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றதால் ஏற்பட்ட மோதல் பிரச்சினை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்தியா மட்டுமின்றி பிற அண்டை நாடுகளுடனும் எல்லை பிரச்சினை தொடர்பாக சீனா தகராறு செய்து வருகிறது. அத்துடன் தென் சீன கடல் பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடும் சீனா அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்புகிறது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு மனப்பான்மைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, அண்டை நாடுகளை சீனா அச்சுறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறி இருக்கிறது. அத்துடன் சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், தனது கடற்படையின் பலத்தை காட்டு…

  21. ராணுவ தளபதி கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ஈரான் அதிரடி இதனிடையே கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த நிலையில் காசிம் சுலைமானி கொலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் 30 பேர் மீது ஈரான் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. இதனிடையே காசிம் சுலைமானி குறித்து அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்ததாக மவ்சாவி மஜித் என்பவரை கடந்த மாத இறுதியில் ஈரான் போலீசார் கைது செய்தனர். ஈரானின் ராணுவ ரகசியங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்…

  22. உக்ரேனிய விமானத்தின் கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைத்த ஈரானின் முடிவு வரவேற்கதக்கது: உக்ரேன் by : Anojkiyan 176 பேரது உயிர்களை காவு வாங்கிய உக்ரேனிய விமானத்தின் கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைக்க ஈரான் எடுத்த முடிவை வரவேற்பதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskiy) தெரிவித்துள்ளார். அத்துடன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த நிபுணர்களுடன், உக்ரேனிய வல்லுநர்கள் கருப்பு பெட்டியை டிகோடிங் செய்வதில் பங்கேற்பார்கள் என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார். பிரான்ஸ் தலைநகர் பரிஸுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட குறித்த கருப்புப் பெட்டியிலுள்ள விபரங்கள், இன்று ஆ…

    • 0 replies
    • 310 views
  23. சவுதி மன்னர் சல்மான் வைத்தியசாலையில் அனுமதி சவுதி அரேபியாவின் 84 வயதான மன்னரான சல்மான் பின் அப்துல்அஸிஸ் தலைநகர் ரியாத்திலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு அரசாங்க செய்தி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மன்னருக்குப் பித்தப்பையில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்படுகின்றது. சவுதியின் மன்னராக கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் பொறுப்பேற்றுக்கொள்ளும் முன்பு, சுமார் இரண்டரை ஆண்டுகள் பட்டத்து இளவரசராக இருந்தார். 50 ஆண்டுக்கும் மேலாக ரியாத் வட்டார ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். மன்னரின் உடல்நிலை பற்றிய மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/86291

  24. இந்திய வம்சாவளியினர் மீது கனடாவில் இனவெறி தாக்குதல்! இந்திய வம்சாவளியினர் மீது கனடாவில் இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வான்கூவர் நகரின் சம்மர்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு இந்திய வம்சாவளியினரின் வீடு, நள்ளிரவு நேரத்தில் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரமேஷ் லேகி மற்றும் கிரண் லேகி தம்பதியர் மட்டுமே, வீட்டில் இருந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் அவர்கள் வெளியே வரவில்லை. விடிந்து பார்த்தபோது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தன. இன்னொரு அதிர்ச்சியாக, வீட்டுச் சுவர்களில் கெட்ட வார்த்தைகள், இனவெறியைக் குறிக்கும் ஓவியங்கள் மற்றும் ஆபாச படங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தை அறிந்த லேகி தம்பதியரின் மூன்று குழந்தைகளும், அதிகாலையிலேயே பெற்…

    • 2 replies
    • 590 views
  25. சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்: "போர்க்கால அவசரநிலை" அமல் - என்ன நடக்கிறது அங்கே? 19 ஜூலை 2020, 04:43 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் Getty Images கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் "போர்க்கால அவசரநிலை" அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக 17 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.