உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
Published By: SETHU 26 JUN, 2023 | 09:15 AM சிரியாவில் ரஷ்யா நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என யுத்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரு சிறார்கள் உட்பட 9 பொதுமக்களும் அடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இட்லிப் பிராந்தியத்திலுள்ள ஜஸ்ர் அல் சுகுர் நகரிலுள்ள சந்தையொன்றில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவ்வருடம் சிரியாவில் ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையானோர் கொல்லப்பட்ட ரஷ்ய தாக்குதல் இதுவாகும் என மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தேல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் நடத்தி…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
ஐ.நா வில் ட்ரம்ப் அதிரடி முடிவு தனது நாட்டுடன் நட்பு பாராட்டும் மற்றும் மதிப்பளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா நிதியுதவி வழங்குமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ நா தலைமையகத்தில் ஆரம்பமானது. முழு உலகும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர் “ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது. …
-
- 3 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்களாக குறைக்க சௌதி அரேபியா முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதமும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அந்நாட்டு அரசின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல்களாக இருக்கும் என்று சௌதியின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சௌதி பிரஸ் ஏஜென்சி (எஸ்பிஏ) தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தும் நோக்கில் எ…
-
- 3 replies
- 663 views
- 1 follower
-
-
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில், இலங்கையில் ஈழத் தமிழர்கள் அரை நூற்றாண்டு காலமாக விடியலுக்காக போராடி வருகிறார்கள். இலங்கையில் குடியேற சென்றவர்கள் எப்படி அந்த நாட்டு மண்ணுக்கு சொந்தம் கொண்டாட முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஈழம் தமிழர்களின் தமிழ் மடி அவர்கள்தான் அம்மண்ணின் மை…
-
- 2 replies
- 1k views
-
-
Published By: RAJEEBAN 15 JUL, 2023 | 12:08 PM அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரு பொலிஸார் கத்திக்குத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மிகவும் ஆபத்தான சம்பவம் ஒன்று குறித்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்டின் வடகிழக்கில் மிகவும் ஆபத்தான சம்பவமொன்றை தொடர்ந்து ஆயுதமேந்திய பொலிஸார் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர் Campbelltown, பகுதியை சுற்றிவளைத்துள்ள பொலிஸார் பொதுமக்களை அந்த பகுதியை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/160072
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
Published By: SETHU 01 AUG, 2023 | 12:08 PM அவுஸ்திரேலியாவின் முன்னாள் சிறுவர் பராமரிப்பு ஊழியர் ஒருவர் 91 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதுடன், அக்காட்சிகளை படம்பிடித்தார் என வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இது மேற்படி நபர் மீது தொடர்பாக நீதிமன்றத்தில் 1,600 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒரு டசினுக்கும் அதிகமான சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 15 வருடங்களுக்கும் மேலாக, இளம் சிறுமிகளை இந்நபர் துஷ்பிரயோகப்படுத்தினார் என பொலிஸார் கூறுகின்றனர். 45 வயதான இந்நபர், 2022 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டார். எனினும், பொலிஸார் விசாரணை நடத்துவதற்கும் பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
அடுத்த சில தினங்களில், விமான வெடிகுண்டு வெடிக்கலாம்! வெள்ளை மாளிகை அதிகாரிகள் எச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகக் கடுமையாக்க உத்தரவு. [Thursday, 2011-07-07 20:36:40] வெள்ளை மாளிகை அதிகாரிகள், விமான நிறுவனங்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அடுத்துவரும் சில தினங்களில் விமானங்களுக்குள் வெடிகுண்டை வெடிக்க வைக்கும் தீவிரவாதத் திட்டம் ஒன்று முயற்சிக்கப்படலாம் என்பதே இந்த அவசர எச்சரிக்கை. அமெரிக்காவிலுள்ள சகல விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு, வெள்ளை மாளிகை அதிகாரிகளால் இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமான நிறுவனங்களின் வெளிநாட்டு கூட்டு விமான நிலையங்களையும் எச்சரிக்கும்படி, வெள்ளை மாளிகை அதிகாரிகள் கோரியுள்ளனர். வெ…
-
- 0 replies
- 398 views
-
-
இன்று காலை பதிவான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.0 மெக்னிடியுட்டாக இந்த நில அதிர்வு பதிவானதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிலோமீற்றர் தொலைவிலும், 516 கிலோமீற்றர் கடல் ஆழத்திலும் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. https://athavannews.com/2023/1347151
-
- 2 replies
- 752 views
- 1 follower
-
-
காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் குண்டுவீச்சு இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா எல்லையிலிருந்து இஸ்ரேல் மீது நேற்று 300 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. அதில் பல ரொக்கெட் குண்டுகள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தன. ஒரு ஏவுகணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது விழுந்து வெடித்தது. அதில் பலர் காயமடைந்தனர். குடியிருப்பு பகுதியில் நடந்த ரொக்கெட் தாக்குதலில் 19 வயது வாலிபர் படுகாயம் அடைந்தார். இத்தாக்குதலை ‘ஹமாஸ்’ தீவிரவாதிகள் நடத்தியது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் பா…
-
- 0 replies
- 450 views
-
-
நீதிபதி மார்கண்டேய கட்ஜூவை அடுத்து விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சியும மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்களின் உளவாளி(பிரிட்டிஷ் ஏஜெண்ட்) என்று தெரிவித்துள்ளார். நீதிபதி மார்கண்டேய கட்ஜூ மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி உத்தர பிரதேச மாநிலம் காசியபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பகத் சிங், சந்திர சேகர் ஆசாத், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் முயற்சியால் மட்டுமே இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. தந்திரம் பெற காந்திய வழி போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் பயனில்லாதவை. காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட். பிஸ்மில் தூக்கிலி…
-
- 7 replies
- 1.6k views
-
-
அழகிரியிடம் பினாமிகளின் பெயர்களில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேல் சொத்து! - தெஹல்கா ஊடகம் செய்தி!! மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பாளருமான அழகிரிக்கு பினாமிகளின் பெயர்களில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தெஹல்கா எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புலனாய்வு குறித்த செய்திகளை வெளியிடும் இவ்வூடகம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் சொத்து விவரங்கள் குறித்து விரிவாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்செய்தியில் அழகிரி தனது உண்மையான சொத்துகளின் விபரங்களை முழுமையாக வெளியிடவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: '2009ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலுக்குப் ப…
-
- 0 replies
- 603 views
-
-
விமான தாங்கி கப்பலின் சோதனைப் பயணம் சீரமைப்புத் திட்டப்பணி நடைமுறையாக்கத்தின் படி, சீனாவின் விமானந் தாங்கி கப்பல் ஆகஸ்டு 10ம் நாள் சோதனைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. திட்டப்படி, இச்சோதனை நீண்டதாக அமையாது. தொடர்புடைய சோதனை நிறைவடைந்தபின் கப்பல் கட்டும் ஆலைக்கு திரும்பி, தொடர்ந்து சீரமைக்கப்பட்டு சோதிக்கப்படும் என்று தெரிகிறது. http://tamil.cri.cn/121/2011/08/10/1s109631.htm
-
- 5 replies
- 822 views
-
-
புத்தரின் தலையைப்போல லண்டனில் மெழுகுதிரி விற்பனை [07 - June - 2007] புத்தர் பெருமானின் தலையைப் போல தயாரிக்கப்பட்ட மெழுகுதிரி பிரிட்டனில் விற்பனை செய்யப்படுவதற்கு அங்கு வாழும் இலங்கையர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் கடந்த வருடமும் இதேபோல புத்தரின் தலையை ஒத்த மெழுகுதிரி விற்பனை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு பின்னர் அந்த மெழுகுதிரி விற்பனை நிறுத்தப்பட்டது. தற்போது ஒரு தனியார் நிறுவனம் மீண்டும் இந்த மெழுகுதிரி விற்பனையை ஆரம்பித்துள்ளது. தினக்குரல்
-
- 16 replies
- 2.7k views
-
-
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பதவிவிலகுகின்றார் December 21, 2018 அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் என் மெற்றிஸ் ( James N. Mettis) பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பதவிவிலகலுக்கான கடிதத்தினை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கேற்ப செயற்படும் பாதுகாப்பு செயலாளரை நியமிப்பதற்கு, ஜனாதிபதிக்கு உரிமை உள்ளது என, மெற்றிஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மெற்றிஸ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதவி விலகுவதாக ட்ரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2 வருடங்களாக மெற்றிஸ் தமது நிர்வாகத்தின் கீழ் சிறந்த சேவையை ஆற்றியுள்ளதாகவும், ட்ரம்ப்…
-
- 0 replies
- 414 views
-
-
ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் இரானுக்கு எதிராக விமானம் தாங்கிய அமெரிக்க போர்க் கப்பல் புறப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏமனில் அதிபர் ஹதி ஆதரவு படைகளை எதிர்த்து இரானின் ஆதரவோடு ஷியாப் பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு அந்நாட்டில் முன்னேறி வருகின்றனர். பல நகரங்களை அவர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இரானைத் தவிர இவர்களுக்கு ஏமன் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே ஆதரவு படையும் சண்டையில் ஈடுபடுகின்றனர். ஏமன் அரசுக்கு ஆதரவாக சன்னி பிரிவு மக்கள் அதிகம் நிறைந்த சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகளின் படைகள் போர் நடத்தி வருகின்றன. கடந்த மாதம் 26-ஆம் தேதில் நடந்து வரும் கடுமையான போரில் இதுவரை சுமார் 700 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 3000 பேர் ப…
-
- 0 replies
- 532 views
-
-
மே 7ம் தேதி இங்கிலாந்து பொதுத் தேர்தல்: - யாருக்கு வெற்றி ! [Tuesday 2015-05-05 20:00] நாளைய மறுநாள், மே 7ம் தேதி, இங்கிலாந்து பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தான் வரும் ஐந்தாண்டுக்கு இங்கிலாந்தை எந்தக் கட்சி ஆட்சி செய்யப்போகிறது என்று தீர்மானிக்கும். இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்திருக்கும் புதிய இளவரசியால் இங்கிலாந்தில் அரசியல் பரபரப்பு கொஞ்சம் தனிந்திருக்கிறது. இருந்தாலும், இந்த முறை எந்தக் கட்சி வெற்றிப் பெறும், என்று இணையங்களில் மக்களிடம் கருத்து கேட்டி கணிக்கப்பட்டு வருகின்றன. அப்படி YouGov என்ற பிரபல இணையம் மேற்கொண்ட கருத்து கணிப்பின் முடிவில் ஒரு அதிர்ச்சி கரமான முடிவு கிடைத்துள்ளது. இங்கிலாந்து தேர்தலில் மொத…
-
- 2 replies
- 755 views
-
-
Published By: SETHU 28 MAR, 2024 | 02:08 PM சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர். கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன. கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீட…
-
-
- 4 replies
- 430 views
- 1 follower
-
-
சம்பவ இடத்தில் பாதுகாப்புப்படையினர் குவிந்துள்ளனர்பிரான்ஸின் தென்கிழக்குப்பிராந்தியத்திலுள்ள வேதிப்பொருள் தொழிற்சாலையில் இஸ்லாமியவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவமானது பயங்கரவாத தாக்குதலுக்கான அனைத்து முத்திரைகளையும் கொண்டிருப்பதாக பிரெஞ்சு அதிபர் ஃபிராங்கோய்ஸ் ஒல்லாந்த் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்திலிருந்து தலை வெட்டப்பட்ட உடல் ஒன்று கண்டு எடுக்கப்பட்டிருப்பதாகவும், அந்த உடலில் எழுத்துக்கள் கீறப்பட்டிருந்ததகாவும் அவர் தெரிவித்தார். அந்த கட்டிடத்தை வெடித்து தரைமட்டமாக்குவதே இந்த தாக்குதலின் நோக்கம் என்பதில் சந்தேகமில்லை என்றும் ஒல்லாந்து தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஒருவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்ததாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்திருக்கி…
-
- 0 replies
- 260 views
-
-
jசீனா குறித்த அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு மாலைதீவில் சார்க் கூட்டமைப்பின் 17ஆவது உச்சி மாநாடு நடைபெறுகிறது. 1985 இல் முதல் மாநாடு கூட்டப்பட்டாலும் 1991, 1998, 2008இல் இலங்கையில் இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையை உள்ளடக்கிய இவ்வமைப்பு இந்து சமுத்திர பிராந்திய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதைக் காணலாம். 2007 இலிருந்து பார்வையாளர் அந்தஸ்தினைக் கொண்ட அமெரிக்காவானது இம்முறை தெற்கு மற்றும் கிழக்காசிய விவகாரங்களிற்கான உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்கை அனுப்புகிறது. அவரோடு அண்மைக்காலமாக விக்கிலீக்ஸில் குறிப்பிடப்படும் முக்கிய நபரான இலங்கை மற்றும் …
-
- 2 replies
- 760 views
-
-
ஐரோப்பா முழுவதும் பயணம் செய்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பிரித்தானியா முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், ஐரோப்பா முழுவதும் பயணம் செய்ததுடன் கடந்த மே மாதம் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிக்கு இடையில் Seattle-Tacoma சர்வதேச விமான நிலையத்தைக் கடந்து சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த சுற்றுலாப் பயணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என்பதைக் கண்டறிய அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிக காய்ச்சல், இருமல், தும்மல், கண்களில் நீர் வடிதல் மற்றும் ஆரம்ப அறிகுறிகளுக்குப் பிறகு பொதுவாகத் தோன்றும் சரும அழற்ச…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலையில் உள்ளூர் அரசியல்வாதியொருவர் சம்பந்தப்பட்ட தகராற்றில் பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குராம் ஸமான் ஷேய்க் என்ற இஸ்ரேல் வம்சாவழி பிரிட்டிஷ் பிரஜையே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். அவருடனிருந்த விக்டோரியா அலெக்ஷாந்துவானா என்ற ரஷ்ய பெண்மணி படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மெடில்ல என்ற இடத்தில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இசை நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த உள்ளூர்வாசிகளுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் இடையில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது. கூரிய ஆயுதமொன்றால் குத்திக் கொல்லப்பட்டுள்ள நபரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக…
-
- 1 reply
- 751 views
-
-
Published By: RAJEEBAN 23 JUN, 2024 | 01:14 PM அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள வணிகவளாகத்தில் ஆயுதத்துடன் நபர் ஒருவர் காணப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தென்அவுஸ்திரேலிய காவல்துறையினர் சம்பவம் ஒன்று உறுதிசெய்துள்ளதுடன் காவல்துறையினர் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் வணிகவளாகத்திற்குள் ஓடுவதை காணமுடிவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வணிகவளாகத்திலிருந்து வெளியேறுமாறு அவசர வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றன. அவசர நிலை என யா…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
டேம் 999 – க்கு மத்திய அரசு ஆதரவளிப்பதா? தமிழக அரசு தடை விதித்த சர்ச்சைக்குரிய திரைப்படமான டேம் 999 – க்கு ஆதரவளித்த மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என்கிற கேரள அரசின் நிலைப்பாட்டை மையமாக வைத்து கேரள அரசின் நிதியுதவியோடு எடுக்கப்பட்ட டேம் 999 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தமிழக அரசு தடை விதித்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் எடுத்து வைத்துள்ள வாதம் அமைதிக்கும், மாநில அரசின் அதிகாரத்ததிற்கும் எதிரானதாகும். முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து டாம் 999 திரைப்படம்…
-
- 1 reply
- 522 views
-
-
இனி போர் வந்தால், பாகிஸ்தானை 4 துண்டாக.... இந்தியா, உடைக்கும்.... சொல்வது சு.சுவாமி.டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா யுத்தத்தை பிரகடனப்படுத்தாது; ஆனால் இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்தானை இந்தியா 4 நாடுகளாக பிளவுபடுத்திவிடும் என்று பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இந்தியாவுக்குதான் பேரிழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தானின் இந்த மிரட்டல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: பாகிஸ்தானிடம் எந்த ஒர…
-
- 15 replies
- 2.3k views
-
-
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது அக்காள் டெல்லியில் கணவருடன் வசித்து வந்தார். அவர் கர்ப்பமாக இருந் தார். எனவே அவருக்கு உதவு வதற்காக சாந்தினி டெல்லி வந்து தங்கினார். அப்போது ஆதர்ஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெய் சங்கர் என்ற வாலிபர் சாந்தினியை சந்தித்தார். அவரை காதலிப்பதாக கூறி னார். இதை உண்மை என நம்பிய சாந்தினி ஜெய்சங்கரை காதலித்தார். இருவரும் அடிக் கடி தனியாக சந்தித்து பேசிக் கொண்டனர். கடந்த 12-ந்தேதி ஜெய்சங்கர் சாந்தினியை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்து சென்றார். ஆனால் தனது வீட்டுக்கு அழைத்து செல்லாமல் அவரு டைய நண்பர் பர்வீஷ் என்ப வர் வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் இருவரும் சேர்ந்து சாந்தினியை ஒரு விபச…
-
- 0 replies
- 1.1k views
-