உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரு ரூபாய் விலையில் ரேஷன் கடையில் 30 கிலோ அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. கர்நாடகா சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் பங்கேற்றனர். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி வெளியிட்டார். அதில், ஒரு ரூபாய் விலையில் ரேஷன் கடையில் 30 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டி இல்லாத வேளாண் கடன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரை 3 சதவீத வட்டியில் விவசாயக் கடன் வழங்கப்பட…
-
- 1 reply
- 353 views
-
-
கைதிகளுக்கு ஒபாமாவின் இறுதிப் பரிசு! தனது அதிகாரத்தை பயன்படுத்தி 209 பேருக்கு தண்டனையை குறைத்தும், 64 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியும் அமெரிக்க ஜனாதிபதியாக தனது இறுதி பரிசை வழங்கியுள்ளார் பராக் ஒபாமா. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார். அதனால் வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா வெளியேறவுள்ள நிலையில் பல்வேறு குற்றங்களில் கைதாகி சிறையில் தண்டனை கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள 209 கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்தும், 64 பேருக்கு மன்னிப்பு வழங்கியும் இன்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாக பதவி ஏற்ற பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இதுவரை 1385 கைதிகளின் தண்டனை கால…
-
- 0 replies
- 268 views
-
-
7 ஜூன், 2013 (செய்தியாளர்கள் இருவரும் அலெப்போ பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்ததாக பிரஞ்சு வானொலி கூறுகிறது) சிரியாவில் காணாமல்போயுள்ள இரண்டு ஊடகவியலாளர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். ஊடகவியலாளர்கள் அவர்களின் சொந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்ல, எனவே அவர்களை பிடித்துவைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று அதிபர் ஒல்லாந்த் சுட்டிக்காட்டியுள்ளார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரஞ்சு அதிபர் அங்கிருந்துகொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார். காணாமல்போயுள்ள இரண்டு ஊடகவியலாளர்களும் தமது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பிரஞ்சு வானொலியான யூரோப் வன் அறிவித்து…
-
- 1 reply
- 473 views
-
-
கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியதாக தகவல் கிடைத்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் 50 பேர் குதிரைகளில் கடந்த 16ம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சுமார் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். மேலும் அங்கு அவர்கள் கடந்த 17ம் தேதி காலை வரை தங்கியுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்ததைப் பார்த்த நம் வீரர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சீன வீரர்களோ இது எங்கள் பகுதி நீங்கள் ஆக்கிரமித்த எங்கள் பகுதியில் இருந்து வெளியேறுங்கள் என்று இந்திய வீரர்களிடம் தெரிவிக்கும் வகையில் பேனர்கள் வைத்துள்ளனர். ஒரு வழியாக 2 நாட்கள் சண்டைக்குப் பிறகு கடந்த 18ம் தேதி அவர்கள் இந்திய எல்லையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த சண்டையில் உய…
-
- 5 replies
- 343 views
-
-
முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு... இந்தியன் கொவிட், மாறுபாடு கடுமையான இடையூறு: பிரதமர் பொரிஸ் இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்தியன் கொவிட் மாறுபாடு கடுமையான இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தியன் கொவிட் மாறுபாடு கணிசமாக அதிக அளவில் பரவக்கூடியதாகக் கண்டறியப்பட்டால் சில கடினமான தேர்வுகள் இருக்கக்கூடும் எனவும் எச்சரித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு இடையிலான காத்திருப்பு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 12 வாரங்களிலிருந்து எட்டு ஆக குறைக்கப்படும்’ என கூறினார். இந்தியன் கொவிட் மாறுபாட்டின் தொற்றுகள் கடந்த வாரத்தி…
-
- 0 replies
- 244 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது பிரிட்டன்; 44 ஆண்டு உறவு முடிவுக்கு வந்தது. * பிரிட்டன் விகிய இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளல்ல என்கிறார் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டுஸ்க்; பிரிட்டன் விலகல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளில் முடியுமா? * கேட்கும் திறன் இல்லாவதர்கள் உதட்டசைவின் மூலம் எதிரிலிருப்பவர் பேசுவதை புரிந்துகொள்வதற்கான மிகப்பெரிய ஆராய்ச்சியை முன்னெடுக்கிறது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்; மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் மற்றுமொரு நடவடிக்கை.
-
- 0 replies
- 316 views
-
-
துபாயில் வசித்து வரும் முகைதீன் பிச்சை என்ற மனித வள மேம்பாடு மற்றும் நிர்வாக ஆலோசகர் நடத்திய இமெயில் சர்வேயில், பிரதமர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதாதான் பொருத்தமாக இருப்பார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனராம். இமெயில் மூலம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தினாராம் முகைதீன் பிச்சை. அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளார். அரபு நாடுகள், சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, இலஙகை, தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரிடம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளார் முகைதீன் பிச்சை. அதன் முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது பிரதமர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருவருமே பொருத்தமானவர்கள் என பலரும் கர…
-
- 1 reply
- 643 views
-
-
செளதி வந்தடைந்தார் அதிபர் டிரம்ப்; தயார் நிலையில் பல பில்லியன் டாலர் ஒப்பந்தங்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் வெளிநாட்டு பயணம் ரியாத்திலிருந்து தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்கா - செளதி அரேபியா இடையே இன்று (சனிக்கிழமை) பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இன்று (சனிக்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி, செளதி தலைநகரில் மன்னர் சல்மான், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை வரவேற்றார். அதிபர் டிரம்பின் 8 நாள் பயணத்தில் இஸ்ரேல், பாலத்தீன பிராந்தியங்கள், பிரஸ்ஸல்ஸ், வத்திக்கான் மற்றும் சிஸிலி ஆகிய இடங்கள் இடம்பெறுகின்றன. படத்தி…
-
- 0 replies
- 238 views
-
-
பாகிஸ்தான்: திசை அறியா பயணம் ‘பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனா இருந்தா, பாதி சுமை குறைஞ்சா மாதிரி'. இந்த ‘பாக்கியம்', நமக்குக் கிட்டவே கிட்டாது போல் இருக்கிறது. பாகிஸ்தானின் அரசியல் மாற்றங்கள் நமக்கு கவலை அளிப்பதாகவே உள்ளன. தனது வருமானத்தை சரியாக காட்டத் தவறிய காரணத்தால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அன்றே அவர் பதவி விலகி விட்டார். இதையடுத்து, முன்னாள் பெட்ரோ லியத் துறை அமைச்சர் ஷஹித் காகான் அப்பாஸி இடைக்கால பிரதமராகி இருக்கிறார். பதவி விலகிய நவாஸின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப், இப்போது பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ளா…
-
- 0 replies
- 459 views
-
-
அமெரிக்காவின் ஹியூஸ்டனில் பெருவெள்ளம் மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர் ; சரக்கு ரயில்களில் கீழே மறைந்து வரும் குடியேறிகளை தடுக்க, அவர்களை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையை ஆஸ்திரியா அதிகரித்துள்ளது மற்றும் எகிப்தில் பெண்ணாக பிறந்து ஸ்காட்லாந்தில் ஆணாக மாறியவரின் கதை ஆகியவை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 326 views
-
-
ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தை விலக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மியின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் பூஷண் அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இது பிரசாந்த் பூஷணின் சொந்த கருத்து என ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷண், ஜம்மு காஷ்மீர் மக்கள் விரும்பினால் பொதுவாக்கெடுப்பு நடத்தி ராணுவ பாதுகாப்பை விலக்கி கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், காஷ்மீரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்…
-
- 0 replies
- 359 views
-
-
உக்ரேனில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை உக்ரேனின் கீவ் நகரின் ரஷ்ய படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அமெரிக்க ஊடகவியலாளர் என கீவ் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறித்த ஊடகவியலாளர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/124093
-
- 0 replies
- 251 views
-
-
முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டி, தனது உடலில் கத்தியால் குத்திக் கொண்டு ஒரு அதிமுக தொண்டர் நேர்த்திக் கடன் செலுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ளது தேன்கனிக்கோட்டை. இங்குள்ள யாரப் தர்ஹாவில், கந்தூரி உரூஸ் விழா நடந்தது. இத் திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு 8வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் பாசு என்கிற ஜோஷே இஸ்லாம், நீர் மோர்ப் பந்தல் அமைத்து நீர் மோர், குடிநீர் வழங்கி வந்தார். மாலையில் முதல்வர் ஜெயலலிதா பல்லாண்டுகள் வாழ வேண்டும், இந்தியாவின் பிரதமராக அவர் வர வேண்டும் என்று கூறி பந்தலுக்கு வந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் திருவிழாவுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்பு, திடீரென கத்தியை எடுத்து தனது மார்பில் பல முறை குத்திக் க…
-
- 13 replies
- 3.5k views
-
-
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக நியூயோர்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராக மாட்டார் என்று அவரது வழக்குரைஞர் ரவி பத்ரா தெரிவித்துள்ளார். சோனியா காந்தி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றதாகவும், அப்போது மனித உரிமை மீறல் வழக்கு தொடர்பாக அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டதாகவும் சீக்கிய அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், இதனை சோனியா மறுத்துள்ளார். கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை அமெரிக்காவிலோ அல்லது நியூயோர்க்கிலோ தாம் இல்லை என்று சோனியா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்தி நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க உள்…
-
- 1 reply
- 362 views
-
-
சர்வதேச அழுத்தங்களை மீறி நடந்த குர்து மக்களின் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு குர்து மக்கள் காத்திருப்பது குறித்த செய்தித் தொகுப்பு, வடக்கு நைஜீரியாவில் உள்ளூர் மக்களை அச்சுறுத்தும் போகோ ஹராம் குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் பாகிஸ்தானில் தெரு நாய்களிடம் அன்பு காட்டும் மீனவர்கள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 279 views
-
-
வடகொரியாவில் ஏவுகணைகள் இடமாற்றம்; சந்தேகத்தில் சர்வதேசம் வடகொரியத் தலைநகர் பியோங்யேங்கில் உள்ள ஏவுகணை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் இருந்து ஏவுகணைகள் சில எடுத்துச் செல்லப்பட்டதாக தென்கொரிய மற்றும் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடுத்துச் செல்லப்பட்ட ஏவுகணைகள் மத்திய தர அல்லது கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைகளாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஏவுகணைகள் எங்கு எடுத்துச் செல்லப்பட்டன, எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தென்கொரிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜப்பான்…
-
- 0 replies
- 431 views
-
-
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை மீறி மீண்டும் தலிபான் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ரத்தம் தோய்ந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாதிகளின் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும்விதமாக அந்நாட்டு அரசு கடந்த மாதம் அவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் போராளிகள் தாங்கள் கடத்திச் சென்ற துணை ராணுவத்தினர் 23 பேர் கொல்லப்பட்ட விபரத்தை வெளியிட்டபோது பேச்சுவார்த்தை பாதியில் முறிந்துபோனது. கடந்த வார இறுதியில் போராளிகள் இயக்கமான டெஹ்ரிக்-இ-தலிபான் ஒரு மாத போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு பிரதிநிதிகளும் நேற்று அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெஷாவரிலிருந்து 50 கி.மீ தொலைவ…
-
- 0 replies
- 277 views
-
-
டிரம்ப் - ரஷ்யா விசாரணை: முதல் குற்றச்சாட்டு பதிவு என ஊடகங்கள் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionரஷ்யாவோடு தனக்கு எந்தவிதமான ரகசிய உடன்படிக்கைகளும் இல்லை என டிரம்ப் கூறியுள்ளார் கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகர் ராபர்ட் ம…
-
- 0 replies
- 278 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைREUTERS Image captionகைது செய்யப்பட்ட சய்ஃபுல்லோ சாய்போவ் விளம்பரம் நியூ யார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது பயங்கரவாத குற…
-
- 0 replies
- 248 views
-
-
செம்மொழி மாநாட்டை திசை திருப்ப பார்ப்பவர்கள், தமிழ் கொடிக்கு முன்னே தடம் காண முடியாமல் தாழ்ந்திடுவர்: கொலைஞர் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை திசை திருப்ப பார்ப்பவர்கள், நம் தமிழ் கொடிக்கு முன்னே தடம் காண முடியாமல் தாழ்ந்திடுவர்' என்று முதல்வர் கருணாநிதி கூறி உள்ளார். இது குறித்து முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவையில் நாம் நடத்தவிருக்கின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த பிறகு, எத்தகைய பயன்களை விளைவிக்கும் என்பதற்கு முன்னோட்டமாக ஓர் இனிய செய்தியை உடன்பிறப்பே; உனக்கும் தமிழ் உலகிற்கும் சொல்லுகிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நமது தமிழ் வல்லுநர்கள், மொழிக் காவலர்கள், ஆய்வாளர்கள் அகழ்ந்தெடுத்த அரிய கருவ…
-
- 0 replies
- 827 views
-
-
பூகம்பம் ஏற்பட்டாலும் இடிந்து விழாத கட்டிடம் பூகம்பம் ஏற்பட்டு கட்டி டங்கள் இடிந்து விழுவதும், ஏராளமானோர் உயிர் இழப்ப தும் இப்போது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகி வருகின் றன. நில நடுக்கம் மற்றும் சுனாமி ஆபத்து ஏற்படுவதை முன் கூட்டியே கண்டு பிடித்து எச்சரிககை விடுக்கும் வகையில் புதிய எச்சரிக்கை கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் டோக்கியோ பல்கலைகழகத்தை சேர்ந்த ஒரு நிபுணர் புதிய வீடு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த வீடு 6 அல்லது 7 ரிக்டர் அளவு வரை நில நடுக்கம் ஏற்பட்டாலும் இடிந்து விழா மல் அப்படியே நிற்கும். கான்கிரிட் சுவர் மற்றும் துண்களுக்கு இடையே பிளாஸ்டிக் பலகைகள், பிளாஸ்டிக் வலைகள் ஆகிய வற்றை வைத்து இந்த புதிய வகை வீட்டை உருவாக்கி இருக்கிறார்…
-
- 0 replies
- 1.3k views
-
-
கனடாவின் மிகப்பெரிய பணக்காரத் தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு கனடாவின் மிகப்பெரிய பணக்காரர்களான பேரி ஷெர்மன்,மற்றும் அவரது மனைவி ஹனி ஷெர்மன் ஆகியோர் இறந்து கிடந்தமை பெரும் புதிராக உள்ளது எனவும்; விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்வும் கனடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கனடாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான அபோடெக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பேரி ஷெர்மன் தம்பதியினரே இவ்வாறு உயரிழிந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். இவர்களது உடலகள் கனடாவின் டொராண்டோ நகரின் வடகிழக்குப் பகுதியில் போர்வை ஒன்றில் சுற்றப்பட்டு அவர்களது வீட்டிலிருந்து அகற்றப்பட்டு, வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இறந்து …
-
- 1 reply
- 589 views
-
-
நரேந்திர மோடியின்.... அமைச்சரவை. வெங்கையா நாயுடுவுக்கு விவசாயம்? பியூஷ் கோயலுக்கு வர்த்தகம்? ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை? சுஷ்மாவுக்கு வெளியுறவுத் துறை அல்லது பாதுகாப்புத் துறை? கட்காரிக்கு ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு அமைச்சகம்? அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சகம்? ரவி சங்கர் பிரசாத் சட்டம்? மோடி அமைச்சரவையில் அமிஷ் ஷாவுக்கு இடமில்லை -தற்ஸ் தமிழ் பிரேக்கிங் நியூஸ்- இதில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
-
- 8 replies
- 1.5k views
-
-
கோனிகாவின் கடைசி கேமிரா மார்ச் மாதத்துடன் தனது மினோல்டா கேமரா உற்பத்தியை நிறுத்திக் கொள்ளப்போவதாக கோனிகா நிறுவனம் அறிவித்துள்ளது. போட்டோ பிலிம் உற்பத்தியில் உலகில் மூன்றாவது பெரிய நிறுவனமாகத் திகழும் கோனிகா நிறுவனம், நுõறாண்டுகளாக உற்பத்தி செய்து வரும் கேமராவை இனி உற்பத்தி செய்யப் போவதில்லை என்று அறிவித்திருப்பது போட்டோ, கேமரா தொழில் நுட்ப வளர்ச்சியில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. தவிர, போட்டோகிராபி பிசினசில் இருந்தே மெல்ல மெல்ல விலகிக் கொள்ளப்போவதாகவும் கோனிகா அறிவித்துள்ளது. இனி அந்த நிறுவனம், ஜெராக்ஸ் மெஷின், கம்ப்யூட்டர் பிரிண்டர் மற்றும் மருத்துவக் கருவிகளின் உற்பத்தியில் ஈடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் கேமராவின் பிரமாண்டமான வளர்ச…
-
- 0 replies
- 752 views
-
-
1,003 மதிப்பெண் அள்ளிய ஹோட்டல் ஊழியர் மே 23, 2006 கோவை ஹோட்டலில் வேலை பார்க்கும் பிளஸ்டூ படித்த மாணவர் 1,003 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மேல்படிப்புக்காக நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்துள்ளார் இந்த லட்சிய மாணவர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது தந்தை கந்தசாமி. தாயார் சரோஜா. கந்தசாமி நெல்லையில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த குமார் நன்கு படிக்கக் கூடியவர். அம்பசாமுத்திரத்தில் உள்ள தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்த குமார் தேர்வில் வென்று 1,003 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், குடும்ப கஷ்ட நிலையை உணர்ந்த குமார்…
-
- 0 replies
- 975 views
-