Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வாகனச் சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தார். எச்சரித்தும் நிற்காமல் தாக்க முயன்ற அவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2451870 Gelsenkirchen knifeman killed by German police 'mentally ill' Image copyright EPA Image caption The attack happened outside a police station in Gelsenkirchen German police have shot dead a man who tried to attack officers with a knife in the western city of Gelsenkirchen. Police say a search of the man's flat later did not suggest a terrorist motive. The 37-year-old Turkish citizen is thoug…

  2. திபெத் பகுதியில் நவீன ஆயுதங்கள் சோதிக்கும் சீன இராணுவம்! சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத் பகுதியில் சீன இராணுவம் முன்னெடுத்துவரும் பயிற்சியின்போது, நவீன ஆயுதங்கள் சோதித்துப் பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து வெளியாகும் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சீன இராணுவத்தின் திபெத் படைப் பிரிவானது, புத்தாண்டு பயிற்சியைத் தொடங்கியது. இதில், ஹெலிகொப்டர்கள், நவீன துப்பாக்கிகள், ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திபெத் பீடபூமியில் செயற்படக் கூடிய வகையிலான நவீன பீரங்கிகளும் பயிற்சியின்போது சோதித்துப் பார்க்கப்படுகின்றன. …

  3. ஈராக் பாராளுமன்றில் இன்றைய தினம் வெளிநாட்டு இராணுவத்தினர் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமான் படு கொலை செய்யப்பட்டமைக்கிணங்கவே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் பக்தாதாத்தில் உள்ள ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள், வான்வெளி, நிலம் உள்ள எந்த காரணத்தையும் வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். ஈராக்கின் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டுவ…

  4. அமெரிக்காவின் இராணுவ நிலைகள் தாக்கப்படும் – ஈரான் அறிவிப்பு அமெரிக்காவின் இராணுவ நிலைகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை ஈரான் மேற்கொள்ளும் என அந்நாட்டு ஆன்மீகத் தலைவரின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் ஹொசைன் டெஹ்கான் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய தளபதியை கொலை செய்தமைக்கான பதிலடி நிச்சயம் இராணுவ ரீதியிலானதாக காணப்படும் எனவும் இந்தத் தாக்குதல் இராணுவ இலக்குகள் மீது மேற்கொள்ளப்படும் என்றும் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நான் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன். ஒரு போதும் யுத்தத்தை விரும்பவில்லை என எங்கள் தலைமை தெரிவித்துள்ளது. அமெரிக்காவே யுத்தத்தை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்கள் நடவடிக்கைகளுக…

  5. அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, நடப்பு வாரத்தில் முன்னெடுக்கப்படும் என, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்திருக்கிறார். ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி அண்மையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் உள்ளிட்டவற்றில், அமெரிக்கர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டும், அமெரிக்கர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்பதை அடிப்படையாக வைத்தும், மக்கள் பிரதிநிதிகள் அவையில் தீர்மானத்தை தாக்கல் செய்து இயற்ற உள்ளதாக நான்சி பெலோசி தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற ஒப்புதலை பெறமால், டிரம்ப் நிர்வாகம் தன்னிச்சையாக எ…

    • 0 replies
    • 626 views
  6. கென்யாவில் அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோமாலியாவை ஓட்டி உள்ள லமு கவுன்டியில் இருக்கும் மாண்டா பே தளத்தை அமெரிக்க ராணுவமும், கென்ய ராணுவம் பயன்படுத்தி வருகின்றன. அந்த தளத்தின் மீது சோமாலியாவை சேர்ந்த அல்கொய்தா ஆதரவு அல் சாபாப் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் முகமூடி அணிந்துவந்து அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது நடைபெற்ற சண்டையில் பயங்கரவாதிகள் 4 பேரும் கொல்லப்பட்டு விட்டதாக கென்ய ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் கென்யா, அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்களா எனத் தெரிவிக்கப்படவில்லை. தாக்குதலுக்கு பொறுப்பேற்று அதுதொட…

    • 0 replies
    • 547 views
  7. அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை! > NEWS & ANALYSIS > WORLD > அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை! ENVIRONMENT WORLD அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை! January 2, 2020 marumoli 0 Comments ‘Think . Act . Responsibly’ ஜனவரி 02, 2020 பருவநிலை மாற்றத்தில் நம்பிக்கையில்லாத அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் . சிங்கப்பூர் நிறுவனமொன்று அவுஸ்திரேலியாவின் தண்ணீரைக் கனடிய நிறுவனமொன்றிற்…

    • 0 replies
    • 937 views
  8. சட்டவிரோத எரிபொருள் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கையர்கள் 7 பேர் உட்பட 66 பேர் நைஜீரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரிய கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு சம்பவம் தொடர்பில் 57 நைஜீரிய பிரஜைகளும் 7 இலங்யைர்களுமேக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு அந்நாட்டு கடற்படையினரால் 7 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு , இவ்வாறு மேற்கொண்ட சட்டவிரோத எரிபொருள் மோசடி அதிகரித்திருந்தால் எரிபொருள் துறைக்கு மிக பெரிய அளவிலான பாதிப்பு மற்றும் நஷ்டம் ஏற்பட்டுருக்குமென நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/7250…

    • 0 replies
    • 385 views
  9. ஈராக் சிரியாவில் உள்ள ஈரானிய ஆயுத குழுக்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட விமானதாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்கள் ஈராக்கிய தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் நுழைந்துள்ளது வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக்கில் கடும்பாதுகாப்பிற்கு மத்தியில் காணப்படும் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள்ளேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரகத்தின் மதில் மற்றும் வாயில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வழமையாக தடை செய்யப்பட்ட பச்சை வலயத்தின் ஊடாக ஈரானின் ஆதரவாளர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு பேரணியாக சென்ற பின்னர் தூதரகத்திற்கு …

    • 6 replies
    • 787 views
  10. அமெரிக்கா, தைவான் இடையே போர்ப் பயிற்சி ஒத்திகை நடந்து வரும் நிலையில் இரு நாடுகளையும் எச்சரிக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது தென் சீனக் கடல் பகுதியில் தைவானும், அமெரிக்காவும் போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் குறிப்பிட்ட கடல் பகுதியை உரிமம் கொண்டாடி வரும் சீனா நேற்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து போர் விமானம் புறப்பட்டுச் செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. ஃபிளையிங் ஷார்க் எனப்படும் ஜே 15 என்ற அதிநவீன விமானத்தை புதிய கப்பலில் இயக்கி தனது வலிமையை பறைசாற்றி உள்ளது. சீனா வெளியிட்டுள்ள புதிய வீடியோ அமெரிக்கா மற்றும் தைவானை எச்சரிக்கும்…

    • 0 replies
    • 399 views
  11. பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பூங்காவில் கத்தி குத்து மேற்கொண்ட நபரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரவித்துள்ளது. அதேவேளை கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகி சுமார் நான்கு பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகரிலிருந்து தெற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வில்லேஜுஃப் நகரில் உள்ள பூங்காவிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு , சந்தேக நபரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/art…

    • 0 replies
    • 349 views
  12. மன்னிப்பு கோரினார் திருத்தந்தை! மக்கள் சந்திப்பின் போது பெண் ஒருவரின் கையைத் தட்டிவிட்டதற்காக திருத்தந்தை பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். இத்தாலியிலுள்ள சென்ட் பீற்றர் சதுக்கத்தில் புத்தாண்டின் முதல் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு முன்னர் மக்களை திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தார். இதன்போது திருத்தந்தையை கண்ட உற்சாகத்தில் அவரின் கையை பெண்மணி ஒருவர் இழுத்திருந்தார். இதன் காரணமாக நிலைதடுமாறி விழப்போன திருத்தந்தை பிரான்சிஸ் பெண்ணின் கையைத் தட்டிவிட்டிருந்தார். இந்தநிலையிலேயே தற்போது குறித்த விடயம் தொடர்பாக திருத்தந்தை பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். http://athavannews.com/மன்னிப்பு-கோரினார்-திருத/

  13. “புதிய மூலோபாய ஆயுதத்தை” அறிமுகப்படுத்த வடகொரியா தீர்மானம் வட கொரியாவின் தலைவர் அணுசக்தி திட்டங்களை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் ஒரு “புதிய மூலோபாய ஆயுதத்தை” அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இன்னும் இடம் இருப்பதாகவும் அணுவாயுதக் களைவு குறித்து முடக்கப்பட்டுள்ள பேச்சை, அரசியல் நலன்களுக்காக அமெரிக்கா இழுத்தடிப்பதாகவும் குற்றம் சாட்டினார். அமெரிக்காவுடனான அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த வாரம் நான்கு நாட்கள் தொழிலாளர் கட்சி அதிகாரிகளின் கூட்டத்திற்கு கிம் ஜோங் உன் தலைமை தாங்கினார். இதன்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை…

  14. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், புத்தாண்டில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதன் தொடர்பில் பிளவுபட்ட தம் நாட்டை ஒன்றிணைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். சுமார் 2 வாரங்களுக்கு முன் தேர்தல் வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையைப் பெற்ற ஜோன்சன், தம் புத்தாண்டு உரையில் அவ்வாறு கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் வாக்களித்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள தருணத்தில் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவது தம் முதல் பணி எனத் ஜோன்சன், சொன்னார். பிரெக்சிட் உடன்பாட்டிற்கு முதற்கட்ட ஒப்புதலைப் பெற்றுள்ளார் அவர். இனி நாடாளுமன்றம் அதனை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும். அதன்பின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ப…

    • 0 replies
    • 663 views
  15. முன்னர் அங்கொன்று இங்கொன்றாக தமிழ் பெயர்களில் ஸ,ஷ,ஜ,ஹ,ஶ்ரீ போன்ற எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும். இப்பொழுதல்லாம் அந்த எழுத்துக்கள் இல்லாத தமிழர்கள் பெயரே இல்லை எனலாம். எங்கிருந்து இந்த மோகம் வந்தது அல்லது ஏன் வந்தது என்பதுதான் தெரியவில்லை. கந்தசாமி,சண்முகம், குமாரசாமி, கமலா விமலா, பத்மினி போன்ற பெயர்கள் எல்லாம் பழசாகிவிட்டன போலும். யேர்மனியர்கள் இந்த பெயர் விடயத்தில் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களில் பலர் பழையதையே விருப்பத்துடன் தொடர்ந்து கொண்டு செல்கிறார்கள். எங்காவது கலப்புத் திருமணங்கள் நடக்கும் பட்சத்தில் புதுப் பெயர்கள் வந்து சேர்ந்து கொள்வது இயல்பு. ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்த ஆண்டு பிறந்த குழந்தைகளுக்குச் சூட்டப்பட்ட பெயர்களில் எந்தப் பெயர்…

  16. ரஷ்யாவில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்த்த திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதற்காக, அதிபர் டிரம்ப்புக்கு ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் நன்றி தெரிவித்தார். பீட்டர்ஸ்பெர்க் நகரில் தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரஷிய பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் சந்தேகப்படும்படியாகக் கைது செய்யப்பட்ட இரு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர்களிருவரும் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்த பொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். இந்நிலையில், சரியான நேரத்தில் தகவல் அளித்ததற்காக டிரம்ப்புக்கு அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் வெளியிட…

    • 0 replies
    • 424 views
  17. சூடானில், பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு மரணதண்டனை சூடானில் பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு மரணதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அகமது அல் காஹிர் என்ற பள்ளி ஆசிரியர் கொலை தொடர்பாக பாதுகாப்புபடையினர் 27 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று இடம்பெற்றது. இதில் பாதுகாப்பு படையினர் 27 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்பட்டன. இதனையடுத்தே அவர்கள் 27 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்கள் அதிகம் சாப்பிடக்கூடிய ரொட்டி உட்பட அத்தியாவசிய பொருட்…

  18. ஆயுத தயாரிப்பில் அமெரிக்காவை முறியடித்துள்ள ரஷ்யா: உலக நாடுகளுக்கு சவால் விடுத்தார் புடின் உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக வியப்பில் ஆழ்த்தும் வகையில் புதிய ஆயுத சோதனையை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. இந்த புதிய ஆயுதத்தை எந்த நாட்டு இராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் சவால் விடுத்துள்ளார். அத்துடன், உலகில் ஹைபர்சொனிக் ஏவுகணையை (Hypersonic Weapons) வெற்றிகரமாக ஏவிய முதல்நாடு என்ற பெருமையை கைவசப்படுத்தியதாக புடின் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் இராணுவ உயரதிகாரிகளுடனான சந்திப்புக்கு பின்னர் முக்கிய ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட புடின், “உலக வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவை விட ஒருபடி மேலே சென்று புதிய ஆயுதம் ஒன்றை ரஷ்யா கைவசப்படுத்தியுள…

    • 2 replies
    • 536 views
  19. சீனாவில், 5 லட்சம் உய்குர் இன இஸ்லாமிய குழந்தைகளை, உறைவிட பள்ளிகளுக்கு அனுப்பி, அந்நாட்டு அரசாங்கம் படிக்க வைப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் ((Xinjiang)), தனித்துவ அடையாளங்களோடு வாழும் உய்குர் இன மக்களில், இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் பெருமளவில் உள்ளனர். உய்குர் இன மக்களுக்கு எதிரான சீன அரசின் மனித உரிமை மீறல்கள், பன்னாட்டளவில் புகாராக எழுந்துள்ளது. சிஞ்ஜியாங் மாகாணத்தில் ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, 10 லட்சம் உய்குர் இன ஆண்களையும், பெண்களையும் பிரித்து, தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவிட்டு, அவர்தம் குழந்தைகளை தனியாக பிரித்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு, பெற்றோர் இருந்த…

    • 0 replies
    • 618 views
  20. சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்ல உதவும் தொழில்நுட்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைVIRGIN HYPERLOOP ONE உங்களை ஒரு பெட்டியினுள் அடைத்து, அதை சுமார் 1,123 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு குழாயின் வழியாக சீறிப்பாயவிட்டால் நீங்கள் பொதுவாக பல மணிநேரங்களில் சென்றடையும் இடத்தை இதன் மூலமாக சில நிமிடங்களில் சென்றடைய முடியும். இதுதான் ஹைப்பர்லூ…

    • 2 replies
    • 3.2k views
  21. உலகின் பிரபலமான இளம்பெண்ணாக மலாலா ஐ.நாவினால் தெரிவு December 28, 2019 கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாயைதெரிவு செய்து ஐ.நா கௌரவித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு பெண்களின் கல்விக்காக போராடிய மலாலா தலீபான் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார். அதன்பின்னர் அவர் சர்வதேச அளவில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க தொடங்கினார். 2014-ம் ஆண்டு அவருக்கும், இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ஐ.நா.வின் அமைதிக்கான தூதரானார். மலாலா யூசுப்சாயின் அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவு…

  22. சோமாலிய கார் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 60 ஆக உயர்வு! Published by J Anojan on 2019-12-28 15:49:03 Share சோமாலியாவின் தலைநகர் மொகதீஷுவில் இன்று காலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் தொகை 60 ஆக அதிகரித்துள்ளதாக 'Sky News' சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இந்த தாக்குதல் காரணாக மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளமையினால் உயிரிழப்புகள் அதிரிக்கக்கூடும் எனவும் அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக பொது மக்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே அதிகாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மொகதீஷுவில் …

  23. அமெரிக்காவின் எதிரிநாடுகளுடன் சீனா கூட்டுப் பயிற்சி: மறைமுக தாக்குதலுக்கு முயற்சியா? அமெரிக்காவின் எதிரிநாடுகளான ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட சீனா தயாராகி வருகின்றது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போர் அண்மையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சில நாட்களிலேயே சீனா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் சீனா இத்தகைய அறிவிப்பை நேற்று (வியாழக்கிழமை) சீன கடற்படை செய்தித் தொடர்பாளர் குவின் வெளியிட்டார். ரஷ்யாவுடன் வல்லரசு நாடு என்ற பிரச்சினை, சீனாவுடன் வர்த்தக போர், ஈரானுடன் அணுசக்த…

  24. நைஜீரியாவில் 11 கிறிஸ்தவர்களை தலையை துண்டித்து படுகொலைசெய்துள்ளதாக ஐஎஸ் ஆதரவு அமைப்பொன்று அறிவித்துள்ளதுடன் இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபரில் தங்கள் தலைவர் அபு பக்கர் அல்பக்தாதி கொல்லப்பட்டமைக்கு பழிவாங்குவதற்காகவே இதனை செய்துள்ளதாக ஐஎஸ் ஆதரவு அமைப்பான ஐஎஸ்டபில்யூஏபீ தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டவர்களையே தலையைதுண்டித்து படுகொலைசெய்துள்ளாக ஐஎஸ் ஆதரவு அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட வீடியோவில் 11 பேர் வரிசையாக நிற்பதை காணமுடிகின்றது. முதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்படுவதையும் பின்னர் ஏனையவர்களின் தலைகள் துண்டிக்கப்படுவதையும் காணமுடிகின்றது. இதன் பின்னர் அந்த வீடியோவில் தோன…

    • 0 replies
    • 344 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.