உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
பயணிகளை நோக்கி.. நடுவிரலைக் காட்டிய, பணிப்பெண்... ரஷ்யாவில் களேபரம்! மாஸ்கோ: ரஷ்யாவில் விமானப் பணிப் பெண் ஒருவர் பயணிகளை நோக்கி நடுவிரைலக் காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஓவர்நைட்டில் அவர் உலகம் பூராவும் பரவிவிட்டார்- இந்தப் புகைப்படம் வெளியான காரணத்தால். அந்தப் பெண்ணின் பெயர் தாத்யானா கொஸ்லென்கோ. இவர் ரஷ்ய அரசு நிறுவனமான ஏரோபிளாட் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர் தனது விமானத்தில் பணியில் இருந்தபோது பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டுவது போன்ற ஒரு படத்தை ரஷ்ய சமூக வலைத்தளமான கோன்டேக்டேவில் (பேஸ்புக் போன்றது) போட்டிருந்தார். இது காட்டுத் தீ போல பரவி விட்டது. பலர் இதை எடுத்து ட…
-
- 9 replies
- 831 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இராக்கிய அரச படைகள் மொசூல் நகரின் ஒரு பகுதிக்குள் நுழைந்துவிட்டதாக அறிவிப்பு; "சரணடை அல்லது செத்துமடி" - ஐ எஸ் போராளிகளுக்கு இராக்கிய பிரதமரின் இறுதி எச்சரிக்கை. * இணையத்தில் தொடர்ந்து அவமதிக்கப்படும் வங்கதேசப் பெண்ணின் கதை; பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி பதினைந்து ஆண்டுகளின் பின்னும் தொடரும் கொடுமை. * உலகின் முழுமையான முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை பிபிசி ஆரம்பித்து எண்பது ஆண்டுகள் ஆகின்றன; அந்த முதல் ஒளிபரப்பு எப்படி நடந்தது?
-
- 0 replies
- 446 views
-
-
பிரான்ஸ் குடியரசு கட்சியின் ஆரம்பகட்ட தேர்தலில் சர்கோசி தோல்வி பிரான்ஸ் மத்திய வலது சாரி குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஆரம்பகட்ட தேர்தலில் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசி மூன்றாவது இடத்தையே பிடித்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். "தோல்வியடைந்ததால் எவ்வித கசப்புணர்வும் இல்லை. கவலையும் இல்லை. எனது நாட்டிற்கு நல்லதையே விரும்புகிறேன்" - சர்கோசி இந்த தோல்வியை ஒப்புக்கொண்ட சர்கோசி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் முதலாவதாக வந்த பிரான்சுவா ஃபியோங்கிற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார். மற்றுமொரு முன்னாள் பிரதமரான அலாங் யுபே இரண்டாவதாக வந்துள்ளார். அடுத்த ஞாயிற்றுக்க…
-
- 0 replies
- 515 views
-
-
பிரான்சின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா வைரஸ் தொற்றினால் சாவடைந்தார்! December 3, 2020 பிரான்ஸின் முன்னாள் அதிபர் வலெரி ஜெஸ்கா (Valéry Giscard d’Estaing) தனது 94 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். அண்மையில் மாறி மாறி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக அவரது இல்லத்தில் உயிரிழந்தார் என்று குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். பெப்ரவரி 2,1926 இல் ஜேர்மனியில் பிறந்தவர் வலெரி ஜெஸ்கா. பின்னர் பிரான்ஸின் Auvergne பிராந்திய அரசியல் ஊடாக நாட்டின் தேசிய அரசியலுக்குள் அடியெடுத்துவைத்தார். மைய வலதுசாரி அரசியல்வாதியான அவர் முன்னாள் அதிபர் சார்ள் து ஹோலின் ஆட்சியிலும் அதன் பின்னரும் பல முக்கிய அமைச்சுப் ப…
-
- 0 replies
- 344 views
-
-
கனடாவில் Gatineau, பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு மர்ம நபர்கள் மரணம் அடைந்த சம்பவம் நேற்று நடந்தது. அதில் இறந்தவர்கள் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில், ஒருவர் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. Gatineau, குழந்தைகள் காப்பகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர்களில் ஒருவர் 38 வயதை சேர்ந்த பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர் என்றும் அவருடை பெற்றோர் பிரெஞ்சில் தற்போது வசித்து வருகிறார்கள் என்பது காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த மற்றொருவரின் பெயர் மற்றும் விபரங்கள் தெரியவில்லை. மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தின் காரணமும் இன்னும் அறியப்படவில்ல…
-
- 0 replies
- 391 views
-
-
தேசியத்தலைவர் பிரபாகரன் உயிருக்கு ஆபத்து என்கிறார் திருமாவளவன். சிந்தியுங்கள் திருமாவளவன் அவர்களே என்கிறோம் நாங்கள். செத்தாலும் மக்களோடு மக்களாகத்தான் சாவேனே தவிர ஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கையில் கிடைக்க கூடாது என்று சபதம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிற விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். தலைவர் மேல் பாசமுள்ள திரு தொல் திருமாவளவனிற்கு ஒரு சில சிந்திக்கவேண்டிய விடயங்களை இங்கே முன்வைக்கின்றேன். ஈழத்தமிழரின் விடுதலைக்காக சாகும்வரை உண்ணாநோன்பிருந்தும் பல போராட்டங்களை நடாத்தியும் அரும்பாடுபட்டு வரும் திரு தொல் திருமாவளவன் அவர்கள் இன்று…
-
- 1 reply
- 3.9k views
-
-
மலேசியா... "பத்துமலை முருகன்" ஆலயத்தில் நான்காவது படிக்க கட்டு, திறந்து வைக்கப் பட்டது. மலேசியாவில் பிரசித்தி பெற்ற அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்றான.... "பத்துமலை திருத்தலத்தில்" கூடுதலாக கட்டப்பட்டுள்ள நான்காவது வரிசை படிகட்டின் திறப்பு விழா வாணவேடிக்கைகளுடன் நேற்று சிறப்பாக நடைபெற்றது. - வணக்கம் மலேசியா நியூஸ். -
-
- 0 replies
- 438 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், துருக்கியில் புத்தாண்டு கொண்டாடியவர்கள் மீதான தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பது குறித்த செய்தி; அமெரிக்க அதிபராக பதவியேற்கும் ட்ரம்ப்பின் ஆட்சிக்காலம் எப்படி இருக்கும்? அமெரிக்க வாக்காளர்களின் கருத்துக்கள்; கியூபாவில் அதிகரிக்கும் ஆங்கில மோகத்தின் தாக்கம் உள்ளிட்ட பல செய்திகள் இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 297 views
-
-
தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா. தலையிட வேண்டும்: சீக்கிய அடிப்படைவாத அமைப்பு கோரிக்கை ஈழத் தமிழர்களுக்குத் தமது ஆதரவைத் தெரியப்படுத்தியிருக்கும் இந்தியாவின் சீக்கிய அடிப்படைவாத அமைப்புக்களில் ஒன்றான டால் ஹால்சா (Dal Khalsa) போர் இடம்பெறும் பகுதியில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் எனவும் கோரியுள்ளது. டால் ஹால்ஸா அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் கன்வர் பால் சிங் இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களின் துன்பங்கள் தொடர்பாக தாம் கவனத்தைச் செலுத்துவதாகக் குறிப்பிட்டார். "ஈழத் தமிழர்களின் துன்பங்களைக் குறைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அனைத்…
-
- 1 reply
- 940 views
-
-
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வற்புறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக பாரதீய ஜனதா அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள பிரதமர் அலுவலக இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் இல்லம் வரும் பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவினர் ஊர்வலமாக புறப்பட்டு பிரதமர் வீடு நோக்கி வருகிறார்கள். http://dinaithal.com/index.php?option=com_content&vi…
-
- 0 replies
- 382 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * டிரம்ப் பதவியேற்றால் மெக்ஸிகோவில் எப்படியான பாதிப்புக்கள் ஏற்படும் என்பது குறித்த ஒரு பார்வை. * பிரிட்டனில், செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதக் கருவை பரிசோதனைக்காக வைத்திருக்கும் காலத்தை இருமடங்காக்க கோரிக்கை. * பிரிட்டனில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் ஏன் சிறப்பு கமெராக்களை பொருத்துகிறார்கள்? ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 456 views
-
-
ஆஸி. - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சிக்கும் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் ஒபாமா நிர்வாகத்தில் கையெழுத்தான ஆஸ்திரேலிய - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் ஓர் "வாய்பேசா ஒப்பந்தம்" என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடமிருந்து வேறுபட்ட கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அகதிகளுக்கு விதித்துள்ள தடை பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின் இறுதியில் கையெழுத்தான ஆஸ்திரேலிய-அம…
-
- 8 replies
- 900 views
-
-
சவூதி அரேபியாவுக்குள் போதைவஸ்துகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் சிரிய பிரஜையொருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது. ஹுஸம் அல் ரஜுப் என்ற மேற்படி சிரிய பிரஜை பெருந்தொகையான போதைவஸ்து மாத்திரைகளை சவூதிக்குள் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அவருக்கு வட ஜாப் மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது மரண தண்டனையுடன் சவூதியில் இவ்வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 51 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அந்நாட்டில் 76 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. பாலியல் வல்லுறவு, படுகொலை, ஆயுதம் ஏந்திய கொள்கை, போதைவஸ்து கடத்தல் என்பன சவூதியில் மரணதண்டனைக்குரிய குற்றங்களாகும். http://w…
-
- 2 replies
- 519 views
-
-
சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இறப்பது தொடர் நிகழ்வாகிப் போய்விட்டது. இதற்கு விசாரணை செய்வது குறித்து காவல்துறையினருக்கு போதிய பயிற்சி தராததும் ஒரு காரணம் என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். வழக்கறிஞர் மன்றத்தின் குற்றவியல் சட்டப் பிரிவின் துணைத் தலைவரான வி.சிதம்பரம் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நடந்த குகன் வழக்கை மேற்கோள் காட்டிக் கருத்துரைக்கையில், “நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக ஒப்புதல் வாக்குமூலங்கள் வாங்கப்படுவதில்லை.” “காரணம் அதன் மேல் பல புகார்கள் எழுந்தன மற்றும் விசாரணையில் வழக்கறிஞர்கள் அது குறித்து கேள்வி கேட்கும் போது அந்த வாக்குமூலங்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் காரணமாக நீதிமன்றம் அது …
-
- 0 replies
- 576 views
-
-
சென்னை மாநகராட்சி மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தை களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு வழங்கும் திட்டம், முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான நாளை முதல் தொடங்கப் படுவதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். ரிப்பன் மாளிகையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: முதலமைச்சர் கருணாநிதி நாளை 86வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கடந்த 70 ஆண்டு களுக்கும் மேலாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டு வருகிறார். அதன் அடையாளமாக அவரது பிறந்த தினமான நாளை முதல் சென்னை மாநகராட்சி மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தை களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் மாநகராட்சியின் சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு அளிக்கும் திட்டம்…
-
- 2 replies
- 2.2k views
-
-
சிம்பாப்வேயில் கொவிட்-19 தொற்று தீவிரம்: சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை! சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) இரண்டாவது தொற்றலை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 41ஆம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடிய சிம்பாப்வே 3,000க்கும் மேற்பட்ட கைதிகளை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 320 கைதிகளை அந்நாட்டு அரசாங்கம் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சிறைச்சாலைகள் நிரம்பிவழிவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் தொற்றினால், 37,751பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1,…
-
- 0 replies
- 191 views
-
-
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் டவாவோ நகரில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராமன்தீப் சிங் கில் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்ப்பட்டுள்ளார். டவாவோ நகரில் வெள்ளிக்கிழமை காலை ஓல் எமர்ஸ் பீச் ரிசார்ட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 30 வயதான ராமன்தீப் சிங் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். இதுபற்றி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராமன்தீப் சிங் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளை முயற்சியைத் தடுக்கும் போதுதான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அண்மைக் காலமாக டவாவோ நகரில் நிகழ்ந்துள்ள 38வது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இது என்றும் கூறப்படுகிற http://tamil.o…
-
- 0 replies
- 346 views
-
-
சிரியா மீது ஐக்கிய இராச்சியம் வீசிய ஏவுகணையில் எழுதப்பட்டிருந்த வசனம்...! சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது எறிவதற்காக ரோயல் எயார் ஃபோர்சஸ் எடுத்துச் சென்ற ஒரு ஏவுகணையில், பழிக்குப் பழி என்பதைக் குறிப்பிடும் வகையில் ‘மென்ச்செஸ்டரில் இருந்து அன்புடன்...’ என்ற எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மென்ச்செஸ்டரில், பிரபல பொப் பாடகி அரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சியின்போது ஐ.எஸ். தற்கொலைப் படை இளைஞன் ஒருவன் நடத்திய தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் - குறிப்பாக இளைஞர், யுவதிகள் மற்றும் சிறுவர், சிறுமியர் - 22 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சிரியாவில் நிலைகொண்டிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் முகாம்கள் மீது ஐக்கிய இராச்சியத்தின் ரோயல்…
-
- 2 replies
- 466 views
-
-
உக்ரேனுக்கு எதிராக... ரஷ்யா, சர்ச்சைக்குரிய எரிவாயு குழாயைப் பயன்படுத்தினால் தடை: ஜேர்மனி எச்சரிக்கை! உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா சர்ச்சைக்குரிய எரிவாயு குழாயைப் பயன்படுத்தினால் மேலும் தடைகள் விதிக்கப்படலாம் என ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் கியேவுக்கான வருகையின் போது உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் நோர்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தின் மீதான தனது கவலையை புரிந்து கொண்டதாக அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறினார். உக்ரேனின் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகக் கூறி ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த திட்டத்தை எதிர்க்கிறார். இது பால்டிக் கடலின் கீழ் இயங்கும் மற்றும் ஜேர்மனிக்கு இரட்டை ரஷ்ய எரிவாயு ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும். ரஷ்ய தலைமையிலான …
-
- 0 replies
- 385 views
-
-
டெல்லி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் அதிர்வுகள் உணரப்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. பலுசிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மாலை 5.05 மணிக்கு டெல்லியில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இந்த அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் பலுசிஸ்தானில் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. மிகப் பெரிய நிலநடுக்கமாக இருப்பதால் பெருமளவில் சேதம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலத்துக்கடியில் 22 கி.மீ. ஆழத்தில் இந்தநிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது…
-
- 0 replies
- 227 views
-
-
புதுடெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி கொலை வழக்கில், அச்சிறுமியின் பெற்றோரே குற்றவாளிகள் என காஸியாபாத் சி.பி.ஐ நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில், கடந்த 2008ஆம் ஆண்டு பல் டாக்டர் தம்பதியரான ராஜேஷ்–நூபுர் தல்வார் ஆகியோரின் மகள் 14 வயது ஆருஷியும், வேலைக்காரர் ஹேம்ராஜும் (45) படுகொலை செய்யப்பட்டனர். ஆருஷி அவரது படுக்கையறையில் பிணமாக கிடந்த நிலையில், ஹேம்ராஜ் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் டேங் அருகே கழுத்து அறுபட்டு கொலையுண்டு கிடந்தார். ஆருஷியும், ஹேம்ராஜூம் படுக்கை அறையில் அலங்கோலமான நிலையில் இருந்ததை ஆருஷியின் பெற்றோர் பார்த்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே இருவரையும் கொலை செய்ததா…
-
- 6 replies
- 1.1k views
-
-
இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்றனர். இந்த பிட்காயின் அதிர்ஷ்டசாலிகள் மத்தியில் பிட்காயினை நினைத்து ஐ.டி துறை பணியாளர் ஒருவர் புலம்பிக்கொண்டிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையை கேட்டால் நமக்கும் பரிதாபமாக தான் இருக்கும். இணைய நாணயம், என்ம நாணயம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் பற்றி சமீப காலமாக தான் இணைய உலகில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன் பிட்காயின் பற்றி கேள்விபட்ட போதே ஹோல்ஸ் , இது தான் எதிர்கால நாணயமாக இருக்கப்போகிறது என உணர்ந்திருந்தார். ஆகவே ஆர்வத்தோடு பிட்காயினை தோண்டி எடுப்பதற்கான செயலிலும் ஈடுபட்டிருந்தார்.…
-
- 2 replies
- 911 views
-
-
அகதிகள் 50 பேர் அரபிக் கடலில் மூழ்கியுள்ளதாக அச்சம் சோமாலியா மற்றும் எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அரபிக் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. யேமனை நோக்கிப் படகில் பயணித்த அவர்களை கடத்தல்காரர்கள் நடுக்கடலில் விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த படகில் எத்தனைபேர் இருந்தார்கள் என்பதை துல்லியமாக கணிப்பிட்டுக் கூற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனை நோக்கிப் படகு சென்றுகொண்டிருந்த வேளை, பாதுகாப்பு அதிகாரிகள் படகினை அண்மித்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து புகலிடக் கோரிக்கையாளர்களை பண…
-
- 0 replies
- 396 views
-
-
ரஷ்யா- உக்ரைனுக்கு இடையேயான நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நான்காவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ரஷ்யாவின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி புடினின் செய்தித் தொடர்பாளருமான டிமிட்ரி பெஸ்கோவ், காணொளி அழைப்பு மூலம் பேச்சுவார்த்தை நடைபெறும் என உறுதிப்படுத்தினார். உக்ரைனின் பேச்சுவார்த்தையாளரும், ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகருமான மைகைலோ பொடோலியாக் ரஷ்யாவின் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். மைகைலோ பொடோலியாக் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில், ‘ரஷ்யா ஆக்கப்பூர்வமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது. ரஷ்யா இப்போது தன்னைச் சுற்றி நடப்பதை போதுமான அளவு உணரத் தொடங்கியுள…
-
- 0 replies
- 222 views
-
-
நாய்களுக்காக தனி பேக்கரி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாய்களுக்காக தனி பேக்கரி ஒன்று திறக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஹரியத் ஸ்டெர்ன்ஸ்டீன் இந்த பேக்கரியை தொடங்கி இருக்கிறார். அங்கு நாய்களுக்காக வெவ்வேறு நறுமணத்துடன் கூடிய பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.சிலர் தங்கள் செல்ல நாயை கடைக்கே அழைத்து வந்து அது விரும்பும் வாசனை உள்ள பிஸ்கெட்டை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.சில வகை பிஸ்கெட்டுகள் பூனை மற்றும் நாய்களுக்கு பிடித்த 'எலும்பு' வடிவங்களில் தயாரிக்கப்பட்டு உள்ளன. முதலில் அனைவரும் வேடிக்கையாக பார்த்துச் சென்றதாகவும், இப்போது சகஜமாக தங்கள் செல்லப்பிராணிகளை அங்கு அழைத்துச் சென்று 'ஷாப்பிங்' செய்வது வாடிக்கையாகி விட்டதாகவும் அத…
-
- 15 replies
- 2.7k views
-