உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27027 topics in this forum
-
தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவானார் தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவாகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரிர் ரமபோசா இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிபராக தெரிவுசெய்யப்பட்டார். இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயேங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தனர். இதனிடையே, அதிபர் பதவிக்கு சிரில் ரமபோசாவைத் தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன்…
-
- 0 replies
- 419 views
-
-
ஹுவாவேயின் நிறுவனர் ரென் சங்ஃபே, அமெரிக்கா தங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிடுகிறது என்று தெரிவித்துள்ளார். சீன அரசு ஊடகத்திடம் பேசிய அவர், சமீபத்தில் அமெரிக்கா விதித்த தடையால் ஏற்பட்ட விளைவுகளை குறித்து பேசிய அவர், எதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது என்று தெரிவித்தார். கடந்த வாரம் அனுமதியில்லாமல் தங்கள் நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்த்தது அமெரிக்கா. அந்த நிறுவனத்தை தடை செய்யு…
-
- 0 replies
- 765 views
-
-
இரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்துகின்றது சிரியா- அமெரிக்கா கடும் எச்சரிக்கை சிரிய அரசாங்கம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றது என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது உறுதியானால் அமெரிக்காவும் அதன் சகாக்களும் உடனடி நடவடிக்கைகளை எடுக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளது. சிரியாவின் வடமேற்கு பகுதியில் அரச படையினர் குளோரின் தாக்குதலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர். அசாத் அரசாங்கம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றது என்பதற்கான துரதிஸ்டவசமான அறிகுறிகள் தென்படுகின்றன என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஓர்கட்டஸ் தெரிவித்துள்ளார். மே 19 ம் திகதி இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற…
-
- 3 replies
- 911 views
-
-
மென்பொருளின் கோளாறே விபத்துக்களுக்கு காரணம் – ஒப்புக்கொண்டது போயிங்! போயிங் 737 MAX ரக விமானங்களுக்கான பாவனை மென்பொருளின் வடிவமைப்பில் கோளாறு இருந்ததை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க குறித்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த பாவனை மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், பாவனை மென்பொருள் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கும் கூடுதல் விவரங்களை போயிங் நிறுவனம் வழங்கியுள்ளது. இதேவேளை, தொடர்ச்சியாக இடம்பெற்ற விமான விபத்துக்களைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் போயிங் 737 MAX ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மென்பொருளில…
-
- 5 replies
- 819 views
-
-
இங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தின் சிறுவர்களுக்கான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவான சிறுவர்கள் உளநலம் பாதிக்கப்பட்டநிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சமூகத்திலும் பாடசாலைச் சூழலிலும் சிறுவர்களுக்கான ஆதரவு சரியாக வழங்கப்படாமையே, இந்தநிலைமைக்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் உளநலம் பாதிக்கப்பட்ட 250 சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவு…
-
- 2 replies
- 849 views
-
-
அமெரிக்கா போர் அச்சுறுத்தலை விடுக்காது ஈரானை மரியாதையுடன் நடத்த வேண்டும் - ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் அமெரிக்காவானது ஈரானை போர் அச்சுறுத்தல் விடுப்பதை விடுத்து மரியாதையுடன் நடத்த வேண்டும் என ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரீப் அழைப்பு விடுத்துள்ளார். ஈரான் போரில் ஈடுபட விரும்புமானால் அது அதற்கு உத்தியோகபூர்வமான முடிவாகவே அமையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணையத்தளத்தில் அச்சுறுத்தல் விடுத்து ஒரு நாள் கழித்து ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மேற்படி அழைப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. "அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றை நோக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் சென்றுவ…
-
- 0 replies
- 382 views
-
-
100,000 அவுஸ்ரேலிய டொலர் மதிப்புள்ள தங்க கட்டிகள் கண்டுபிடிப்பு! அவுஸ்ரேலியாவில் 100,000 அவுஸ்ரேலிய டொலர் மதிப்புள்ள தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கல்கூர்லி பகுதியிலுள்ள தங்கச் சுரங்கத்திற்கு அருகில் இந்த தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்காக எதையோ தேடிச் செல்லும் போது இவை கண்டுபிடிக்கப்பட்டதாக, தங்க கட்டிகளை கண்டுபிடித்தவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் அகழப்படும் முக்கால்வாசித் தங்கம் கல்கூர்லியிலும், அதனைச் சுற்றியப் பகுதிகளிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/100000-அவுஸ்ரேலிய-டொலர்-மதிப்ப/
-
- 0 replies
- 364 views
-
-
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் : 25 பேர் கொன்று குவிப்பு அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர். 3 ஆயிரம் அப்பாவி மக்கள் இந்த தாக்குதலில் பலியானது உலக வரலாற்றில் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது. இந்த தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சி நடத்தி வந்த தலீபான்களை அப்புறப்படுத்தியது. மக்களாட்சியை கொண்டுவந்தது. ஆனாலும் 18 ஆண்டுகளாக போராடியும் தலீபான் பயங்கரவாதிகளை முற்றில…
-
- 0 replies
- 320 views
-
-
மெக்கா நகரின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் : சவுதி அரேபியா குற்றச்சாட்டு ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுத்தி போராளிகளுக்கு ஈரான் அரசு தொடர்ந்து ஆதரவு அளிப்பது…
-
- 0 replies
- 660 views
-
-
வியட்நாமில் உருவாக்கப்பட்டு வரும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை! தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை வியட்நாமில் உருவாக்கப்பட்டு வருகின்றது. சுமார் 72 மீட்டர் உயரத்தில் ‘புத்தா அமிதாபா’ என்ற புத்தர் சிலையே இவ்வாறு உருவாக்கப்பட்டு வருகின்றது. 2015 இல் ஆரம்பமாகியிருந்த குறித்த சிலையின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலையில் மொத்தமாக 13 மாடிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதில் 12 மாடிகளுக்குச் சுற்றுப்பயணிகள் செல்ல முடியும் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, வெண்கலத்தால் செய்யப்பட்ட மிக உயரமான புத்தர் சிலையும் வியட்நாமிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews…
-
- 4 replies
- 1.6k views
-
-
பாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி உக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை அடுத்து நாடாளுமன்றில் பெரும்பானமையை பெற்றுக்கொள்வதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி, பொதுத்தேர்தல் நடத்தவும் அறிவித்தல் விடுத்துள்ளார். அரசியல் அனுபவமில்லாத வொளடிமீர் சிலேன்ஸ்கி கடந்த மாதம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பாராளுமன்றத்தில் அவருடைய புதிய கட்சியின் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவமும் இல்லை என்பதனால் பொதுத்தேர்தல் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் இடம்பெற்ற ஐந்து ஆண்டுகால மோதலில் 13 ஆயிரம் பேர் கிழக்கு உக்ரேனில் உயிரிழந்துள்…
-
- 1 reply
- 679 views
-
-
"ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்" ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அதோடு முடிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஈரானுடானான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலும் பல்வேறு பொருளாதார தடைகளை ட்ரம்ப் விதித்து வருகிறார். இதனால் ஈரான் - அமெரிக்கா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவம் மீ…
-
- 0 replies
- 648 views
-
-
அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி May 19, 2019 அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம் நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். இதனால் லிபரல்கட்சிக்கு பொதுத் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் எனக் கருதப்பட்ட போதிலும் பிரதமர் ஸ்கொட் மாரிசன் தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. #scottmorrison #australia #election #அவுஸ்தி…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிப்பு! ஈராக்கில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், முற்றிலுமாக அழிக்கப்படாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சில இடங்களில் பதுங்கி இருந்து தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் வெடிப்பொருட்களை பதுக…
-
- 0 replies
- 540 views
-
-
ஆரம்பப் பாடசாலைகளில் ஹிஜாப் அணியத் தடை: ஒஸ்ரியாவில் சட்டமூலம் நிறைவேற்றம் ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் சட்டமூலம் ஒஸ்ரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் வலதுசாரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவிற்கு நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால், யூதர்கள் அணியும் யார்முல்கே மற்றும் சீக்கியர்கள் அணியும் பட்கா ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆளும் வலதுசாரி மக்கள் கட்சி மற்றும் வலதுசாரி சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் ஆதரவுடனேயே இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavanne…
-
- 1 reply
- 1.2k views
-
-
தன்னுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக தலிபான் தீவிரவாதிகள் செலவழித்த பணத்தை திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் விரும்பியதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தாலிபன்களின் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்கான பணத்தை அவர்களுக்கு திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அரசின் குழுவொன்று மறுப்புத் தெரிவித்துவிட்டதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடாக இது அமைந்துவிட கூடாது என்பதற்க…
-
- 0 replies
- 391 views
-
-
படத்தின் காப்புரிமை Reuters இரான் - அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், இரான் ஒரு "சாதாரண நாடாக" நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார். வளைகுடா பகுதியில் கடந்த …
-
- 20 replies
- 2.7k views
-
-
அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் பொப் ஹோக் காலமானார் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் பொப் ஹோக் தனது 89ஆவது வயதில் காலமானார். முன்னாள் பிரதமர் தனது வீட்டில் இயற்கை மரணம் அடைந்ததாக அவரது மனைவி இன்று (வியாழக்கிழமை) ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவரது மரணத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொருளாதாரம் நவீனமயமாக்கப்பட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு 1983 முதல் 1991 வரை நாட்டை அவர் வழி நடத்தியிருந்தார். மேலும் அவர் அவுஸ்ரேலியாவின் மத்திய-இடது தொழிற்கட்சி சார்பாக நீண்ட காலமாக பிரதமராக பணியாற்றியிருந்தார். 1947ஆம் ஆண்டில் தொழிற்கட்சியில் இணைந்த அவர் 1953இல் ஒக்ஸ்ஃபோ…
-
- 0 replies
- 470 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images எல்லா விதமான கருக்கலைப்புகளையும் சட்டப்பூர்வமாக தடை செய்துள்ள அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் அலபாமா இணைந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின்படி பாலியல் வல்லுறவில் மூலம் உண்டான கரு, முறையற்ற குடும்ப உறவுகள் போன்றவற்றால் உண்டான கரு ஆகியவற்றையும்கூட கருக்கலைப்பு செய்ய முடியாது. இந்தச் சட்டம் கீழமை நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டாலும், அமெரிக்க உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் அந்தத் தடை நீக்கப்படும் என்று இந்த சட்டத்துக்கு ஆதவானவர்கள் கருதுகின்றனர். …
-
- 0 replies
- 435 views
-
-
ஈராக்கிலுள்ள அமெரிக்க பணியாளர்களை நாடு திரும்புமாறு உத்தரவு! ஈராக்கில் பணிபுரியும் அமெரிக்க பணியாளர்களை உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பி செல்லுமாறு ஈராக்கின் அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பக்தாத் இல் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஏர்பில் இல் உள்ள இணைத்துத்தரகம் ஆகிய இரண்டு இடங்களிலும் பணிபுரியும் அமெரிக்கர்களை நாடு திரும்புமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு ஆணையிட்டுள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈராக்கில் வாழும் அமெரிக்கர்களையும் அமெரிக்க நலன்விரும்பிகளையும் ஈரானும் ஈராக்கிலுள்ள அதன் ஆதரவாளர்களு…
-
- 0 replies
- 400 views
-
-
வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைதொடர்புகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அபாயம் விளைவிப்பதாக கருதப்படுகிறது. எந்த நிறுவனம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிடவில்லை என்றாலும், சீனாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஹுவாவேயை நோக்கியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். …
-
- 0 replies
- 857 views
-
-
தொடங்கியது மோதல்.. எமிரேட், சவுதியின் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்? பகீர் குற்றச்சாட்டு! சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கப்பல்கள், பெர்ஷியன் கடலில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களை ஈரான் தாக்கி அழித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி என்பது ஈரான், ஈராக், ஓமன், சிரியா ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஒரே வழியாகும். இந்த ஒரே வழி மூலம் தான் உலக அளவில் கடல் வழியாக செய்யப்படும் பெட்ரோல் / டீசல் ஏற்றுமதியில் 40 சதவிகித ஏற்றுமதி நடக்கிறது. கணக்குப்படி பார்த்தால், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய்களில் 90% சதவிகிதம் இது வழியாகவே வருகிறது. இந்த சிறிய கடல் பாதைதான் தற்போது பெரிய பிரச்சனை ஆகியுள்…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுவாயுத ஒப்பந்தம் வீழ்ச்சியடைத்த நிலையில் இருநாடுகளுக்குமிடையே போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் எச்சரித்துள்ளார். ஈரானின் சமீபத்திய அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜெரமி ஹண்ட் மற்றும் ஏனைய ஐரோப்பிய வெளியுறவுத்துறை ஆய்ச்சர்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ இன்று பிரஸ்ஸல்ஸில் சந்திக்கவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக பிரஸ்ஸல்ஸ் வருகைதந்துள்ள ஜெரமி ஹண்ட் செய்தியாளர்களிடம் பேசியபோதே போர் மூளும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய ஹண்ட் தெரி…
-
- 0 replies
- 560 views
-
-
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சீனா அதிரடி வரி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கான வரியை ஜனாதிபதி டிரம்ப் பன்மடங்கு உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. இதனால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு மத்தியில் வர்த்தக போர் உருவானது. அதன்பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இந்த வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளனர். http://www.virakesari.lk/article/55820
-
- 0 replies
- 587 views
-
-
விமானத்தை தரையிறக்குவதில் எதிர்பாராத சவாலை எதிர்கொண்ட விமானிகள்! பயணிகள் விமானத்தை தரையிறக்குவதில் ஏற்பட்ட எதிர்பாராத சவாலை எதிர்கொண்ட மியன்மார் விமானிகள் அவ்விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். மியன்மார் தேசிய விமான சேவையின் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் அவ்விமானத்தின் முன் சக்கரங்கள் சீராக தொழிற்பாடாமையின் காரணமாக அவ்விமானத்தை தரை இறக்குவதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், அவ்விமானத்தின் முன் சக்கரங்கள் இல்லாமலும், பயணிகளுக்கு எந்த விதமான இடையூறுகளும் ஏற்படாமலும், குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான சேவை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்து விமான சேவை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எத…
-
- 0 replies
- 686 views
-