Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 16 APR, 2024 | 03:39 PM ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் கு…

  2. மாணவர்களை "கியூ" வரிசையில் வரச் சொல்லி, உறவு கொண்ட ஆசிரியை! விர்ஜீனியா, அமெரிக்கா: தனது வீட்டில் மாணவர்களை வரிசையில் வரச் சொல்லி ஒவ்வொருவராக செக்ஸ வைக்கச் சொன்ன ஆசிரியையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரி்க்காவை இந்த சம்பவம் ஷாக் அடிக்க வைத்துள்ளது. அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை - மாணவர்கள் உறவு தொடர்பான கைதுகள் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் விர்ஜீனியாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியை தனது மாணவர்களை வீட்டுக்கு வரச் சொல்லி அவர்களை வரிசையில் நிறுத்தி ஒவ்வொருவராக உறவு கொண்ட செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அந்த ஆசிரியையின் பெயர் எரிகா லின் மேசா. 28 வயதாகும் இவர் ஸ்டாப்போர்ட் நகரில் உள்ள கலோனியர் போர்ட் உயர்நி…

  3. சேதுத் திடல்கள் - மறவன்புலவு க. சச்சிதானந்தன் சேற்றுக் கரைசலாக, கலக்கல் நீராக, வளைந்து வளைந்து பாய்ந்து, கடலை நோக்கி ஓடுகிறது ஆறு. ஓடும் வழியில் வளைவுகளில் மணல் திட்டுகள் உருவாகின்றன. வெளிவளைவுகளில் நீர் ஓடும். உள் வளைவுகளில் மணல் சேரும், திடலாகும். கடலுடன் ஆறு கலக்கும் முகத்துவாரத்திலும் சேற்றுக் கலக்கல் நீரின் மணல் குவிந்து திடல்களாகும், தீவுகளுமாகும், அக்கரைசலைக் கொணர்ந்த ஆற்று நீரோ கடலுடன் கலந்துவிடும். வெள்ளப் பெருக்குக் காலத்தில் இந்த மணல் திடல்களையும் தன்னுடன் இழுத்துச் சென்று கடலுக்குள்ளே ஆற்று நீர் புகும். முகத்துவாரத் திடல்களும் கரைந்துவிடும். உள்வளைவுத் திடல்களும் கரைந்துபோகும். வைகாசி ஆனியில் பெய்யும் பெரு மழையால் பெருகி ஓடும் ஆறுகளே …

  4. சுப்பிரமணிய சாமி ஹாவர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார் - மதக் கலவரத்தை தூண்டுவதாக குற்றச்சாட்டு!! வாஷிங்டன்: இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது. கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிர…

  5. மீண்டும் பதவியேற்றார் ஸ்கொட் மோரிசன் அவுஸ்திரேலியப் பிரதமராக ஸ்கொட் மோரிசன் மீண்டும் இன்று பிரதமராக பதவியேற்றார். அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்குரோவ் முன்னிலையில், ஸ்கொட் மோரிசன் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அத்துடன் உதவிப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மேக் (Michael McCormack) க்கும் அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர். அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து லிபரல் கட்சி உறுப்பினர்கள், ஸ்கொட் மோரிசனை மீண்டும் பிரதமராக தெரிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/570…

  6. நோட்ரே-டாம் தீ விபத்து : ஈயம் உருகி வளிமண்டலத்தில் கலந்தது பிரான்சின் நோட்ரே-டாம் தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் இரத்த மாதிரிகளை பரிசோதிப்பதற்காக அவர்களை மருத்துவமனைகளுக்கு வருமாறு சுகாதாரத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அசம்பாவிதத்தின் போது தேவாலயத்தின் கூரைச் சட்டங்களில் இருந்த பெருமளவிலான ஈயம் உருகி காற்றுடன் கலந்துள்ளது. இதன்காரணமாக வளி மாசு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பரிஸ் மாநகரத்தின் தீவு (Île de la Cité) பகுதியில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்றின் இரத்தத்தில் ஈயத்தின் துணுக்குகள் கலந்திரு…

  7. பிரதமர் பதவியில் இருந்து விலகியதும் பின்வரிசை உறுப்பினராக அமர்வேன் : தெரேசா மே பிரதமர் தெரேசா மே, தான் பதவியில் இருந்து விலகியதும் பின்வரிசை உறுப்பினராக பாராளுமன்றில் அமர்வேன் என இன்று தெரிவித்துள்ளார். ஜூலை மாத இறுதியில் பதவியில் இருந்து விலகியபின் நம்பர் 10 டௌனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் இருந்தும் வெளியேறிவிடுவேன் என்று குறிப்பிட்டார். 2016 ஆம் ஆண்டு டேவிட் கமரன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதுடன் சிலநாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் விட்டு விலகினார். ரொனி பிளேயர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய அதே நாளிலேயே இடைத்தேர்தலையும் அறிவித்தார். 1975 இல் கொன்சர்வேற்றிவ் தலைவர் பதவியை விட்டு விலகிய ரெட் ஹீத் பின்னர் 26 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் …

  8. குறைந்தளவிலான மக்களைக் கொண்ட இந்து சமுத்திரத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்படும் ஒரு தீவாக விளங்கும் 'மாலை" தீவில் நடந்தது தான்என்ன? அன்று செவ்வாய்க்கிழமை! ஜனாதிபதி மொஹமட் நஷீட் எதிர்பார்த்திராத நாள் என்று கூடக் கூறலாம். திடீரென நாடளாவிய ரீதியில் வெடித்த பாரிய ஆர்ப்பாட்டம். முஹமட் நஷீட் பதவிவிலக வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் பிரதான கருப்பொருளாக இருந்தது. இந்நிலையில் செய்வதறியாது , சொல்வதறியாது தடுமாறிய ஜனாதிபதி முஹம்மது நஷீட் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரது பதவி விலக்கல் ஒரு திட்டமிட்ட சதியா? அல்லது சர்வதேசங்களின் மறைமுக அழுத்தமா என்ற கேள்வி எழும்புகின்றது. ஆம்! அமைதியாக இருந்த இந்த மாலைதீவில் உண்மையில் நடந்தது தான் என்ன என்று அறிந்து கொள்வதற்கு பலரும் பெ…

  9. அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் அன்றே தீக்குளிப்பேன் : கருணாநிதி சென்னை அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றினால், மாற்றப்படும் அன்றைய தினமே தான் தீக்குளிக்கும் நாளாக இருக்கும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் பேசுகையில்; தமிழக முதல்வராக நான் இருந்த போது, சென்னையில் அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு நூலகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள். அண்ணா வாழ்…

    • 13 replies
    • 788 views
  10. துபாயில் தமிழ்ப் பெண்ணுக்கு 50 கிராம் தங்கம் பரிசு சாந்தி ராபின் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, துபாய் மெட்ரோ ரயலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி ராபின் என்ற பெண்ணுக்கு 50 கிராம் தங்கம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சாந்தி ராபின் (54). கடந்த 22 ஆண்டுகளாக துபாயில் உள்ள அரபு குடும்பத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது பணிகளை முடித்த பிறகு, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனது நண்பர் களைச் சந்திக்க துபாய் மெட்ரோ ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத் துவார். இதற்காக, அவருக்கு வழங்கப்பட்ட நம்பர் ஒன் அட்டை யில் பரிசுப்புள்ளிகள் கிடைத்தன. இந்நிலையில், பொதுப் போக்குவரத்து தின வாரத்தை துப…

  11. ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று' [13 - February - 2008] [Font Size - A - A - A] * ரஷ்ய பிரதமர் ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றென ரஷ்ய பிரதமர் விக்டர் ஜுப்கோப் தெரிவித்துள்ளார். விக்டர் ஜுப்கோப் இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் தனது பயணம் தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதில் ஜுப்கோப் மேலும் தெரிவித்துள்ளதாவது; ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய நாடுகளில் ஒன்று இந்தியா. இரண்டு புதிய நண்பர்களிடமிருந்து கிடைக்கும் நட்பைவிட ஒரு பழைய நண்பரிடமிருந்த கிடைக்கும் நட்புதான் மிகச் சிறந்தது. இந்தியாவை எப்போதும் எங்கள…

  12. வரும் மே 7ம் திகதி சுமார் 40 வருடங்கள் கழித்து சிரியாவில் உள்ள பல கட்சிகளும் ஆசனங்களைப் பெற வழிவகுக்கும் பாராளுமன்றத் தேர்தல் சிரியாவில் இடம்பெறவுள்ளது. சிரியாவில் ஏற்கனவே பல தடவை இந்த தேர்தல் பிற்போடப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கது. இதற்கு முன்னர் சிரியாவின் பிரதான கட்சியான தேசிய முற்போக்கு முண்ணனிக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் நிற்பதற்கு அனுமதி இருந்தது. எனினும் அங்கு ஆளும் தரப்புக்கு எதிராகவும் அதிபருக்கு எதிராகவும் புரட்சி வெடித்து பல்லாயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஐ.நா இன் தலையீட்டை அடுத்தே சிரிய அரசு இந்த தேர்தலை மும்மொழிந்துள்ளது. இதற்காக எட்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த சுமார் 7000 வேட்பாளர்கள் பாராளுமன்றத்தி…

  13. உலகின் பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளாக அமெரிக்கா, சீனா விளங்குகின்றன. இந்த நிலையில் உலக நாடுகளின் எதிர்கால பொருளாதார நிலவரம் குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ‘சி.இ.பி.ஆர்.’ என்னும் பொருளாதார வணிக ஆராய்ச்சி சிந்தனையாளர் மையம் கணித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- * 2029-ம் ஆண்டில், சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறும். அமெரிக்கா, முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு சரியும். இந்தியா மூன்றாவது பெரிய வல்லரசாக உருவாகும். * 2030-ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 10 ஆயிரத்து 133 பில்லியன் டாலர்களாக உயரும். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 34 ஆயிரத்து 338 பில்லியன் டாலர…

  14. வடக்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! டோக்கியோ: ஜப்பானின் ஹோக் கைடோ கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. வடக்கு ஜப்பானில் ஹோக் கைடோ கடற்கரை பகுதியில் உராகாவா நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. கடலுக்கு அடியில் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், அலுவலங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்து தங்களது வீடுகளைவிட்டு அலறி அடித்துக் கொண்டு வீதிக்கு வந்தனர். ஹோக்கைடோ பகு…

  15. பிரான்ஸ் ஜனாதிபதியும் பிரித்தானிய பிரதமரும் யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எதுவும் செய்யவில்லை - அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்! பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 'எதனையும் செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அடுத்த வாரம் இரு நாட்டுத் தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்துரைத்த அவர், யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை எனத் தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.…

  16. பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பை வலுவாக்குவதே இந்தியப் பயணத்தின் நோக்கம்: பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே சந்திப்பு | படம்: ஆர்.வி.மூர்த்தி பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்தவே தான் இந்தியா வந்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே தெரிவித்தார். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே 3 நாள் பயணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவுக்கு வந்தார். சண்டீகர் வந்தடைந்த ஹொலாந்தேவை, புகழ்பெற்ற ராக் கார்டனில் ஹொலாந்தேவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரான்ஸ் …

  17. பசுவை வழிபடும் இந்துக்கள் கொல்லப்படுவர்! : ஐ.எஸ். தீவிரவாதிகளின் மிரட்டல்! இந்­தி­யாவில் பசுவை வழி­படும் இந்­துக்­களை கொலை செய்­யப்­போ­வ­தாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் மிரட்டல் விடுத்­துள்­ளனர். ஐ.எஸ். அமைப்பின் கொள்கை பரப்பு பத்­திரிக்­கை­யான தபிக்கில் தீவி­ர­வாதி ஒருவர் வழங்­கி­யுள்ள பேட்­டி­யி­லேயே மேற்­கண்­டவாறு தெரி­வித்­துள்ளார். அவர் அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பசுக்­களை வழி­படும் இந்­துக்­களை குறிவைத்து கொலை செய்­வ­தற்­காக எமது ஐ.எஸ். அமைப்பில் கோரசான் என்ற தனிப்­படை அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஐ.எஸ். இயக்கம் இந்­தி­யாவின் ஜம்மு – காஷ்மீர் மாநி­லத்தில் நுழைய விரும்­பு­கி­றது இதற்­காக இந்­துக்­களை மட்டும் அல்ல ஷியா முஸ்­லிம்­க­ளையும் கொல்­வ…

  18. Published By: DIGITAL DESK 3 28 MAR, 2025 | 12:00 PM அவுஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெள்ளிக்கிழமை (28) அறிவித்துள்ளார். ஐந்து வாரங்கள் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழிற் கட்சி சார்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் லிபரல் கட்சி சார்பாக பீட்டர் டட்டனும் போட்டியிடுகிறார்கள். இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றி பெறும் கட்சி கடந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி…

  19. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மத்திய பகுதியில் உள்ள ரஷ்யா FSB பாதுகாப்பு பிரிவு தலைமையகத்தில், மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கியால், கண்மூடித்தனமாக சுட்டதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். திடீரென இவனது நடவடிக்கையை கண்டு, அப்பகுதியில் இருந்துவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். நிகழ்விடத்தில் வந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தியவனை, சுட்டுக் கொன்றனர். அப்பகுதியில் நீண்ட நேரம் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் போலீசார் கையில் துப்பாக்கியுடன் பதுங்கிச் செல்லும் காட்சிகள் ஒளிபரப்பாகின. துப்பாக்கியால் சுட்ட நபர் யார் எதற்காக சுட்டான் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது…

    • 0 replies
    • 386 views
  20. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை அர்த்தமற்றது – ஈரான்! இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை “அர்த்தமற்றது” என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) விவரித்துள்ளார். கடந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு அனுப்பிய கடிதத்தில், தெஹ்ரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புவதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து ஈரான் வெளிவிகார அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. கடந்த வாரம் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து நே…

  21. வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது April 16, 2025 12:27 pm சீனா மீது கடும் வரிகளை விதித்து வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்காவிற்கு எதிராக சீனா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க நிறுவனமான போயிங் தயாரித்துள்ள விமானங்களை சீன விமான நிறுவனங்கள் வாங்கக்கூடாது என்று சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. விமானங்களைத் தவிர, விமான பாகங்கள் மற்றும் கூறுகளும் விலை அதிகமாகியுள்ளது. முன்னதாக சீனாவின் ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகியவை 2025 மற்றும் 2027 க்கு இடையில் 179 போயிங் விமானங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த விமானங்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையை தடையைத் தொடர்ந்து, சீன நிறுவனங்கள் ஐ…

  22. கும்பகோணம்: பள்ளி விடுதியில் சிறுநீரை குடிக்க வற்புறுத்தி 9-ம் வகுப்பு மாணவன் சித்ரவதை செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களும், கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன் மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன்.கூலித்தொழிலாளி.இவரது மனைவி பூங்கொடி.இவர்களது மகன் பரத்ராஜ்(வயது 14). பரத்ராஜ் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்தான். மேலும் பள்ளி அருகில் உள்ள விடுதியில் பரத்ராஜ் தங்கி இருந்தான். அதே விடுதியில் இப்பள்ளி ஆசிரியர்கள் சிலரும் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று இரவு விடுதியில் மாணவர்கள் மாதாந்திர தேர்வுக்காக சமூக அறிவியல் பாடத்தை படித்து கொண்டிருந்தனர். அப்போது பரத்ராஜ் …

  23. ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் படுகொலை! அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் என அடையாளம் காணப்பட்ட ஒரு அமெரிக்க நபர், 2024 ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கான ஒப்பந்தத்தின் கீழ் சண்டையிட்டபோது கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் 21 வயதான மைக்கேல் அலெக்சாண்டர் க்ளாஸ், ஏப்ரல் 4, 2024 அன்று கிழக்கு ஐரோப்பாவில் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2024 இல் மத்திய புலனாய்வு அமைப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட ஜூலியான் கல்லினாவின் மகனாவார் உக்ரைனில் கொல்லப்பட்ட மைக்கேல் க்ளாஸ். அமெரிக்காவின் மீதான உள்நாட்டு கோபமும், ஒன்லைன் தீவிரமயமாக்…

    • 0 replies
    • 301 views
  24. கொரோனா வைரஸ் தொற்றால் பிறந்து 30 மணி நேரமே ஆன குழந்தைக்கு பாதிப்பு Getty Images சித்தரிக்கும் படம் சீனாவில் பிறந்து 30 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உண்டாகியுள்ளவர்களில் மிகவும் இளம் வயது இந்தக் குழந்தைக்குத்தான். கொரோனா வைரஸ் பரவலின் மூலமாக இருக்கும் வுஹான் நகரில் பிப்ரவரி 2ஆம் தேதி இந்தக் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு முன்னர் இந்தக் குழந்தையின் தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா எவ்வாறு பரவியது என்பது இதுவரை தெரியவில்லை. புதன்கிழமை இந்தக் குழந்தை 3.25 கிலோ எடை இருந்ததாகவும், …

  25. பல்மைரா நகரில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு சிரியாவின் பல்மைரா நகரில் பெரிய புதைகுழி ஒன்றை தாம் கண்டுபித்துள்ளதாகவும் அதில் கிட்டத்தட்ட 40 சடலங்கள் உள்ளதாகவும் சிரியாவின் அரச படையினர் தெரிவித்துள்ளனர். சிரியப் படையினர் பல்மைரா நகரை மீள கைப்பற்றியுள்ளனர் பல்மைரா நகரம் இஸ்லாமிய அரசு என்றுத் தம்மைக் கூறிக்கொள்ளும் தீவிரவாதிகளிடமிருந்து இந்த வாரத்தின் முற்பகுதியில் அரசப் படைகளால் மீட்கப்பட்டது. இந்தப் புதைகுழியில் இருந்த சில சடலங்களின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உடல் எச்சங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்மைரா நகரின் பண்டைய நினைவுச் சின்னங்களை ஐ.எஸ் அழித்துள்ளது கிட்டத்தட்ட ஒராண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.