Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடாவில் (Canada) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா (India) தெரிவித்துள்ளது. இந்த கருத்தை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (07) வெளியிட்டுள்ளார். அத்துடன், கடந்த ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அதிகளவில் எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு இந்தநிலையில் தமது உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதும், கனேடிய தரப்பால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கனடாவின் பிர…

  2. கனடாவில் கத்திக் குத்து ; இருவர் உயிரிழப்பு, ஐவர் காயம் கனேடிய நகரமான கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது இருவர் உயிரழந்துள்ளனர். சனிக்கிழமை இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களை வீட்டிலேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த கத்திக் குத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் பொலிசார் இதுவரை எந்த மரணத்தையோ அல்லது காயத்‍தையோ உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அறிக்கையொன்றையும் பொலி…

  3. கனடாவில் கருணைக்கொலை கனடாவில் கடந்த ஓராண்டில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கனேடியர்கள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. கருணைக்கொலை செய்யப்பட்ட அனைவரும் வைத்தியர்களின் உதவியுடன் சட்டபூர்வமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அவ் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. குறித்த விடயம் தொடர்பாக கனேடிய சுகாதார நிறுவனம் தெரிவிக்கையில், பெரும்பாலும் புற்றுநோயால் அவதிப்பட்டு வருபவர்களே இவ்வாறு உயிரிழப்பதாகவும், வைத்தியர்களின் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கை கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவில் சட்டபூர்வமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25847

  4. Published By: DIGITAL DESK 5 02 JUN, 2023 | 06:53 PM (நா.தனுஜா) கனடாவில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தொலைபேசி மூலமான மோசடிச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ள கனேடிய அரசாங்கம், தொலைபேசி வாயிலாக தாம் எந்தவொரு கட்டணத்தையும் கோருவதில்லை என்றும், எனவே இத்தகைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளைச்சேர்ந்த மாணவர்கள் பலர் கனடாவில் கல்விபயின்று வருவதுடன், குறிப்பாக பெருமளவான இலங்கையர்கள் கனடாவில் உயர்கல்வி பயில்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்டவாறான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கும் கனேடிய …

  5. கனடாவில் காட்டுத் தீயினால் மீட்பு பணிகள் பாதிப்பு : 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் (வீடியோ இணைப்பு) கனடாவில் அதிகரித்து வரும் காட்டுத் தீயால் மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காடுகளில் கடந்த செவ்வாய் கிழமை முதல் தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத் தீ அல்பெர்டா மாகாணத்தின் சில நகரங்களை முற்றிலுமாக அழித்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காட்டுத் தீயால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபோர்ட் மெக்மர்ரி நகரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், விமானம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கிர…

  6. கனடாவுக்குள் சீன நாட்டவர்கள் குடியேறுவதற்கென போலியான திருமணங்களை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் ஏழு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை எல்லைச் சேவைகள் அமைப்புப் பதிவு செய்தது. நான்கு வருட கால விசாரணையின் பின்னர் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. கனடாவில் பிரவேசிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக, பெயரளவில் மட்டுமான திருமணங்களுக்கு ஒவ்வொன்றும் முப்பதாயிரம் முதல் முப்பத்தையாயிரம் டொலர் வரை அறவிடப்பட்டது. போலியான திருமணங்கள் மூலம் கனடாவில் குடிவரவுத் தகுதி பெறுவோரைத் தடுக்கும் வகையில், திருமணம் செய்வதன் மூலம் கனடா வருவோர், அவர்கள் திருமணம் செய்து கொண்டவருடன் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ வேண்டுமென கனேடிய அரசு கடந்த ஆண்டு விதியை மாற்றியமை குறிப்பிடத்தக்கது. http…

  7. கனடா- நபர் ஒருவர் அண்மையில் ஒட்டாவா ஹொட்டேல் ஒன்றில் இருந்து கலிவக்ஸ்சிலுள்ள தனது வீட்டில் இரசாயனப் பொருட்கள் வைத்திருப்பதாக பயமுறுத்தியதும் பின்னர் 42-வயதுடைய குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. வெள்ளிக்கிழமை பல்வேறு வகைப்பட்ட கொள்கலன்களில் அடைக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள் இவரது குடில் மற்றும் கொட்டகைக்குள் தரையில் இருந்து உட்கூரை வரை அடுக்கப்பட்டிருந்ததை புலன்விசாரனையாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இவற்றில் சில ஸ்திரமற்றவையாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையில் மட்டுமின்றி குளிரூட்டிகளின் உள்ளேயும் மற்றய தனிப்பட்ட உபகரணங்கள் சிலவற்றின் உள்ளேயும் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை ஸ்திரமற்றவையாகையால் தாங்கள் தீவிர எச்ச…

  8. கனடாவில் புதிய குடிவரவாளர்கள் ஏனைய கனேடியர்களை விடக் குறைவான வருமானத்தைப் பெறுவதற்கு இன ரீதியிலான பாகுபாடு காரணமாக இருக்கலாமெனக் கருத்து வெளியாகியுள்ளது. கனடாவில் பிறந்தவர்களுக்கு நிகரான வருமானத்தைப் பெறுவதற்கு மொழி, மற்றும் கலாச்சார வேறுபாடுகள் -புதிய குடிவரவாளர்களுக்கு பாதகமாக உள்ளதாக மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் சமுக விஞ்ஞானி ஆர்தர் சுவீட்மன் (Arthur Sweetman) தெரிவித்தார். 1990 களில் இருந்து குடிவரவாளர்களின் வருமான வேறுபாடு அதிகமாக இருந்து வருவதைப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஆனால், வருமான வேறுபாடு தொடர்ந்து வருவதற்கு வெளிப்படையான காரணங்கள் எவையும் இல்லையென சுவீட்மன் தெரிவிக்கிறார். வெளிநாடுகளில் பெறப்பட்ட கல்வித் தராதரங்களையும், அனுபவங்களையும் க…

  9. கனடாவில் இந்தியர்களின் மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு அதிகரிப்பது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கனடா மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கட்டுரை தகவல் குர்ஜோத் சிங் பிபிசி பஞ்சாபி 9 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்தியர்களின் மாணவர் விசா (Student Permit) விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் விகிதம் அதிகமாகி இருக்கிறது. கனடாவின் குடிவரவுத் துறை பிபிசியுடன் பகிர்ந்து கொண்ட தரவுகளில் இது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 2025-இல் முடிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில், 74% நிராகரிக்கப்பட்டுள்ளன. 2023 (27%) மற்றும் 2024 (23%) ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த நிராகரிப்பு விகிதம் கிட்டத்தட்ட …

  10. கனடாவில் டொரன்றோ நகரில் கடந்த திங்கட்கிழமை இலங்கையைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் தமிழ் குடும்பப் பெண்ணொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தக் குடும்பப் பெண் அவர் வசிக்கும் வீட்டின் (9 ஆவது மாடிக்கு) கீழுள்ள குப்பை போடும் இடத்திலிருந்து பலத்த காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டு சனிபுரூக் வைத்தியசாலையில் விரைந்து அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது சந்தேகத்துக்கிடமான மரணமென நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் பெயர் கூட வெளியிடப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளைஇ குறித்த பெண்ணின் கணவரின் பெயர் தவகுமார் செல்வராஜா (வயது- 28) என தெரிவிக்கப்பட்டுள்ள…

  11. கனடாவில் கூட்டத்திற்குள் கார் மோதி விபத்து; பலர் உயிரிழப்பு! கனடாவின் மேற்கு நகரமான வான்கூவரில் நடந்த ஒரு திறந்த வெளி நிகழ்வின் போது, நபரொருவர் தான் பயணித்த வாகனத்தை கூட்டத்திற்குள் வேகமாக செலுத்தி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் சாட்சியங்களை மேற்கொள்காட்டு குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்தாத வான்கூவர் பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் கூட்டத்தின் வழியாக ஒரு கருப்பு SUV வாகனம் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்த…

  12. கனடாவில் கைதுசெய்யப்பட்ட சீனாவின் அதிகாரி சீன நாட்டின் தொலைத் தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ் கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் நிறுவன அதிபரின் மகள், கனடாவில் வைத்து கடந்த முதலாம் திகதி வான்கூர் நகரில் கைதுசெய்யப்பட்டார். எனினும் இது பற்றிய தகவல்களை கனடா நீதித்துறை அமைச்சகம் தற்போதுதான் வெளியிட்டுள்ளது. ஈரான் மீதும், வடகொரியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகளை சீனாவின் ஹுவாவெய் நிறுவனம் மீறியதாக அமெரிக்கா கருதுகிறது. இது தொடர்பிலான விசாரணைகளை அமெரிக்கா நடத்தி வருகின்ற நிலையில்தான் மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டுள்ளார் என ஊகிக்கப்படுகிறது. எனினும் இவரது க…

  13. கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் உள்ள மிசிசாக பகுதியில் வசித்து வந்த Real Estate முகவரின் கொலை தொடர்பாக தமிழ் இளைஞர்கள் இருவர் உட்பட மூவர் கைது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சனவரி 19 இல் இருந்து காணாமல் போன ரியல் எஸ்டேட் முகவரான இவரது உடல் எச்சங்கள் மார்க்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கீழ் பகுதியில் இருந்து நேற்று கண்டு பிடிக்கபட்டும் உள்ளது மேலதிக செய்தி Police confirm body found in Markham home is real estate agent Tony Han

    • 2 replies
    • 581 views
  14. வினிபெக்கில் கோழிக்குஞ்சுகளுடன் தொடர்பு கொண்டதால் சல்மொனெல்லா தொற்று ஏற்பட்டு 34-பேர்கள் சுகயீனமுற்றதாக நாட்டின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கனடிய சுகாதார அதிகாரிகள் விசாரனையில் ஈடுப்பட்டுள்ளனர். ஏப்ரல் 5 தொடக்கம் மே 12வரையிலான காலப்பகுதியில் அல்பேர்ட்டாவில் 17பேர்கள், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13, மற்றும் சஸ்கற்சுவானில் நான்கு பேர்கள் சுகயீனமுற்றமை குறித்து விசாரனை செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். சல்மெனெல்லா தொற்றின் அறிகுறிகள் சல்மொனெலொசிஸ் எனப்படும். காய்ச்சல், தசைபிடிப்புக்கள் மற்றும் வாந்தி போன்றனவும் காணப்படும். ஆரோக்கியமான மக்களிற்கு சிகிச்சை இன்றி குணமடையும் எனவும் ஆனால் சிலருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பொது…

  15. கனடாவில் கௌரவம் பெறும் விபத்தில் இறந்து போன தமிழ் பெண்! ஒன்ராரியோ மாகாண சபையில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவரை கௌரவிக்கின்ற வகையில் சட்ட திருத்தம் ஒன்று நிறைவேற்றப்படுகின்றது. மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை என்கிற பெண் கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி வாகன விபத்தில் இங்கு அண்மையில் துரதிஷ்டமாக இறந்து உள்ளார். இவர் பயணித்த பஸ் வண்டி மீது ட்ரக் வண்டி மோதியது. பொறுப்பற்ற வாகன ஓட்டமே மரணத்துக்கு காரணம் ஆனது. இந்நிலையில் இம்மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவரான பாஸ் பால்கிசூன் தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமாக இதை சபைக்கு சமர்ப்பித்து உள்ளார். இது நிறைவேற்றப்படுகின்ற பட்சத்தில் மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை சட்டம் என்று அழைக்கப்படும். இது நெடுஞ்சாலைகள் போக்குவரத்து சட்டத்தில் கொண்டு வரப்படுகின்ற…

  16. [size=4]கனடாவில் கடுமையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. [/size] [size=4]இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5-035900898.html

  17. உற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 52-29 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்களை இந்த சட்டம் அளிக்கிறது. …

  18. கனடா நாட்டில் ஒண்டோரியாவிற்கு தெற்கே சார்னியா என்ற இடத்தில் புனித கிளார் ஆறு உள்ளது. இதில் திங்கள் பிற்பகல் சுமார் 2.45 மணிக்கு மூன்று பேர் முழ்கினார்கள். இதில் இரண்டு பேர்கள் நீச்சலடித்து தப்பித்தனர். ஆனால் மூன்றாம் நபரைக் காணவில்லை. தகவல் கிடைத்தவுடன் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து தீயணைப்புப்படை,போலீஸ் , கடலோரக் காவல் படையினர் மற்றும் மூழ்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் ஆகியோர் சூரியன் மறையும் மாலை நேரம் வரை காணாமல் போன நபரை தேடினர். பின்னர் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் முழ்கிய நபர் கிடைக்கவில்லை. தொடர்ந்து தீவிரமாக தேடி வருவதாக தீயணைப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கிளார் ஆற்றின் கரையினில் ஏதாவது பிணம் கரை ஒத…

  19. [size=4]கனடாவில் நிலவும் சீக்கிய தீவிரவாதம் குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு இணை அமைச்சர் பிறநீட் கவுர் கனேடிய பிரதம மந்திரி ஸ்ரீஃபன் ஹாப்பரிடம் தெரிவித்தார். [/size] [size=4]டெல்லியில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். [/size] [size=4]கனடாவில் வசிக்கும் இந்திய கனேடியர்களில் பெரும்பாலானவர்களும், கனேடியர்களும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆதரிப்பதாக பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பர் பதிலளித்தார். சீக்கியர்கள் மீது இந்திய அரசு அடக்குமுறையைப் பிரயோகிப்பதாக இந்திய கனேடியர்களில் சிலர் கருதுகிறார்கள். 1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நீதி வழங்கப்படவில்லையென அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். [/size] …

    • 2 replies
    • 640 views
  20. கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலிற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி வழங்கினார் என கனடா அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய அதிகாரிகள் மத்தியிலான தொடர்பாடல்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இந்தியாவின் ரோ அமைப்பின் சிரேஸ்ட அதிகாரிகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக கனடா அதிகாரிகள் இந்திய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. புலனாய்வு தகவல்களை சேகரித்தலில் ஈடுபடுமாறும் சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு இந்திய உள்துறை அமைச்சரும் ரோவின் அதிகாரிகளுமே உத்தரவிட்டனர் என்பது வெளியேற்றப்பட்டுள்ள இந்திய அதிகா…

  21. கனடாவில் உள்ள அல்பெர்ட்டா நகரில் உள்ள சீக்கியர் கோவில் மிகவும் புகழ் வாய்ந்தது. கனடா மற்றும் அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் புனிதமாக கருதி வரும் இந்த கோவிலின் சுவரில் சில மர்ம ஆசாமிகள் ஆபாச ஓவியங்களை வரைந்து சென்றுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள சீக்கியர்கள் இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளித்துள்ளனர். அல்பெர்ட்டா நகரின் தலைநகர் எட்மண்ட்டன் பகுதியில் உள்ள சீக்கியல் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் ஆலயத்தின் சுவர்களில் ஆபாசமாக ஓவியங்கள் வரைந்துள்ளனர். காலையில் இந்த கோவிலின் பக்கமாக வந்த சீக்கியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியில் உள்ள சீக்கியர்கள் நூற்றுக்கணக்கில் அந்த கோவிலின் முன் கு…

  22. Published By: RAJEEBAN 16 JUN, 2023 | 05:45 AM கனடாவின் மனிட்டோபா மாகாணத்தில் சிரேஸ்ட பிரஜைகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தும் டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானதில் 15க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வின்னிபெக்கிற்கு மேற்கே சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் கார்பெரி;க்கு வடக்கே இரண்டு நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடம்த்தில் டிரக் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற உடனேயே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம் கனடாவின் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 15 பேர் உயிரிழந்துள்ளனர் 10 பேர் மருத்துவமனைகளிற்கு எடுத்துச்செல்லப்பட்…

  23. டெபிட் கார்டு மற்றும் கிரிடிட் கார்டு மூலம் செய்யப்படும் மோசடிகள் இந்த ஆண்டு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என டொரண்டோவில் உள்ள Interac Association இன்று விடுத்த ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்த நடந்த டெபிட் கார்டு மோசடி தொகையில் இந்த ஆண்டுதான் மிகக்குறைவான அளவான $38.5 மில்லியன் அளவிற்கு மோசடிகள் நடந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு அதிகபட்சமாக $142 மில்லியன் அளவிற்கு கனடாவில் டெபிட் கார்டுகள் நடந்ததே அதிகபட்சமாகும். கடந்த 2012 ஆம் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகளில் சிப் சிஸ்டம் பொருத்தப்பட்டதே இந்த மோசடியை கட்டுபடுத்தியதற்கான முக்கியமான காரணம் ஆகும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள மேக்னடிக் கார்டுகள் அனைத்திலும் சிப் சிஸ்டம…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சொந்த கட்சிக்குள் இருந்தும் ட்ரூடோ பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச அரங்கில் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது உள்நாட்டு அரசியலிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது. இந்த புத்தாண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார். மையவாத இடதுசாரி கட்சியான என்.டி.பி அதன் பொதுவான அரசியல் செயல் திட்டங்களை கொண்டிருந்ததால் ட்ரூடோவின் அரசாங்கத்…

  25. கனடாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நடைமுறையில் உள்ள residential school system என்று சொல்லப்படும், தங்கியிருந்து கல்வியைப் பெறும் நடைமுறையில் இதுவரை 6000 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 19 நூற்றாண்டு முதல் பழங்குடியினக் குழந்தைகளுக்கு நடைமுறையில் உள்ள இந்தக் கல்வித்திட்ட முறை தொடர்பில், பல்வேறு விமர்சனங்கள் தற்சயம் வெளியாகியுள்ளது. பாலியல் ரீதியான தாக்குதல்கள், தனிமை மற்றும் குடும்பத்தில் இருந்தான பிளவு போன்ற காரணங்களே, இதற்கான காரணங்களாக அமைந்துள்ளன என்று இத்தகவலை வெளியிட்ட உண்மையைக் கண்டறியும் மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இது ஓர் கலாச்சாரப் படுகொலை என்று கனடாவின் உயர்நீதிமன்ற நீதிபதி Beverly McL…

    • 0 replies
    • 386 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.