உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
சென்னை: காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழும் வகையிலான சூழலை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் நிலப்பரப்பில் நிகழ்ந்து வருகிற மனித மாண்புகளுக்கு எதிரான கொலைகள், வன்புணர்ச்சி நிகழ்வுகள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது தினந்தோறும் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் போன்ற சம்பவங்கள் நாம் நாகரீகம் பெற்ற சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்கின்ற கேள்வியை எழுப்பி வருகிறது. அதுவும் சமீபகாலமாக ஊடகங்களில் வெளிவருகிற காஷ்மீர் நிலத்தில் நடக்கின்ற வன்முறை சம்பவங்கள் …
-
- 0 replies
- 520 views
-
-
பொருளாதாரத்தில் ஸ்திரமற்ற நிலை: ஜி20 மாநாட்டில் எச்சரிக்கை ஜி20 நிதியமைச்சர்கள் மாநாடு, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்தமையால் உலக பொருளாதாரத்தில் புதிய ஆபத்துக்களையும், ஸ்திரமற்ற நிலையையும் புகுத்தியுள்ளது என்ற எச்சரிக்கையுடன் சீனாவில் நிறைவடைந்துள்ளது. பிரிட்டனின் வெளியேற்றம் குறித்து பேசுவது எரிச்சலூட்டும் பேச்சாக மாறும் ஆபத்து இருந்ததாக ஜி20 மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் விளைவுகளை சரியான முறையில் எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருந்தது என்றும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருங்கிய கூட்டாளியாக தொடர்ந்து இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது. செப்டம்பரில் நடக்கவுள்ள ஜி20 சம்மேளனத்திற்க…
-
- 0 replies
- 457 views
-
-
டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ., திடீர் வெளிநடப்பு செய்தார். இந்த கூட்டத்தில் தமக்கு 10 நிமிடமே பேச நேரம் தரப்பட்டது என்றும் இது போதாது என்றும் குறைபட்டு வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். இதனால் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சில நிமிடம் பரபரப்பானது. மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் 30 முதல் 35 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் எனது பேச்சை முடித்துக்கொள்ள மணி அடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய அவமானம், எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே , தமிழக மக்களுக்கே ஏற்பட்ட அவமானம். பல மாநாடுகளில் பேசியிருக்கிறேன். இது போன்று நடந்ததில்லை. குறிப்பாக 10 நிமிடத்தில் தமிழகத்தின் தேவையை எடுத்து வைக்க முடியாது, இது பயனற்றது என்றும் முதல்வர் ஜெ.…
-
- 4 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தான் இராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக முதல் பெண் நியமனம் பாகிஸ்தான் இராணுவம் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரியை லெப்டினன்ட் ஜெனரலாக நியமித்துள்ளதாக அந்நாட்டு இராணுவத்தின் ஊடக பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தில் ஏற்கனவே மேஜர் ஜெனரலாக பதவிவகித்த பெண் அதிகாரியான நிகர் ஜோஹர் நேற்றைய தினம் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேவேளை, மூன்று நட்சத்திர ஜெனரலின் பதவியைப் பெற்ற மேஜர் ஜெனரல் நிகர் ஜோஹர், பாகிஸ்தான் இராணுவத்தின் முதல் பெண் அறுவை சிகிச்சை தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தந்தை மற்றும் கணவர் என இருவரும் இராணுவத்தில் பணியாற்றியுள்ள நிலையில், ஜோஹர் 1985 ஆம் ஆண்டில் ராவல்பிண்டியில் உள்ள இராணு…
-
- 0 replies
- 972 views
-
-
இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா (Hagia Sophia) அருங்காட்சியகத்தை மீண்டும் மசூதியாக மாற்றுவதற்கு துருக்கி எடுத்த முடிவால் கவலையடைவதாக புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஹாகியா சோபியா அருங்காட்சியகம் விடயத்தில் துருக்கியின் முடிவு கவலைக்குரியது. இஸ்தான்புல்லின் சாண்டா சோபியாவைப் பற்றி நினைத்து கவலையடைகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஹாகியா சோபியா அருங்காட்சியகம் சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஆலயமாக கட்டப்பட்டது. எனினும் 1453ஆம் ஆண்டில் ஓட்டோமான் (Ottoman) வெற்றியின் பின்னர் ஒரு மசூதி…
-
- 14 replies
- 2k views
-
-
ஓராண்டு மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் எல்லையை கடந்து ஆயிரக்கணக்கான வெனிசுவேலா மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கொலம்பியா செல்ல ஆரம்பித்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையால் கடுமையான பொருளாதார நெருக்கடியை வெனிசுவேலா சந்தித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்கள் என்று அது கூறியவற்றுக்காக வெனிசுவேலா முன்னதாக எல்லையை மூடியிருந்தது. ஜூலை மாத்ததில் சில நாட்கள் எல்லையை கடக்க அனுமதிக்கப்பட்டபோது, சமையல் எண்ணெய், சர்க்கரை, மற்றும் அரிசியை வாங்கி சேமித்து கொள்ள இலட்சக்கணக்கான வெனிசுவேலா மக்கள் எல்லையை கடந்து சென்றனர். கடந்து செல்லும் முக்கிய நிலை ஒன்றில் அதிகாலைக்கு முன்னரே நீண்ட வரிசையில் காத்திருந்த வெனிசுவேலா மக்களை, “இரு நாடுகளும் ச…
-
- 0 replies
- 412 views
-
-
பாரிய பூமியதிர்ச்சி ; சுனாமி எச்சரிக்கை நியூசிலாந்தில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறித்த பூமியதிர்ச்சி 7.2 ரிச்டராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரை பகுதியான ஜிஸ்போர்ன் என்ற பகுதியில் கடலுக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்திலே குறித்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/article/10876
-
- 0 replies
- 563 views
-
-
சிரியா விமானத் தாக்குதல்: அமெரிக்கா, ரஷியா இடையே கடும் வார்த்தைப்போர் அமெரிக்க ஆதரவோடு சிரியாவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தொடர்பாக கடும் வார்த்தைப்போரில்அமெரிக்காவும், ரஷியாவும் இறங்கியுள்ளன சிரியா படைப்பிரிவுகளுக்கு எதிராக போராடும் தீர் அல்-ஸோவுரிலுள்ள இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இதில் டஜன்கணக்கான சிரியா படையினர் கொல்லப்பட்டும், காயப்பட்டும் இருப்பதாக ரஷியா கூறுகிறது. பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்த விமானத் தாக்குதல் ஆபத்திற்குள்ளாக்கி இருப்பதாக கூறியிருக்கும் ரஷியாவின் ஐநா தூதர் விட்டாலி சூர்க்கின், ஐநா, பாதுகாப்பு அவையின் அவசரக் கூட்டத்திற்கு உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டுமென தெரிவித்திருக்கிறார். …
-
- 0 replies
- 414 views
-
-
ஐக்கிய அரபு நாட்டில் பாலின மாற்று அறுவை சிகிச்சை! - விண்ணப்பித்த முதல் பெண் [Sunday 2016-09-25 19:00] ஐக்கிய அரபு எமிரேட்டுகளில், பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமானதாக ஆக்கிய புதிய சட்டம் ஒன்றின் கீழ் , முதல் விண்ணப்பதாரராக ஒரு பெண், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்துள்ளார். ஐக்கிய அரபு நாட்டில், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலில் விண்ணப்பித்தவர் ஒரு பெண் ஆவார்உ ள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அந்த பெண்ணின் வழக்கறிஞர், அந்த பெண் எப்போதுமே தனது உண்மையான பாலின அடையாளம் என்பது ஆணாக இருப்பது என்று அவர் உணர்ந்துள்ளார். மேலும், அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக உடல் மற்றும் உளவியல் சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறினார். …
-
- 0 replies
- 459 views
-
-
ட்ரம்பும், அமெரிக்க முதல் பெண்மணியும் தனிமைப்படுத்தலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இது குறித்து ட்ரம்ப் வியாழக்கிழமை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, ஒரு சிறிய இடைவெளி கூட எடுக்காமல் மிகவும் கடினமாக உழைத்து வரும் ஹோப் ஹிக்ஸ், கொவிட்- 19 க்கு நேர்மறை சோதனை செய்துள்ளார். தற்போது முதல் பெண்மணியும் (மெலினா ட்ரம்ப்) நானும் எங்கள் கொவிட்-19 தொற்று பரிசோதனை முடிவுகளுக்காக காத்துள்ளோம். இதற்கிடையில் நாங்கள் எங்கள் தனிமைப்படுத்தப்படுத்தல் செயல்முறையை ஆரம்பிக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் தனிமைப்படுத்தலானது ஒக்டோபர் 15 ஆம் திகதி புளோரிடாவின் மிய…
-
- 14 replies
- 1.5k views
-
-
பிரிட்டனின் லண்டனில் உள்ள செளத்ஆல் பகுதியில் உள்ள கடையில் எரிவாயு வெடித்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்து நான்கு ஆடவர்கள், ஒரு சிறார் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேற்கு லண்டனில் உள்ள செளத்ஆல் பகுதி, தெற்காசியர்கள் அதிகம் வாழும் இடம். அங்கு பஞ்சாபியர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். இதனால் இந்த பகுதியை உள்ளூர்வாசிகள், "லிட்டில் இந்தியா" (சிறிய இந்தியா) என்று அழைக்கிறார்கள். இங்குள்ள சந்தை பகுதிகளில் தொடர்ச்சியாக கடைகள் உள்ளன. இதில் ஒரு செல்பேசி கடை மற்றும் சிகை திருத்தகத்தில் பிரிட்டன் நேரப்படி காலை 6.30 மணியளவில் வெடிச்சம்பவம் நடந்ததாக தெ…
-
- 2 replies
- 866 views
-
-
ஆண், பெண் சமத்துவ விஷயத்தில் இந்தியா மிக மோசமாக இருக்கின்றது என நேற்று UNDP வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கை அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ஆண், பெண் பேதம் என்பது உலகெங்கிலும் இருந்தாலும், அது ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் மிகவும் மோசமாக இருக்கின்றது என்றும், மொத்தம் உள்ள 186 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இந்தியா 136 வது இடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்தும் Human Development Index அச்சம் தெரிவித்துள்ளது. இந்தியாவைவிட மோசமாக பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாள நாடுகள் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. போரால் பாதிக்கப்பட்ட ஈரான்,ஈராக் மற்றும் முஸ்லீம் வளைகுடா ந…
-
- 1 reply
- 460 views
-
-
நேட்டா படையில் பணிபுரியும் நாடுகளில் தஞ்சம் கோரும் துருக்கி ராணுவத்தினர் நேட்டோ படையில் பணிபுரியும் துருக்கி ராணுவத்தினர் சிலர், தாங்கள் பணிபுரியும் சில நாடுகளிலேயே தஞ்சம் கோரியிருப்பதாக நேட்டோ பொது செயலாளர் என்ஸ் ஸ்டோல்டென்பெர்க் உறுதிப்படுத்தியிருக்கிறார். சட்டப்படியான ஆட்சிக்கு துருக்கி மதிப்பளிக்க ஸ்டோல்டென்பெர்க் கோரிக்கை கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பையும், அதன் விளைவாக ஆட்கள் களையெடுப்பு நடப்பதையும் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ள படுகிறது. இந்த தஞ்சம் கோரிக்கை அந்தந்த நாடுகளின் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டிய விடயம் என்று ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை தொடங…
-
- 0 replies
- 429 views
-
-
ஜாங்கிபூர்: இந்தத் தேர்தல் தான் என் அரசியல் வாழ்வில் கடைசி தேர்தலாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். தனது அரசியல் வாழ்வில் பெரும் பகுதியை ராஜ்யசபா எம்பி பதவி மூலமாகக் கழித்த பிரணாப் கடந்தமுறை தான் முதன்முறையாக லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூர் தொகுதியி்ல் போட்டியிட்டு வென்றார். இப்போது மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முகர்ஜி, நான் நீண்ட காலமாக அரசுகளில் இருந்து விட்டேன். கடந்த 38 வருடமாக நாடாளுமன்றத்தி்ல் இருந்து விட்டேன். மீண்டும் ஒருமுறை உங்களின் ஆதரவைக் கேட்டு வந்துள்ளேன். எனக்கு வயதாகிவிட்டது. இதுவே என் கடைச…
-
- 12 replies
- 2.5k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அலெப்போவில் கிளர்ச்சிக்காரர்களின் வசம் எஞ்சியுள்ள பகுதிகள் மீது வான் தாக்குதல் மீண்டும் ஆரம்பம். அரச ஆதரவு படைகள் மற்றும் கிளர்ச்சிக்காரர்கள் இடையே நேரடி மோதலும் நடந்தது. * டொனால்ட் டிரம்ப் தனது அமைச்சரவை உறுப்பினர்களை அறிவித்துவரும் நிலையில், யார் உள்ளே? யார் வெளியே? பிபிசியின் பார்வை. * போரினால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவில், பேறுகால இறப்புகளைத் தடுக்கப் போராடும் பெண் மருத்துவர்கள்.
-
- 0 replies
- 321 views
-
-
ஏப்ரல் 30, 2013 காஸா மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஹமாஸ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் பலியானார். கடந்த நவம்பர் மாதம் தொடர்ச்சியாக 8 நாட்கள் நடைபெற்ற சண்டைக்குப் பின்னர் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இஸ்ரேல் நடத்தும் முதல் தாக்குதல் இதுவாகும். கடந்த 17-ஆம் தேதி, காஸாவில் இருந்து இஸ்லாமியர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. http://puthiyathalaimurai.tv/palestinian-killed-in-gaza-due-to-newly-commenced-airstrike-by-israel
-
- 0 replies
- 337 views
-
-
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது. வெயில் கொடுமையால் வாக்குப் பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மைசூர் மாவட்டம் பிரியபட்ணா தொகுதியில் பா.ஜ வேட்பாளர் திடீரென இறந்ததால், அங்கு தேர்தல் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 223 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் காங்கிரஸ் 224, பா.ஜ 222, கர்நாடக ஜனதா கட்சி 209, மதச்சார்பற்ற ஜனதா தளம் 222, பி.எஸ்.ஆர் காங்கிரஸ் 188 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இடதுசாரி கூட்டணி கட்சிகள் 30 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இத்தனை அணிகள் போட்டியிட்டாலும், காங்கிரசுக்கும், பா.ஜ.வுக்கும் இடையேதான் பலப்பரீட்சை நடக்கிறது. அதிலும் ஆளும் கட்சியான பாஜவுக்கு…
-
- 0 replies
- 264 views
-
-
செருப்பில், காந்தியடிகள் படம்... அடங்காத அமேசான்! அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் செருப்பில் காந்தியடிகளின் படத்தை போட்டு ஒட்டு மொத்த இந்தியர்களையும் இழிவு படுத்தியுள்ளது. காந்தி படம் அச்சிடப்பட்ட அந்த செருப்பு விலை ரூ.1190 என்றும் வெப்சைட் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவிலும் ஆன்லைன் வணிகம் செய்து வருகிறது. அண்மையில் இந்நிறுவனம் தனது வெப்சைட்டில் வீட்டு வாசலில் போடப்படும் மிதியடி பற்றிய ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. இந்திய தேசிய கொடி போல இருந்த அந்த மிதியடிக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.அமேசான் நிறுவன அதிகாரிகள் விசா திரும்பப் பெறப்படும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரித்த பிறகே அமேசான் ந…
-
- 3 replies
- 538 views
-
-
சிரியாவை சேர்ந்த 7 வயது சிறுமி : டிரம்புக்கு உருக்கமான கடிதம் சிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறாள். கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி பானா அலாபெத். அலெப்போவை மீட்க இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதனால் கடந்த டிசம்பர் மாதம் இவள் தனது குடும்பத்துடன் அலெப்போவில் இருந்து வெளியேறினாள். தற்போது துருக்கியில் அகதியாக தங்கி இருக்கிறாள். இவள் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கி…
-
- 0 replies
- 328 views
-
-
அமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான, அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். 29- வயதான எட்வர்ட் ஸ்நோவ்டென் என்ற இந்த இளைஞன் அமெரிக்க உளவுத்துறையான சீஐஏ-இன் முன்னாள் கணினி நிபுணர்.அமெரிக்காவின் மிகவும் ரகசியமானதும் வெளியிடப்பட முடியாததுமான மிக நுணுக்கமான உலக கண்காணிப்பு செயற்திட்டத்தை அம்பலப்படுத்தியதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். கோடிக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய உலகளாவிய நாளாந்த தொடர்பாடல்களைக் கண்காணிக்கின்ற புலனாய்வு பொறிமுறை செயற்திட்டத்தையே அவர் அம்பலப்படுத்தியிருந்தார். அமெரிக்க உளவுத்துறையினர்…
-
- 8 replies
- 2.2k views
-
-
இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்காவுக்கு கார்ட்டூன் பதிலடி! கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ‘இஸ்ரோ’ ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வரலாறு படைத்தது. பி.எஸ்.எல்.வி. சி - 37 ரக ராக்கெட் 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தபோது, இந்தியாவின் பாய்ச்சலைப் பார்த்து உலகமே வியந்தது. உலகிலேயே ஒரே ராக்கெட்டின் மூலம் அதிக செயற்கைக்கோள்களை செலுத்துவது இதுவே முதன்முறை. இந்த 104 செயற்கைக்கோள்களில் அமெரிக்காவைச் சேர்ந்த எட்டு செயற்கைக்கோள்களும் அடங்கும். நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி - 37 சுமந்து சென்றது. நன்றி: ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா‛ இந்தி…
-
- 0 replies
- 608 views
-
-
இந்திய வான்வெளியில் 2 சீன ஹெலிகாப்டர்கள் ஊடுருவியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக்கில் உள்ள சுமர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஊடுருவிய சீன ஹெலிகாப்டர்கள் சிறிது நேரம் பறந்து விட்டு, பின்னர் திரும்பிச் சென்று விட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை ராணுவம் மறுத்துள்ளது. ஹெலிகாப்டர்கள் மக்கள் விடுதலை ராணுவ அமைப்புக்குச் சொந்தமானது. அந்த ஹெலிகாப்டர்கள் இந்திய வான்வெளிப் பகுதிக்கு அருகில்தான் பறந்ததாகவும், இந்திய எல்லைக்குள் வரவில்லை என்றும் ராணுவம் கூறியுள்ளது. இந்தியாவும், சீனாவும் நேரடியாக தொடர்பு கொள்வது சமர் பகுதியில் தான். அதனால், இப்பகுதியில் சீன ராணுவத்தினர் பலமுறை அத்துமீறியுள்ளனர். ச…
-
- 5 replies
- 413 views
-
-
இந்தியாவைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை அதிகளவில் வைத்திருக்கிறது பாகிஸ்தான் டெல்லி: இந்தியாவிடம் இருப்பதைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தான் தம் வசம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துரக்சக் அண்மையில் தீ பிடித்து விபத்துக்குள்ளானதில் 18 வீரர்கள் பலியாகினர். பெட்டரியில் ஒக்சிஜன் கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஊடகங்கள் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் வலிமை மற்றும் பாகிஸ்தான் வலிமை பற்றிய ஆய்வைத் தொடங்கின. இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக இந்தியாவை விட மிக அதிநவீனமான நீர்மூழ்கிக் கப்பல்கள் பாகிஸ்தான் வசம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய கடற்படையிடம் இருப்…
-
- 3 replies
- 671 views
-
-
டோக்கியோ: ஜப்பானின் சில பகுதிகளில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இஷு தீவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை . நிலநடுக்கத்தின் எதிரொலியாக புகுஷிமா டாய்ஷி அணுஉலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக டோக்கியோ நிர்வாக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உயிர்ப்பலி எதுவும் இல்லை என்று சொல்லப்பட்ட போதிலும், சேதாரத்தின் அளவுகள் இதுவரை தெரிய வரவில்லை. அதேபோல், நேற்று மாலை இந்திய நேரப்படி சுமார் 5 மணியளவில் அமெரிக்காவின் அலாஸ்காவின் ஆண்ட்ரியாப் தீவுகளில் நில நடுக்கம்…
-
- 0 replies
- 317 views
-
-
இன்றைய (6/06/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * லண்டன் தாக்குதலை நடத்திய மூன்றாவது நபரின் அடையாளத்தை வெளியிட்டது காவல்துறை; இருபத்தி இரண்டு வயதான யூசுஃப் சக்பா மொரொக்கோ இத்தாலியன் என்று அறிவிப்பு. * ஐ எஸ் அமைப்பிடமிருந்து மராவி நகரை மீட்க பிலிப்பைன்ஸ் இராணுவம் தீவிர முயற்சி; மோதலில் சிக்கிய பொதுமக்களின் அவலம் குறித்து பிபிசியின் நேரடி படப்பிடிப்பு. * இரண்டு நாட்களில் பிரிட்டிஷ் தேர்தல்; இதில் முக்கிய பிரச்சனையான குடியேற்றம் குறித்த விரிவான அலசல்.
-
- 0 replies
- 313 views
-