Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லி: மனைவியாக இருந்தாலும் ஒப்புதலுடன் பாலுறவு வைத்துக் கொள்வதற்கான வயதை 18 ஆக நிர்ணயிக்க உத்தரவிடக் கோரும் மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற சட்டத் திருத்தம் 2013இன் படி 375ஆவது பிரிவில் சமீபத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியின் ஒப்புதலுடன் அவரது கணவன் பாலுறவு வைத்துக் கொண்டால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலுறவு வைத்துக் கொள்வதற்கான வயதை 18 ஆக நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி, "ஐ தாட்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 ஆவது (பாலியல் பலாத்காரம்) பிரிவில் திருத்தம் கொண்டு…

  2. ஜெர்மன் அதிகாரிகள் நாஜி முறைகளை கடைப்பிடிப்பதாக துருக்கி அதிபர் கூறிய குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு ஜெர்மனிய அதிகாரிகள் நாஜி நடைமுறைகளை கடைபிடிப்பதாக, துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் கூறிய குற்றச்சாட்டை ஜெர்மனிய அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். எர்துவானின் அந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ஜெர்மனியில் உள்ள துருக்கி வாக்காளர்களுக்கு மத்தியில் துருக்கி அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான ஆதரவு திரட்டும் பிரசார பேரணிகள், பல நகரங்களில் ரத்து செய்யப்பட்டன. "எர்துவான் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வழி தெரியாமல் அடம்பிடிக்கும் குழந்தை போல்" நடந்து கொள்வதாக சான்செலர் ஏங்கலா மெர்கலின் கிறி…

  3. மியான்மர்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்த இராணுவம் 17 Views மியான்மரில் இராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தியுள்ள அந்நாட்டு இராணுவம், ஆங் சான் சூகி அரசில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததோடு அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் முந்தைய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் மியான்மரின் நிழல் அரசாக இயங்கும் சி.ஆர்.பி.எச்-சால் கடந்த வாரம் அமைக்கப்பட்…

  4. சிரியாவிற்கு ரஸ்யா ஆதரவளிக்கக் கூடாது – ஜீ7 நாடுகள் சிரியாவிற்கு ரஸ்யா ஆதரவளித்து வருவதனை எதிர்ப்பதாக ஜீ7 நாடுகள் தெரிவித்துள்ளன. அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலியின் லுக்கா நகரில் ஜீ7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்த நிலையில் சிரியாவிற்கு வழங்கி வரும் ஆதரவினை ரஸ்யா வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாறாக சமாதான முனைப்புக்களில் ரஸ்யா பங்களிப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/23849

  5. சிறிலங்காவில் பெளத்த மதத்தினைப் பெரும்பான்மையாக உடைய சிங்களப்படைகளினால் அப்பாவித்தமிழர்கள் (கொல்லப்பட்டவர்களில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள்) கொல்லப்பட்ட போது சிறிலங்கா அரசுக்கு ஆதரவு தந்த சுப்பிரமண்ய சுவாமிகள் நியூயோக்கில் சென்ற 2ம் திகதி நடைபெற்ற மகா நாட்டில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்காகக் குரல் கொடுத்தார்.

    • 1 reply
    • 1.9k views
  6. உலகை ராணுவ பலத்தால் மிரட்டும் ’டாப் 5’ நாடுகளிடம் என்ன இருக்கிறது? இந்த உலகம் சுக்கு நூறாக உடைந்து போவதாக கனவில் நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. ஆனால், அதுவே உண்மையானால்...? அணு ஆயுத சக்தியில் ஐந்தாவது இடத்திலிருக்கும் இந்தியாவின் அணு ஆயுதங்களைக் கொண்டு, இந்த உலகை ஒரு முறை அழித்துவிடலாம். அமெரிக்காவிடமுள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு இந்த உலகத்தை 27 முறை லட்ச லட்சத் துண்டுகளாக வெடிக்கச் செய்து விளையாடலாம். உலக நாடுகளிலுள்ள மொத்த அணுஆயுதங்களையும் சரியாகப் பொருத்தி விசையைச் சொடுக்கினால், இந்தச் சூரிய மண்டலமே எப்படி இருந்தது என்ற வரலாறே தெரியாதவண்ணம் அழிந்து போய்விடும். இதுவரை வந்த ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமல்ல, நம் கனவில் கூட நி…

  7. சுவிட்சர்லாந்து பேர்ண் நகரை அடுத்துள்ள ஓபர்லாண்ட் பகுதியில் இன்று வெடித்தொழிற்சாலையில் வெடி விபத்து இடம்பெற்றுள்ளது. காலை 7.30மணியளவில் பாரிய சத்தம் ஒன்று கேட்டதாகவும் நில நடுக்கத்தை போன்று கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் அயலில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைக்கும் படையினரும் காவல்துறையினரும் அந்த இடத்திற்கு சென்று கட்டிடத்தில் பரவி வரும் தீயை அணைத்து வருகின்றனர். கட்டிடம் பாரிய அளவில் சேதமாகவில்லை என்றும் தீயணைக்கும் படையினர் கட்டிடத்தில் பரவியை தீயை அணைத்து விட்டனர் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த வெடிப்பிற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை. இந்த தொழிற்சாலையில் 1959ஆம் ஆண்டு நடந்த விபத்…

  8. இன்றைய (22/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க இஸ்ரேல் உறவு உடைக்க முடியாத உறவுப்பாலம் என்கிறார் டொனால்ட் ட்ரம்ப்; இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் நம்பிக்கை. * யெமெனில் வேகமாக பரவும் காலரா; இதுவரை இருநூற்று ஐம்பது பேர் பலி; மோசமான கொள்ளைநோயாக மாறுமென ஐநா எச்சரிக்கை. * அனைத்து மகளிர் ஆப்கான் தொலைக்காட்சி; ஊடகத்துறையில் பெண்ணுரிமைக்குரல்களைப் பெண்களே முன்னெடுக்கும் வித்தியாசமான முயற்சி.

  9. டெல்லி: பாஜகவிலிருந்து தூக்கப்பட்டு விட்டமூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி நரேந்திர மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் மோடியே வெல்வார் என்றும் அத்வானியால் தனக்குத் தேவையான ஆதரவைத் திரட்ட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெத்மலானி கூறுகையில், பிரதமர் வேட்பாளருக்கு மோடிதான் பொருத்தமானவர், சரியானவர். அவர் ஒரு அவதாரம் போன்றவர். நிதர்சனம் புரிந்து நடக்க அத்வானி முன்வர வேண்டும்.அவரால் தேவையான ஆதரவைப் பெற முடியாது. பிரதமர் வேட்பாளர் போட்டியில் மோடியே வெல்வார். அத்வானியால் வெல்ல முடியாது. http://tamil.oneindia.in/news/india/modi-is-the-best-option-bjp-s-pm-cadidate-advani-183336.html

  10. மணிலாவிலுள்ள களியாட்ட விடுதியில் தீவிரவாதத் தாக்குதல் : 30 க்கும் மேற்பட்டோர் பலி - காணொளி இணைப்பு பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவிலுள்ள களியாட்ட விடுதியொன்றுக்குள் புகுந்த ஆயுததாரியொருவர் திடீரென துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் பின்னர் குறித்த ஆயுததாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் உரிமைகோராத நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தாக்குதலாக இருக்கலாமென மணிலா பொலிஸ…

  11. நடைபெற்ற தேர்தலின் மூலம், தமிழர்களுக்கு அரசியலில் முழு அதிகாரம் கிடைக்கும் என இந்திய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். மேலும், இந்தத் தேர்தல் அகதிகளாக உள்ள தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசியல் சாசனப்படி, ராஜீவ்-­ ஜெயவர்தன ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் வடக்கு பகுதியில், தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன்மூலம், இலங்கையில் தமிழர்கள் 37 பேருக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும். இதன்மூலம் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட மு…

  12. ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ULLSTEIN BILD DTL/GETTY IMAGES படக்குறிப்பு, 1939-ஆம் ஆண்டில் திபெத்தியர்களுடன் ஜெர்மானியக் குழுவினர் 1938 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் நாஜி கட்சியின் முன்னணி உறுப்பினரும், யூத அழிப்பின் முக்கிய கூட்டாளியுமான ஹென்ரிக் ஹிம்லர், ஐந்து பேர் கொண்ட குழுவை திபெத்துக்கு அனுப்பி ஆரிய இனத்தின் தோற்றம் பற்றிய அறிய முயன்றார். எழுத்தாளர் வைபவ் புரந்தரே இந்தச் சுவாரஸ்யமான ஆய்வுப் பயணம் பற்றி விவரிக்கிறார். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு ஜெர்மா…

  13. கனடாவில் கௌரவம் பெறும் விபத்தில் இறந்து போன தமிழ் பெண்! ஒன்ராரியோ மாகாண சபையில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவரை கௌரவிக்கின்ற வகையில் சட்ட திருத்தம் ஒன்று நிறைவேற்றப்படுகின்றது. மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை என்கிற பெண் கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி வாகன விபத்தில் இங்கு அண்மையில் துரதிஷ்டமாக இறந்து உள்ளார். இவர் பயணித்த பஸ் வண்டி மீது ட்ரக் வண்டி மோதியது. பொறுப்பற்ற வாகன ஓட்டமே மரணத்துக்கு காரணம் ஆனது. இந்நிலையில் இம்மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவரான பாஸ் பால்கிசூன் தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமாக இதை சபைக்கு சமர்ப்பித்து உள்ளார். இது நிறைவேற்றப்படுகின்ற பட்சத்தில் மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை சட்டம் என்று அழைக்கப்படும். இது நெடுஞ்சாலைகள் போக்குவரத்து சட்டத்தில் கொண்டு வரப்படுகின்ற…

  14. ஜி20 உச்சி மாநாடு: வன்முறையில் வாகனங்களுக்கு தீ வைப்பு ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க்கில் ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலகத்தலைவர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில், போலீஸார் மற்றும் மாநாட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களிடையே இரண்டாவது நாளாக மோதல் வெடித்துள்ளது. இந்த உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முதல் முறையாக நேரில் சந்திக்கிறார்கள். http://www.bbc.com/tamil/global-40531714?ocid=socialflow_facebook

  15. ரஷ்ய வழக்கறிஞரை தான் சந்தித்தது குறித்து தந்தைக்கு தெரியாது என்கிறார் டொனால்ட் ட்ரம்பின் மகன்! ஹிலரி கிளிண்டனை பற்றி தகவல் சேகரிக்க நடந்த சந்திப்பால் தொடரும் சர்ச்சை, மொசூல் நகரெங்கும் மழலைகளின் அழுகுரல்! பாதுகாப்பு தேடி வெளியேறும் குடும்பங்கள் அனாதையான குழந்தைகளையும் முதியவரையும் அரவணைத்து ஆறுதல்! மற்றும் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தால் தமக்கு வேலைவாய்ப்பு உருவாகவில்லை; செல்வம் பெருகவில்லை என கசகிஸ்தானில் கவலை அதிகரித்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  16. அணுஆயுதத் திட்டம் தொடர்பில், தமக்கு எதிராக அமெரிக்கா- ஐ நாவில் முன்னெடுக்கும் தடைகளுக்கு- பதிலடி கொடுக்க வடகொரியா சூளுரை! இஸ்லாமிய அரசு எனக் கூறிக்கொள்ளும் குழுவினாரால் வட இராக்கில் கடத்தப்பட்ட யாசிடிப் பெண்களை காப்பாற்ற முயலும் நால்வருடன் உரையாடியது பிபிசி! மற்றும் பெரும் ஊதியத்தை துறந்து விவாசயத்தின் பக்கம் திரும்பியுள்ள ஜப்பானியப் பெண்ணொருவர் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  17. டோங்கா எரிமலைச் சாம்பல் பூமியைக் குளிர்விக்குமா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சனிக்கிழமை டோங்காவில் எரிமலை வெடித்தது எந்த அளவுக்கு ஆற்றல் மிக்கதாகவும் அபாயகரமானதாகவும் இருந்தது என்பதற்கு அடையாளமாக அதன் ப்ளூம் எனப்படும் சாம்பல் மேகம் அடைந்த உயரம் கருதப்படுகிறது. இது பூமியைக் குளிர்விக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. வானிலை செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்யும் பிரிட்டன் விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 55 கிமீ உயரம் வரை இந்தச் சாம்பல் மேகம் சென்றிருக்கலாம் எனக் கணக்கிடுகின்றனர். இது வளிமண்டலத்தில் ஸ்ட்ரேட்டோஸ்பியர் மற்றும் மீசோஸ்பியர் அ…

  18. காபூல்: அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலில் பலர் உயிரிழப்பு? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionதாக்குதலுக்கு உள்ளான காபூல் விமான நிலையம் ஆப்கான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலில் செலுத்தப்பட்ட ஏவுகணையொன்று சரியாகச் செயல்படாத காரணத்தால் சில குடிமக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித…

  19. இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று அவுஸ்திரேலியச் செனட் சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பசுமைக் கட்சி (Australian Green Party) முன்வைத்த குறித்த தீர்மானத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைப்படவுள்ள தீர்மானத்துக்கும் அவுஸ்திரேலியா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கும் செய்தியொன்றை ஐக்கிய நாடுகளுக்கு அவுஸ்திரேலியச் செனட் அனுப்பி வைத்துள்ளதாக பசுமைக் கட்சியின் தலைவர் கிறிஸ்டியன் மில்னே தெரிவித்துள்ளார். …

  20. நீடிக்கும் போராட்டங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் கெடலோனிய அதிபர்! ஆனால் சமாதானத்துக்கு முன் கெடலோனியா சட்டத்தை மதிக்கவேண்டும் என்கிறது ஸ்பெய்ன்! தீவிரவாத கருத்துக்களை இணையம் மட்டுமே விதைக்கிறதா? பாரம்பரிய ஊடகமும் அதையே செய்கிறதா? ஆராயும் செய்தித் தொகுப்பு மற்றும் தண்ணீருக்கு நடுவே தனித்தீவில் வாழத்தயாரா?ஆளில்லா தீவில் குடியேற ஆள் தேடும் பிரான்ஸ் அரசு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  21. ஆங் சாங் சூகிக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை இராணுவத்தால் ஆளப்படும் மியன்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரியில் இராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தப்பட்டதிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 76 வயதான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி மீது வாக்காளர் மோசடி உள்ளிட்ட குற்றவியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளதோடு, மனித உரிமைக் குழுக்கள் நீதிமன்ற விசாரணைகளை போலித்தனமானது என கண்டித்துள்ளன. வழக்கு விசாரணை தலைநகர் Nay Pyi Taw…

  22. தனது சொந்தக்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கின்றார் பொறிஸ்ஜோன்சன் - இன்றுவாக்கெடுப்பு பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனை பதவியிலிருந்து நீக்குவதா என்பது குறித்த அவரது கட்சியினர் இன்று தீர்மானிக்கவுள்ளனர் இது தொடர்பான இரகசிய வாக்கெடுப்பில் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் இன்று வாக்களிக்கவுள்ளனர். பார்ட்டிகேட் விவகாரத்தை தொடர்ந்தே பொறிஸ்ஜோன்சனின் தலைமைத்துவத்தின் மீது கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொரோன வைரஸ் முடக்கல் கால களியாட்ட நிகழ்வுகள் குறித்து சூ கிரே தனது அறிக்கையை வெளியிட்டதை தொடர்ந்து அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்து வந்துள்ள நிலையில் பொறிஸ்ஜோன்சனை பதவி விலக்கவேண்ட…

  23. ஜோசப் ஸ்டாலின்: சோவியத் சர்வாதிகாரி இறுதி நாட்களில் டாக்டரை வரவழைக்க தாமதம் ஆனது ஏன்? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 50ஆவது கட்டுரை இது.) 1952 டிசம்பர் 21 அன்று ஸ்டாலின், 'பில்ஸ்னாயா' பண்ணை வீட்டில் தனது பிறந்தநாள் விழாவை நடத்தினார். அதில் அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்…

  24. அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமாக திட்டிய டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை மிகவும் மோசமான வசைச் சொற்களால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS வெள்ளை மாளிகையில் உள்ள, அதிபரின் ஓவல் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த அவர், "இந்த மலத்துளை நாட…

  25. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மூத்த மனிதக் குரங்கு பலி படத்தின் காப்புரிமைSAN DIEGO SAFARI PARK/ FACEBOOK உலகின் மூத்த மனிதக் குரங்குகளில் ஒன்றான `வைலா` தனது அறுபதாவது வயதில் இயற்கை எய்தி உள்ளது. சான் டியாகோ மிருகக் காட்சி சாலையில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.