உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி August 25, 2025 3:06 pm தெற்கு காசா பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நாசர் வைத்தியசாலையில் நடந்த தாக்குதலில் அதன் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஏனைய மூவர் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் என்பிசி ஆகியவற்றில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவமும் பிரதமர் அலுவலகமும் உடனடி கருத்துக்களை வெளியிடவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. https://oruvan.com/15-killed-including-journalists-in-i…
-
- 0 replies
- 150 views
-
-
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! 06 Sep, 2025 | 01:23 PM காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது நேற்று வெள்ளிக்கிழமை (05) ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சனிக்கிழமை(இன்று) அதிகாலை வரை தொடர்ந்தது. பாலஸ்தீனிய வீடுகள் மீது பாரிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. கசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் "நரகத்தின் வாயில்கள்" திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.…
-
- 0 replies
- 110 views
-
-
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோவில், 1 வயது நிரம்பாத குழந்தை, வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'கொரோனா' வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 2,438; தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை தாண்டியுள்ளது. முதல் முறை: கொரோனா வைரஸ், அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது. ஆனால், இதுவரை உயிரிழந்தோரில் பெரும்பாலானோர், வயதானவர்களே. இந்நிலையில், சிகாகோவில், 1 வயது கூட நிரம்பாத குழந்தைக்கு, வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், வைரஸ் பாதிப்பால், அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை அம்மாகாண கவர்னர் உ…
-
- 0 replies
- 319 views
-
-
நியூயோர்க் நகர் இருளில் மூழ்கியுள்ளது வீதிகளில் வெள்ளப்பெருக்கு - ரொறன்ரோவிலும் எச்சரிக்கை விடுப்பு பலபகுதிகள் இருளில்! தொடர்மாடி தீப்பற்றியது..! [Tuesday, 2012-10-30 08:56:32] அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை தற்போது சாண்டி புயல் கடந்துசெல்கிறது அதன் தாக்கம் ரொறன்ரோவின் மத்திய பகுதிக்கும் ஏற்ப்பட்டுள்ளது. வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் மின்சார விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துகள் ஏற்ப்பட்டுள்ளன இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. அமெரிக்காவின் நியூயோர்க் நகர் பெரும் வெள்ளப்பெருக்குக்கு உள்ளானதால் நகரப்பகுதி நிலக்கீழ் தொடருந்து பாதைகளில் நீர் புகுந்துள்ளது. வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அரைமணி நேரத்தில் பத்தாயிரத்திற்கு மேற்ப்பட…
-
- 15 replies
- 1.2k views
-
-
சென்னையில் தரைதட்டிய கப்பலைக் காண குவியும் மக்கள்: நொச்சிகுப்பத்தில் போக்குவரத்து நெரிசல். சென்னை: சென்னையில் தரைதட்டிய சரக்கு கப்பலான பிரதிபா காவிரியைக் காண மக்கள் கூட்டம், கூட்டமாக கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். சென்னையை நிலம் புயல் உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தபோது எரிபொருள் இல்லாமல் தவித்த பிரதிபா காவிரி என்ற சரக்குக் கப்பல் அலையால் இழுத்து வரப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து மாயமான 5 பேரில் 4 பேரின் உடல்கள் நேற்று கிடைத்தன. அதில் ஒரு உடல் அரக்கோணத்தைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவருடையது என்று அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் மீஞ்சூர் கடற்பரப்பில் இன்று காலை ஒரு உடல் கரை ஒதுங்கியது. காணாமல் போன ஜோசப் என்பவரது உட…
-
- 3 replies
- 848 views
-
-
நியூயார்க்: சான்டி புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்ட சான்டி புயல் கடற்கரையோர நகரங்களை நிர்மூலமாக்கியது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் நகரங்களுக்குள் புகுந்து தலைகீழாகப் புரட்டிப் போட்டதால் நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் வெள்ளக்காடாகிவிட்டன. அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது. ஏதேனாவால் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியில் கனமழை, பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் பலத்த காற்றும் வீசுகிறது. இந்த பு…
-
- 3 replies
- 456 views
-
-
-
கிழக்கு இந்தியாவின் நகரப்பகுதிகளை அழிக்கும் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் ஒன்று வங்காளதேசத்திற்கு அடியில் உருவாகி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நேச்சர் ஜியோசயின்ஸ் ஆய்விதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.உலகின் மிகப்பெரிய ஆற்றுப்படுகையின் கீழ்உள்ள 2 கண்ட தட்டுக்களில் (டெக்டானிக் பிளேட்) அழுத்தம் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கண்டத்தட்டு சிதைவு ஏற்பட்டால் பிராந்தியத்தில் உள்ள சுமார் 140 மில்லியன் மக்கள் (14 கோடி பேர்) பாதிக்கப்படுவர் என்றும் ஆய்வாளர்கள் மதிப்பிட்டு உள்ளனர். பூகம்பத்தினால் மட்டுமல்ல நதிகளின் போக்கிலும் மாற்றம் ஏற்படலாம், கடல்மட்டத்திற்கு மிகவும் அருகாமையில் ஏற்கனவே அபாய கட்டத்தில் உள்ள நிலப்பக…
-
- 0 replies
- 426 views
-
-
சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,921 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிகப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,942 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,921 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,19,942 ஆக அதிகரித்துள்ளது. 81,029 பேர் கரோனா பாதிப்பிலிருந்து விடுப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர். சவுதியில் அதிகபட்சமாக ரியாத்தில் அதிகம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சவுதியில் இம்மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப…
-
- 0 replies
- 433 views
-
-
துருக்கியில் அவசரகாலநிலைமை அறிவிப்பு துருக்கியில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ சதிப் புரட்சியைத் தொடர்ந்து துருக்கியின் ஜனாதிபதி Recep Tayyip Erdogan அந்நாட்டு அவசரகால நிலையை அறிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அவசரகால நிலைமை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இராணுவ சதிப்புரட்சியில் இணைந்துகொண்ட 10000 பேர் வரையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தடுப்புக் காவல் காலம் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 600 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக் கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவ…
-
- 0 replies
- 256 views
-
-
Dec 23 சிறியவயது பெண் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாண்ட்ரீயல் நகரத்தில் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். William Kokesch, என்ற 65 வயது மாண்ட்ரீயல் மனிதர், இன்று காலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை ஆபாச புகைப்படம் எடுத்து, இணையத்தில் வெளியிட்டு மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்தாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட்டார். அவரது வீட்டில் 2000க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை 6 முதல் 10 வயது குழந்தைகள் படங்கள். இவற்றைப் பார்த்து காவல்துறையினரே அதிர்ந்தனர். …
-
- 0 replies
- 903 views
-
-
ஒருவர் உறக்கத்தில் காணும் கனவுகளை விழித்தெழுந்ததும் புகைப்படங்களாக கண்டுகளிப்பதற்கு வழிவகை செய்யும் மென்பொருள் ஒன்றை ஜப்பானிய கயோடோ நகரிலுள்ள நரம்பு விஞ்ஞான கணிப்பு ஆய்வு கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூளையின் சிந்தனைகளிலிருந்து பிரதி பிம்பங்களை உருவாக்கும் "மனதை வாசித்தல் தொழில்நுட்பம்' உருவாக்கப்பட்டுள்ளமை உலகில் இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன் இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மனதை ஊடுகாட்டும் சாத்தியம் குறித்த எண்ணக்கருவை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய மென்பொருளானது மூளையிலிருந்தான சமிக்ஞைகளைப் பெற்று, அவற்றைத் தனது நிகழ்ச்சித் த…
-
- 24 replies
- 7.2k views
-
-
கொரோனாவை பழித்த பிரேஷில் ஜனாதிபதிக்கு கொரோனா! பிரேஷில் ஜனாதிபதி ஜய்ர் பொல்சனரோவுக்கு (65-வயது) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை உட்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வெறும் சிறிய காய்ச்சல் மட்டுமே என்று பொல்சனரோ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/கொரோனாவை-பழித்த-பிரேஷில்/
-
- 0 replies
- 336 views
-
-
இலங்கையிலிருந்து வந்த இஸ்ரேல் பெண்ணிடம் இருக்கும் குழந்தை யாருடையது? கோப்புப்படம் இலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார். 49 வயதான கெலிட் நாகாஷ் வைத்திருக்கும் குழந்தை அவருடைய பௌதீக ரீதியான குழந்தை தானா என்பதை அறிய டிஎன்எ சோதனை நடத்தப்படும். சோதனை எதிராக அமையுமானால், அந்த குழந்தை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்று ஆட்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். இலங்கையை விட்டு வருவதற்கு இன்னொரு குழந்தையின் கடவுச்சீட்டை பயன்படுத்தி இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தபோது நாக…
-
- 5 replies
- 746 views
-
-
ஆஸ்திரேலியாவின் மிக பெரிய மின்சார நிறுவனத்தை கட்டுப்படுத்தும் வகையில், அதிகப்படியான பங்குகளை இரண்டு சீன நிறுவனங்கள் வாங்கிக் கொள்வதை தடைசெய்திருக்கும் அந்நாட்டின் தீர்மானம், எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவில் செய்யப்படும் முதலீடுகளை கடுமையாக தடுக்கும் என்று சீன ஆட்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு சீன நிறுவனங்களிடம் இருந்து ஏழரை பில்லியன் அமெரிக்க டாலர் பெற்றுகொள்ளும் ஆஸ்கிரிட் நிறுவன வர்த்தகத்தை குறிப்பிடப்படாத பாதுகாப்பு காரணங்களுக்காக, வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக நிராகரித்த பின்னர், சீன அரசின் இந்த கருத்து வந்திருக்கிறது. இதில் அரசியல் இல்லை என்று ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. 75 பில்லியன் அமெரிக்க டாலர் சுதந்திர வர்த்த உடன்படிக்கை கையெழுத…
-
- 0 replies
- 383 views
-
-
சர்வதேச நாணய நிதியம் ஜனவரி 23ஆம் நாள் இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டின் உலகப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 3.5 விழுக்காடாகவும், 4.1 விழுக்காடாகவும் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மீட்சி குறிப்பிடத்தக்க இடர்ப்பாடுகளை எதிர்நோக்க உள்ளது என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டின் சீனப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 8.3 விழுக்காடு, 8.5 விழுக்காடு உயரும். இந்தியப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 5.9 விழுக்காடு, 6.4 விழுக்காட்டை எட்டும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளது. http://tamil.cri.cn/121/2013/01/24/1s124819.htm
-
- 2 replies
- 365 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * தன் மீதான புதிய பாலியல் புகார்களை மறுக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்; குடியரசுக்கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் மீது மிஷெல் ஒபாமா கடும் தாக்குதல். * வங்கதேச எதிர்கட்சிகள் ஒடுக்கப்படுவதாக அதிகரிக்கும் புகார்கள்கா; காணாமல் போகும் எதிர்கட்சிக்காரர்கள் என்ன ஆகிறார்கள்? புலனாய்கிறது பிபிசி. * சிம்பன்ஸிகளுக்கு சிம்பன்சிகளாக இருப்பதற்கான பயிற்சி; இங்கிலாந்து மிருககாட்சி சாலையில் வித்தியாசமானதொரு முயற்சி; பிபிசியின் பிரத்யேக காட்சிகள்.
-
- 0 replies
- 455 views
-
-
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் பேயாட்டத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஸ்ரீகிருஷ்ணா எனும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்திருக்கிறது. அதேசமயம் வழக்குரைஞர்களும் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் கூறியிருந்தது.ஆனால் உயர்நீதிமன்றங்களின் எல்லா வழக்கறிசர் சங்கங்களும் தடியடிக்கு காரணமான போலீசு அதிகாரிகளை வேலைநீக்கம் செய்யும்வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்வாதக உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை நிராகரித்திருக்கிறார்கள். தற்போது தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். அந்த உண்ணாவிரதத்தில் காட்சிக்கு வைத்திருந்த புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். மேலும் தமிழகம் தழுவிய அளவில் வழக்குறைஞர் போரட்டமும் தொடர்கிறது. ஈழத்திற்காகவும்,…
-
- 1 reply
- 1.7k views
-
-
எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு: டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது பட மூலாதாரம், GETTY IMAGES எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அறிவித்துள்ளார் பிரதமர் அபிய் அகமது. பிராந்தியத்தின் ஆளும் கட்சியான டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு (டீ.ம.வி.மு.) எதிரான தாக்குதலை தீவிரப்படுத்திய மத்திய அரசுப் படைகள், முன்னதாக மிகாய்லி நகரத்தில் நுழைந்திருந்தன. ராய்டர் செய்தி முகமையிடம் பேசிய டீ.ம.வி.மு. தலைவர், தெப்ரஸ்தீயான் கெப்ரமீக்கேல் சுயநிர்ணய…
-
- 2 replies
- 758 views
-
-
முஸ்லிம்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை.! சீனாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த தொடா்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல்களை அந்த நாட்டு அரசு மறுத்துள்ளது. விரும்பத்தின்பேரில்தான் முஸ்லிம்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று சீன அரசு விளக்கமளித்துள்ளது. உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடான சீனாவில், உய்குா் இன முஸ்லிம்களைக் குறிவைத்து மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக கடந்த 4 ஆண்டுகளாகவே உய்குா் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஷின்ஜியாங் பகுதியில் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த அதிகம் …
-
- 5 replies
- 1.4k views
-
-
அவுஸ்திரேலிய கடற்கரையில் கூடியிருந்தவர்கள் முன்பாக விபத்துக்குள்ளாகி விழுந்த விமானம் பெண்ணொருவர் பலி ; மூவர் காயம் அவுஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து மாநில கடற்கரையில் சிறிய ரக விமானமொன்று அங்கு கூடியிருந்தவர்கள் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவர் காயமடைந்துள்ளனர். மிடில் தீவுக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் இடம்பெற்ற மேற்படி விபத்தையடுத்து அதில் பயணம் செய்த பெண்ணொருவரும் இரு ஆண்களும் படுகாயமடைந்த நிலையில் விமான சிதைவுகளிலிருந்து மீட்கப்பட்டனர். …
-
- 0 replies
- 426 views
-
-
மலேசியாவில் எதிர்கட்சியைச் சேர்ந்த மூன்று முக்கிய உறுப்பினர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் ஒரு மாணவர் மீது தேசத் துரோக குற்றமிழைத்தார் என்று கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்மையில் எதிர்கட்சியினர் நடத்திய ஒரு எதிர்ப்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாக கூறி அதற்கு எதிராக மக்களை வீதியில் இறங்கி போராடும்படி அந்த மாணவர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த மாதத்தின் முற்பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றன என்று கூறி அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த மாணவ செயற்பாட்டாளர் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் தான் குற்றமற்றவர் என்று அவர் கோல…
-
- 0 replies
- 281 views
-
-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரதான சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தாலிபன் இயக்கத்தினர் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்நாட்டின் எல்லா பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆப்கன் இராணுவ முகாமுக்கு அருகே இருந்த கட்டிமுடிக்கப்படாத- 5 மாடிக் கட்டிடமொன்றை ஆயுததாரிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துகொண்டு இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். மூன்று மணிநேரம் இந்த மோதல் நீடித்துள்ளது. குண்டுச் சத்தங்களால் அந்தப் பகுதியே அதிர்ந்துள்ளது. ஆப்கன் பாதுகாப்புப் படையினரும் தாலிபன் ஆயுததாரிகளும் இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் 5 தாலிபன் ஆயுததாரிகளை இதன்போது ச…
-
- 0 replies
- 377 views
-
-
கோலாலம்பூர்: ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசு அரங்கேற்றிய இனப்படுகொலை குறித்த சேனல் 4-ன் ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட அதன் இயக்குநர் கலேம் மெக்ரே உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். வட இலங்கையில் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சிங்கள ராணுவத்தால் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், விடுதலைப் புலிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். மனித இனத்துக்கு எதிரான கொடுமையான ரசாயண ஆயுதங்களை பிரயோகித்து இந்த இனப்படுகொலையை அரங்கேற்றினர். சாட்சியில்லா இனப்படுகொலை என நினைத்துக் கொண்டிருந்த இலங்கை அரசுக்கு பெரும் பீதியைக் கொடுத்தது சேனல் 4-ன் இந்த ஆவணப்படும். இரண்டு பகுதிகளாக வெளியான இந்த ஆவணப்படம்தான், ஈழத்தில் மனித உரிமைக்கு எதிராக நடந்தேறிய அத்தனைக் கொடுமைகளையும் உலகுக்க…
-
- 1 reply
- 1.8k views
-
-
ராக் அண்ட் ரோல் இசை ஜாம்பவான் சக் பேரி காலமானார் ராக் அண்ட் ரோல் இசையின் ஜாம்பவான் சக் பேரி தனது 90ஆவது வயதில் காலமானதாக அமெரிக்காவின் மிசோரி மாநில போலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைHUW EVANS PICTURE AGENCY சனிக்கிழமை மதிய நேரம் சக் பேரி சுயநினைவற்ற நிலையில் இருந்ததாக செயிண்ட் சார்லஸ் கவுண்டியின் போலிஸார் தெரிவித்துள்ளனர் ரோல் ஓவர் பீதோவன் மற்றும் ஜானி பி. குட் என பேரியின் ஏழுபது வருட கால இசை, அடுக்கடுக்கான பல வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ளது. 1984ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனைக்கான கிராமி விருதை பெற்றார் மற்றும் "ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேமின்" மாளிகையின் முதல் அழைப்பாளராவார். உள்…
-
- 0 replies
- 434 views
-