உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
கேதார்நாத்: புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து 86 நாட்களுக்குப் பின்னர் கேதார்நாத் கோவிலில் இன்று முதல் பூஜைகள் தொடங்கியுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் மலை மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இமாலய சுனாமியால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பலியானார்கள். பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவிலை சுற்றி அமைந்திருந்த ஹோட்டல்கள், கடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால் கோவிலுக்குஎந்த வித சேதமும் ஏற்படவில்லை. எனினும் சடலங்கள் குவிந்திருந்த காரணத்தினாலும், கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டதாலும் பூஜைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் கேதார்நாத் கோவிலில் மீண்டும் பூஜை நடத்துவதற்காக கடந்த 3-ந் தேத…
-
- 0 replies
- 445 views
-
-
உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதர்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கரரின் சமாதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயிலை ஒட்டி ஓடும் மந்தாகினி ஆற்றில் கேதார் பனிச்சிகரத்தின் பெரும் பகுதி உடைந்து விழுந்ததால் வெள்ளம் வெடித்துக் கிளம்பி எதிர்பட்டதையெல்லாம் அள்ளிச்சென்றது. இக் காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் திசை திரும்பியதால் சுமார் 200 கிராமங்கள் அழிந்தேபோயுள்ளன. அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கதி என்ன என்பது தெரிய வில்லை. கேதார்நாத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக் கணக்கான வீடுகள், வாகனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. கேதர்நாத் சிவாலயத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்மின் மனைவி கேத்தரின் மசக்கைக்காக இந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த லண்டன் கிங் எட்வர்ட் செவென் மருத்துவமனையில் வேலைபார்த்துவந்த பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ராஜ குடும்பத்தார் பேசுவதுபோல நடித்து ஆஸ்திரேலிய வானொலி நிலையத்திலிருந்து பொய்யாக வந்த தொலைபேசி அழைப்பை முதலில் எடுத்து அதனை கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி கேத்தரின் தங்கியிருந்த அறைக்கு கொடுத்திருந்த நர்ஸ் இவர்தான் என்பதை மருத்துவமனை உறுதிசெய்துள்ளது. பின்னர் அந்த அறையில் இருந்த வேறொரு நர்ஸ், கேதரினுடைய உடல் நலம் பற்றி தந்த தகவல்கள் வானொலியில் பின்னர் ஒலிபரப்பப்பட்டிருந்தன. செவிலியர் ஜசிந்தா சல்தானாவின் மறைவுக்கு மருத்துவமனை தலைமை நிர்வாகி வருத்தம் தெரிவித்துள்ளார். இள…
-
- 5 replies
- 568 views
-
-
பிரித்தானியாவில் கேப்சி உணவில் அருவறுக்கதக்க பொருள் இருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் சிம்ப்சன் என்ற 22 வயது இளைஞன் தனது காதலி ஷெர்லியுடன் Suffolk, Ipswich பகுதியில் உள்ள கேப்சி உணவக கிளைக்கு சென்றுள்ளார். இருவரும் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது உணவில் அலகுடன் கோழி மண்டையோடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஜோர்டான் சிம்ப்சன், என் தாத்தா பறவை ஆர்வலர் அவரிடம் அந்த பாகத்தை கொடுத்து சோதனை செய்தோம். அதில், அது அலகுடனான கோழியின் மண்டையோடு என உறுதியானது. இது மிகவும் அருவறுக்கதக்க விடயம். இதன் மூலம் உணவகத்தின் தரத்தை நான் உணர்ந்துள்ளேன். இனி குறித்த…
-
- 1 reply
- 512 views
-
-
கேப்டன் டிவி- ஏப்.14ல் ஒளிபரப்பு ஆரம்பம்! சென்னை: தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 'கேப்டன் டிவி' ஏப்ரல் 14ம் தேதி, 24 மணி நேர ஒளிபரப்பு சேவையை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 'கேப்டன் டிவி'யின் நிர்வாக இயக்குனர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், 'கேப்டன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை நவரசம் ததும்பும் தொடர் நாடகங்களும், மதியம் மக்களின் மனம் கவரும் திரைப்படங்களும் ஒளிபரப்பாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களும், மாலை புத்தம் புதிய தமிழ் திரைப்படங்களும் இடம் பெறுகின்றன. பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் இதில் முக்கிய பங்கு பெற…
-
- 0 replies
- 577 views
-
-
அமெரிக்காவில் கேமராவில் மறைத்த பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரதமர் நரேந்திர மோடி தள்ளிவிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் சந்தித்து பேசினார். பொதுவெளியில் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை லட்சக்கணக்கான மக்கள் பார்த்தனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு பேஸ்புக் அலுவலகத்திற்குள் மோடிக்கு பெண் ஒருவர் பரிசு வழங்கினார். அருகில் மார்க் ஜூக்கர்பெர்க்கும் உடனிருந்தார். பரிசளிப்பு நிகழ்வை அங்கிருந்த கேமரா மேன் படம் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் கேமராவை மார்க் ஜூபெக்கர் மறைத்ததாக தெரிகிறது. இதனை மனதளவில் உணர்ந்த மோடி மார்க் ஜூபெக்கரை வலுக்கட்டாயமாக இழுத்…
-
- 0 replies
- 516 views
-
-
கேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்- பிரிவினைவாதிகள் கைவரிசையா? கோப்புப்படம் யாவுண்டே: மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் படைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பிராந்தியத்தில் பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ஆயுதம் தாங்கிய கும்பல் நேற்று தடுத்து நிறுத்தியது. பின்ன…
-
- 0 replies
- 656 views
-
-
கேமரூன் நாட்டின் படுகொலைகள் இலங்கையில் இறுதிப்போர் காலத்தில், நிர்வாணமாக, தமிழர்களை, புலிகளாக சித்தரித்து, கண்களை கட்டி ராணுவம் சுட்டு கொலை செய்த காட்சிகளை பார்த்தோம். அதேபோல கேமரூன் நாட்டில், ஒரு நிகழ்வு. ஒரு பெண், ஜிகாதி என கைதாகிறார். அவரை அடித்து இழுத்து செல்கிறது ராணுவம். அந்த பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு ஓடி செல்கிறார் அவரது சிறிய மகள். கொலைக்களத்துக்கு வந்ததும், அந்த பெண்ணின் கண்கள் கறுப்புத்துணியால் கட்டப் படுகின்றன. சிறுமியின் கண்களும் அவ்வாறே கட்டப்படுகின்றன. அதுமட்டுமல்ல. அந்த பெண்ணின் முதுகில், அவரது கைக்குழந்தை ஒன்று துணியால் கட்டிய நிலையில் இருக்கிறது. பின்னர் ராணுவத்தினை சேர்ந்த ஒருவர், துப்பாக்கியினை தூக்கி மேலே வெடிவைத்து, பி…
-
- 0 replies
- 829 views
-
-
பட மூலாதாரம்,TAIWAN COASTGUARD ADMINISTRATION படக்குறிப்பு,சூறாவளி காரணமாக தாய்வானில் கரை ஒதுங்கிய ஒரு கப்பல் 25 ஜூலை 2024, 06:12 GMT புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் தாய்வானின் தெற்கு கடலில் சரக்கு கப்பல் மூழ்கியதால் காணாமல் போன 9 பேரை, மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். கேமி சூறாவளி தாய்வானை தாக்கியபோது, இந்த சரக்கு கப்பல் தெற்கு துறைமுக நகரமான காவ்ஷியுங்கில் இருந்துள்ளது. தங்களது கடற்பகுதியில் மூழ்கிய ஃபு ஷுன் என்ற சரக்குக் கப்பலில் மியான்மர் நாட்டை சேர்ந்த 9 பேர் இருந்ததாக தாய்வானின் கடலோர காவல்படை கூறியுள்ளது. அத்துடன் இந்த சூறாவளியில் மேலும் 3 வெளிநாட்டு கப்பல்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், ஆ…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
கேம்பினோ மாபியா கும்பலின் தலைவர் பிரான்ஸிஸ்கோ கொல்லப்பட்டார் குற்றம் சாட்டப்பட்டிருந்த அமெரிக்காவின் கேம்பினோ மாபியா கும்பலின் தலைவன் பிரான்ஸிஸ்கோ கேலி, அவரது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை, ஸ்டேடன் தீவில் உள்ள கேலியின் வீட்டில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது என NYPD இன் துப்பறிவாளர் டெர்மோர்ட் சீ நேற்று தெரிவித்துள்ளார். குறித்த நபர் அவரது வீட்டு வாசலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கிடந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பான விசாரணைகள் முன்னெடு…
-
- 0 replies
- 420 views
-
-
கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவிப்பு முகப்புத்தக தகவல் திருட்டு விவகாரத்தில் முக்கியமாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. பயனாளிகளின் தகவல் திருட்டு சம்பவம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து முகப்புத்தகம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பல்வேறு தகவல் தளங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்ற முகப்புத்தக நிறுவனத் அந்தவகையில் கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற அரசியல் ஆலோசனை தளத்துடனும் இணைந்து செயல்பட்டது. அந்த நிறுவனம் அரசியல் தலைவர்களுக்கு சில ரகசிய பணிகளை செய்து கொடுத்து …
-
- 0 replies
- 285 views
-
-
இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இதே பல்கலைக்கழகத்திற்கு உட்பட் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் தான் கடந்த 1957ம் ஆண்டு படித்து பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் படித்த கல்லூரிக்கு சிங் விஜயம் செய்து, பழைய நினைவுகளில் மூழ்கினார். புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், எடின்பர்க் கோமகனும், பல்கலைக்கழக வேந்தருமான பிலிப், மன்மோகன் சிங்குக்கு டாக்டர் பட்டத்தை வழங்க…
-
- 8 replies
- 1.3k views
-
-
கேரளா கன மழை; 8 ஆயிரம் கோடி சேதம் கேரளாவில் வெள்ளத்தால் 8,316 கோடி ரூபா அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. கடந்த 1924 -ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் மழை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் அம்மாநிலம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இங்கு தஞ்சம் அடைப…
-
- 11 replies
- 2.9k views
-
-
கேரள இளைஞர் காணாமல் போன இலங்கை மதவழிபாட்டுத் தளம் அடையாளம் காணப்பட்டுள்ளது: கேரள இளைஞர் காணாமல் போன இலங்கை மதவழிபாட்டுத் தளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த சிலர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக அண்மைய நாட்களில் இந்திய ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இலங்கையின் ஊடாக ஐ.எஸ் தீவிரவாதிகளை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கேரள இளைஞர் ஒருவர் மதம் பற்றிக் கற்றுக் கொள்வதற்காக இலங்கைக்கு சென்றிருந்ததாகவும் அங்கிருந்து அவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இலங்கையில் மதம் பற்றிக் கற்றுக்கொண்ட வழிபாட்டுத்…
-
- 0 replies
- 220 views
-
-
கேரள மாநில முதல் மந்திரி உம்மன் சாண்டி இரத்த அழுத்தம் காரணமாக இன்று காலை 8.30மணி அளவில் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.அவரது உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து கோட்டயம் இருதய சிகிச்சை நிபுணர் டாகடர் .வி.எல்ஜெயபிராகாஷ் கூறும் போது:-குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக இன்றுகாலை முதல்-மந்திரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது என தெரிவித்தார். உடனடியாக மருத்த்துவமனைக்கு சென்ற சுகாதாரதுறை மந்திரி வி.எஸ் சிவகுமார் அங்கு டாக்டடர்களிடம் உம்மன் சாண்டி உடல் நிலைகுறித்து விசாரித்தார் பின்னர் அவர் கூறும் போது முதல்-மந்திரி உடல் நிலை தற்போது சீராக உள்ளது அவரது நிக்ழச்சிகள் 2 நாளைக்கு ரத…
-
- 0 replies
- 337 views
-
-
கேரளத்தின் காலனி ஜெயமோகன் குற்றவாளிகள் மலையாள ‘யானை டாக்டர்’ ஒரு மொழியாக்கம் அல்ல, மறு ஆக்கம். மூலத்தைவிட முப்பது விழுக்காடு நீளம் மிகுதி. அதில் ஒரு பகுதி அந்நூல் வெளியானதுமே வாதமாக ஆகியது. வசைகளும் இருந்தன. அதில் மலையாளிகள் காடு பற்றி கொண்டுள்ள உளநிலை கடுமையாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது காடு கேரளத்தின் காலனியாதிக்கப் பகுதி. காடு என்ற சொல்லே மலையாள மொழியில் எதிர்மறைப் பொருள் கொண்டது. மொழியில் கட்டுபாடின்மை காடுகேறுதல் எனப்படுகிறது. பாழடைதல் காடுபிடித்தல் எனப்படுகிறது. மலையாள மொழியிலுள்ள காடு சார்ந்த எல்லா சொலவடைகளும் காட்டை அச்சத்துடனும் அருவருப்புடனும் சித்தரிப்பவையே. காட்டில்நுழையும் மலையாளியின் மனநிலை ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்பவனுக்க…
-
- 0 replies
- 610 views
-
-
கேரளத்தின் சதியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்: பழ. நெடுமாறன் சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தின் சதியை முறியடிக்க தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கொண்ட குழு உடனடியாக டெல்லி சென்று பிரதமரையும் மற்ற கட்சித் தலைவர்களையும் சந்தித்து தமிழகத்தின் நியாயங்களையும் உரிமைகளையும் விளக்கிக் கூற வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அணையில் வெடிப்புகள் ஏற்பட்டுவிட்டதாகவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் பிரதமர்…
-
- 0 replies
- 602 views
-
-
தமிழர்கள் விரட்டியடிப்பு: கேரளத்தினர் வெறி இடுக்கி மாவட்டத்தில் வசித்து வந்த தமிழர்கள் 40 குடும்பத்தினர் கேரளத்தினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள், உயிருக்கு பாதுகாப்பு தேடி தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்ததாக தெரிவித்துள்ளனர். இதில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள காரித்தோடு, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவர்கள் தஞ்சம் தேடி ஓடி வந்தனர். அவர்கள் போடி அருகே கோணாம்பட்டி கிராமத்தில் தங்கள் உறவின்ர்கள் சிலர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். http://www.nakkheera...ws.aspx?N=67087
-
- 16 replies
- 3.3k views
-
-
திருவனந்தபுரம்: கேரளாவில் கால்பதிக்க முடியாமல் தத்தளித்து வரும் பாரதிய ஜனதா கட்சி கணிசமான மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட ஈழவா சமூகத்தின் ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க வியூகம் வகுத்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஈழவா சமூகத்தின் தலைவரான வெள்ளாப்பள்ளி நடேசன் அண்மையில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத் தலைவர்களை சந்தித்து பேசியிருப்பது கேரளா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. கேரளா மாநிலத்தில் 22% இஸ்லாமியர்களும் 19% கிறிஸ்துவர்களும் இருக்கின்றனர். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரியும் மிகவும் வலுவான 'ஆளும் கட்சியாக' மாறி மாறி ஆட்சியில் அமர்ந்து வருகின்றன. இதனால் பாரதிய ஜனதா கட்சியால் இம்மாநிலத்தில் நுழையவே முடியாத ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
கேரளா... கோவில் தீ விபத்தில், 100 பேர் பலி - காணொளி. திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே நடைபெற்ற கோயில் வான வேடிக்கை நிகழ்ச்சியின்போது தீ விபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய அரசு தலா ரூ.2 லட்சமும், மாநில அரசு ரூ.10 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளது. -தற்ஸ் தமிழ்-
-
- 1 reply
- 447 views
-
-
கேரளாவில் 100 சதவீத கல்வியறிவு உள்ளது. ஆனால் எத்தனை படித்த பெண்கள் வேலையில் இருக்கிறார்கள், வேலை பார்க்கும் தகுதியுடன் இருக்கிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலானோர் இல்லை என்பதே வியப்புக்குரிய பதிலாக உள்ளது என்று கூறியுள்ளார் திமுக நடிகை குஷ்பு. கொச்சிக்கு வந்திருந்த குஷ்பு, அங்கு நிர்வாகவியல் மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இட ஒதுக்கீட்டைக் கோருவதற்கு முன்பு, தங்களைத் தாங்களே முதலில் சக்தி பெற்றவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். கேரளா இன்று 100 சதவீத கல்வியறிவுடன் உள்ளது. ஆனால், எத்தனை பெண்களுக்கு இங்கு வேலை உள்ளது, எத்தனை பேர் வேலை பார்க்கும் திறனுடன் உள்ளனர். பெரும்பாலானோர் இல்லை என்பதே ஆச…
-
- 0 replies
- 903 views
-
-
கேரளாவில் இருந்து வருவது ரெட் சிக்னலா? க்ரீன் சிக்னலா? | Socio Talk தமிழ்நாட்டை போல கேரளாவிலும் இரண்டு காட்சிகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது அவை கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ். அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநிலத்தில் பல நல்ல காரியங்கள் செய்து வருகிறார். மேலும் பல கேள்விகளும், பதில்களும்.
-
- 0 replies
- 442 views
-
-
கேரள தமிழர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தமிழர்கள் சென்று அங்கு தரிசாக கிடந்த நிலங்களை எல்லாம் விளை நிலங்களாக மாற்றுவதற்கு பல ஆண்டுகளாக உழைத்தார்கள். அதன் விளைவாக கேரளாவின் எல்லைப் பகுதியில் கொங்கு நாட்டு மக்கள் அதிகளவில் குடியேறி விவசாயம் செய்தனர். கேரளாவின் விவசாயம் வளர்ச்சிக்கு கொங்கு தமிழர்கள் காரணமாக உள்ளனர். இத்தனை ஆண்டுகள் கழித்து நொண்டி காரணங்களை கூறி கொங்கு தமிழர்களை கேரளாவில் இருந்து துரத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது. கேரளாவில…
-
- 0 replies
- 443 views
-
-
கேரளாவில் சிறுமிகள் உள்ள வீடுகளுக்குள் பா.ஜ.க -வினர் நுழைய தடை
-
- 2 replies
- 537 views
-
-
கேரளாவில் பரவும் நிப்பா வைரஸுக்கு பலர் பலி; சிகிச்சையால் குணப்படுத்த முடியாது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTHOMAS LOHNES இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் நிப்பா வைரசால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்த 3 பேருக்கு நிப்பா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ப…
-
- 0 replies
- 969 views
-