உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
மிஷெல் ஒபாமா நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுமிகள் கடத்தப்பட்ட செய்திகேட்டு தானும் தனது கணவரும் மிகுந்த கோபமும் மனவேதனையும் அடைந்துள்ளதாக அமெரிக்காவின் முதற்பெண்மணி மிஷெல் ஒபாமா கூறியுள்ளார். அதிபர் ஒபாமாவின் வாராந்த வானொலி உரையை, அவரது மனைவி மிஷெல் ஒபாமா தனது கண்டனத்தை வெளியிடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சின்னஞ்சிறு பிள்ளைகளின் கனவுகளை பறிக்கும் வளர்ந்த மனிதர்களின் மனசாட்சியற்ற செயல் என்று மிஷெல் ஒபாமா இந்தக் கடத்தல்களை வர்ணித்துள்ளார். கடத்தப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக மேற்குலக நாடுகளின் நிபுணர்கள் தற்போது நைஜீரியாவில் உள்ளனர். இதற்காக கண்காணிப்பு விமானங்களை தந்துதவுமாறு அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் உதவிகள் …
-
- 8 replies
- 632 views
-
-
ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்தியா "பல்டி" அடிக்குமா? தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கட்சிகளின் புதிய வியூகங்கள் தொடர்பான செய்திகள் எல்லாம் "அரசியலில் எதிரியும் இல்லை..நண்பனும் இல்லை" என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. தமிழகத் தேர்தல் களம் இரண்டு அணிகளைக் கொண்டது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான 7 கட்சி கூட்டணி. இதில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கட்சி, தமிழக கொம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை பிரதான கட்சிகள். இவர்களுக்கு எதிர் அணியான தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம்…
-
- 98 replies
- 18.2k views
-
-
சுற்றாடல் மாசடைந்த காரணத்தினால் அர்போகன் குள மீன் இனங்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அர்போகன் குளம் பொரிபேர்க் கான்டனில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. சுற்றாடல் மாசடைந்த காரணத்தினால் ஆயிரக் கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் என்ன காரணத்தினால் இவ்வாறு மீன்கள் உயிரிழக்கின்றன என்பது குறித்து சரியான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அருகாமையில் காணப்படும் கைத்தொழில் நிறுவனங்களின் கழிவினால் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. http://www.coolswiss.com
-
- 1 reply
- 722 views
-
-
மீண்டும் போரை நோக்கி நகரும் இலங்கை நெருக்கடியில் புதிய அணுகுமுறையை கடைப்பிடிப்பாரா கலைஞர்? இலங்கையில் முற்று முழுதான போர் மீண்டும் மூளுவதைத் தடுப்பதென்பது சாத்தியமில்லாமல் போகக் கூடுமென்று அஞ்ச வேண்டிய அளவுக்கு நிகழ்வுப் போக்குகள் துரதிர்ஷ்டவசமானவையாக அமைந்திருக்கும் இன்றைய நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் கடைப்பிடிக்கக் கூடிய அணுகுமுறையில் மாற்றமெதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பை தமிழர்கள் மத்தியில் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அரசியல் வட்டாரங்களும் அவதானிகளும் கருணாநிதியின் அரசாங்கத்திடமிருந்து புதிய அணுகுமுறையை பெரிதா…
-
- 0 replies
- 898 views
-
-
மிகவும் மனதை ஈர்க்கும், மற்றும் பதியும் மீளுருவாக்கம் மற்றும் மறுபயனீடு.
-
- 0 replies
- 767 views
-
-
சொமாலியா: ஆஃப்ரிக்க ஒன்றிய தளத்தை தாக்கிய இஸ்லாமிய போராளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். அமைதி காக்கும் தளம் மீது துப்பாக்கிச்சூடு படத்தின் காப்புரிமைAFP சொமாலியாவில் உள்ள ஆஃப்ரிக்க ஒன்றியத்தின் அமைதி காக்கும் தளம் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்…
-
- 0 replies
- 366 views
-
-
வழக்கை எதிர்கொள்ளும் இத்தாலிய கடற்படையினர் இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இத்தாலிய கடற்படையினர் இருவரில் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக இத்தாலி திரும்ப இந்திய உச்சநீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. மாலிமிலினோ லத்தோர் மற்றும் சால்வடோர் ஜிரோன் ஆகிய இரு இத்தாலிய கடற்படையினரும், இத்தாலிய எண்ணெய்க்கப்பல் ஒன்றில் பாதுகாப்புக்காக பயணித்து வந்த போது, இந்தியாவின் கேரளாவை ஒட்டிய கடல் பகுதியில், 2012 பிப்ரவரி மாதத்தில், இரு இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றதாகக் கைது செய்யப்பட்டனர். அந்த மீனவர்கள் வந்த படகை தாம் கடற்கொள்ளையர்கள் படகு என்று தவறுதலாக நினைத்து சுட்டதாக அவர்கள் கூறினர். இந்த வழக்கு இந்தியாவில் நடந்து வரும் நிலையில், அவர்கள் இருவரும் இ…
-
- 0 replies
- 344 views
-
-
LIVE: சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES …
-
- 10 replies
- 1.3k views
-
-
ஜெயலலிதா தமிழீழம் மலர உதவுவேன் என்று வெளிப்படையாக சத்தியம் செய்ய வேண்டும் என்று தமிழருவி மணியன் கேட்டுள்ளார். மு.கருணாநிதி அரசு ஆட்சியில் இருந்து இறங்குவது இறங்குவதுதான் ஆனால் அவரை ஆட்சியில் இருந்து இறக்கி ஜெயலலிதாவை வெறுமனே ஆட்சியில் ஏற்றுவதால் யாதொரு பயனும் கிடையாது. அப்படிச் செய்தால் காட்சி மாறுமே அல்லாது ஆட்சி மாற்றத்தால் பயன் எதுவும் நடைபெறாது. சிங்கள அரசு எப்படிப்பட்ட கோர முகம் கொண்டது என்பதை ஆவணமாக்கியிருக்கிறார் பிரபாகரன். உலக மன்றில் சிறீலங்காவை போர்க் குற்றவாளி நாடாக்க வேண்டும். காங்கிரசும், திமுகவும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அவர்கள் பிரியக்கூடாது என்றுதான் ஆண்டவனை வேண்டுகிறேன். காட்டிக் கொடுத்த இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும், தேர்தலில…
-
- 2 replies
- 1.4k views
-
-
நவம்பர் 24, 2006 சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க கேரள அரசு தவறினால், மத்திய அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி வாபஸ் பெற வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி யோசனை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உச்சநீதிமன்றமே 142 அடி வரை அணையில் நீர் தேக்கலாம் என கூறி விட்டது. அப்படி இருக்கையில், தமிழக அரசு அந்த உத்தரவை அமல்படுத்த ஏன் தயங்குகிறது என்பது புரியவில்லை. நெய்வேலி அனல் மின் கழக பங்குகளை தனியாருக்கு விற்றால் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை திமுக வாபஸ் பெறும் என கருணாநிதி முன்பு மிரட்டி மத்திய அரசைப் பணிய வைத்தார். கருணாநிதியின் மிரட்டலுக்குப் பணிந்த மத்திய அரசும்,…
-
- 0 replies
- 817 views
-
-
தாய்லாந்து-கம்போடியா படைகள் மோதல் சனி, 5 பிப்ரவரி 2011( 14:44 IST தாய்லாந்து-கம்போடியா எல்லைப்பகுதியில் இருநாட்டு படைகளும் மோதலில் ஈடுபட்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர். இன்று காலை சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்தச் சண்டைக்கு மூலக் காரணம் தாய்லாந்து ராணுவம்தான் என்று கம்போடியா குற்றம்சாட்டியுள்ளது. நேற்றும் இரு நாடுகளில் எல்லை ராணுவப்படைகள் மோதிக்கொண்டன. இதில் எல்லையருகே உள்ள கிராமங்களில் வீடுகள் சேதமடைந்தாதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.webdunia.com/newsworld/news/international/1102/05/1110205026_1.htm கம்போடியாவில் உள்ள 11-ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த கோயிலை கைப்பற்றுவது தொடர்பாக தாய்லாந்து-கம்போடியா எல்லையில் இர…
-
- 1 reply
- 1.1k views
-
-
இஸ்ரேலின் துப்பாக்கிபிரயோகத்தில் பலியான 14 வயது சிறுமியின் கதை 14 வயது,வெசல் சேக் ஹலீல்(Wesal Sheikh Khalil ) ஏற்கனவே தனது மரணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். காஸா எல்லையில் இஸ்ரேலிய துருப்பினர் தன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டால் தான் சுடப்பட்ட இடத்தில் தன்னை புதைக்குமாறும் இல்லையென்றால் தனது பேரனின் கல்லறைக்கு அருகில் புதைக்குமாறும் அந்த சிறுமி தாயை கேட்டிருந்தார். அவள் வாழ்வை விட மரணம் சிறந்தது என எண்ணினால் என தெரிவிக்கின்றார் தனது இளைய மகளை இழந்துள்ள ரீம் அப்துல் இர்மானா. ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற ஒவ்வொரு தடவையும் தான் ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்படவேண்டும் என அவள் பிரார்த்தனை செய்தார் எனவும் அவர் குறிப்பிடுகின்ற…
-
- 0 replies
- 458 views
-
-
வடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுடன் தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பரிசோதனை செய்து வந்தது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜேவும் தென்கொரிய பகுதியில் அமைந்துள்ள பன்முஞ்சோமில் ஏப்ரல் மாதத்தில் நடந்த உச்சிமாநாட்டில் சந்தித்துப்பேசினர். அதை தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிட்ட கிம் ஜாங் உன்னு…
-
- 0 replies
- 315 views
-
-
அந்தமானில் நிலநடுக்கம் நாகையில் சுனாமி பீதி நாகை, டிச.24: அந்தமான், நிக்கோபர் தீவுகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், நாகை கடலோர கிராமங்களில் சுனாமி பீதி ஏற்பட்டது. அந்தமான், நிக்கோபர் தீவுகளில் நேற்று முன்தினம் இரவு 6.1 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாகை பகுதியில் கடல் கொந்தளித்தது. அலைகள் அதிக உயரத்துக்கு எழும்பின. நேற்று காலையும் இதே நிலை நீடித்தது. ஊருக்குள் கடல் நுழைவதாக நம்பியார் நகர், ஆரியநாட்டுத்தெரு பகுதிகளில் நேற்று காலை புரளி கிளம்பியது. இதனால் பீதியடைந்த மக்கள், குழந்தைகளையும், கைக்கு கிடைத்த பொருட்களையும் அள்ளிக் கொண்டு பாதுகாப்பான இடத்தை தேடி �#8220;டத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும்…
-
- 1 reply
- 904 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திரமோடி கேரளாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது கொலை செய்யப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் கடிதம் மூலம் அச்சுறுத்தியுள்ளனர். திருவனந்தபுரம் தம்பனூரிலுள்ள பா. ஜ. க. அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கிலாந்து நாட்டின் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெயின்ஸ் என்பவரை கொல்லும் முன்பு அவர் முகமூடி அணிந்த தீவிரவாதி முன்பு மண்டியிட்டு இருப்பது போன்ற படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்த படத்தில் டேவிட் ஹெயின்சுக்கு பதில் பிரதமர் மோடியின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அதற்கு கீழ் நரேந்திர மோடி குஜராத்தில் முஸ்லிம்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இப்போது பாகிஸ்தான் முஸ்லிம்களை கொன்று வருகிறார். அவர், கேரளாவுக்கு வந்தால் அவருக்கு இதில் ஒட்டப்ப…
-
- 0 replies
- 481 views
-
-
காங்கிரசு கைத்தடிகள் போட்டியிடும் தொகுதிகள்.. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளின் பட்டியல் கிடைத்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 5 + 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மிக அதிக அளவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, கோவை, ஈரோடு, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் முறையே 4 தொகுதிகள் வழங்கியுள்ளது தி.மு.க. மாவட்ட வாரியாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் வருமாறு: சென்னை: தியாகராயர் நகர், அண்ணா நகர், மயிலாப்பூர், இராயபுரம், திரு.வி.க. நகர் திருவள்ளூர் மாவட்டம்: ஆவடி, ஆலந்தூர், மதுரவாயல…
-
- 1 reply
- 1.6k views
-
-
மோல்டோவா அரசை கவிழ்க்க ரஷ்யா சதி: மோல்டோவா ஜனாதிபதி குற்றச்சாட்டு Published By: Sethu 14 Feb, 2023 | 04:45 PM மோல்டோவா அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதிப்புரட்சிக்கு ரஷ்யா சதி செய்கிறது என மோல்டோவா ஜனாதிபதி மாய்யா சாந்து கூறியுள்ளார். ஐரோப்பாவுக்கு ஆதரவான நாட்டின் தலைமையை அகற்றுவதற்காக, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில், நாசவேலை செய்பவர்களுடன் ரஷ்யா சதி செய்கிறது என அவர் நேற்று கூறியுள்ளார். யுக்ரைனுக்கும் ருமேனியாவுக்கும் இடையில் அமைந்துள்ள நாடு மோல்டோவா. 26 லட்சம் பேர் அந்நாட்டில் வசிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு கடந்த வருடம் மோல்டோவா…
-
- 0 replies
- 345 views
-
-
வைகோவின் எதிர்காலம்? - எஸ்.கே. செந்தில். ஏழு ஆண்டுகளாக அதிமுக தொண்டன் கூட ஜெயலலிதாவுக்கு இத்தனை விசுவாசமாக இருக்க மாட்டான் - GTNற்காக கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுக தொண்டன் கூட ஜெயலலிதாவுக்கு இத்தனை விசுவாசமாக இருக்க மாட்டான். அத்தனை தூரம் அம்மாவுக்காக இறங்கிப் போனார் வைகோ. இன்றைக்கு வைகோவுக்கு நேர்ந்துள்ள நிலை கண்டு தமிழகத்தின் எல்லா இரண்டாம் மட்டக் கட்சிகளுமே அதிர்ந்து போயுள்ளன. அரசியல் சுனாமி எந்த நேரத்தில் யாரை வீழ்த்தும் என்பதை அறிந்து கொள்ளவும், அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் வெறும் அரசியல் அனுபவம் மட்டும் போதாதது. சடுதியாக எடுக்க வேண்டிய முடிவுகளை எடுத்து, அதற்கு கட்சியினரையும் தயார் படுத்த வேண்டும் என்கிற அனுபவத்தை நீண்டகால அரசியல் அனுபவமும் தமிழகம…
-
- 3 replies
- 1.2k views
-
-
5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். பனிமனிதனின் கடைசி உணவு படத்தின் காப்புரிமைSOUTH TYROL MUSEUM OF ARCHAEOLO Image captionடச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள் …
-
- 0 replies
- 311 views
-
-
கறுப்பினத்தவர் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமா? ஒபாமா வெற்றிபெறுவாரெயானால், அது பயங்கரவாதிகளின் வெற்றியாக அமையும் அவுஸ்திரேலிய - ஒபாமாவின் தந்தையார் ஒரு முஸ்லிம் [Wednesday February 14 2007 07:04:03 AM GMT] [thinakkural.com] அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டி ஆரம்பமாகிவிட்டது. அதில் உலகின் கவனத்தை இப்போது வெகுவாக ஈர்த்திருப்பது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும் நியூயோர்க் மாநில செனட்டருமான ஹிலாரி கிளின்டனுக்கும் கறுப்பினத்தவரான இலினோயிஸ் மாநில செனட்டரான பராக் ஒபாமாவுக்கும் இடையே மூண்டிருக்கும் போட்டியாகும். இந்த இருவரில் எவருக்கென்றாலும் ஜனநாயகக் கட்சியின் நியமனம் கிடைத்து 2008 நவம்பரில் நட…
-
- 8 replies
- 1.7k views
-
-
பெண் துறவிகளை மயக்கி பாலுறவு: செல்வாக்கு மிக்க சீனத் துறவி மீது புகார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். பெண் துறவிகளை மயக்கி பாலுறவு: குற்றச்சாட்டில் சீனத் துறவி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசீனாவின் பௌத்த மதக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கும் மிக குறைந்த வயது த…
-
- 0 replies
- 682 views
-
-
தொழில் முறை பாடி பில்டராக முடிவெடுத்தபோது ஒரு பெண்ணின் கதை, போர் முன்னரங்கில் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு உதவிய கழுதைகள், கங்கை நதியில் வீசப்படும் காசுகளை சேகரிப்பவர்களின் வாழ்க்கை போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 423 views
-
-
சென்னை விமான நிலையத்தில் பயங்கர தீவிபத்து மார்ச் 14, 2007 சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை அங்கு பயங்கர தீவிபத்து நடந்தது. மளமளவெனப் பற்றிக் கொண்ட தீ அலுவலகம் முழுவதும் வியாபித்து கொளுந்து விட்டு எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கம்ப்யூட்டர்கள், பல்வேறு ஆவணங்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. ரூ. 50 லட்சம…
-
- 1 reply
- 1.2k views
-
-
சட்டவிரோதமான முறையில் 4 சிங்களவர்களை இத்தாலிக்கு கூட்டிச்செல்ல முயன்ற இலங்கை ராஜதந்திரி கைது - சமகளம் சட்டவிரோதமான முறையில் 4 சிங்களவர்களை இத்தாலிக்கு கூட்டிச்செல்ல முயன்ற இலங்கை ராஜதந்திரி ஒருவரை இத்தாலிய போலீசார் கைது செய்துள்ளனர். டுபாயில் இருந்து தனது மனைவி மற்றும் இரண்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகளுடன் இத்தாலி விமான நிலையத்தில் இறங்கிய இந்த 50 வயது நபர், தனது ராஜதந்திர கடவுசீட்டை முதலில் காண்பித்த பின்னர் தனது மனைவியின் மனைவியின் கடவுசீட்டை காண்பித்துள்ளார். பின்னர் ஏனைய இரண்டு இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கடவு சீட்டுக்களை காட்டி யுவதிகள் இருவரும் தனது மகள்கள் என்றும் இரண்டு இளைஞர்கள் தனது பெறா மகன்கள் என்றும் கூறி அவர்கள் இத்தா…
-
- 2 replies
- 638 views
-
-
நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் குறித்து இழிவாக பேசி வருதை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என அதன் மாநில தலைவர் யுவராஜ் அறிவித்திருந்தார். அதன்படி கரூர் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் திரண்ட இளைஞர் காங்கிரசார் சீமானின் உருவபொம்மையை எரித்தனர். இதனையொட்டி வெங்கமேடு போலீசார் இளைஞர் காங்கிரஸ் கட்சிதொண்டர்கள் பத்து பேரை கைது செய்தனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57197
-
- 0 replies
- 832 views
-