உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26710 topics in this forum
-
கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன 14 வயது டொரண்டோ பள்ளி மாணவி ஒருவர் எவ்வித ஆபத்தும் இன்றி சனிக்கிழமை மீட்கப்பட்டதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்க்ழமை இரவு 8.30 மணியளவில், Islington and Finch avenues அருகிலுள்ள Moneterrey Drive என்ற இடத்தில் Roshelle Sookram என்பவர் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் அவரது பெற்றோர்களால் புகார் கொடுக்கப்பட்டது.அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த டொரண்டோ போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பயனாக சனிக்கிழமை மாலை 3 மணியளவில் Roshelle Sookram கண்டுபிடிக்கப்பட்டார். அவர் எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டார், இரவு முழுவதும் அவருக்கு என்ன ஆனது என்பதை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். கண்டுபிடிக்கப்பட்ட…
-
- 0 replies
- 459 views
-
-
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அழிந்து வரும் பூச்சி இனம் ஒன்றுக்கு அவரின் பெயரை விஞ்ஞானிகள் வைத்துள்ளனர். டொனால்ட் ட்ரம்பின் தலைமுடி போல அதற்கும் இருப்பதால் அதே பெயரை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த புதிய வகைப் பூச்சியின் தலையில் மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் செதில்கள் உள்ளன. ஒட்டாவாவைச் சேர்ந்த பரிணாம உயிரியில் விஞ்ஞானி வாஸ்ரிக் நஸாரி இந்த செதில்களைப் பார்த்ததும் ட்ரம்பின் தலைமுடியைப் போல் இருப்பதை உணர்ந்து குறித்த பூச்சி இனத்துக்கு நியோபால்பா டொனால்ட்ரம்பி என பெயரை வைத்துள்ளார். "புதிய பெயரால் பூச்சிக்கு கிடைக்கும் வெளிச்சம், மேற்கொண்டு இந்த பூச்சி இருக்கும் இடங்க…
-
- 1 reply
- 380 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயார்: ரஷ்யா! பொருளாதார ரீதியாக வலிமிகுந்த பொருளாதாரத் தடைகளை விதித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க மாஸ்கோ தயாராக உள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமைச்சின் இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உலகளாவிய வாழ்க்கையிலிருந்து நம்மை தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் அமைதியை விரும்பினால் போருக்குத் தயாராகுங்கள்’ என கூறினார். கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்பாக ரஷ்யாவிற்கும் மேற்கு …
-
- 0 replies
- 475 views
-
-
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல் பிரேஸிலில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் தடுப்பூசி மருந்தான சினோபார்ம் போதிய கொரோனா எதிர்ப்பு சக்திகளை உருவாக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்த கேள்விக்கு சினோபார்ம் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளுக்கு சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. https://athavannews.com/உருமாற்றம்-அடைந்த-கொரோனா/
-
- 0 replies
- 496 views
-
-
இந்தியாவின் தேர்தல் களம் 2010 இலத்திரனியல் இயந்திர தேர்தல் பெட்டிகளால் மோசடி செய்யப்பட்டே காங்கிரசும், திமுகவும் வெற்றிவாகை சூடியது. பின்வரும் காரணங்கள் சில: 1. தேர்தல் கள ஆய்வாளர்களின் எந்தவொரு முடிவும் இதனுடன் ஒத்துப்போகவில்லை 2. காங்கிரசும், திமுகவும் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று எண்ணவும் இல்லை 3. ஈழத்தின் தேசியத்தை ஆதரிக்கும் திருமா திமுக அணியில் இருந்ததால் வெற்றிபெற்றுள்ளார் 4. வைகோ, ராமதாஸ் தோல்வி அடைந்துள்ளனர். 5. தமிழகத்தின் ஈழஆதரவு மிகவும் எழுச்சியில் உள்ளது. 6. இலத்திரனியல் தேர்தல் வாக்குப்பெட்டிகளில் மென்பொருள் கொண்டு உடனடி மாற்றம் செய்யமுடியும். 7. இலத்திரனியல் தேர்தல் வாக்குப்பெட்டி ஒவ்வொரு தேர்தல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஸ்காட்லாந்து விடுதலைக்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த விரும்பும் ஸ்டர்ஜன் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாகும் நோக்கில் புதியதொரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் பெற விரும்புவதாக ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்திருக்கிறார். Image captionபிரிட்டிஷ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக நாடாளுமன்றம் முடிவு செய்வது ஏற்க முடியாததாக அமையும் - டேவிட் டேவிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜக்கிய ராஜ்ஜியம் வெளியேறுவதற்கு முறையான நடவடிக்கைகளை தொடங்குகின்ற வரைவு மீது வாக்கெடுப்பு நடத்த பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயார் செய்து வருகையில் ஸ்டர்ஜன் இவ்வாறு அறிவ…
-
- 1 reply
- 301 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், - தாக்குதலை அடுத்து சிரிய அதிபர் பஷார் அல் அஸதுக்கான ஆதரவை ரஷ்ய நிறுத்த வேண்டும் என ஜி ஏழு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கோரிக்கை! ஆனால் அது சாத்தியமா? -தடுப்பூசி போடலாமா? கூடாதா? தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோரால் ஒட்டுமொத்த குழந்தைகளும் ஆபத்துக்கு உள்ளாகும் போக்கு பற்றிய செய்தி -செல்வம் கொழிக்கும் மண்புழுக்கள்; ஆப்ரிக்க உதாரணம் குறித்த செய்தித் தொகுப்பு
-
- 0 replies
- 301 views
-
-
சுவிசர்லாந்தின் மிக நீளமான சுரங்கப்பாதையாக கருதப்படும் கோத்தாட் தொடரூந்து சுரங்கப்பாதையில் முதலாவது தொடரூந்தின் வெள்ளோட்டம் இடம்பெற்றது. ஊரி மாநிலத்திலிருந்து திச்சினோ மாநிலம் வரையான 57கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை உலகில் நீளமான சுரங்கப்பாதை என கருதப்படுகிறது. 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமான சுரங்கப்பாதை நிர்மாணிப்பு பணிகள் 1000 நாட்களில் நிறைவு பெற்றிருப்பதாக தொடருந்து பாதை நிர்மாண பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சூரிச் நகரிலிருந்து இத்தாலி மிலான் நகருக்கான அதிவேக தொடருந்தின் நேரம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.thinakkathir.com/?p=51943#sthash.mtcWhMFU.dpuf
-
- 0 replies
- 412 views
-
-
பிரான்ஸில் அகதிகள் முகாமிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்ட 1600 அகதிகள்! பிரான்ஸில் அகதிகள் முகாமிலிருந்து 1600 அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டுள்ளனர்.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ளPORTE de la Chapelle பகுதிக்கு இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலையில் 350-க்கும் அதிகமான பொலிசார் குவிக்கப்பட்டனர்.அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமிற்கு சென்ற பொலிசார் அங்கு தங்கியிருந்த 1600 பேரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்ட இந்த முகாம், அதிகாரப்பூர்வமாக அரசால் அமைக்கப்பட்ட அகதிகள் முகாம் அருகில் உள்ளது.அதிகாரப்பூர்வ முகாமில் அதிகளவில் அகதிகள் தங்கியுள்ளதால்…
-
- 0 replies
- 404 views
-
-
சிட்னி: மேற்கு சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ப்ளூ மவுன்டெய்ன்ஸ் பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீயால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கிழக்கு பதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருக்கும் ப்ளூ மவுன்டெய்ன்ஸ் மற்றும் மேற்கு சிட்னி பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டு பரவியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மொத்தம் 63 இடங்களில் தீப் பற்றி எரிவதாகவும் அதில் 31 கட்டுக்கடங்காமல் உள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்த காட்டுத் தீயால் சிட்னியில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்களில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒரு வீடு முற்றிலும் எரிந்துவிட்டது. இந்த தீயால் சிட்னியில் …
-
- 1 reply
- 406 views
-
-
அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் கிளுகிளுப்படைவது குறித்து ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர். நெதர்லாந்து நாட்டில் ஆய்வாளர்கள் 40 மாணவர்கள் மூலம் பெண்களிடம் ஆண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு குறித்து ஆய்வு நடத்தினர். மாணவர்கள்,ஏழு நிமிடங்கள் ஆய்வுக் குழுவிலுள்ள ஆண் அல்லது பெண்களிடம் பேசவேண்டும். இதில், ஆண்கள் பெண்களிடம் பேசும் போது அவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மெதுவாகவும், தட்டுத் தடுமாறியும் பேசியுள்ளனர். இதிலிருந்து, அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் செயலிழந்து விடுகின்றனர்; உளற ஆரம்பித்து விடுகின்றனர் என்பதைக் கண்டறிந்தனர். பெண்களின் இதயத்தில் எப்படியாவது தான் இடம் பிடித்துவிட வேண்டும் எனும் எண்ணம் ஆண்களின் மூளையை ஆக்கிரமிப்பதால் இவ்வாறு நேர் வதாக அவ…
-
- 6 replies
- 1.8k views
-
-
மேன்சஸ்டர் தாக்குதல் குறித்த புலனாய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறும் போலிஸார் தாக்குதலாளியின் நடவடிக்கை குறித்து புதிய படங்களை வெளியிட்டுள்ளது குறித்த செய்திகள், சர்ச்சைக்குரிய கடாஃபி மகன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பது லிபிய அரசியலை பாதிக்குமா? இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு; மற்றும் பன்றிகளிடம் பரிசோதிக்கப்படும் ஆண்டிபயாட்டிக்ஸுக்கான மாற்று மருத்துவ வழி மனிதர்களுக்கும் பயன்தருமா? பிபிசியின் பிரத்யேக செய்தி! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 278 views
-
-
அமெரிக்க கப்பலில் இருந்த மாலுமிகள், ஊழியர்கள் 35 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவை சேர்ந்த "சீமென் கார்டு ஓகியா" என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். இந்த கப்பலில் 10 மாலுமிகள், 25 வீரர்கள் இருந்தனர். இது தொடர்பாக கடலோர காவல் படையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, துப்பாக்கி தோட்டாக்களை அதிகமாக வைத்திருத்தல் (ஆயுத சட்டம்), சட்ட விரோதமாக டீசல் பரிமாற்றம் மற்றும் அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தைவிடவும் கூடுதலாக பயண நேரம் எடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில், கப்பல் கேப்டன் டட்னிக் வாலென்டின் உட்பட கப்பல் ஊழியர்கள் 35 பேர் (இக்கப்பலில் பணிப…
-
- 2 replies
- 491 views
-
-
காடுகள் அழிப்புக்கு முற்றுப்புள்ளி - உலகத் தலைவர்கள் உறுதி எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க பருவநிலை மாநாட்டில் உலக தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 26 ஆவது பருவநிலை மாநாடு கடந்த 31 ஆம் திகதி ஆரம்பமானது. எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இடம்பெறும் இம்மாநாட்டில், இந்தியா உட்பட 200 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாரீஸ் ஒப்பந்தத்தின் பிரகாரம், புவி வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஏற்பாட்டில் காடுகள் மற்றும் நில பயன்பாடு குறித்த நிகழ்ச்சி நேற்ற…
-
- 1 reply
- 208 views
- 1 follower
-
-
ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய மங்கள்யான் செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்தியாவின் தொழில்நுட்பத்திறனை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 450 கோடி ரூபாய் செலவில் மங்கள்யான் என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது. இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஸ்தவான் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்பட்டது. இதற்காக போர்ட் பிளேர், பெங்களூரூ அருகே உள்ள பைலாலு, புருனே ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களிலும் முன்னேற்பாட்டுப் பணிகளில் விஞ்ஞானிகள்…
-
- 0 replies
- 669 views
-
-
சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்: போக்குவரத்து ஆணையராக நியமனம் சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபாவை போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூர்: பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. …
-
- 5 replies
- 1.5k views
-
-
டெல்லி: நரேந்திர மோடியை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே பாஜக கூட்டணி வைக்கும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் ஏன் கூட்டணி கிடையாது என்பதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவற்றுடன் கூட்டணி கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் இன்று டெல்லியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி. அவரை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே பாஜக கூட்டணி வைக்கும். திமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஒரே அணியில் இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் இருக்க முடியாது. அதனால் தான் அதிமுகவுடன் கூட்டணி இல்லை…
-
- 1 reply
- 663 views
-
-
கிழக்கு உக்ரேனில் 2,000 போர்நிறுத்த மீறல்கள் பதிவு 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை முன்னெடுக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். உக்ரேன் தலைநகர் கியேவை சுற்றி வளைக்கும் படையெடுப்பை ரஷ்யா நடத்த உத்தேசித்துள்ளதாக உளவுத்துறை தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார். இதேவேளை கிழக்கு உக்ரேனில் கிட்டத்தட்ட 2,000 போர்நிறுத்த மீறல்கள் சனிக்கிழமையன்று ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கண்காணிப்பாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தியுள்ளன. இந் நிலையில் உக்ரேனின் ஜனாத…
-
- 3 replies
- 369 views
- 1 follower
-
-
பிரபல நடனக் கலைஞரான மல்லிகா சாராபாய் ஆம் ஆத்மி கட்சியில் கடைநிலை தொண்டராக தன்னை இணைத்துக் கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தான் பல பணிகளைச் செய்துள்ளதாக கூறியுள்ள சாராபாய், தன்னுடைய எண்ணங்கள் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகளோடு ஒத்துப்போவதால், அக்கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. அரசியலில் பங்குகொள்ளாத முக்கிய பிரமுகர்கள் பலர் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வரும் நிலையில், இவரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.maalaimalar.com/2014/01/08171930/Mallika-Sarabhai-joins-Arvind.html
-
- 1 reply
- 493 views
-
-
ஆஸ்திரேலியாவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் ஒரு வாரகாலமாக வெயில் சுட்டெரிக்கிறது. இதுவரையில் இல்லாத வகையில் அங்கு அனல் காற்று வீசுகிறது. நேற்று உச்சகட்ட அளவாக மெல்போர்னில் 111 டிகிரி பாரன்ஹீட்(44 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவாகியது. தற்போது ஆஸ்திரேலியhவில் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த அனல் காற்று காரணமாக விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் அடிலாய்டு நகரில் நேற்று வெயிலின் அளவு 46 டிகிரி செல்சியஸ் (சுமார் 114 டிகிரி பாரன்ஹீட்) எட்டியதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. இதுவே உலகில் அதிக வெப்ப நகராக விளங்கியது. http://www.virakesari.lk/?q=node/360733
-
- 8 replies
- 746 views
-
-
மும்பை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை 'ஐட்டம் பாய்' என பாலிவுட் குத்தாட்ட நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது பத்திரிகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாலிவுட் குத்தாட்ட நாயகி ராக்கி சாவந்த்துடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலைவிட ராக்கி சாவந்த் நன்றாக ஆட்சி செய்வார் என்றும் அதில் கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராக்கி சாவந்த், ''உத்தவ்ஜி எது சொன்னாலும் அது சரியாக இருக்கும். அரவிந்த கெஜ்ரிவால் ஆட்சி செய்வதற்காக மக்கள் ஓட்டு அளித்துள்ளனர். அவர் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தெருவுக்கு வரக்கூடாது. சட்டங்கள…
-
- 1 reply
- 576 views
-
-
உக்ரைனுக்கு ரஷ்யப் படைகளை அனுப்ப அதிபர் புடினுக்கு அனுமதி வழங்கியது நாடாளுமன்றம்! [sunday, 2014-03-02 17:55:59] உக்ரைனுக்கு ரஷ்ய படை களை அனுப்புவதற்கு அதிபர் புடினுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சோவியத் யூனியனில் இருந்த பிரிந்து தனி நாடான உக்ரைனில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாகவும் இருதரப்பினர் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ரஷ்ய ராணுவ படைகளை அனுப்புவதற்கு ரஷ்ய நாடாளுமன்ற …
-
- 1 reply
- 283 views
-
-
புட்டினை... சந்தித்து பேசுகின்றார், ஐ.நாவின் பொதுச்செயலாளர் ரஷ்யா சென்றுள்ள ஐநா.சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் இன்று புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். முன்னதாக அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவுடன் மொஸ்கோவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். 60 நாட்களைக் கடந்தும் நடைபெற்று வரும் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தி சமாதானம் காண்பதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குட்டாரஸ், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகள் மூலமாக அமைதித் தீர்வு காண்பதற்கு ஐநா.சபை மிகுந்த முயற்சிகள் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களை குறை…
-
- 0 replies
- 196 views
-
-
பாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையே தாஜ்மஹால் பாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையில் எழுப்பப்பட்ட தாஜ்மஹால் பாதுகாக்கப்படும் என இந்தியா உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சங்கீத் சோம் தாஜ்மஹால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதையடுத்து எழுந்த சர்ச்சைகளினால் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பாரதமாதாவின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையால் எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை பாதுகாப்போம் என்று உறுதி அளித்துள்ளார். யோகி ஆதித்யநாத் அக்டோபர் 26 ஆம் திகதி ஆக்ராவுக்குச் சென்று சுற்றுலாத்திட்டங்களை மேற்பார்வையிடப் போவதாகவும், தாஜ்மஹாலை யார் கட்டினார்கள் என்பது முக்கியம…
-
- 0 replies
- 359 views
-
-
தோற்றத்தில் மட்டுமல்ல, சீற்றத்திலும் சீமான் ஒரு புலிதான் என்பதை நிருபித்தது அந்த முதல் கூட்டம்! அவரது 'நாம் தமிழர்' அரசியல் கட்சியின் முதல் பொதுக்கூட்டமல்லவா? 18-5-10 அன்று நடந்த அந்த கூட்டத்தையும் அவரது ஒவ்வொரு அசைவையும் சக அரசியல் கட்சிகளும், உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நன்றாகவே உணர முடிந்தது. நெருப்பை பொட்டலத்தில் கட்டிய மாதிரி தீயாக தகித்துக் கொண்டிருந்தார்கள் திரளாக கூடியிருந்த சீமானின் தம்பிகள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையைதான் முதல் மேடைக்கு பொருத்தமான இடமாக தேர்வு செய்திருந்தார் சீமான். ஊருக்கு ஒதுக்குபுறமாக மைதானம் இருந்தாலும், அன்றைய தினம் ஊரே அங்குதான் இருந்தது. மாலை நாலு மணிக்கு துவங்கி…
-
- 0 replies
- 689 views
-